Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்காக நான் - அத்தியாயம் 2

Advertisement

Subhashri

Member
Member
எங்கோ பிறந்தாய் நீ..
என்னுள் நிறைந்தாய் நீ..
இங்கே உயிரில்லா உடல் போல்
உருகுகிறேன் நான்....
இதோ வந்துவிட்டேன்

உன்னைத் தேடி.....

########$$$$#######

உன்னைத் தேடி

அர்ஜுனுடைய தாத்தா மாணிக்கவாசகம் கைத்தடி சகிதமாக மரகதம் பாட்டி பின் தொடர வெளியே வந்தார்.
" அந்த பெண்ணிடம் அப்படி என்ன தான் சொக்கு பொடி இருக்குதோ, தெரியலை. அவளை பார்த்ததிலிருந்து கட்டினா அவளைத் தான் கட்டுவேன்னு இவன் ஒத்தக் கால்ல நிக்கறான். என் பேரன் அழகுக்கு அழகான பணக்காரப் பொண்ணுங்களா வரிசை கட்டி நிப்பாளுக. இவன் என்னடான்னா
அந்த ஸ்டேஷன் மாஸ்டர் பொண்ணத்தான் கட்டுவேன்னு அடம்பிடிக்கறான்." என்று பாட்டி அங்கலாய்த்தாள்.

" அவன் மனசுக்கு அந்த பெண்ணை பிடிச்சு போச்சு. கல்யாணம் பண்ணிட்டு வாழப் போறவன் அவன். அவன் சந்தோஷம் தான் முக்கியம்" என்று தாத்தா மாணிக்கவாசகம் சொன்னார்.

உடனே பாட்டி ," ஆமாம் ஆமாம்!! அதுல எந்த சந்தேகமும் இல்லை. அதனாலதான அவன் சொன்னவுடனே எல்லாரும் பொண்ணு பார்க்க கிளம்பிட்டோம். அவனோட இஷ்டம் தான் முக்கியம்." என்றாள்.

உள்ளேயிருந்து அர்ஜுனின் அம்மா லீலா பட்டுப்புடவையும் நகையும் மினுமினுக்க வெளியே வந்தபடி," அர்ஜுன்!! உன் செல்லத் தங்கை நித்யா வழக்கம் போல் தான் எங்கேயும் வரலைன்னு தகராறு பண்றா.. நீ போய் அவளை கூட்டிட்டு வா" என்றாள்.

அர்ஜுன் நிதானமாக," அம்மா!! அவளுக்கு வர இஷ்டம் இல்லைனா அவ வரவேண்டாம். கட்டாயப்படுத்தாதே ,விடு" என்றான். ஒரு வகையில் அவள் வராமல் இருப்பதும் அவளுக்கு நல்லதுதான் என்று எண்ணினான்.

" சரி, கிளம்புவோமா?" என்றபடி காருக்குள் ஏறினான். அவனைத் தொடர்ந்து அனைவரும் காரில் ஏறி அமர, கார் பெண் வீட்டை நோக்கி நகர்ந்தது.

திவ்யாவின் வீடு

திவ்யாவின் அம்மா கலாவதி சமையலறையில் பரபரவென்று மாப்பிள்ளை வீட்டாருக்கு இனிப்பு காரம் செய்வதில் மும்முரமாக இருந்தாள்.

அங்கு வந்த அவள் கணவன்," என்ன, கலா!! எல்லாம் தயாராகி விட்டதா? மாப்பிள்ளை வீட்டார் வர்ற நேரம் ஆயிடுச்சு." என்று பரபரத்தார்.

" இதோ முடிஞ்சுடுச்சுங்க. உங்க செல்ல பொண்ணு தயாராகிட்டாளான்னு போய் முதல்ல பாருங்க. அவ சிநேகிதி அனு வந்து அவளுக்கு அலங்காரம் பண்ணிட்டு இருந்தா. அலங்காரம் முடியறதுக்குள்ளே மாப்பிள்ளை வந்து அவள பார்க்கிறதுக்கு காத்திருக்கற மாதிரி ஆகப் போகுது" என்றாள் கலா.

" காத்திருக்கட்டும். என்னோட அழகு இளவரசியை பார்க்கறதுனா சும்மாவா?"
என்றார் திவ்யாவின் அப்பா ராஜகோபாலன் பெருமையுடன்.

" ஆமாம். இன்னும் கொஞ்ச நாள்ல அவ கல்யாணமாகி அவங்க வீட்டுக்கு போனப்பறமும் இதே மாதிரி கொஞ்சிக்கிட்டு இருங்க. விளங்கிடும்." என்றாள் அடுப்பை அணைத்துக்கொண்டே.

" பொறாமையைப் பாரு. அவளுக்கு எவ்வளவு வயசானாலும் இப்படித்தான் கொஞ்சிக்கிட்டு இருப்பேன். சரி, நான் போய் என் தேவதை தயாராகிட்டாளான்னு பார்க்கறேன்" என்றபடி நகர்ந்தார்.

