Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிக்கார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 4

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 4

“இங்க பாருங்க அண்ணா, வீடு வந்ததுகூட தெரியாம எப்படி தூங்குதுங்கனு.” வருண், ப்ரவீனை அழைத்துக்காட்ட.


“ நீ ஓட்டிட்டு வந்ததுக்கு நானே இன்னும் கொஞ்சம் நேரத்துல தூங்கிருப்பேன், அவங்க தூங்குறதுல தப்பே இல்லை வருண்.”



“என்ன அண்ணா, உங்க ஆளுக்கு சப்போர்ட் பண்ணுறீங்களா.,”



”பின்ன, அவ தானே என் வருங்காலம்.”



“எல்லாம், என் நேரம்...” தலையில் தடித்துகொண்டு அவர்களை எழுப்பினான்.


”அகல்யா, லாவன்யா, பாரு வீடு வந்துருச்சு... எழுந்திரிங்க.”



“அதுக்குள்ளவ வீடு வந்துருச்சு, ஆனா எனக்கு தூக்கம் போகலையே” என மீண்டும் லாவன்யாவின் மடியில் படுத்து உறங்க ஆரம்பித்தால் அகல்யா.


“ஏய் மூட்ட பூச்சி, எழுந்திரி வீடு வந்துருச்சுனு சொல்லுறேன் இன்னும் தூங்கிட்டே இருக்க.” வருண் அவளின் பட்டபெயர் சொல்லி அழைக்க.



“லாவன்யா, உனக்கு ஒரு உண்மை தெரியுமா? நம்ம காலேஜ் ரீமா இருக்காள அவளை வ...” என்று சொல்ல ஆரம்பித்தவள். வருணின் முகத்தை பார்க்க.



“ அவனோ, சாரி அகல்யா, இனிமே அண்ணான் அப்படி சொல்லமாட்டேன், வீடு வந்துருச்சும்மா இறங்கு தங்கச்சி.” என அவள் சொல்லிடக்கூடாது என பாசமாக அழைத்தான்.



“அது... இனிமே மூட்ட பூச்சினு சொன்ன, அடுத்த நிமிஷம் உன் லவ் காலி” என அவனை மிரட்டிவிட்டு லாவன்யாவுடன் முன்னே சென்றாள்.




“பாருவோ, தூக்கமுடியாத பெரிய பையை தூக்குவதற்க்கு முயற்சி செய்வதை பார்வத்தவன், அவளிடம் சென்று, ‘நான் கொண்டுவரேன் கவி, கொடு’ என அவளிடம் இருந்த பையை வாங்கிகொண்டு அவளுடன் நடக்க ஆரம்பித்தான் ப்ரவீன்.



“வாழ்ந்தா ப்ரவீன் அண்ணா மாதிரி வாழனும்… ஹ்ம்ம் எனக்குனு ஒன்னு இருக்கே, என்னைவிட்டு போறதுலயே இருக்கு.” என அகல்யாவுடன் தீவிரமாக பேசிகொண்டு செல்லும் லவன்யாவை பார்த்தான்.




”மேகலை இங்க பாரு நம்ம பேரப்பிள்ளைங்க எல்லாம் வந்துட்டாங்க. ‘வாங்க, வாங்க என் செல்லங்களா...’ என நாதன் வரவேற்க.



“ ஆத்தாடி, என் பேத்திங்க எவ்வளவு அழகா இருக்காங்க. வாங்க, வாங்க என் தங்கங்களா... ஏன் கண்ணு, இவ்வளவு இளைச்சுட்ட” என பாட்டி அகல்யாவை கேட்க.



“தாத்தா... பாட்டி...” என கத்திகொண்டே அவர்களை கட்டிபிடித்து, மகிழ்ச்சிய வெளிப்படுத்தினர்.




“போங்க பாட்டி, நான் கொஞ்சமா குண்டாகிட்டேன். இதுல நான் இளைச்சுட்டேனா.”



“வாய்யா, ப்ரவீனு, வாய்யா, வருணு...”



“என்ன பாட்டி, உங்க பேரன் வந்துட்டானு, எங்களை எல்லாம் மறந்துட்டேங்களோனு நான் நினைச்சேன்”.



“எப்படி மறப்பேன், நீங்களும், எனக்கு உசுரு தான்யா.”


“அப்போ, உன் பேருல இருக்க நாற்பது ஏக்கர் நிலத்தை எழுதி வைங்க அப்போ நம்புறேன்.”


“ அவ்வளவுதானே, ராசா... இந்த பாட்டியேடது மட்டுமில்லை, இந்த எல்லா சொத்துமே இந்த வீட்டுல பிறந்தவங்க எல்லாத்துக்கும் சொந்தம்.”



“பாட்டி, அவனே உங்களை கலாய்க்குறான். நீங்க அது தெரியாம பேசிட்டு இருக்கீங்க. டேய் வந்த உடனே ஆரம்பிக்குறையா” என ப்ரவீன் பாட்டிக்கு எடுத்து சொல்ல.



“ என் பேரன் தானே என்னை வம்பு பண்ணுறான். விடு ராசா.” என வெள்ளந்தியாக பேசினார்.



