Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 36 [final]

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 36

வாசு ஹோட்டல் கண்ணாக்குள் நுழைந்தான். அவங்க அத்தை சொன்ன ரூமின் கதவை தட்டினான்.

கதவை திறந்தாள் மாலனி, “மாமா“ என்று தலை குனிந்து நின்றாள்.

“மாலனி இங்க ஏன் தங்கியிருக்க , உங்க அம்மா போன் செஞ்சி ஏதோஏதோ சொல்லறாங்க , என்ன விஷியம் மாலனி. “

“ஓண்ணுமில்ல மாமா“

“லவ் பண்ணறீயா, யாரை, லவ் பைலியர் சொன்னாங்க அத்தை“

“அது மாமா , நான் நான் உங்களைதான் லவ் பண்ணேன்.“

“வாட் நான் தான் ஏற்கனவே இதப்பற்றி சொல்லிருக்கேன், எனக்கு எந்த தாட் இல்லைன்னு, அப்பறம் எதுக்கு இந்த மாதிரி விளையாடுற. “

“மாமா , மித்ராதான் உங்க கூட வாழலையே , ஓரே ஒரு சான்ஸ் கொடுங்க, நான் உங்களுக்கு புடிச்ச மாதிரி இருப்பேன் , மித்ராதான் உங்களுக்கு பிடிக்கலையே“.

“ஸ்டாப் இட், எனக்கு என் பொண்டாட்டிய பிடிக்காதுன்னு உன்கிட்ட சொன்னேனா , அசிங்கமாயில்ல உனக்கு மித்ராக்கு சூஸ்ல என்ன கலந்து கொடுத்த , நேற்று அடிவாங்கியிருப்ப, உங்க அப்பாவுக்காக விடுறேன் . பிளையிட் புக் செஞ்சிருக்கேன் நீ மும்பாய் கிளம்பு அப்பறம் இந்த லூஸ் மாதிரி வேலை செய்யாதே புரியுதா“.

“மாமா அப்ப உங்களுக்கு என்மேல காதல் இல்லையா“

“இல்ல“

“சாரி மாமா நான்தான் தப்பா நினைச்சிக்கிட்டேன் சொல்லி அழ ஆரம்பித்தாள்“

“இட்ஸ் ஓகே அழாதே “என்று வாசு ஆறுதல் சொல்ல அவனை கட்டிபிடித்து ஆழுதாள் சாரி மாமா, மித்ரா ரூம் கதவில் கையை வைக்கவும். கதவு திறந்து, மித்ரா பார்க்க வாசுவை கட்டிலில் சாய்த்தாள் மாலனி ஏய் என்ன பண்ணற வாசு கத்தினான்.

வாசுவின் மேல் மாலனி இருக்க, “என்ன பண்ணற எழுந்திரிடி“ சொல்லி ஒரு அறைவிட்டாள் மித்ரா

போயிடு , ஒரு நிமிடம் இங்கே இருக்ககூடாது சொல்லிட்டேன் மித்ரா கத்த மாலனி வெளியே சென்றாள்

ஏற்கனவே நம்ம மேல நம்பிக்கையில்ல இப்ப என்ன செய்ய போறாளோ என்று யோசித்தான். மித்ராவை பார்த்து “உனக்கு இப்ப நான் பொம்பளை பொறுக்கி மாதிரி தெரிவேனே“.

அமைதியாக இருந்தாள்

“நீ நினைக்கிற மாதிரி பொம்பள சுகத்திற்கு அலையிறவன் தானே நானு. “

“வாசு அன்னிக்கு நான் சொன்னது தப்புதான் என்னை மன்னிச்சிடு, இனிமே நான் தப்பு பண்ணமாட்டேன். உன்ன சந்தேகப்படல வாசு, எனக்கு தெரியும் என் வாசு எப்படின்னு. உனக்கு புரியிலையா வாசு நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணேறேன் சொல்லி கட்டிக் கொண்டு அழுதாள். “

வாசு அமைதியாக இருந்தான், “ எனக்கு கண்ணே வேணாம் வாசு. கண்ணு தெரியாதபோதே நான் உன்கூட சந்தோஷமாக இருந்தேன் ஆனா இப்ப என்னால இருக்க முடியிலே. “

நானும் தான்டி நீ இல்லாம இருக்க முடியில.

வாசு என்ன எங்கேயாச்சும் கூட்டிட்டு போயேன்

காரில் மித்ராவீட்டுக்கு அழைத்து வந்தான் , ஊஞ்சலில் மித்ராவை உட்கார வைத்து அவள் மடியில் தலை வைத்து படுத்தான். ரொம்ப நாள் ஆயிடுச்சு நான் சரியா தூங்கி மித்ரா.

