Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்.. - 3

உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்..

எழிலும் இனியனும் ஒன்றாக சேர்ந்து... அந்த காட்டிற்குள் போய் கொண்டு இருந்தனர்....

அரை மணி நேரமாக... நடந்து கொண்டே இருந்தனர் இருவரும்..‌‌...

அப்போது தான் அவர்களுக்கு ஏதோ வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்டது...

"எழில் "

"என்ன இனியா..."

"இங்க ஏதோ... என்னமோ... சவுண்ட் கேட்குது டா..."

"சலசலப்பு சத்தம் மாதிரி இருக்கு...."

"ம்ம் ஆமா... எனக்கும் அது மாதிரி தான் கேட்குது..."

"ஹ்ம்ம்... ஆமா... அந்த நதி கரை ஓரத்தில் இருந்து தான் கேட்குது இனியன்..."

"தண்ணி போறதுக்கு நமக்கு அப்படி கேக்குது போல...."

"இல்லடா.... எனக்கு என்னமோ அப்படி தோணலை.... இது வித்தியாசமா இருக்கு... என்னன்னு போய் பார்க்கலாம்..."

"சரி வா போய் பார்க்கலாம் மச்சி..."

"சரி போலாம் இனியா..."

என்னவா இருக்கும் என்று யோசித்து கொண்டே சென்றான் எழில்....

அப்போது எழிலின் வாக்கி டாக்கி கத்தியது‌....

"எழில் சார்.... கேட்குதா... கேட்குதா..." என்று அது கத்திக் கொண்டு இருந்தது...

"ஹான்... கேட்குது பூமித்... சொல்லுங்க..." என்றான் எழில்...

"சார் நாங்க ஸ்பாட்க்கு போய்ட்டோம்.... பட் நீங்க இனியவன் சார் இன்னும் வரலையே.... சார் அந்த பவனேஷ் இங்க தான்... அவனோட அடி ஆட்களோடு இருக்கான்..." என்று சொன்னான் பூமித்...

"நாங்க வந்துட்டே இருக்கோம் பூமித்... நீங்க அவங்க கண்ணில் படாமல் ஜாக்கிரதையா இருங்க... ஐ வில் பி தேர் இன் டென் மினிட்ஸ்..."

"ஓகே சார்..." என்று சொன்னான் பூமித்...

"இனியா..."

"அந்த பவனேஷ் அண்ட் காங்... அங்க தான் இருக்காங்களாம்.... நம்ம டீம் அங்க போயாச்சி..."

"சூப்பர் மச்சி...."

"நான் இங்க என்ன பிரச்சினை ன்னு பார்க்குறேன்.... நீ அங்க ஸ்பாட்க்கு சீக்கிரமா போடா..."

"இல்லடா நாம ரெண்டு பேரும் ஒன்னாவே போகலாம் எழில்...."

"வேணாம்... இப்ப நீ அங்க இருப்பது அவசியம்..‌.. நீ போ அங்க..."

"இல்ல எழில்... நான் போகலை..." என்று பிடிவாதம் பிடித்தான் இனியவன்...

"நீ போன்னு சொல்றேன் தான... ஒரு முறை சொன்னா புரியாத இனியா.... போடா... இங்க நான் பாத்துக்கிறேன்.." என்று மெதுவாக கத்தி இனியவனை அனுப்பி விட்டான் எழிவ்வேந்தன்....

***********

"என்ன நவ்யா.... இப்படி பண்ணி வச்சி இருக்க.... உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா... அந்த பைத்தியம் சொன்னால் அப்படியே விட்டுட்டு வருவீயா.... அவ ரொம்ப பயப்படுவான்னு உனக்கு தெரியும்ல நவ்யா...." என்று கத்தி கொண்டு இருந்தாள் ஆரா...

"ஆரா கத்தாத டி... மேம் எல்லாம் வந்துரு போறாங்க...." என்றால் தோழிகளுள் ஒருத்தி....

