Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-15

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-15

காலை மணி பத்து சிவா அழுதபடி இனியன் வீட்டிற்குச் சென்றான்... மாமா...

“என்னடா... என்னாச்சு உட்காரு ஏன் அழுவற...”

கண்களை துடைத்தபடி... சிவா ,“மாமா ..தேனு..”

“என்னடா ஆச்சு அவளுக்கு..” சிவாவின் தோள்களை குலுக்கி கேட்டான்..

காலையில கோவிலுக்கு போனா மாமா.. இன்னும் வீட்டுக்கு வரல... எனக்கு பயமா இருக்கு மாமா.. அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லவா...

எந்த கோவிலுக்கு போனா பதற்றதோடு கேட்டான் இனியன்..

“பக்கத்தில இருக்க கருமாரியம்மன் கோவில் மாமா ....”

சரி நீ போ நான் அவள கூட்டிட்டு வரேன்...

நான் தேடிட்டேன் மாமா கோவிலில் இல்ல.. அசோக்கு போன் போட்டு வீட்டுக்கு வரச்சொன்னான், இனியன்...

ஹாங்கரில் தொங்கிய சட்டையை மாட்டிக்கொண்டு பைக் சாவியை எடுத்தான், அடுத்த நிமிடத்தில் பைக் நிறுத்தும் இடத்தில் இருந்தான்...

மச்சான் கோவிலாண்ட வந்துரு... கட கடவென சொல்லிவிட்டு வண்டியை ஸடார்ட் செய்து பறந்தான்...

சமீராக்கு போன் செய்து , “சமீ அங்க தேனு வந்தாளாமா...”

“இல்லண்ணா... என்னாச்சு அண்ணா...”

“ஒண்ணுமில்லடா அங்க வந்திருப்பாளா நினைச்சேன்...” அதற்குள் அசோக் வர...

டேய் பதட்டப்படாத... கோவிலுக்கு எத்தனை மணிக்கு கிளம்பினாள் ...

காலையில ஏழு மணிக்கு கிளம்பினாலாம்.. எங்கனா ப்ரண்டு வீட்டுக்கு போயிருப்பாளா...

அவளுக்கு ப்ரண்ட் யாரும் கிடையாது அசோக்... சமீ மட்டும்தான் அங்கேயும் வரலை சொன்னா...

கோவிலில் எல்லா இடத்திலும் தேடினார்கள்... மச்சான் ஒரு வேளை வேற கோவிலுக்கு போயிருந்தா... போய் பார்க்கலாம் சுற்றியுள்ள கோவிலில் அலைந்து திரிந்தார்கள்...

இல்லடா அசோக்.. எனக்கு பயமாயிருக்கு.. அவளுக்கு ஏதாவது ஆயிருக்குமா... வண்டியும் கொண்டு போகல செல்லையும் கொண்டு போகல.. நடந்துதான் போயிருக்கா..

இனியா போலிஸ் ஸ்டேஷன்ல நம்ம அஜ்மல்கிட்ட விசாரிக்கலாமா... வெளியே தெரியாத மாதிரி...

ம்ம் சொல்லி வை... மணி 12.00 ஆனது சுற்றியிருக்கும் ஏரியா முழுவதும் இண்டு இடுக்கு முதல் தேடினர்...

இனியாவுக்கு கால் வர.. எடுத்து பார்த்தான் ரவி..

ஹலோ இனியா.. அந்த போட்டோவுல இருக்கிற பொண்ணுதான் தேனுவா..

ஆமாம்.. ரவி இப்போ கொஞ்சம் பிரச்சனை, நானே உங்களை கூப்பிடலாம் நினைச்சேன்...

“இனியா , நாங்க கடத்தன பொண்ணே தேனுதான்..”

என்ன.. செல் கை நழுவி கீழே விழுந்தது.. அதை அசோக் பிடித்துக்கொள்ள... ரவியிடம் பேசினான்...

