Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் சுவாசம் நீதானே பாகம் 2 Episode 2

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 2

"இங்க பாருங்க மிஸஸ் ரேவதி நான் சொல்றதா கொஞ்சம் பொறுமையா கேளுங்க ஆகாஷ் க்கு இப்போ வயசு அஞ்சு ஆகுது ஹார்ட்ல ஒரு ஹோல் இருக்கு அதை நம்ம ஆப்பரேட் பண்ணி செரி பண்ணிடலாம் இந்த வயசுலயே செஞ்சிட்டா அவனுக்கு நல்லது" என்றார் டாக்டர் பிரஸீத் கிருஷ்ணா.

அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ரேவதி க்கு ஒரு கால் வந்தது" ஆமா அந்த ஹாஸ்பிடல் தான் நான் டாக்டர் ரும்ல இருக்கேன் வா"என்று காலை கட் செய்து விட்டாள். டாக்டர் பேசிக்கொண்டிருக்கும் போதே" எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர் மே ஐ கம் இன்" என்று ஒரு பெண் ஒரு சின்ன பையனொடு வந்தாள். "எஸ் கம் இன் யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்" என்று கேட்டார்." டாக்டர் ஹி ஸ் மை பிரண்ட் வர்ஷினி இது அவளொட பையன் சித்விக் ஷி இஸ் மை வெல்விஷ்ஷர்" என்றாள் ரேவதி. "ஓகே சிட் மிஸஸ் வர்ஷினி" என்று அவளை அமர சொல்லிவிட்டு தொடர்ந்தார் டாக்டர் "ASD needs to be corrected நீங்க ஒரு டேட் சொன்னீங்கனா நம்ம ஆரப்பரேஷன் பண்ணிடலாம்" என்றார். "ஆப்பரேஷனா டீ என்ன சொல்றாங்க இவங்க ஆகாஷ் நல்லா தான இருந்தான் நான் இப்போ கூட அவனை பார்த்துட்டு தான் இங்க வந்தேன் நர்ஸ்ஸொட நல்லா விளையாடிட்டு தான இருந்தான்" என்று பதறினாள் வர்ஷினி. அவளிடம் டாக்டர் கூறிய அனைத்தையும் சொன்னாள் ரேவதி.

" டாக்டர் இந்த ஆப்பரேஷன் பண்றதுக்கு எவ்வளவு ஆகும்" என்று பதற்றத்துடன் கேட்டாள் ரேவதி." இது பண்றதுக்கு ஐந்து லட்சங்கள் ஆகும் அது போக ஒரு பத்து நாள் ஆகாஷ் எங்களோட அப்சர்வேஷன்ல இருக்கனும் சொ ஒரு பத்து லட்சம் ரெடி பண்ணிக்கோங்க" என்றார் டாக்டர்.

"டாக்டர் பத்து லட்சமா அவ்வளவு பணம் என்கிட்ட இல்லை" என்று அழுதாள். "உங்க ஹஸ்பண்ட் ரமேஷ் என்ன வேலை பார்க்கிறாங்க" என்று கேட்டார் டாக்டர் பிரஸீத்." டாக்டர் ரமேஷ் வந்து என்னோட அப்பா பேரு எனக்கு ஹஸ்பண்ட்னு யாரும் இல்லை" என்றாள்." வாட் கம் அகைன்" என்றார் டாக்டர்." டாக்டர் ப்ளிஸ் அது அவளோட பேர்ஸ்னல் நாங்க எப்படியாவது பணத்தை ரெடி பண்றோம்" என்று வர்ஷினி ரேவதியை வெளியே அழைத்துச் சென்றாள்.

