Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 28

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 28



அனைவரின் முன் குற்றவாளியாக நின்றிருந்தான் விதுரன். தன் அன்னையின் கையையும், தந்தையின் கையை பிடித்தபடி அழுதுகொண்டிருந்தாள் வித்யா. ராமும், பவானியும் விதுரனின் இருப்பக்கம் நின்றிருந்தனர். ரோகினி விசலாட்சியின் அருகில் நின்றிருந்தாள். விதுரனின் வாயில் இருந்து வந்த அனைத்து உண்மைகளையும் கேட்ட கொண்ட பின்பு அங்கு நிகழ்ந்த அமைதியை கலைத்தார், விஸ்வநாதன் விதுரனை கை நீட்டி அறைந்தார்...



அனைவரும் அதிர்ந்ததை விட பவானியும், ராமும் தான் அதிகமா அதிர்ந்து போயினர். ஏன்னென்றால் விதுரனை சிறு வயது முதல் அவர் கை நீட்டியது இல்லை. விசலாட்சியின் பாசத்தைவிட, விஸ்வநாதன் தான் விதுரன் மீது அதிக பாசம் வைத்திருந்தார். அதனால் இந்த அதிர்ச்சி.



“என்னங்க... நம்ம பிள்ளைங்க... கண்ணன போய் அடிச்சுட்டேங்களே. என்னைவிட நீங்க தான அவனை தாங்கி வளர்த்தீங்க.”




“சின்ன வயசுலே இவனை அடிச்சி வளர்த்திருந்தா இப்படி ஒரு காரியம் பண்ணிருக்கமாட்டான் விசலாட்சி. ஒரு பொண்ணோட சம்மதம் இல்லாம, ஒரு குடும்பத்தை அத்தனை பேர் முன்னாடி அவமானப்படுத்தி வலுக்கட்டயாம கல்யாணம் செய்துட்டு வந்திருக்கான். அப்போ இவனை அடிக்காம விட்டா அந்த பொண்ணோட குடும்பம் நம்ம பையன நாமா தான் ஒழுங்கா வளர்க்கலைனு சொல்லுவாங்க.”




“ஏன் விசலாட்சி நமக்கு ஒரு பொண்ணு இருந்து, இதோ இந்த பையன், சபரியை காட்டி, வலுக்கட்டயாம கல்யாணம் செய்திருந்தா அவங்க இடத்துல தான் நாம இருந்திருப்போம்.” என வித்யாவின் குடும்பத்தை போல் நாமும் இதே வேதனையை தான் அடைந்திருப்போம் என்றார்.




”அங்கில் விதுரன் செய்தது தப்பு தான்.. ஆனா அவன் காதலை காப்பாத்த போய் இப்படி ஆகிருச்சு. அவன் இடத்துல இருந்து பார்த்த தப்பு இல்லை அங்கில். ஆனா அந்த பொண்ணு இடத்துல இருந்து பார்த்த அவன் செய்தது தப்பு தான் அங்கில். இதுக்கு போய் அவனை அடிக்கிறது சரியில்லையே அங்கில்.” தோழனுக்காக பரிந்து பேசினாள் பவானி



“பவானி, நீயும் ஒரு பொண்ணு தான் ஏன் அந்த பொண்ணு இடத்துல இருந்து யோசிக்க மாட்டேங்குற. இதுவே உனக்கு நடந்திருந்தா இன்னேரம் ராமும், விதுரனும் அவனை கொன்னு போட்டுருப்பாங்க. அப்போ என் மகன என்ன செய்ய சொல்லு ம்மா...”




“காதலுக்காக ஏதோ ஒரு வேகத்துல செய்யுறது, தப்பான முடிவுல கொண்டு போகுது அங்கில்.”



“எந்த முடிவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லிருக்கலாமே. நாங்க அவனுக்கு செய்யாம இருப்பாமா... சின்ன வயசுல இருந்து அவனுக்கு பிடிச்சது எது, பிடிக்காதது எதுனு பார்த்து செஞ்ச எங்ககிட்ட அவன் சொல்லிருக்கலாமே. இந்த பொண்ண காதலிக்கிறேன் சொன்னா நாங்க என்ன வேண்டாம்னு சொல்லுவோமா. இல்லை அவனை வேறே பொண்ணு கழுத்துல தான் தாலிகட்ட சொல்லுவோமா.”




