Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் சுவாசம் நீதானே பாகம் 2 அத்தியாயம் 8

Advertisement

AnuJey

Well-known member
Member
வீடு வரும் வரை காருக்குள் அமைதி நிலவியது. சித்து மட்டும் ரோட்டில் போகிறவர்களைப் பார்த்து இவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு வந்திருந்தான். வீடு வந்ததும் அஸ்வின் சித்துவை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான். சுபாவிற்கு இந்த வீட்டைப் பார்த்த பின் பழைய நினைவுகள் அவளைச் சூழ்ந்தது. வீட்டினுள் சென்ற அஸ்வின் சுபா வருவது போல் தெரியவில்லை என்றவுடன் வெளியே சென்று அவளின் கையை இறுக்கமாகப் பிடித்து உள்ளே கூட்டிக்கொண்டு வந்தான்.

முதலில் அவர்களைக் கண்டது பொன்னம்மாள் தான். "அம்மா அய்யா சுபாம்மா வந்துட்டாங்க" என்று சந்தோஷத்தில் கத்தினாள். வாசுதேவனும் சசிகலாவும் உடனே ஹாலிற்கு விரைந்தனர் சுபாவை கண்டவளுக்கு வார்த்தையே வரவில்லை அப்போது அஸ்வின் கையில் இருக்கும் அந்த மூன்று வயது சிறுவனிடம் நெருங்கிய சசிகலா அஸ்வினிடம் "எங்க பேரனா?" என்று வியப்பாகக் கேட்டாள்." ஆமாம்மா" என்று சித்விக்கை தன் அம்மாவிடம் கொடுத்தான் புது ஆள் என்பதால் அழுதான் சித்விக் அதனால் தன் அன்னையிடம் ஒரு சாக்லேட் கொடுத்து அவனிடம் கொடுக்க சொன்னான் பின் சித்விக் அமைதி ஆனான். வாசுதேவன் சுபாவிடம் வந்து "வாம்மா நல்லா இருக்கியா" என்று கேட்டார் பதிலுக்கு உபசரித்த சுபாவின் பார்வை சசிகலாவிடம் சென்றது ஆனால் சசிகலா இவளை கண்டுகொள்ளவில்லை. பொன்னம்மாளை அழைத்த அஸ்வின் "என் ரூம்ல இருக்கிற பீரோ கிளின் பண்ணிடுங்க சுபா வும் சித்துவும் இனிமேல் அங்க தான் இருக்க போறாங்க" என்று மாடியில் இருக்கும் தன் அறைக்குச் சென்றான்.

சசிகலா விற்கு தன் மேல் கோபம் இருக்கிறது என்பதை உணர்ந்த சுபா அவளே அவரின் பக்கத்தில் சென்று" அத்தை என்ன மன்னிச்சிருங்க நான் பண்ணது தப்பு தான் ஆனா என்னோட சூழ்நிலை அப்படி இருந்துச்சு" என்றாள். "நீ எங்கள பத்தி யோசிச்சு பாத்தியா நீ எப்போ இந்த வீட்ட விட்டு போனியோ அப்போவே எல்லாரோட சந்தோஷமும் பொய்டுச்சு உன் அப்பா அம்மா எங்க கூட பேசுறதே இல்லை உன் தங்கை தீபிகா வும் எங்க கூட பேசுறது இல்லை உன் ஒருத்தி னால நல்லா இருந்த சொந்தங்கள் பிரிஞ்சு சுக்கு நூறா போச்சு இத பத்தி எல்லாம் நீ யோசிச்சித்து இருந்தனா கண்டிப்பா உன்னால இப்படி ஒரு முடிவ எடுத்திருக்க முடியாது. அஷ்வின் பொதுவாகவே எங்க கூட பெருசா சிரிச்சு பேசமாட்டான் நீ போனதுல இருந்து உன் மாமாவும் அஸ்வினும் பேசுறதே இல்லை என்கிட்டயே நான் எதாவது கேட்டா பதில் வரும் அவ்வளவு தான்" என்று சொல்லும் போதே சுபா அழத் தொடங்கி விட்டாள்." அம்மா தேவை இல்லாம அவளை ஏன் இப்போ அழ வெக்குறீங்க எல்லாத்துக்கும் காரணம் மாளவிகா தான் அவ தூண்டிவிட்டு தான் இப்படி லாம் பேசுறீங்க நீங்க எப்போ இருந்துமா இவ்வளவு சுயதலம் ஆனீங்க கொஞ்சம் அவளை பத்தி யோசிச்சு பாத்தீங்களா அவ இந்த வீட்டு போனது தப்பாவே இருக்கட்டும் ஆனா அவ போகும் போது குழந்தை உண்டான பொண்ணு நீங்க அவளைப் பத்தி எதாவது கேட்டீங்களா அவள் எங்க இருந்தா எப்படி இருந்தா அவளுக்கு குழந்தை பிறக்கும் போது துணையா யார் இருந்தா இதெல்லாம் கேட்க உங்களுக்கு ஏன் தோண மாட்டிங்குது மா.. நான் சுபாவ மன்னிக்கல ஆனா நீங்க இந்த வீட்டுல அவள் இருந்த வரைக்கும் உங்களையும் அப்பாவையும் சொந்த அம்மா அப்பா மாதிரி பாத்துக்கிட்டா.. இப்படி பேசறீங்களே இதான் நீங்க அவள் மேல வெச்சிருக்க பாசமா இப்போ சுபா வந்துட்டானு இவங்க அப்பா அம்மா க்கு தெரிஞ்சா மறுபடியும் அவங்க உங்க கூட பேசுவாங்க இது நா உங்களுக்கு கொடுக்குற வார்னிங் மா இனிமேல் சுபாவ நீங்க இப்படி காயப்படுத்துநீங்கனு தெரிஞ்சா நான் மனிஷனாவே இருக்க மாட்டேன்" என்று சித்விக்கை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான்.

