Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும்- 6

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support & Comments.
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

அத்தியாயம்- 6


காரில் சிறிது நேரம் மௌனமே ஆட்சி செய்தது, கவின் அதை களைத்தான்.


சுபி அத்தை இந்த நேரம் தான நல்லா அசந்து தூங்கு வாங்க…. மாமாவும் மாத்திரை போட்டுகொண்டு படுப்பதால் எப்படியும் ஆறுமணிக்கு முன்பு எழுந்திருக்க மாட்டாங்க, பேசாமல் நம்ம வீட்டுக்கு வாயேன். என் கிட்ட எப்பொழுதும் ஒரு செட் சாவி இருக்கும் என கவின் கூற …


சுபியோ, அவனை முறைத்துக் கொண்டே அம்மாவும், அப்பாவும் தான் எழுந்திருக்க மாட்டாங்க…. ஆனால் அன்னம்மா கா, சின்ன சத்தத்துக்கே எழுந்துடுவாங்க நீங்கள் ஒன்னும் கவலைப்பட வேண்டாம்.


சுபி நேற்று அத்தை ஃபோனில் பேசிய எதையும் கவனிக்கவில்லையா? அன்னம்மா ஊருக்கு போயிருக்காங்க, அதனால காலையில் டிபன் சாப்பிட்டு நிதானமாக வாங்க என்று அத்தை சொன்னாங்களே, என கூறியவன்….. சுபியைப் பார்த்து அப்போ உன் கவனம் எங்கே இருந்தது டா, என புருவத்தை உயர்த்தினான்.


சுபி குப்பென்று சிவந்த முகத்துடன், அது அது என்று திணறினாள். பின்னே அவன் அருகில், அவன் கைப்பிடியில், நேற்று சகலத்தையும் மறந்து மாய உலகத்தில் அல்லவா, சஞ்சரித்திருந்தாள். இவனின் ஆளை விழுங்கும் பார்வையில் விழுந்தடித்துக் கொண்டு உறங்க போனேனே, இப்ப வந்து கேலி செய்யுறானே, இவனை என்ன செய்வது என்று பார்க்க, அவனோ கேலியாக புன்னகை செய்தான்.


சுபி, சமாளிப்பாக நான் மறந்துவிட்டேன், இப்போ அதனால் என்ன, என்னை வீட்டில் விடுங்க…. நான் தோட்டத்தில் வாக்கிங் போய் கொள்கிறேன்…. அம்மாவும் கொஞ்ச நேரத்தில் எழுந்துருவாங்க…. ஒன்னும் பிரச்சனையில்லை வாட்ச்மென் வேற இருக்கிறார். நீங்கள் என்னை வீட்டில் விட்டுட்டு, நீங்கள் போய் கொஞ்ச நேரமாவது தூங்குங்க, என்றாள்.


தூக்கம் எல்லாம் வரவில்லை சுபி மா… இப்படி செய்தால் என்ன, நீ அந்த வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன் என்று சொல்லிட்ட…. நான் வேண்டும் என்றால் உன்னை தூக்கிக் கொண்டு …


" கையில் மிதக்கும் கனவா நீ….

கை கால் முளைத்த காற்றா நீ

கையில் ஏந்தியும் கனக்கவிவ்லையே….

நுரையால் செய்த சிலையாய் நீ…."


என பாடிக்கொண்டே செல்லவா, என்றவன், அதிலும் ஒரு கஷ்டம், என்று கூறி விட்டு….


அத்தானால், உன்னை அவ்வளவு தூரம் தூக்க முடியாதே, நீ தான் செம வெயிட் ஆச்சே என கவின் சுபியை கலாய்க்க…


அவளோ அவனை முறைத்துக் கொண்டே அத்தான் நீங்கள் அந்த பாட்டை முழுதாக கேட்கவில்லை‍, என்றவள் மீதி வரியை பாட ஆரம்பித்தாள்.


" நிலவில் பொருட்கள் எடை இழக்கும்..

நீரிலும் பொருட்கள் எடை இழக்கும்..

காதலில் கூட எடை இழக்கும்

இன்று கண்டேனடி..