“அப்பா... நான் செய்தது தப்பு தான்... ஆனா என் காதல்” என அவனை பேசவிடாமல் தடுத்தார் விஸ்வநாதன்.



“பேசாத இனி என்கிட்ட பேசாத... உன் காதல் சொல்லிருயே அந்த காதல் அந்த பொண்ணுக்கு உன்மேல ஒரு சதவீதமாச்சு இருக்கா.” அவனை பார்த்து கேட்க



அவனோ, “இல்லை” என தலையசைத்தான்



“அப்போ அந்த காதல் வீணானது விதுரா.”



“இல்லைப்பா... என் காதல் உண்மை... அவள் மேல் இருக்குற காதல் உண்மை.”


“அப்போ அந்த பொண்ணுகிட்டயும், அவங்க அம்மா, அப்பாகிட்டயும் கால் விழுந்து மன்னிப்பு கேளு.”



“சரி ப்பா நான் கேக்குறேன்.” என அவர்கள் அருகில் சென்றான்.




”நான் பண்ணது தப்பு தான், ஆனா உங்க பொண்ணை காதலிச்சது தப்பு இல்லை. அவ விருப்பம் இல்லாம கல்யாணம் செய்தது தப்பு தான் என்னை மன்னிருங்க.” வித்யாவின் தாய் , தந்தையிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.



“அய்யோ எழுந்திரிங்க தம்பி...” என வித்யாவின் தாய் பதறி போய் தூக்க, ராகவன் அவனை தூக்கி நிறுத்தினார்.



“நீங்க என்கிட்ட வந்து என் பொண்ணை விரும்புறேனு ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் அந்த மாப்பிள்ளையை வேண்டாம் சொல்லிட்டு உங்களை என் வீட்டு மாப்பிள்ளையாக்கிருப்பேன். எல்லார் மனசையும் பார்க்காம உங்க காதலை மட்டும் தான் பார்த்தீங்க. அங்க தான் நீங்க தப்பு பண்ணிட்டீங்க.” என ராகவன் சொல்ல



அவரின் கையை பிடித்து மீண்டும் மன்னிப்பு வேண்டினான்.




”என் மகன் பண்ண தப்புக்கு நானும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன் ராகவன்.”



“அய்யோ சார்.. விடுங்க என் பொண்ணை என் கண்ணால பார்த்ததும் தான் நிம்மதியாச்சு. ரொம்ப நன்றி சார்.”



“நீயும் என்னை மன்னிச்சிரும்மா” என வித்யாவிடமும் மன்னிப்பு வேண்டினார்.



“அவங்க பண்ண தப்புக்கு நீங்க மன்னிப்பு கேட்க கூடாது. நீங்களும் என் அப்பா மாதிரி தான் விடுங்க.” அவளும் சொல்ல




“இவன் செய்த தப்ப நான் சரி செய்யுறேன் ம்மா... உங்க பொண்ணுக்கு விருப்பட்ட மாப்பிள்ளையோட நீங்க கல்யாணம் செய்து வைங்க. அவன் கட்டுன தாலியை நீ தாராளமா கழட்டி கொடுத்திரு ம்மா.” வித்யாவிற்க்கு வைத்தார் மிகபெரிய அதிர்ச்சி



“ப்பா...”




“அங்கில்”




“என்னங்க..” என விதுரன், பவானி, ராம், விசலாட்சி என அதிர்ந்து அழைக்க.



வித்யாவும், அவளின் பெற்றோர்களும் அவரை அதிர்ச்சியாக பார்த்தனர்.



“நான் சொன்னது தான் சரி விதுரா, அந்த பொண்ணுக்கு உன் மேல விருப்பு இல்லை அதனால் அவங்க அப்பா, அம்மா பார்த்து வைக்குற மாப்பிள்ளையோட கல்யாணம் ஆகனும் அது தான் சரி. நீ என் மகனா இருந்தா அந்த பொண்ணை இனி தொந்திரவு செய்யகூடாது விதுரா. அந்த பொண்ணோட இஷ்டம் எதுவோ அப்படியே நடக்கனும். நீ இதுல தலையிட கூடாது மீறினா நீ என் மகன் இல்லை.” அவனை வாயடைக்க வைத்தார்



“என் மகனோட சேர்ந்து வாழுற வாழ்வு உனக்கு வேண்டாம். நீ வேற பையனை கல்யாணம் செய்துட்டு நிம்மதியா இரும்மா. உனக்கு நானே மாப்பிள்ளை பார்க்குறேன் என் மகனைவிட நல்ல பையனா பார்க்குறேன்.” அவர் சொல்லிகொண்டு செல்ல



“எனக்கு அவரோட தான் மீதி வாழ்க்கைய வாழனும்.” என முதல் முறையாக அனைவரின் முன்னும் வாய் திறந்து பதில் கூறினாள் வித்யா.



