Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் சுவாசம் நீதானே பாகம் 2 Episode 3

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 3

ரேவதியை பெங்களூரில் விட்டுவிட்டு சுபா விடைபெற்று செல்ல முற்பட்டாள் ஆனால் ரேவதிக்கோ அவளை அனுப்ப மனம் வரவில்லை தன்னோடு இருக்குமாறு வற்புறுத்தி அவளை தன்னுடன் இருக்க வைத்தாள். தன்னுடைய தாய் சிறிய வயதில் இருக்கும் பொழுதே தொற்றுநோய் வந்து இறந்த பின் தனது தந்தை ரமேஷ் மட்டுமே ரேவதிக்கு உலகம் பெங்களூரில் வசிக்கும் தமிழர்களான இவள் குடும்பம் சொந்தக் காரர்கள் லின் ஒட்டுதல் இல்லாமல் தான் இருந்தனர் பார்க்க துறுதுறுவென அழகாக வலம் வந்தவள் கல்லூரி முடியும் தருணத்தில் அவளுடைய தந்தை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார் இதனை நினைத்து பித்து பிடித்த மாதிரி ஆகினாள் ரேவதி ஆவளுடைய நெருங்கிய தோழிகள் அவளுக்கு ஆதரவாய் இருந்தனர். ஆனாலும் ரேவதி யின் முகத்தில் சிரிப்பில்லை. இப்படியே சென்ற தருணத்தில் தான் அவளுக்கு விகெ மோட்டர்ஸில் இருந்து ஒரு லெட்டர் வந்தது. தன் தந்தை ஐந்து வருடங்களாக விகே மோட்டர்ஸில் பணிபுரிந்தார் அதற்கு முன் ஒரு தனியார் மோட்டர்ஸில் பணிபுரிந்தார் அவர் விகே மோட்டர்ஸில் பணிபுரிந்த சமயத்தில் நம்பிக்கையானவர் என்ற பெயரை சம்பாதித்தார் அக்கவுன்டிங் செக்ஸனில் இருந்த ரமெஷின் கை மிகவும் சுத்தம். விகே மோட்டர்ஸின் எம்டி அன்ட் சிஇஓ விக்னேஷ் குமார் க்கு ரமேஷ் இறந்ததால் மிகவும் வருத்தம் சென்னையை மையமாக கொண்டுள்ள விகே மோட்டர்ஸ் பெங்களூரில் தான் நன்றாக பிசினஸ் நடந்தது அதனால் முக்கால்வாசி விக்னேஷ் அங்கு தான் இருப்பான் ரமேஷ் இறந்த பின் அவருக்கு ஒரு மகள் அனாதையாக இருக்கிறது என்பதை உணர்ந்தவன் compassionate recruitment அடிப்படையில் ரேவதி யின் முகவரி க்கு அப்பாயின்மெண்ட் லெட்டர் அனுப்பினான்.

முதலில் இதுக்கு மெனக்கிடாமல் இருந்த ரேவதி தன் தோழி களின் வற்புறுத்தலால் அந்த லெட்டரை எடுத்துக்கொண்டு விகே மோட்டர்ஸ் மெஜஸ்டிக் கிளைக்குச் சென்றாள். அப்போது அங்கே விக்னேஷ் இல்லை அந்த கிளையின் மானேஜர் விக்னேஷ் க்கு கால் செய்து பார்த்தார். அவன் பம்பாயில் ஒரு டீலீங்ற்காக சென்ற சமயத்தில் தான் மெஜஸ்டிக் மானேஜர் புனித் இடம் இருந்து கால் வந்தது விஷயம் என்னவென்று அறிந்த விக்னேஷ் ரேவதியை உடனடியாக மெஜஸ்டிக் கிளையில் வேலையில் அமருமானு தன் மேனஜரிடம் கூறினான்.