இனியன் பித்துபிடித்த படி உட்கார்ந்திருந்தான், தன் உயிர் தன்னை விட்டு வெளியே பறந்த மாதிரி... அடுத்த நிமிடமே சுதாரித்துக் கொண்டான்... டவுன் ஆக கூடாது... தேனுவை சேப்பா கூட்டிட்டு வரனும்...

என்ன நடந்தது என்று ரவியிடம் கேட்ட பிறகு... சிவாவை வரச்சொன்னான் இனியன்..

சிவா உங்கப்பாவுக்கு போனை போடு... இரண்டாம் ரிங்கில் போனை எடுத்தார்...அப்பா இனியா மாமா பேசனுமா...

அவனிடமிருந்து போனை புடுங்கி... உங்களுக்கு பொண்ணை விட பிஸினஸ் ரொம்ப முக்கியமா...

டேய் என்ன உளற...

ஓ அப்போ என்ன நடந்தது தெரியாது.. தேனுவை கடத்தி ஏழு மணி நேரமாகுது... உங்க தங்கச்சி பையனை கேளுங்க... சொல்லுவான் விலாவரியா..

படியிலிருந்து இறங்கிய தன் தம்பி பிரபாவை பார்த்து,... பிரபா எங்க சந்தோஷ் , எங்கடா அவன்... ராஜ்சேகர் கத்த, இனியன் லைனில் இருக்க... அவன் வெளிய போயிருக்கான் அண்ணா...

ஏன்டா அவன் சின்ன பையன் பிஸினஸ்ல அனுபவமில்ல , என்ன செய்யுறான் பார்க்க மாட்டிங்களா...

அவனுக்கும் தேனுக்கும் என்ன சம்மதம் இனியா..

ஓ.. உங்க மாப்பிள்ள , அதான் சந்தோஷ் சென்னை ஸோன்ல இருக்கிற ரத்தீப் ரெட்டிக்கிட்ட போட்டி போட்டு கிரானைட் டென்டர் போட்டிருக்கான்.. அவரோட குறைவா.. அதுவும் அவங்கிட்ட திருடி.. டென்டர் அமௌன்டை தெரிஞ்சிக்கிட்டான்...

உங்க பிஸினஸ் உங்களுக்கு தெரியாதா... உங்க ஸோன்ல யாரும் வரமாட்டாங்க, அதுப்போல மற்றவங்க இடத்தில போக கூடாதுன்னு... ரெட்டிக்கு கோவம் வந்துதான் ஆளை தூக்கியிருக்கான்... நாளை நீங்க கேன்சல் செஞ்சாதான் அனுப்புவான்...

டேய் இனியா நான் ரெட்டிக்கிட்ட பேசுறேன்... என் பொண்ணை விட சொல்லி.. எனக்கு எந்த கான்ட்ராக்டும் வேணாம்...

கடத்தினவங்க தேர்டு பார்ட்டி... கஸ்டடி எடுத்துவங்க வேற... அது குருநானா...

நான் ஊருக்கு கிளம்பி வரேன்... தன் தம்பி பிரபாவிடம் சென்னைக்கு கிளம்பறேன் விஷியத்தை சந்தோஷ்கிட்ட கேளு ... அடுத்த நிமிடமே காரை எடுத்து சென்னை நோக்கி பயனித்தான் ராஜ்சேகர்...

.......

நேரா குரு ஆபிஸ் ரூமில்... கதவை கூட தட்டாமல் உள்ளே நுழைந்தான் இனியன்...

நானா...

என்ன இனியா.. ஏன் இப்படி டென்ஷனா வர..

நானா... தேனுவை தான் கடத்திருக்கீங்க... எங்க அவ..

காலையில நடந்த அசைன்மென்டா அதை நான் எடுக்கல இனியா, தீபக்தான் கொண்டுவந்தான் ஏதோ டென்டர் மேட்டராம்... அவன்தான் பார்த்துக்கிறான்.. இரு பேசுறேன் ரீங் போய்க்கொண்டே இருக்க காலை எடுக்கவில்லை...இனியா போனை எடுக்க மாட்டுறான்..நீலாக்கரையில இருக்க கெஸ்ட் ஹவுஸில போய் பாரு..

