Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 12

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 12
தனது அறைக்கு சென்ற சம்யுக்தா பின்பக்கம் இருந்து தாராவை அணைத்துக்கொண்டாள்.ஒரு நிமிடம் அதிர்ந்த தாரா சம்யுக்தாவின் குரலைக் கேட்டு ஆசுவாசமானாள்.

"தாரா நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.உனக்கு மேரேஜ் அதுவும் யார் கூட", என்று கேட்டு கண்ணடித்தாள்.

அவளை திரும்பி பார்த்த தாரா எந்த உணர்ச்சியும் இல்லாமல்" யார்கூட ", என்றாள்.

"என்ன நீ இப்படி சுரத்தே இல்லாமல் கேட்குற", என்றாள் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே.

"யாருனு தெரிஞ்சா தான எதனா ரியாக்ஷன் குடுக்க முடியும்", என்றாள்.

"ஓஹோ..அப்படியா..நீ இப்படியே இரு..ஒரு ரியாக்ஷனும் வேண்டாம்", என்று சொல்லிடுவிட்டு சம்யுக்தா தன் சேலையை கட்டிலில் உட்கார்ந்து மடிக்க தொடங்கினாள்.

சிறிது நேரம் பொறுத்து பார்த்த தாரா"சரி சொல்லு..யாருனு", என்று வராத சிரிப்பை இழுத்து பிடித்து கேட்டாள்.

"இதுக்கு சிரிக்காமலே இருக்கலாம்", என்றாள் கிண்டலாக.

"விளையாட்டு போதும் சதா..யாருனு சொல்லு", என்றாள்.

"போன போகுதுனு சொல்றேன்..என்னோட அண்ணா தான் மாப்பிள்ளை", என்றாள் அவ்வளவு சந்தோஷத்துடன்.

தாரா புரியாத பார்வையோடு "உன் அண்ணாவா", என்றாள் குழப்பத்துடன்.

"ம்ம்..ஆமா..ஏன் என்னோட அண்ணாவ லான் மேரேஜ் பண்ணிக்க மாட்டியா", என்றாள் சிரிப்புடன்.

தாராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவள் தர்மசங்கடமாக சம்யுக்தாவை பார்க்க அவளின் நிலையை பார்த்த சம்யுக்தா கல கலவென சிரித்தாள்.

தாரா பாவமாக முகத்தைவைத்துக்கொண்டு சம்யுக்தாவை பார்க்க "என்னோட தருண் அண்ணாக்கு என்ன கொறச்சல்..சரி விடு உனக்கு பிடிக்கலைன்னு துளசி அத்த கிட்ட சொல்லிட்டு வரேன்", என்று சொல்லிக்கொண்டே வெளியே செல்ல பார்த்தாள்.

ஒரு நிமிடம் தாராவிற்கு தான் சரியாக தான் கேட்டோமோ என்று யோசித்தாள்.சம்யுதாவின் பேச்சை கேட்டவள் எங்கே அம்மாவிடம் வேண்டாம் என்று சொல்லிவிட போகிறாள் என்று அவளை துரத்திக்கொண்டு அவள் பின்னெ ஓடினாள்.

"சதா நில்லு..உன்ன இன்னைக்கு விட மாட்டேன்..என்ன எப்படி தவிக்கவிட்டுட்ட..நில்லு ஓடாத..", என்று கத்திகொண்டே தாரா சம்யுக்தாவை துரத்தினாள்.

"முடிஞ்சா பிடிச்சுக்கோ..", என்று அவளுக்கு விளையாட்டு காட்டி ஓடினாள்.

சம்யுக்தா மாடிப்பபையின் கீழே கால் வைக்க போக சமையல் அறையில் இருந்து தண்ணீர் அருந்திவிட்டு வந்த வைஷுவின் மேல மோதினாள்.சம்யுக்தா கைப்பிடியை பிடித்து தன்னை சமாளித்துக்கொள்ள வைஷு தொப்பென்று கீழே விழுந்தாள்.அவள் விழவும் தாராவும் சம்யுக்தவின் பின் வந்து நின்றாள்.

