Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனை தீண்டும் அலையாய் நானே - 11

Advertisement

சூப்பர் நல்லா இருக்கு ரொம்ப நல்லா போய்கிட்டு இருக்கு.. ..டயலாக்ஸ் எல்லாம் எப்படிமா உட்கார்ந்து யோசித்து யோசித்து எழுதி இருக்கீங்க போல, படிக்கும் போது சத்தம் போட்டு சிரித்தால் சிரிக்கிறது பார்த்து வீட்ல ஒரு மாதிரி பாக்குறாங்க, நேத்ரா என்ன பேச்சு... பேசுறா
 
அலை – 11

அறையினுள் வந்த தம்பதிகளை அதிர்ச்சியோடு பார்த்தவன் தன்னிருக்கையில் இருந்து தன்னைப்போல் எழுந்து நின்றதை கவனிக்கவில்லை.

ரிஷியை பார்த்ததும் யோசனையில் புருவத்தை சுழித்த நேத்ராவின் பெற்றோர் அவனை நெருகியதும் தான் தன்னை உணர்ந்தான் ரிஷி. சுதாரித்து தன்னிருக்கையில் அமர்ந்து,

“வாங்க...” என அமர்த்தலாக அழைத்தவன் அவர்களை எதிர் இருக்கையில் அமரும்படி காண்பித்தான்.

ரிஷியின் மாமா என்ற அழைப்பு அவர்களை எட்டினாலும் அதை கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை .

வேண்டாம் வேண்டாம் என நினைத்தாலும் கேட்காதே என உள்ளம் உரைத்தாலும் தன்னை மீறி கேட்டேவிட்டான்.

“நேத்ரா உங்களோட டாட்டரா?...” சந்தேகமில்லை என்றாலும் வாய்வார்த்தையாக கேட்க அவனின் உள்மனம் விரும்பியது.

“ஆமா, நேத்ரா எங்க பொண்ணுதான். என்ன விஷயமா எங்களை வர சொன்னீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?...”

நேத்ராவின் தாய் ஆண்டாள் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட ரிஷிக்கு என்னவோ போல் ஆகிற்று.

அவர்களின் அந்நியபார்வையில் நொடியில் தன்னுடைய ஆர்வமான முகபாவனையை மாற்றி நிமிர்வாக கம்பீரமாக அமர்ந்தவன் கண்களில் என்கிட்டயேவா? என்பதை அவர்களை பார்த்தவன்,

“விஷயம் இருக்கு....” என்றவன் நடந்ததை விவரிக்க ஆண்டாளின் முகத்தில் கொஞ்சமும் மாற்றமின்றி கேட்டுக்கொண்டிருந்தார்.

“வாரத்துல நாலு நாள் உங்க பொண்ணு மேல கம்ப்ளைன்ட் வராம இருந்தா தான் ஆச்சர்யம். உங்க பொண்ணை கொஞ்சம் வார்ன் பண்ணி வைங்க. அதுதான் அவங்க ப்யூச்சர்க்கு நல்லது...”

மேலும் என்ன சொல்லியிருப்பானோ என்னவோ அதன் மேல் அவனை பேச விடாமல் கை நீட்டி தடுத்த நேத்ராவின் தந்தை பாலகிருஷ்ணன்,

“எங்க பொண்ணு ப்யூச்சர் பத்தி நீங்க அக்கறைப்பட்டதுக்கு ரொம்பவே நன்றி ஸார். நாங்க எங்க பொண்ணை பார்க்கலாமா?...” என பட்டுக்கத்தரித்ததை பேச பொங்கிய மனதை அடக்கினான் ரிஷி.

“பெரிய மகாராணியை தான் பெத்துவச்சிருக்காங்க. பொண்ணை சொன்னா பொறுக்கலை போல...” உள்ளுக்குள் சுறுசுறுவென்று ஏறிய கோவத்தை கட்டியவன்,

“இப்போ வந்துடுவாங்க...” ஏற்கனவே அவர்கள் வந்ததும் நேத்ராவை அழைத்துவரும் படி ராசுவிடம் சொல்லியே இருந்தான். வேண்டுமென்றே பேசாமல் அமைதிகாத்தான்.

