Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 7

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 7
வைஷு அவளை கொலை செய்யும் அளவிற்கு முறைத்து கொண்டு இருந்தாள்.

"இவ வேற இப்படி பாக்குறாளே.. எல்லாம் இவனால வந்தது", என்று கண்ணனை திட்டிகொண்டே நகர போனவளை கைநீட்டி மரித்தவள் "என்னடி என் மாமா உன்ன பாத்து அப்படி சந்தோஷமா சிரிச்சிட்டே போறாரு..என்ன பண்ணி வச்ச", என்று தவறாக பேசினால் வைஷு.

"ஹேய்.. இன்னொரு முறை இப்படி பேசின..அவ்ளோதான் பல்ல தட்டி கைல கொடுத்துடுவேன்..உன் மாமா சிரிச்சிட்டு போன அவர போய் கேளு...என்கிட்ட இப்படிலான் பேசுற வேலைய வாசிக்காதா..மைண்ட் இட்",என்று கண்ணனின் மீது உள்ள கோபத்தை எல்லாம் இவளிடம் காட்டிவிட்டு சென்றாள்.

வைஷு கோவமாக தன் தாயை பார்க்க சென்றாள்.

தாரா உடை மாற்றி முகம் கை கால்களை கழுவி விட்டு தன் தாய்க்கு உதவ சமையல் அறைக்கு சென்றுவிட்டாள்.தங்கள் அறைக்கு வந்த சம்யுக்தாவிற்கு மனம் சஞ்சலத்தில் இருந்தது.என்ன ஓட்டங்கள் நிற்பேனா என்பதுபோல் தறிகெட்டு ஓடிக்கொண்டு இருந்தது.மனதுடன் போராடிக்கொண்டே எழுந்து ஜன்னல் அருகே வந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்..கண்கள் சிமிட்டவும் மறந்து..

ஒரு ரோஜா கூட்டமே அங்கே இருந்தது.அதுவும் அனைத்தும் ஒரே வண்ணமாய் மஞ்சள் நிற பூக்கள்.பார்க்கவே அவ்வளவு இதமாக மனதிற்கு மகிழ்வாக இருந்தது அவளிற்கு.அருகே பார்க்க ஆசை கொண்டு வேக வேகமாக படி இறங்கி தோட்டத்திற்கு ஓடினாள்.

இவள் ஓடிச்செல்வதை பார்த்த தாரிகா "சதா எதுக்கு இப்படி ஓடுறா..எங்க போறா", என்று நினைத்தவள் அவள் பின்னே சென்றாள்.

ரோஜா தோட்டத்தை அருகில் பார்த்ததும் சம்யுக்தாவிற்கு பலவித எண்ணலைகள் மனதில் ஓடியது.. முதலில் சந்தோஷம் பிறகு வருத்தம் சோகம் என்று பல உணர்ச்சிகளை முகம் பிரதிபலிக்க தோட்டத்தின்
வேளியை நகர்த்தி உள்ள செல்ல கால்வைத்தாள்.மறுநொடி தாரா அவளை தடுத்து இருந்தாள்."சதா உள்ள போகாத..அண்ணாக்கு பயங்கர கோவம் வரும் யாராச்சும் உள்ள போய் பார்த்தா..", என்றாள்.

"ப்ளீஸ் தாரா..எனக்கு உள்ள போகணும்", என்று கண்களை சுருக்கி பாவமாக கெஞ்சினாள்.அவள் இப்படி கேட்டதும் தாராவுக்கும் கஷ்டமாக தான் இருந்தது.. ஆனால் அண்ணா என்ன சொல்லுவாரோ என்று அவள் யோசித்துக்கொண்டு இருக்க.."உள்ள போ", என்று சொன்னான் கண்ணன்.

இவர்கள் அதிர்ச்சியாய் திரும்பி பார்க்க தாராவுக்கு இது கனவா என்பதுபோல் இருந்தது.ஏன்னென்றால் இதுவரை அவன் அம்மா தங்கையை கூட உள்ளே அனுமதித்தது இல்லை.சதாவை எப்படி அனுமதிக்கிறான் என்ற வியப்பு.