வைஷு கையில் இருந்த தண்ணீர் முழுவதும் அவள் தலையிலே கொட்டிக்கொண்டாள்.அவள் முக சாயம் எல்லம் கலைந்து பார்க்கவே சிரிப்பாக இருந்து சம்யுக்தாவிற்கு.சிரிப்பை அடக்க முடியாமல் அவள் விழுந்து விழுந்து சிரிக்க தாராவும் அவளுடன் சிரித்தாள்..வைஷு எழ முடியாமல் தவிக்க தாரா தான் தன்னை கட்டுபடித்துக்கொண்டு அவளுக்கு கைகொடுத்தாள்.

எழுந்து நின்ற வைஷு சம்யுக்தாவை கோவமாக பார்த்து "கண்ணு தெரியல..இப்படியா வந்து இடிப்ப..இடிச்சிட்டு சிரிப்பு வேறயா உனக்கு..ஏற்கனவே உன்மேல் சம கோவத்துல இருக்கேன்..இப்போ இது வேற..இருடி உனக்கு இருக்கு", என்று விரலை காட்டி அவளை எச்சரித்தாள்.

அவள் விரலை பிடித்து திருப்பிய சம்யுக்தா "பிள்ளைப்பூச்சிலான் பேச ஆரம்பிச்சிடுச்சுப்பா..தாங்கல..போய் உங்க அம்மாவை வர சொல்லு..போ போ.. ", என்று அவள் கையை விட்டுவிட்டு தலையில் தட்டிவிட்டு சென்றாள்.

வலியால் முகத்தை சுழித்துகொண்டே போகும் சம்யுக்தாவை வன்மமாக பார்த்துக்கொண்டு நின்றாள் வைஷு.

சம்யுக்தாவும் தாராவும் சமையல் அறைக்கு சென்றனர்.தாராவின் முகத்தில் தெரிந்த சந்தோஷமே கோதைக்கும் துளசிக்கு புரியவைத்தது அவளுக்கு தருணை மணக்க விருப்பமென்று.

"என் பேத்திக்கு கல்யாண கலை வந்துடுச்சு போலயே", என்று அவள் கன்னம் வழித்து திருஷ்டி சுத்தினார்.

"சும்மா இருங்க பாட்டி", என்று வெட்கமுடன் சொன்னாள் தாரா.

"தாரா வெட்க பட்ரியா",என்று அவளை இன்னும் சீண்டினாள் சம்யுக்தா.

அவளை ஒரு அடி போட்டால் தாரா.துளசி வந்து தாராவை அணைத்து கொண்டார்.அவர் கண்களில் இருந்து நீர் வர அதிர்ச்சியாக அவரை நிமிர்ந்து பார்த்த தாரா பதட்டதுடன் "என்ன ஆச்சுமா..ஏன் அழறிங்க", என்றாள்.

"சந்தோஷத்துல அழறேன்.உனக்கு கல்யாணம் ஆகிட்டா எங்க எப்படி இருப்பியோனு கவலையா இருக்கும்..நிறைய நாள் தூங்மலான் இருந்து இருக்கேன்.உன் அப்பாவும் என்கிட்ட சொல்லி புலம்பாத நாள் இல்ல..ஆனா இப்போ அந்த கவலை இல்லை.தருண் உன்ன ரொம்ப நல்லா பத்துப்பான்.நீயும் எங்கள விட்டுட்டு போக வேண்டாம்.. அதுனால வந்த கண்ணீர்", என்றார் சிரிப்புடன்.

அதை கேட்டதும் சம்யுக்தாவும் தாராவும் அழுகையுடன் ஒரு சேர "அத்த..அம்மா ", என்று சொல்லிக்கொண்டே துளசியை கட்டிக்கொண்டனர்.

