Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும்-அத்தியாயம் -10

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments.
வணக்கம் தோழிகளே! எனது கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

அத்தியாயம்- 10
எனது வருங்கால மனைவியை யாரும் மரியாதை குறைச்சலாக இந்த வீட்டில் நடத்தக்கூடாது எனக் கவின், கூறியதைக் கேட்ட சுகந்தி அதிர்ந்து தான் நின்றாள்.



அவள் மட்டுமல்ல ஃபோனில் அந்தப் பக்கம் சுபியும் கேட்டுக்கொண்டிருந்தாள்‌. தூங்கி எழுந்த சுபி, தனது அக்கா, எப்பொழுது வீட்டிற்கு வந்தாள் என்பதை அறிவதற்காக ஃபோன் பண்ணினாள்.


நீரஜாவோ ஃபோனை எடுக்காமல், அங்கு எல்லோரும் இருப்பதால் பிறகு பேசலாம், என்று ஃபோனை கட் செய்ய ….. அது தவறுதலாக ஆன் ஆகி விட்டது .


பிறகு சுகந்தி பேசிய அனைத்தையும் கேட்டாள் சுபி.

எந்த சூழ்நிலை வரக்கூடாது என நினைத்தாலோ அதுவே அவள் வாழப் போகும் வீட்டில் ஏற்படுகிறது என நினைக்கும் போதே அவள் மனது காயப்பட்டது…

காயப்பட்ட அவள் மனதிற்கு மருந்து தடவுவது போல தொடர்ந்து கவின் பேசியது, அவளுக்கு இதமளித்தது .


அந்த பக்கம் கவின், தொடர்ந்து தன் அத்தையைப் பார்த்து "அத்தை நீங்கள்தான் எங்களை வளர்த்தது எல்லாம்…. எங்க அப்பா, அம்மா எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு நீங்களும் முக்கியம் அதேபோல் எனக்கு மனைவியாக வருகிறவளுக்கும், இந்த வீட்டில் முழு அதிகாரம் இருக்கிறது. அவளுக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்க தான் வேண்டும் " என்றவன்,

மீண்டும் தொடர்ந்து அப்புறம் அத்தை, இன்னொரு முறை சுபியை கொலைக்காரி என்றுச் சொன்னால் நான் சும்மா இருக்க மாட்டேன்.


அன்று வீட்டுப் பெண்ணான உங்களை, மரியாதை இன்றி சுபி பேசினாள் என்று தான் அவளை நான் வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னேன்.


அதனால் தான் இன்னைக்கு அவளுக்கு அந்த பெயர்…. ஆனால் இனி மேலும் நீங்கள் இப்படி பேசினால், நான் மனுசனா இருக்க மாட்டேன்.. அவளை யாரும் எதுவும் சொல்லக் கூடாது என்றான்.


உங்கள் மகளுக்கு திருமணம் நீங்கள் எப்படி, எங்கே செய்ய விருப்பமோ, செய்யுங்கள் அத்தை… அது உங்கள் விருப்பம் என்றவன், தன் மாமனிடம் திரும்பி மாமா,இனி நீங்கள் திருமணம் பற்றி எதுவாக இருந்தாலும் விஷாலோடு கலந்து பேசிக் கொள்ளுங்கள் என்று இறுக்கத்துடன் கூறினான்.


பத்மாவிடம் " அம்மா நேற்று இரவு சரியாக தூங்காததால் கொஞ்சம் தலைவலியாக இருக்கிறது. கொஞ்சம் நேரம் தூங்கி ஓய்வெடுத்தால் தான் சரியாக இருக்கும், எனக்கு லஞ்ச் வேண்டாம் மா" என்றான் கவின்.


நவீனிடம், விஷாலுக்கு கம்பெனிக் கொடு…

விஷால் சாப்பிட்டு தான் போகணும் என்றுக் கூறி விட்டு கவின் மாடிக்கு போக முயல….