சரி நானா... நீங்க அவன் போனுக்கு டீரை பண்ணிட்டே இருங்க...

நேரா வண்டியை கெஸ்ட் ஹவுஸில் விட்டான்.. டேய் அசோக் யாருமில்லடா.. இடத்தை மாத்திட்டான் போல... “ரவி அண்ணா அவனுடைய அல்லகை ராக்கி போன் நம்பர் தெரியுமா...”

“ம்ம்.. தெரியும் இனியா.. இரு போடுறேன்...” அங்கே போனை எடுக்க.. “ஹாங் சொல்லு ரவி...”

“டேய், தீபக் எங்கடா இருக்கான்... கடத்தினது இனியன் ஆளுடா...”

“ரவி, அது இனியன் ஆளுன்னு தீபக்கு தெரியும்... இனியனை சுத்தல விடுறான்... இப்போ கடலுக்குள்ள இருக்கான்... நம்ம காசிமேடு குமாரோட பெரிய போட்ல...”

சீக்கிரம் இனியனை பார்க்க சொல்லு...

உடனே இனியா போனை வாங்கி , “நீ எங்கேயிருக்க”

“காசிமேட்டுல தான் இனியா...”

“மருதுகிட்ட போட்டை அரேன்ஞ் பண்ண சொல்லு... அப்பறம் யாரு கூட போயிருக்கா... ட்ரக்ஸ் ஏத்திருக்கானா தீபக்...”

ஆமான்டா... கூட போயிருக்கிறது நாலுபேரு... அதுல செம்பும் இருக்கான், நம்ம கோட்டை மாரியண்ணாவும்...

.....

மணி 6.00 கடலுக்குள் செல்ல விசை படகில் ஏறினர் அசோக்கும், இனியனும்.. இனியனின் கண்கள் கலங்க தேனு என்று வாய்மட்டும் ஜெபித்தபடி இருந்தது.

இனியனை கட்டியணத்தான் அசோக்... மச்சான் அழாதடா.. தேனுக்கு ஒண்ணும் ஆகாது...

பயமாயிருக்கு அசோக்... என் தேனு, அவளுக்கு ஏதாவது ஆயிருச்சு, இந்த கடல்ல விழுந்து செத்துருவேன்டா.. என்னால அவள அப்படி பார்க்க முடியாது... அந்த செம்பு பையன் பொம்பள வீக்னஸ்டா மச்சான்.. கூட மாரி இருக்கான்.. ஆனா அவருக்கு தெரியாதே தேனுவை...

காலையில என்ன நடந்துச்சு தெரியுமா அசோக்... கிளாஸ் முடிச்சுட்டு வரச்சொல்ல பைக் பஞ்சர்... ரிப்பேருக்கு விட்டு நடந்துவந்தேன்... அப்போ

இனியன் முன்னாடி டவேரா கார் வந்து நிற்க... டேய் இனியா எங்க நடந்து போறே...

வண்டி பஞ்சர் ரவி அண்ணா... வா காருல ஏறு... இங்கதான் எல்லோரும் இருக்கோம்.

காரின் முன் சீட்டில் அமர்ந்தான் இனியன்.. ஹாய் என்ன எல்லோரும் காலையிலே...

ஒரு கஸ்டடி கேஸ்டா இந்த தீபக் பையன் தொல்லை தாங்கல இனியா ரொம்ப பண்ணுறான் குருநானாக்காக பார்க்கிறேன் மாரி சொல்ல...

யார கடத்திருக்கீங்க... ரவி அண்ணா ,இதுல சம்மதம் படாதீங்க சொல்லிருக்கேன்... உனக்கு குடும்பம் இருக்கு...

அகிலன்... அதுவும் பொம்பளை பிள்ளையை கடத்த சொல்லுறான்... அந்த பொண்ணு அவ்வளவு அழகா மகாலட்சுமியாட்டம் இருக்கு இனியா நீ வேணா பாரேன்...

