Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும்-அத்தியாயம் -9

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Thanks for your lovely support and comments friends.
வணக்கம் தோழிகளே. எனது கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

அத்தியாயம்- 9

கார் சத்தத்தைக் கேட்டு அனைவரும் வெளியே வந்தனர்.


காரிலிருந்து இறங்கிய சுகந்தி, மற்றும் சுந்தரத்தை பத்மா முன்னே சென்று வரவேற்றாள்.


சுகந்தியோ சுற்றிலும் பார்வையை சுழற்றினாள் தன் அண்ணன் இல்லை என்பதைக் கண்டு கொண்டு பத்மாவிடம் " அண்ணி அண்ணன் எங்கே என்று வினவினாள்".


இதோ கடை வரைக்கும் போயிருக்காங்க சுகந்தி, இப்போ வந்துவிடுவார்கள் என பத்மா கூற...


ம் என சலித்துக்கொண்டாள் சுகந்தி… வரவர வீட்டு மாப்பிள்ளைக்கு உள்ள மரியாதை அவ்வளவு தான் போல … அதற்காகத்தான் என் பொண்ணை கட்டிக் கொடுக்காலாம் என்று பார்த்தேன்.அதற்கும் எனக்கு கொடுப்பினை இல்லை … அம்மா வீட்டு உறவு இனி அவ்வளவுதான் போல என்று புலம்பினாள் சுகந்தி.

சும்மாயிரு என சுகுமாரன் அடக்க ...

சுகந்தியோ கண்களை கசக்க்கினாள்…



கவின் தான் சுகந்தியின் கவனத்தை விஷாலின் பக்கம் திருப்பினான்.


உள்ளே வாங்க அத்தை மாப்பிள்ளை வந்துட்டார். நாம் பேசிக்கொண்டு இருப்போம் அதற்குள் அப்பாவும் வந்துவிடுவார் என்று கூறி உள்ளே எல்லோரையும் அழைத்துவந்தான்.


அத்தை, மாமா அவர்தான் மாப்பிள்ளை விஷால்... உங்களுக்குத்தான் தெரியுமே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஓனர். சென்னை சிட்டியில் ஐந்து இடத்தில் நடத்துகிறார், என விஷால் பற்றிய விவரங்களை கூறினான் கவின்.


சுகுமாரன் ஹாய் என கைகொடுத்து உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.


இன்றைக்கு தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பா, அம்மா இறந்த போது வந்தேன் உங்களை சந்திக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார்.


நவீன், தான் விடுங்க மாமா அதைப்பற்றி பேச வேண்டாம் என்று தடுத்துவிட்டு விஷாலை பற்றி கூறினான் . அவருக்கு தீப்தியை பிடித்திருக்கு என்று கூறிவிட்டார் ….நீங்களும், அத்தையும் கலந்து பேசி முடிவெடுங்கள் என்றான். பிறகு நீரஜாவிடம், திரும்பி" நீ, போய் ஜூஸ் கொண்டு வா' என்றான்.


சுகுமாரனும் வந்து விட…. சுகந்தியும் அமைதியாக அமர்ந்து விட்டாள்.


நீரஜா எல்லோருக்கும் பழச்சாறு கொடுத்து விட்டு அவளும், பத்மாவின் அருகில் அமர்ந்தாள்.


ஆண்கள், பிஸ்னஸ் விஷயம் பற்றி சுவாரஸ்யமாக பேசிக் கொண்டு இருந்தனர்.


சற்று பொறுமையாக இருந்த சுகந்திக்கு, இப்பொழுது பொறுமை காற்றில் பறந்தது…


சுகந்தி பொதுவாக நல்லவள் தான்…. ஆனால் மகள் என்று வந்து விட்டால் அவ்வளவு தான், வேறு எதுவும் அவளுக்கு முக்கியம் கிடையாது.


இதற்கு முன்பு சுகந்தி வீட்டிற்கு வந்தால், வீடே களை கட்டும்.


நவீனும், கவினும் அவர்கள் அம்மாவை விட அத்தையிடம் தான் மிகவும் செல்லம்….


அதனால் தான் தன் மகளை, அண்ணன் வீட்டில் தான் கட்டி கொடுக்க வேண்டும் என்று ஆசை.


சிறு வயதிலே முடிவெடுத்து விட்டனர். நவீனுக்கு தான் தீப்தி என்று…


நவீனோ, நீரஜாவை விரும்பி, பின்னர் வீட்டிற்கு தெரியாமல் செய்த திருமணத்தால் தான் பல பிரச்சினை.


