Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி ‘ இளந்தென்றலோடு ஒரு கவிதை 23

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 23



ஊஞ்சலில் அமர்ந்து மல்லி பூவை தொடுத்து கொண்டிருந்த விசலாட்சியின் மனம் காலையில் சுதா கொடுத்துவிட்டு போன ஜாதகத்திலே நிலைத்துகொண்டிருந்தது. கணவரிடம் ஜாதகம் பற்றி பேசலாமா? வேண்டாமா? என அவர் சிந்தித்துகொண்டே பூவை தொடுத்தவர் மனம் இன்னும் மகன் மீது உள்ள எண்ணத்தை மற்றும் மாற்ற முடியவில்லை.




தன் மகன் எதுவோ மறைப்பது போல ஒரு உணர்வு. ஆனால் அதை கேட்டால் தான் சிறு வயது முதல் மாற்ற முடியாத மாற்றங்களை இப்பொழுது சொல்லி மழுப்பிவிட்டு போவது எதற்க்கு. வீட்டிலும் அமைதியாக தான் இருப்பான் என்று இல்லை, பேசுவான் அதில் ஒரு விலகல் இருக்கும். நண்பர்களிடம் மட்டுமே அந்த விலகல் இருக்காது.




ராம், பவானியிடம் பள்ளி, கல்லுரி வரை தொடர்ந்த நட்பு. ஆனால் இப்பொழுது பவானி வெளியூரிலும், ராம், விதுரன் மட்டுமே ஒன்றாக இருக்கிறார்கள். அவனின் தோழர்களை வீட்டுக்கு அழைத்து வந்தாலும், அவர்களிடம் இருக்கும் பேசும் ஆர்வம், தாய் , தந்தையிடம் அந்த ஆர்வம் இருப்பதில்லை.





இதில் விதுரனை மாப்பிள்ளை கேட்டு வந்துவிட்டார்கள், ஆனால் அவனின் மனம் மட்டும் நேற்றில் இருந்து மாறிவிட்டது எதனால்? ஒருவேளை அவனிடம் அதிக பாசம் மட்டுமே காட்டிவிட்டதால் பேச தயங்கிறானோ? இல்லை அவனிடம் மனம்விட்டு பேசும் படி கூறாதுவிட்டது தப்போ? விசலாட்சி மனம் அந்த பக்கம் போனால் வழி கிடைக்குமா? இல்லை இந்த பக்கம் போனால் வழி கிடைக்குமா? என்று அவர் யோசித்தார்.




எந்த பக்கம் போனாலும் நமக்கு வழி கிடைக்காது. வழி சரியாக கிடைக்க வேண்டுமெனால் இந்த வழியை அமைத்த கடவுளை கேட்டால் தான் உண்டு. என்பது போல் மகனிடமே வாய்விட்டு உண்மையை கேட்டால் தான் பதில் கிடைக்கும். அவரின் மனம் எடுத்து சொல்ல அவரும் பூவை தொடுத்து முடிக்க, அவரும் முடிவெடுக்க சரியாக விஸ்வநாதனின் கார் வாசலுக்கு வந்து நின்றது.




தொடுத்த பூவை தண்ணீர் கிண்ணத்தில் போட்டுவிட்டு, கணவனின் கையில் இருந்த சூட்கேஸை வாங்க அவரின் அருகில் சென்றார். புன்னைகையுடன் “வேலை நல்லபடியா முடிஞ்சதாங்க...” கேட்க




“எல்லாம் நல்லபடியா முடிஞ்சது விசலாட்சி... ரொம்ப டயர்டா இருக்கு. ரெப்ரஷ் பண்ணிட்டு வரேன்.” அவர்களின் அறைக்கு சென்றவரின் பின்னால் விசலாட்சியும் சென்று அவருக்கு மாற்றுடையும், துண்டையும் எடுத்து வைத்துவிட்டு. காஃபி, ஸ்நாக்ஸை ரெடி செய்து ஹால் சோபாவிற்க்கு வர, விஸ்வநாதனும் வந்தார்.




