Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 28

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 28



அப்புறம், உங்க அப்பா குடிச்சிட்டு வண்டியை ஓட்டினாரு பொய் கேஸ் போட்டான். தப்பு நம்ம பக்கம் இல்ல தீர்ப்பு வந்தது. மித்ரா கிட்ட பேச எவ்வளவோ முயற்சி பண்ணாரு, கார்மேகம் விடல. மூனு மாசம் பிறகு உங்க அப்பா ஹார்ட்அட்டாக்ல நம்மல விட்டு போயிட்டாரு. கடைசியா பேசினது, அந்த குடும்பத்தை பார்த்துக்கோ பார்வதி, தெரிந்தோ தெரியாமலோ நான் சம்பந்தப்பட்டு இருக்கேன். வாசுக்கிட்ட சொல்லு அப்பா அந்த பசங்கல பார்த்துப்பேன் வாக்கு கொடுத்தாரு, அத என் பிள்ளை நிறைவேத்துவான்.

நான் விசாரிச்ச வரை கார்மேகம் , மித்ரா அப்பாக்கு சொந்த தம்பி கிடையாது, அவருடைய சித்தப்பா பசங்க, குடும்பம் ரொம்ப கஷ்ட படுதுன்னு, மாணிக்கத்திடம் வேலை வந்தாங்க, அவரு வந்த ஆறு மாசத்தில இந்த ஆக்ஸிடனட், அவங்க சின்னாவ பார்த்தது இல்ல.

வாசு , எனக்கு ஒரு ஆசை, மித்ரா ரொம்ப நல்ல பொண்ணுப்பா ,நிறைய கஷ்டத்தை அனுபவிச்சிட்டா. அவள என் மருமகளா ஆகிக்குனும் ஆசை, சின்னாவும் நம்ம கூடவே இருப்பான்.நான் உன்ன கம்பல் பண்ணல , உனக்கு நிறைய கனவு இருக்கும் வரபோற மனைவி பத்தி.

நான் அவள கட்டிக்கிறேன்ம்மா, அவள பத்திரமா பார்த்துப்பேன், நீங்க கவலைப்படாதீங்க, இனிமே நான் பார்த்துக்கிறேன். நீங்க போய் தூங்குங்க சொல்லி பார்வதியை அனுப்பிவைத்தான்.

இதை நினைத்து தூக்கம் வராமல் , மித்ராவை செல்லில் பார்த்து பெட்டில் புரண்டிக்கொண்டிருந்தான்.

ஞாயிறுக்கிழமை இரவு 9.30 மணிக்கு ,மித்ரா கடையில் வேலையாட்கள் கிளம்பிவிட்டனர், தன் ஆடிக்காரை பார்க் செய்துவிட்டு வாசு கடைக்குள் நுழைந்தன்.

வாங்க மாமா சின்னா வாசுவை அழைத்தான்.

எங்கடா உன் அக்கா ஜான்சிராணி,

அதோ பாருங்க

என்னடா அழறா ,கண்ணுல தண்ணியா கொட்டுது.

டேபிள் மேல பாருங்க, அக்கா அலும்பல் தாங்கவே முடியல மாமா.

அதை பார்த்து சிரித்துவிட்டான் வாசு, டேபிள் மேல் மட்டன் கிரேவி, சிக்கன் 65, சிக்கன் ஃபிரைடுரைஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா.

அவளுக்கு காரம் ஆகாது , இதுயென்னடா.

உனக்கு பிடிச்சது எல்லாம் சாப்பிடறாங்க,

வாசு டிரே திறந்து ஐஸ்கீரீம் எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

மாமா நான் என்ன சொல்றேன், நீங்க ஐஸ்கீரீம் சாப்பிடுறீங்க.

கடையில ஆளுங்கயெல்லாம் கிளம்பிட்டாங்களா, ம்ம்

சரி இன்வெர்டர் ஆப் பண்ணிட்டு, மெயின ஆப் பண்ணு நான் எப்போ விசில் அடிக்கிறேனோ அப்ப ஆன் செய்.

மித்ரா கை கழுவ வாஷ்பேஷன் போகவும் , பவர் கட் ஆகவும் சரியாகயிருந்தது. மித்ரா கையை கழுவிட்டு திரும்ப , வாசு அவள் அருகில் வந்தான். இருட்டில் வாசுவை அறிந்துக்கொண்டாள் மித்ரா.

“வாசு” சொல்லி அவன் கையை பிடித்தாள்.

அவளை அனைத்துக்கொண்டான், பின் அவள் இதழ்களில் முத்தமிட்டான், ஐஸ்கீரீம் சாப்பிட்ட குளுமை அவள் காரத்தை அடக்கியது.