விஷால் " கவின் நில்லு! என்று அவனைத் தடுத்து, சற்று நேரம் இருடா " என்றவன், பிறகு சுந்தரத்தைப் பார்த்து, அங்கிள் எனக்கு அம்மா, அப்பா கிடையாது தெரியும் தானே என்றவன் ….


உறவினர்கள் யாரும் வந்து முன்னே நின்று என் திருமணத்தை நடத்த மாட்டார்கள். எனக்கு திருமணம் நடக்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு வசதி.


இப்பொழுதே அவர்கள் வீட்டிற்கு வந்தால் இஷ்டப்படி செலவு வைப்பார்கள். எனக்கு பணம் ஒன்றும்பெரிது இல்லை…. அம்மா, அப்பா இல்லாமல் தனிமையில் இருப்பதற்கு அவர்கள் வந்துச் செல்வது சற்று ஆறுதலாக இருக்கும் என்று நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்.


அவர்களோ இருக்கும் வரை எனக்குக் கூழை கும்பிடு போட்டுவிட்டு, செல்லும் போது அவர்கள் விஷத்தைக் கொட்டிவிட்டுச் செல்வார்கள்.


சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோங்க தம்பி, என்றுக் கூறி விட்டு அனாதைக்கெல்லாம் யாரும் பொண்ணு தரமாட்டாங்க…. வேணும் என்றால், என் தம்பி பொண்ணை திருமணம் செய்துக்கோங்க என்று எங்கள் பெரியம்மாவும், என் அண்ணன் பொண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என் சித்தியும், கூறி என்னை வருத்தப்பட வைத்து விட்டே செல்வார்கள்.


நான் அவர்களை எல்லாம் சட்டையே செய்யமாட்டேன் எனக்குத்தான் பத்மா அம்மாவும், சுகுமாரன் அப்பாவும் இருக்கிறார்களே! அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று விட்டுவிடுவேன்.


ஆனால் நீங்கள் இப்படி, கவின் மனதை வருந்த விடுவது எனக்குச் சங்கடமாக இருக்கிறது‌. கவினை விட்டு எனக்கு மட்டும் தனியாக திருமணம் செய்வதில் விருப்பமில்லை.

எனக்கும், கவினுக்கும் ஒரே நாளில் தான் திருமணமும் வரவேற்பும் செய்ய வேண்டும். இல்லை... உங்களுக்கு விருப்பமில்லை ...எனில் இந்த பேச்சுவார்த்தையை இத்தோடு விட்டுவிடுவோம் என்றான் விஷால்.



நீங்கள் உங்கள் விருப்பத்தை கலந்துபேசி சொல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என்று விஷால், புறப்பட எத்தனிக்க…


சுகந்தி, வேகமாகத் தடுத்தாள்" ஐயோ! மாப்பிள்ளை மன்னிச்சுக்கோங்க" என்றாள். உங்களை வருத்தப்பட வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.



எனக்கு என் மகளுக்கு தனியாக செய்யனும் என்று நினைத்தேன். சொல்லும்போது கோபத்தில் வார்த்தையை விட்டு விட்டேன்,


வேறொன்றுமில்லை மாப்பிள்ளை என்றவள், கவினிடம் நீயும் என்னை மன்னித்து விடு பா. எனக்கு சுபி மேல் கோபம் தான் இருந்தாலும், உனக்காக விட்டுக் கொடுக்கிறேன்,இனி மேல் அப்படியெல்லாம் பேச மாட்டேன் என்றாள் சுகந்தி.


பிறகு நீங்கள் மேற்கொண்டு திருமண ஏற்பாடுகளைப் பற்றி பேசுங்கள். நான் உள்ளே செல்கிறேன் என்று விட்டு அவளின்

அறைக்கு சென்று விட்டாள் சுகந்தி.