சாய்வு நாற்காலியில் அமர்ந்தவரின் கண் மேலே ஓடிகொண்டிருந்த மின் விசிறியில் இருந்தது. மனம் முழுவதும் தன் மகளா இப்படி ஒரு காரியத்தை செய்யதது, என அவர் மனம் நினைக்க. ஆனால் நடந்தது நடந்து முடிந்ததுவிட்டது. நிச்சயம் ஏற்பாடு செய்வதற்க்கு முன் ஒரு வார்த்தை சொல்லிருந்தால் நானே என் மகளின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்திருப்பேனே... இப்படி சம்மந்தம் செய்வரின் முன்னும், சொந்தங்களும் முன்னும் இப்படி தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.





மனம் அதை நினைக்க நினைக்க வேதனையை தான் சுமந்துகொண்டிருக்கிறது. அவர் கண்கள் மூட, கண்ணின் ஓரத்தில் யாரும் அறியாமல் இரண்டு துளி விழுந்தது.





சமையல் அறையில் ஓரத்தில் அமர்ந்திருந்தார் வித்யாவின் அம்மா. சேலையின் முந்தியை வாயை மூடிகொண்டு கண்ணீர் கரைகளுடன் விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்தார்.





ராகவன் – லலிதா வரம் இருந்து பெற்றெடுத்த தன் ஒரே மகளை இப்படி ஒருவன் கட்டாயக் கல்யாணம் செய்துகொண்டு அவளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது இன்னும் அவர்கள் கண்ணில் இருந்து மறையாவில்லை.





போலீஸீல் புகார் கொடுக்கலாம் என்றால், அவன் பெரியடத்து பையன். அவனுக்கு தெரியாத ஆட்களே இல்லை. என்ன செய்வது என தெரியாமல் அமர்ந்திருந்தவர்களை கலைத்தது ஒரு குரல்.





“பெரியம்மா, பெரியப்பா...” அழைத்துகொண்டே உள்ளே வந்தான் சபரி. வித்யாவின் சித்தி பையன், அவளைவிட நான்கு வருடம் மூத்தவன்.



“என்ன பெரியப்பா... இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கீங்களா... அதில இருந்து வெளிய வாங்க பெரியப்பா.”




அவனின் குரலை கேட்டு உள்ளே இருந்த வந்தார் லலிதா. “நினைக்க முடியாம எங்களால இருக்க முடியலையே சபரி.”




“இப்போ என்ன நடந்துச்சுனு இவ்வளவு வருத்தப்படுறீங்க. வித்யாவ கட்டாயக் கல்யாணம் பண்ணிட்டு, அவளை வற்புறுத்தி அழைச்சுட்டு போனது தான் உங்க மனசுக்கு கஷ்டமா இருக்கும் தான் உங்க கஷ்டம் எனக்கு புரியாம இல்லை கொஞ்சம் அதில இருந்து வெளிய வாங்க.”



“என்ன இருந்தாலும் நான் வரமா பெத்தெடுத்த பொண்ணு. இப்படி ஒருத்தன் நடக்க இருந்த நிச்சயத்தை நிறுத்தி, எல்லார் முன்னாடியும் நான், இவளை காதலிச்ச பையன் சொல்லி முடிக்கிறதுக்குள்ள தாலிய கட்டி அவளை கூப்பிட்டுட்டு போயிட்டான். பார்த்திட்டு இருந்த நாங்க எவ்வளவு முயற்சி செய்து அவளை காப்பாத்த முடியலை.”




“பெரியப்பா உங்க வருத்தம் எனக்கு புரியுது... ஆனா வித்யாவுக்கு அவன் தானும், இப்படி தான் அவ கல்யாணம் நடக்கும்னு எழுதிருந்தா நாம என்ன செய்ய முடியும்.”




“இப்போ என் பொண்ணு என்ன பாடு படுறாளோ... சாப்பிட்டாளா, இல்லையானு கூட தெரியலை. அவளை அவன் கொடுமை செய்யுறானோ என்னவோ. பெத்த வயிறு துடிக்குது சபரி.” ஒரு அன்னையாய் மகளின் மேல் வெறுப்பு இருந்தாலும், பாசம் தான் முன் வருகிறது.



”அந்த பையனை பற்றி நான் விசாரித்த வகையில் ரொம்ப நல்ல பையன் பெரியப்பா... அமைதியான குணம், கூட பிறந்தவங்க யாரும் இல்லை, வீட்டுக்கு ஒற்றை பிள்ளை. விவி கன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் கம்பெனி அந்த பையனோட அப்பாவுடையது. ஆனா அவன் வேற கம்பெனில வேலை பார்க்குறான். அதுவும் எக்‌ஷ்பீரியனுக்காக வேற கம்பெனில விவி கன்ஸ்ட்ரக்‌ஷன் ஓனர் பையனு தெரியாம வேலை பார்க்குறான்.”