அவள் வாசுவின் தலையை வருட, மெல்லியதாக சிரித்தான். அந்த சிரிப்பில் வசிகரிச்சு மித்ரா முத்தமிட வந்தாள் அதை கையால் தடுத்த வாசு, வேணா என்றான்

“ஏன் டா“

அப்பறம் என்னை அலையிறவன் சொல்லுவ

அய்யோ என்று வாசுவின் கையை பிடித்து கண்ணத்தில் அறைந்து கொண்டாள், என்னை வேணா நாலாடி அடி, இப்படி என்னை பேசியே சாகடிக்காதே சொல்லிட்டேன், எழுந்திடுடா முதல்ல என் மடியிலிருந்து.

கோவப்படாத டி, சரி கிஸ் பண்ணு

நீ அலையில நான்தான் இந்த வாசுவுக்காக அலையிறேன் போதுமா. மித்ரா சொல்லி முடிப்பதற்குள், அவள் இதழில் வன்மையாக முத்த இட்டுக்கொண்டிருந்தான், இவுவளவு நாள் பிரிந்த ஏக்கம் வாசுவை பித்தனாக்கியது . சிறிது நிமிஷம் இடைவேளி விட்டு , திரும்ப விட்ட இடத்திலேயிருந்து ஆரம்பித்தான் வாசு. ஐ லவ் யு தேனு மிட்டாய்.

போடா என்று தள்ளிவிட்டாள், எத்தனை தடவ கேட்டு இருப்பேன், ரொம்ப பிகுபண்ணுவ. இப்ப ஆசை பொத்துக்கிட்டு வந்திடுச்சோ.எங்கிட்ட வராதே போ, அப்பறம் எனக்கு ரொம்ப பசிக்குது புட் ஆர்டர் செய்ய சொல்லி வீட்டினுள் சென்றாள் மித்ரா.

ஏய் ஸ்டார்ட் பண்ணிட்டியா உன் வேலையை போடி சரிதான்.இரவு உணவை முடித்துக்கொண்டு ,லேப்டாபில் வோர்க் பார்த்துக் கொண்டிருந்தான். மித்ரா குளித்துவிட்டு புது புடவையை கட்டிக் கொண்டு டிரஸிஸ்ங் டேபிளில் அமர்ந்து தன்னை அலங்கரித்து கொண்டாள்.

காலை ஆட்டியபடியே வாசு, மித்ராவை பார்த்துக்கொண்டே வேலையே பார்த்தான். என்னடி ஓவர் மேக்கப்பா இருக்கு என்ன விஷியம் டார்லிங்.

ஓண்ணுமில்ல நீ வேலைய பாரு, இங்கதான் இருக்கோம் வீட்டில சொல்லிட்டியா.

ம்ம், வாசு போன் அடிக்க, ஹலோ சொல்லுடா மனோ,

டேய் வாசு ,புதுப்படம்டா, இங்கிலிஷ் படம்டா மச்சான், செமயா இருக்காம் வாடா போலாம், மால்ல இரண்டு டிக்கெட் புக் பண்ணிருக்கேன், சீக்கிரம் கிளம்பி வா.

டேய் என்ன கல்யாணம் ஆகாத பையன் நினைச்சியா, நான் குடும்ப நடத்திரதா வேணாவா அப்பறம் என் பேபி திட்டுவாடா, நான் வரல சினிமாவுக்கு

ஏய் வாசு என்ன ஓவரா பேசிற, அப்படியே உன் பொண்டாட்டிக்கூட குடும்பம் நடத்திற மாதிரி

என் மித்ரா கூடதான் இருக்கேன் டிஸ்டர்ப் பண்ணாதே, அப்பறம் நான் டென்டேஸ் லீவ் , ஆபிஸ பார்த்துக்கோ

மச்சான் இது எப்போ நடந்தது

ஆங் நாய்,பூனை, மாடு நடக்கச் சொல்ல இதுவும் நடந்தது. போனை வை.

வாசு மித்ராவை பார்க்க, மித்ரா சிவந்து தலைகுனிந்து நின்றாள்,வாடி இங்க,ம்ம் நான் வரமாட்டேன் வாசு. எனக்கு இப்ப கண்ணு தெரியுதால எனக்கு ஒரு மாதிரியா இருக்கு சொல்லி கையால் முகத்தை மூடிக்கொண்டாள்.

அவள் அருகில் சென்று இரு கையால் தூக்கிக்கொண்டான் வாசு, அவள் வெட்கத்தை விலகி அவளுள் கலந்தான்.

வாசு எந்திரிடா, எங்கடா இருக்கோம் நாம்ம, ஓரே பறவை சத்தமா கேட்குது. ஏய் வாசு

தூங்க விடுடி டயர்டா இருக்கு, முடியில என்னால தேனு

என்னது முடியிலையா, என்று தலையனையால் வாசுவை மாறி மாறி அடித்துக்கொண்டிருந்தாள்.

ஏய் நிறுத்து,

நேத்து நைட் முழுக்க என்னடா பண்ண, என்னைய தூங்க வைச்சிட்டு, உன் ஆபிஸ் வேலையை பார்த்துட்டு முடியிலையா இதுக்கு பேரு ஹனிமூன் சொல்லற, எந்த ஊருடா இது

ம்ம் முதுமலை காடு ட்ரிஹவுஸ் தேனு. எவ்வளவு ஜாலியா இருக்கும் பாரேன்.