திவ்யா அலங்காரம் முடிந்து நிஜமாகவே ஒரு தேவதை போல் மின்னினாள். அவளைப் பார்த்த அவள் அன்புத் தந்தையின் கண்கள் பனித்தன. அவர் ஏதோ பேச வாயெடுக்கும் முன் வாசலிலிருந்து ஸ்ரீதரின் குரல் கேட்டது. "அப்பா!! மாப்பிள்ளை வீட்டார் வந்தாச்சு."

அவர் அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தார்.

மாப்பிள்ளை வீட்டார் அனைவரையும் வரவேற்று இரு வீட்டாருடைய‌ வழக்கமான உபச்சார உரையாடல்கள் முடிந்தபின் மரகதம் பாட்டி," நேரமாகுது. பொண்ண பார்த்துடலாமே." என்றாள்.

உடனே திவ்யாவின் பாட்டி மணியம்மை "இதோ, கூட்டிட்டு வர சொல்றேன்" என்று சொல்லி விட்டு உள்பக்கமாக திரும்பி,"அனு திவ்யாவை கூட்டிட்டு வாம்மா" என்றாள்.

திவ்யா அனுவுடன் அவர்கள் எதிரில் வந்து நின்றாள். அர்ஜுன் அவளைக் கால் முதல் தலை வரை மெதுவாகப் பார்த்தான். அவள் தலையை லேசாக சாய்த்து வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒடிசலான தேகம். கள்ளம் கபடமற்ற குறும்பு செய்யும் குழந்தையின் அழகு தெரிந்தது அந்த . படபடக்கும் கண்களில் அவனுக்கு. நிறைய பேசத் துடிக்கின்ற சிறிய இதழ்கள்,வெள்ளந்தியான முகம் அவனுக்குள் பல மடங்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது போல அப்பாவி முகத்தை உடைய பெண் அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்க நினைப்பாளா? ஒருவரின் துன்பத்துக்கு காரணமாக இருந்துவிட்டு சின்ன உறுத்தல் கூட இல்லாமல் இப்படி புன்னகைத்து கொண்டிருக்க முடியுமா? ஆனால் அவனுக்கு உண்மை தெரியும். தன்னை போன்ற இன்னொருவரின் அழுகை இவள் மனத்தை சிறிதும் அசைக்கவில்லை. வெளியே பார்க்க மென்மையான குணமுடையவள் போல் தெரியும் இவள் உள்ளுக்குள் எவ்வளவு குரூரமானவள் என்று அவன் அறிவான். அவன் இந்த அப்பாவி முகத்தைப் பார்த்து ஏமாறுவதாக இல்லை. விரைவில் அவள் முகத்திரையைக் கிழித்து அவளுடைய உண்மையான சொரூபத்தை எல்லாருக்கும் காட்டவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

இதற்குள் மணியம்மை பாட்டி திவ்யாவை பார்த்து, " எல்லாரையும் கும்பிட்டுக்கம்மா." என்றாள். திவ்யா கீழே பணிந்து விழுந்து கும்பிட்டாள். எழுந்து நின்றபோது தான் அவள் அர்ஜுனை பார்த்தாள். பார்த்தவுடன் அவள் உடல் சிலிர்த்தது. என்ன அழகு இவன். ஊடுருவிப் பார்க்கும் ஆழ்ந்த கருநிற கண்கள், கூர்மையான நாசி, மெல்லிய மீசை, லேசாக வளர்ந்திருந்த தாடி, அகன்ற தோள்கள் என ஆறடியில் ஆண்மைக்கு இலக்கணம் சொல்ல பிறந்தவன் போல் இருந்தான். கண்டதும் காதல் வயப்பட்டு போனாள் அவள். அவளுக்காக கடவுளே அவனை செய்து அனுப்பியது போல் இருந்தது. அவன் முகத்தில் சிறிது இறுக்கம் இருந்தது. ஆனால் அதுவும் அவனுக்கு அழகாய் தான் இருந்தது.

இப்படி அவள் பலவித உணர்வலைகளோடு திணறிக்கொணடிருக்கையில், இதுவரை பேசாமல் இருந்த தரகர் பேச ஆரம்பித்தார். " பொண்ணுக்கும் பிள்ளைக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுடுச்சுனா மத்த விஷயமெல்லாம் பேசிடலாமே" என்றவரை இடை மறித்த அர்ஜுன், " பேசறதுக்கு ஒண்ணும் இல்லை தரகரே.. பொண்ணு எதுவும் கொண்டு வரணும்னு நான் எதிர்பார்க்கலை. கல்யாண செலவெல்லாம் நாங்களே பார்த்துக்கறோம். கல்யாணம் ஒரு வாரத்துக்குள்ள நடக்கணும்" என்று அவன் கூறியதைக் கேட்டு அனைவரும் வாயடைத்துப் போய் அவனைப் பார்த்தார்கள்.


. தொடரும்..........
 
Top