“அப்போ நாளைக்கே நாமா அங்க போய் அந்த பையன் செய்த காரியத்துக்கு நியாயம் கேட்க்கலாங்க. நம்ம பொண்ணையும் ஒருக்கா பார்த்துட்டு வராலாங்க அவ அங்க என்ன கஷ்டப் படுறாளோ.” லலிதா, ராகவனிடம் சொல்ல.




“பெரியம்மா, வித்யா இப்போ அந்த பையன் வீட்டுல இல்லை.” அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியை வைத்தான்.



“என்ன... என் பொண்ணு அங்க இல்லையா... கடவுளே ஏன் உனக்கு இவ்வளவு கல்நெஞ்சம். அப்போ என் பொண்ண, அந்த பையன் எங்க அழைச்சிட்டு போயிருக்கான்?” அவர் சபரியிடம் கேட்க




“நான் விசாரித்த வகையில் இந்த விஷயம் மட்டும் தான் எனக்கு தெரியந்தது பெரியம்மா. நானும் அந்த பையனை கண்காணிக்க சொல்லிருக்கேன் பெரியம்மா.”




“அப்போ அந்த பையன் வீட்டுக்கு தெரியாதா... நம்ம பொண்ண கல்யாணம் செய்து அழைச்சுட்டு போனது.” ராகவன் இம்முறை சந்தேகமாக கேட்க.




“தெரியாதுனு நினைக்கிறேன் பெரியப்பா... எனக்கு எதாவது தகவல் கிடைச்சா சொல்லுறேன். நீங்க இப்படியே இருந்த நடந்தது எதுவும் மாறாது. போங்க போய் சாப்பிட்டு வேலைக்கு கிளம்புங்க... பெரியம்மா உங்களுக்கு தான், வித்யா நல்லா இருப்பா... நீங்களும் பெரியப்பாவ சாப்பிட சொல்லி, சாப்பிடுங்க... நான் வேலைக்கு கிளம்புறேன்.” அவர்களை இயல்பு நிலைக்கு வரச்சொல்லி அவர்களிடம் இருந்து விடைபெற்றான்.




”என்னாச்சு கதவை திறந்தாளா...” வீட்டின் படியில் ஏறிகொண்டே புனிதாவிடம் விதுரன் வினாவ.




“இல்லை சார்.. கதவை திறக்கலை... எவ்வளவோ கூப்பிட்டு பார்த்துட்டேன்.” அவன் பின்னே சென்றபடியே புனிதா கூறினால்.



”வித்யா...வித்யா.. கதவை திற.”

எந்த பதிலும் இல்லை அறையில் இருந்து.




“வித்யா... இப்போ நீ கதவை திறக்கலைனா நானே உடைச்சிட்டு உள்ள வந்திருவேன்.”




ம்கூம் இப்போதும் எந்த பதிலும் இல்லை.




“சொன்னா கேளு கதவை நீயா திறந்தா நல்லது இல்லை...” அவன் முடிக்க விடாமல் கதவை திறந்தாள்.




உள்ளே சென்று அவளை பார்க்க ஜன்னலின் கம்பிகளை பிடித்தபடி வானத்தை வெறித்துகொண்டிருந்தாள். புனிதாவின் பக்கம் திரும்பி “ நீங்க குடிக்க தண்ணீர் எடுத்துட்டு வெளிய இருக்க டீபாய் மேல கொண்டு வந்து வைச்சுட்டு போங்க.”




“சரிங்க சார்..” அவனின் மூச்சிரைப்புக்கு அவசியம் என்பது என புரிந்து வேகமாக தண்ணீரை எடுத்துகொண்டு செல்ல நினைக்கையில் உள்ளே வந்தான் ராம்.




“அவன் எங்க புனிதா...”




“மேல, அம்மாவோட பேசிட்டு இருப்பாங்க சார்.”




“சரி அதை என்கிட்ட கொடுங்க, நான் கொண்டு போரேன்... நீங்க இரவு சமையலை கவனிங்க.” அவளிடம் இருந்த ஜக்கை வாங்கிகொண்டு அவன் படியில் ஏறிச்சென்றான்.