சம்யுக்தா அவனிடம் கண்களால் உண்மையாகவா..உள்ளே போகவா என்று அவனை கேட்டாள்..அதற்கு அவன் கண்களை மூடி திறந்து ஒப்புதலை தர அவள் துள்ளிக்குதித்து உள்ள சென்றாள்.

"அண்ணா.."என்று தாரா ஏதோ சொல்லவரா.."விடு தாரா..அவளை பாத்த தான.. ஏதோ மயின்ட் டிஸ்டர்ப்ல இருக்கா..உங்கிட்ட எப்படி கெஞ்சி கேட்டுட்டு இருந்தா..எனக்கு அவ இப்படி இருக்கிறது பிடிக்கல..நீ வீட்டுக்கு போ..நா பாத்துக்கிறேன்", என்றான்.

அண்ணா சொல்வதும் சரி தான்..ஏதோ மனவருத்தத்தில் இருக்கிறாள் போல..கொஞ்ச நேரம் இருந்து வரட்டும். இருந்தும் அவளை தனியே விட மனம் இன்றி அவள் அங்கேயே நிற்க அதை உணர்ந்த கண்ணன் "நீ போ தாரா..நா பத்துகிறேன்",என்றான். அவளும் சரி என்று வீட்டுக்கு சென்றாள்.

தாரா சென்றதும் சம்யுக்தாவை பார்த்தவன் முகத்தில் மென்னகை புரிந்தான்.இவ்வளவு நேரம் அவள் முகத்தில் இருந்த வருத்தம் போய் இப்பொழுது முகம் முழுவதும் புன்னகையின் சாயல் தெரிந்தது. அவனும் தோட்டத்திற்குள் சென்று அவள் அருகில் நின்றான்.

அவள் ரோஜாக்களை ரசிக்க அவனோ அவளை ரசித்துக்கொண்டு இருந்தான். வட்ட முகம்,பெரிய கண்கள்,அளவான மூக்கு,இடைவரை நீண்ட கூந்தல், ரோஜா இதழைவிட அவள் இதழ்கள் மென்மையோ என்று அவன் ஆராய்ச்சியில் இருக்கவும் சம்யுக்தா அவனை பார்க்கவும் சரியாக இருந்தது. அவனின் பார்வையை கண்டவள் அவள் பார்வையை நகர்த்தவும் மறந்து நின்றிருந்தாள்.

ஒரு கணமே தன்னை சுதாரித்தவள் தன் முகத்தை அவசரமாக திருப்பி கொண்டாள். இதை பார்த்தவன் மனதில் சொல்லமுடியாத மகிழ்ச்சி. அதை வெளியில் காட்டிக்கொள்ளமல் அவளிடம் சகஜமாக பேசினான்.

"ரோஜா பூ ரொம்ப பிடிக்குமோ",என்று அவளை கேட்டான்.

"மஞ்சள் நிற ரோஜா என்றால் மிகவும் பிடிக்கும்", என்றாள்.

அவனுக்கு தெரியும்..அவளுக்கு மஞ்சள் நிற ரோஜா என்றால் மிகவும் பிடிக்கும் என்று.அவளுக்காக தானே இந்த ரோஜா தோட்டமே அவன் அமைத்தது.

"ஒஹ்...அப்போ இதுல எதனா ஸ்பெஷல் இருக்கா",என்று அவளின் முகத்தில் தன் பார்வையை பதித்துக்கொண்டே கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும் சம்யுக்தாவின் மனதில் இருக்கும் அவனின் ஞாபகங்கள் அவள் மனக்கண்ணில் வந்தன.அவளின் மனதை ஆட்கொண்டவன் அவன்..அவனின் சுவாசத்தை உணர்தவள்.அவனின் ஸ்பரிசத்தை உணர்தவள்.அவனுக்காக தானே கல்யாணம் வேண்டாம் என்று வீட்டை விட்டு தெரியாத இடத்தில் வந்து இருக்கிறாள்.உன்னோடு நான் கைகோர்க்கு நாள் வருமோ!...என்று இவள் உலகில் சஞ்சரித்து இருக்க..

இவளின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தவன்..முதலில் ஆனந்தத்தை வெளிப்படுத்தியவள் பின்பு சோகமா,கண்களில் கண்ணீர் கோர்க்க அப்படியே நிற்பவளை பார்க்க முடியவில்லை அவனால்."யுக்தா..",என்று அவளின் தோள் தொட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களை பிரிந்து நீர் வழிந்தோடியது.அதை பார்த்தவன் மனதில் வலி அப்படியே அவன் முகத்தில் தெரிய அவளை அழாதே என்பது போல் தலையை ஆட்டினான்.

