Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 14

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
hlo frnds..
sorry romba late ah update kuduthu iruken..bcoz covid injection potu iruken..4 days ah mudila..hand pain..mannichi rply kudunga..tnk u


உன்னோடு கைகோர்க்க 14
அனைவரும் சம்யுக்தாவை நோக்கி வர அவள் பயத்துடன் அவர்களை பார்த்திருந்தாள்.இவனால இன்னைக்கு மாட்டிகிட்டோம் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

"என்ன ஆச்சுமா..ஏன் கத்துன", என்று வினவினார் ஜனார்த்தனன்.

"ஒன்னும் இல்லை தாத்தா..ஏதோ கடிச்ச மாரி இருந்தது..அதான் கத்திட்டேன்", என்றாள் தயக்கத்துடன்.

"ஐயோ..எங்க காமி..வலி இருக்கா சதா", என்று பதறிக்கொண்டு கேட்டார் துளசி.

இதை பார்த்ததும் சம்யுக்தாவின் குடும்பத்திற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.தங்கள் பெண் ஒரு அன்பானவர்களுடன் தான் இருந்து இருக்கிறாள் என்று.

"இல்லை ஆண்ட்டி..அவ்ளோ வலிலான் இல்ல", என்றாள் அவரின் பதற்றத்தை பார்த்து.

"சரி தள்ளு..நான் என்னனு பாக்குறேன்", என்று ஆஷிக் அவளை நகர்த்திக்கொண்டு முன்னே வர சம்யுக்தா வெகுவாக பயந்துபோனாள்.

"என்ன ஆச்சு", என்று சத்தம் வந்த திசையில் அனைவரும் பார்க்க அங்கே வாசலில் கண்ணன் நின்றிருந்தான்.

"ஒன்னும் இல்ல கண்ணா..நம்ப சதாவ என்னமோ கடிச்ச மாரி இருந்ததாம்..அதான் பாத்துட்டு இருக்கோம்", என்றார் கோதை பாட்டி.

அவனை பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தாள் சம்யுக்தா.ஆனால் அவனோ அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

"தாத்தா இவங்களான் யாரு ", என்று ஒன்றுமே தெரியாதது போல் கேட்டுக்கொண்டு இருந்தான் கண்ணன்.

"இவங்க சம்யுக்தாவோட வீட்டு ஜனங்க கண்ணா..தாரா கல்யாணத்துக்கு அழைச்சேன்".

"அனைவருக்கும் வணக்கம் வைத்தான் கண்ணன்".

அவனுடைய மரியாதையான குணம் அனைவருக்கும் பிடித்துவிட்டது.அதிலும் குறிப்பாக ஆதிசேஷனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

"அட பாவி...என்னமா ஆக்ட் பன்றான்..இவ்ளோ நேரம் இவன் பண்ண வேலையை சொல்லி இருந்தா அப்போ தெரிஞ்சி இருக்கும்..ஹிட்லர்", என்று அவனை மனதில் அர்ச்சனை செய்து கொண்டே ஜனார்தனிடம் வந்தாள் சம்யுக்தா.

"தாத்தா நேத்து வீட்டுக்கு போகணும்னு கேட்டதுக்கு நாளைக்கு காலைல போனு சொன்னிங்க..இவங்கள வரவழைக்க தான ",என்று அவரை பொய்யாக முறைத்து கொண்டு கேட்டாள்.

"ஆமா மா..உங்க பாட்டி ஐடியா தான் ", என்று கோதை பாட்டியை பார்த்துகொண்டே சொன்னார்.

கோதையை கட்டிக்கொண்டு ரொம்ப தேங்க்ஸ் பாட்டி என்று அவரின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சரி எல்லாரும் குளிச்சிட்டு சாப்பிடுங்க..கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு..பத்து நாள்ல எல்லாம் முடிக்கணும் போங்க போங்க என்றார் ஜனார்த்தனன்.

"கண்ணா மாடில இருக்க ரெண்டு அறையும் பசங்களுக்கு கொடுத்துடு..கூட்டிட்டு போ ", என்று சொன்னவர்.."ஆதிசேஷ நீயும் தம்பியும் கீழ இருக்க ரெண்டு அறையில தங்கிக்கோங்க", என்று ஜனார்த்தனன் சொன்னதும்.."சரிங்கபா", என்று அவர் மறு பேச்சு பேசாமல் நகர்ந்தார்.

இதை பார்த்ததும் சம்யுக்தாவிற்கு மிகவும் ஆச்சர்யம்..இதுவரை அவர் யாருக்கும் இவ்வளவு பணிவு காட்டியதில்லை.எப்பொழுதும் கம்பீரமாக இருக்கும் தன் பெரியப்பாவா இப்படி பவ்யமாக பேசுகிறார் என்று இருந்தது.அதை விட அவளுக்கு சிரிப்பு தாங்க வில்லை.ஆனாலும் சூழ்நிலை கருதி சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

அவளின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட அம்பிகா அவளை கிள்ளினார்.

