Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உண்மை காதல் மறந்து போகுமா பகுதி 6

Advertisement

kavi nila

Active member
Member
காதல் 6

பிரகாஷ் சிவாவிற்கு கால் செய்தான். சிறிது நேரத்திலே எடுத்த சிவா, “ஹாலோ.. என்னடா” என அனைவரும் அவனை கேள்வியாக பார்க்க, அவனோ திரு திருவென முழித்தான்.

அவன் பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க கடுப்பான சிவா, “போன் பண்ணால் பேசனும் இப்படி அமைதியா இருந்தால் என்ன அர்த்தம். எனக்கு இங்க நிறைய வேலை இருக்க. என்னோட நேரத்தை விணாக்காதை” என மேலும் கத்தும் முன்,

“ஹாலோ.. சிவா இங்க உனக்கு போன் பண்ணாங்களாம் பட் உன்னோட போன் நாட் ரீச்சபல் அதான் எல்லாரும் கொஞ்ச பயந்துட்டாங்க. அதனால் தான் உனக்கு கால் பண்ணி ஸ்பீக்கரில் போட்டு இருக்கேன்” என ஒரே முச்சாக சொன்னான்.

அவளோ, “ஓ.. ரித்துவும் சந்தோஷீம் கிளம்பிட்டாங்களா”

“இல்ல க்கா.. உன் கிட்ட பேசலாம் தான் கால் பண்ணேன். பட் ஸ்வீட்ச் ஆப்னு வந்துச்சு. அதான் வெயிட் பண்றேன்”, என ரித்து சொன்னாள்.

“நான் முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன் மா. இப்ப தான் போனை ஆன் பன்னேன். சரி பத்திரமா போய்ட்டு வா. சந்தோஷ் எங்க”, என

“நானும் இங்க தான் இருக்கேன்”, என்றான் சந்தோஷ்

“சந்தோஷ்.. நான் சொன்னது எல்லாம் நியாபகம் வச்சிக்கோங்க. நான் ப்ரீயா இருக்கும் போது கால் பண்றேன். உங்களை அங்க ரிசிவ் பண்ண என்னோட ப்ரென்டு வருவான். எதாவது உதவி வேண்டும் என்றாலும் அவன் கிட்ட கேளுங்க”, என பல அறிவுரைகளை வழங்கிவிட்டு தனக்கு நேரமாவதை உணர்ந்து போனை கட் செய்தாள்.

ஒரு வாரம் கடந்த நிலையில் இரவு சிவாவின் வீட்டில் தனக்கு கொடுத்த அறையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தான் பிரகாஷ்.

அவனது போன் ரிங் ஆனாது. திரையில் ‘ஸ்ரீபேபி” வர மனதில், ‘என்ன இந்த நேரத்தில் பேபி கால் பன்றா சரியில்லையே’ என போனை அட்டன் செய்தான். பேசிவிட்டு தூங்க போகும் நேரத்தில் பொழுதே விடிந்துவிட்டது.

காரில் சென்ற சிவா விமானத்தில் சென்னை வந்தாள். வெளியே உள்ள கேப்பில் தனது வீட்டின் விசாலத்தை கூறிவிட்டு தனது மடிகணினியில் தன்னை தொலைத்தாள்.

சிவாவின் வீட்டில் பிரகாஷின் பெற்றோர்களுடன் காமாட்சி பேசி கொண்டு இருந்தார்.

சரவணன், “சிவா பாப்பா ஏன் கல்யானம் வேண்டாம் சொல்றாங்க. எதாவது பிரச்சனையா?” என்றார்.

“அவளுக்கு என்ன பிரச்சனைனே தெரியலை. அவ எங்க யார் கூடவும் அவ்வளவா பேசனதே கிடையாது. அவளுக்கு அவங்க அப்பா தான் உயிர். அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள். சின்ன வயசில் கூட ரொம்ப தைரியாமான பெண். அவ பயந்து நாங்க யாருமே பார்த்தது இல்லை.