இதை பார்த்த கோதை பாட்டியின் கண்களிலும் கண்ணீர்..கடவுளே நான் நினைக்கிறது நடக்கணும் என்று மனதார அந்த மாய கண்ணனிடம் வேண்டிக்கொண்டார்.

"என்ன மாப்ள..அவளை மாதிரி நீங்களும் எப்பவும் ரோஜா தோட்டத்துலே இருக்கீங்க", என்று தருணை கேட்டுகொண்டே அவன் பக்கத்தில் வந்தமர்ந்தான் கண்ணன்.

அவனை பார்த்த தருண் மெலிதான சிரிப்புடன் "இங்க இருந்தா மனசு லேசா இருக்கு.. அதான் மச்சான் ", என்றான்.

இது தான் தருண்..உள்ளே அப்படி சொல்லிவிட்டோமே என்று கவலை இல்லாமல்..கண்ணன் என்ன நினைத்து இருப்பானோ என்றெல்லாம் யோசிக்காமல் இயல்பாக பேசுகிரான்.

"வாழ்த்துக்கள் மாப்பிளை", என்றான் கண்ணன்.

அவனை புரியாமல் பார்த்தான் தருண்.

"உங்க லவ் சக்ஸஸ் ஆயிடுச்சு", என்றான் மலர்ச்சியுடன்.

அதை கேட்டதும் அவனை கட்டிக்கொண்டான் தருண்.ரொம்ப தேங்க்ஸ் மச்சான் என்றான் கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு.

அவன் அழுவதை பார்த்த கண்ணனுக்கு புரிந்தது தன் தங்கையை அவன் எந்த அளவு விரும்புகிறான் என்று.அவனை அனைத்த கண்ணன் "ஆனா ஒரு சின்ன வருத்தம்", என்று வருத்தமாக சொன்னான்.

"என்ன மச்சான் ".

"எங்க எல்லாருக்கும் தாராவ உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் ஆசை.அத முதல்ல சொன்னது நம்ப தாத்தா தான்.உங்க அம்மா என்ன சொல்வாங்களோனு தான் பயந்து இந்த எண்ணத்தை விட்டோம்.ஆனா நீ அத புரிஞ்சிக்காம தாத்தாவை அப்படி பேசிட்ட", என்றான் வருத்தமாக.

"என்மேல தான் தப்பு..நான் கோவத்துல பேசிட்டேன்..எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்", என்றான் மனதில் இருந்து வருந்தி.

"பரவாயில்லை மாப்ள..யாரும் கோவப்பட மாட்டாங்க..பிரீயா விடுங்க ", என்று அவன் தோலை தட்டினான்.

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு பின் வீட்டிற்கு சென்றனர்.

அனைவருக்கும் மகிழ்ச்சியே ஆனால் தருணும் தாராவும் பேசிக்கொள்ளவே இல்லை.அதற்கு காரணம் இருவருக்கும் இருக்கும் ஈகோ.அவனாக வரவேண்டும் என்று அவளும்..அவளாக வரவேண்டும் என்று அவனும் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இன்னும் இரண்டு மாதத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இருப்பதால் இவர்களின் கவனம் முழுவதும் ஸ்கூலின் மீதே இருந்தது.

பள்ளியில் இருக்கும்பொழுது கண்ணன் எப்பொழுதும் இருக்கும் அதே கம்பீரம் கடின முகத்துடனே இருப்பான்.சம்யுக்தாவிடம் கூட ஒரு ஆசிரியராய் பொதுவான பேச்சுக்கள் மட்டுமே.அவளுக்கே ஆச்சர்யமாய் இருக்கும்.இவனா வீட்டில் நம்மிடம் அப்படி நடந்து கொள்பவன் என்று.

சனி ஞாயிறு அன்று கூட பள்ளிகள் இருக்க அவர்களின் நாட்கள் வேகமாய் உருண்டோடியது.தருணும் பள்ளிக்கு கண்ணனுடன் சென்றான்.ஆனால் அனைவரும் மாணவர்கள் மீதே கவனம் வைத்தனர்.தங்கள் சொந்த விஷயம் பள்ளிக்கு வெளியில் என்பதில் உறுதியாய் இருந்தனர்.

