Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 11

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 11

ஐயா , நான் உதவிதான் செஞ்சேன், யாரோ தப்பு தப்பா போட்டோ எடுத்து வச்சிருங்காங்க.

இல்ல வாசு தம்பி , இப்படி கல்யாணம் நின்னிடுச்சு , அப்ப எங்க பாப்பாவை யாரு கல்யாணம் பண்ணிப்பா.

இப்ப என்ன வேற நல்ல மாப்பிள்ளையா பார்த்து ,அடுத்த முகூர்த்ததில் கல்யாணம் வைச்சிக்கலாம் அண்ணா.

அதை ஆமோதித்த பழனிச்சாமி, வரவன் நாளைக்கு இதை பெரிசு படுத்தினா , மித்ரா வாழ்க்கை என்ன ஆகுறது. இப்ப என்ன செய்யறது தெரியல.

அதுக்கு தான் சொல்லறது, கண்டவனை வீட்டுல தங்க வைக்க கூடாது , நம்ம பேச்சை யாரு கேட்கறது என்று கார்மேகம் திட்டித்தீர்தார்.

சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையினா, நானே மித்ராவை மேரேஜ் பண்ணிக்கிறேன். என்னால தான இவ்வளவு பிரச்சனை .

தம்பி நெசமாவா சொல்லிறீங்க –பழனிச்சாமி,

அய்யோ, முதலுக்கே மோசமாயிடும் போலிருக்கே ,பயப்பட ஆரம்பித்தான் , கார்மேகம்.முன்ன,பின்ன தெரியாத, யாருண்ணே

தெரியாத ஒருத்தணுக்கு எப்படி பொண்ண கொடுக்கறது, என்ன ஜாதியோ, குலமோ

யார பார்த்து ஓண்ணு இல்லாதவன் சொன்ன, கம்பிரமான குரல் வந்த திசையை நோக்கினர்,கழுத்தில் ,காதுகளில் ,கைகளிலும் தங்க நகைகள் மின்ன, 70 வயது மிக்கவர் உள்ளே வந்தார்.

இந்த பானுமதி யோட பேரனைப்பார்த்து யாருலே இந்த வார்த்தை சொன்னது.

டேய் வாசு என்னடா, உங்க பாட்டி பொண்ணவிட அதிகமா மேக்கப் போட்டிற்கு, ப்பஜி இல்ல விளையாடிட்டு இருக்கும், இத யாரடா கூப்பிட்டது.

ஏன்னடா, பேரன் கல்யாணம் பார்க்கணும் சொல்லிச்சு.அதான் அதுக்கு ஒரு கேரக்டர் கொடுத்தேன்.,

பானுமதியம்மா நீங்களா, திருச்சியில்ல உங்கள தெரியாத ஆளுங்க யாருன்னா இருங்காங்கல. உங்கள இரண்டு மூணு கல்யாணத்தல பார்த்திருக்கேன். டேய் கார்மேகம், இவங்க நம்ம ஆளுங்கதான்.

அப்பறமேன்ன ஆகற வேலைய பாருங்க சொல்லிட்டு வாசு என்று பேரனை அழைத்தாள்.

பாட்டி

நீ போய் ரேடியாகு, டைவர் தம்பி காருல இருக்குற அந்த பையை எடுத்துட்டுவாலே ,

மித்ராம்மா , இந்த வாசு தம்பியை கட்டிக்கம்மா, பெரியப்பா சொல்லேறேன்,பார்வதியும் , ஆமாம் மித்ரா தம்பி ரொம்ப நல்லா பார்த்துப்பார் ,எல்லோரும் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள்.

என் பேரனை கட்டிக்க ஆளுஆளுக்கு போட்டி போடறாங்க,இவளுக்கு என்ன கசக்குமா, சிறிது நேரத்தில் டைவர் பையை பாட்டியிடம் கொடுத்தார்.பெண்ணிற்கு பட்டுபுடவை ,நகையல்லாம் தட்டில் வைத்து ஐயரிடம் கொடுக்க அதை வாழ்த்தி பெண்ணிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

மணப்பெண் அறையில், மித்ரா நம்ம அளவு கொடுத்தோமே அதே ப்ளவுஸ், சூப்பரா இருக்குடி பட்டுசாரி, சாரி ஓரத்தில வாசு,மித்ராங்கி போட்டு நேஞ்சிருங்காங்க.

இவன் ரொம்ப நாளா ப்ளான் பண்ணிருக்கான். நல்லா என்னை ஏமாத்திட்டான். இதுல இந்த பாட்டி வேற , ஊரில இவன்தான் மன்மதன் மாதிரி ஓரே பில்டப்பு.