அவளை பார்த்து எந்த அளவுக்கு எனக்கு பெருமையா இருக்கோ அதே அளவு பயமாகவும் இருக்கு. தன்னை எதிர்கிறவங்களை அழிச்சிட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பா. நான் கண் முடறத்துக்குள்ள அவளுக்கு ஒரு நல்லது நடக்கனும்”, என கவலையாக சொன்ன காமாட்சியை பார்க்க பாவமாக இருந்தது இந்த தம்பதியினருக்கு.

கார் சத்தம் கேட்டவுடன் தன்னை சமன் படுத்திக் கொண்டார் காமாட்சி. அதே நேரத்தில் உள்ளே நுழைந்தாள் சிவா.

மகளை பார்த்ததும் கவலையெல்லாம் பறந்து போனது. முவரும் சிவாவிடம் நலம் விசாரித்தனர். பின் தனது அறைக்கு சென்றாள்.

சந்தோஷ் ஊரில் இல்லாத காரணத்தால், அவனுக்கு பதிலாக இன்று நடக்க இருக்கும் மீட்டிங்கிற்கு தன்னை போக சொன்ன தந்தையை சபித்துக் கொண்டே கட்டிலில் இருந்து எழுந்தான், பிரகாஷ்.

தயாராகி வந்தவனுக்கு வீட்டின் அமைதியும் பரபரப்புமே சொன்னது சிவாவின் வரவை. அனைத்து இடங்களிலும் தேடியும் சிவாவை காணாததால் அவளின் அறைக்கு செல்ல நினைத்த மனதின் வேண்டுக்கோளை ஏற்று, மெதுவாக யாரின் கவனத்தையும் ஈர்க்காமல் சிவாவின் அறைக்கு சென்றான்.

அப்போது தான் குளித்து விட்டு, கையில்லா டாப்ஸ் மற்றும் லாங் ஸ்கர்ட் போட்டுக் கொண்டு பாத்ருமில் இருந்து வெளியே வந்தாள். இவனை கண்டு சிவா அதிர அவளின் கையை பார்த்து பிரகாஷ் அதிர்ந்தான்.

வலது கை தோள்பட்டை கீழ் கட்டு பொட்டு இருந்தது. என்ன என்று கேள்வியாக சிவாவை பார்த்தான்.

அவன் பார்வையின் பொருளை உணர்ந்தாலும், “அறிவில்ல ஒரு பெண்ணோட ருமிற்கு இப்படி தான் சொல்லாமல் வருவீங்களா. நீங்கயெல்லாம் படிச்சு என்ன செய்ய போறீங்க” என பொறிய

"இதை வேற யார் கிட்டாவது சொல்லு என்கிட்ட இல்ல, நீங்க டாப்பிக்கை மாற்றாமல் எப்படி அடிப்பட்டது என்று சொல்லுங்க", என

“அது உங்களுக்கு தேவையில்லாதது. உங்க வேலையை மட்டும் பாருங்க”, என கூறி வெளியே போ என்று கதவையை சுட்டிக் காட்டினாள்.

கூறினால் தான் போவேன் என்ற ரீதியில் சிவாவின் அறையில் நின்றான்.

பின் நடந்ததை அவனிடம் வேறு வழியில்லாமல் கூறினாள்.

“இது பெரிய பிரச்சனையா இருக்கும் போல”, என பிரகாஷ் சற்று கோபமாக கூற

“எஸ்.. நானும் எனக்கு தெரிஞ்ச விதத்தில் இதை விசாரிக்க சொல்லியிருக்கேன். பட் அவங்க கிட்ட இன்னும் எத்தனை பேர் இது மாதிரி இருக்காங்க என்று தெரியாமல் அடுத்த முவ் பண்ண முடியலை. அதை தான் முதலில் கலக்ட் பண்ண சொல்லியிருக்கேன்”,

“நீங்க எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. ரியலி யூ ஆர் கிரேட்”, என சில பல ஐஸ் கட்டியை அவள் தலையில் வைக்க,

மெலிதாக அரும்பிய புன்னகையை மறைத்துக் கொண்டு, “போதும் உங்க ஐஸ். இந்த விசயம் வேற யாருக்கும் தெரிய கூடாது” என எச்சரித்தாள்.