அவனது அமைதி தங்களை ஒன்றும் செய்யாது என்பதை போல ஆண்டாளும், பாலகிருஷ்ணனும் தங்களுக்குள் முணுமுணுவென ஏதோ பேசியபடி இருந்தனர்.

“இப்ப தெரியுது. பொண்ணு ஏன் சண்டிராணியா யாரையும் மதிக்காம திமிரா இருக்கான்னு. இவங்களே இப்படி இருக்கும் போது நாம எதுக்கு இறங்கிப்போகனும்....”

பார்வையில் கெத்தை கொண்டுவந்தவன் அவர்களாக தன்னிடம் எதையும் கேட்க போவதில்லை என நினைத்து மீண்டும் அவர்களிடம் தங்களுடைய ஊருக்கு நேத்ரா வந்ததையும் அவள் வந்த விதத்தையும் பற்றி குறிப்பிட அவர்கள் முகத்தில் வந்துபோன ஒருநொடி அதிர்ச்சியை திருப்தியாக ரசித்தான்.

நொடியில் அதை மறைத்துக்கொண்டு அதற்கென்ன என்ற பாவனையை காட்ட சத்தியமாக நொந்தே போனான்.

“என்ன குடும்பம்டா இது? பொண்ணு ப்ராடு பண்ணி தெரியாத ஊருக்கு போனதை பத்தி சொல்லிட்டு இருக்கேன் கல்லுசிலையாட்டம் கம்முன்னு இருக்குறாங்க?...” அவர்களை கூர்பார்வையோடு பார்த்தபடி எண்ணியவன்,

“பொம்பளைப்புள்ளை ஊர்விட்டு ஊர் போய் ரா தங்கிட்டு வந்திருக்கான்னு சொல்றேன் அசராம இருக்கிறதை பாரேன்...” அவனால் தாளவே முடியவில்லை.

இப்படி வரவைத்துவிட்டாளே என்று தலைகுனிந்து வருந்த வேண்டாம், ஆனால் ஒரு அதிர்ச்சி, ஒரு பதட்டம், ஒரு கவலை, இதில் ஏதாவது ஒரு உணர்ச்சியையாவது அவர்கள் காட்டவேண்டும் என்ற எதிர்பார்த்த மனதிற்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது அவர்களின் அமைதி.

“கிருஷ்ணன் உனக்கு மாமா முறையாகுது. அவனை எப்போ பார்த்தாலும் எங்க பார்த்தலும் மரியாதையா பேசனும்...” துரைச்சாமியின் குரல் செவியில் ஒலிக்க,

“மரியாதையா நான் பேசினாலும் அதுக்கான பதில் மரியாதையை குடுக்கனும்னு அவருக்கு தெரியலையே கிரான்பா, அவருக்கு சொல்லி வளர்க்கலையா நீங்க?...”

அதற்குள் அவனின் அறைக்கதவை நாசுக்காக தட்டி அனுமதி வாங்கியபடி நேத்ரா வந்துவிட அவளை திமிராக பார்த்தவனின் விழிகளில் ஒருவித சொந்தமும் உரிமையும் சொல்லாமல் கொள்ளாமல் வந்தமர்ந்தது.

“தக்காளி இன்னைக்கு இவ்வளோ ப்ரைட்டா வந்துருக்கா. ஹ்ம் இந்த டார்க் க்ரீன் சுடி ரொம்ப ஆப்டா இருக்கு இவளுக்கு. ஆனாலும் அவ பேரன்ட்ஸ பார்த்து கொஞ்சமாச்சும் ஜெர்க் ஆகறாளா?...” என மனம் போன போக்கில் நிமிடத்தில் கணக்கிட்டு விட்டு,

“கெத்துடா ரிஷி. போதும் அவளை பார்த்தது. சும்மாவே கைல பிடிக்கமுடியாது. நாம வழியிறது தெரிஞ்சா தலைமேல உட்கார்ந்து முடியை பிடிச்சு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிடுவா...”