“என்ன ம்மா சொல்லுற என் மகனோடவா... அவன் மேல உனக்கு வெறுப்பு தான் அதிகமா இருக்கும்.. வேண்டாம் அவன் உனக்கு.”



”இல்லை.. அவர் தான் என் வாழ்க்கை” என வித்யா சொன்னதும் அனைவரும் அவளை தான் ஆச்சர்யமாக பார்த்தனர்.



“என்னம்மா சொல்லுற...”



“ஆமா... அவர் தான் என் வாழ்க்கை, எனக்கு பிடிச்சு நடந்திருந்தாலும், பிடிக்காம நடந்திருந்தாலும் அவரோட என் கல்யாணம் முடிஞ்சது. இனி என் உயிர் போற வரைக்கும் அவர் தான் என் கணவன். இப்போவும் அவர் மேல எனக்கு வெறுப்பு தான் ஆனா இன்னொரு கல்யாணம் பண்ணிருக்கிற அளவுக்கு என் மனசை மாத்திக்க முடியாது.”



“இவரோட கல்யாணம் முடிஞ்ச என்னை, நீங்க பார்க்குற பையன் கல்யாணம் செஞ்சாலும் ஏதாவது ஒரு நேரத்துல நான் ஏற்கனவே கல்யாணம் ஆனா பொண்ணு தானா ஒரு நினைப்பு அவனுக்கு வந்திரும். அந்த நினைப்போட நான் வாழவும் முடியாது அவனாலும் என்னோட வாழவும் முடியாது.”


“அதுக்கு உன் வாழ்க்கை இவனோட சேர்ந்து வாழ போறியாம்மா..”



“ஆமா.. எனக்கு அவர பிடிக்காம இருக்கலாம், அதுக்குனு அவர் கட்டுன தாலியை என்னால கழட்டி கொடுக்க முடியாது.”



வித்யாவின் பேச்சில் அவன் மனம் அவளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்திருக்க கூடாதோ என யோசித்தான். அவளின் விருப்பமின்றி நான் செய்த செயல் எந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டது என அவன் வருந்தினான். தன்னிலைக்கு திரும்பியவன் அனைவரையும் பார்த்து,



“நான் வித்யாவுக்கு விவாகரத்து கொடுக்குறேன் ப்பா.” இவன் ஒரு அதிர்ச்சியை வைக்க



”கண்ணா..”



“விதுரா..” என விசலாட்சியும், ராம், பவானியும் அதிர்ந்து அழைக்க.



“ஆமா, ம்மா... விருப்பம் இல்லதவளை நான் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்திருந்தாலும் அவளோட மனசுல நான் இன்னும் இல்லை ம்மா. அவ மனசு முழுக்க என்மேல வெறுப்பு தான் இருக்கே தவிர கொஞ்சம்கூட அன்பு இல்லை. இனியும் அவளை என்னோட வலுக்கட்டாயமா வாழ வைக்க கூடாது. அப்பா நீங்க சொன்ன மாதிரி வித்யாவோட வாழ்க்கையில நான் இனி குறுக்க வரமாட்டேன்... அவளுக்கு நீங்க எந்த மாதிரி மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வச்சாலும் நான் எந்த தடையும் பண்ண மாட்டேன்.”



“கொஞ்சம் பேசாம இருக்கீங்களா... இது என் வாழ்க்கை. நீங்க மட்டும் முடிவு எடுத்தா போதுமா.” வித்யா அவனை எதிர்க்க



“இது என் முடிவு, நீயே என் கூட வாழவந்தாலும் நான் உன் கூட சேர்ந்து வாழமாட்டேன். முதல் முறையா உன் அம்மா, அப்பா முன்னாடி என் அம்மா, அப்பா தலை குனிஞ்சு நிக்குறாங்க அதுக்கு காரணம் நான் தான்.”




