Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 15

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 15
சூரியன் தன் செங்கதிர்களை வானில் பூசிக்கொண்டு இருக்க அந்த விடியல் பொதுழுது ஜனார்த்தனன் வீடே கலாட்டாவாக இருந்தது.அனைவரும் எழுந்து குளித்து டவுனுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர்.

"மச்சான் இந்த கலர் ஓகேவா", என்று நூறாவது முறையாக தன்னை பார்த்து கேட்டு கொண்டு இருந்த தருணை முறைத்துக்கொண்டு நின்றுந்தான் கண்ணன்.

அவன் முறைப்பதை சட்டை செய்யாமல் "என்ன மச்சான் அப்படி பாக்கிற..அவ்ளோ சூப்பரா இருக்கா..உனக்கு புடிச்சா கண்டிப்பா உன் தங்கச்சிக்கும் புடிக்கும்..அப்ப இதுவே ஓகே..", ஹி ஹி..என்று பல்லை காட்டிக்கொண்டே சொன்னான் தருண்.

"உன்ன திருத்தவே முடியாது..ஓழுங்கா ஓடிப்போய்டு..நாலு மணில இருந்து இந்த கேள்விய எத்தனை முறை தான் கேட்ப..இப்போ மணி ஆறு..எல்லாரும் ரெடி ஆகி கெளம்பி இருப்பாங்க..நான் ரெடி ஆக வேணாமா..வெளிய போ", என்று கத்தி கொண்டு இருந்தான் கண்ணன்.

அங்கேயே இருந்தால் அடித்துவிடுவான் என்று ஓடிவிட்டான் தருண் கையில் வைத்திருந்த ஷர்டுடன்.

அதற்கு பிறகு கண்ணன் தயாராகி வந்தான்.வந்தவன் பிரவீன் ஏதோ தீவிரமாக யோசித்துக்கொண்டு இருப்பதை பார்த்து அவன் அருகில் வர..அங்கே தருண் இரண்டு ஷர்ட்டையும் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

"இன்னுமாடா முடில உன் செலக்ஷன்..", என்று தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

"இல்ல மச்சான்..இது ரெண்டுல மட்டும் டெசிஷன் எடுக்க முடில", என்று சீரியஸாக சொல்ல.

"அப்பா சாமி..முடிலடா இவன் அலப்பறை",என்று தலைக்குமேல் கையெடுத்து கும்பிட்டான்.

"அட போ மச்சான்..உன் சிஸ் என்ன பாக்கும்போது நான் செம்மையா இருக்க வேணாமா ", என்றான் கண்ணில் ஆசையுடன்.

"ரொம்ப எதிர் பார்ப்போட இருக்க போல ", என்றான் கிண்டலாக.

"பின்ன இல்லையா..உனக்கும் அந்த நிலைமை வரும்போது புரியும் என் கஷ்டம் ", என்று சொல்லிக்கொண்டே முழு வெள்ளை நிற ஷிர்டை அணிந்தான்.

"இந்த வெள்ள ஷர்ட் போடவா இவ்ளோ அலப்பறை..நீ தான் இவ்ளோ பில்டப் குடுத்துட்டு இருக்க..என் தங்கச்சி எப்பவோ ரெடி..அதுவும் அவ எப்பவும் போல தான் இருக்கா..நீ தான் என்ன என்னமோ எதிர் பார்த்து மனசுல ஆசைய வளத்துட்டு சுத்திட்டு இருக்க", என்றான் சிரிப்புடன்.

"அப்படியா..பாத்தியா மச்சான் என் நிலைமையை", என்று அவன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல கண்ணனும் ப்ரவீனும் கல கலப்பாக சிரித்தனர்.

"அனைவரும் தயாராகி கீழே வர மினி பஸ் தயாராக இருந்தது.அந்த நேரம் கண்ணனுக்கு போனில் அழைப்பு வர அதை எடுத்து பேசியவனின் முகத்தில் அத்தனை படபடப்பு."சரி நான் வந்துட்டே இருக்கேன்..", என்று சொன்னவன் ஜனார்தனிடம் சென்று ஏதோ சொல்ல அவரும் சரி நீ போய்ட்டுவா நாங்க பாத்துகுறோம் என்று அவனுக்கு விடை கொடுத்தார்.

"இன்னும் இந்த சம்யுக்தா பொண்ணு வந்த பாடு இல்ல.. " என்று கத்தி கொண்டிருந்தார் அம்பிகா.

"சின்ன பொண்ணு ரெடி ஆய்டு வருவா இரு ", என்றார் அமராவதி.