அதை கண்டு கொண்டேனடி…


காதல், தாய்மை இரண்டு மட்டும்

பாரம் என்பதை அறியாது…"

என்று தொடர்ந்து தன் தேன் குரலில் பாடி முடித்ததும், அவனைப் பார்த்து அத்தான், காதலை உணர்ந்தால் தான் இந்த பாட்டின் வரிகளை கூட உணர முடியும்…. இல்லையென்றால் ஜஸ்ட் லைக் தட் ஒரு சூப்பர் ஹிட் சாங் அவ்வளவு தான் அத்தான்.


என்னையும் உங்களால் புரிந்து கொள்ள முடியாது…

சரி எவ்வளவு நேரம் இப்படி காரிலே உட்கார்ந்து இருப்பது என வினவ…


இவள் என்று தான் என்னை புரிந்து கொள்வாளோ என மனதிற்குள் நினைத்துக் கொண்டு, தன் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல், சரி வா காரை வீட்டில் பார்க் பண்ணிவிட்டு நாம் பீச்சுக்கு போய் கொஞ்சம் நேரம் இருக்கலாம் என்றான் கவின்.


காரை சுபியின் வீட்டில் நிறுத்தி விட்டு, இருவரும் அருகில் உள்ள கடற்கரைக்கு நடந்தே வந்தனர்.


இருளும் பிரியாத, ஒளியும் வராத அந்த அதிகாலைப் பொழுதில் கதிரோனின் வருகைக்காக காத்திருந்தனர்...


கவின் சுபியை பார்த்து, சுபி இங்கே வா, உட்காரலாம் என ஓரிடத்தில் சென்று அமர்ந்தான்…


சற்று நேரம் இருவரும் வேடிக்கை பார்த்தனர். எப்போதும் பரபரப்புடனும், ஆர்ப்பாட்டமாக இருக்கும் இந்த பீச், அதிகாலை வேளையில் அமைதியாக இருப்பதை பார்த்துக் கொண்டே இருந்தாள்.


அவளின் அமைதியை பார்த்து கவின், ஏன் சுபி ரொம்ப சைலன்டா இருக்க என்று வினவினான்.

ஒன்னும் இல்லை அத்தான் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது.

சிறுவயதில் இந்த கடலைப் போல ஆர்ப்பாட்டமாக சுத்தி திரிவேன் இப்போது அதிகாலை பொழுது போல அமைதியாகிவிட்டேன்.


பழையபடி என் வாழ்க்கை மாறுமோ என யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றாள்.


சுபி இங்கே பாரு, நாம் வரும் போது எப்படி இருந்தது இந்த இடம்…. கொஞ்சம் இருட்டாக இருந்தது…. இப்போ சூரியன் உதயம் ஆக, ஆக இருட்டு மறைந்து வெளிச்சம் வருகிறது பார்…

அதே போல் நம் வாழ்க்கையிலும் வெளிச்சம் வரும், சீரியசாக கூறியவன், பின்பு வழக்கம் போல் அவளை வம்பிழுத்தான்.


ஆனால் நீ பழைய மாதிரி சேட்டை பண்ண ஆரம்பித்தால், நான் அவ்வளவு தான் காலி.

உன் பின்னாடியே வருவதற்கு தெம்பு வேணும், அதுக்கு நான் நல்லா சாப்பிடணும் தெரியுமா?

அது மட்டுமா, நீ வம்பு பண்ணி விட்டு வருபவர்களை நான் அல்லவா சமாளிக்கணும்,

அதுவும் வீட்டிற்கு தெரியாமல் சமாளிக்கணும்,

உனக்காக இந்த அத்தான் அப்பவே எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் தெரியுமா என…


சுபியின் முகம் மலரும் நினைவுகளால், மலர்ந்தது. சின்ன வயதில் எல்லாம் இவள் எவ்வளவு சேட்டை செய்தாலும் கவின் தான் வீட்டில் அடி வாங்க விடாமல் வந்து காப்பாத்துவான். அதனாலே அவளுக்கு கவின் என்றால் அவ்வளவு பிடிக்கும்….


ம் என பெருமூச்சு விட்டாள், அதெல்லாம் ஒரு காலம் என எண்ணினாள்.

.

என்ன பெருமூச்செல்லாம் பலமா இருக்கு என கவின் வினவ….


