Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -03

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -03

மாலை நாலு மணிமேல் சென்றது... பள்ளி வளாகத்தில் பப்புவை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் ஐலா...

உள்ளே இனியனின் கார் வர...

ஐய்யா அப்பா வந்தாச்சு...கத்த ஆரம்பித்தான் பப்பு.. காரின் கதவை சாத்திவிட்டு லைட் ப்ளு முழுகை ஷர்ட்டில் ஆணழகனாக நடந்துவந்தான் இனியன்..

இவனை பார்ப்பதற்காகவே அந்த பள்ளி டீச்சர்கள் நின்றிருந்தார்கள்... அனைவருக்கும் தன் தெற்று பல் தெரிய ஒரு சிரிப்பு தந்துவிட்ட...மகனிடம் வந்தான்...

செல்லம் அவன் அழைக்க....அப்பா என்று கட்டிக்கொண்டது அந்த சிட்டு..
ஸார்..ஐலாவின் குரலை கேட்டு பப்புவை கீழே இறக்கிவிட்டான்... அப்போழுது தான் பார்ப்பது போல பார்த்தான்...

எஸ்..

இவன் உங்க பையனா...

உனக்கு தெரியாதா...

அவள் அமைதியாக நிற்க... தெரிஞ்சிக்கிட்டே ஏன் கேட்கிற, உன் வீட்டில்தான் குடியிருக்கோம்

ஏன்டா இவன்கிட்ட வாயை கொடுத்தோம் என்று மனதில் நினைக்க...
அவளை ஒரக்கண்ணால் பார்த்த இனியன்... உன் வாயை குடுத்தா அவ்வளவு தான் இரு கண்ணை ஈமைகளை அடித்து பேசினான்..

அதற்குள் அங்கே பிரின்ஸ்பால் வந்தார்கள்... ஸார் எப்படியிருக்கீங்க... எங்க ஊர் பிடிச்சிருக்கா.

ரொம்ப பிடிச்சிருக்கு மேம் என்று ஐலாவை பார்த்துக்கொண்டே பதில் அளித்தான்.. அவர்கள் அவனிடமிருந்து விடைபெற..

இனியனும், ஐலாவும் நடந்துக்கொண்டே பேசினர்..

காலையில பப்பு சாப்பிடாமே வந்துட்டான்... குழந்தைக்கிட்ட உங்க கோபத்தை காட்டாதீங்க ஸார்.. மதியம் சாப்பிடவே மாட்டேன் அடம்பிடித்தான்... அவங்க அம்மாவாது ஊட்டி விடலாமில்ல...

அவங்க அம்மா... ம்ம் தலையை ஆட்டினான்..

ஏன் அவங்க அம்மா இல்ல..

தன் உதட்டை பிதுக்கி இல்லை என்றான்..

அச்சோ ஸாரி ஸார்... அவங்க இறந்துட்டாங்க தெரியாம கேட்டுட்டேன்..
ஹலோ... என் பொண்டாட்டி ஒண்ணு சாகல.. என்னை விட்டு ஓடிபோயிட்டா..

என்னது நடப்பதை நிறுத்திவிட்டு அதிர்ச்சியாக இனியனை பார்த்தாள்..
என்ன சொன்னீங்க மறுபடியும் கேட்டாள் ஐலா... தன் காதில் தவறாக விழுந்ததா என்று..

ஏன் தமிழ் நல்லாவே தெரியுமில்ல... அதான் ரன்னீங்,

கார்ல ஏறு உங்கப்பா கூட்டிட்டு வரச்சொன்னாரு... பப்புவை தூக்கி பின் சீட்டில் உட்கார வைத்தான்.. நீ முன்னாடி ஏறு அப்பதான் பேச வசதியாயிருக்கும்.. இருவரும் ஏறிக்கொள்ள, அவன் காரை ஸ்டார்ட் செய்தான்.

நீங்க ஒரு கலெக்டரு உங்களை விட்டு..