சுத்தம் இப்ப தான் லைட்டாக சிரிச்சாங்க. அதுக்குள்ள மறுப்படியும் வேதாளம் மாதிரி மாறிட்டாங்க. இவங்களை நான் கரெக்ட் பண்றத்துக்குள்ள எனக்கு வயசாகிடும் போலயே, என மனதில் தன் விதியை நினைத்து நொந்துக் கொண்டே சிவாவிடம் தலையை மட்டும் ஆட்டினான்.

நாட்கள் வேகமாக செல்ல சிவாவும் தனது வேலையை தீவிரமாக செய்ய, பிரகாஷ் அவனது வேலையான சிவாவை சைட் அடிப்பதை மட்டுமே மிக தீவிரமாக செய்தான். இதை தெரிந்தும் தெரியாதது போல சிவா இருந்தாள்.

ஹனிமுன் சென்ற தம்பதியினரும் தங்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

ஒரு நாள் சிவா தனது அலுவலகத்தில் அடுத்த நாள் நடக்க இருக்கும் டென்டர்க்கு தயார் செய்து கொண்டு இருக்கும் போது அவளுக்கு போன் வந்தது.

அதை காதில் வைத்தவள், அதில் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்து விட்டாள். அவளாள் நம்ப முடியாத பல தகவல் அதில் இருந்தது.

உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் இதை எப்படி கையாளுவது என பொறுமையாக யோசித்தாள். பின் அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்து விட்டு தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

சந்தோஷின் இல்லம், காமாட்சி தனது மகளை பார்க்க அங்கு வந்தார். அனைவரும் பேசிக் கொண்டே சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

பிரகாஷ் தனது அண்ணனையும் அண்ணியையும் கலாய்த்துக் கொண்டே இருக்க அவனது போன் வந்தது . ‘ஸ்ரீபேபி’ என திரையில் வருவதை அனைவரும் பார்த்தனர். அவனோ அதை கட் செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தான். திரும்பவும் கால் வர அதை பேச எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அவன் அதை பேசிவிட்டு வந்து அமரவும் சிவா வரவும் சரியாக இருந்தது.

ரித்து, “அது யாரு பிரகாஷ் ஸ்ரீபேபி? உன்னோட ப்ரெண்டா இல்ல girlfriend ” என அப்பொழுது தான் குடிக்க தண்ணிரை வாயில் வைத்தவனுக்கு புறை ஏறியது.

“பார்த்து குடிடா”, என அவனின் அம்மா அவனது தலையை தட்ட அவனோ மனதில் 'அய்யோ இந்த அண்ணி இதை இப்ப தான் கேட்கனுமா நானே இப்ப தான் சிவாவை என்னை பார்த்து சிரிக்க வைச்சியிருக்கேன் அது போறுக்கலை போல' என தன் அண்ணியை தீட்டிக் கொண்டே

“எ.. என்.... என்னோட பி.. ப்ரெண்டு அண்ணி. நானும் அவளும் ஒன்றாக படிச்சோம்” என தேவையில்லாமல் இளித்துக் கொண்டே கூற

அனைவரும் அவனை நம்பாமல் ஒரு பார்வை பார்த்தனர். ‘என்னடா இது யாரோட பார்வையும் சரியில்லையே’ என நினைத்து அடுத்த கேள்விக்கு பயந்து வராத போனை வந்தது போல் பேசிக் கொண்டே தனது அறைக்கு சென்றான்.

அவனது செயலில் அனைவரும் சிரிக்க, சிவாவிற்கு முக்கியமான போன் வந்தது. அதை பேச மாடிக்கு சென்றாள்.

“ஹாலோ.. மேடம் நீங்க சொன்னதை முடிச்சிட்டோம்.. ஆனா இது ரொம்ப பெரிய நெட்வோர்க் என சற்று பயந்த குரலில் சொன்னான்.