"கோபப் படாத ஆரா... நம்ம பொறுமையா யோசிக்கலாம்..." என்றால் இன்னொரு தோழி....

"ஆரா.... என்னை என்ன செய்ய சொல்ற... நான் சொன்னால் சைரா கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பாள்... நான் எவ்வுளவு சொன்னேன் நான் உன் கூட இருக்கேன் சைரா.... உன்னை தனியா விட்டு போக மாட்டேன்னு எவ்வளவு சொல்லியும்... அவள் தான் பிடிவாதமா என்னை அனுப்பி வச்சிட்டா ஆரா.... நான் என்ன பண்ண முடியும்.... நீயே சொல்லு ஆரா...." என்று நவ்யாவும் கத்தினாள்...

"மொதல்ல ரெண்டு பேரும் சண்டை போடுவதை நிறுத்துங்க டி...."

"நாம எதுக்கும் மேம் கிட்ட இன்பார்ம் பண்ணிடலாம்...." என்று சொன்னாள் ஒருத்தி...

"எதுக்கு டி.... அதெல்லாம் வேணாம்... நாங்க போகும் போதே யார் கிட்டயும் சொல்லாமல்... யாருக்கும் தெரியாமல் தான் வெளியே போனோம்...." என்று பயந்து கொண்டே சொன்னாள் நவ்யா....

"நீங்க பண்ற வேலை இருக்கே... இதுக்கு தான் டி... நான் அப்போவே சொன்னேன்... எங்கேயும் போக வேண்டாம் அப்படின்னு.... கேட்டா தான.... இது என்னமோ எனக்கு சின்ன பிரச்சினை மாதிரி தோணலை... நாம மேடம் கிட்ட இப்பவே சொல்லனும் நவ்யா... வா போகலாம்...." என்று சொல்லி நவ்யாவை இழுத்து சென்றால் ஆராதனா...‌

கூடவே அவர்களின் பின்னே...‌ மற்ற அனைவரும் கூடச் சென்றனர்...

"ப்ளீஸ் ஆரா... என்னை எதுவும் சொல்லாத டி..." என்று சொல்லி கொண்டே சென்றாள் நவ்யா....

"வாயை முடிட்டு வா நவ்யா..." என்று சொல்லி முறைத்துக் கொண்டே போனால் ஆரா...

அவர்கள் அறைக்கு சென்று கதவை தட்டினால் ஆரா... அந்த அறைக் கதவும் திறக்கப்பட்டது...

"மேம்..." என்றால் ஆரா...

"என்ன டி எல்லாரும் கூட்டமா சேர்ந்து வந்து இருக்கீங்க..."

"சவி மேம் என்னாச்சு..." என்று கேட்டுக் கொண்டே வந்தார் இன்னொரு மேம் ப்ரீத்தி...

"என்னாச்சி ன்னு தெரியலை ப்ரீத்தி..." என்றார் சவிதா....

"சவிதா மேம் அது... அது.... வந்து..."

அந்த சவிதா மேம் பதட்டமாக... "என்ன ஆரா வார்த்தைகளை மென்னு முழுங்குற... என்னாச்சு... என்ன பிரச்சினை... யாரு என்ன பண்ணீங்க..." என்றார்...

"மேம் நவ்யாவும் சைராவும் வெளியே போனாங்க..."

"நீங்க தான் அறுந்த வாலுங்களாச்சே..." என்று சொன்னார் இன்னொரு மேம் ப்ரீத்தி....

"இதோ நவ்யா தான் இங்க இருக்காளே.... ஆமா இந்த சைரா எங்க... அவளை காணோமே...." என்று கேட்டார் சவிதா மேம்....

"சவிதா மேம்... ப்ரீத்தி மேம்... சைரா நவ்யாவை மட்டும் அனுப்பிட்டு... அவள் இன்னும் இங்க வரலை மேம்..." என்று பயந்து கொண்டே சொன்னாள் ஆரா....