பார்த்தியா நீயே யோசிக்கிற அந்த எரும்ம யோசிச்சுதா பாரு... ஆனா இப்பதான் ப்ரீயா இருக்கேன்... ஏதாவது ஃபீலிங்க்ஸ் இருக்கா என் முகத்துல..

இல்ல என்று தலையை ஆட்டினாள்..

அவள் இல்லைன்னா ஜாலிதான் ஐலா... காலையில அவளுக்கு காபி கொடுத்து எழுப்பி குளிக்க வச்சி, அவளுக்கு டிபனை கொடுத்து மதியம் சாப்பாடு செஞ்சி வச்சிட்டு ஆபிஸூக்கு போவேன்..

கண்களை விரித்து இனியனை பார்த்தாள்..

அப்பறம் உனக்கு கல்யாணம் ஆகல தானே... அதனால சென்சாரோட சொல்லுறேன்... நைட் வந்தா டிசைன் டிசைனா மேட்டர் பண்ண சொல்லுவா... யூ டூப்புல பலான படத்தை பார்த்துட்டு இப்படி சொல்லுவா..

நீயே சொல்லு நைட் முழுக்க இங்க வேலை பார்த்துட்டு... நான் எப்படி கவர்மென்ட்க்கு ஒழுங்கா வேலை செய்வேன்... என்னை நம்பி அந்த மாவட்டத்தையே கொடுத்திருக்காங்க...

அவனை பார்த்து முறைத்துக்கொண்டே வந்தாள் ஐலா...

நீ ஒரு பொண்ணு உனக்கே அவள பிடிக்கலதானே... அவயிருந்தா ஒரு பொண்டாட்டி, இல்லனா ஊருல இருக்கிற எனக்கு பிடிச்ச பொண்ணுங்க எல்லாம் பொண்டாட்டிதான்... இனியன் தன் தெற்று பல் தெரிய சிரித்தான்...

அதற்குள் பப்பு நானும் முன்னாடிதான் உட்காருவேன் என்று ஐலா மேல் உட்கார்ந்தான்..

பப்பு உனக்கு எத்தனை அம்மா வேணும்...

டாடி.. எனக்கு பைவ் மம்மி வேணும்... என்று தன் ஐந்து விரலை காட்டி சிரித்தது...

காரை ஓரமாக நிறுத்திவிட்டு

அய்யோ என் பட்டு குட்டிக்கு ஐந்து அம்மா வேணும்மா என்று பப்புவை முத்தமிடுவது போல் ஐலா கண்ணத்தில் முத்தமிட்டான்...

அவள் கண்களை விரித்து அப்படியே இனியனை பார்த்து வெட்டுவேன் என்பதுபோல் முறைத்துக்கொண்டிருந்தாள்...

நிலைமை சமாளிடா இனியா..டேய் பப்பு ஏன்டா திரும்பிட்ட பாரு உங்க மிஸ்ஸை கிஸ் பண்ணிட்டேன்..

பொறுக்கி என்று அவள் உதடுகள் முனுக..

என்ன சொன்ன ஐலா... பப்பு குறுக்கிட்டு டாடி ஐஸ்கீரம் கடை வந்திடுச்சு..
ஹாங்...ஸாரிடா பப்பு மறந்துட்டேன்.. நீ பெட்டுல ஜெயிச்சிட்ட..

ஐலா மிஸ் என் பையன் உங்ககிட்ட சாப்பாடு ஊட்டிக்குவேன் சொல்லி பெட் வச்சான்...

பிரஜின் என்று அவள் கத்த... ஸாரி ம்மா.. என்று காதை பிடித்துக்கேட்டான்...
அதற்குள் இனியன் ஐஸ்கீரம் வாங்கிவந்து பப்புவிடம்
கொடுத்தான்...மறுபடியும் கார் பயணமானது... குழந்தையால் சிந்தாமல் சாப்பிடமுடியவில்லை முகம் முழுவது அப்பிக்கொண்டான்...