"தாரா நீ போய் கூட்டிட்டு வாமா அவள ", என்றார் அம்பிகா.

"இதோ போறேன் அத்த ", என்று சம்யுக்தாவை தேடி போனாள் தாரா.

கருநீல ஃபான்சி சேலையில் சம்யுக்தா மிகவும் அழகாக இருந்தாள்.அவளையே பார்த்துக்கொண்டு இருந்த தாரா "ஹ்ம்ம்..இங்க யாருக்கு கல்யாணம்னே தெரில..", என்றாள் கிண்டலாக.

"அதுல என்ன டவுட்..உனக்கு தான்", என்றாள் சம்யுக்தா.

"நீ தான் கல்யாண பொண்ணு மாரி ரெடி ஆகிட்டு இருக்க..கீழ எல்லாரும் ரெடி..உங்க பெரியப்பா தான் கோவமா இருக்காங்க", என்றாள்.

"அச்சோ..நான் செத்தேன்..வா வா சீக்கிரமா போகலாம்", என்று வேக வேகமாக சென்றாள் சம்யுக்தா.

அவள் செல்வதை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தாள் தாரா..அவளை புரியாத பார்வையோடு சம்யுக்தா என்னவென பார்க்க "சும்மா சொன்னேன்..உன் பெரியப்பா எதுவும் சொல்லல", என்று அவளை பார்த்து கண்ணடித்தாள் தாரா.

தாராவை முறைத்துக்கொண்டு அவளை அடிக்க துரத்தினாள் சாயுக்தா..மாடி படியில் தாரா வேகமாக ஓட அவள் பின்னே சம்யுக்தாவும் ஓடினாள்.

"அம்மாஆஆஆ..", என்று கத்திகொண்டே கால் இடறி கீழே விழுந்தாள் சம்யுக்தா.அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் தாரா.அனைவரும் சத்தம் கேட்டு உள்ளே வர அங்கே சம்யுக்தா மயங்கிய நிலையில் விழுந்து இருந்தாள்.

அனைவரும் பதறி அவள் அருகில் சென்று அவளை தூக்கினார்கள்.எவ்வளவு எழுப்பியும் அவள் அசையவேயில்லை.

"தருண் டாக்டர்க்கு போன் பண்ணு", என்றார் ஜனார்த்தனன்.

"இதோ தாத்தா", என்று அவன் டாக்டருக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு சம்யுக்தவின் அருகில் வந்தான்.

அனைவரும் பயத்தில் அழுதுகொண்டு இருந்தனர்.அம்பிகா அழுவதை பார்த்து அங்கே எல்லாரும் கலங்கி விட்டனர்.துளசி தான் அவரை தேற்றினார்.

தருண் சம்யுக்தாவை அவள் ரூமிற்கு தூக்கி சென்றான்.டாக்டர் வந்து அவளை பரிசோதித்துவிட்டு "பயப்பட ஒன்னும் இல்ல..பயத்துல மயங்கி இருக்காங்க..கால்ல தான் அடி பட்டு இருக்கு.. கொஞ்சம் ப்ளீடிங் இருக்கு.. கட்டு போட்டு இருக்கேன்.. ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண கூடாது..இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன்..கொஞ்ச நேரத்துல முழிச்சிடுவாங்கு", என்று சொல்லி கிளம்பி விட்டார்.

அவள் முழிப்பதற்காக அனைவரும் காத்திருக்க அவர்களை சோதிக்காமல் அவள் சீக்கிரமாக கண் விழித்தாள்.அனைவரும் கண்ணீருடன் அவள் அருகே வர..அனைவரையும் பார்த்து புன்னகையித்தவள் "சாரி..ரொம்ப கஷ்டப்படித்திட்டேனே", என்றாள் வலியோட வந்த சிரிப்புடன்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லைடா..உனக்கு இப்போ எப்படி இருக்கு ", என்று அவள் தலையை வருடிக்கொண்டே கேட்டார் ஆதிசேஷன்.

அவள் கண்ணீருடன் "ஒன்னும் இல்லை பெரியப்பா..நான் நல்லா இருக்கேன்", என்றாள்.

"அப்புறம் எதுக்கு அழற", என்றார்.

"எவ்ளோ நாள் ஆச்சு..நீங்க இப்படி என் தலையை வருடி", என்றாள்.

"சரிப்பா..நாம இன்னொரு நாள் போவோம் டவுனுக்கு..சம்யுக்தாவை பார்ப்போம் இப்போதைக்கு", என்றார் ஜனார்த்தனன்.

