Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் கண்களில் காண்பது உன் முகமே!

Advertisement

என் கண்களில் காண்பது உன் முகமே

இந்தக் கதையின் ஆசிரியர் டெய்சி ஜோசப்ராஜ் பற்றிய ஒரு சிறிய முன்னுரையோடு உங்களைச் சந்திக்க வந்துள்ளேன் நண்பர்களே!
அன்புத் தோழர்களே! வாசக நண்பர்களே, டெய்சி ஜோசப்ராஜ் ஆகிய நான் இந்தத் தளத்திற்கு முற்றிலும் புதியவள்; கதை உலகிற்கு இளையவள்; தத்தித் தத்தி நடை பழகிக் கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை நான்.

இரண்டு வருடத்தில் ஏழு நாவலகளை எழுதி முடித்து ஏழு நாவல்களுமே புத்தக வடிவில் வந்துவிட்டது! அதில் ஒரு நாவல் ஆங்கிலத்தில் நானே மொழி பெயர்த்த ஃபேன்டசி ஸ்டோரி. ‘THE DAZZLING STONE’ ‘ஒற்றைக் கல் மூக்குத்தி’ என்ற மந்திர தந்திர காட்சிகள் நிறைந்த தமிழ் நாவலின் ஆங்கிலப் பதிவு!

நான் ஏன் என்னைப் பற்றி இவ்வளவு விலாவாரியாகக் கூறுகிறேன் என்றால், நான் இதற்கு முன் பங்கு பெற்ற போட்டியில் எழுதிய போட்டிக்கதை “கற்பூர தீபங்களும் கைவீசும் குழந்தைகளும்” என்ற நாவல் இரண்டு சுற்றிலும், மூன்று நடுவர்களாலும் வெகுவாகப் பாரட்டப் பெற்று, சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சிறப்புப் பரிசு பெற்றிருந்தாலும் அந்தக் கதை வெகுஜன வாசகர்களைச் சென்றடையவில்லையே என்ற ஆதங்கம் என்னிடம் உண்டு. அதானாலேயே அந்த நாவல் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெறும் வாய்ப்பைத் தவறவிட்டது!

இந்தப் போட்டியிலும் வாசகர்கள் தீர்ப்பும், நடுவர்களின் தீர்ப்பும்தான் கதையின் வெற்றியை நிற்ணயிக்கப் போகிறது.

நான் உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான்! வாசகர்களாகிய நீங்களும் ஒரு நடுவர்தான். பரிட்சை எழுதும் மாணவரின் அனைத்துப் பேப்பர்களையும் திருத்தி உங்கள் ஓட்டினைப் பதிவு செய்யுங்கள்! நடுவர்களும் தங்கள் தீர்ப்பைக் கூறட்டும் ஒரு கதாசிரியருக்கு, வாசகர்கள்தான் முதுகெலும்பு! நீங்கள் இல்லையேல் நாங்கள் இல்லை! அது ஆளில்லாத டீக்கடையில் டீ ஆற்றுவதற்கு சமமானது!

ரொமான்சோ, காதலோ, உறவுகளோ, குழந்தைகளோ இல்லாத நாவல்களே இருக்க முடியாது.
நான் எழுதப் போகும் இந்த நாவலை ரொமான்டிக் நாவல் என்று கூறுவதைவிட உணர்வுப்பூர்வமான கொஞ்சூண்டு ரொமான்ஸ் கலந்த குடும்பநாவல் என்றுதான் கூற விளைகிறேன்.

கொஞ்சம் கனமானக் கதைத்தளம், வெறும் ஜாலிக்காக என்று மட்டுமில்லாமல் ஆழ்ந்து படித்தால் மட்டுமே கதைக்குள் செல்ல முடியும்.

கதையின் தலைப்பு மிகவும் அவசரமாக வைக்கப்பட்டது. கதையின் தலைப்பைத் தேடிக் கொண்டிருந்தபொழுது, என்னருகில் தமிழில் பழைய சினிமாப் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.

‘நெஞ்சம் மறப்பதில்லை, அது தன் நினவை இழப்பதில்லை’ என்ற பாடல் வரிகளோடு அடுத்த பாடல் தொடங்கியது. அந்தப் பாடலைக் கேட்டாலே என் அனைத்து வேலைகளும் நின்றுவிடும்,,, நம் நெஞ்சை உருக்கிவிடும் நம் மனதை கிறங்கடித்துவிடும் அவ்வளவு சுகமான இனிமையான பாடல் அது,,,,யுரேகா கண்டுபிடித்துவிட்டேன்! கண்டுபிடித்துவிட்டேன் என்று என் மனம் கூவ அந்தப் பாடல்லிருந்து என் கதைக்கான தலைப்பைக் தேர்ந்தெடுத்துவிட்டேன்!

‘என் கண்களில் காண்பது உன் முகமே’

இதுதான் கதையின் தலைப்பு. குழந்தைக்குப் பெயர் வச்சாச்சு, இனிமேல்தான் கதையைப் புணைய வேண்டும், வருகிறேன் விரைவில் வருகிறேன் என் கதையின் பதிவுகளோடு. காத்திருங்கள் வாசகர்களே, அமைதியாகப் படித்துவிட்டுச் செல்லாமல் உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள்.

குக்குக்கூ,,,,குக்குகூஊஊஊ! ஆம் ரயில் கிளம்பிவிட்டது! என் கதை ரயில் நிலையத்தில், ‘சடக் சடக்கென்ற’ தாள நடையோடு கட கடவென்று தண்டவாளத்தில் உருளும் ரயிலோடுதான் தொடங்குகிறது!

புத்தம் புதிய கதையாக இருக்க வேண்டுமென்பது இந்த நாவல் போட்டியின் ஒரு விதி, கதையை முழுவதுமாக எழுதிவிட்டு உங்களைச் சந்திக்கிறேன். தற்சமயம் உங்களிடமிருந்து விடை பெறும் அன்புத் தோழி டெய்சி ஜோசப்ராஜ்!
தொடரும்
 
டெய்சி ஜோசப் ராஜ்

என் கண்களில் காண்பது உன் முகமே!
கதைக்கு அட்டைப் படம் இல்லை என்றால் எப்படி இதோ அந்த நாவ்லுக்காக நான் வடிவமைத்த அட்டைப் படம்ATUM 0529.png
 
Top