“ஆமா, எங்க நம்ம ஆம்ஸ்ட்ராங்க் சிவா மாமா” என வருண் அடுத்த வேடிக்கையை தொடங்க.



“முதல போய் குளிச்சிட்டு வாடா தடிமாடு” என அவனது தந்தை ராஜேஷ் கோவமாக சொல்ல.



“ம்க்கும் வந்துட்டாரு வால்ட்டர், இனி இவர் ஆரம்பிச்சா நம்ம காதுல இருந்து இரத்தம் வந்துரும்.” அவரின் முகத்தை பாவமாக பார்த்தபடி மனதுக்குள்ளேயே பேசிவிட்டு சென்றான்.



“குளித்துவிட்டு வந்தவன், துணி மாற்றிகொண்டிருக்கும் போது, அவனது அலைப்பேசியில் குருந்தகவல் வந்தற்க்கான ஒலி எழுப்பியது. துணி மாற்றிவிட்டு அலைப்பேசியை எடுத்துப்பார்த்தவனின் மனம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இனி எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடலாம் என்று.”




“இருந்தும் மனதில் ஒரு அபாயம் எழுப்போவது போல் தோன்றியது. அவனை சிந்திக்கவிடாமல் அடுத்தடுத்த குறுந்தகவல் வந்ததை பார்த்தவனின் மனம் லேசாகிப்போனது.”



“அனைவரையும் காண கீழ் இறங்கி சென்றான். செல்லும் அவன் மீது அகல்யா மோதிவிட, சட்டென்று கோவம் அவனுக்கு தலைக்கேறியது. கோவத்தை கட்டுப்படுத்தியவன். மெதுவாக திரும்பி பார்த்தான்.”


“சாரி, மாமா தெரியாம தான் உங்கமேல மோதிட்டேன். லாவன்யா என்னை துரத்திட்டு வந்தா, ஓடிவர வேகத்துல உங்க மேல மோதிட்டேன். சாரி மாமா”. என அவள் மன்னிப்பு கேட்க.



“ம்ம்... சரி... எப்போ வந்த அகல்யா” என்றும் இல்லாத திருநாளாய் அவன், அவளிடம் பேச. அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.



“அவளின் அதிர்சியை பார்த்தவன், மீண்டும் அவளை ஏதோ கேட்க்கும் போது, லாவன்யா வந்துவிட்டாள்.”



“மாட்டினிய...” சொல்லிகொண்டு, சிவாவை பார்த்தாள். ‘அண்ணா, எப்படி இருக்கீங்க...’



“நல்லா இருக்கேன், லாவன்யா. ‘நீ எப்படி இருக்க, பாரு எங்க’. அவன் கேட்க.



”அவ ரெடியாகிட்டு இருக்காண்ணா.”



“சரி வாங்க கீழ போகலாம்.” லாவன்யாவையும், அகல்யாவையும் சேர்ந்து அழைத்தான்.


“லாவன்யா, அகல்யாவின் அதிர்ச்சியை பார்த்தவள், அவன் முன் எதுவும் சொல்லாமல். ‘ நீங்க போங்க அண்ணா, பாரு இப்போ வந்துருவ அவளையும் கூப்பிட்டு வரோம்.” என சொல்லி அவனை முன்னே அனுப்பிவிட்டு, அகல்யாவின் அதிர்ச்சி என்ன காரணம் என கேட்க அவளை உலுக்கினால்.




”ஏய், அகல்...உலுக்கியவள். ‘இப்போ பேசுனது சிவா மாமா தானே.’

“ஆமா, அதுக்கென்ன டி...”



“எவ்வளவு, வருஷம் கழிச்சு மாமா என்கிட்ட பேசிருக்காங்க தெரியுமா?”


“அதுக்கு தான் இந்த, அதிர்ச்சியா... வா கீழே போகலாம்,” அதை சாதாரணமாக எடுத்துகொண்டு அகல்யாவை கூட்டிகொண்டு கீழே சென்றாள்.


“அனைவரும், ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுகொண்டு பெரியவர்கள் அவரவர்களின் தொழில் பேச்சும், சிறியவர்கள் ஒருவருகொருவர் வம்பிழுத்துகொண்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.”


“கௌதம் மட்டும் சிவாவிடம் வேலையைப்பற்றி கேட்டுகொண்டிருந்தான். அப்பொழுது, மேகலை ‘ நம்ம எல்லாரும் கூடி இருக்குற நேரத்துல நம்ம குலசாமி கோவிலுக்கு கெடாவெட்டி பொங்கல் வைக்கலாம் நான் நினைக்குறேன்,உங்க எல்லாருக்கும் இதுல சம்மதம் தானே’ என வீட்டின் மருமகனிகளிடமும், மகன்களிடமும் கேட்க.



“எங்க எல்லாருக்கும், சம்மதம் தான் அத்தை.”


“ஆமா, அம்மா எங்களுக்கும் இதுல சம்மதம் தான்”.



“அவர்களின் சம்மத்தை கேட்டதும், அவருக்கு மகிழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் மூலம் சிவாவிற்க்கும், கௌதமிற்க்கும் கல்யாணம் செய்வதைப்பற்றி குறி கேட்க்கதான் அவர் இப்படி செய்தது.”



தொடரும்…………..
Nice ep
 
Top