எங்க பார்க்க விடுற, கனடா போனோம் வெளிய சுத்திக்காண்பிக்கல, ரூமுக்குள்ளே முடிச்சிட்ட கேட்டா மழை சொல்லிட்ட. இங்க வந்து உன் வேலையை பார்க்கிற, அதுக்கு பேசாத பாட்டிக் கூட இருக்கலாம்,

இருக்க வேண்டியதானே சிலுக்குக்கூட சீரியல் பார்த்துட்டு, போனவாரம் செவ்வாய் கிழமை வீட்டிக்கு வந்தா சீரியல் பார்த்துட்டு அழுதுட்டு இருந்தியே அதை நான் பார்த்தேன்.

வேற என்ன பண்ணறது பாட்டிக்கு சத்தியம் பண்ணிக்கொடுத்தேன்,

ஒரு பையனை பெத்துக்கொடுத்து உன்னை பழிவாங்கதான், நீ அதுக்கு பண்ண டார்ச்சருக்கு.

என்னது, கோவமாக வாசு கேட்க, நீ விருப்பட்டு வரல, பாட்டிக்காக வந்திருக்க.

அய்ய்யோ திரும்ப பஸ்ட்ல இருந்து ஆரம்பிக்கிறானே , கடவுளே.

அதுவும் தான்.

அப்ப பொண்ண பெத்துக்கொடு பையன் பொறத்துச்சு அவ்வளவுதான்.

அது எப்படி பாஸ் பையன்தான் சொல்லி பாட்டிக்கிட்ட சத்தியம் செஞ்சேனே. அப்ப போடி ஊருக்கு என்கூட வராதே.

சரி நான் போறேன் பெரிய இவனா நீ , பிளைட் புக் பண்ணு நான் கிளம்பறேன்.

வீட்டுவாசலில் கார் நிற்க மித்ரா இறங்கி வந்தாள்.

என்ன இவ மட்டும் தனியா வரா பாட்டி நினைக்க, மித்ரா எங்க வாசு என்று பாரு கேட்டாள்

பாரும்மா அவன் ரொம்ப பண்ணறான், சண்டை போட்டான், அதான் நான் வந்துட்டேன்.

அம்மா நீங்க பொழுது போகல சொன்னிங்க இல்ல, நல்ல படமே பார்க்கலாம் இப்போ மணி என்ன ஆச்சு, இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவான்.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

மாலனியின் நாடகம் மித்ராவிடம் எடுபடவில்லை
அவளை துரத்தி விட்டுட்டாள்
அது சரி இரண்டு பேரும் எங்கே போறாங்க,?
கனடாவா?
இல்லை முதுமலை பாரெஸ்ட்டா?
அப்புறம் ஏன் மித்ரா மட்டும் தனியா வர்றாள்
வாசு எங்கே?
ஒரு continuity இல்லாமல் முடிவும் இல்லாமல் மொட்டையா நின்னுடுச்சே

Final அப்டேட்டுன்னு இருந்தது ஆனால் முடியலையே
Incompleted ஆ இருக்கே
அப்போ ஸ்டோரி இன்னும் இருக்கா, லக்ஷு டியர்?
அந்த சொச்சம் கதை எப்போ வரும்ப்பா?
 
Last edited:
அருமையான ஸ்டோரி ..?? இன்னும் ஒரு பதிவு கொடுத்தா இன்னும் அருமையாய் இருக்கும் ?
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

மாலனியின் நாடகம் மித்ராவிடம் எடுபடவில்லை
அவளை துரத்தி விட்டுட்டாள்
அது சரி இரண்டு பேரும் எங்கே போறாங்க,?
கனடாவா?
இல்லை முதுமலை பாரெஸ்ட்டா?
அப்புறம் ஏன் மித்ரா மட்டும் தனியா வர்றாள்
வாசு எங்கே?
ஒரு continuity இல்லாமல் முடிவும் இல்லாமல் மொட்டையா நின்னுடுச்சே

Final அப்டேட்டுன்னு இருந்தது ஆனால் முடியலையே
Incompleted ஆ இருக்கே
அப்போ ஸ்டோரி இன்னும் இருக்கா, லக்ஷு டியர்?
அந்த சொச்சம் கதை எப்போ வரும்ப்பா?
Epilogue eruku banu mam thxs for ur comments
 
மிகவும் அருமை ? ஆரம்பத்திலேர்ந்து இப்போ வரைக்கும் ரசிச்சு படிச்சேன் சிரிச்சு சிரிச்சு வாய்வலி வர அளவுக்கு நல்ல story நல்லா enjoy பண்ணேன் full entertainment இருந்துச்சு தொடர்ந்து உங்கள் பணி தொடரனும் ? your writing style is awesome??
 
Top