அவள் அவனிடம் மயங்கி அவன் தோளை அழுத்தினாள், ஐ லவ் யு டி, என்னால நீ இல்லாம இருக்க முடியில வந்திருடி எங்கிட்ட என்று சொல்ல,

வாசு , என் புத்தி மயங்குது, மனசு எடுத்துக்க மாட்டேங்குது சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து , கைகள் எல்லை மீற.

என்ன பண்ணற வாசு,

என்னால கண்ட்ரோல் பண்ணமுடியல தேனு மிட்டாய்

ஐயோ இவன எப்படி தடுக்கிறது நினைத்து வார்த்தைகளை வீச ஆரம்பித்தாள் ஆம்பள என்ற திமிர காண்பிக்கிறாயா விடுடா.

“அப்படினா“ – வாசு

“பெண் சுகத்திற்கு அலையிறாடா. “

அவள் கழுத்தில் கையை வைத்து என்னடி சொன்ன திரும்ப சொல்லுடி

அது அது...

யார பார்த்து அப்படி சொன்ன, பொண்ணுங்கிட்ட போறவன் நினைச்சியோ உன் பின்னாடி நாய் மாதிரி சுத்திட்டியிக்கேனே அதனாலயா ,என்னை எவ்வளவு கேவலப்படுத்துனுமோ படுத்திட்ட. உன்கிட்ட இனி வரமாட்டேன், நீ எனக்கு வேணாம் சொல்லி தள்ளிவிட்டு சென்றான்.

“வாசு” கத்திக்கொண்டே மித்ரா, பின்னாடி ஓடி வர அதற்குள் அவன் காரில் ஏறி சென்று விட்டான்.

இரண்டு மணி நேரம் பிறகு வாசு ,மித்ராவை போனில் அழைத்தான்.

நல்ல தூக்கமோ

இல்ல இன்னும் தூங்கல,

இவன எப்படி சாகடிக்கலாம் குகூள்ல சர்ச் பண்ணிறீயோ.

வாசு டிரின்ங் பண்ணியிருக்கியா,

ஆமாண்டி, என்னால தாங்க முடியல ,நீ பேசினது.

சரி நான் போன வைக்கிறேன்.

நீ வைடா பட்டு, நான் நேர்ல வரேன். ஓகேவா.

சரி சொல்லு.

நான் தெரியமாதான் கேட்கறன், ஐயோ தெரிஞ்சே நிறைய கேட்பான் என்று மித்ரா நினைக்க. உன் லிப்ல கிஸ் பண்ணேன், நீ என்ன செஞ்சிருக்குனும், எனக்கு பிடிக்கல அப்படி அப்படி செய்யாதேன் சொல்லறதை விட்டுட்டு, சும்மா நுங்கு சாப்பிடற மாதிரி என் லிப்ஸ டேமேஜ்

மித்ரா குறுக்கிட்டு “காரமா இருந்துச்சு அதான் “

ஏய்ய என்ன கம்பிளிட் பண்ணவிடு, லிப்ஸ டேமேஜ் செஞ்சிட்டு மூட் ஏத்திவிட்டு அலையறான் சொல்லற.

அது தவறுதலா வந்திடுச்சு வாசு.

பல்ல உடைச்சிடுவேன்டி, தெளிவா பேசற நீ,

கோபமா இருக்கியா வாசு , நான் உன்ன கொஞ்சுட்டா.

கொண்ணுடுவேன் , இதோட லாஸ்ட் நான் உங்கிட்ட பேசறது, நீ வாசு வேணும் வேணும் துடிப்ப அப்பகூட புருஷனா வரமாட்டேன்.

அடுத்த நாள் காலையில், சின்னா ,தன் தம்பியை கூப்பிட்டாள்,நான் கழுதுல போட்டிருக்கிற டாலர்ல M ன்னு இருக்கு ஆனா வாசு பேரே இல்ல அப்பறம் எம்ம சுத்தி பாதி வளைவு இருக்கு ஓண்ணும் புரியலடா.

உனக்கு ஏதாவது தெரியுதா.

“தெரியலக்கா“.

சின்னா , நேற்று அஷோக் வந்து 5லட்சம் கொடுத்தான், நான் அதை V.D.CONSTRUCTORS ,M.D ,தேவ் சாருக்கு கொடுக்கனும், ஏற்கனவே இதை பத்தி வாசு அந்த தேவ்கிட்ட சொல்லிருக்கான்.

அக்கா மனோ அண்ணா அங்கதான் வோர்க் பண்ணறாரு. நீங்க அவர் மூலமா அப்பாயிண்மன்ட் வாங்கிட்டு போ.

சரிடா, அப்ப வாசுவும் அங்கதான் வேலை செய்யறானா.இல்ல தனியா பிராஜ்க்ட் பண்ணறேன் சொன்னான்.

மித்ரா V.D.CONSTRUCTORS பில்டிங் முன்னால் நின்று மனோக்கு போன் செய்யதாள், அண்ணா,

“சொல்லும்மா, வந்திட்டியா. “

ம்ம் அண்ணா நான் காலையில சொன்னது ,எம்.டி தேவ் சார பார்க்கனும்.