அதை நினைக்கையிலேயே தங்கள் ஊர் கோவிலில் ஒருவனின் தலையை பிடித்து ஆட்டியதும் அவனின் மனைவி நேத்ராவை வாரியதும் நினைவில் வர ரிஷியின் இதழ்கடையில் ஒரு முறுவல் பூக்க துடித்தது.

அடக்கிவிட்டு அவளையும் அவள் பெற்றோரையும் பார்த்தவன்,

“இதோ உங்க பொண்ணு. நீங்களே நான் சொன்னது எல்லாம் உண்மையா என்னன்னு விசாரிச்சுக்கோங்க...” சொல்லிவிட்டு அந்த சுழல்நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர,

“நாங்க விசாரிக்கிறது இருக்கட்டும். இதை சொல்லத்தான் எங்களை இங்க வரவழைச்சீங்களா? அந்த ஊர்க்கு போறதை பத்தி எங்கள்ட்ட சொல்லிட்டு எங்க பர்மிஷனோட தான் போனா...” ஆண்டாளின் பேச்சில் அதிர்ந்த ரிஷி,

“ஓகே, ஊருக்கு போனது உங்க பர்மிஷனோட. அதுக்கு எதுக்கு ஹாஸ்டல் வார்டன்கிட்ட அவங்களே கால் பண்ணி பேரன்ட்ஸ் மாதிரி பேசிருக்காங்க? அதுவும் உங்க பர்மிஷனா?...”

அவனுக்கு பதில் சொல்ல முனைந்த ஆண்டாளை தடுத்தவன்,

“இங்க மொபைல் யூஸ் பண்ணக்கூடாதுன்றது எங்க காலேஜ் ரூல்ஸ். அதை கொஞ்சமும் மதிக்காம உங்க பொண்ணு மொபைல் வச்சு யூஸ் பன்றாங்க. பொண்ணை முதல்ல கண்டிச்சு வைங்க...”

“ஒரு கம்ப்ளைன்ட் வந்தா விசாரிக்கிறவங்ககிட்ட மரியாதையா நடக்க பேச சொல்லிகொடுங்க. க்ளாஸ் கட்டடிக்கிறது, லெக்சரர்ஸ், ஹாஸ்டல்ல இருக்கிற மத்த ஸ்டூடன்ஸ்னு யாரு என்னனு பார்க்காம எல்லார்க்கிட்டையும் வம்பு பன்றாங்க...”

“கூப்பிட்டு கேட்ட என்கிட்டையே ஆர்க்யூ பன்றாங்க. ஒரு டிஸிப்ளின் இல்லை. பெரியவங்கன்ற ரெஸ்பெக்ட் குடுக்கிறதில்லை. எப்பவும் ஏதாவது செஞ்சுவச்சிட்டே இருக்காங்க...” கடுப்பில் பொரிந்து தள்ளிவிட்டான் ரிஷி.

அனைத்தையும் கேட்ட ஆண்டாள் எழுந்துவிட்டார் உடன் பாலகிருஷ்ணனும்.

“ஓகே ஸார், இப்போ என்ன என் நேத்ராவை நான் கண்டிக்கனும் அவ்வளோ தானே?...”

“அதை நாங்க பார்த்துக்கறோம். எங்க பொண்ணு காரணமில்லாம யாரையும் எதிர்த்தோ மரியாதை இல்லாமலோ பேசமாட்டா. அப்படியே பேசிருந்தா கூட ஏதாவது காரணம் இருந்திருக்கும்...”

ஆண்டாளின் பேச்சில் திகைத்த ரிஷி இவ்வளவு சொல்லியும் நேத்ராவிடம் இதுவரை எதுவும் வாயை திறந்து பேசாதது பெரும் ஆச்சர்யமாக இருந்தது.

“தென் என்ன சொன்னீங்க? ஹ்ம், டிஸிப்ளின். அதை பத்தி நீங்க சொல்லவேண்டாம். எல்லாம் சரியா இருக்கிற இடத்துல என்பொண்ணு தேவையில்லாம வம்பு வளர்க்க மாட்டா...”