நாட்கள் கரைந்ததே தவிர இரு பெண்களின் உள்ளம் மட்டும் கரையவே இல்லை.ஆண்கள் தான் இறங்கும்படி ஆனது.

வீட்டில் நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் தருண் தாராவிடம் எவ்ளவோ பேச முயற்சி செய்தான்.அவள் கொஞ்சம் கூட இறக்கம் காட்டவில்லை.அவள் காலில் கூட விழுந்துவிட்டான்.அவள் இரக்கமே காட்டவில்லை அவனுக்கு.மிகவும் சோர்ந்து போனான் தருண்.ஒரு அளவிற்கு மேல் அவனுக்கு பொறுமை இழந்து போடி என்று விட்டுவிட்டான்.

ஒரு நாள் சம்யுக்தாவை பார்க்க அவர்கள் அறைக்கு சென்றான் தருண்.கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றவன் தாரா சேலை கட்டிக்கொண்டு இருப்பதை பார்த்து அப்படியே சம்பித்து நின்றுவிட்டான்.அவளுக்கும் அதே நிலை தான்.தன் உணர்வை அடக்க முடியாமல் அவளை பின்னிருந்து அணைக்க போனான்.ஒரு கணத்தில் தன்னை சுதாரித்தவள் பக்கத்தில் இருந்த அயன் பாக்சை அவன் கைமீது வைத்துவிட்டாள்.அவன் பதறி அடித்து கண்ணை திறந்து பார்க்க கை நெருப்பாக கொதித்தது.

"என்னடி பண்ணி வச்சி இருக்க..ஆசையா கட்டிக்க வந்தா இப்படியா பண்ணுவ..ராட்சசி இனி உன் பக்கம் வந்தா என்னனு கேளு ", என்று கோவமாக கத்திவிட்டு சென்றுவிட்டான்.

தாரா மிகவும் வருந்தினாள்.அவனுக்காக மனம் துடிக்கிறது தான்.ஆனால் அவன் இதுவரை அவளிடம் தன் காதலை சொல்லவே இல்லையே.அதை தவிர மற்ற அனைத்தும் செய்துகொண்டு இருக்கிறான்.

ஆனால் அவளின் பொறுமையும் ஒரு நாள் வெடித்து சிதற போகிறது என்று அவளுக்கே தெரியாமல் போனது.

ஆனால் கண்ணன் அப்படியெல்லம் இறங்கி போகும் ரகம் இல்லையே.அதனால் எப்பவும் போல் அவளை தன் பேச்சால் செயல்களால் சீண்டிக்கொண்டே இருந்தான்.சம்யுக்தாவும் அவனை முறைத்துகொண்டே இருந்தாள்.

இருந்தும் அவன் அவளை பார்க்கும் பார்வையை ரசிக்கவே செய்தாள்.அதுவும் அவளை பார்த்து அவன் கண்ணடிப்பது அவனிடம் மயங்கி போய் பார்த்துக்கொண்டு இருப்பாள்.அதை அவனும் உணரவே செய்தான்.

இப்படியே நாட்கள் ஓட பள்ளிகள் முடிந்து அந்த ஆண்டின் விடுமுறை நாட்களும் வந்துவிட்டது.பள்ளி வீடு என்று ஓடி ஓடி கலைத்தவள் வெகு நாட்களுக்கு பிறகு ரோஜா தோட்டத்திற்கு வந்தாள்.

அந்த ரம்யமான மாலை வேலையை கண்மூடி ரசித்துக்கொண்டு இருந்தாள். வெளியே சென்றுவிட்டு வந்த கண்ணன் இவளை பார்த்ததும் இவள் அருகில் வந்தான்.

"ரொம்ப நாள் ஆச்சு..உன்ன இப்படி பாத்து", என்றான் அவளை ரசித்துக்கொண்டே.