"ஸ்ஸ்ஸ்..ஆஆ..அம்மா நீங்க இப்ப கூட இப்படி தான் இருப்பிங்களா..பொண்ண பிரிஞ்சி இருந்த மாதரி ஒரு பீலிங்ஸும் இல்ல உங்க கிட்ட", என்று அவள் பொய்யாக கோபித்துக்கொள்ள அவளின் காதை திருகியபடி "உனக்கு என்ன தெரியும் அவளோட கஷ்டம்..இந்த மூனு மாசம் மூனு யுகம் மாரி போச்சு அவளுக்கு..உன்ன நெனச்சி அவ்ளோ கஷ்டப்பட்டது அவ தான்..அத புரிஞ்சிக்கோ", என்று கோபமாக பேசினார் அமராவதி.

"ஐயோ..பெரிம்மா வலிக்குது விடுங்க..அப்போ அம்மா மட்டும் தான் நெனச்சி இருக்காங்க..நீங்க இல்ல ", என்று அவள் வேண்டுமென்றே கோப பட.. "போடி போக்கிரி..இனிமே இப்படி பண்ண உன்ன என்ன பண்ணுவேன் தெரியாது..நீ இல்லாம வீடு வீடவே இல்ல..எங்கள விட்டு நீ மட்டும் ஜாலியா இருந்து இருக்க..பாத்தாவே தெரிது..ஒரு சுத்து ஏறிடுச்சு ஒடம்பு", என்று அவளை கிண்டல் செய்தார்.

"போங்க பெரிம்மா", என்று அவள் வெட்கத்துடன் தன் அண்ணன்களுடன் மாடிக்கு சென்றாள்.

போகும் அவளை பார்த்துக்கொண்டு இருந்த இரண்டு தாய்மார்களுக்கும் அவள் முகத்தில் ஏதோ ஒன்று புதிதாக இருப்பது போல் தோன்றியது.எதுவாக இருந்தாலும் நல்லதாக முடியவேண்டும் என்று நினைத்துக்கொண்டனர்.

பெரியவர்கள் அனைவரும் தங்கள் அறைக்கு சென்றுவிட்டனர்.சிறியவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டே அவர் அவர் அறைக்கு சென்றனர்.

அனைவரும் குளித்து முடித்து வர உணவு தயாராக இருந்தது.வேலையாட்கள் நான்கு ஐந்து பேர் சேர்ந்து உணவு சமைத்தனர்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து கூடத்தில் வந்து அமர்ந்தனர்.

"கல்யாண வேலைகள் என்ன என்னனு சொன்னிங்கன்னா எல்லாரும் ஆளுக்கு ஒன்ன பிரிச்சி செஞ்சிடலாம்", என்று ஜனார்தனிடம் கேட்டார் ஆதிசேஷன்.

"என்னப்பா இருக்க போகுது..இவ்ளோ பெரிய வீடு இருக்கும்போது மண்டபம் தேவை இல்ல..சமையலுக்கு சாமான் காய்கறி எல்லாம் நம்ப தோட்டத்துல கடையில இருந்தே எடுத்துக்கலாம்.பந்தல் வேலையும் ஊர்க்காரங்க பாத்துக்கறேன்னு சொல்லிட்டானுவுங்க..பத்திரிகை லான் எதுவும் இல்ல..ஊரே இங்க தான் இருக்க போகுது..அப்புறம் எதுக்கு பத்திரிகை..", என்று அவர் சொல்லிகொண்டே போக..

"அப்போ நமக்கு என்ன தான் வேலைப்பா", என்றார் ஆதி சிரித்துக்கொண்டே.

"டவுனுக்கு போய் ஜவுளி நகை எடுக்குறது..அப்புறம் சந்தோஷமா கல்யாணத்துல கலந்துக்குறது..அவ்ளோதான்..மத்தத ஊரே பாத்துக்கும்யா", என்று அவர் பெருமையுடன் சொல்ல சம்யுக்தாவின் குடும்பமே ஆச்சர்யமாக பார்த்தனர்.

அதை உணர்ந்த ஜனார்த்தனன்.."ஊரே எங்களுக்காக செய்யும்னு சொல்றேன்னு பாக்குறீங்களா..எல்லாம் நம்ப கண்ணனுக்காக..அவன் தான் படிப்பே இல்லாத இருந்த ஊற இப்போ மொத்தமா மாத்தி இலவசமா ஸ்கூல் நடத்தி எல்லா புள்ளைங்களையும் படிக்கவச்சிட்டு இருக்கான்.அதான் அவனை ஊரே அப்படி மதிக்குது..அதுல எனக்கும் பெருமை தான்", என்றார்.