”என்னாச்சு வித்யா... ஏன் இப்படி பண்ணுற...” கேட்டுகொண்டே அவளின் தோளின் கை வைக்க போக,




“என்ன... என்னாச்சு அசல்ட்டா கேக்குற... ஏன் உனக்கு தெரியாதா? என் கோவம் எதுக்குனு... என் அழுகை எதுக்குனு...”




“உன்கிட்ட உண்மையா இருக்குறது தப்பா... என் காதல் உண்மையா இருக்க போய் தான் உன்னை யாருக்கும் விட்டுகொடுக்க கூடாதுனு யோசிச்சு தான் நான் அப்படி ஒரு முடிவெடுக்க காரணம்.” தன்னை புரிந்துகொள்ள வேண்டும் என அனைத்தையும் சொல்லவந்தவனின் பேச்சை கேட்க்காமல்,



“என்ன பெரிய காதல்... என்னை காதலிச்சிருந்தா ஏன் என்கிட்ட இவ்வளவு நாள் சொல்லலை. அப்படியே நீ சொல்லி, நான் உன் காதலை மறுத்தாலும் இப்போ செய்த காரியத்துக்கு நான் உன்மேல வெறும் கோவம் மட்டுமே இருக்கும். ஆனா இப்போ உன்மேல இருக்குறது கோவம் இல்லை வெறுப்பு...” அவனின் முகத்தில் அறையாத குறையாக அவள் பேசினால்




நீ என்னை வெறுக்கவா நான் உன்னை இவ்வளவு நாள், வாரம், மாதம், வருடம் கணக்கில் காதலித்திருப்பேன். உயிராக நான் உன்னை இன்றளவிலும் நேசிக்கின்றேனடி. ஆனால் நீயோ என்னை வெறுப்பதாக சொன்னால் நான் என்ன செய்ய?




”என்மேல உனக்கு வெறுப்பா இருந்தாலும், கோவமா இருந்தாலும் என்னை பனிஷ் பண்ணு அதை நான் ஏத்துகிறேன்... ஆனா இப்படி ரூம் கதவை பூட்டி என்னை பயமுறுத்தாத... எல்லா கஷ்ட்டமும் எனக்கு கொடு, எல்லாத்தையும் நான் ஏத்துகிறேன். உன்னை நீயே தண்டிச்சுக்காத.” அவனின் குணத்தில் பேச




“என்ன இப்படி எல்லாம் பேசுனா நான் உன்னை வெறுக்காம இருப்பேனு நினைப்பா. நோ... நெவர்... என்ன சொன்ன ... உன்னை பனிஷ் பண்ணவ? நல்ல ஐடியா கொடுத்திருக்க... இப்போ இருந்து நான் உன்னை பனிஷ் பண்ணுறேன். என் ஓவ்வொரு பனிஷ்மெண்டிலும் ஏன் தான் என்னை காதலிச்சமோனு உனக்கு தோணனும். என் அப்பா, அம்மாவ சேர்த்து கஷ்ட்டப்படுத்துனேல அதுக்கு சேர்த்தே உனக்கு தண்டனைய நான் தரேன்.” அவள் சொல்ல





”சரி என்ன தண்டனையா இருந்தாலும் நான் ஏத்துகிறேன். ஆனா, நீ இயல்புக்கு வா... இப்படியே ரூம்ல அடைந்து இருக்காத... லன்ஞ் சாப்பிட்டு இருக்கமாட்ட வா சாப்பிடலாம்.” அவன் அழைக்க




அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, குளியல் அறைக்கு சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள். இருவரும் வெளியே வரும் போது சோபாவில் ராம் அமர்ந்திருப்பதை பார்த்த விதுரன் எதற்க்காக இங்கு வந்திருக்கிறாய் என்பது போல் பார்த்தான். அவளோ, இவனை நான் இவனுடன் சேர்த்து பார்த்திருக்கிறேன் இவனுடைய நண்பனோ. என்ற ரீதியில் விதுரனின் பின் கொஞ்சம் நெருங்கினார் போல் அவள் நின்றுகொண்டால்.




“என்ன ராம்...”




