Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 31

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 31



“மித்ரா இப்ப அழறத நிறுத்து“ பார்வதி மித்ராவின் கண்ணைத் துடைக்க ,

“பாரும்மா, வாசு என்னை வேணா சொல்லிட்டான். “

“அதுக்கு உனக்கு யாரும் இல்லை ஆயிடும்மா பாட்டி,தாத்தா ,சின்னா நான் எல்லோரும் இருக்கோம், நீ கவலைப்படாதே நாங்க அப்படியே விட்டுவிடுவோமா , உன்னை என்ன பாடுபட்டாவது வாசுவோட சேர்த்து வச்சிடுவோம். “

“அவன்கிடக்கிறான் சின்னபையன் கோவத்தில பேசறான், நீ வாடா செல்லம்“, சொன்னவுடன் தேம்பி அழ ஆரம்பித்தாள் மித்ரா அழக்கூடாது தாத்தா இருக்கேன்ல.

“தாத்தா“ என்று அனைத்துக்கொண்டாள்.

“விடு மித்ரா, நீ பேசின வார்த்தையோட வீரியம் இருக்கதான செய்யும், இப்ப ரொம்ப கெஞ்சினா மிஞ்சுவான். கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கனும், அப்பறம் இந்த மாதிரி அழுதுனு இருக்காதே அவன போல்டா பேஸ் பண்ணனும். இந்த பாட்டி உன்னையே அவன்கூட சேர்த்து வைக்கசொல்ல இந்த சண்டையெல்லாம் எவ்வளவு தூரம், சரி நம்ம வீட்டுக்கு போவோம் , எது தேவையோ அதெல்லாம் எடுத்துக்கோ. இனிமே அங்கதான். உனக்கு இங்க பாதுகாப்பு இல்ல. “

அடுத்த நாள் காலையில், வாசு வீட்டின் ஹாலில் தாத்தா தமிழ் பேப்பர் படித்துக்கொண்டிருக்க, வாசு எதிர் சோபாவில் பிஸ்னேஸ் மெகசின் படித்துக்கொண்டிருத்தான்.

“குட் மார்னிங் மாமா“-சின்னா

“ஹாய் குட் மார்னிங் , எப்படா வந்திங்க. “

“மிட் நைட் மேல ஆயிடுச்சு மாமா“.

“ம்ம் எங்க உன் அக்கா. “

“இந்நேரம் என்டிரி ஆயிருக்குனுமே. ஆஹ் காபி எடுத்துட்டு வரா“.

காலையில் குளித்து யெல்லோ டாப்ஸில் லைட் கிரின் பூ டிசைன், பாட்டம் பெல்லோஸா பேன்ட்.ப்ரி ஹேர் விட்டு உச்சியில் சின்னாதா கிளிப் போட்டு இருந்தாள்.புருவத்தை திருத்தி, ஹேர் ஸ்ரைட்னிங் பண்ணிருந்தாள்.

“என்னடா உங்க அக்கா புல் மேக்கப்ல இருக்கா. “

நேற்று பியூட்டி பார்ல்ல இதுதான் வேலை , மாமா நீங்க ஒரு முறைதான் பார்த்தீங்க, அதுக்குள் கண்டுபிடிச்சிட்டீங்க, கிரேட் மாமா நீங்க.

“ஆமா உங்க அக்காகிட்ட ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கிற போட்டி, “

மித்ரா தாத்தாவுக்கும் , சின்னாவுக்கும் காபியை கொடுத்துட்டு, வாசுவின் அருகில் வந்து காபியை நீட்ட , மித்ராவை நிமிர்ந்து பார்க்காமலே “சாந்தியக்கா காபி கொண்டுவாங்க“ என்று கத்திச் சொன்னான். மித்ரா கிச்சனுக்குள் சென்றாள்.

சாந்தி காபி ஆத்திக்கொண்டிருந்தாள்.

டேய் வாசு என்னடா ஓவரா பண்ணற மனசில் நினைத்து , “அக்கா இந்த காபியை குடுங்க“, சாந்தியிடமிருந்து காபியை வாங்கி ஒரு வாய் குடித்திவிட்டு, சுகர் கரேக்டா இருக்குக்கா. இப்ப எடுத்திட்டுபோய் கொடுங்க.

வாசு காபியை இரண்டு மிடக்கு குடித்துவிட்டு “அக்கா ஏன் இவ்வளவு சுகர் போட்டிருக்கீங்க“ சொல்லி காபியை குடிக்க , “தம்பி இப்பதான் மித்ரா இந்த காபியை ஒருவாய் குடிச்சிட்டு சுகர் கரேட்டா இருக்குன்னு சொல்லிச்சே“ .

கேட்டவுடனே வாசுவுக்கு புரை ஏரிற்று,அய்யோ இந்த சாந்தியக்கா சொல்லிடுச்சே மித்ரா தலையில் கை வைக்க, ரூமிலிருந்து வெளியே வந்து பாட்டி சிரிக்க, சின்னாவும், தாத்தாவும் சிரித்தார்கள்.

