Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் அன்பே ஏங்காதே 3

Advertisement

A. Pavi

Member
Member
எங்கம்மா பசங்க இரண்டு பேரும் காணோம் என்று கேட்டுக் கொண்டே தனது ஹீரோ ஹோண்டா பைக்கை நிறுத்தி விட்டு வந்தார் ராஜ சுந்தரம்.



ஒருத்தன் நீ வாக்கிங் போனப்ப மாடி ஏறுனவன் இன்னும் மலை இறங்கல, இன்னொருத்தன் அவன் பிரண்ட் கூட போறன்னு சொல்லிட்டு போனவன் இன்னும் வந்த பாடில்லை.



என்ன பிள்ளை பெத்து எப்படி வழத்தி வைச்சிருக்கா பாரு உன் அருமை பொண்டாட்டி என்று வாயில் வெற்றிலைப் போட்டுக் கொண்டே தனது மகனிடம் புகார் செய்து கொண்டிருந்தார் அவரது அன்னை சகுந்தலா.




சரிமா அவ எங்க காணும் என்றிட இன்னைக்கு சஷ்டி விரதம் சொல்லி கோவில் போயிருக்கா. சாப்பிடாம விரதம் இருந்து அவளுக்கு எதாச்சும் ஆச்சு என்ன பண்ணுவ தெரியாது சொல்லிடு உன் பொண்டாட்டிக்கிட்ட என்றார்.




சரிமா இரு காபி போட்டு வரேன் என்று சமையலறை செல்ல அங்கு இன்னும் அன்றைய சமையல் செய்ததிற்கான அறிகுறியே இல்லாது போக காய்கறி பார்த்தவர் சமையலுக்கு தேவையானவற்றை பார்த்து எடுத்து கொண்டிருந்தார்.




அப்பா இங்க என்ன பண்ணிட்டு இருக்கிங்க என்று தனது முதல் மகனின் குரல் கேட்டு பின்னால் திரும்பாமலே சமையல் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்டா சிவா என்றார்.





நீங்க அப்படி ஒரு ஓரமா போய் திங் பண்ணுங்க என்று அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சினார் அவரது மனைவி திலகவதி.




என்னம்மா இன்னும் சமைக்கல எங்கிட்ட சொல்லி இருந்தா நான் கொஞ்சம் சீக்கிரமா வாக்கிங் போய்ட்டு வந்து எதாச்சும் சமைச்சி இருப்பேன் இல்லை என்றார்.




அதை யாருப்பா சாப்பிட முடியும் சொல்லுங்க என்றான் சிவா, அப்படி சொல்லுடா என் தங்கம் என்று ஹைபை கொடுத்துக் கொண்டனர் தாயும் மகனும்.



எல்லாம் என் நேரம் உங்களை பேச வைச்சி இருக்கு என்னை கேட்க வைச்சி இருக்கு என்று அவர் சொல்ல வாத்தியார் ஐயா எப்படி பேசறார் பாத்தியா அம்மா என்றான் சிவா.




டேய் என்று அவர் கத்த வீட்டுல இப்படி எல்லாம் கத்த கூடாது வாத்தியார் ஐயா இருங்க என் உடன் பிறப்பே கூட்டிட்டு வரேன் என்று சமையலறை விட்டு செல்ல,



ஏன்டி உன் பையன் இருக்க தைரியத்துல பேசுன இப்போது பேசுடி பார்க்கலாம் என்றவரின் கண்களை பார்த்தவர் இல்லனா நான் பேச மாட்டேனா என்றிட சரி காபி போட்டு குடு எனக்கும் அம்மாக்கும் என்றார்.





காபியை கொடுத்தவர் என்ன வாத்தியார் அமைதியா எஸ்கேப் ஆகுறீங்க பதிலே காணோம் என்றிட கொஞ்சம் யோசிக்க விடும்மா என்று காலையில் தாய் கூறியதை சொல்லி விட்டு பதில் கூறும் முன் வெளியே வந்து விட்டார்.





இல்லையென்றால் இவர்களுக்கு இடையே மாட்டிக் கொண்டு முழிப்பது என்றே சென்றார்.




உண்மையில் மாமியார் மற்றும் மருமகள் இருவரின் உறவு என்பது கண்டிப்பான தாய் மற்றும் புத்திசாலி மருமகள் போன்றே இருக்கும்.




பாசத்தைக் கூட அன்பாய் கூறாது அதட்டலாய் தான் கூறுவார் சகுந்தலா.



மாமியாரின் சொல் பேச்சு கேட்டாலும் அதை எதிர்வாதம் செய்து ஒத்துக் கொள்வார். முதலில் விழி பிதுங்கிய ராஜ சுந்தரம் பிறகு நிம்மதியானார்.




டேய் பன்னி படிக்கறேன்னு சொல்லிட்டு தூங்கிட்டு இருக்க எழுந்து கீழ வாடா என்று தனது தம்பி ரவியை எழுப்பி கொண்டிருந்தான் சிவா.




அவன் பேச்சை தாலாட்டு போல் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தான் சின்னவன், ஒரு கட்டத்தில் பேச்சு சரி வராது என்று உணர்ந்து மாடியில் இருந்த பைப்பில் தண்ணியை பிடித்து அவன் மேல் ஊற்றி விட்டு நிற்காமல் கீழே வந்து விட்டான் நம் கதையின் நாயகன் சிவா.
 
Top