"வீட்டு ஞாபகம் வந்துவிட்டதா",என்று அவன் பரிவாக கேட்க.. அவனின் அந்த அக்கறை தனக்காக வருந்தும் அவன் உள்ளம்...இப்பொழுது வீட்டின் நினைவும் சேர்த்து அவள் இன்னும் உடைய கண்களில் நீர் அதிகமா வந்தது. அதை பொறுக்காமல் அவள் கண்ணீரை துடைக்க அவள் கன்னம் தொட வர..அவள் சட்டென்று அவனை விட்டு நகர்ந்து வீட்டை நோக்கி ஓடினாள்.போகும் அவளையே பார்த்து கொண்டு நின்றிருந்தான். இதை அனைத்தும் வைஷு தன் தாயின் அறையில் நின்று பார்த்து கொண்டு இருந்தாள்.

"அம்மா...இவள எதனாபண்ணனும்..என்னால மாமா இவள இப்படி பாத்துட்டு இருக்கிறத பாக்க முடியல.. சீக்கிரமா இவள இங்க இருந்து ஓட விடணும்.. எதனா ஐடியா சொல்லுமா",என்று தன் தாயிடம் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

பார்வதியும் அவர்களை பார்த்து கொண்டுதான் இருந்தார். மனதில் சம்யுக்தாவின் மீது வஞ்சம் அதிகரித்துக்கொண்டே சென்றது."பொறுமையா இரு வைஷு..நமக்கு டைம் வரும்..அப்போ பாத்துக்கலாம்",என்றார்.

சம்யுக்தா அழுதுகொண்டே மாடிக்கு செல்வதை பார்த்த கோதை பாட்டி என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று நினைத்துக்கொண்டு இருக்க..அவளை பார்த்துக்கொண்டே கண்ணன் வருவதை பார்த்தார். அவனுக்கு தெரியுமோ என்று "கண்ணா இங்க வாபா",என்று அழைத்தார்.

"என்ன பாட்டி", என்று கேட்டவன் பார்வை மட்டும் சம்யுக்தாவின் மீதே இருந்தது.

அதை புரிந்த கோதை பாட்டி "என்ன ஆச்சு கண்ணா..சம்யுக்தா ஏன் அழுதுட்டே போற ", என்றார்.

"அவளுக்கு அவங்க வீட்டு ஞாபகம் வந்துடுச்சு போல பாட்டி ", என்று சொன்னான் முகத்தில் சோகத்துடன்.

"அதுக்கா இந்த பொண்ணு இப்படி அழுதுட்டு போகுது.. நா என்னமோ ஏதோனு பயந்துட்டேன்..புள்ள முகம் கூம்பி போச்சு", என்று வருத்தத்துடன் சொன்னார்.

"எனக்கும் வருத்தமா இருக்கு பாட்டி..இவளை இப்படி பார்க்க ", என்று உள்ளதில் உள்ளதை பாட்டியிடம் சொல்லிவிட்டான் அவனை அறியாமலே..சொல்லிவிட்டு தன் வேலையாய் பார்க்க சென்றுவிட்டான்.

அவன் மனதை தெரிந்து கொண்ட கோதை "கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும்..இந்த புள்ளைங்க நல்லா இருக்கனும் என்று வேண்டி கொண்டார்.

"அத்த நா வயலுக்கு போய்ட்டு வரேன்..உங்க புள்ளைக்கும் மாமாக்கும் சாப்பாடு குடுத்துட்டு வரேன்", என்றார் கையில் சாப்பாட்டு குடையோடு துளசி.

மருமகளிடம் சொல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தவர் பின் வேண்டாம் என்று முடிவு செய்து "சரிம்மா போய்ட்டு வா", என்றார்.