அனைவரின் பார்வையும் கண்ணனின் மீது தான் இருந்தது.ஆனால் அவனின் முகத்தில் அந்த பெருமிதம் துளியும் இல்லை.அந்த அடக்கம் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.சம்யுக்தாவின் மனதில் இப்பொழுது அவன் இன்னும் நெருக்கமானான்.

"தாத்தா நான் ஒரு ஐடியா வச்சி இருக்கேன்..சொல்லவா ", என்று பெரியப்பா எங்கே திட்டிவிடுவாரோ என்று பயத்துடன் சம்யுக்தா கேட்க.."தாராளமா சொல்லுமா", என்றார் ஜனார்த்தனன்.

"நார்த் இந்தியன் ஸ்டையில்ல நாம புதுசா பண்லாமா", என்றாள்.

"அது எப்படிம்மா", என்றார் அவர் புரியாமல்.அனைவரும் சம்யுக்தாவை புரியாமல் பார்க்க "ஐந்து நாள் கொண்டாட்டம் தாத்தா..முதல் நாள் நாம பண்ற மாரி பந்தக்கால் நற்றுவோம்..அப்புறம் நலங்கு..மறு நாள் டான்ஸ் பார்ட்டி..மூன்றாவது நாள் மருதாணி போடற பங்க்ஷன்..நாலாவது நாள் எங்கேஜ்மெண்ட்..கடைசி நாள் கல்யாணம்..", எப்படி என்பதுபோல் அவள் அனைவரின் முகத்தை பார்க்க..

"சூப்பர்...எல்லோ ரோஸ்..", என்று அவளுக்கு கைகொடுத்தான் தருண்.பிரவீனும் ஆமோதிக்க ஆஷிக்கும் சரி என்றான்.

சிறியவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க பெரியவர்களும் ஒப்புக்கொண்டனர்.

"சரி அப்போ நாளைக்கு எல்லாரும் டவுனுக்கு கெளம்பி போவோம் ஜவுளி நகை வாங்கிடலாம்", என்றார் ஜனார்த்தனன்.

அன்றைய பொழுது அனைவரும் மகிழ்ச்சியாக கழித்தனர்.ஆனால் வைஷுவிற்கு தான் எரிச்சலாக இருந்தது.

"அம்மா இந்த சம்யுக்தாவை வீட்டை விட்டு அனுப்பணும்னு நெனச்சி இருந்தா இப்போ அவ குடும்பமே இங்க வந்து உக்காந்து இருக்கு..நீங்களும் சும்மாவே இருக்கீங்க ", என்று பார்வதியிடம் கத்திக்கொண்டிருந்தாள் வைஷு.

"பொறுமையா இரு வைஷு..இந்த கல்யாணம் முடிஞ்சதும் எல்லாம் நம்ப கைக்கு வந்துடும்..அப்புறம் வச்சிக்கலாம் இவளுக்கு", என்று பார்வதி சொல்ல.. வைஷு வேறு ஏதாவது திட்டம் தீட்ட முடிவெடுத்தாள்.

"பிரவீன் நான் வந்ததும் கோதை பாட்டியை கட்டிகிட்டேன்..அதை பார்த்தும் யாரும் எதுவும் கேக்காம இருக்காங்க", என்று குழப்பத்துடன் பிரணவீ கேட்துக்கொண்டு இருந்தாள் அவர்கள் அறையில்.

"அதுல என்ன இருக்கு..உன்னோடு ஊரு எதுன்னு ஒருநாள் பெரியப்பா கேட்டார்..நான் சொன்னேன்..அப்போ எல்லாரும் அங்க தான் இருந்தாங்க..அதுனால நீ பாட்டிய கட்டிக்கிட்டதும் அவங்களுக்கு புரிஞ்சி இருக்கும் ", என்றான் இயல்பாக.

"அப்போ சம்யுக்தா இங்க வந்ததுக்கு நான் தான் ஹெல்ப் பண்ணேனு புரிஞ்சி இருக்கும்ல", என்றாள் கவலையுடன்.

"ஆமா..அதுக்காக நீ ஒன்னும் பீல் பண்ணாத ", என்றான்.

"தெரிஞ்சும் எல்லாரும் அமைதியா இருக்காங்க..எவ்ளோ ஸ்வீடா இருக்காங்க எல்லாரும்..இப்போ தான் புரிது நீங்க எப்படி இவ்ளோ நல்லவரா இருக்கீங்கனு", என்றாள்.