“ம்ஹூம் இது சரிவராது. பேசாம நீங்க அவளை இந்த காலேஜ்ல இருந்து ரிலீவ் பண்ணிடுங்க. நாங்க அவளுக்கு எந்த காலேஜ் சரிப்பட்டு வருதோ அங்க சேர்த்துக்கறோம்...” என்க அசந்தே போனான் ரிஷி.

“ஹைய்யோடா! முதலுக்கே மோசமாகுதேடா ரிஷி. இதென்னடா உனக்கு வந்த சோதனை?...”

ரிஷியின் இதயம் தடதடத்து போனது. நேத்ரா விஷயத்தில் தான் கணிப்பது அனைத்தும் தவறாகவே போவதாக அவனுள் ஒரு பிம்பம் எழ அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவளோ, “உனக்கிது தேவையா?...” என்ற நமுட்டுச்சிரிப்போடு அவனின் அவஸ்தையை வேடிக்கை பார்த்திருந்தாள் மிக சுவாரஸியமாக.

ஆண்டாள் இதைத்தான் செய்வார் என்பது அவளுக்கு முன்னமே தெரியுமே?

நேத்ரா உள்ளே வரும் போது கொஞ்சமும் பயமில்லாமல் என்னைக்கும் போல வந்து நின்றதன் அர்த்தம் ரிஷிக்கு அப்போது விளங்கியது.

“இவளுக்கு முதல்லையே தெரிஞ்சிருக்கு. நாம தான் யோசிக்காம விட்டுட்டோம். இப்போ எப்படி இறங்கி பேச?...” யோசித்தபடி இருந்தவனை,

“அப்போ வேறேதுமில்லையே. நாங்க கிளம்பறோம்...” என பாலகிருஷ்ணன் கூற,

“யோவ் மாமா இப்போதாச்சும் வாயை திறந்தீங்களே?...” ரிஷி நினைக்க மனக்கண்ணில் ஒரு கையில் துப்பாக்கியோடு மறு கையினால் மீசையை நீவியபடி விரைப்பும் முறைப்புமாக துரைச்சாமி தெரிந்தார்.

“அடேய் ரிஷி மரியாதை மரியாதை...” தானே இவ்விடம் ஜெர்க்காகிவிட்டான்.
Nice
 
மனசுக்குள்ள கூட எதையாச்சும் கன்னாபின்னான்னு நினைக்க முடியுதா? மீசை வந்து குத்த ஆரம்பிக்குது தன் தாத்தாவை நினைத்தான் உள்ளுக்குள் வெந்தபடி.

பாலகிருஷ்ணன் தன்னையே பார்த்தபடி இருக்க, “ஹைய்யோ இந்த மைண்ட்வாய்ஸ் மண்டையை கவ்வுதே?...” உள்ளே கூவிக்கொண்டு,

“ஹ்ம் கிளம்புங்க...” என்றான் அமர்த்தலாக.

ஆண்டாள் அதைகூட கேட்கவில்லை. சொல்லிக்கொள்ளவும் இல்லை.அவர்கள் மேலும் பேசாதது ரிஷிக்குத்தான் பெருத்த நிம்மதியாக போயிற்று.

கிளம்பியவர்களிடம் செல்லும் முன் நேத்ராவிற்கு புத்தி சொல்லி செல்ல சொல்ல வேண்டி வார்த்தைகள் அனைத்தும் நான் நீ என போட்டிபோட்டுக்கொண்டு துள்ளிக்குதித்து வெளிவர துடிக்க அதை குச்சியை வைத்து விரட்டாத குறையாக விரட்டியவன் கப்பென வாயை மூடிக்கொண்டான்.

சொல்லிவிட்டால் கைய்யோடு அவளை அழைத்து சென்றுவிட்டால் என்ன செய்ய என பயந்தே வாயை திறக்கவில்லை.