ஆகாஷ் இரண்டு நாட்கள் அங்கு இருக்க வேண்டும் என்று சொன்னதால் இரண்டு நாட்கள் பள்ளிக்கு விடுப்பு கேட்டாள் ரேவதி. மூன்று வயதான சித்விக் தன் தாய் சுபா வர்ஷினி யிடம் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்தான். பெங்களுரில் இருக்கும் வைட்ஃபீல்ட்டில் ஒரு அபார்ட்மெண்ட்லில் தான் சுபாவும் ரேவதி யும் ஒன்றாக வசிக்கிறார்கள். ப்ரீகேஜில் படிக்கும் சித்விக் ரேவதி டீச்சராக இருக்கும் பள்ளியில் தான் படிக்கிறான் தன்னுடைய ஸ்கூட்டியில் ஆகாஷையும் சித்விக்கையும் தினமும் கூட்டிக்கொண்டு செல்வாள் ரேவதி. ப்ரீகேஜி மதியம் பன்னிரெண்டு மணிக்கே முடிவதால் அதற்கு பிறகு ரேவதியின் ஸ்டாஃப் ரூமில் பள்ளி நேரம் முடியும் வரை சித்விக் இருப்பான் ஏனெனில் சுபா வர்ஷினி எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறதால் ரேவதியின் பொறுப்பில் தான் சித்விக் இருப்பான். காலை ஒன்பது மணிக்கு சுபா பஸ்ஸில் கிளம்புவாள் இரவு வீட்டிற்கு திரும்ப மணி எட்டு ஆகும். அதுவரை ரேவதி தான் இரு பிள்ளைகளையும் சமாளிப்பாள்.

இப்போது ரேவதி யும் ஆகாஷ் உடன் ஹாஸ்பிட்டலில் தங்குவதால் சித்விக் கிளம்பாமல் அடம் பிடித்தான். அந்த இரு நாட்கள் விடுப்பு எடுத்து சுபா வீட்டில் இருந்தாள். சித்விக் ரொம்ப அழுததால் வீட்டிலேயே இருக்கட்டும் என்று காலை சமைத்து விட்டு ஸ்கூட்டியில் சித்துவை அழைத்துக்கொண்டு ரேவதி மற்றும் ஆகாஷிற்கு காலை சாப்பாடு எடுத்துச் சென்றாள். தங்களுடைய வீட்டில் இருந்து ஹாஸ்பிட்டல் செல்ல அரை மணி நேரம் ஆகும் என்பதால் எட்டரை மணிக்கு கிளம்பி ஒன்பது மணிக்கு மருத்துவமனை அடைந்தாள்.

"ரேவதி இப்போ ஆகாஷ் எப்படி இருக்கான்" என்று கேட்டாள் சுபா. "வர்ஷினி காலைல எழுந்திருச்சான் கேன்டீன்ல பால் வாங்கி கொடுத்தேன் இப்போ தூங்குறான்" என்று கவலையாக சொன்னாள். "நீ கவலைப்படாத ரேவதி ஆகாஷ் செரி ஆயிடுவான் நான் சாப்பாடு கொண்டு வந்திருக்க சாப்பிடு" என்று சாப்பாட்டை எடுத்து பறிமாறினாள்.

" ரேவதி என்னோட சம்பளத்துள சேர்த்து வெச்ச பணம் ஒரு ஐம்பது ஆயிரம் இருக்கு அதை நீ ஆகாஷ் ஆப்பரேஷன் காக எடுத்துக்கோ" என்றாள் சுபா. "என்ன சுபா பேசுற நீ உன்னோட சம்பளம் மாசம் ஐம்பதாயிரம் என்னோடது இருபது ஆயிரம் தான் அதுல வீட்டு வாடகை பன்னிரண்டு ஆயிரம் நீ தான் கொடுக்குற அது போக வீட்டுச் செலவு சித்து படிப்புனு எல்லாமே நீ தான் கொடுக்குற என்னோட சம்பளம் ஆகாஷோட படிப்புக்கு மட்டும் தான் செலவு பண்ற நீ இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்த பணம் இந்த ஐம்பது ஆயிரம் உன் பணத்துல எனக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்திட்டு நீ தினமும் ஆபிஸ் க்கு பஸ்ல போற ப்ளிஸ் சுபா இதுக்கு மேல நீ ஒன்னும் செய்யவேண்டாம் அடுத்த மாசம் இரண்டாம் தேதி ஆப்பரேஷனாம் அதுக்குள்ள பத்து லட்சத்துக்கு நான் எங்கே போறது எனக்குன்னு இருந்த அப்பாவும் இப்போ இல்லை நான் இப்போ யாரும் இல்லாத அனாதை" என்று அழுதுக்கொண்டிருந்தவள் தீடிரென்று தன் கண்ணை துடைத்துவிட்டு "நான் அவன் கிட்ட கேட்க போறேன்" என்று தீர்மானமாக கூறினாள் ரேவதி.