"ஹோ..மேடம்கு என்ன பத்தி யோசிக்க கூட செய்றாங்கு போல ", என்று அவளை நெருங்கி கொண்டே கேட்டான்.

பிரணவீ வெட்கத்துடன் அவனை தள்ளி விட்டு ஓடிவிட்டாள்.பிரவீன் சிரிப்புடன் அவளை பார்த்திருந்தான்.

"மச்சி வாங்க ஒரு கட்டிங் போடுவோம்", என்று தருண் பிரவீனை பார்த்து கேட்க..பிரவீன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு" என்ன ப்ரோ இப்படி பேசுறீங்க வீட்டுக்குள்ள இருந்துட்டு", என்றான் அதிர்ச்சியில்.

"அப்படி என்ன மச்சி சொன்னேன்..வெயிலுக்கு சில்லுனு ஒரு மேங்கோ ஜூஸ் அடிக்கலாம்னு கேட்டேன்..அது ஒரு குத்தமா", என்றான் ஒன்றும் தெராயாதவனை போல்.

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் நின்றவன்..பிறகு அவனை அடிக்க துரத்தினான். அப்பொழுது அங்கு வந்த ஆஷிக் அவர்களை தடுக்க..மூச்சிரைக்க நின்றவர்களை பார்த்து என்ன ஆச்சு என்று கேட்டான்.

"அண்ணா இவன் என்ன பண்ணான்னு தெரியுமா" என்று அவன் சொன்னதை சொல்ல இப்பொழுது இருவரும் சேர்ந்து அவனை மொத்தினர்.

"ஐயோ ப்ரோ விட்ருங்க..மணமகனை இப்படி அடிக்கிறிங்களே..இது நியாயமா", என்று வராத கண்ணீரை துடைத்துவிட்டான்.

அவன் நடிப்பை பார்த்து இவர்கள் இருவரும் அவனை அனைத்துக்கொண்டனர்.

கண்ணனும் அவர்கள் அருகில் வந்து "நீ திருந்தவே மாட்ட மச்சான்..இவனை எதுக்கு விட்டிங்க..இன்னும் ரெண்டு போட்டு இருக்கனும்..அப்போ தான் அடங்குவான்..", என்றான் சிரித்துக்கொண்டே.

பின் நால்வரும் இனைந்து நிறைய கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்.

இங்கே பெண்களும் சம்யுக்தாவின் அரட்டையில் லயித்து இருந்தனர்.

"அண்ணி நீங்க இந்த கலர் வாங்கிக்கோங்க..தாரா நீ இந்த கலர் சேரி வாங்கிக்கோ..சின்ன அண்ணி நீங்க இந்த கலர்", என்று அவர்கள் நாளை செல்லும் பர்ச்சேஸ் கதைகளை பேசி கொண்டு இருந்தனர்.

"சதா அப்போ உனக்கு என்ன கலர் ", என்றாள் தாரா.

"சதா..இந்த பேரு கூட நல்லா இருக்கு சம்யுக்தா", என்றாள் அணு.தாரா அவளை பார்த்து சிரித்தாள்.

"உனக்கு என்ன கலர்" என்றாள் தாரா விடாமல்.

"எனக்கு நான் இன்னும் யோசிக்கவே இல்லையே ", என்றாள் அசட்டு சிரிப்புடன்.

"எங்க எல்லாருக்கும் சொல்லிட்டு உனக்கே யோசிக்கலயா நீ ", என்றாள் பிரணவீ.

"ஹி ஹி ஹி..நைட் யோசிச்சி நாளைக்கு சொல்றேன் ", என்றாள் பல்லை காட்டிவிட்டு.

"போதும் போதும்..நாளைக்கு பாத்துக்கலாம்..இப்போ சாப்பிட்டு வந்து படுப்போம்..நாளைக்கு சீக்ரம் போகணும்னு அத்த சொன்னாங்க..", என்று அணு சொன்னாள்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு பின்பு படுக்க சென்றுவிட்டனர்.காலையில் சீக்கிரமாக எழுவதற்காக.

அனைவரும் தூங்கிவிட சம்யுக்தாவிற்கு மட்டும் ஏதோ பாரமாக மனது அழுத்தியது..என்னவென்று சொல்ல தெரியவில்லை அவளுக்கு..ஏதோ தப்பாக நடக்க போவதுபோல் உணர்ந்தாள்.திரும்பி தாராவை பார்த்தாள்.அவள் நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்.

"கடவுளே இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும்", என்று கண்ணனிடம் வேண்டினாள்.பாவம் அவளுக்கு தான் ஆபத்து வர போகிறது என்று அறியாமல்.
 
Very interesting epi. Kalyana kondatam start agiducha, jolly.youngsters looty viruvirupa poguthu. Nice. Waiting eagerly for next epi.
 
Top