Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 33

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 33

காலையில் அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தார்கள். அத்தை இன்னிக்கு என்ன ஸ்பெஷல் மாலினி கேட்க. பால் பாயசம் , சப்பாத்தி பன்னீர், வழக்கமா இட்லி பொங்கல்.

வாசு உனக்கு புடிச்ச பால் பாயசம் மித்ரா வச்சாடா-பாரு.

எனக்கு வேணாம்மா , இது பாய்சன் பாயசம் இல்ல. அவ செஞ்சது எதுவும் வேண்டாம். செல் அடிக்க பேசிக் கொண்டே ரூமிற்கு சென்றான்.

பாவம் மாமா சாப்பிடவேயில்ல, அதுக்கு மித்ராதான் காரணம், உன்னதான் புடிக்கல சொல்லிட்டாரு , நீ ஏன் ரொம்ப டார்ச்சர் செய்யற.

நீ கொஞ்சம் வாய மூடுறீயா, அவன் என் புருஷன் நான் என்ன வேணா செய்வேன் , நீ உன் வேலைய பாரு வந்துட்டா நடுவுல மித்ரா மாலினியை திட்டிவிட்டு பாட்டியிடம் சென்றாள்.

என்ன சொகமா வர மித்ராவை பார்த்து பாட்டிக்கேட்க,

நான் செஞ்ச சமையலை வாசு சாப்பிடமாட்டானாம், பாயசம் பாய்சனாம் அவனுக்கு எனக்கு அழுகையா வருது.

வேற ஏதாவது சாப்பிட்டானா

இல்ல பாட்டி எழுந்து போயிட்டான், அவன் ரொம்ப மோசம் .

கொஞ்ச நேரத்தில அவனே வருவான், நீ அவன் வரானா பாரு.

பாட்டி கீழே இறங்கி வரான், கிச்சனுக்கு போறான்.

மித்ராவும் , பாட்டியும் கிச்சன் பின்பக்கம் சென்றார்கள் , வாசு பேசறதை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சாந்தியக்கா பாயசம் கொண்டுவாங்க, அடப்பாவி, இப்ப தெரிஞ்சதா நான் போறேன் நீ இரு மித்ரா சொல்லி பாட்டி சென்றார்.

கிச்சனில் உள்ள சிறிய டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டான்,அக்கா நீங்க சொல்லிக்கொடுத்திங்களா

இல்ல தம்பி ஏதோ போனை பார்த்து செஞ்சாங்க.

வேற என்ன செஞ்சா-வாசு

தம்பி உங்களுக்கு ஸ்பெஷலா சாப்பாத்தி செஞ்சது , வாசு ஹாட்பேக் திறந்து சாப்பாத்தி பார்த்து என்னக்கா இது ஹார்ட் ஷேப்ல.

அதுவா தம்பி, மித்ரா பாப்பா சொல்லிச்சு நீ அவக்கிட்ட டூ விட்டுட்டியா அதனால இப்படி சாப்பாத்தி செஞ்சி போடனும் அப்படின்னு சாமிக்கிட்ட வேண்டிக்கிச்சான்.

ஹாஹா சிரித்தான் வாசு, டேய் மாமா சிரிச்சா அழகாக இருக்கடா பூஜ்ஜிக்குட்டிடா நீ ,மித்ரா அவனை சைட் அடித்துக்கொண்டிருந்தாள்.

ருசிச்சு,ரசிச்சு சாப்பிட்டான் வாசு.

எப்ப மாமா டிரிட்டு ,பாட்டு பாடி மித்ரா ஹாலுக்கு வர என்னடா இவ்வளவு ஹாப்பியா இருக்கா, இருக்க கூடாதே ,ம் என்ன பண்ணலாம் இவளை வாசு நினைத்தான்.

ஹலோ எஸ்கியூஸ் மீ,

என்ன பாஸ் மித்ரா அருகில் வர, டேன் மினிட்ஸ் கழிச்சு என் ரூமிற்கு காபிக் கொண்டுவா.

ஆ வென வாய திறந்தாள் , ஓகே பாஸ்.

கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் மித்ரா , வாசு பனியனோடு இருக்க இவளை பார்த்தவுடன் கத்த ஆரம்பித்தான்.

கதவ தட்டிட்டு வர தெரியாதா , ஆம்பள டிரஸ் மாத்தறேன் உனக்கு ஏதாவது இருக்கா.இப்படியா வருவ. இவன் திட்ட திட்ட அவள் மனதில் நினைத்தாள், டேய் வித்தவுட்ல தூங்கற ஆளு , மாமா பப்பி ஷேம் சொல்லுவ இப்ப என்னடா ஓவரா பண்ணற மவனே மித்ரா ஒர் அளவுதான் பொறுமையா இருப்பா

காபிய அந்த டேபிளில் வை ,மித்ரா வாசுவை கடந்து சென்று காபியை வைத்து திரும்பி நடக்க வாசு காலை நீட்டினான், மித்ரா தடுக்கி வாசுவின் மேல் விழுந்தாள். தடுமாறி விழுந்தவளை அனைத்து பிடித்தான். அவன் கை தொடுகையில் கண்ணை மூடி தன்னை மறந்தாள்.