தனது அறைக்கு சென்ற சம்யுக்தாவிற்கு மனதில் பாரம் இன்னும் அதிகமாக தான் ஆனது...வீட்ட எப்படி மறந்தேன்.அம்மா என்ன பண்ணிட்டு இருப்பாங்க..நா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பாங்க..சாப்பிட்டாங்கலா இல்லையானு கூட தெரியலையே..பெரியப்பா என்ன நெனச்சி இருப்பாரு என்ன பத்தி..அப்பா எப்படி இருக்காரோ..இவங்கள பத்தி லான் கவலை படமா நா எப்படி சுயநலமாய் இருக்கேன்.இப்பவும் கண்ணன் கேட்காமல் இருந்து இருந்தா நா இவங்கள பத்தி லான் யோசிச்சி கூட இருக்கமாட்டேனோ..எப்படி பட்டவள் நான்..சுயநலவாதியா..அவனுக்காக நான் காத்துகொண்டு இருக்கிறேன்..இது அவனுக்கு தெரியுமா..என்னை நினைத்து பார்ப்பான என்று கூட தெரியாத ஒருவனுக்காக நான் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்கேனே..இப்படி பல சிந்தனைகளோடு அழுதுகொண்டே தூங்கி விட்டாள்..

இரவு உணவுக்கு கூட அவள் வரவில்லை.வேலைகள் முடிந்து தாரா அறைக்கு வர அங்கே சம்யுக்தா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.அவளை எழுப்ப மனம் இல்லாமல் கீழ சென்றுவிட்டாள்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து தான் இரவு உணவு சாப்பிடுவார்கள்.ஜனார்த்தனன் தான் கேட்டார் "சம்யுக்தா எங்கே தாரா ", என்று.

"அவ ரொம்ப சோர்வா இருக்கா போல தாத்தா..தூங்கிகிட்டு இருக்கா..எழுப்ப மனசு இல்ல..அவளுக்கு சாப்பாடு ரூம்கே கொண்டு போயிடுறேன் ", என்றாள்.

அவரும் சரி என்று சாப்பிட ஆரம்பித்தார்.கண்ணனுக்கு தான் மனது கேட்க வில்லை.அவளை பார்த்து ஆறுதலாக பேச வேண்டும் போல் இருந்தது.சரியாக உண்ணாமல் எழுந்துகொண்டான்.துளசி வற்புறுத்தியும் அவன் உன்ன வில்லை.இதை பார்த்துக்கொண்டுதான் இருந்தார் கோதை.

அனைவரும் உறங்க சென்றுவிட்டனர்.தாரா தன் அறைக்கு சென்றாள்.உணவை கொடுக்க சம்யுக்தாவை எழுப்பினாள்.ஆனால் சம்யுக்தா எழவே இல்லை.அவளும் போராடி விட்டு தூங்கிவிட்டாள்.

கண்ணனுக்கு தூக்கமே இல்லை..அவளை எப்பொழுது பார்ப்போம் என்று இருந்தது அவனுக்கு..விடியலுக்காக காத்துகொண்டு இருந்தான்.

கோதை பாட்டி ஜனார்த்தனனிடம் கண்ணனின் மனதை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார்.அதை கேட்டவர் "நீயாக எதுவும் நினைத்து கொள்ளதே..பொறுமையாக முடிவு செய்யலாம்", என்று முடித்து கொண்டார்.ஆனால் கோதைக்கு கண்ணனின் மனது நன்றாகவே புரிந்தது. இதுவரை எந்த பெண்ணிற்காகவும் தன் பேரன் இவ்வளவு மனம் வாடாவில்லையே..அவளிடம் இருந்து அவன் விழியை கூட அகற்ற வில்லை. எந்த பெண்ணையும் பார்க்காத தன் பேரன் மனது தெள்ள தெளிவாய் அவருக்கு புரிந்தது.

கிளிகள் குயில்களின் சத்தத்தில் கண்ணை திறந்தாள் சம்யுக்தா.விடியலின் சாயில் வானில் தெரிய சூரியன் வரும் நேரம் ஆவதை உணர்த்தியது.நேற்றைய பொழுதை நினைத்தவள் மனதில் சில திடமான முடிவுகளும் எடுத்துக்கொண்டாள்.ஒரு நிம்மதியுடன் எழுந்து குளிக்க சென்றுவிட்டாள்.

சத்தம் கேட்டு கண்ணை திறந்த தாரா சம்யுக்தாவின் அழகில் மயங்கிதான் போனாள்.

"சதா உண்மையா சொல்றேன்..நீ அவ்ளோ அழகு", என்று எந்த பொறாமையும் இல்லாமல் மனதில் இருந்து சொன்னாள்.