“இவள“ பல்லைக் கடித்துக்கொண்டு கிச்சனுக்குள் நுழைந்தான்.



எங்கிட்ட இந்த மாதிரி வச்சிக்காதே , அப்பறம் பேசுவதை நிறுத்திவிட்டு, அவள் வாசுவை பார்க்க , அவனும் அவளை பார்த்தான். என்னடி அப்படி பார்க்கிற

“ம்ம் , ஓவ்வொரும் டைமும் நீ காபி குடிச்சிட்டு தரும்போது ஸ்வீட் அதிகமா ஆயிட்டேபோது தேனு மிட்டாய்“ சொன்னவன் தானே.

“அது அப்போ நீ என்னை வேணா ரிஜக்ட் பண்ணறதுக்கு முன்னாடி. “

இப்பதான் நான் அக்சப்ட் செஞ்சிட்டேனே. சும்மா சொல்லக்கூடாது இந்த பிளாக் டி சர்ட்ல சூப்பரா இருக்கடா.

“தாத்தா“ என கத்தினான் , அங்கே சல்லு வர இவள ஏன் கூட்டிட்டு வந்திங்க .

“மித்ரா அவன்கிட்ட என்ன , நீ வாடா வெளிய“ ,வாசுவை ஹாலுக்கு அழைத்து வந்தார்.

வீட்டின் முன் கார் சத்தம் கேட்க அனைவரும் திரும்பி பார்த்தனர். காரிலிருந்து மாலனி இறங்கி வீட்டிற்குள் வந்தாள்.

“ஹாய் மாமா“ கத்திக்கொண்டே உள்ளே நுழைந்தாள் மாலனி

“மாலனி எப்ப வந்த யு.எஸ் ல இருந்து“,

“நேற்று வந்தேன் மாமா“, அத்தை எப்படி இருக்கிங்க.

“நல்ல இருக்கேன்மா“

மாமாவா எவ அவ கிச்சனிலிருந்து எட்டிப்பார்த்தாள் மித்ரா, “ பாட்டி யார் இந்த அரை லூஸூ“.

“உங்க அத்தையோட நாத்தனார் பொண்ணு மாலினி. “

“என்ன மாமா உங்களுக்கு கல்யாணம் முடிச்சிசாமே, நான் ரொம்ப ஃபில் பண்ணனே தெரியுமா. “

“என்னை நினைச்சி இவ்வளவு ஃபில் பண்ணறீயா மாலனி இது தெரியாம போச்சே, பாவம் பார்த்து அந்த பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தேன்டா.

ஆனா என்னை வேணா சொல்லிட்டா“

“ஐயோ மாமா உங்கள போயா வேணா சொல்லிட்டா , அவளுக்கு கண்ணு தெரியாதோ எண்ணவோ, நீங்க கவலை படாதீங்க மாமா, நான் இருக்கேன்“ சொல்லி கட்டிபிடித்து கண்ணத்தில் முத்தமிட சென்றாள்.

அவங்களை நோக்கி பூச்சாடி பறந்து வந்தது.வாசு மாலினியை தள்ளிவிட இவர்களின் நடுவில் சென்று சுவரில் மோதி உடைந்தது.

“டேய் தப்பிச்சடா நீ“ என்று மித்ரா சொல்ல, மாமா யார் இது.

“ம்ம் இதுதான் அவன் பொண்டாட்டி மித்ரா“-பாட்டி.

“ஹோ மை காட், டேஞ்சரஸ் ஓய்ப் மாமா உனக்கு. ஆனா இந்த பட்டிக்காடு உனக்கு சூட் ஆகல. “

இவள கையில் ஏதாவது கிடைக்குமா என தேட, பார்வதி மித்ராவை அடக்கினாள், அவ நம்ம கெஸ்ட்டுடா பிளிஸ்டா.மாலனி நீ போய் ஃபிரஷ் அப் ஆயிட்டுவா . வாசுவும் மாடி ஏறினான்.

“ பாரும்மா உங்கள யாரு இப்படி வெள்ளையா பிள்ளை பெத்துக்க சொன்னது. “

“அப்படி கேளு மித்ரா, நான் அப்பவே சொன்னே ஊருலே நல்ல மாநிறத்தில் பெரிய மீசை வச்ச பண்ணையார் பையன கல்யாணம் பண்ணிக்கோ சொன்னேன் , ஆனா இந்திக்கார பையனதான் கட்டிப்பேன் ஓத்த கால்ல நின்னா“.

“அம்மா“ –பார்வதி

“இப்ப இவன அடக்கமுடியுதா சொல்லு“-பாட்டி

“ஆமாம் பாட்டி , கண்ணு ஆபரேஷன் பண்ண சொல்ல ஓரு பொண்ணு வந்து உன் புருஷன விட்டுகுடு சொல்லுது , அப்புறம் ஆபிஸல ஓரு பொண்ணு இவன் கண்ணை பார்த்துட்டே இருப்பாளாம்,என்னால தாங்கிக்கவே முடியில இது ஓவரா இல்ல , இவன் என்ன மன்மதக்“ சொல்லி திரும்ப வாசு அவள் முன்னாடி நின்றான்.

“ என்ன சொன்ன கம்பிளிட் பண்ணு “,

“அது அது நீ ரொம்ப நல்லவன் சொல்ல வந்தேன் . “

“ம்ம் அப்படியா ,நகரு என் செல்லை எடுக்கனும், “ செல்லை எடுத்துக்கொண்டு மேலே சென்றான்.

ஏன் மித்ரா அமைதியா இருக்க ,

“இல்ல பாட்டி , நான் பட்டிகாடு மாதிரியா இருக்கேன். “

“இந்த மாலினி போல மூட்டிக்மேல துணி போட்டா சிட்டி கேர்ள் இல்ல, பேஷன் சொல்லி அரையும் குரையுமா அலையுதுங்க. உன் வாசுக்கு இதெல்லாம் பிடிக்காது, இவள சின்ன வயசிலிருந்து பார்க்கிறான் கல்யாணம் செஞ்சிக்க தொணல சொல்லுவான்“-பார்வதி.

“இங்க வா மித்ரா“,சொல்லுங்க பாட்டி,

“உன்மேல பாசமா இருக்கான் நான் காண்பிக்கட்டும்மா, அவன் குடிச்ச கப்புல காபி இருக்கா பார். “

இல்ல பாட்டி, நீ எச்ச பண்ணினே தெரிஞ்சே அவன் குடிச்சிருக்கான், மித்ரா நீ அவன புரிஞ்சிக்க இது வாய்ப்பு நினைச்சுக்கோ, நம்ம அடுத்த ப்ளானுக்கு நீ ரெடியா.ஓகே பாட்டி.

இப்படிதான் சிரிச்ச முகமா இருக்குனும்.

காலை 10.30 மணிக்கு ஆபிஸில் , வாசு இ-மெயில் பார்த்துக் கொண்டிருக்க சல்லு பாய் வாசுவிடம், “ பி.ஏ வேலைக்கு நான் ஆள் செலக்ட் செஞ்சிட்டேன் வாசு, அப்புறம் உங்க அம்மாவுக்கும் ஓகே தான், ““மனோ பார்த்துட்டானா“- வாசு,

“ம்ம் பார்த்துட்டான், சம்பளம் 10,000 தான் சொன்னேன் ஓகே சொல்லிடுச்சு. இரு நான் கூட்டிட்டு வரேன்“.

வாசு பையில் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கு தெரிஞ்ச பொண்ணு தான் பாவம் புருஷன் விட்டுட்டானா ஏன்ம்மா உன் புருஷன் யாரு தாத்தா கேட்க.

“மும்பாய் ஆளு சார், பானிபுரி விற்கிறவங்க“.

குரலை கேட்டு நிமிர்ந்து பார்த்தான் சல்லு பக்கத்தில் மித்ரா உட்கார்ந்திருந்தாள்.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
ஹா ஹா ஹா
அடேய் வாசு ஓவரா பண்ணாதேடா
அன்னிக்கு அவ குடிச்சிட்டு கொடுத்த காஃபி இனித்தது
இன்னிக்கு பிடிக்கலையா?
ஹா ஹா ஹா
ஏண்டா வாசு உன் அழகுக்கு எத்தினி பேர்தாண்டா உனக்கு வருவாளுங்க?
மித்ரா சொன்ன மாதிரி நீயென்ன பெரிய மன்மதனா?
மித்ரா பாவம்ண்டா
எத்தனைதான் சமாளிப்பாள்?
யாரு இந்த மாலினி பீடையை வரச் சொன்னது?
வாசுவா?
ஹா ஹா ஹா
வாசுவுக்கு மித்ரா பி ஏ வா?
மித்ராவின் புருஷன் மும்பைக்காரனா?
பானி பூரி விக்கிறவனா?
சூப்பர்
அடேய் வாசு என்னே உனக்கு வந்த சோதனை?
ஹா ஹா ஹா
 
Last edited:
வாசு கோவப்படறது ரொம்பவே காமெடியா இருக்கு sis.மித்ரா p.a வா என்னென்ன torture பண்ணப்போறாங்கனு தெரியல.interesting?
 
வாசு கோவப்படறது ரொம்பவே காமெடியா இருக்கு sis.மித்ரா p.a வா என்னென்ன torture பண்ணப்போறாங்கனு தெரியல.interesting?
thk u sathya sis for ur comments
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
thk u banu mam for ur comments
 
thk u sathya sis for ur comments

thk u banu mam for ur comments
அச்சச்சோ
இன்னொரு கமெண்ட்ஸ்ஸை நீங்க பார்க்கலையா, லக்ஷு டியர்?
அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்கப்பா?
 
Top