"என்னடி நினைச்சுக் கிட்டு இருக்கீங்க... உங்கள் இஷ்டத்திற்கு ஆடுவீங்களா... இப்ப நான் சைராவை எங்கன்னு போய் தேடுவது..." என்று கத்தினார் சவிதா....

அவருக்கும் சைரா தனியாக சென்று.... ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வாளோ என்ற பயம் வந்து ஒட்டிக் கொண்டது...

"மேம் நான் உடனே மேனேஜ்மென்ட்க்கு இன்பார்ம் பண்றேன்..." என்று சொன்னார் ப்ரீத்தி....

"மேம்..... நாங்க ரெண்டு பேரும் போய் சைராவை தேடட்டுமா மேம்...." என்று ஆராவும் நவ்யாவும் பயந்து கொண்டே சொன்னார்கள்....

"ஆமா மேம் நாங்களும் போய் சைராவை தேடிப் பார்க்கிறோம் மேம்..." என்று அனைவரும் சொன்னார்கள்...

"ஏண்டி ஆரா.... அவள் எங்க போனால் ன்னு தெரியாமல் இருக்கேன்.... இதுல நீங்க வேற எங்கயாவது போய் என் உசுரை வாங்குங்க..." என்று கத்தினார் சவிதா மேம்...

"மேம்... ப்ளீஸ் மேம்‌... நாங்க எதுக்கும் போய் தேடி பார்க்கிறோம்.... ப்ளீஸ்.... அக்செப்ட் அவர் ரீகொஸ்ட் மேம்..." என்றால் ஆரா....

"ஆமாம் மேம்... நாங்களும் போய் எங்க சைராவை தேடுறோம் மேம்... ப்ளீஸ்..." என்று சொன்னார்கள் அனைவரும்...

ஒரு நிமிடம் யோசித்த சவிதா மேம்....

"உங்க எல்லார் கிட்டயும் மொபைல இருக்கு தானே...."

"எஸ் மேம்... இருக்கு..."

"அப்போ எல்லாரும் கான்டெக்ட்லயே இருங்க... சைராவை தேட போய்.... நீங்க எங்கயாச்சும் தொலைஞ்சு போயி... என் தலையை உருட்டாதீங்க டி..‌.."

"ஓகே மேம்" என்றனர் அனைவரும்....

"தனித் தனியா தேடாதீங்க.... எல்லாரும் ஒன்னாவே போங்க... பார்த்து பத்திரமா தேடுங்க..." என்று சொன்னார் சவிதா மேம்....

"ஓகே மேம்... நாங்க பாத்துக்கிறோம்...." என்றனர் ஆராவும் நவ்யாவும்....

அனைவரும் சைராவை தேடிப் போய்க் கொண்டு இருந்தனர்....

************

இனியனை அனுப்பி விட்டு எழில் அந்த நதி இருக்கும் திசை நோக்கி சென்றான்.... அது கொஞ்சம் ஆழமாக தான் இருந்தது...

அந்த நதியில் எதுவோ உள்ளே இருப்பது போலவே எழிலுக்கு தோன்றியது...

ஆனால்.... என்ன இருக்கிறது என்று அவனால் யூகிக்க முடியவில்லை....

நேரம் வேறு குறைவாக இருந்தது...

எழிலின் வாக்கி டாக்கியை மட்டும் அங்கு பக்கத்தில்... பத்திரமாக வைத்து விட்டு....

அவனுடைய பிஸ்டலை கையில் பிடித்து கொண்டு நதியில் குதித்தான் எழில் வேந்தன்...

*************

கதை எப்படி போய்ட்டு இருக்குன்னு சொல்லுங்க செல்லம்ஸ் 😍😍

உங்கள் கருத்துக்களை சொல்லி விட்டு போங்க டியர்ஸ் 💞💞💞

Urs....
Kani 😍🙈
 
Advertisement

Latest Posts

Advertisement

Top