Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 32

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 32



ஏய் நான் பானிபூரி விற்கிறவனாடி ,

இல்லையா பின்ன சமோசாவா ,பேல்பூரியா இவள் சொல்ல சல்லு எஸ்கேப் ஆனார் அங்கிருந்து.

உன்ன எழுந்து அவளை அடிக்க வந்தான் வாசு. கோடிக்கணக்கல பிசினஸ் பண்றேன் .உனக்கு எவ்வளவு கொழுப்பு.

நீ என்ன படிச்சிருக்க உனக்கு பி.ஏ வேல, இதுல இவங்க சப்போர்ட்.

ஏன் வெளிநாட்டுல படிச்சிட்டு வந்த உனக்கே நான் மேனேஜர் வேலை தர சொல்ல , நீ தர மாட்டியா எனக்கு பி.ஏ.வேலை.

ஒரு கிலோ சக்கரை, நாலுக்கிலோ அரிசின்னு பொட்டலம் கட்டுற வேலை நினைச்சியா , கண்ஸ்ட்ரக்சன் பிசினஸ் , ஏய் முதல்ல எனக்கு எங்கெல்லாம் ஆபிஸ் இருக்கு தெரியுமா.

நீ வேலைய கொடுத்துப்பாரு தீயா வேலை செய்வா இந்த மித்ரா.

நீயே வந்து மாட்டிக்கிட்ட விருப்பப்பட்டு நான் ரொம்ப ஸ்ரிட்டு வோர்க்குன்னு வந்தா , அப்புறம் இவன் திட்டிட்டான், அடிச்சிட்டான் போய் சிலுக்கிட்ட, பாருக்கிட்டயும் ஓப்பாரி வைக்காதே.

உனக்கு என்ன வேலை தெரியும் ,சரி நான் சொல்லற கம்பெனிக்கு கோடேஷன் டைப் பண்ணி எடுத்துட்டு வா. முதல்ல எழுத்திக்கோ பிராஷந்த் ஸ்டில் இன்டஸ்டிரிஸ் ஆங்கிலத்தில் சொல்ல ஆரம்பித்தான்.

மித்ரா கையில் நோட் பேடை வைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தாள். என்ன இவன் இங்கிலிஷ்ல சொல்லிட்டே போறான். நம்ம முதல்ல பிள்ளையார் சுழிய போடுவோம் ,பிறகு அவனைப் பார்த்தாள் , எழுத ஆரம்பித்தாள்.

என்னடி பண்ணற,

பார்த்தா தெரியில எழுதிட்டு இருக்கேன் ,

நான் சொல்லி முடிச்சி 5 நிமிசம் ஆச்சு இன்னமும் என்ன எழுதற.

நீ சொன்ன உடனே மைன்ட்ல ரெக்கார்ட் பண்ணிட்டேன், அப்புறம் யோசிச்சு யோசிச்சு எழுதறேன்.

யாரு நீ ஓருவாட்டி சொன்னா புரிஞ்சிப்ப,

எஸ் அப்கோர்ஸ், மித்ரா சொன்னவுடன் ஆஆ சிரிக்க ஆரம்பித்தான். நீ மக்கு பாப்பாடி.

அது நீ எடுத்த கோச்சிங் அப்படி,நீ ஓழுங்கா கிளாஸ் எடுத்தா நான் பாஸ் ஆயிருப்பேன்.

.நான் சரியா கோச்சிங் கொடுக்கல

ம்ம் ஆசிரியர் சரியில்லை , இப்ப வேனா கிளாஸ் எடு நான் ரெடி , சாரு ரெடியா.

அடிங்க ,

காலையில சாப்பிடாத வந்துட்டேன் பாஸ் , கேன்டின் எங்க இருக்கு,

வந்தவுடனே வா,

ஏன் முறைக்கிற, நான் தாத்தாக்கிட்ட கேட்கிறேன். அரைமணி நேரம் கழிச்சி வரேன் -மித்ரா.

மித்ரா வெளியெ செல்ல பிறகு மனோ உள்ளே வந்தான்.

மனோவை பார்த்து வாசு , நீயும் கூட்டு சதியாடா.

