Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 17

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 17
சம்யுக்தா நவாவை உணர்ந்த அந்த நாட்களுக்குள் பயணித்தாள்.அன்று அவளின் பிறந்த நாள்.அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வர சம்யுக்தவிற்கு பயங்கர வருத்தம்.

"காலேஜ் போய் இருந்தா கூட ஜாலியா இருந்து இருப்பேன் போல.இந்த சண்டே வந்து என்ன இப்படி வதைக்குதே", என்று புலம்பிக்கொண்டு இருந்தாள்.

அப்பொழுது அவளுக்கு விஷ் செய்ய வந்த பிரவீன் இவள் வாடிய முகத்தை பார்த்து என்னவென்று கேட்க "பெரியப்பா கிட்ட பிரண்ட்ஸ் கூட சினிமாக்கு போறேன்னு கேட்டேன்..எப்பவும் போல நோ சொல்லிட்டாரு", என்று மூஞ்சை உம் என்று வைத்து கொண்டு சொன்னாள்.

"அவ்ளோ தானா..கவலை படாத..நான் ஈவினிங் வந்து கூட்டிட்டு போறேன்", என்று வாக்கு கொடுத்தான்.

"நெஜமாவா..ரொம்ப தேங்க்ஸ் அண்ணா ", என்று அவனை கட்டிக்கொண்டாள்.

"ஓகே..சீ யூ இன் தி ஈவினிங்", என்று அவனுடைய ஆபிசுக்கு சென்றுவிட்டான்.

ஆனால் வேலையின் பளுவால் அவளை மறந்துவிட்டேன்.காத்திருந்து காத்திருந்து பார்த்தவளுக்கு பொறுமை பிறந்து போக அவனை தேடி அவனுடைய ஆபிசுக்கு சென்றாள்.

பதினேழு தளம் கொண்ட அந்த கட்டிடத்தில் பிரவீனின் ஆபிஸ் பன்னிரெண்டாவது தளத்தில் இருந்தது.இவள் நேரம் லிப்ட் பத்தாவது தளத்திலே நின்றுவிட்டது வேலை செய்யாமல்.எரிச்சலும் கோபமுமாய் வேக வேகமா படி ஏறியவள் பன்னிரெண்டாவது தளத்தை அடையும் கடைசி படியில் கால் தவறி கீயே விழ போனாள்.

அவள் பயந்து அலறிக்கொண்டே விழ போக அதற்குள் ஒரு கரம் அவளை சுற்றி வளைத்து அரணாக அவளை காத்திருந்தது.அதற்குள் அவள் மயங்கி இருந்தாள்.ஆனால் அந்த ஒரு நொடியில் அவனின் சுவாசம் அவனின் தொடுகை அவன் ஸ்பரிசமென்று அனைத்தையும் உறைந்திருந்தாள்.அவன் பெயரை கூட யாரோ சொன்னார்கள்."நவா என்ன ஆச்சு ", என்று யாரோ கேட்டுக்கொண்டு அருகில் வந்தார்.

அவன் முதலில் அவளை காப்பாற்ற தான் பிடித்தான்.ஆனால் பிடித்த பிறகு அவனின் மூச்சு காற்று வேகமாய் அவள் மேல் வீசியது அவள் இடையில் அவன் பிடிக்கும் அழுத்தமாய் பதிந்தது.அது தப்பான எண்ணம் இல்லை..காதலோடு வந்த செய்கை.. அதை அவள் நன்கு உணர்வாள்.

ஆனால் என்ன செய்ய மயங்கி விட்டாளே..அவள் மறுபடியும் எழுந்து பார்க்கும்பொழுது அவள் அறையில் வீட்டில் இருந்தாள்.ஆனால் அவளுக்குள் ஒரு நம்பிக்கை அவள் உணர்ந்த உணர்வு சரியென்றால் அவன் கண்டிப்பாக அவளை தேடி வருவான் என்று.ஆனால் இது வரை அப்படி எதுவும் நடக்க வில்லையே என்று பெருமூச்சை வெளியிட்டாள்.

அண்ணி சொல்வதும் சரிதானோ..அது ஒரு ஆக்சிடென்ட் அதையே என் வாழ்க்கையா நெனச்சு கனவுல வாழ்ந்து நிஜத்தை தொலைகிறேனோ.யாரோ தெரியாத ஒருவனுக்காக என்மீது உயிராய் இருக்கும் கண்ணனை வறுத்த படவைக்கிறேனோ என்று பலவாறு யோசித்தவள் எல்லா பாரத்தையும் அந்த கார்மேக வண்ணன் மீது செலுத்தி தன் வாழ்க்கையை கண்ணனோடு வண்ணமயமாக்க வேண்டிக் கொண்டாள்.