அதற்கு பின்பு தான் சுகந்தியின் குணமே மாறிவிட்டது.


அதற்கு காரணம் தீப்தி தான்…. அன்று தீப்தி அழுத அழுகை அப்படிப்பட்டது…..தீப்தி, நவீனை விரும்பவெல்லாம் இல்லை... அத்தை வீட்டிற்கு மருமகளாக வரவேண்டும் என்பதே அவளது விருப்பம்.


அதனால்தான் நவீன், நீராஜாவை திருமணம் செய்தவுடன் நான் எப்படியும் இந்த வீட்டிற்குத்தான் மருமகள் ஆவேன் என்று அழுதாள். கவின் அத்தானை திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறினாள் தீப்தி .


இப்படி வெள்ளந்தியாக இருப்பதற்கு காரணம் சுகந்தி தான், ரொம்ப செல்லமா வளர்த்து விட்டார். அதனால் தான் ஏமாற்றத்தை ஏற்கும் பக்குவம் இல்லாமல் இருக்கிறாள். ஆனால் சுந்தரமோ கண்டிப்புடன் இருப்பார்.அதனால் மட்டும் சற்றுப் பயப்படுவாள்.


வெகுநாட்கள் குழந்தை இல்லாமல் இருந்த சுகந்தி, சுந்தரம் தம்பதி" கோவில்,கோவிலாகவும்" "ஹாஸ்பிடல், ஹாஸ்பிடலாகவும் "சென்று வரமாக வந்து பிறந்தவள் தான் தீப்தி . அவள் கேட்டு எதுவும் இல்லை என்று சொன்னதில்லை.


தன் மகள் அழுவதை பார்த்த சுகந்தி அதற்கு காரணமானவர்கள் என்று நீராஜாவையும்,சுப்ரஜாவையும் எதிரியாக நினைக்கத் தொடங்கிவிட்டார்.


கவினும் தீப்தியை என்னால் மனைவியாக எல்லாம் நினைக்க முடியவில்லை என்று கூறிவிட்டதால், சுகந்தியால் ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது.


அன்றையலிருந்து சுகந்தி, தன் மகளை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார். மகளின் மனது மாறுவதற்காக கோவில், கோவிலாக சென்றார். கவின் மனதையும் மாற்ற முயற்சித்தார்.


அது முடியவில்லை என்றவுடன் தான் தீப்தியை மாற்ற முயற்சித்தார்.


கவினின், திருமணம் தேதி முடிந்தவுடன் அதற்குள் தீப்திக்கும் திருமணம் செய்ய வேண்டுமென பிடிவாதமாக பார்க்க தொடங்கினார்.


கவினோ, தீப்தியின் திருமணம் எனது பொறுப்பு என்று கூறி, விஷாலை பற்றி தெரிவித்தான்.


அதனால்தான் மார்கழி மாதம் என்றாலும் பரவாயில்லை என்று விஷாலை பார்க்க இப்பவே வந்துவிட்டனர். மார்கழி மாதம் கடவுளுக்கு உகந்த மாதம் விசேஷம்தான் செய்யக்கூடாது...

மாப்பிள்ளை பார்க்கலாம் என்று சமாதானம் செய்து சுந்தரத்தை அழைத்து வந்தாள்.


அவரோ வந்த காரியத்தை விட்டு பிஸ்னஸை பற்றி பேசவும் இவளின் பொறுமை பறந்து கோபம் வந்துவிட்டது.


மனதிற்குள் இந்த மனுஷனுக்கு விவஸ்தையே கிடையாது என்று என்று திட்டிக் கொண்டிருந்தாள்.


அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் கணைத்தாள். அவளுக்கு எதிர்ப்புறம் அமர்ந்திருந்த விஷால் தான் முதலில் கவனித்தான்.


என்ன ஆன்டி எதுவும் சொல்ல வேண்டுமா? என வினவ... சுகந்தியோ ஒன்றுமில்லை என்று முகத்தில் அசடு வழிய தலையசைத்தாள்.


பிறகு கவின் தான் தனது அத்தையின் மனவோட்டத்தை அறிந்து திருமணம் பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பித்தான்.

விஷால் பெரிதாக ஒன்றும் கூறவில்லை எனக்கு தீப்தியை ரொம்பப் பிடித்திருக்கிறது.