இன்னும் வரலம்மா, நீ உள்ள வா.

“சரிண்ணா“.

“டேய் வாசு ஏன்டா போனை எடுக்கல“,மனோ வாசுவிடம் கேட்க,

இதோ வந்துட்டேன்டா, நான் மூட் அவுட் போனை வை.

“டேய் டேய்” சே போனை வைத்துவிட்டான்.

மனோ, மித்ராவை M.D ரூம் முன்னாடி உட்கார வைத்தான்,லிப்டிலிருந்து வெளியே வந்தான் வாசு , ஸ்கை ப்ளு கலர் ஷார்ட், டார்க் ப்ளு கலர்ல கோட் சூட் போட்டு, கண்களில் குலர்ஸ் மாட்டிக்கொண்டு உள்ளே நடந்து வந்தான். எல்லோரும் குட்மார்னிங் சொல்ல தலையை ஆட்டிக்கொண்டே மித்ராவை பார்த்தவுடனே நின்றான்.மித்ரா பக்கத்தில் மனோ நின்றதை பார்த்தான்.
 
அடப்பாவி கார்மேகம் மித்ராவின் அப்பாவுக்கு சொந்த தம்பி இல்லையா?
ஒண்ணு விட்ட மூணு விட்ட சொந்தத்துக்கே கார்மேகம் இந்த அக்கிரமம் பண்ணுறானா?

ஹா ஹா ஹா
ஏண்டா மித்ரா அளுவுறாள்ன்னு பார்த்தால் காரசாரமா எல்லா ஜீவராசிகளையும் உள்ளே தள்ளிக்கிட்டு இருக்காளே

ஐயோ மித்ரா சரியான கேடிப் புள்ளை
அவன் உம்மா கொடுத்தாலும் ஈஈஈஈஈன்னு இளிச்சுக்கிட்டு வாங்கிக்கிட்டு அப்புறம் வாசுவையே கேவலமா பேசி குற்றம் சொல்லுறாளே

நீ இனிமே அவளை திரும்பிப் பார்க்காதே, வாசு
(ஆனால் இந்த சொரணை கெட்ட மானங்கெட்ட வாசு என் பேச்சைக் கேட்க மாட்டான் அவள் பின்னாடிதான் போவான்)

வாசுதான் தேவ்ன்னு வாசுதேவன்னு மித்ராப் புள்ளைக்கு தெரியாதா?
தன் புருஷன்தான் அந்த கம்பெனி எம் டி-ன்னு தெரியாமலே வாசுவாகிய தேவ்வைப் பார்க்க மித்ரா போயிருக்கிறாள்
ஹா ஹா ஹா

வாசுவின் கம்பெனியில் என்ன நடக்கும்?
வாசுவுக்கு அஞ்சு லட்சம் எதுக்கு கொடுக்கணும்?
என்ன ரீசன்?
 
Last edited:
அடப்பாவி கார்மேகம் மித்ராவின் அப்பாவுக்கு சொந்த தம்பி இல்லையா?
ஒண்ணு விட்ட மூணு விட்ட சொந்தத்துக்கே கார்மேகம் இந்த அக்கிரமம் பண்ணுறானா?

ஹா ஹா ஹா
ஏண்டா மித்ரா அளுவுறாள்ன்னு பார்த்தால் காரசாரமா எல்லா ஜீவராசிகளையும் உள்ளே தள்ளிக்கிட்டு இருக்காளே

ஐயோ மித்ரா சரியான கேடிப் புள்ளை
அவன் உம்மா கொடுத்தாலும் ஈஈஈஈஈன்னு இளிச்சுக்கிட்டு வாங்கிக்கிட்டு அப்புறம் வாசுவையே கேவலமா பேசி குற்றம் சொல்லுறாளே

நீ இனிமே அவளை திரும்பிப் பார்க்காதே, வாசு
(ஆனால் இந்த சொரணை கெட்ட மானங்கெட்ட வாசு என் பேச்சைக் கேட்க மாட்டான் அவள் பின்னாடிதான் போவான்)

வாசுதான் தேவ்ன்னு வாசுதேவன்னு மித்ராப் புள்ளைக்கு தெரியாதா?
தன் புருஷன்தான் அந்த கம்பெனி எம் டி-ன்னு தெரியாமலே வாசுவாகிய தேவ்வைப் பார்க்க மித்ரா போயிருக்கிறாள்
ஹா ஹா ஹா

வாசுவின் கம்பெனியில் என்ன நடக்கும்?
வாசுவுக்கு அஞ்சு லட்சம் எதுக்கு கொடுக்கணும்?
என்ன ரீசன்?
கடைல வலேலை செய்யதா அசோக் தான் Read epi 1 and epi 15 banu mam, thks for ur comments
 
Top