காரிலிருக்கு டிஷ்யூவை எடுத்து அவன் கை, முகம் வாய் என்று பொறுமையாக துடைத்துவிட்டாள் ஐலா...

அமைதியாக அவளிடம் காட்டினான்...பிறகு அவள் நெஞ்சில் படுத்து தூங்கியது..

இந்த சின்ன பையன் அம்மாவுக்கு எப்படி ஏங்குறான் ஸார் மறுபடியும் கல்யாணம் செஞ்சிக்கலாம் தானே

இன்னொரு முறை கல்யாணம் செஞ்சிக்க தான் போறேன்... வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு பொண்ணை பார்க்க வரோம்ல..
தூக்கிவாரி போட்டது ஐலாவிற்கு.. இன்ன பொசுக்குனு சொல்லிட்டான்..

எதுக்கு இப்படி ஷாக் ரியாக்ஷன் கொடுக்கிற... உங்க அக்காவை தான் பொண்ணு கேட்க வரோம்..

என்னது என் அக்கா நந்துவையா... முதல்ல இந்த ஆளை கல்யாணம் பண்ணிக்காதேன்னு சொல்லனும் என்று மனத்தில் நினைத்தாள்...

எதுக்கு இப்படி ஃபீல் செய்யுற, உங்க அக்காவை கல்யாணம் செஞ்சிட்டு உன்ன இலவச இனைப்பா வச்சிக்கிறேன்..

அவன் இதை சொன்னவுடன் பொங்கி எழுந்துவிட்டாள் ஐலா... ஹலோ உனக்கு மூளையே இருக்காதா.. முன்பின் தெரியாத பொண்ணுகிட்ட இப்படிதான் லோக்கலா பேசுவியா..

ஏய் அடங்குடி... நீ யாருன்னு எனக்கு தெரியும், நான் யாருன்னு உனக்கு தெளிவா தெரியும்... கையை ஒங்கிக் கொண்டு வந்தான்... அறைஞ்சேனா வச்சிக்கோ... இங்க பாருடி உனக்கு இந்த மூனு நாள் தான் டைம்... அதுக்குள் மாமா ஸாரி சொல்லி என்னை கிஸ் அடிச்சு கன்வின்ஸ் பண்ணிக்கோ... இல்ல நீ என் பொண்டாட்டின்னு இந்தோட மறந்திட்டு உங்க அக்காயில்ல அவளை கல்யாணம் செஞ்சிட்டு... அன்னைக்கு நைட்டே ஃபர்ஸ்ட் நைட் முடிச்சிடுவேன்...

பயந்து அடித்துவிடுவானோ என்று கண்ணத்தில் கையை வைத்தபடி இருந்தாள்...

இங்க பாருங்க ஸார் அப்பா கூட சொன்னாரு உங்க மனைவி என் சாயல்ல இருப்பாங்களாம்.. அதுக்கு நான் உங்க மனைவியில்ல.. புரிஞ்சிக்கோங்க... இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்ட வைச்சிக்காதீங்க...

கார் வீட்டை அடைய... கதவை திறந்து அவளின் மடியில் படுத்திருந்த பப்புவை தூங்கிக்கொண்டு அவன் வீட்டிற்குள் நுழைந்தான் இனியன்...

செக்யூரிட்டியிடம் சாவியை கொடுத்துவிட்டு காரை உள்ளே பார்க் செய்ய சொன்னான்...
.....
இரவு.. தன் மகனை சுத்தப்படுத்தி, நைட் பேன்ட் போட்டு, பாலை குடிக்க வைத்து பெட்டில் உட்காரவைத்தான்... பப்பு பொம்மை காரை வைத்து தலையனையில் ஏறி இறங்கி விளையாடிக்கொண்டிருந்தான்...

இனியன் உட்கார்ந்தபடி தன் கால்களை நீட்டி, செல்லில் மெயில் பார்த்திருந்தான்...

