அத்தியாயம் 1
ஓசூரில் ,
“பிரபலமான இரு சக்கர வாகன உதிரிப்பாக தொழிற்சாலை அது”.
தனது மேலாதிகாரியிடம் விடுமுறை கேட்டுக்கொண்டு இருந்தான் பபிலன்.
HR ரவீந்தர்
“மே ஐ கம் இன் சார் ”?
“எஸ் கம் இன்” என்ன என்பது போல அவர் பார்க்க ,
சார் , எனக்கு இரண்டு நாள் லீவு வேணும் .
எதுக்கு டா ?
சார் ஊருக்கு போறேன்
“என்ன விஷயம் ?”
சார், எங்க ஊர் மாதா கோவில் திருவிழா, .
டேய் ,” என்னடா விளையாடுருயா போன மாதம் அம்மன் கோவில் கொடை லீவ் கேட்ட
இன்னைக்கு மாதா கோவில் திருவிழா லீவ் வேணும்னு சொல்லுற “.
டேய் , பொய் சொல்றீயா ?
சார்,ஐயோ அப்படியெல்லாம் இல்ல; நான் உண்மைதான் சொல்றேன் நம்புங்க .
“எங்க ஊர் மக்கள் திருவிழா; ஊரே கொண்டாடும் திருவிழா சார் “.
ஊர் பொதுமக்கள் அனைவரும் ஜாதி மதம் கடந்து கொண்டாடும் திருவிழா நாடு கடந்து இருந்தாலும் திருவிழா பார்க்க விடுமுறை எடுத்து வருபவர்கள் ஏராளம் சார் . (அவன் ஊர் மக்கள் ஒற்றுமையாய் கொண்டாடும் திருவிழா பற்றி விவரிக்க )
எந்த ஊர் டா உனக்கு ?
எனக்கு திருநெல்வேலி மாவட்டம் கூடன் குளம் சார்
"ஏய் அங்கேயே நிறைய வேலைவாய்ப்பு இருக்க,” இங்க என்னடா வேலை ?”
சார் இப்போதான் DMEபடிச்சி முடிச்சேன் . கம்பஸ் ல இந்த வேலை கிடைச்சிட்டு அதனால இங்கேயே வந்துட்டேன் சார்.
சரி சரி லீவ் எடுத்துக்கோ;கோ.
தாங்க்ஸ் சார்.
வெளியில் வந்தவன் மனதில் இரண்டு நாள் லீவ் க்காக எவ்ளோ பேசவேண்டி இருக்கு எண்ணியபடி
நிற்க ,அவனது அலைபேசி தனது குரலெழுப்ப ,“யார் என பார்த்த படி ஷிப்ட் முடிந்து வெளியில் வந்தான்.
”அப்பா” ஸ்க்ரீனில் தெரிய தானாய் இதழில் புன்னகை. போன் பண்ணுவது யார் என தெரிந்ததால்
பவித்ரா அவனது ஒரே தங்கை .
அவனை விட ஐந்து வயது சிறியவள். அவனுக்கு நல்ல தோழி ஆனால் சில நேரத்தில் வீட்டில் போட்டு கொடுக்கும் சகுனி .
ஹலோ பபி ,
அவனும் சிரிப்புடன்
" சொல்லு எரும" என்க .
அவன் தன்னை எருமை என்றதை கவனியாதவள் ,பபி லீவ் கிடைச்சா ?
"ஆமா எரும. "
என்ன எருமை யா ?அம்மா இங்க பாரு உன் மகன என்ன எருமை னு சொல்றான் ;அவள் புகார் வாசிக்க ...
என்னடி ,”எப்பபாரு சண்டை போட்டுக்கிட்டு ஃபோன் கொடு என அவளிடம் பிடுங்கியவர்
ஐயா! பபிலே சாப்பிடியா?
ஆமா ம்மா ... நீங்க சாப்டிங்களா ?..
ஆமா ப்பா ... எப்போ யா கிளம்புற என்றார் ஆசையாய் ?
(இருக்காதா பின்ன மகனை பார்த்து எத்தனை நாளாச்சு ?
தன் கைக்குள்ளே வைத்து வளர்த்த பிள்ளை இப்போது 6 மாதங்களாய்
ஓசூரில் வேலைக்கு செல்ல தான் மறுக்க ,”அவனது அப்பா தான் இப்படி இங்கேயே இருந்தால் வெளியுலகம் தெரியாது” நீ போய்ட்டு வா, என்று அனுப்பி வைத்தார். )
...அம்மா இன்னைக்கு நைட் டிரைன் . நாளைக்கு காலையில் பத்து மணிக்கு நம்ம வீட்டில் இருப்பேன் என்றான் சந்தோஷமாக .
அப்படியாய்யா சரி ப்பா பாத்து வா அம்மா வைக்கிறேன் என்றார் .
..ம்மா...ம்மா கொண்டா நான் பேசுறேன் ,என்னடி பேச போற
அவன் வந்த பிறகு பேசலாம்.
ம்மா தா தாம்மா பிளீஸ் பிளீஸ்
குடும்மா அவகிட்ட ,
இந்தா பேசு அவனிடம் சண்டை போட்டுட்டு என்கிட்ட வரக்கூடாது என்றார்.
அதெல்லாம் வரம்மாட்டோம் என்றாள் மகள் .
பத்து நிமிஷம் சண்டை போடாம பேசுங்க பார்க்கலாம் என்றபடி சென்றுவிட்டார் அவர்.
5 நிமிடம் கூட இருக்காது தேவி என்ற படி வந்துவிட்டாள் மகள் .
தேவி உன் மகன பாத்துக்க அவன் சரி இல்லை .
என்னடி சொல்ற ?
இங்க பாரும்மா அப்பா எங்க ?
கடைல இருக்காங்க என்றார்.
போ நான் அப்பா கிட்ட சொல்றேன் . நேரே தங்களது வீட்டின் முன்னால் இருந்த கடைக்கு சென்றவள்
தந்தையிடம் புகார் வாசித்தாள் .
ப்பா, “எப்போ பாரு என்னை நீங்க வள்ளியூர் பஸ் ஸ்டண்ட் ல தவூட்டுக்கு வாங்கிட்டு வந்தீங்கணு சொல்றான்” ,என்றாள் கண்ணை கசக்கியபடி .
அவள் அப்படிதான், “என்ன சொன்னாலும் பதிலுக்கு பேசுபவளுக்கு, இதை சொன்னால் மட்டும் கண்ணீர் வந்துவிடும்”.
இதுக்கா கண்ண கசக்குற விளையாட்டுக்கு சொல்லுறான்னு உனக்கு தெரியாதாடி ?... தேவி
"ப்பா.. பாருங்கப்பா.. என்றாள் மகள் ". "சரிப்பா பாத்துக்கலாம் விடுடா ..." தந்தை
இந்த சண்டைகள் தினமும் நடப்பது தான் அண்ணனுக்கும் தங்கைக்கும்
வழக்கு தீர்க்க முடியாது தாய் தந்தையால் …
தொடரும் ...
Last edited by a moderator: