Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -21

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -21

மலர் , அந்த ரூமுல போய் டிரஸ் மாத்திக்கோ.. என்று சொல்லிவிட்டு அவர்கள் சாப்பிட்டு வைத்த ட்ரேவை எடுத்து டெபிள் மேல் வைத்துவிட்டு ஜீஜே திரும்பி பார்க்க...

மென்மலரோ அந்த இடத்திலே அப்படியே படுத்து தூங்கிவிட்டாள்..

அச்சோ ,என்ன இவ்வளவு டயர்டா இருக்கா... அவளை பூப்போல் தூக்கிக்கொண்டு தனது பெட்டில் படுக்க வைத்தான் ஜெயசிம்மன்..

காலை 5.00 மணி, வழக்கமாக மலர் எழுந்துக்கொள்ளும் நேரம். எழுந்துவிட்டாள்.. மெல்ல கண்விழித்து பார்த்தாள்.. தனது வீடில்ல என்று தெரிந்துக்கொண்டாள்.. சாப்டானா மெத்தை விரிப்பு.. எழுந்துக்கொள்ள... பின்னாடி யாரோ இழுப்பது போல் இருந்தது..

குழந்தைபோல் தூங்கும் ஜீஜே... கையில் அவளுடைய ஷாலின் முனைப்பை கெட்டியாக பிடித்திருந்தான்... இவனுக்கு இதேவேளை அவன் விரல்களை விரித்து அவன் முந்தியை எடுத்தாள்..

எந்த கம்போர்ட்ல என் ட்ரஸ் இருக்கும்... மொதல்ல கம்போர்ட் எங்கிருக்கு... என் வீட்டைவிட பெரிசாயிருக்கு இந்த ரூம்.. இவன் ஒருத்தனுக்கு இவ்வளவு பெரிசு தேவையா..

ம்ம்.. தேவைதான் , நேற்றுமாதிரி ஓடிபிடுச்சு விளையாடலாம் இல்ல மலர் என்று ஜீஜே கண்ணை மூடிக்கொண்டு பேசினான்..

முழுச்சிட்டியா.. நான் குளிக்கனும் ஜீஜே...

நான் அதுக்கு ஏதாவது ஹெல்ப் செய்யனும்மா.. ஐ யம் வைடியிங் பேப் ..

லூஸூ... என் கம்போர்ட் எங்கயிருக்கு..

அழகாக மரத்தில் வேலைபாடு செய்யப்பட்ட சுவர்... மென்மலர் சுவர் என்று நினைக்க... அந்த பறவையின் மூக்கில் கைப்பிடி.. திறந்தான் ஜீஜே..

உள்ளே வார்ட்ரோப் முழுவதும் மலருக்கான துனிகள் மட்டும்...

ஜீஜே... துணிக்கடை வைக்க போறீயா... எதுக்கு இவ்வளவு ட்ரஸ்... வெஸ்ட்டா காசு விரையம்

அடிக்கள்ளி.. இதுக்கு தான்டி உன்னை லவ்வோ லவ்வு செய்யறேன்.. இந்த குணத்திற்காக தான்... நீ எப்போழுதும் பணத்துமேல ஆசை பட மாட்டே... மற்றவங்க பொருள் மேலையும்...

இதே இத்தனை கலர்புல்லான ட்ரஸை பார்த்தா வேற பொண்ணாயிருந்தா... தேங்க்ஸ் டார்லிங்ன்னு கட்டிபிடித்து முத்தாவா கொடுத்திருக்கும்... தெரியுமா.

எனக்கென்ன தெரியும்.. நீதான் அத்தனை பொண்ணுகிட்டையும் பழக்கம் வச்சிருந்த..

வாரிட்டியா.. திருப்தியா போய் குளி... திரும்பவும் போய் தூக்கத்தை தொடர்ந்தான் நம்ம ஜீஜே...

.....

6.30 மணிக்கு , பூஜை ரூமில் விளக்கேற்றிவிட்டு , நரசிம்மனிடம் வந்தாள் மலர்...

வாடா.. சீக்கிரமே எழுந்திட்டியா..

ஆமாம் தாத்தா, வழக்கமா இந்த நேரத்தில்ல பூஜை செஞ்சிடுவேன் தாத்தா..

கிச்சன் அறைக்கு அழைத்துச்சென்றார்..

ஹப்பா எவ்வளவு பெரிய கிச்சன்... அங்கே ஐந்துபேர் வேலை செய்துக்கொண்டிருந்தனர்..

அம்மா மலர்.. இவர்தான் முனுசாமி ஹெட் குக்... என்ன சமைக்கனுமோ நீ இவர்கிட்ட சொல்லிடுடா.. செஞ்சு தந்துடுவாரு..

வணக்கம் .ம்மா.. முனுசாமி சொல்ல..

வணக்கம் முனுசாமி அண்ணா என்றாள் மலர்விழியாள்...

அபியை எழுப்பி காபி கொடுத்துவிட்டு, ஜீஜேவுக்கு காபியை எடுத்துக்கொண்டு அவளது அறை கதவை திறந்தாள்...

ஆ...ஆ என்று மலர் கத்த... ச்சே இவ குடும்பத்துக்கு இதே வேலையா போச்சு...

எதுக்குடி கத்தற,.

கண்ணை இருக்கி மூடிக்கொண்டாள்.. கரும்மம் பிடிச்சவனே இங்கன்னா ஜட்டி விளம்பரம்மா நடக்குது... இப்படி போஸ் கொடுத்துட்டு நிக்கற..

ஸாரி.. நீ இருக்கிறத மறந்துட்டேன்.. கண்ணை திற டவல் கட்டிக்கிட்டேன்...

அவனை பார்த்து முறைத்தாள்... இன்னோரு முறை இப்படி செஞ்சே ஜீஜே.. நான் அபி ரூமுல தங்கிடுவேன்.. இந்தா காபி என்று அவன் கையில் கொடுக்க...

அவன் காபியை குடித்து முடிப்பதற்குள்... அன்று ஜீஜே உடுத்தும் சூட்டை எடுத்து வைத்தாள் மலர்..

.....

ஜீஜே மாடியிலிருந்து கீழே வந்தான்.. எதிரே சென்ற மலர் அவனைக் கண்டுக்கொள்ளவில்லை..

சோபாவில் உட்கார்ந்து காலை நீயூஸ் பேப்பரை புரட்டினான்... அவள் கிச்சனுக்கும் டைனிங் டெபிளுக்கும் நடந்துக்கொண்டிருந்தாள்..

முனுசாமி... என்று கிச்சன் வரன்டாவில் நடந்தான்...

ஐயா...

காலையில் நான் குடிக்கும் ஜூஸ் எடுத்துட்டு வாங்க.. அப்பவும் எதுவும் கண்டுக்கொள்ளவில்லை மலர்..

காலை சிற்றூன்டி சாப்பிட நரசிம்மன் டைனிங் ஹாலுக்கு வந்தார்...

தாத்தா நான் ஆபிஸூக்கு கிளம்புறேன்... ஜீஜே சொல்ல..

சாப்பிடாம எங்க கிளம்புறீங்க என்றாள் மலர்...

எனக்கு வேணாம்..

கையிலிருந்த ஹாட் பாக்ஸை டெபிளில் வைத்துட்டு.. ஏன் என்று அவனருகில் வந்தாள் மலர்..

ஹோ... மேடமுக்கு இப்போதான் கண்ணுக்கு தெரியறேன்...

சின்னபுள்ள மாதிரி நடந்துக்காதீங்க ஜீஜே என்று அவன் கையை பிடித்து அழைத்து சென்று டைனீங் டெபிளில் உட்கார வைத்தாள்..

தாத்தா நீங்களும் உட்காருங்க... இருவருக்கும் பரிமாறினாள்...

அவர்கள் எதிரே கோவிந்து உட்கார்ந்தார்...

பார்த்தீங்களா தாத்தா, ஈட்டலியன் டிஷ்ஷை சாப்பிட்டவனுக்கு இட்லியை போடுறா பாரு...

அதான் எட்டு இட்லியை சாப்பிட்டியா ஜெய்... அதுவும் கொடியில இருக்கிறமாதிரி கலர் கீரின், ஆரஞ்சு, ஒயிட் சட்னி ,சாம்பார் வேற

ஹோ மை காட் எட்டா.. என்றான் ஜீஜே. ஆபிஸ்ல தூங்கிடுவேன்.

தாத்தா அவரை பார்த்து கண்ணு வைக்காதீங்க... எவ்வளவு வேலை செய்யறாரு... ஒரு மாசம் நான் பார்க்கல எப்படி மெலிஞ்சிட்டாரு தெரியுமா...நீ சாப்பிடு ஜீஜே..

அவள் பேசுவதை கேட்டு, மலரையை பார்த்தார் கோவிந்.. சின்னப்பெண் தன் கணவனை கவனிக்கும் விதத்தையும் கவனித்தார்..

குட் மார்னிங் அண்ணீ என்று ராக்கி, ஜீஜேவின் பக்கத்தில் உட்கார்ந்தான்..

ஏன் லேட் ராக்கி... காலையில டைமுக்கு சாப்பிடனும் ராக்கி..

ஸாரி அண்ணீ, கொஞ்சம் லேட்டா எழுந்துட்டேன்..

இங்கு நடப்பதை ஹாலில் இருந்து பார்த்தனர் மாயாவும்.. நர்மதாவும்..

பார்த்தீயா மாயா.. உனக்குதான் உரிமை அதிகம்.. நேற்று வந்தவ உள்ளே புகுந்துட்டாளே.. எப்படியோ என் பொண்ணை கட்டிக்கொடுக்கலாம்.. நினைச்சேன் இந்த ஜெய் என் ஆசையில மண் அள்ளி போட்டான்..

எங்கிருந்தோ வந்தவ.. பரதேசி இன்னைக்கு இந்த வீட்டு மகாராணி ஆயிட்டா மாயா... பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோ...

வாயை அடக்கு என்று கையை நீட்டி காட்டினாள்... அவள இந்த வீட்டு வேலைக்காரியா ஆகுறது தான் என் முதல்வேளை நர்மதா.. அதுக்குதானே இந்த வீட்டில தங்குறேன்.. வா அங்க போகலாம்..

இருவரும் டைனீங் ஹாலுக்கு வந்தார்கள்..

மலர் ஸ்வீட் செய்ய சொன்னேனே..

இதோ தாத்தா என்று பவூலில் இளநீர் பாயசத்தை ஊற்றி கொடுத்தாள்.. ஜீஜேவுக்கு பிடித்த டஸர்ட்.

ஜெய்க்கு பிடித்த பாயசம் மலர்மா..

ஹேய் என்ன சாப்பாடு செஞ்சே என்று மலரிடம் கேட்டாள் மாயா..

அது என்று மலர் வாயை திறக்க,,, அவள் கையை அழுத்தி பிடித்து அவளின் வார்த்தையை நிறுத்தினான் ...

அவனின் பார்வையின் மொழியை புரிந்துக்கொண்டாள் மாது... முனுசாமியண்ணா என்ன சமைஞ்சிங்க சொல்லுங்க...

அந்த வார்த்தையோடு முற்றுப்புள்ளி வைத்தாள்..ராக்கி டேஸ்ட் எப்படின்னு சொல்லு என்று இளநீர் பாயாசத்தை வைத்தாள்..

ஸ்பூனில் ஒரு வாய் குடித்துவிட்டு சூப்பர் அண்ணீ என்றான் ராக்கி..

கோபத்தோடு உட்கார்ந்தாள் மாயா... முனுசாமி அவர் தயாரித்த உணவுகளை சொன்னார்..

இட்லியும், இளநீர் பாயாசத்தையும் எடுத்து வை என்றார் கோவிந்..

.....

12.30 மணிக்கு ,அனைத்து வேலையும் முடித்துவிட்டு, தனது போனை எடுத்து ஜீஜேவை அழைத்தாள் மலர். முழு ரிங் போய் நின்றது... கொஞ்சம் இடைவெளிவிட்டு திரும்பவும் போன் போட்டாள் மலர்..

எடுத்ததோ ராக்கி..அண்ணீ அண்ணன் தூங்குறான்..

என்னது..

இருங்க எழுப்புறேன்.. அண்ணா.. என்று ஜீஜேவிடம் அண்ணீ என்று போனை தந்தான்..

மலர்.. ம்ம்..

ஜீஜே வேலை பார்க்கும்போது யாராவது தூங்குவாங்களா... உடம்பு சரியில்லையா ஜீஜே..

இல்லடி காலையில நிறைய புட் எடுத்துக்கிட்டேன் அதான் தூக்கமா வந்திடுச்சு..

சரி மதியம் லன்ச் ஜீஜே..

எனக்கு வேணாம் மலர் ப்ளீஸ்..

சிரித்துக்கொண்டே போனே வைத்தாள் மலர்.. அங்கே நரசிம்மனும் இருந்தார்..

தாத்தா உங்க பேரன் தூங்குறான்..