அது…. சின்ன வயதிலே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்போ என் மேல் இருந்த கேரிங் அதற்கு பிறகு இல்லையே…

என சுபி வருந்த, கவின் பேச்சை மாற்றினான்.


சுபி, சில காலம் நாம் பிரிந்திருக்கலாம், ஆனால் மனதளவில் உனது அருகிலே இருந்தேனே…

உனது நலனுக்காக கோபத்தைக் காட்ட, அதுவே இப்போ என்னை நெருங்க விடாமல் செய்கிறதே, என மனதிற்குள் எண்ணியவன்….


அதுக்கென்ன சுபி மா, எல்லாத்துக்கும் சேர்த்து இப்போ உன்னை நல்லா கவனித்துக் கொள்கிறேன், என அழுத்தமாக கூறி, அவள்

அருகே நெருங்கி அமர்ந்து கொண்டு அவளைப் பார்த்து கண்ணடித்தான்.


அவளோ, அத்தான் உங்களை என்ன தான் செய்வது என்று கூறிக்கொண்டே அடிக்க வர அவனோ, அவள் கையில் அகப்படாமல் ஓடிக் கொண்டே அயம் ஆல்வேஸ் யுவர்ஸ், நீ என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் டியர்…. என்ன பிடிக்க முடிந்தால் எனக் கூறி கொண்டே ஓடினான்.



அத்தான் உன்னை பிடிக்காமல் விட மாட்டேன் என கூறிக் கொண்டே அவள் துரத்த, அவள் கைப்பிடியில் சிக்குவது போல் இருப்பது பின்பு ஓடுவது என ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்தான்.


சுபியோ, அதற்கு மேல் ஓட முடியாமல் மணலில் மூச்சு வாங்க சரிய…


அதற்கு மேல் ஓடாமல் அவள் அருகில் அமர்ந்தவன், மெல்ல இழுத்து அவளை அணைத்தான்.


சுபி மா, சின்ன வயதில் இப்படி விளையாடும் போது நீ அத்தானுக்கு ஒரு கிஃப்ட் குடுப்பியே, அது இப்ப கிடைக்காதா, என தாபத்தோடு கேட்க…


ஐயோ அத்தான் பொது இடங்களில் இப்படியெல்லாம் பேசாதீங்க என, சினுங்கிக் கொண்டே கூற…


அப்போ வீட்டில் என்றால் உனக்கு ஓகேவா டியர் என புருவத்தை உயர்த்த…


போங்க அத்தான் என வெட்கத்துடன் கூறிக் கொண்டே அவன் தோளில் முகத்தைப் புதைத்தாள். …


கவினோ அவளைப் பார்த்து புன்னகை சிந்தினான்.


கதிரவனோ, இவர்களின் ஜோடிப் பொருத்தத்தை கண்டு ஆனந்தம் கொண்டு

தன் கதிர்களை மெதுவாக வெளியிட்டார்.


பொழுது மெல்ல புலர்ந்தது….. அமைதியாக இருந்த அவ்விடம் மெல்ல பரபரப்புக்கு உள்ளானது.


வாக்கிங் செல்வோரின் நடமாட்டம் அதிகரித்தது…


கூட்டத்தை பார்த்து வீட்டுக்கு போகலாமா என வினவிக் கொண்டே, சுபி கவினை விட்டு நகர்ந்து அமர முயற்ச்சிக்க…


அந்த ஏகாந்த நிலையை கலைக்க விரும்பாத கவின், சுபி இன்னும் கொஞ்சம் நேரம் ப்ளீஸ் என்றான்.


சுபிக்கு விருப்பமில்லை இருந்தாலும் கவினுக்காக அரை மனதாக அமர்ந்தாள்…


ஆனால் சற்று முன் இருந்த இதம் மறைந்து விட்டிருந்தது. யாராவது அவளைப் பார்த்து பழைய விஷயங்கள் பற்றி பேசுவார்களோ என சங்கடப்பட்டுக் கொண்டே இருந்தாள்….


கடவுளே சீக்கிரம் வீட்டுக்கு போகனும். எந்த பிரச்சனையும் வரக் கூடாது என அவசர மனு கடவுளிடம் போட…

கடவுளோ சுபியை இன்னும் சோதிக்க எண்ணினார் போலும், இரு வயதான தம்பதிகளின் வடிவில் அந்த சோதனையை தந்தார்….