அந்தப்பக்கம் கேட்டுக் கொண்டிருந்த சுப்ரஜா பக்கென்று சிரித்து விட்டாள்.சுகந்திக்கு, விஷாலை விட்டு விடுவதற்கு விருப்பம் இருக்காது என்று தெரியும் . அவருக்கு பெற்றோர் இல்லாததால் நாளப்பின்ன, தாங்கள் அங்கு செல்லும்போது எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று கணக்கிட்டு இருப்பார்.


இல்லையென்றால் விஷாலையும், தங்களுடைய வீட்டிற்கே, வீட்டோட மாப்பிள்ளையாக கூட அழைத்து வைத்துக் கொள்ளலாம் என்றுக் கூட நினைத்து ஒத்துக் கொண்டிருப்பார்.மகளுக்கு நல்ல வசதியான வாழ்க்கை அமைவதை இழக்க விரும்பாமல் கூட… விட்டுக்கொடுத்தது போல் நடந்துக் கொள்கிறார் என நினைத்து சிரித்துக் கொண்டே ஃபோனை வைத்தாள் சுபி.


சுகந்தி,உள்ளே சென்றவுடன் விஷால், சுந்தரத்தைப் பார்த்து தீப்தியுடன் எப்பொழுது பேசலாம் என்று கேட்டு சொல்லுங்கள் மாமா என்றான்.

அவளோட விருப்பத்தையும் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் என்றைக்கும் எங்கள் நட்புக்குள் எந்த விரிசல் வருவதையும் விரும்பவில்லை என விஷால் கூற…


சுந்தரமோ தீப்தி, அப்படிப்பட்டவள் இல்லை மாப்பிள்ளை . போகப்போக உங்களுக்கே புரியும்.


இரவு அவளிடம் கேட்டு விட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்

நாளை மாலை எங்காவது வெளியே செல்லுமாறு இருக்கும் மாப்பிள்ளை என்றவர்…

கவின் மற்றும் நவீனைப் பார்த்து" நீங்களும் சுப்ரஜா, நீரஜாவை அழைத்துக் கொண்டு சென்று வாருங்கள் என்றவர், அவர்கள் சம்மதம் தெரிவித்த பின்பு சுகுமாரனிடம் பேச ஆரம்பித்து விட்டார்.


ஒரு நிமிடம் பயந்துபோன பத்மாவும் நிம்மதி பெருமூச்சு விட்டார். ஏனென்றால் தீப்திக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்.


விஷாலைப் போல ஒரு நல்ல மாப்பிள்ளை அமைய தீப்தி கொடுத்து வைத்திருக்க வேண்டும் கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு எல்லோரையும் சாப்பிட அழைத்தார் பத்மா.


நீரஜா... சுகந்தி சித்தியை சாப்பிட அழைத்துவிட்டு வா மா என்று பத்மா கூற…

நீரஜாவோ நானா அத்தை என்று தயங்க…

பத்மாவோ, அவள் ஒன்றும் சொல்ல மாட்டாள் நம்ம வீட்டிற்கு வந்தவர்களை நாம்தான் கவனிக்க வேண்டும் என்று கூறி நீராஜாவை சுகந்தியின் அறைக்கு அனுப்பினார்.


மற்றவர்கள் ஒவ்வொருவராக டைனிங் ஹாலிற்கு வந்து அமர்ந்தனர். பத்மா எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு பார்த்தால் கவினை காணவில்லை.பத்மா அவனைத் தேடிக் கொண்டு போக... அவனோ முகம் முழுவதும் புன்னகையுடன் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான்.



சற்று முன் அவ்வளவு கடினத்துடன் இருந்தவனோ இப்போது புன்னகையுடன் இருப்பதைப் பார்த்த பத்மா, அவனை ரசித்துக்கொண்டே"டேய் கவின் சாப்பிட வராமால் என்ன செய்துக்கொண்டு இருக்கிறாய்" என …


பைவ் மினிட்ஸ் மா, இதோ வந்துவிடுகிறேன் என்று விட்டு, சுபியிடம் மீண்டும் பேச ஆரம்பித்தான்.