“அதுக்கு என் வாழ்க்கை இன்னொருத்தர் கையில போகனுமா. ஒரு பொண்ணுக்கு எத்தனை முறை கல்யாணம் செய்வீங்க... நான் உங்க கூட வாழுற வாழ்க்கைய தான் எதிர்பார்க்குறேன். வேற ஒருத்தன் கையில இன்னொரு முறை தாலி வாங்க எதிர்ப்பார்க்கலை.” வித்யா பதிலுக்கு பேச



“வேண்டாம் வித்யா... என்னோட உன் வாழ்க்கை சரியா வராது. என் அப்பா சொல்லுற மாப்பிள்ளைய கல்யாண்ம் செய்துக்க ஒத்துக்கோ.” அவன் சொல்லிவிட்டு அவனது அறைக்கு விடுவிடுவென ஓடினான். அவன் பின்னே அவனது தோழர்களும் சென்றனர்.



”அவனே சொல்லிட்டான் இனி உன் வாழ்க்கை புதுசா இருக்கனும். சீக்கிரம் அவனோட கையெழுத்து போட்ட விவாகரத்து பேப்பர் உன் வீட்டுக்கு வரும். அதோட மாப்பிள்ளையும் போட்டாவும் வரும். புது வாழ்க்கைக்கு உன்னை தயார்படுத்திக்கோ ம்மா.”




“இங்க பாரும்மா... உன்னை என் பையன் கட்டாயமா கல்யாணம் பண்ணிருந்தாலும் உன்னை எந்த விதத்திலாயாவது தொந்திரவு பண்ணிருக்கானா? ஆனா இப்போ என் மகன் அப்பாவுக்கு ஒரு தலை குனிவு நம்மாளால தான் வந்திருச்சுனு உன்னையே பிரிய போறான். வேண்டாம் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஒரு முறை தான் வாழ்க்கையில வரும். அதே மாதிரி தான் உன் வாழ்க்கையிலும், இனி உன் முடிவு தான் எல்லாம்.” விசலாட்சியும் பதிலுக்கு சொல்லிவிட்டு சென்றார்.



“விசலாட்சி அந்த பொண்ணு மனசை குழப்பிவிடாத... இது வித்யாவோட வாழ்க்கை, எதிர்காலம்.”



“அதுக்கு ஒரு பொண்ணு மனசை எத்தனை பேர் காயப்படுத்துவீங்க. அவளும் எப்படி தாங்குவா.. இதுவே நம்ம பொண்ணா இருந்தா இப்படி தான் இன்னொரு கல்யாணம் செய்து வைப்பீங்களா.”





“கண்டிப்பா என் பொண்ணு விருப்பதோட நடக்கும்.”



“ஆனா, இப்போ வித்யாவுக்கு விருப்பம் இல்லையே அது உங்களுக்கு
தெரியாதா.”



“இப்போ உன் மகனுக்கு விருப்பம் இல்லை விசலாட்சி. அவனே அந்த பொண்ணை காயப்படுத்திட்டேனு சொல்லுறான். அவனே இன்னொரு கல்யாணம் செய்து வைங்கனு சொல்லுறான். விவாகரத்து கொடுக்க தயாரா இருக்கான்.”



“வித்யா நீ தயாரா இருக்கியா என் மகன் விவாகரத்து கொடுத்தா அதை ஏத்துக்க.” என விசலாட்சி வித்யாவிடம் நேரிடையாக கேட்க.




”இல்லை...” என அவள் அழுதுகொண்டே மறுப்பாக தலையசைக்க.



“போதுமா... அந்த பொண்ணே நம்ம பையனை விட்டு வாழமாட்டேனு சொல்லுறா இனி என்ன உங்க பிடிவாதம். நம்ம மகன் செஞ்சது தப்பு தான், அதுக்கு ஏன் அவனோட காதலை பிரிக்க பார்க்குறீங்க.”



“காதல் இல்லாத மனசு எப்படி வாழ்க்கை முழுக்க வாழ்வாங்கனு தான் நான் கேக்குறேன் விசலாட்சி. எதாவது ஒரு சந்தர்ப்பத்துல வித்யா எனக்கு பிடிக்காம தான கல்யாணம் செய்தீங்கனு நம்ம மகனை பார்த்து கேட்ட அவன் மனசு என்ன பாடுபடும்.”