" என்னை மன்னிச்சிரு சுபா ஏதோ ஆவேசத்துல பேசிட்டேன் நீ திரும்பி வந்ததே போதும் போய் ஃபிரஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்" என்று அஸ்வின் அறைக்கு அனுப்பி வைத்தாள்." அவர் எப்படி எனக்காக பேசுறாரு நான் ஹர்ட் ஆனா அவருக்கு பிடிக்கலையா ஆனா அவர் தான என்ன நல்லா ஹர்ட் பண்ணுவாரு" என்று மனதில் குழம்பியவள் குளித்து விட்டு ஒரு பிங்க் வண்ண சேலை அணிந்து கீழே சமையலறைக்கு வந்தாள்." அத்தை நான் எதாவது ஹெல்ப் பண்ணவா" என்று சசிகலாவிடம் கேட்டாள்." வேண்டாம்மா அஸ்வின் முடிவா சொல்லிட்டான் சுபா குழந்தைய பாத்தா போதும் அவளுக்கு கிச்சன்ல வேலை குடுக்க கூடாதுன்னு நீ உங்க அப்பா அம்மா கிட்ட லாம் பேசு மா இப்போ தான் மாமா பாபு வீட்டுக்குக் கால் பண்ணி நீயும் பேரனும் வந்த விஷயத்தைச் சொன்னாரு நாங்க துளசிக்குக் கால் பண்ணோம் ஆனா அவ எங்க கூட பேச மாட்டால இப்போ பாபு தீபிகா கிட்ட சொல்லி தீபிகா உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிருப்பா" என்றாள் சசிகலா. அத்தை அது வந்து" எனக்கு அப்பா அம்மா தீபி மொபைல் நம்பர் வேணும் நாலு வருஷம் தச் இல்லாம மறந்து போச்சு" என்றாள் தயக்கமாக." நீ மாமா கிட்ட போய் வாங்கிக்கோமா" என்று அனுப்பினார்." என்னை முன்னாடி கிச்சன்ல இருந்து எல்லா வேலையும் பார்க்கனும்னு சொல்லு வார் இப்போ இப்படி சொல்லிருக்காங்க ஒன்னும் புரியலையே குழப்பமா இருக்கு" என்று மனதில் குழம்பினாள். அஸ்வின் சித்துவை அழைத்துக் கொண்டு பீச்சிற்குச் சென்றான் அங்கே அவனோடு கடலில் விளையாடினான் சித்விக் சுபா வோடு இருக்கும் போது இந்த மாதிரி விளையாடியதில்லை சுபா வேலை விட்டால் வீடு வீடு விட்டால் வேலை என்று இருந்தாள் அதற்கு இன்னொரு காரணமும் அவளிடம் இருந்தது அனாவசியமாக வெளியில் சென்று அஸ்வின் கண்ணில் பட்டால் பிரச்சனை என்கிற பயம் அவள் மனதுக்குள் இருந்தது. சிறிது நேரத்திலேயே தன் தந்தையிடம் மிகவும் நெருக்கமானான் சித்விக்.