ம்ம் நான் பார்க்க மாட்டேன்..

ஹா..ஹா அத்தை பொண்ணு தேனுவை தான் பார்ப்பான் ,கண்ணா கமென்ட் கொடுக்க...

இதையெல்லாம் கேட்டு கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் தேனு... வாயை இறுக்கி கட்டிருப்பதால் பேச முடியவில்லை...

பண்ணிரெண்டாவது படிக்கும் போது ஒரு பொண்ணு லவ் லட்டர் கொடுத்துச்சு... அப்போ கேட்டேன் ஏன்டா பயபடுறீயான்னு.. இல்லண்ணா என் தேனுவை பொண்டாட்டியா மனசில நினைச்சிட்டு இருக்கேன் , அவள தவிர யாரையும் பார்க்க மாட்டேன் சொல்லிட்டான்...

சரி இவன் பொய் சொல்லுறான் போல நினைச்சு அவன் பொறந்த நாளுக்கு நம்ம மினியை நைட்டுக்கு அனுப்பிவிட்டா.. அக்கான்னு அவள் காலே விழுந்துட்டான் நம்ம தலை... அப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன் இவன் உன்மைதான் சொல்லுறான்...-அகிலன்

தன் மாமனை நினைத்து , பூரிப்படைந்தாள்.. போதும் மாமா நான் செத்தாலும் பரவாயில்ல.. நீ என்னைதான் நினைச்சிட்டு இருக்க.. உன் இதயத்தில நான் மட்டும்தான் இருக்கேன்... தனக்குள் சிரித்தும் கொண்டாள், பொய் சொல்லிருக்கு மாமா, எனக்கு பொண்ணுங்க சகவாசம் உண்டுன்னு... பிராடு .. இதுதான் உன்கிட்ட பிடிச்சதே மாமா.. பொய்யா பேசி என்னை மயக்கிற... என் மாயக்கண்ணன்...

டேய், இப்போதான் தேனு வந்துட்டாளே... அவளை தூக்கிட்டுபோய் கல்யாணம் செஞ்சி குடும்பம் நடத்துறா.. அதைவிட்டு கடிச்சிட்டு விளையாடுற..

அய்யோ அவ கடிச்சது உங்களுக்கு வரை தெரியுமா..

பின்ன புதுசா வாட்ஸ் அப் குரூப்ல போட்டிருக்கானுங்க...

ரவி அண்ணா, கல்யாணம் செய்யறது பெரிசில்ல... எங்க அத்தைக்கு என்னை மறுபடியும் குடும்பத்துல சேர்த்துக்கனும் ஆசை...

ம்ம்.. சரி தங்கச்சி போட்டவை காட்டுடா...

அய்யோ செல்லை விட்டுவந்துட்டேன் , இருங்க வாலட்ல இருக்கு என்று போட்டோவை எடுத்தான், காரின் குறுக்கே ஒருவன் வர.. சடன் பிரேக் போட்டான் ரவி... போட்டோ கீழே விழுந்தது..

எங்க விழுந்தது, தேடினான் இனியன்.. சரி வீடு வந்துருச்சு வரேன்பா...

மாமா... திரும்பி பாரு மாமா... தேனு மனதில் பேச...

கதவை மூடிய இனியன் , அடுத்த நொடி திறந்து ரவி கூப்பிட்டியா என்று கேட்டான்...

இல்லடா...

சரி வரேன்..

காருல என் தேனு இருந்ததை கூட பார்க்கல மச்சான்... என்னை பார்த்தாலா... எப்படி துடிச்சிருப்பா...

கடலை வெறித்துக்கொண்டு போட்டின் விளிம்பில் நின்றிருந்தான் இனியன்..

“உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு உயிரே
உயிரே என்னை உன்னோடு
கலந்துவிடு நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு
கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்துவிடு”

-சிக்க வைக்கிறாள்
 
Nirmala vandhachu ???
 
Velila pullaingala thaniya vida payama irukku. But pullaingalum ketkarathilla.
 
Top