வாக்கிங் வந்த அந்த வயதான ஜோடியில், அந்த பெண்மணி தன் கணவரிடம் அங்க பாருங்க ரெண்டு பேரு உட்கார்ந்து இருக்காங்க தெரியுதா என வினவ…


ஏண்டி நான் தான் கண்ணாடி போட்டு இருக்கேனே நல்லா தெரியுது. அவங்க இரண்டு பேரும் லவர்ஸ்ஸா இருப்பாங்க நீ ஏன் அவங்களை பார்க்கிற பேசாமல் நட என பெரியவர் கூற…


கொஞ்சம் நில்லுங்க எனக்கு மூச்சு வாங்குது மெதுவாக நடங்க என்றவள்..


உங்க கண்ணு நல்லா இருந்தா அவளை கண்டு பிடித்து இருக்க மாட்டிங்களா, தினமும் பேப்பரை ஒரு வரி விடாமல் இரண்டு மணி நேரமாக படிப்பிங்களே….



கிட்டத்தட்ட இரண்டு மாசமா இவளைப் பத்தி தான நியூஸே என்றாள்.


இப்பொழுது தான் அந்த பெரியவருக்கு புரிய ஆரம்பித்தது. தன் ஞாபகசக்தியை மனைவியிடம் நிருபிக்க ஏதோ ஒரு ஜா என்று பெயர் முடியும் தானே என கேட்க…


அதற்கும் தன் கணவரை திட்டி விட்டு , ஒரு பொது இடத்தில் தனக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத பெண்ணைப் பற்றி பேச ஆரம்பித்தாள்…


அதாங்க இந்த ஏரியாவில் ஒரு கொலை நடந்ததே. இருபத்தியெட்டு வயசு பையனை கொண்ணுட்டு , எங்கிட்ட தப்பாக நடக்க முயற்சி செய்தான், அதான் என்னை காப்பாத்திக்க கொலை பண்ணேன் என திமிரா போலீஸ் ஸ்டேஷன் போனதே அதே பொண்ணுதான். கொஞ்சம் நாள் ஜெயிலுக்கெல்லாம் போனதே…


காசு இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் போல, வெளியே வந்துட்டா … கலிகாலம் அதுக்குள்ள வேறே ஒருத்தனை பிடிச்சிட்டா போல இதுங்கெல்லாம் திருந்தாத ஜென்மங்கள் என சேரை வாரி இறைத்து விட்டு சென்றாள்... ஒரு சிறு பெண்ணின் மேல் இரக்கமே இல்லாமல் வேண்டும் என்றே அவளுக்கு கேட்கனும் என்று, சத்தமாக கூறி விட்டு தன் கணவனை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.


அதை கேட்டு இறுகிப் போய் இருந்த சுபியை, ஆசுவாசப் படுத்த முயன்றான்.


அவன் சுமியின் கையை பிடிக்க முயல, அவளோ அவன் கையைத் தட்டி விட்டு வேகமாக நடந்தாள்.

நான் தான் போகலாம் என்று சொன்னேனே கேட்டிங்களா கவின்…

இந்த முட்டாள்தனமான பேச்சையெல்லாம் நான் கேட்ட வேண்டியிருக்கு…


இந்த மக்களை எல்லாம் என்னால் திருத்த முடியாது, அது தான் நான் ஒதுங்கி போகிறேன் என்றாலும் விட மாட்டேங்கிறீங்க….


நான் செய்த செயல் உங்களுக்கெல்லாம் திமிராக தெரியலாம், என்னைப் பொறுத்தவரை அது என்னோட தைரியம், நிமிர்வுடன் கவினிடம் கூறியவள் " நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுடன் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக தனது பாதையில் நடந்து சென்றாள்."


கவினோ அவளைப் பார்த்து அதிசயித்து நின்றான். அவளை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பரிணாமத்தில் பார்க்கிறான். இன்னும் அவளை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை

என்பதை உணர்ந்தான்.


லவ் யூ டி சிங்கப்பெண்ணே என மனதிற்குள் கூறிக் கொண்டான்.


தொடரும்…..
 
Last edited:
Top