”இந்த தண்ணீரை குடி...” அவனின் கையில் தண்ணீர் கிளாஸை கொடுத்தான். ராம்




“இப்படியா வேகமாக வருவா... கொஞ்சம் பிசிகினாலும் யார் வண்டியிலாவது மோதிரப்ப. நீ அவசரவமா கிளம்பதை பார்த்து நானும் பின்னே வந்தேன் விதுரா... இனி பார்த்து மெதுவா காரை ஓட்டு...” ஒரு நண்பனாய் விதுரன் மீது கோவம்கொண்டான்.




”இல்லை ராம், வித்யாவுக்கு உடம்பு சரியில்லைனு புனிதா சொன்னா... அதான் கொஞ்சம் பயந்து போயிட்டேன்... இனி பார்த்து ஓட்டுறேன்.” நண்பனின் அக்கறையில் பணிந்து போனான்.





“இவன் என்னுடை நண்பன் ராம், வித்யா...” அவளிடம் அறிமுகபடுத்த. அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக தலைகுனிந்துகொண்டாள்.




“வாங்கனு கேட்க்குறது உன் வாய்ல இருந்து முத்து கொட்டிராது வித்யா. என் நண்பனை அவமதிச்சா, எனக்கு கோவம் வரும்.” அவளிடம் கோவம் கொள்ள



“விதுரா... ஏன் இவ்வளவு கோவம்... விடு. என்னை அறிமுகப்படுத்துனதே பெரிசு... வா சாப்பிட போகலாம்.” விதுரனை சமாதானம் செய்துவிட்டு அவன் முன்னே நடக்க.



“என்ன கோவம் வருதா... என் தண்டனை உன் நண்பனில் இருந்து ஆராம்பம்.” அவள், அவனுக்கு தண்டனை கொடுக்கும் மகிழ்ச்சியில் அவனை வதைக்க ஆரம்பித்தால்.




மூவரும் அமைதியாக உண்ண... அவளோ அடுத்த தண்டனை என்ன கொடுப்பது என யோசிக்க ஆரம்பித்தால். அவளின் யோசனை பார்த்த விதுரன், “யோசிக்காம சாப்பிடு... என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலானு சாப்பிட்ட பின்னாடி யோசி.”




“சரி விதுரா நான் கிளம்புறேன்... ரோகினி காத்திருப்பா.”



“சாரி ராம்... தங்கச்சியோட பிறந்த நாளை உன்னை மிஸ் பண்ண வைத்ததுக்கு.”



“வருஷம் வருஷ்ம் வர்ர பிறந்த நாள் தானட... விடு. எப்படி சமாளிக்கிறதுனு உன் நண்பனுக்கு தெரியாதா. நான் போயிட்டு வரேன் டா... போயிட்டு வரேன் சிஸ்டர் உடம்ப பார்த்துக்கோங்க.” விதுரனிடமும், வித்யாவிடமும் அவன் விடைபெற, விதுரன் தலையசைத்து அனுப்பி வைத்தான். அவளோ, எதுவும் சொல்லவில்லை.




மணி ஒன்பதை எட்ட, “சரி நான் கிளம்புறேன்... புனிதா உனக்கு துணைக்கு ரூம்க்கு வெளியே தூங்குவாங்க பத்திரமா இரு நான் நாளைக்கு காலையில வரேன்.” அவளிடம் சொல்லிவிட்டு எழ,



“ நான் உன் மனைவி தான.”

அவனின் நடை நின்று அவலை நோக்கினான் “இதுல என்ன சந்தேகம்... தாலிக்கட்டுனது உன் கண்ணுக்கு தெரியாலையா... இல்லை தாலியை கழட்டிட்டய...”



” அப்போ நீ இங்கயே தங்கு... எங்கயும் போக கூடாது.” அவளிடமிருந்த வந்தன வார்த்தை.




சரி இன்று ஒரு நாள் தானே... இங்கயே தங்க்கிக்கொள்ளலாம். அம்மா, அப்பா கேட்டால் வேலை விசயம் வெளியில தங்கியிருக்கின்றேன் நண்பனுடன் என்று சொல்லிகொள்ளலாம் என அவன் நினைக்க. அவன் நினைப்பத்தற்க்கு சேர்த்து ஆப்பு வைத்தாள் வித்யா.





“இன்னைக்கு மட்டுமில்லை இனி வருகிற ஒவ்வொரு நாளும் என்கூட தான் இருக்கனும். அதாவது ஒரு தண்டனை கைதியாய் இங்க இருக்கனும்” அவன் நினைப்பிற்க்கும் சேர்த்து உலை வைத்தாள்.