தான் ஏன் இவ்வாறு நினைக்கிறோம் என்பதை அறிந்திருந்தாலும் அந்த உணர்வை விரும்பியே ஏற்றான்.

“இப்படி மட்டையாகிட்டியேடா ரிஷி...” என நினைத்தபடி அறைவாயிலை பார்க்க ஆண்டாளும் கிருஷ்ணனும் வெளியேறிய பின் கதவை அடைந்த நேத்ரா ரிஷியை திரும்பி பார்த்தாள்.

அவள் என்ன செய்யபோகிறாள் என்ற எதிர்பார்ப்போடு அவளையே பார்க்க நேத்ராவோ இரு புருவத்தையும் ஏற்றி இறக்கி இடது கை கட்டை விரலை கவிழ்த்துக்காட்டி புன்னகைக்க அவளை பார்த்தபடி எந்தவித பாவனையையும் முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தான் ரிஷி.

“இவளுக்கிருக்கிற சேட்டையை பாரு...” நேத்ரா தலை மறைந்ததும் புன்னகைத்தவனின் முகத்தில் அப்படி ஒரு வசீகரம் நிரம்பி வழிந்தது.

“ம்ஹூம் பெரிய தப்பு பண்ணிட்டேன். உடனே அம்மாவை பார்த்து பேசனும்...” என தன் தலையை அழுந்த கோதியபடி எழுந்து வெளியே செல்ல எழுந்து நடந்தவன் அந்த காரிடார் திருப்பத்தில் திரும்ப முனைய ஆண்டாளின் கோபக்குரல் அவனை தேக்கியது.

“உன்னை படிக்கத்தான் இந்த காலேஜ்க்கு அனுப்பியிருக்கேன் நேத்ரா. எல்லோரும் கம்ப்ளைன்ட் செய்யிற அளவுக்கு நீ நடந்துக்கிட்டது சரியில்லை. இன்னொருக்க இது போல கம்ப்ளைன்ட் வந்தா நன் பொறுமையா பேசிட்டு இருக்கமாட்டேன்...”

“ஒரே பொண்ணுன்னு இவர் செல்லம் குடுக்க நானும் உன் இஷ்டத்துக்கு விட்டது தப்பா போச்சு. எங்களை இப்படி தலைகுனிய வச்சுட்டியே...” என பொரிந்தார்.

“ஆமா உள்ள என்னமோ என் பொண்ணைப்பத்தி தெரியும் புரியும்னு டயலாக் விட்டுட்டு இங்க வந்து இப்படி வறுத்து எடுக்கறீங்க. இதுக்கு அங்கயே திட்டிருக்கலாம். இங்க ஒரே வெட்கை. உள்ள ஏஸில நீங்க திட்றப்போ கொஞ்சம் குளுகுளுன்னு இருந்திருக்கும்ல...”

முணுமுணுப்பாக சொல்லியது ரிஷியின் காதையே எட்டியபோது ஆண்டாளின் காதிலும் விழாமல் இருக்குமா என்ன?

“நேரம்டி. உன்னை நான் என்னவேனாலும் கண்டிக்கலாம். அதை யாரும் எனக்கு சொல்லித்தெரியனும்னு இருக்கு பாரு. அடுத்தவங்க யார் முன்னாலையும் என் மகளை நான் கீழிறக்க மாட்டேன். எந்த சூழ்நிலையிலையும் உன்னை விட்டுக்கொடுக்காம இருக்கனும்னு நினைக்கேன்...”

ஆண்டாளின் வார்த்தையில் நேத்ரா மீது அவர் கொண்ட பாசத்தில் ரிஷி பெருமிதந்து போனான்.

“நாங்க கிளம்பறோம். உன் போனை இன்னொருக்க எடுத்து யூஸ் பண்ணின பார்த்துக்கோ...” இன்னும் சிலபல அர்ச்சனைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கிளம்ப வழிவிட்டு நின்றாள்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ரிஷி. என்ன பெண் இவள்? நேத்ராவை நினைத்தபடி அங்கிருந்து தன் கார் நிறுத்தியிருக்கும் இடம் நோக்கி செல்ல இனிதாக அதிர்ந்தான்.