நாளைக்கு எங்கே எப்போ மீட் பண்ண வேண்டும் என்று எல்லோரிடமும் கலந்து பேசிட்டு உனக்கு ஃபோன் பண்றேன்.


நீ கட்டாயம் வரணும் என்று அவன் கூறிக்கொண்டிருந்தான். அவளோ விஷாலுக்காகவே வர வேண்டும் என்று முடிவு எடுத்திருந்தாலும், வேண்டுமென்று வரமாட்டேன், வரமாட்டேன் என்றுக் கூறிக் கொண்டிருந்தாள்.


அவனை டென்ஷன் ஆக்க வேண்டுமென்று இவள் வம்பு இழுக்க…

அவனோ, அவனுடைய டென்ஷனில் இருந்து விடுபட்டு முகம் முழுக்க புன்னகையுடன் இருந்தான்.

பத்மா வந்து சென்றவுடன் அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க, சுபி அப்புறமாக உனக்கு கால் பண்றேன் பாய் என்று போனை வைத்துவிட்டு சாப்பிடச் சென்றான்.

அங்கு நீரஜாவும், சுகந்தியும் கூட வந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். இவன்தான் கடைசி ஆளாக வந்து புன்னகை முகத்துடன் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

எல்லோரும் சந்தோசமாக பேசிக்கொண்டு மதிய உணவு உண்டனர்.


*****************************


மதிய உணவு முடிந்தவுடன் விஷால் எல்லோரிடமும், விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டான்.


கவினும், நவீனும் ஓய்வெடுத்துக் கொள்ள சென்றுவிட்டனர். சுகந்தியும், சுந்தரமும் கொஞ்சம் ஷாப்பிங் போகும் வேலை இருக்கு அதை முடித்து விட்டு காஞ்சிபுரம் கிளம்புகிறோம் என்றுக் கூறி அனைவரிடமும் விடைபெற்று சென்றனர்.


சுகுமாரன் பத்மாவிடம் "பத்மா, நானும் கடைக்குப் போய்ட்டு வரேன்" என்று கூறி அவரும் கிளம்பி விட…


மாமியாரும், மருமகளும் வேலையாட்கள் உதவியுடன், அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு ஓய்வாக அமர்ந்தனர்.


அப்பாடா என்ற பத்மா இப்பொழுது தான் நிம்மதியாக இருக்கிறது,என்றவர்…. தொடர்ந்து நீரஜாவிடம்" நானும் உன் மாமாவும் எத்தனை முறை அவர்கள் வீட்டிற்கு சென்று அழைத்தோம் தெரியுமா? சுகந்தியும், சுகுமாரனும் இந்த வீட்டிற்கு வரவே இல்லை. பொண்ணுக்கு கல்யாணம் பேசுவதற்கு இங்க வரச் சொல்லவும் தான் வருகிறார்கள். இவ்வளவு நாள் கூப்பிட்டும் வரவே இல்லை என்று ரொம்ப மாமா கவலையாக இருந்தார். இப்போ தான் அவர் முகமே சந்தோஷமாக இருக்கு‌.



இதேபோல் கவின் மற்றும் தீப்தி ரெண்டு பேரின் திருமணமும் நல்ல படியாக முடிந்தால் இன்னமும் நிம்மதியா இருக்கும்.நல்லபடியா நடக்கணும் என்று குலதெய்வ கோயிலுக்கு வேண்டுதல் வைத்திருக்கிறேன் என்றாள் பத்மா…

நீரஜாவோ, கவலைப் படாதிங்க அத்தை எல்லாம் நல்லதாவே நடக்கும், நீங்கள் போய் ஓய்வு எடுங்க அத்தை, எனக் கூற …


சரிடா நீயும் போய் படு. நாளைக்கு வேற வெளியில் போகணும் ...ரெண்டு நாள் அலைச்சலுக்கே உன் முகம் வாடி போய் இருக்கு, முகத்துக்கு ஏதாவது பழக் கலவையைத் தடவி ஓய்வெடு என்றாள் பத்மா.