தீப்திக்கு என்னை பிடித்திருக்கிறதா என்று தெளிவாகக் கேட்டுக்கோங்க என்றான்.

அதற்கு பிறகு திருமணம் எப்பொழுது எங்கு வைப்பது என்பது பற்றி பேசிக் கொள்ளலாம் என்றான்‌.


சுகந்திக்கோ திருமணம் தாமதமாவதை விரும்பவில்லை.எனவே என்பெண் ரொம்ப அமைதியானவள் நான் சொல்வதை கேட்டுக் கொள்வாள். எங்களுக்கு சம்மதம் என்றால் அவளுக்கும் சம்மதம் என்றுக் கூறி விட்டாள்.



அதனால் திருமணத்திற்கு நாள் பார்ப்போம். அவளுக்கு இப்போது கல்லூரி உண்டு .அவள் அனாவசியமாக லீவு எடுக்க மாட்டாள். காலேஜ் நேரத்தில் தொந்தரவு செய்தாலும் அவளுக்கு பிடிக்காது.


அதனால் சாயந்திரம் நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ணி பேசிக்கோங்க….


நாம் இப்போது திருமணம் ஏற்பாடு பற்றி மேற்கொண்டு பேசுவோம் என்று சுகந்தி கூறினாள்.


சுகந்தி,சுந்தரம் மற்றும் சுகுமாரன் இவர்கள் மூவரைத் தவிர மற்ற அனைவரும் தங்களுக்குள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.


விஷாலோ தனது முகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் காட்டாமல் சரி என்று தலையாட்டியவன். ( மனதிற்குள் கவுண்டர் விட்டுக்கொண்டிருந்தான். இவங்க பொண்ணு காலேஜ் லீவு போடாதாமா… காலேஜ் நேரத்தில் தொந்தரவு செய்தால் பிடிக்காதாமா…. என்னம்மா இப்படி நம்புறீங்களே மா … உங்கள் மகள் ஒரு கேடி … நீங்கள் ஒரு அப்பாவி என்று நினைத்தவன், வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.)


பிறகு சுகுமாரன் பஞ்சாங்கத்தை எடுத்து பார்த்தார் நாள் குறிப்பதற்காக…


தை மாதத்தில் கவின், சுப்ரஜா இவர்களின் திருமணத்திற்காக குறித்த நாள் தான் நல்ல முகூர்த்த நாளாக இருந்தது .அதை விட்டால் அடுத்த முகூர்த்தம், ஆவணி மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அந்த முகூர்த்தத்தை விட்டால்,ஆறு மாத காலம் கழித்து தான் திருமணம் செய்ய முடியும்‌.


அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சற்று அனைவரும் குழம்பிப் போயினர்.


பிறகு விஷால் தான் கவின், சுப்ரஜா திருமணத்தோடு சேர்த்து எங்கள் திருமணமும் கோவிலிலே நடக்கட்டும்.


பிறகு ரிசப்ஷன் வேண்டும் என்றால் வேறொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் எனக் கூற…


அவனது ஐடியா ஒருவரைத் தவிர எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தது.


எல்லோரின் மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. சுகந்தி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க உட்கார்ந்து இருந்தாள்.


அவளிடம் யாரும் எந்த அபிப்பிராயம் கேட்காமல், திருமணம் தொடர்பான வேலையைப் பற்றி ஆலோசிக்க ஆரம்பித்து விட்டனர்.


பட்டுப் புடவை நம்ம கடையிலேயே பொங்கலன்று எடுத்துக்கொள்ளலாம் என்று சுகுமாரன் கூறினார். சுந்தரமும் நம்ம கடையில தான் டிசைன்ஸ் நிறைய இருக்கும் அதனால எல்லாரும் காஞ்சிபுரத்துக்கு வாங்க அங்கேயே எடுத்துக் கொளாளலாம் என்று அவர் மல்லுக்கட்ட….


கவின் இடையில் நுழைந்து திருமணத்திற்குரிய பட்டுப்புடவையை மாமா கடையில் எடுப்போம்.


ரிசப்ஷனுக்கு நம்ம கடையில் கிராண்ட்டா வொர்க்சாரி எடுப்போம், என்று முடித்து விட்டான்.


பிறகு நகையெல்லாம் எடுக்க வேண்டும், அதற்கு நாள் பாருங்க என்று சுந்தரம் கூறினார்.