ரேவதி யும் தான் இப்போது வேலைக்குச் சென்றால் தான் சாப்பாடே கிடைக்கும் என்கிற நிலை இருந்ததால் தனக்கு கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொண்டாள் அப்போது தான் ஒருநாள் அவளுடைய கிளைக்கு விகே மோட்டர்ஸின் உரிமையாளர் விக்னேஷ் குமார் வந்தான். ரேவதிக்கு விக்னேஷை அறிமுக படுத்தி வைத்தார் அந்த கிளையின் மானேஜர். ரேவதியைப் பார்த்த விக்னேஷ் அவளிடம் "உங்க அப்பா விகே மோட்டர்ஸின் ஒரு அங்கமாய் இருந்தார் மிஸ் ரேவதி பொதுவா நாங்க யாருக்கும் கம்பாஷனேட் ரெக்கிருமெண்ட் தரது இல்லை ஆனா ரமேஷ் சார் இங்கே ஒரு அங்கமாய் இருந்தாரு அதே மாதிரி நீங்களும் இருப்பீங்கனு நம்புற" என்று தன் கூலர்ஸ் கண்ணாடியை போட்டுவிட்டு வெளியே சென்றான் இப்படியே இரண்டு தடவை அந்த கிளைக்கு வரும் பொழுது ரேவதியை சந்தித்தான் அப்போது ரேவதி யிடம் சென்று" மிஸ் ரேவதி உங்களோட இன்டக்ஷன் இன்னும் முடியல அது சென்னை கிளையில் தான் நடக்கும் நீங்க அக்கவுண்ட்ஸ் பார்த்தாலுமே கம்பெனி யோட பிரோட்டோகால்ஸ் கல்ச்சர் எல்லாம் தெரிஞ்சிக்கனும் சோ யூ நீட் டூ ஸ்டே இன் சென்னை ஃபார் ஒன் மண்த் யூ ஸ்டார்ட் அஃப்டர் டு டேஸ்" என்றான். "சார் திடிரென்று இப்படி சொல்றீங்களே நான் அது வந்து எனக்கு தனியா சென்னை வர பயமா இருக்கு சார் எனக்கு சொந்தம்னு சொல்ல கூட யாரும் இல்லை" என்று பயத்தில் தடுமாறினாள்.

" ஹே கூல் ரேவதி நீங்க உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா நாளைக்கு நான் என் கார்ல சென்னை கிளம்பறேன் என் கூட வாங்க ஒன் மண்த் நீங்க கம்பெனி குடுக்கிற அக்கம்டேஷன்ல தான் இருக்கப் போறீங்க உங்கள அங்க டிராப் பண்ணிடு றேன்" என்றான் விக்னேஷ்.

"சார் அது வந்து நான் எப்படி உங்க கூட கண்டிப்பா இன்டக்ஷன் அட்டெண்ட் பண்ணனுமா சார்" என்று தயக்கத்துடன் கேட்டாள் ரேவதி." யா ரேவதி கண்டிப்பா நீங்க இன்டக்ஷன் அட்டெண்ட் பண்ணனும் ஹே கூல் நான் ஒன்னும் உங்கள கடிச்சு திண்ணுற மாட்டேன் யு வில் பி ஷேஃப்" என்று வசீகரமாக சிரித்தான்." ஒகே சார் நான் நாளைக்கு எங்க வரனும்" என்று கேட்டாள்." உன் வீட்டு முகவரி சொல்லு நாளைக்கு சண்டே சோ மார்னிங் ஒரு எட்டு மணிக்கு ரெடியா இரு" என்று அவள் முகவரியை வாங்கிய பின் விடைபெற்றான்.

அடுத்த நாள் காலை ரேவதி எழுந்த பின் தன்னுடைய திங்க்ஸை பேக் செய்தாள். மணி ஏழு ஆனதின் பொறுட்டு குளித்து விட்டு தன் தந்தையின் படத்தை வணங்கிய பின் கிளம்பிக் கொண்டிருந்தாள் அப்போது அவள் தோழி ஆஷாவிடம் இருந்து கால் வந்தது ரேவதியின் தந்தை இறந்த பின் அவளுடைய உலகமே அவளுடைய தோழிகள் தான் அவளின் நட்பு வட்டாரத்தினால் தான் அவள் உயிர் வாழ்கிறாள் என்று கூட சொல்லலாம் ஆஷா விடம் தான் சென்னை செல்வதை கூறிவிட்டு தன் பேக்கிங்கை தொடரினாள்.