வீடே குதூகலமாக இருந்தது..மூன்று கல்யாணம் என்றால் எப்படி இருக்கும்.பெரியவர்கள் அனைவரும் ஆளுக்கொரு வேலையாக சுற்றிக்கொண்டு இருக்க சிறியவர்கள் அனைவரும் ஒரே கும்மாளமாய் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர்.இப்படியே இரண்டு நாள் ஓட மறுநாள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் நடுவது என்று முடிவுசெய்து இருந்தனர்.

கண்ணன் வீட்டிற்கு வருவதே குறைந்து போனது.காலையில் கிளம்பி செல்பவன் இருட்டின பிறகு தான் வந்தான்.கல்யாண பேச்சை எடுத்ததில் இருந்து அவன் சம்யுக்தாவை பார்ப்பதையே தவிர்த்து இருந்தான்.அவனுக்கு தெரியும் அவன் ஒரு விஷயம் கேட்டு அவன் தாத்தா அவனுக்காக செய்யாமல் இருக்க மாட்டாரென்று.சம்யுக்தாவை கண்டிப்பாக மணமுடித்து வைப்பார் என்று நம்பினான்.அதுவே நடந்துகொண்டு இருக்கிறது.அனைவரும் மகிழ்ச்சியாக வளம்வந்து கொண்டிருக்க சம்யுக்தா மட்டும் ஏதோ தன்னை விட்டு தூர சென்றது போல் வாடி இருந்தாள்.இதில் கண்ணன் வேறு அவளை பார்ப்பதை கூட தவிர்த்தான் வேண்டுமென்றே.அதை உணர்தவள் மனதளவில் ஒடுங்கினாள்.

பெரியவர்கள் கல்யாண வேலையில் இவர்களை கவனிக்கவில்லை ஆனால் சின்னவர்கள் இவர்களை புரிந்து கொண்டார்கள்..இருந்தும் இது காதலர்களுக்குள் வரும் ஊடல் என்று விட்டுவிட்டார்கள்.

பிரணவீயும் தாராவும் இவள் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதே போதும் என்று இருந்துவிட்டனர்.

மறுநாள் காலையில் அனைவரும் எழுந்து அறக்க பறக்க குளித்து பந்தக்கால் நடுவதற்கு வீட்டிற்கு வெளியில் வந்து நின்றனர்.
பெண்கள் அணைவரும் தலையில் ஈரம் சொட்ட சொட்ட நின்றிருந்தனர்.அந்த அதிகாலை இருட்டும் குளிர்ந்த காற்றும் அனைவரும் நன்றாக ரசித்தனர்.பெண்கள் மூங்கில் கொம்பிற்கு தண்ணீர் ஊற்றி கழுவி மஞ்சள் குங்குமம் வைத்து பூச்சூடி தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் நட்டனர்.பிறகு அதில் அனைவரும் சிறுதானிய விதைகளை தூவி தண்ணீர் விட்டனர்.ஜனார்த்தனன் தாத்தா கற்பூறம் காட்ட அனைவரும் இந்த கல்யாணம் நல்லா படியாக நடக்க மனமார வேண்டிக்கொண்டனர்.வைஷுவை தவிர.

"கடவுளே நாங்க ரெண்டு பேரும் இதே போல கைகோர்த்து கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கனும்", என்று தருண் வேண்டி கொண்டிருந்த நேரம் அவன் முதுகில் சூரில் என்று யாரோ அறைய "ஐயோ அம்மா.. ", என்று அலறிக்கொண்டு பார்க்க தாரா அவனை தீயாக முறைத்துக்கொண்டிருந்தாள்.

"எதுக்குடி அடிக்கிற..நமக்காக தான வேண்டிகிட்டு இருக்கேன்", என்றான் பாவமாக முத்தை வைத்துக்கொண்டு.

"நமக்காகவா இல்ல உங்களுக்காகவா", என்று அவன் கைகோர்த்து இருப்பதை சுட்டி காட்டினாள்.

"ஐயோ", என்று அலறி கையை பிரித்தவன்.."யாருமா நீ எதுக்கு என் கைய புடிச்சிட்டு இருக்க", என்றான் வேதனையாக.

"நீங்க தான மாமா என் கையை புடிச்சீங்க", என்று அந்த பெண் கோர்த்துவிட.

"நான் இருட்டுல தெரியாம என்னோட டார்லிக்னு நெனச்சு புடிச்சிட்டேன்.. நீ சொல்லி இருக்க கூடாத ", என்றான் அவள் என்ன செய்ய போறாளோ என்ற பயத்துடன்.

"பரவால்ல மாமா நானும் கட்டிக்கிற மொர தான..நீங்க வேண்டுன படியே நடக்கட்டும்", என்று கண்ணடித்துவிட்டு அந்த பெண் வெட்கத்துடன் சிட்டாக பறந்தாள்.