குலதெய்வ கோயிலுக்கு வேற போக வேண்டும் அதற்கு ஒரு நல்ல நாள் பார்க்க வேண்டும்.


இதற்கிடையில் திருமணத்திற்கு பதினைந்து நாள் தான் இருக்கிறது. அதானால் எல்லாவற்றிற்கும் இப்பொழுதே நாள் பார்த்து வைத்துவிடுவோம் என்றார்.


ரிசப்ஷனுக்கு பொறுமையாக ஏற்பாடு செய்வோம் என்றார் சுந்தரம்.


விஷாலோ, சுந்தரத்திடம் " மாமா , நம்ம ஹோட்டலிலே ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்துக் கொள்வோமா" என வினவ….


அதுக்கென்ன மாப்பிள்ளை நம்ம ஹோட்டல் இருக்கும் போது வேறு எங்க செய்ய.‌..

உங்கள் விருப்பம் போல் செய்யலாம் என்றார் சுந்தரம்.


விஷால் கவினிடம் " உன்னோட ப்ளான் என்ன மச்சான்" என கேட்க...


எனக்கு எந்த ஐடியாவும் இல்லை டா…. பெரியவங்களோட விருப்பம் தான். சுபி வீட்டிலும் கேட்டு விட்டு ஏற்பாடு செய்துக் கொள்ளலாம்.

அது மெதுவாக பார்ப்போம், என்றான் கவின்.


டேய் மச்சான் எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது, பேசாமல் இரண்டு பேர் ரிசப்ஷனையும் சேர்ந்துச் செய்தால் என்ன என்று விஷால் வினவ…


எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைடா…. அம்மா,அப்பா உங்களுக்கு ஓகே வா என கவின் கேட்க…

எங்களுக்கு சம்மதம் தான், இருந்தாலும் மாமாக் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு விடு என்றார் சுகுமாரன்.


ஆமாம் டா, சுபி வீட்டிலும் கேட்டு விடுவோம்.

அவர்களுக்கும் ஓகே என்றால்,இரண்டு பேருக்கும் சேர்ந்தே ரிசப்ஷன் ஏற்பாடு செய்துவிடுவோம் என்றான் கவின்.


இதற்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என் மகளோட திருமணம், ரிசப்ஷன் எல்லாம் ஒரு கொலைகாரியோடு சேர்ந்து நடப்பதற்கு நான் ஒருக்காலும் ஒத்துக்கொள்ளவே மாட்டேன் என்றாள் சுந்தரி.



இவ்வளவு நேரம் சந்தோஷமும் கலகலப்புமாக இருந்த அந்த இடம் இப்போது அதற்கு நேர்மாறானது.


சுகுமாரனும் மனதிற்குள் தன் தங்கையை திட்டிக் கொண்டிருந்தான். எப்படி பாசமாக இருந்தவள் இப்படி குணம் மாறிப்போய்விட்டாளே என்று வருந்தினான்.


பத்மாவும், தன்னை அண்ணி என்று எண்ணாமல் அம்மாவாக எண்ணிய சுகந்தியா, இப்படி நமது பிறந்த வீட்டை மரியாதை குறைச்சலாக பேசுகிறாள் என வருத்தமுற்றார்.


நீராஜாவும், தன் தங்கையை இவ்வாறு கூறுவதை கேட்டு கண் கலங்கினாள்.



சுந்தரமோ, தனது மனைவியைப் பார்த்து முறைக்க…. சுகந்தியோ யாரையும் கண்டுக் கொள்ளவில்லை.


கவின் எல்லோரையும் ஒரு முறை பார்த்தான், யாரும் சுகந்தியை கண்டிக்கவில்லை எனவும் அவனே, தன் அத்தையிடம் "சுபி என்னுடைய வருங்கால மனைவி அவளை யாரும் மரியாதை குறைச்சலாக இந்த வீட்டில் நடத்தக்கூடாது" என்றுக் கூறினான்.


அவன் கூறியதைக் கேட்ட சுகந்தி அதிர்ந்து போய் நின்றாள். அவள் மட்டும் அதிர்ந்து நிற்கவில்லை,அந்த பக்கம் ஃபோன் லைனில் இருந்த சுபியும் தான் அதிர்ந்து நின்றாள்.


தொடரும்…..
 
மிகவும் அருமையான பதிவு,
சித்ராதேவி விஸ்வா டியர்
 
Last edited:
Top