அது எப்படி முடியும்? அம்மா எனக்காக காத்திருப்பாங்களே... அப்பா, என்னிடம் கம்பெனியில் நடந்த விசயங்களை அறிந்துகொண்டு தானே உறங்கவே செல்வார். அதுவும் எவ்வளவு நேரமானலும் அம்மா எனக்கு உணவு பரிமாறிவிட்டு தான் உறங்கவே செல்வார்கள். இவள் என்னாடா என்றால் ஒரேடியாக இங்கயே தங்க வேண்டும் என்கிறாள்.






“என்னால முடியாது வித்யா... அம்மா, அப்பா எனக்காக காத்திட்டு இருப்பாங்க. அவங்களால என்னைவிட்டு இருக்க முடியாது. இன்னைக்கு ஒரு நாள், அப்புறம் வீக்லி ஒன்ஸ் நான் இங்க தங்குறேன். இப்போ நான் கிளம்புறேன்.” என் பதில் இது தான் என்பது போல நடக்க முயன்றான்.



“உனக்கு நான் கொடுக்குற இரண்டாவது தண்டனை, நீ இங்கயே என்கூடவே இருக்கனும். நான் கொடுக்குற பனிஷ்மெண்ட்ட நீ ஏற்றுகொள்வேனு சொல்லிருக்க அப்போ...” அவள் முடிக்காமல் நிறுத்த




“சரி தங்குறேன்...” அவன் கொடுத்த உறுதியை அவனே மீறலாம.



என் அம்மா, அப்பாக்கிட்ட இருந்து என்னை பிரிச்சேல அதே மாதிரி நீயும் உன் அப்பா, அம்மாவ விட்டு பிரிந்து இரு அப்போ புரியும் என் வேதனை. அவள், அவனை பார்த்துகொண்டே அவளது அறைக்கு போக. அவனோ அவன் தாய்க்கு போனில் இருந்து அழைத்துகொண்டிருந்தான்.




“என்ன கண்ணா, இன்னும் வேலை முடியலையா.” பாசமாக கேட்க்கும் தாயின் குரலுக்கு ஈடாக அவனால் பொய் கூற முடியவில்லை.




“அம்மா, எனக்கு வேலை அதிகமா இருக்கு... நான் ஒரு வாரம் வெளிய தங்கி தான் வேலைய முடிக்க முடியும். அதனால என்னால ஒரு வாரம் வீட்டுக்கு வரமுடியாதும்மா.” அவன் சொல்லிவிட்டு தாயின் குரலுக்காக காத்திருந்தான்




தன் முன்னால் கணவர் அமர்ந்திருந்ததால் அவரால் எதுவும் விளாவரியாக அவனிடம் கேட்க முடியவில்லை. அதனால் “அப்படியா கண்ணா, சரி நேரத்துக்கு சாப்பிடு... அப்போ அப்போ அம்மாவுக்கு போன் பண்ணுப்பா. சீக்கிரம் வீட்டுக்கு வரனும் கண்ணா. அம்மா உனக்காக காத்திருப்பேன்.”



“சரிங்க அம்மா... நீங்க தூங்குங்க... அப்பாகிட்ட சொல்லிடுங்க. நான் காலையில உங்களை அழைக்குறேன்.” அவன் பேசிவிட்டு போனை வைத்ததும் அவன் கை முமுவதும் வேர்வையில் நிறைந்திருந்தது.




இன்னும் எத்தனை நாட்களுக்கு தாய், தந்தையிடம் இவ்விசயத்தை மறைக்க முடியும்... சீக்கிரம் எங்கள் விசயத்தை வீட்டில் சொல்ல வேண்டும் முடிவெடுத்து கொண்டு அவள் இருந்த அறைக்கு அவன் சென்றான்.




”விதுரன் தான பேசுனான் என்ன சொன்னான்.”




“வேலை அதிகமா இருக்காம் வெளிய தங்கிருக்கான். அதை முடிச்சிட்டு வரேனு சொல்லிருக்கான்.”