ஏய் எழுந்திரிடி, இப்படிமேல விழுந்து என்னை மயக்க பார்க்கிறீயா

யாரு நானா,

பின்ன நீதான என்மேல படுத்துட்டு இருக்க,

டேய் நான் உன்ன தொடாதே என்கிட்ட வர வைப்பேன்டா, இந்த மாதிரி செய்யனும் அவசியமில்ல

அடங்கேப்பா என்னடி செய்வ

இரு வரேன் ,கொஞ்ச நேரத்தில் உள்ளே வந்தாள் வாசு அவளை பார்க்க கையிலிருந்த தேன் மிட்டாய வாயில் வைத்தாள் அய்யோ இவ என்ன செய்யறா , டேய் வாசு அவகிட்ட போகாத மனசாட்சி சொல்ல அவளை நெருங்கினான் வாடா மாமா ரொம்ப பேசற,மற்றோன்றை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள் மெதுவாக அவ தோளில் கைவைத்தான், மறு கையால் அவளை கிட்டே இழுத்தான். உதட்டை நெருக்கினான்,

டக்டக் கதவு தட்ட சட்டென்று விலகினான்,

மாமா கதவை திற- மாலனி ,

நல்லகாலம் வாசு நினைக்க, இந்த எருமை இப்பவா கதவு தட்டும், பையன் தெளிஞ்சிட்டானே-மித்ரா

கதவை திறந்தான் வாசு, உள்ளே வந்த மாலனி, மித்ராவை பார்த்து என்ன செய்யற இங்க

அந்த கேள்விய நான்தான் கேட்கனும், போன ஜென்மத்தில கரடியா பொறந்தியோ , புருஷன் , பொண்டாட்டி அப்படி, இப்படி இருப்போம்

மாமா இவ என்ன சொல்றா பாருங்க

எதுக்கு வந்த மாலனி, மாமா பர்சேஸ் பண்ணனும் என்னை கூட்டிட்டு போங்க

இல்லை மாலனி அம்மாவ கூட்டிட்டு போ எனக்கு மீட்டிங் இருக்கு,

காரில் போகும்போது நினைத்துப்பார்த்தான்,ஜஸ்ட் மிஸ்ஸு இல்ல மாட்டிருப்பேன் ராட்சஸிக்கிட்ட, தேன் மிட்டாய் பார்த்தவுடனே ஜோள்ளு விட்டுட்டு போறே சுடு, சோரனை இருக்கா வாசு ,இனிமே அலார்டா இருக்கனும்.

இரண்டு வாரம் சென்ற பிறகு, மனோ எங்கடா பிஏ ஆள கானோம். தாத்தா ரூம் கேமிராவில் பார் மனோ சொல்ல, கேமிராவில் பார்த்தான்.

டேய் மனோ பாருடா மித்ரா எப்படி வோர்க் செய்யறா, சும்மா கையை நீட்டி நீட்டி ஸ்டாப்கிட்ட பேசறா ,நான் கூட என் செல்லத்தை தப்பா நினைச்சிட்டேன்

யார் கிட்ட மித்ரா பேசறா வாசு பெரிசா ஆக்கு, சுரேக்காவும், ராமும்.

அவங்கிட்ட எதுக்கு பேசனும் மித்ராகிட்டே கேட்போம்.

குட்மார்னிங் பாஸ், ஹப்பா இப்பவே கண்ணகட்டுது, என்னால முடியலண்ணா நான் ரொம்ப டயர்ட் ஆயிட்டேன்

ஏன்டா என்ன ஆச்சி

காலையிலிருந்து பஞ்சாய்த்து பண்ணவே சரியா இருக்கு

என்னடி சொல்லற

பாஸ் இந்த சுரேகா இருக்கால கண்ண கசக்கறா, ராமுக்கும் இவளுக்கும் பிரேக் அப் ஆயிடுச்சாம் , நான்தான் இந்த ராம வார்ன் பண்ணி இரண்டுபேரையும் சமாதானம் செஞ்சேன்.

மித்ரா செல் அடிக்க, ஒரு நிமிஷம் பாஸ், ஆங் சொல்லு மகி, சக்சஸ்ஸா குட் இதுல என்ன இருக்கு நான் கவிதை எழுதி தந்தேன் நீ படிச்ச ஓகே ஆயிடுச்சு,ம்ம் கைவசம் நிறைய கவிதை இருக்கு நீ கவலைபடாதே இந்த மித்ரா இருக்கா ஓகே பாய்.

யாருடி அது

நேற்று கேன்டினுக்கு போனேனா காபி குடிச்சா ஓரே கசப்பு பாஸ். என்னடா பார்த்த நம்ம மகி காபி போட சொல்ல ஓரே அழுகை பாஸ், கேட்டா பக்கத்துவிட்டு பொண்ணுமேல லவ்வாம் பாஸ், நான்தான் கவிதை எழுதி தந்தேன்.