அவள் சென்றதும் தருண் தாராவை" ஹி ஹி.. அவ சும்மா சொல்லிட்டு போறா டார்லிங்..நீ சீரியஸ் ஆகாத", என்று அவன் சொல்லிக்கொண்டிருந்த நேரம் ஒரு பெரிய உருட்டு கட்டையை எடுத்து அவனை அடிக்க போனாள் தாரா.

அவன் பயத்துடன் ஓட அவள் அவனை துரத்தி ஓடினாள்.அனைவரும் அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தனர்.

துரத்தி ஓடியவள் கடைசியில் வீட்டின் பின்புறத்தில் அவன் கைவளவுக்குள் சிக்கிக்கொண்டாள்.அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான் தருண்.

அவன் பார்வையை தாங்காதவள் "வழி விடு போகணும்", என்றாள்.

"போ", என்று அவளை இன்னும் நெருங்கினான்.

"ம்ச்...ப்ளீஸ் தள்ளு..நான் போகணும் ", என்றாள்.

அவள் முகத்தருகில் நெருங்கியவன் "போ" என்று ஹஸ்க்கி வாய்ஸில் பேச அவளுக்கு வேர்த்துவிட்டது.ஒரு நிமிடத்தில் தன்னுணர்வு பெற்றவள் அவனை தன் பலம் கொண்டு தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்.போகும் அவளையே சிரிப்புடன் பார்த்திருந்தான் தருண்.என்கிட்ட எப்படி நடிச்ச இப்போ ஒரு பொண்ணு சும்மா கூட என்ன பத்தி பேசுனதும் அவ்ளோ கோபம் இவங்களுக்கு என்று எண்ணிக்கொண்டான்.

அடுத்து நலங்கு பங்க்ஷன் நடக்க அணைத்து ஏற்பாடும் நடந்தது. மூன்று ஜோடிகளும் நாற்காலியில் ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்தனர். நாற்காலியின் முன்னே அனைத்து வகையான பழங்களும், ஸ்வீட் வகைகளும், பூக்களும்,துணிகளும் நலங்கு க்கு தேவையான பொருட்களும் இருந்தன.

அனைவரும்
மூன்று ஜோடிகளுக்கும் நலங்கு வைத்து விட்டு சென்றார். பெரியவர்கள் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம். மூன்று ஜோடிகளையும் பார்க்க அங்கிருந்தவர்களுக்கு இரண்டு கண்கள் போதவில்லை. ஆனால் பிரணவீ மட்டும் சொல்ல முடியாத அளவிற்கு வருத்தத்தில் இருந்தாள்.

அனைவரின் பெற்றோரும் இருக்க அவள் தன் பெற்றோர்களை நினைத்து வருந்தினாள். இவ்வளவு பெரிய இடத்தில் தன் மகள் திருமணமாகி சென்றிருக்கிறாள்.தங்களால் தங்கள் மகள் வாழ்விற்கு எதுவும் வந்துவிடக் கூடாது என்று அவர்கள் இவளை விட்டு ஒதுங்கி இருக்கிறார்கள். இவை அனைத்தையும் நினைத்து அவள் முகத்தைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு வருந்திக் கொண்டிருக்க.. அப்பொழுது நலங்கு வைக்க வந்த பெண்மணி அவளுக்கு சந்தனம் இட அப்போது அவள் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் அவர்களின் கையில் பட"ஆத்தி என் பொண்ணு ஏன் அழுவுறா.. ஐயோ கடவுளே", என்று அவர் பதற..அவள் சட்டென்று தன் தாயின் குரலில் மகிழ்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

"அம்மா..அப்பா", என்று இருவரையும் பார்த்து கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரோடு அழைத்தாள்.

அவர்களும் கண்ணீருடன் அவளை அணைத்துக்கொண்டனர்."நீங்க எப்படி இங்க ", என்றாள் ஆச்சர்யத்தில்.

அப்பொழுது அவர்கள் கண்ணனை பார்க்க இவளின் பார்வையும் அவனிடம் செல்ல "தேங்க்ஸ் அண்ணா", என்றாள் நன்றியுடன்.

அவங்க பையனோட கல்யாணத்துக்கு அவங்க வராம எப்படிம்மா என்றான் சிரிப்புடன்..அவளும் அவனுடன் சிரித்தாள்.

அவனையே வியப்பாக பார்த்துக்கொண்டு இருந்தாள் சம்யுக்தா.இவனால மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது..எல்லாருக்காகவும் யோசிக்கிறான் என்று அவனை பத்தி நினைத்து கொண்டே இருந்தவளை திரும்பி பார்த்தவன் ஒரு கணம் அவள் பார்வையில் தன்னை துளைத்தான்.அடுத்த நொடி சுற்றம் புரிந்து அவன் திரும்பி விட அப்பொழுதும் அவள் அவனை விட்டு பார்வையை அகலவில்லை.