அங்கே நேத்ரா ரிஷியின் கார் கண்ணாடி முன்பு தன் முகத்தை திருத்தியபடி நின்றிருந்தாள். இவன் மெதுவாக அவளறியாமல் நெருங்கி செல்ல,

“இந்தா பாரு கட்டுமரம் நம்பர் டூ. இன்னைக்கு உன் பாஸ்க்கு செம டோஸ் எங்கம்மா குடுத்தாங்க. இந்நேரம் அவரோட மூக்கை காணோம்னு ஸார் கதை கதறி தேடிட்டு இருப்பாரு...” என அதனுடன் பேசியவள்,

“இன்னைக்கு அவர் முகத்தை பார்க்கனுமே? அசிங்கப்பட்டான்டா அப்பாட்டக்கர். எனக்கு செம சிரிப்பு. எங்கம்மாவை பத்தி தெரியாம மாட்டிக்கிட்டு முழிச்சு முழிச்சு டயர்டாகி பீல் பண்ணிட்டு இருப்பாரு. சோ அவர் இன்னைக்கு மூட் அவுட்ல சீக்கிரமே கிளம்பினாலும் கிளம்பலாம். நீ ரெடியா இருந்துக்கோ...”

தன்னுடைய முகத்தை சைட் மிரரில் அப்படியும் இப்படியும் திருப்பியவள், “ நேத்ரா அழகிடி நீ. உன்னை அடிச்சுக்க முடியுமா? நீ ராணி நீ ராணி. எந்நாளும் நீ ராணி...”

பாடியபடி முன்னுச்சியில் சிலுப்பி நின்ற முடியை இழுத்து சொருக அவளின் பின் ரிஷியின் பிம்பம் விழ அதில் திகைத்து திரும்ப அதற்குள் அவளை நெருங்கிய ரிஷியை நன்றாக இடித்துவிட்டே பின்னடைந்து நின்றாள்.

அவள் கீழே விழாமல் பிடித்து நிறுத்தியவன் மொத்தமாக தன் கைவளைக்குள் கொண்டுவந்தான்.

“ஓய் தக்காளி, என்ன ஓவர் ஆட்டமா இருக்கு?. என்னை மிரட்டுறதும் இல்லாம என் காரையுமா?..”

விழிகளில் சுவாரஸியம் மிகுந்தாலும் அதை அவள் முன் அவன் காட்டிக்கொள்ளாமல் போக அவனின் நெருக்கத்திலும் அவனின் அழைப்பிலும் எண்ணையிலிட்ட கடுகாய் துள்ளியபடி,

“தக்காளின்னு சொல்லாதீங்கன்னு ஏற்கனவே சொல்லிருக்கேன் ஸார்...” விரலை நீட்டி அவனை எச்சரித்தாள்.

“நானும் என்கிட்டே விரலை நீட்டி பேசக்கூடாதுன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்...” நீட்டிய விரலை பற்றிக்கொண்டு வம்பு செய்ய அந்த தருணத்தை வெகுவாய் ரசித்தான்.

அவனுள் தான் அடங்கி நின்ற நிலையை யாரேனும் பார்த்துவிடுவார்களோ? பார்த்தால் என்ன நினைப்பார்களோ என எண்ணியபடி தன் கைகளை விடுவிக்க போராடி,

“விடுங்க ஸார். எங்கப்பாம்மாக்கிட்ட நல்லா வாங்கிக்கட்டியும் கொஞ்சமும் பயமில்லைல உங்களுக்கு. என்னை விடுங்க. எவ்வளோ தைரியம் என்னை இப்படி பப்ளிக்கா கட்டிபிடிச்சிட்டு இருக்கீங்க?...”

“என்ன கட்டிப்பிடிச்சிருக்கேனா? இதுக்கு பேரு கட்டிபிடிக்கிறதுனா இப்படி இன்னும் பிடிக்கிறதுக்கு பேர் என்னவாம்?....” ஏற்கனவே நெருக்கத்தில் இருந்தவளை இன்னும் இறுக்கியபடி கேட்டான்.