இரவு நேர சாப்பாட்டிற்கு வந்தார்கள் அஸ்வினும் சித்துவும் தன் அன்னை தங்கை தந்தையிடம் பேசிவிட்டு சித்துவிற்கு சாப்பாடு கொடுப்பதற்காக ஹாலில் காத்திருந்தாள் சுபா. கடலில் விளையாடிவிட்டு வந்தவர்கள் மேல் மண்ணாக இருந்தது சித்துவை அஸ்வினிடம் இருந்து வாங்கி குளிக்க வைத்தாள் சுபா. பின் அஸ்வினும் குளித்து முடித்து வந்த பின் அனைவரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். சித்துவிற்கு சாப்பாடு கொடுத்து விட்ட பின் சுபாவும் சாப்பிட்டாள் பின் அனைவருக்கும் பால் குடுத்து முடித்துவிட்டு அஸ்வினிற்கு பால் எடுத்துச் செல்லும் போது மனம் ஏனோ படபடப்பாக இருந்தது. சுபா வால் அஸ்வின் நமக்காக பேசுகிறான் என்பதை நம்பவே முடியவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும் அஸ்வினிற்கு சோனியா மேல் காதல் இருக்கிறது சித்விக் காக நம்மளை இங்கே வைத்திருக்கிறார் என்று தன் மனதில் ஆயிரம் குழப்பங்களுடன் அறைக்குள் சென்றாள்.

சித்விக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான் அஸ்வின் எங்கே என்று தேடியவள் பால்கனியில் வெளியே பார்த்தவாறு நின்றுக்கொண்டிருந்தான். "பால்.." என்று அவன் திரும்புவதற்காகக் கூறினாள். அதை அஸ்வின் எடுத்துக்கொண்டு பின் எங்கு நாம் படுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவளிடம் "அப்படி என்ன உனக்கு திமிர்" என்றான் அஸ்வின். "என்னது.. புரியல" என்று தயக்கமாகக் கேட்டாள். "சித்விக் கிட்ட என்ன பத்தி ஒரு வார்த்தை பேசல என் போட்டோ காட்டல" என்று அமைதியான குரலில் கோபத்தோடு கேட்டான்.

"அது வந்து சொல்லனும்னு தோணல" என்று தயக்கமாக கூறினாள். இந்த முறை கடுப்பான அஸ்வின் அவளின் இரு தொள்களைப் பிடித்து அழுத்தினான் "ஏன் சொல்லனும்னு தோணல நான் இல்லாமா தான் சித்விக் உனக்கு பிறந்துட்டானா" என்று அவளை விட்டுவிட்டு தன் கையை முறுக்கினான்.இந்தமுறை பயந்த சுபா உளற ஆரம்பித்தாள்" நீங்க எப்படி இருந்தாலும் சோ.. சோனியாவ கல்யாணம் பண்ணிடுவீங்கனு தான் அவனுக்கு நீங்க அப்பானு தெரிய வேண்டாம்னு நினைச்ச" என்று தட்டு தடுமாறி கூறினாள்.இதைக் கேட்ட அஸ்வின் சுபாவின் கன்னத்தில் அறைந்தான். தன் கன்னத்தில் கைவைத்த சுபா சித்விக் எழுந்திருக்க கூடாது என்று சத்தம் இல்லாமல் அழுதுக்கொண்டிருந்தாள். அதைப் பார்த்த அஸ்வின் சுபாவின் கையைப் பிடித்து தன் முன் நிறுத்தி அவளின் கண்களைப் பார்த்தான் ஏனோ சுபாவின் அழுகை அஸ்வினின் மனதை வறுத்தியது. அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டே இருந்தவன் சுபாவைத் தன்னுள் அணைத்தான் இந்த அணைப்பை எதிர்பார்க்காத சுபா முதலில் திகைத்தாள் பின் அஸ்வினின் மென்மையான அணைப்பில் அவளும்
தன்னை மறந்தாள். பின் சுபாவை விலக்கியவன் அவளின் இதழில் தன் இதழைச் சேர்த்தான் இது எவ்வளவு நேரம் நிகழ்ந்தது என்று அவர்களுக்கே தெரியவில்லை. முதலில் சுதாரித்த சுபா தன்னை அவனிடம் இருந்து விலக்கிக் கொள்ள முயன்றாள். ஆனால் அஸ்வினின் பிடி இறுகியது. சித்விக் அசையும் சத்தம் கேட்டதால் சுபாவைத் தன்னிடம் இருந்து விலக்கியவன் கோபத்தில் தன் தலை முடியில் கோதியவன் "ஸிட்..... சோனியா சோனியா சோனியா.. நீ என்ன எப்பவுமே புரிஞ்சிக்க மாட்ட சுபா" என்று கடுப்பில் கூறியவன் வேகமாக அறையின் கதவை தள்ளிவிட்டு வெளியே சென்றான்.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

என்னங்கடா இது
திரும்பவும் பழையபடி ஆரம்பிக்கிறாங்களே
அடேய் அஸ்வின் சுபா
மறுபடியும் அந்த சோனியா வந்து ஏதாவது கோக்குமாக்கு பண்ணுறதுக்குள்ளே இரண்டு பேரும் மனசு விட்டு பேசுங்கடா
 
Last edited:
அருமையான பதிவு
இவங்க ரெண்டு பேரும் எப்ப மனதில் நினைக்கறத
பேசுவாங்க
 
Top