“என்ன தான் வேலையா இருந்தாலும், வீட்டுக்கு வந்திருவானே விசலாட்சி... இன்னைக்கு மட்டும் என்ன வேலை அதிகம்.” அவர் யோசனையாய் கேட்க




“அவன் சொன்னான் அதையே உங்ககிட்ட சொல்லுறேன். அவன் வேலை விசயத்துல நாம தலையிட முடியுமா? போங்க போய் தூங்குங்க நான் பாத்திரத்தை எடுத்து வைச்சுட்டு வரேன்.” கணவரிடம் அவரின் மனதில் இருந்த சந்தேகத்தை வெளியிடாமல் அவரே அதை மறைத்து கொண்டார்.




அறை கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தவனை பார்த்தவள் “எதுக்கு இங்க வர்ர”




“இது தானா நம்ம ரூம், அப்போ நான் இங்க தான தூங்கனும்.”



அவளால் எதுவும் அவனுக்கு பதில் கூற முடியவில்லை. இவனை என்ன செய்வது... என அவள் யோசனை செய்ய.



அவனோ, அங்கிருந்த கப்போர்டில் தன் இரவு உடையை எடுத்துகொண்டு குளியல் அறைக்கு சென்றான். அவன் போவதே பார்த்துகொண்டிருந்தாள்.




அவள் கட்டிலில் சாய்ந்து அமர்ந்துகொண்டு அவனின் வரவை எதிர் பார்த்தால், அவனும் வந்தான், வந்தவன் நேராக மெத்தையில் அமர போக,



“நீ இங்க தூங்க கூடாது... போய் கீழ தூங்கு...”


ஏற்கனவே வேலையின் அழுப்பு, அதை விட காரை வேகமாக ஓட்டி வந்தது வேறு கால் வலியை அதிகமாக்கிவிட, இப்பொழுது இவளிடம் பதில் பேச்சு பேசுவதற்க்கு சுத்தமாக அவனிடம் தெம்பு இல்லை. அதனால் கீழயே அவன் தூங்க சென்றான், அதற்கான தலையனையும் போர்வையு எடுக்க முயன்றவனின் கையில் இருந்து, தலையனையையும், போர்வையையும் பரித்துகொண்டாள்.




“இதெல்லாம் உனக்கு இல்லை, இது இல்லாம நீ வெறும் தரையில தூங்கு...” அவனோ கோவம் கூட படாமுடியாத அளவிற்க்கு அவள் மீது அவ்வளவு காதல் வைத்திருக்கிறான். ஆனால் இப்பொழுது அவனுக்கு உறக்கம் தான் முக்கியம் என்பது போல் கையை முட்டுகொடுத்து தரையில் தூங்கினான்.




நேரம் கடந்து அவனை பார்த்தவள், அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். குளிரில் அவன் கைகளை கட்டிகொண்டு குறுக்கி படுத்திருந்தான். அவளுக்கு தான் அவள் செய்கை பிடிக்கவில்லை, ஒருத்தரை இப்படி பழிவாங்குவது அவளுக்கு பிடிக்கவில்லை. வேறு எப்படி அவன் மீது வெறுப்பை காட்டுவது. பதிலுக்கு அவன் என்னிடம் சண்டை போட்டாலும் பரவாயில்லையே, அதை ஏன் செய்ய மறுக்கிறான் இவன்.



கீழ் இறங்கி அவனின் அருகில் சென்றவள் தலையனையை அவன் தலை வைத்துவிட்டு, போர்வையை நன்றாக போர்த்திவிட்டு பால்கனியின் பக்கம் சென்று நின்றுகொண்டாள்.




குளிரில் உடல் நடுங்கினாலும், மனதில் இருக்கும் கேள்விக்கான பதில் அவனிடம் இருந்து இன்னும் தெளிவாக வரவில்லை. அவனின் முகத்தை ஒரு சமயத்தில் பார்த்தவள் “ஏன்... ஏன்... என்கிட்ட நீ உன் காதலை சொல்லாம விட்ட. உனக்கு உன் காதல் பெரிசா தெரியலாம், ஆனா என் உலகமே என் குடும்பம்னு குருவி கூட்டுல வாழ்ந்த எனக்கு நீ செய்தது உன் மீதான வெறுப்பை தான் காட்டுகிறது.” அவள் நினைத்து கண்ணீர் சிந்திகொண்டிருந்தாள்.



அதை அவன் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவன் கனவு தான் இன்று நிறைவடைந்த மகிழ்ச்சியில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.



தொடரும்………….












 
Top