சுற்றிமுற்றி பார்த்து யாருமில்லாமல் போக தனிமையில் அவனின் அருகாமை பெரும் அவஸ்தையை கொடுத்தது. இப்போதே அவனை தள்ளிவிடு என மனம் எச்சரிக்க அது முடியாமல் போனதால் உண்டான இயலாமை உணர்வில் கோபம் கொப்பளித்தது நேத்ராவினுள்.

“ஏய் என்னை விடலைனா கத்தி உன்னை உன்னை என்ன செய்றேன் பாரு...”

“என்ன செய்வ? இங்க இந்த நேரத்துக்கு யாரும் வரமாட்டாங்க. உன்னால முடிஞ்சதை பாரு...” ரிஷியும் விடாமல் அவளை கட்டுக்குள் நிறுத்த அவனின் உள்ளம் தறிகெட்டு திரிந்தது.

அந்த கணம் அவன் முடிவெடுத்தான். இவளன்றி இந்த உலகத்தில் வாழ்க்கையில் அவனுக்கு ஏதுமில்லை என்று. அதன் உரிமை உணர்வை அவன் பார்வையில் பிரதிபலித்தாலும் நேத்ராவால் உணரமுடியவில்லை.

அவளுக்கு கண்களை கரித்துக்கொண்டு வந்தது. அவனின் செயலால் உண்டான சினத்தில் முகம் ஜிவுஜிவுக்க கலங்கிய கண்களை பிடிவாதமாக நிறுத்திவைத்தாள்.

அவளின் போராட்டம் அவனை எட்டியதோ என்னவோ இரும்பாய் மாறிய அவளின் தேகத்தை உணர்ந்தவன் இன்றைக்கு இது போதும் என்பதை போல அவளை விட்டு விலகி நின்று பார்த்தான்.

வேகமாக பின்னால் சென்றவள் சற்று இடைவெளி விட்டதும் அவனை திரும்பி பார்த்து,

“கட்டுமரம் என்னை படுத்திட்டல. உன்னை சும்மா விடமாட்டேன். என்ன செய்றேன்னு பாரு...”

அவனை ஒவ்வொரு வார்த்தைக்கும் விரலை நீட்டி ஆட்டியபடி கோவத்தில் பொரிந்தபடி செல்ல அதனை கண்டு ரிஷியின் முகத்தில் அப்படி ஒரு வசீகர புன்னகை.

“வெய்ட்டிங் தக்காளி. என்னை நீ எதுவும் செய்றதுக்குள்ள நான் உன்னை எதுவும் செய்யாம இருக்கனும்...” என நினைத்து,

“ம்ஹூம் முடியலைடா ரிஷி. முதல்ல கிளம்பு வீட்டுக்கு...” வேகமாக காரை எடுத்து கிளம்பியவன் வீட்டிற்குள் நுழைந்ததும் சுமங்கலியை தான் தேடினான்.

பூஜையறையில் அனைத்து விளக்குகளுக்கும் குங்குமத்தை வைத்து அலங்கரித்துக்கொண்டிருக்க அவரிடம் வேகமாக சென்றவன்,

“மாம், எனக்கு பாலகிருஷ்ணன் மாமா பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கனும். சீக்கிரம் பேசி முடிங்க...”

ரிஷியின் அதிரடியில் அதிர்ச்சியான சுமங்கலி,

“என்ன சொல்ற ரிஷி? விளையாடறியா? நடக்காத விஷயத்தை பேசாதே...”என,

“அப்போ நானே அவங்க பொண்ணை மேரேஜ் பண்ணிக்கறேன். உங்க ஹெல்ப் வேண்டாம். என்னோட கரியர் மாதிரி லைப் ஆக நான் விடமாட்டேன்...”

உறுதியான குரலில் பிடிவாதமாக கூறிய ரிஷியை மிரட்சியாக பார்த்தார் சுமங்கலி.



அலை தீண்டும்...
Nice
 
Top