சரியென புன்னகையுடன் தலையசைத்துச் சென்றாள் நீரஜா.


காரில் சென்றுகொண்டிருந்த சுகந்தி, அருகில் அமர்ந்திருந்த சுந்தரத்தை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஏங்க உங்க பொண்ணுக்கு போன போடுங்க என. சுந்தரமோ, இப்ப காலேஜ்ல இருப்பா …


நாம காஞ்சிபுரம் போன பிறகு ஃபோன் பண்ணலாம் என்றார்.

அவளுக்கு டே காலேஜ் தானே இன்னேரம் முடிந்து இருக்கும். நீங்கள் போன் பண்ணுங்கள் என்று நச்சரிக்க..


அவரோ,தீப்திக்கு ஃபோன் பண்ண…. தீப்தியோ போனை எடுத்து பார்த்து, அப்பா ஏன் இந்த நேரம் கால் பண்ணுறாங்க... எடுப்போமா, வேணாமா என்று குழம்பித் தவித்தாள். எந்த பயபுள்ளயாவது காலேஜ் கட் அடிச்சது போட்டுக் கொடுத்து இருக்குமோ என்று பயந்து கொண்டே போனை எடுத்தாள்


சுந்தரம் "தீபு மா எப்படி டா இருக்கிற" என முதலில் நலம் விசாரித்தார்.



பிறகு உனக்கு ஒரு வரன் வந்து இருக்குமா..

நாளைக்கு உன்னை சந்திக்கணும் என்று சொன்னாங்க… பையன் சென்னை சிட்டியில் பல இடங்களில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ஸ் வைத்திருக்கிறார். அப்பா, அம்மா கிடையாது.‌ ஆனால் நல்ல தங்கமான குணம். நீ நாளைக்கு போய் பாரு… உனக்கு சம்மதம் என்றால் மேற்கொண்டு பேசுவோம் என…


தீப்தியோ, உங்களுக்கும் அம்மாவுக்கும் சம்மதம் என்றால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை பா... நாளைக்கு காலையில் என்றால் என்னால் முடியாது பா, காலேஜ் இருக்கிறது என்னால் லீவ் எல்லாம் போட முடியாது.


ஈவினிங் என்றால் பார்க்கலாம்,பா… எங்கே என்று சொல்லுங்கள் நான் போகிறேன் என…


சுந்தரமோ, மனதிற்குள் என் பொண்ணு எவ்வளவு பொறுப்பாக படிக்கிறாள் என்று பெருமையாக நினைத்துக்கொண்டார். நீ, மாமா வீட்டுக்கு காலேஜ் முடியவும் வந்துடு மா என்றார். கவினும்,நவீனும் வருவார்கள்... அவர்களோடு சேர்ந்து போயிட்டு வா என்றார்.


எங்கே போகனும் என்று அவர்களைக் கேட்டுக்கோமா,என்றவர் நான் ஃபோனை வைக்கட்டுமா என்று கேட்டு வைத்துவிட்டார்.

இங்கு தீப்தியோ அப்பாடா என்று ஃபோனை வைத்தாள்.

அருகில் இருந்த அவளது தோழியோ, அடியே உனக்கு காலேஜ் லீவு போட பிடிக்காதா…. இன்னைக்கு காரணமே இல்லாமல் உங்க அத்தை வீட்டுக்கு போறதுக்காக லீவு போட்டு இருக்கிற….

பாவம் உங்கள் அப்பா… இப்படியா ஏமாத்துவ என்று அவளை மொத்தினாள். விடுடி இதெல்லாம் காலேஜ் வாழ்க்கை சகஜம் என்று விட்டு…

யார் அது நமக்கு வாய்த்த அடிமை என்று யோசித்துக்கொண்டே படுத்திருக்க…


அங்கோ… படுத்துக் கொண்டிருந்த விஷாலுக்கு புரையேறியது….


தொடரும்…..
 
Last edited:
Top