" நீ என்ன சொன்ன ரேவதி அவன் கிட்டயா நல்லா யோசிச்சு தான் பேசுறியா"என்று கேட்டாள் சுபா. ஆமா சுபா நான் நாளானிக்கு ஆகாஷை கூட்டிட்டு கிளம்புற இவன் அவனோட பையன் தான அப்போ அவன் தான இவனோட மெடிக்கல் எக்ஸ்பென்ஸஸ் பாக்கனும்" என்றாள் ரேவதி.

" சேரி" என்று தலையாட்டிய சுபா நான்கு வருடங்கள் முன் நடந்ததை யோசித்தாள்.அன்று லெட்டர் எழுதி வைத்து விட்டு நேராக நடந்துக்கொண்டிருந்த சுபா சென்றது திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் பேருந்து நிறுத்தத்திற்கு அப்போது மணி இரவு பத்து இருக்கும் யாரும் தன்னை கண்டுபிடிக்க கூடாது என்று தன்னுடைய முகத்தை முக்காடு போட்டு மறைத்திருந்தாள் அப்போது அந்த பேருந்து நிறுத்தத்தில் மொத்தமே மூன்று நான்கு பேர் தான் நின்றிருந்தனர். அங்கு ஒரு பெண் கையில் கைக்குழந்தையுடன் அழுதுக்கொண்டே இருந்தாள் பார்க்க மெலிதாய் இருந்தவள் அந்த பெண்ணைப் பார்க்க பாவமாக இருந்தது சுபாவிற்கு. திடிரென்று அவள் மயக்கமானாள் இதை கவனித்த சுபா உடனே அந்த குழந்தையை கைப்பற்றி பக்கத்தில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தாள் அவர்கள் அப்பெண்ணை தண்ணீர் தெளித்து எழுப்பினர்.


"கையில குழந்தை வெச்சு இப்படி மயக்கப்போட்டு விழுந்திருக்கீங்களே உங்களுக்கு உடம்பு ஏதும் செரி இல்லையா உங்க கணவர் கூட இருக்காரா போன் வச்சிருக்கீங்களே நீங்க என்கிட்ட தாங்க நான் வேணும்னா உங்க வீட்டுல கால் பண்ணி வர சொல்றேன்" என்றாள் சுபா. அப்பெண்ணிடம் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை அவள் அப்படியே சிலை போல உட்கார்ந்திருந்தாள்.சுபாவிற்கு என்னமோ சரியாகப் படவில்லை"அஸ்வின் குடும்பத்தில் வேறு தன்னை இந்நேரம் தேடிக்கொண்டு இருப்பார்கள் அவர்கள் கண்ணில் படாமல் எதாவது ஒரு பஸ்ஸில் ஏற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே "எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா" என்று கேட்டாள் அந்தப் பெண்." ம்ம் சொல்லுங்க" என்றாள் சுபா. என்னோட ஊர் பேங்களூர் இந்த ஸ்டாப்ல பஸ் வரும் எனக்கு அப்பா மட்டும் தான் இருந்தாரு அவரும் இப்போ இறந்துட்டாரு எனக்குன்னு யாரும் இல்லை என்னை கொஞ்சம் பெங்களுரில் விட்டுட்டுப் போறீங்களா எனக்காக இல்லைனாலும் இந்த குழந்தைக்காக. நான் காலையில இருந்து சாப்பிட லை மனசுலயும் உடம்பு லயும் தெம்பு இல்லை நாளைக்கு காலையில பெங்களூர் போறதுக்கு ள்ள இப்போ இப்படி மயக்கப்போட்டு விழுந்த மாதிரி மறுபடியும் விழுந்தா என் பையன் நிலைமை என்ன ஆகும்னு தெரியல அதான் உங்கள வர சொல்றேன்" என்றாள் அந்தப்பெண்.