கண்டிப்பா எனக்கு தெரியாது வாசு , ஆனா இனிமே ஜாலியா இருக்கும்டா ஆபிஸே.

சரி நோட் பேட்ல அவ எழுதிய கோட்டேஷன் லட்டர் கரேக்டா பாரு, படி

யாரு நம்ம மித்ரா எழுதினதா, மனோ படிக்க ஆரம்பித்தான்.

“வாசு மச்சான்“ ,செமயா இருக்கடா இந்த க்ரிம் கலர் ஷர்ட்ல,

என்னடா சொல்லற, அவ தமிழிலையை எழுதிருக்கா,

ஆமாண்டா படிக்கிறேன் கேளு , “தெலுங்கு பட ஹூரோ மாதிரி இருக்கடா , காலேஜ் வேற போலையா எங்கடா அந்த லைப்ப மிஸ் பண்ணிடேனோ பிலிங், இங்க வரதே உன்ன சைட் அடிக்கதான்“.

வாசு நீதான் என் பாஸ்ஸூ. சமோசாவுக்கு வேணும் சாஸ்சு நீ தான் எனக்கு ஏத்த பீஸ்ஸு, கண்ணால காட்ற ரவுசு இதுக்கே நான் தருவேன் லிப் டு லிப் கீஸ்ஸு“.எப்படீ என் கவிதை.

இருவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள், மனோ எப்படி கலாச்சி எழுதிருக்கா பாருடா. திரும்ப படிக்க ஆரம்பித்தான்.

ஆனாலும் வாசு அன்னிக்கு டில்லி ஹோட்டல்ல நீ பண்ண அந்த , படிக்கும் போதே பேப்பரை இழுத்து விட்டான் வாசு.

டேய் ஏண்டா வாங்கன நான் இன்னும் படிச்சி முடிக்கல.

அது என் பர்சனல் போடா.-வாசு

தமிழ் எப்படிடா படிப்ப.

"ஆங் நான் எழுத்துக்கூட்டி படிப்பேன். நான் எந்த லட்டர் சொன்னா இது லவ் லட்டர் எழுதிருக்கு. இதுக்கே என்ன பில்ம் தெரியுமா தலைய பேணாவால தட்டி தட்டி எழுதுனாடா."

மித்ரா உள்ளே வர, "எதுக்கு வந்தே வேலை பார்க்கதானே நீ என்ன பண்ணிருக்க."

"நீ அமைதியா இரு வாசு ,மித்ரா என்னமா இது விளையாட்டு இப்படி நீ தமிழில எழுதினா வாசுக்கு எப்படி புரியும் அவனுக்கு தமிழ் படிக்க வராது, கல்யாண ஆகாத பையன் நான் படிக்கிறதா இருக்கு, இனிமே இப்படி எழுதுவியா".

"வேற எப்படின்னா எழுதறது."

தங்கிலிஷ்ல எழுது தமிழே இங்கிலிஷ்ல எழுது ,இவனே சொல்லிக்கொடுக்கறான் பார் வாசு மனோவை மனதில் திட்ட.

ஏய் இங்க வா, "வாட் பாஸ் , கவித இம்பிரஸ் ஆயிடுச்சா."

ஐயோ தலையில் கையை வைத்தான், "போய் என்னுடைய ஒரு வாரம் ஷேடியுல் கம்பூயுட்டரில் சேவ் பண்ணிருப்பாங்க தாத்தா ரூம்ல இருக்கு அதுல இன்னிக்கு என்ன என்ன மிட்டிங் பார்த்து எடுத்துட்டுவா."

ஓகே பாஸ்,தாத்தா அனைவருக்கும் மித்ரா வாசுவின் மனைவியென்றே அறிமுகம் படுத்தினார். மித்ரா அட்டண்டரை அழைத்து வனிதா , ரமாவை வரசொன்னாள்.

மேடம் என்று உள்ளே நுழைந்தார்கள். "அன்னிக்கு என்ன சொன்ன என் புருஷன் கண்ணை பார்த்துட்டே வாழ்நாள் பூரா இருப்பியோ."

அய்யோ மேடம் நீங்கதான் தெரியாது மேடம், எங்களை மன்னிச்சிடுங்க மேடம் இருவரும் கூற

சரி , ரமா நீ என்ன செய்யறன்னா சாரோட மீட்டிங் என்ன எனக்கு தினமும் சொல்லனும்.எனக்கு நீ பி.ஏ ஓகேவா. அப்புறம் மத்த வோர்க்கெல்லாம் வனி பார்த்துக்கட்டும் .

ஓகே மேடம். " சாருக்கு இன்னிக்கு 1.00 மணிக்கு சோழால மீட்டிங், சிம்லாவிலிருந்து கஸ்டமர் ஸ்டார் ஹோட்டல் கட்டறதை பத்தி டிஸ்கஷன். அப்புறம் 4.00 காஞ்சிபுரம் சைட் ஸியிங்க. 5.30 தாம்பரம் பார்டனர் மீட்டிங் 7.00 சிமெண்ட் கம்பனிக்கு போறாரு.9.00 வீட்டுல இருப்பாரு."

"என்னடா இவன் என்ன பெரிய அப்பாடக்கரா. இப்படியே சுத்திட்டு இருந்தா எப்படி நான் பிள்ளைய பெத்துக்கிறது. இவன் எப்போ நம்மலை கவனிப்பான் . இப்படியே போனா நீ யாருன்னு கேட்பான்" என்று மனதில் நினைத்தாள்.

மதியம் ஹோட்டல் சோழாவில் லன்ச் சாப்பிட அமர்த்தார்கள் மித்ரா,வாசு மற்றும் கஸ்டமர் இருவர், வந்தவர்கள் ஹிந்தியில் பேச, மித்ரா புரியாமல் வாசு பேசுவதையே பார்த்திருந்தாள். ஆர்டர் செய்த சாப்பாடு வர மித்ரா நான்-வெஜ் சாப்பிட ஆரம்பித்தாள்.

இவ என்ன காரமா சாப்பிடறா, ஏய் மித்ரா காரமா இருக்கும் ,வேற ஆர்டர் செஞ்சு சாப்பிடு.போ வாசு இதுவே நல்லா இருக்கு. சில நிமிடங்களில் முகம் சிவக்க தொண்டை எரிய ஆரம்பித்தது. வாசு கவனித்துவிட்டான். இவள என்ன செய்யறது அடங்குறாளா. ஜஸ் வாட்டர் கொடுத்தான், ரெஸ்ட் ரூம் வரை அழைத்துச் சென்றான். பிறகு அவர்களை அனுப்பிவிட்டு அவளை காருக்குள் உட்கார வைத்தான்.வரும்போதே ஐஸ்கிரீம் வாங்கிவந்தான்.

வாசு எரிச்சலா இருக்கு, ஐஸ்கீரீம் ஊட்டிவிட்டான். இப்ப பரவாயில்லையா மித்ரா.

ம்ம் முகத்தை ஈர டவலால் துடைத்தான். வாசு ஏன் இவ்வளவு கஷ்ட படுற அன்னிக்கு கொடுத்தியே அந்த மாதிரி உன் லிப்ப கொடு காரமெல்லாம் போயிடும்.

உன்ன கொலவெறியில் கத்த , அய்யோ நான் தூங்கிட்டேன் வாசு, கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தாள். தீடிரென்று கார் நின்னவுடன் எங்க இருக்கோம் வாசு.

"ம்ம் உன் மாமியார் வீட்ல , இறங்குடி கீழ".

"ஓகே வாசு பாய்ய்"

சீசீ பே! சொல்லி காரை வேகமாக ஓட்டிச் சென்றான் வாசு.

பாட்டி, என்ன மித்ரா அதற்குள்ள வந்துட்ட

போங்க பாட்டி அங்க போரடிகுது சொல்லி பாட்டியின் மடியில் தலை வைத்துப்படுத்தாள். எப்படியிருந்தது மித்ராக்குட்டி பாரு கேட்க , அங்க நடந்தை பாருவிடம் கூறினாள் மித்ரா.

சின்னாவும் வந்து அமர்ந்தான்.அக்கா மாமாவ டென்ஷன் பண்ணாத கோவம் நிறைய வரும் மாமாவுக்கு சொல்லிட்டேன்.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top