வாசுக்கு கோவம் தலைக்கேற எழுந்து அவள் அருகில் போனான், வாசு வேணான்டா மனோ தடுக்க மித்ரா போயிடு

ஏன்ணா , மனோ அவனை தடுக்க மித்ராவின் கண்ணத்தில் பளார் ன்னு அடித்தான். மித்ரா சுருண்டு விழுந்தாள், கண்கள் கலங்கின.விரல்கள் கண்ணத்தில் பதிந்தது.

என்னடி நினைச்ச இது ஆபிஸ் நீ விளையாடுற இடமில்ல ஓழுங்கா வேலைய பார்க்காம, எல்லாரையும் ஜோடி சேர்கிறீயோ

டேய் வாசு ஏன்டா சொல்லி வெளியே சென்றுவிட்டான் மனோ.

சாரி பாஸ்,

என் கண்ணு முன்னாடி நிக்காத கெட் அவுட்.மித்ரா வீட்டிற்குச் சென்றாள்

என்ன மித்ரா கண்ணத்துல முனு கோடு வாங்கியிருக்க -பாட்டி

உன் பேரனோட கை விளையாட்டுதான், பசிக்குது பாட்டி

சரி நீ சாப்பிட்டு தூங்கு, நான் போய் படுக்கிறேன், பாட்டி உள்ளே செல்ல

வாசு வீட்டுக்கு வந்துவிட்டான், என்னடா இவன் மதியமே வந்துட்டான் மித்ரா அவனை பார்க்க வாசு அவள் கண்ணத்தை பார்த்தான்

என்னடா மணி உன் அண்ணன் இன்னும் இரண்டு கோடு போடலாமுன்னு யோசிக்கிறாரா.என்ன அப்படி பார்க்கிற

சாரிடி-வாசு

சாரி சொன்னா சரி ஆயிடும்மா , சும்மா ஒரு சோஷியல் சர்வீஸ் செஞ்சேன் அதுக்கு அடிப்பியா, இப்ப அடிடா, பெரிய ஆபிஸூ

ஏய் வேணாடி, எனக்கு கோவம் வருது சொல்லி பின்னே செல்ல,அவள் வாசு சட்டையை பிடிக்க சோபா தடுத்து இருவரும் கீழே விழுந்தார்கள் , என்னை அடிப்பியா என்று மித்ரா அடிக்க அவளை கீழே தள்ளி அவள்மேல் ஏறி உனக்கு எவ்வளவு திமிர் என்னையே அடிப்ப ஹாலில் இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டார்கள் ஸ்டாப் இட் தாத்தா கத்த, எவ அவ சொல்லி மித்ரா நிமிர்ந்து பார்க்க ஹாலில் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். எழுந்திருடி என்மேல ஏறி உட்கார்ந்திருக்க

சின்ன பசங்க கூட இப்படி சண்டை போடமாட்டாங்கடா இருவரும் தலை குனிந்து நின்றிருந்தார்கள். ஓவரா பண்ணிட்ட இல்ல இருக்குடி உனக்கு.
 
ஹா ஹா ஹா
ஏன்மா மித்ரா
உனக்கே ஆபீஸ் வேலை ஒண்ணும் தெரியலை
அப்புறம் எதுக்கு பஞ்சாயத்து பண்ணுறதுக்குன்னு ஆபீஸ் போறே
ஹா ஹா ஹா
இதுங்க இரண்டும் புருஷன் பொண்டாட்டிதானா இல்லை ஸ்கூல் பிள்ளைங்களா?
இப்படி அடிச்சிக்குதுங்களே
ஹா ஹா ஹா
அடேய் கேடி வாசு
அவளுடைய காலை தட்டி விழ வைச்சுட்டு அவளையே குத்தம் சொல்லுவியா?
இந்த மாலினி டாக் எதுக்கு இங்கே வந்திருக்கு?
வாசுவே இவளை வரச் சொன்னானா?
 
ஹா ஹா ஹா
ஏன்மா மித்ரா
உனக்கே ஆபீஸ் வேலை ஒண்ணும் தெரியலை
அப்புறம் எதுக்கு பஞ்சாயத்து பண்ணுறதுக்குன்னு ஆபீஸ் போறே
ஹா ஹா ஹா
இதுங்க இரண்டும் புருஷன் பொண்டாட்டிதானா இல்லை ஸ்கூல் பிள்ளைங்களா?
இப்படி அடிச்சிக்குதுங்களே
ஹா ஹா ஹா
அடேய் கேடி வாசு
அவளுடைய காலை தட்டி விழ வைச்சுட்டு அவளையே குத்தம் சொல்லுவியா?
இந்த மாலினி டாக் எதுக்கு இங்கே வந்திருக்கு?
வாசுவே இவளை வரச் சொன்னானா?
Thk banu mam for ur lovely comments
 
Top