அனைவரும் ஒப்புக்கொள்ள.."தாத்தா ப்ளீஸ்..என்னால நீங்க போகாம இருக்க வேணாம்..நான் வீட்லே இருக்கேன்..பாத்துக்க தான் ஆள் இருக்காங்களே..நீங்க போய்ட்டு ஈவ்னிக் வர போறீங்க..ஒன்னும் கஷ்டம் இல்லை..இன்னைக்கி போலான அப்புறம் மத்த பிளான் சொதப்பும்..போய்ட்டு வாங்க ப்ளீஸ் ", என்று அவள் கெஞ்ச அனைவரும் கிளம்பிவிட்டார்கள்.அதிலும் கண்ணன் இருக்கும் தைரியத்தில் தான் சென்றார்கள்.

கண்ணனோ தோட்டத்தில் இளநீர் பறிக்க வந்த ஆள் கீழே விழுந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.கொஞ்சம் சீரியசாக இருந்தார் அந்த ஆள்.எனவே அவன் அங்கேயே இருக்கும்படி ஆனது.

பெயின் கில்லரின் உதவியால் சம்யுக்தா மாலை வரை உறங்கிக்கொண்டே இருந்தாள்.வீட்டினர் அழைத்து இருப்பதை அப்போது தான் போனில் பார்த்தாள். மறுபடியும் அவள் அழைக்க லைன் கிடைக்கவேயில்லை.சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அவள் நினைக்க சரியாக அந்த நேரம் வைஷு அவளுக்கு அழைப்புவிடுத்தாள்.அதை அட்டென்ட் செய்து காதுக்கு கொடுத்த சம்யுக்தாவிற்கு ஒரு பேர் அதிர்ச்சி.."சம்யுக்தா கண்ணன் மாமாக்கு ஆபத்து.. அருவி கரைல அந்த மாரி பையன் அவர கொள்ள போறதா, என்னோட தோழியோட அண்ணன் சொன்னாராம்.இங்க சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்க்குனு தான் உனக்கு சொல்றேன்.இப்போ நீ மட்டும் தான் அவர காப்பாற்ற முடியும்", என்று போலியான அழுகையுடன் சொன்னாள்.

அடுத்த நொடி சம்யுக்தா அவளின் வலியும் பொருட்படுத்தாமல் அருவி கரைக்கு சென்றாள்.வீட்டை விட்டு வெளியே வந்த பின்பு தான் தெரிந்தது.வானம் இருட்டிக்கொண்டு கருமேகங்களால் சூழ்ந்து இருக்க காற்று சூறாவளியை போல் வீசிக்கொண்டு இருந்தது.மழை வரவா என்பது போல் காத்திருக்க சம்யுக்தாவிற்கு ஒரு கணம் பயமாகவே இருந்தது.அடுத்த நொடி கண்ணனை நினைத்து அருவியை நோக்கி தன் நடையை போட்டாள்.

அவள் அருவி கரையை சென்றடையும்போது கண்ணன் வீட்டிற்கு வந்தான். வந்தவன் சம்யுக்தாவிற்கு அடி பட்டி இருப்பதை தாத்தா சொன்னாரே அவளுக்கு எப்படி இருக்கோ என்று அவளை பார்க்க சென்றான்.ஆனால் அறையில் அவள் இல்லை..வீடு முழுவதும் அவளை தேடிவிட்டு வந்தவன் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்க அவள் அருவிக்கரைக்கு செல்வதாக தனக்குள் பேசிக்கொண்டே சென்றதாக வேலையாள் சொன்னாள்.

"இந்த மழையில் எதற்கு அவள் போனாள்", என்று கோபத்துடன் கிளம்பினான்.

இருட்டை போர்த்தி இருந்த அருவிக்கரையை பார்க்க அவளுக்கு பயமாக இருந்தது.கண்ணன் எங்கே என்று அவள் தேடிக்கொண்டு இருக்க "யார கண்ணு தேடுற ", என்று கர கர குரலில் மாரி கேட்டுகொண்டு நின்றிருந்தான்.

அந்த நேரத்தில் அவனை அங்கு எதிர் பாக்காதவாள் பயத்துடன் நொண்டி நொண்டி பின்னே செல்ல "என்ன செல்லம் கால்ல அடி பட்டு இருக்கா..மாமா பாக்கவா", என்று கேட்டுக்கொண்டே அவளை நெருங்கினான் மாரி.