அவன் குரலில் திரும்பி பார்த்தவள் "கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விட்றானா", என்று மனதில் நினைத்து கொண்டே அவனை பார்த்தாள்.

அவள் மௌனமாக இருப்பதை பார்த்தவன் அவள் அருகில் சென்று அமர்ந்தான்."உங்கிட்ட பேசணும்", என்றான்.

"என்ன பேசணும் ",என்றாள்.. ஏதோ ஒரு பயம்..என்ன சொல்லுவானோ என்று.

"உனக்கு தெரியாது..நான் என்ன பேசப்போறேன்னு ", என்றான் அவள் முகத்தில் பார்வையை வைத்துகொண்டே.

சற்று தடுமாறினாலும் "எனக்கு..எனக்கு எப்படி தெரியும்", என்றாள்.

"சரி இப்போ என்ன..நானே சொல்றேன்..நான் உன்ன லவ் பண்றேன்டி..நீ இல்லாம ஒரு வாழ்க்கைய என்னால வாழ முடியாது..தெளிவா சொல்லனும்னா நீ என் உயிர்டி..உன்னோட கைகோர்த்து இந்த வாழக்கைய நான் வாழ நீ வருவியா என்கூட", என்று காதலோடு அவளின் முகத்தை தன் கைகளால் ஏந்தி அவன் முகத்தருகில் கொண்டு சென்றான்.

அவன் மூச்சு காற்றின் வெப்பம் அவள் மேனியில் வீச அந்த மோன நிலையில் கண்களை மூடிக்கொண்டாள்.

அவனும் அவளின் முகத்தருகே சென்று அவன் மூக்கை வைத்து அவளின் மூக்கை உரச அந்த நேரம் "நவா" என்ற பெயர் அவள் காதில் கேட்பதுபோல் இருக்க உடனே அவனை கீழே தள்ளிவிட்டவள் அழுகையுடன் வீட்டை நோக்கி ஓடினாள்.

எதுவும் புரியாமல் கண்ணன் சிலைபோல அமர்ந்திருந்தான் அவளை பார்த்துக்கொண்டே.

தன் அறைக்கு சென்ற சம்யுக்தா.."நவா நீ எங்க இருக்க..உன்ன லவ் பண்ணிட்டு என் மனசு ஏன் இப்படி தப்பா போச்சு..ஐயோ நான் ஏன் இப்படி கேவலமாக நடந்து கொள்கிறேன்.இங்கே இருந்து போவது தான் சரி.. இல்லையென்றால் என் மனசாட்சி என்னை கொன்றுவிடும்..நான் கண்ணனை விட்டு தள்ளி இருப்பது தான் அவருக்கும் எனக்கும் நல்லது", என்று முடிவுசெய்தாள்.

தன் உடைமைகள் அனைத்தையும் எடுத்து வைத்தாள்.முதலில் அனைவரிடமும் சொல்லிவிட்டு பின்பு வந்து பேகை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.


ஆனால் கீழே சென்ற அவளுக்கு பெரும் அதிர்ச்சி காத்துகொண்டு இருந்தது.
 
Vow nice epi dear.
Katha nalla interesting ah suspense ah poguthu. Super super.
 
Tnk u so much..unga comment ku dhan wait pannitu irundhen ?
Kannan oda innoru Peyer Navaneetha krishnan ah athu than avalu Nava nu koopittala?ithu enda guess than.
Author ji engala nalla guess panni mandaya pavika vaikureenga Hmmm.... aana ithuvum nalla irruku. Namada guess seriyano nu wait seyum pol thrill than.
 
Kannan oda innoru Peyer Navaneetha krishnan ah athu than avalu Nava nu koopittala?ithu enda guess than.
Author ji engala nalla guess panni mandaya pavika vaikureenga Hmmm.... aana ithuvum nalla irruku. Namada guess seriyano nu wait seyum pol thrill than.
Nalla guess panringha..bt negha sonnadhu crct ah nu wait panni pakalam?
 
Top