அப்பொழுது அம்பிகா தான் அவள் அருகில் வந்து பூவை சரி செய்வதுபோல் "போதும் மாப்பிள்ளையை பார்த்தது..சுத்தி இருக்க ஜனத்தை பாரு", என்று அவளை கடித்து விட்டு கண்ணனை பார்த்து சங்கடத்துடன் சிரித்துவிட்டு சென்றார்.

அப்பொழுது தான் தன்னுணர்வு பெற்றவள் "ஐயோ நாம சும்மா இருந்தாவே இவன் என்ன என்னமோ பண்ணுவான்..இப்போ இப்படி பாத்து வச்சி மாட்டிகிட்டோமோ ", என்று உள்ளுக்குள் புலம்பினாள்.

தருணோ கோதையை அழைத்து "சரோஜா தேவி என்னை காப்பாத்த மாட்டியா..இன்னும் எவ்ளோ நேரம் தான் இங்கே இருக்குறது..வெயில்ல பேன் கூட இல்லாம எப்படி இருப்பேன்..", என்று புலம்பினான்.

"அதுக்கு ஏன்டா என்ன கூப்பிடுற....பக்கத்துல உன் பொண்டாட்டி இருக்கா பாரு அவளை கேளு...", என்று தாராவிடம் கோத்து விட்டு சென்றுவிட்டார்.

அவன் திரும்பி தாராவை பார்க்க அவள் பத்ரகாளி போல் காட்சி அளித்தாள்.அவன் பயத்துடன் வாயை மூடிக்கொண்டான்.

அனைத்து நிகழ்ச்சியும் முடிந்து இரவு உணவிற்கு ஊரே வந்து இருந்தது.அவர்களுக்கு பரிமாறியது சிறியவர்கள் கூட்டம்.அப்பொழுது தருணின் முறை பெண் அவனை வட்டமிட தாரா ரௌத்திரம் ஆனால்.தருண் "என்ன வாழ்கடா ", என்று வசனம் பேசும் அளவிற்கு நடுங்கி இருந்தான்.

ப்ரவீனும் பிரணவீயும் மிக அன்பாக காதல் பார்வை பரிமாற்றத்துடன் உணவையும் அனைவருக்கும் பரிமாறினார்கள்.

சம்யுக்தா தழு தழுக்க சேலை கட்டி இருந்ததால் அவள் பல முறை தடுமாறி தடுமாறி நடக்க கடைசியில் கண்ணனின் மீதே மோதினால்.அவளை விழாமல் பிடித்தவன் அவளை பார்த்து "உனக்கு இதே வேலையா போச்சு..நானும் பாத்துட்டே இருக்கேன்..எத்தனை முறை இடிக்குற..கடைசில என்மேல வந்து விழற ", என்று எறிந்துவிழுந்தான்.

அவள் கண்களில் நீர்கோக்க அவனை விட்டு பிரிந்து நடந்தாள்.அவனுக்கு இன்னும் கஷ்டமாக போனது.அவனும் என்னதான் செய்வான்.நலங்கில் அவள் பார்த்த பார்வை இப்பொழுது அவளை அவ்வளவு நெருக்கத்தில் அவள் மீது வரும் சந்தன வாசம் மல்லி வாசம் அவள் மேனி வாசம் அனைத்தும் அவனை தன் வசம் இழக்க செய்கிறது.சுற்றம் அறிந்து அவனை அடக்கியவன் கோவத்தை அவள் மீதே காட்டிவிட்டான்.

ஆஷிக்கும் அணுவும் கட கடவென பரிமாறினார்கள்.வேலையும் சீக்கிரம் முடிய நாளை டான்ஸ் மற்றும் பாட்டு ஃபங்ஷனுக்கு என்ன செய்யலாம் என்று பலவித கனவுகளோட தூங்க சென்றனர்.

ஆக மொத்தத்தில் உருப்படியாக வேலை செய்தது ஆஷிக்கும் அணுவும் மட்டும் தான்.
 
Last edited:
Very interesting epi dear.
Kalyanam na super than.whole family um enjoy pannurathu.Ithil Tarun kuttykalatta vera.
Yedi satha enjoy pannu miss pannitu pinnae feelpannathey.
Interesting dear.
 
Very interesting epi dear.
Kalyanam na super than.whole family um enjoy pannurathu.Ithil Tarun kuttykalatta vera.
Yedi satha enjoy pannu miss pannitu pinnae feelpannathey.
Interesting dear.
Thank u so much..Ha ha..ya tharun kutty kutty kalaattaa panradhu nalla iruku..sadha dhan paavam?
 
Top