"ச்சி..தள்ளி போடா நாயே ", என்றாள் சம்யுக்தா.

"மாமாவை ஏன் கண்ணு திட்ற ", என்றான் வழிசலுடன்.

அவள் அருவருப்பாக மூஞ்சை திருப்பிக்கொள்ள.."ஓஹோ..உனக்கு அந்த கண்ணன் பையன் மட்டும் தான் மாமால.. அன்னைக்கு ரோட்ல அப்படி கத்தி சொன்னல..இப்போ கூப்டு வரானானு பாக்கலாம்", என்று சத்தமான சிரிப்புடன்.

அவன் அகோரா சிரிப்பு அவளை இன்னும் பயப்பட செய்ய "என் வாழ்க்கை அவ்வளவு தான்..இவனின் கையில் சிக்கி சாவதை விட இந்த ஓடும் ஆற்றில் விழுந்து சாகலாம் என்று முடிவு செய்து அவள் விழ போக "யுக்தா ", என்று கண்ணன் அழைப்பது போல் தோன்றியது அவளுக்கு.

ஒரு கணம் நின்று பார்த்தவள் மாரியின் பின் கண்ணன் நின்றிருப்பதை பார்த்தாள்.மனதில் எல்லையில்லா ஆனந்தம்.

"மாமா..", என்று கத்தினாள் மாரியிடம் ஒரு ஏளன சிரிப்பை சிரித்துக்கொண்டே.

மாரி ஒன்றும் புரியாமல் திரும்பி பார்ப்பதற்குள் அவனை துவைத்தெடுத்து இருந்தான் கண்ணன்.

"ஐயோ கண்ணா இதுக்குமேல அடிச்சா நான் தாங்க மாட்டேன்..என்ன விட்ரு..இனிமே யார்கிட்டயும் இப்படி நடந்துக்க மாட்டேன்", என்று கெஞ்ச கண்ணன் அப்பொழுதும் விடவில்லை

சம்யுக்தா மயங்கி கீழே சரிய போக கண்ணன் ஓடி சென்று அவளை தங்கினான். அதற்குள் மாரியும் தப்பித்து ஓடிவிட்டான்.

சம்யுக்தாவை வீட்டிற்கு தூக்கிக்கொண்டு சென்றான் கண்ணன்.அவளை தன் அறையில் படுக்க வைத்துவிட்டு வேலையாட்களை அழைத்து சூடு தண்ணீர் கேட்டு அவளுக்கு புகட்டினான்.நீங்க கிளம்புங்க..சாப்பாடு ரெடி தானா..நான் பாத்துக்கிறேன் என்று அனைவரையும் அனுப்பிவிட்டான்.

அறைக்கு சென்றவன் சம்யுக்தா குளுரில் நடுங்குவதை பார்த்து நனைந்திருந்த அவள் உடையை மாற்றிவிட்டான்.கால் கைகளை சூடு பறக்க தேய்த்துவிட்டான்.இருந்தும் அவள் நடுங்கிக்கொண்டு இருக்க டாக்டர் இப்பொழுது இந்த மழையில் வருவது கடினம்..வேறு வழி இல்லை என்று ஒரு போர்வையை எடுத்தவன் அவளுக்கு போர்வையாகி அந்த போர்வையை அவர்களுக்கு போர்வையாக்கினான். அங்கே கட்டுப்பாட்டை இழக்காத ஒரு அழகான கூடல் நிகழ்ந்தது.

மெல்ல மெல்ல அவள் உடலின் சூடு தணிந்தது.அவளை அணைத்தபடியே அவனும் உறங்கி இருந்தான்.


முழிப்பு தட்ட சம்யுக்தா மெதுவாக கண்களை திறந்தாள்.ஏதோ பாரமாக இருப்பதுபோல் தோன்ற தன் மேல பார்த்தவளுக்கு கண்ணனின் கை அனைத்திருப்பது தெரிய அதிர்ச்சியில் உறைந்தாள்.
 
Very nice epi dear.
Ithu enna puthu twist. Ethir parkalave illa nalla than irruku intha twist.
Ayoda intha Vaishu sonthama thakku kuzhi vettitala? Avanga randu peraiyum serthuvachu.
Interesting dear.
 
Very nice epi dear.
Ithu enna puthu twist. Ethir parkalave illa nalla than irruku intha twist.
Ayoda intha Vaishu sonthama thakku kuzhi vettitala? Avanga randu peraiyum serthuvachu.
Interesting dear.
Tnk u so much dear?
 

Advertisement

Top