சுபாவிற்கும் எங்காவது வேற மாநிலம் சென்றால் நல்லது என்று தான் தோன்றியது இந்தப் பெண்ணை அவளுடைய வீட்டில் விட்டுச் சென்று நாமும் ஏதாவது சின்ன வீடு எடுத்து அங்கு ஒரு வேலையை தேடலாம் என்று முடிவெடுத்தாள். சுபாவின் ஏடிஎம் இல் அவள் சம்பாதித்த பணம் இரண்டு லட்சம் இருந்தது சுபா வேலைக்கு போன அந்த மூன்று வருடத்தில் சபேசன் தன் பெண்ணிடம் இருந்து பணத்தை வாங்கியதில்லை சுபாவின் செலவு மற்றும் தன் குடும்பத்தினருக்கு அடிக்கடி எதாவது வாங்கிக் கொண்டு செல்வாள் அதற்கு மட்டுமே உபயோகம் படுத்தியதால் அவளின் அக்கவுண்ட்டில் இவ்வளவு பணம் இருந்தது.

சுபா நேராக ஒரு கடையில் பிஸ்கட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் பின் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு வந்தவள் அந்த குழந்தையின் பால் பாட்டிலையும் வாங்கி வந்து ஒரு டீ கடையில் பால் வாங்கி அந்த பெண்ணிடம் கொடுத்தாள். "இவன் தாய்ப்பால் குடிப்பான் ங்க" என்றாள் அந்தப்பெண். "நீங்க காலையில இருந்து சாப்பிடாம குழந்தைக்கு எப்படி பால் இருக்கும் நீங்க முதல்ல இந்த பிஸ்கட்ஸ் சாப்பிடுங்க" என்று சுபா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பெங்களூர் செல்லும் பேருந்து வந்தது அதில் இருவரும் குழந்தையோடு ஏறினர். அவர்களின் நல்ல நேரத்திற்கு உட்கார இடம் கிடைத்தது. பேருந்தில் ஏறிய பின் சுபா அந்தப் பெண்ணை சாப்பிட சொல்லிவிட்டு குழந்தையை வாங்கி கொஞ்சினாள்." என்னை நீங்க வாங்கனு லாம் கூப்பிடாதீங்க என் பெயர் ரேவதி உங்கப் பெயர் என்ன" என்றாள் அந்தப்பெண் என்னோட பெயர் சுபா வர்ஷினி என்றாள் சுபா.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

ஆகாஷ் விக்கியின் மகனா?
ரேவதியை விக்கி ஏமாற்றி விட்டானோ?
மகனுக்குன்னு இப்போ ரேவதிக்கு பணம் கொடுப்பானா?
இங்கே பெங்களூரு வந்து சுபாவைப் பார்த்து விட்டு அஸ்வினிடம் விக்கி சொல்லுவானா?

சித்விக் அஸ்வினின் மகன் பெயர் நல்லாயிருக்கு
பெங்களூருவில் அஸ்வினுக்கு கம்பெனி இல்லையா?
அவ்வளவு பெரிய அப்பாடக்கர் பிஸினஸ்மேனுக்கு சுபா பெங்களூருவில் இருப்பது தெரியவில்லையா?
 
Last edited:
Top