டாடி... என்று இனியன் வயிற்றில் கால்களை போட்டு உட்கார்ந்து... மம்மி இங்க முத்தம் கொடுத்தாங்க என்று ஜாப்பியாக இருந்த வலது கண்ணத்தை காட்டியது..

அப்படியா என்று அந்த இடத்தில் இனியனும் முத்தமிட...

அடுத்த கண்ணத்தை திருப்பி இந்த இடத்திலும் என்று காட்டியது..

அந்த பக்கத்திற்கு முத்தம் கொடுத்தான்..

டாடி.. மம்மி சொன்னாங்க அப்பாவ டென்ஷன் செய்ய கூடாது சமத்து பிள்ளையா இருக்குனும்மா..

ம்ம்... அப்பறம் என்ன சொன்னாங்க..

பப்புக்கு நிறைய சாக்கி வாங்கி தர சொன்னாங்க..

ஏய்... பொய் சொல்லுற என்று தன் மகனை கிச் கிச் மூட்டினான்..

ஏன் டாடி அம்மாவ மிஸ்ஸூன்னு கூப்பிட சொன்னீங்க..

பப்புவின் கேசத்தை ஒதுக்கிவிட்டு, ஏன்னா.. நீ சொல்லுறதை பார்த்து உங்க கிளாஸ் பசங்க எல்லோரும் அம்மா அம்மான்னு கூப்பிட ஆரம்பிப்பாங்க..

நோ எனக்கு மட்டும்தான் எங்க அம்மா.. நெஞ்சில் கையை வைத்து சொன்னது சின்ன வாண்டு..

போங்க டாடி... எப்ப அம்மாவ பிரன்ட்ஸா ஓகே செய்வீங்க... டூ விட்டு எவ்வளவு நாளாச்சு..

ஏன்டா..

எனக்கு அம்மா கூடவே இருக்குனும்போல இருக்கு டாடி...

அப்போ அப்பாவ பிடிக்கலையா என்று கண்கள் கலங்கி கேட்டான் இனியன்..
அவன் கழுத்தை இறுக்கி கட்டிபிடித்துக் கொண்டான் பப்பு... ஸாரி டாடி எனக்கு அப்பாதான் பிடிக்கும்.. அம்மா வேணாம் என்று தன் தகப்பனை சமாதானம் படுத்தியது....

அவனை தோளில் போட்டு பால்கனியில் இங்கும் அங்கும் நடந்து தூங்கவைத்தான்... மணி பத்தானது.. கையில் ஒரு நாவலை எடுத்துக்கொண்டு பால்கனி கதவை திறந்து வெளியே வந்தாள் ஐலா...

அவன் பால்கனிக்கு எதிரில் தான் ஐலாவின் ரூமூம்... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்... இப்படிதானடி என்னை மயக்கின... சென்னையில இப்படிதானே என்னை சைட் அடிச்ச என்று மனதில் அவளை நினைத்து திட்டி தீர்த்தான்...

ஆனால் ஐலா மனமோ பாவம்தான் இவன், பிள்ளையை தட்டி தூங்க வைக்கும் விதத்தை பார்த்து மனம் உருகியது... இனியனையே வைத்த கண்வாங்காமல் பார்த்தாள்...

இனியன் ரூமிற்குள் சென்று கதவை அடைத்தான்...
தன் மகனை பக்கத்தில் படுக்க வைத்து கைகளால் அனைத்துக்கொண்டான்...என்னை நிம்மதியாவே வாழ விடமாட்டியாடி... இந்த குழந்தையை கூட மறந்திட்டியா..

“இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே என்னை
கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய்
கோர்த்தாய் கட்டி முத்தம்
தேனாய் வார்த்தாய் இன்பம்
இன்பம் ......”

....உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
நல்லா இருக்கு பதிவு
மறந்து போச்சா அவளுக்கு
 
Top