ஏய் மித்து நிஜமாவே அண்ணன் அழகன்தான்டி.

ஆமாம், பிராடு.

மணமகன் அறையில் , என்னடா வாசு குடும்பஸ்தனாக போற, நீ ஆசைபட்ட என் தங்கச்சி, என்ஜாய் .பட்டுவேட்டி கட்டி ரெடியானன் வாசு.


கதவை திறந்து உள்ளே வந்தான், சின்னா

"மாமா"

என்னடா சின்னா ஹாப்பியா?

மாமா எங்க அக்காவ கட்டிக்க உனக்கு சந்தோஷம் தான. சொல்லி வாசுவை கட்டி அனைத்தான். டேய் என்னடா இது, இப்ப ஏன் அழற.

ஓண்ணுமில்ல மாமா, நீ ரொம்ப அழகாக இருக்க, சொல்லி அவன் கண்ணத்தில் முத்தமிட்டான். டேய் நீ மாறவே மாட்டியாடா. முகமெல்லாம் புன்னகையுடன். ஏய் வாசு நானும் ஒரு கிஸ் பண்ணிகிறன்டா.

ஏய் சீ போங்கடா அந்த பக்கம், நானே பயத்தில இருக்கேன் உங்க அக்கா இன்னிக்கு கதக்களியே ஆடுவா.

சடங்குகள் ஆரம்பித்தன, மகேஷிற்கு விருப்பமில்லாம் வெளியெ சென்றுவிட்டான். கமலா வயிறு எரிந்து உட்கார்ந்து இருந்தாள். மாப்பிள்ளையின் தோழனாக சின்னா அமர்ந்திருந்தான். பொண்ண வர சொல்லுங்க ஐயர் சொன்னவுடன், வானத்தில் இருந்து இறங்கிய தேவதையாக அழைத்து வரப்பட்டாள்,சிவப்பு நிறத்தில் சாமுத்திரிக்கா பட்டில்,நெற்றிசுட்டி அணிந்து,கழுத்தில் தங்க நகைகள் மின்ன மாலையோடு அவன் பக்கத்தில் அமர்ந்தாள், அவளுக்கு துணையாக ரம்யாவும், அவள் சித்தி,பெரியம்மாவும் நின்றிருந்தார்கள்.

ரம்யா , பாரும்மா எங்க என்று கேட்டாள். இங்கதாண்ட இருக்கேன் , பாரும்மா என் கூடவே இருங்க, சரிடா.

கெட்டிமேளம் , கெட்டிமேளம் ஐயர் சொல்ல வாசு என்கின்ற வாசு தேவ் ராஜ், பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சியை போட்டான்.

இப்போ பொண்ணும், மாப்பிள்ளையும் காருல போய்யிட்டிருங்காங்க.
மனோ நான் மித்ராவ தான மேரேஜ் பண்ண இவ ஏண்ணடா இப்படி இருக்கா, ரம்யாவை பார்த்து கேட்டான்.

ஷாக்காம்.!!!! நம்ம சிட்டுவேஷன் பாட்ட போடுடா.

‘’ தங்கமே உன்னத்தான்
தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள்
உன்னத் தூக்குவேனே

ராசாத்திய ராத்திரி பாத்தேன்
ரவுடிபைய romantic ஆனேன்
ரகசியமா ரூட்ட போட்டு
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன ‘’

ரம்யா வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள், ஏய்ய வாயை மூடுடி ரம்மு, நான் என்ன செய்வேன் தெரியாது. இவன, வாசு என்று மெதுவாக அழைத்தாள், மித்ரா என்னடா செல்லக்குட்டி ,அவள் அருகில் போனான்.

மித்ரா வாசுவை அடிக்க ஆரம்பித்தாள், எல்லா உன்னாலதான் சொல்லி சொல்லி அடித்தாள் ,கையை பிடித்துக்கொண்டான் வாசு. பேபி, மாமாவ நைட்டு கொஞ்சிக்கலாம். முன்னாடி சின்ன பசங்க இருகாங்க ,பயந்துடுவாங்க.
 
வாசு தேவ் ராஜ்ஜுக்கும் மித்ராங்கிக்கும் கல்யாணம் நடந்து விட்டது
ஹப்பாடா கார்மேகத்திடமிருந்து மித்ரா தப்பித்து விட்டாள்
பொண்ணு மாப்பிள்ளை இப்போ எங்கே போறாங்க?

ஐ என் பேர் வந்திருக்கு
நான் மாப்பிள்ளை வீட்டுக்காரி
ஜாலியா இருக்கு, லக்ஷு டியர்
 
Last edited:
Thk banu mam, gnanasundari mam, janaki mam, anandhi mam for ur support. Coming episode patti than highlight
 
Top