"எங்க கெளம்பிட்ட..இன்னைக்கு சனிக்கிழமை தான..ஸ்கூல் கூட இல்லையே", என்று யோசனையுடன் கேட்டாள்.

"கோவிலுக்கு போலானு இருக்கேன்..நீயும் ரெடி ஆகிட்டு சொல்லு இங்க எந்த கோவிலுக்கு போலன்னு", என்று தலையை பின்னலிட்டுக்கொண்டே கேட்டாள்.

"இல்ல சதா..நான் வர கூடாது..நீ போய்ட்டு வா..இங்க பெருமாள் கோவில் தான் பெரிய கோவில்..அங்க போய்ட்டு வா..", என்றாள்.

"சரி ", என்று கிளம்பி கீழே வந்தாள். அவள் மாடி இறுக்கி வாசல் வர அங்கே ஒரு இளைஞன் அவள் முன் சிரித்து கொண்டே "ஹாய் எல்லோ ரோஸ் ", என்று சொல்லி நின்றான்.அவள் சட்டென்று நின்றுவிட்டாள்.

"குட் மார்னிங் சதா", என்று தன் பல்வரிசை தெரிய சிரித்துகொண்டே சொன்னான்.

அப்பொழுது தான் தாரா கீழே வந்தாள்.அவன் சம்யுக்தாவை சதா என்றதும் தாராவும் சம்யுக்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.அதை விட அந்த "எல்லோ ரோஸ் " தான் அவர்களுக்கு ஒன்னும் புரியவே இல்லை.

கண்ணனும் அங்கு தான் இருந்தான்.விடியலுக்கு முன் எழுந்தவன் கிளம்பி கீழே வந்துவிட்டான்.சம்யுக்தாவை பார்க்க..அவனுக்கு விருந்தாகவே அவளும் வந்தாள்.

சந்தன நிறத்தில் அவள் இருக்க..அதற்கு ஏற்றார் போல் மஞ்சள் நிற காட்டன் சேலையில்..காதிலும் கழுத்திலும் மஞ்சள் ரோஜா பூ போட்ட ஆபரணங்கள்..அது இன்னும் எடுத்து கொடுக்க..நீண்ட கூந்தலை தளர்வாக பின்னி அவன் விழிகளுக்கு தேவதையாகவே தெரிந்தாள்.

ஆனால் இப்படி இவன் அவளை எல்லோ ரோஸ் என்றதும் அவனுக்குள் அப்படி ஒரு கோவம் பொறாமை எல்லா சேர்ந்து முகத்தில் ரௌத்திரம் பிரதிபலிக்க நின்று இருந்தான்.

அவன் யாராக இருப்பான்?..
 
Last edited:
Interesting, nice epi dear.
Ippadi than nalla kuttya veegam epi kodukanae ketto.good girl.
Avada manathile irrupvan sparisam ellam unarnthaval Neril Kannan ai parkum pol kandu pidikalaya? avan than ivan ena?
Yaar antha puthu mugam?
Mandai vedikuthey. Veegam pathilodu adutha epi kodungo.ippadi ellam suspense vecha manushi eppadi thoonga, cha cha very bad .
 
Interesting, nice epi dear.
Ippadi than nalla kuttya veegam epi kodukanae ketto.good girl.
Avada manathile irrupvan sparisam ellam unarnthaval Neril Kannan ai parkum pol kandu pidikalaya? avan than ivan ena?
Yaar antha puthu mugam?
Mandai vedikuthey. Veegam pathilodu adutha epi kodungo.ippadi ellam suspense vecha manushi eppadi thoonga, cha cha very bad .
Tnk u so much..kandipaa seekrama epi kuduka try panren..kannanai arindhalum aval manadhil veru oruvan irukiraney..ena seiya paavam..andha pudhiyavan yaraga irukum..kandu pidingal ;)
 
Tnk u so much..kandipaa seekrama epi kuduka try panren..kannanai arindhalum aval manadhil veru oruvan irukiraney..ena seiya paavam..andha pudhiyavan yaraga irukum..kandu pidingal ;)
Avan siriya vayasila arimugam aana Kannan .seriya ?appadi than enda gnanathristti sollittru.
 
Top