அப்போது அவளுக்கு ஒரு தெரியாத எண்ணி லிருந்து கால் வந்தது யார் என்று யோசித்துக் கொண்டே கால்லை எடுத்தவளிடம் "என்ன ரேவதி ஃபோன் எடுக்க இவ்வளவு நேரமா நான் உன் வீட்டுக் கீழ தான் வைட் பண்ற வா" என்று கால்லை அணைத்து விட்டான் விக்னேஷ்.

இவருக்கு எப்படி தன்னுடைய மொபைல் எண் தெரிந்தது என்று யோசித்துக் கொண்டே வந்தவளுக்கு அப்போது தான் உரைத்தது தான் முகவரி எழுதும் போது கீழே தன் மொபைல் எண்ணையும் சேர்த்து எழுதியது. என்ன இது மடத்தனம் என்று தன்னையே நொந்து கொண்டவள் விக்னேஷை எப்படி எதிர் கொள்வது என்று சங்கடத்துடன் வீட்டை பூட்டி விட்டு கீழே இறங்கினாள்.

இன்றோடு ரேவதி சென்னை வந்து இரு வாரங்கள் ஆனது முந்தைய நாள் இரவு என்ன நடந்தது என்பதை மனதில் அசைப்போட்டு வெட்கத்தில் சிரித்தாள். சென்னை வந்ததில் இருந்தே விக்னேஷ் ரேவதியை தினமும் சந்திக்க தொடங்கினான் இப்படி தொடங்கிய சந்திப்பு அவளை பீச் பார்க் என்று கூட்டிச் செல்ல ஆரம்பித்தான் ரேவதி யும் அவனிடம் மயங்கி அவள் சொல் செய்யும் பொம்மை போல் நடந்தாள் இப்படியே மூன்று நாட்கள் சென்றது அன்று விக்னேஷின் பர்த்டே என்பதால் இரவு பார்ட்டி அரேன்ஜ்மென்ட்ஸ் பண்ணிருந்தான். ரேவதி தன்னை நன்கு அழகு படுத்திக் கொண்டு ஒரு சிவப்பு நிற சேலையை அணிந்து வந்தாள் விலை கம்மியானதாகவே இருந்தாலும் அவளுக்கு மிகவும் அமைப்பாக இருந்தது.

விக்னேஷ் வைத்த பார்ட்டி ஈசிஆர் பீச்சை ஒட்டி உள்ள ஒரு ரெசார்ட்டில் தன்னுடைய அக்கம்டேஷன் திருவான்மியூரில் இருந்ததால் ஒரு முக்கால் மணி நேரத்தில் பார்ட்டிக்கு வந்தவள் விக்னேஷை வாழ்த்தினாள்.

புன்னகையோடு இருந்தவன் அவளிடம் அவ்வளவு தானா ஒரு கிஸ் கூட தர மாட்டியா என்று விஷமம்மாக கேட்டான் அவனுடைய இச்சைகையில் வெட்கியவள் என்ன சொல்வதேன்று தெரியாமல் ஓடினாள்.

பார்ட்டி முடியும் வரை இருந்தவள் பின் கிளம்ப தயாரானாள் "ஏய் ரேவதி நான் ஒன்னு கேட்ட நீ என்ன கொடுக்காம கிளம்புற" என்று அவளிடம் நெருங்கினான். அதில் வெட்கியவள் தன் கண்களை மூடிக்கிட்டு அவனிடம் தஞ்சம் புகுந்தாள் பின் அவளை தூக்கிக்கொண்டு அந்த ரெசார்ட்டில் அவன் புக் செய்த அறையில் ரேவதி யோடு இருந்து அவளோடு உறவாடினான்.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

நான் நினைத்த மாதிரியே விக்னேஷ் பொறுக்கிதான் ரேவதியின் குழந்தைக்கு அப்பனா?
இப்போ குழந்தைக்கு ட்ரீட்மெண்ட்டுக்கு பணம் அவன்கிட்டேயே போய் கேளு ரேவதி
 
Last edited:
Top