“தப்பு பண்ற அவனே பயப்படலை மிஸ்டர்.. நீங்க ஏன் பயப்படறீங்க.. அண்ட் ஒன் மோர் திங் அவன் இதுவரைக்கும் என்னை மாதிரி ஒரு ஏதிரியை பார்த்து இருக்க மாட்டான். தென் வேற எதாவது விசயம் இருக்கா” என கேட்க

“மேடம் இது நாடு முழுவதும் பரவி இருக்கு. ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு குருப் இருக்கு. நான் அவங்க லிஸ்ட் எல்லாம் கிடைக்கிறதுக்கு முயற்சி பண்றேன். இன்னும் இரண்டு நாளில் உங்க கிட்ட சொல்றேன்”, என


"ஓகே.. அந்த குருப்பிற்கு கண்டிப்பாக ஒரு தலைவன் இருப்பான். அதுவும் யாரு என்று பாருங்க. நீங்களும் கொஞ்சம் கேர்பூல்லா இருங்க" என்று விட்டு திரும்ப அங்கே பிரகாஷ் அவளை முறைத்துக் கொண்டு இருந்தான்.

அவனை பார்த்தும் பார்க்காத மாதிரி அவனை தாண்டி செல்ல போக, அவளது கையை இழுத்தான். இழுத்த வேகத்தில் அவன் மேலே மோதி நின்றாள்.

பிரகாஷ் கோபமாக, “நீ பன்றது சரியில்ல சிவா. அவங்க தப்பு பண்ணா அதை சம்பந்தப்பட்ட துறை கிட்ட கம்பளைன்ட் பண்ணு. அதை விட்டு நீயே ஏன் இப்படி பண்ற”

“எனக்கு இது தான் கரெக்ட் என்று தோனுச்சு. அவங்க பின்னாடி யார் இருக்காங்கனு தெரியுமா? பெரிய பெரிய அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், சமூகத்தில் முக்கியமான ஆட்கள்.. இது மாதிரி வெளிய தன்னை நல்லவனாக காட்டிக்கிற பாதி பேர் இதில் சம்பந்த பட்டு இருக்காங்க. அங்க நான் பார்த்தது எவ்வளவு கொடுமையான விசயம் தெரியுமா.. உன் கிட்ட சொன்னேன்ல”

“சொன்ன.. பட் இதில் நீ நேரடியா இன்வால் ஆகிறது நான் எதிர்பார்க்காத ஒன்று. உனக்கு எதாவது ஆகிடுமோ என்று பயமா இருக்கு சிவா”, என அவனின் குரலில் கோபமா பயமா அல்ல என்ன என்று தெரியவில்லை.

“என்னைவிட அவங்க கிட்ட மாட்டிட்டு இருக்கிற எல்லோரும் ரொம்ப சின்ன பசங்கடா. அவங்க வாழ்க்கையே அழிச்சிட்டு அதுல அவங்கயெல்லாம் நிம்மதியா வாழறாங்க. என்ன தப்பு பண்றோம் என்று கூட தெரியாமல் முன்று வேலை சோறுக்காக பெரிய தப்பெல்லாம் பண்றாங்கடா. என்னால அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. கண்டிப்பா அதை வேரோட அழிப்பேன்”, என கண்ணில் வேறியோட பேசினாள்.

“சரி நீ அதை வேரோட அழி நான் வேண்டாம் என்ற சொல்லலை. பட் எனக்கு தெரியாமல் நீ எதுவும் பண்ண கூடாது. ப்ராமிஸ் பண்ணு”, என தன் கையை நீன்டினான்.

சிவா,
'சாரி பிரகாஷ் நான் இப்ப இறங்கியிருக்க காரியத்தில் யாரையும் இன்வால் பண்ண எனக்கு இஷ்டம் இல்ல. எனக்கு என்னோட உயிரை விட என்னை சற்றி இருக்கிறவங்க உயிர் ரொம்ப முக்கியம். நான் செய்ய போற எதையும் என்னால என்கிட்ட சொல்ல முடியாது' என மனதில் நினைத்துக் கொண்டே “ப்ராமிஸ்” என்றாள்.


தொடரும்
நிலா ❤
 
Top