தூங்கட்டும் குட்டிம்மா... ரொம்ப நாள் தூங்காதே இருப்பான்டா... சோபாவில் மலரை உட்கார சொன்னார்... அவன் சின்னவயசில தொலைச் சந்தோஷம் உன் மூலம் திரும்ப கிடைச்சிருக்குடா..

என்ன தாத்தா சொல்றீங்க..

என் ஒரே பொண்ணு லேகா, வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்கவச்சேன்.. அதான் நான் செஞ்ச பெரிய தப்பும்மா.. நம்ம கலாச்சாரமே மறந்துட்டா.. அங்கிருக்க நாகரிக மோகம் அதிகம் அவளுக்கு.. விட்டா கெட்டு போயிடுவா என்று இந்தியாவுக்கு வரவச்சேன்...

அவளுக்கு என்னுடைய பிஸினஸ் ரொம்ப பிடிக்கும், மேலும் தான் படிச்சபடிப்பு பயன்படுத்தி கோயம்புத்தூர்ல பெரிய ஸ்பின்னிங் மில் ஆரம்பிச்சா..

என்னுடைய தங்கச்சி பையன் தான் கோவிந்த், அவனும் இன்ஜீனியர் படிச்சிருந்தான்.. சரி இரண்டுபேருக்கு கல்யாணம் செஞ்சு வச்சு அவனை வீட்டோட மாப்பிள்ளை ஆக்கினேன்..

வந்த மருமகனும் சரியில்ல மலர்... பார்ட்டின்னு இரண்டுபேரும் வெளிய பயங்கற கூத்தடிப்பாங்க..

ஜெய்யும் பிறந்தான்... மூனுவயசுமேல நானே அவனை வளர்க்க ஆரம்பித்தேன்.. இரண்டுபேருக்கும் அவனை பார்த்துக்க நேரமில்ல...

குழந்தைக்கு கருத்து தெரியபோது அப்பா, அம்மாவை கேட்டான்.. மாசத்திற்கு ஒரு முறை வந்து பார்ப்பாங்க..

இந்த பெரிய மாளிகையில தனியாவே இருப்பாண்டா... இந்த ரூமுக்குள்ளே இருப்பான்... என்கிட்ட கொஞ்சம் பேசுவான்.. அவ்வளவுதான்..

நான் இருக்கும்போது இந்த வேலையாட்கள் நல்லா கவனிப்பாங்க.. நான் எஸ்டேட் போனபிறகு யாரும் கண்டுக்க மாட்டாங்க போல... பிள்ள தனியாவே இருப்பான்.. அப்பறம் தோட்டத்திற்கு போய் உட்கார்ந்து செடிகளையே பார்த்துட்டு இருப்பான்..

அப்பதான் எங்க தோட்டக்கார தாத்தாகிட்ட பழக்கம் ஏற்பட்டது ஜெய்க்கு... அவரோட சாப்பாட்டை தான் சாப்பிடுவான்.. நீ சொல்லுற பணக்கார தீமிரு அவனுக்கு இல்லடா...

பத்தாவது படிக்கும்போது ஹாஸ்ட்டல் போய் சேர்ந்துட்டான்... வீட்டுக்கே வரமாட்டான்டா..

நீ முதல்ல காலேஜ் சேர்ந்த அப்பவே... உன்னை பற்றி விசாரிச்சான்டா..

ஆச்சரியமாக அவரை பார்த்தாள்.. நிஜம்டா நம்ம ஊரிலிருந்து ஒரு சின்ன பொண்ணு வந்துருக்கு தாத்தான்னு சொன்னான்.. உன் பேரும் எனக்கு தெரியும் மலர்ம்மா..

அப்பறம் பிஸினஸ் லாஸ்.. அவங்க அம்மா மது குடிச்சு, உடம்பு கெட்டு போயி... கடைசி நேரத்தில தன் மகன்மேல பாசம் வந்திடுச்சு... அவ வளர்த்த பிஸினஸ் எடுத்து நடத்தனும் அதான் என் கடைசி ஆசையின்னு அழுதா...

நான் ஒண்ணு சொல்லட்டா மலர்... நீ அவனை நன்பனா பார்த்தியோ எனக்கு தெரியாது.. ஆனா உன்னை உயிருக்கு உயிரான தோழியா பார்க்கிறான்டா...

உன்வீட்டுல தங்கட்டுமா என்று என்கிட்ட கேட்டுதான் தங்குனான் மலர்..

----மயக்கம்

.
 
Nirmala vandhachu ???
 
Top