“காதல் வந்தாலே இரு மனசும் காயம்படும்ங்க... ஏன் நம்ம வாழ்க்கையிலும், காதலையும் காயப்படாததா... எத்தனை முறை என்னை நீங்க எடுத்தெரிஞ்சு பேசிருப்பேங்க... எத்தனை முறை நான் உங்களை காயப்படுதிருப்பேன். இப்போ நாமா ஒற்றுமையா வாழலையா.”




“நாமா காதலிச்சவங்க விசலாட்சி... இந்த பொண்ணு நம்ம பையனை காதலிக்கதவ... எப்படி முடியும்.”



“எத்தனை நாள் வெறுப்பை சுமந்திட்டு வித்யா இருக்க போறா. அவனோட சின்ன கரிசனத்துல கூட வித்யா மனசுல காதல் வர்ரதுக்கு விதையா இருக்கும்.”




“சரி உன் சொல்படியே நான் வரேன் பின்னாடி ஒரு முறையாச்சும் இந்த பொண்ணு நம்ம பையன் மனசை காயப்படுத்திட்டா என்ன செய்வ.”



“காயப்பட்ட மனசுக்கு மருந்தே காதலோட வார்த்தை தாங்க. ஒரு வார்த்தை, இல்லை பார்வை, போதும் அவங்க காயப்பட்ட மனசுக்கு மருந்தாகும்.”




”நீங்க உங்க பொண்ண கூப்பிட்டு உங்க வீட்டுக்கு போங்க ராகவன். நாங்க முறையா வந்து எங்க வீட்டு மருமகளை அழைக்க வர்ரோம்.” என விசலாட்சியின் முகத்தை பார்த்துகொண்டே விஸ்வநாதன் சொல்ல.



அங்கிருந்தவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது. வித்யவோ மகிழ்ச்சியில் தன் அன்னையை பார்த்துக்கொண்டாள். ராகவன், விஸ்வநாதனின் கையை சம்மததுடன் பிடித்துகொண்டு மகிழ்சியை வெளிப்படுத்தினார். சபரியோ தங்கையின் தலையை கோதிவிட்டான்.



ரோகினி அவர்களை பார்த்துகொண்டு விதுரனின் அறைக்கு சென்றாள்.



“ஏன் டா நான் ஒருத்தி இருக்கேனு உங்க இரண்டு பேருக்கும் மறந்து போச்சா... இவ்வளவு நடந்திருக்கு என்கிட்ட சொல்ல தோணலையா ராம் உனக்கு.”



“நல்லா கேளுங்க பவானி, நான் உங்ககிட்ட சொல்லுவேன் சொன்னதுக்கு கூட என்னை மிரட்டி வைச்சிருந்தாரு ராம்.”



“என்ன நடந்தது ரோகி… நீயாவது சொல்”




ரோகி ராமை முறைத்துகொண்டு விதுரனின் காதல் முதல் கல்யாணம் வரை சொல்லி முடித்தாள். இடையில் இருவரும் இதை பவானியிடம் சொல்லிவிடக்கூடாது என மிரட்டியது வேறு.



”ஏன் டா இதை என்கிட்ட நான் அந்த பொண்ணுக்கிட்ட நல்லதுவிதமா பேசி உன்கூட வாழ வைச்சிருப்பேன் இப்படியா சொதப்புவ விது.”



“ஆமா, இங்க காதலையே ஒழுங்க புரியவைக்க முடியலை. நீ அவனை வாழ வைச்சிருப்பியாம்ல போடி... அவன் பீலீங் அவனுக்கு.” என ராம் பவானியை சொல்ல



“ரோகி வெரி சாரி உன் புருஷன் என்கிட்ட அடி வாங்க போரான் நீ கண்டுக்காத.”



“நீ என்ன வேணா செய் பவானி அதை ஏன் என்கிட்ட சொல்லுற.”



“அடிப்பாவி புருஷனை இப்படி கோர்த்துவிட்டு பார்க்குற பொண்டாட்டிய இங்க தான் நான் பார்க்குறேன்.”



மூவரும் அவர்களுக்குள் வம்பிழுக்க விதுரனோ அமைதியாய் இருந்தான். அதை கவனித்த ரோகினி அவனது அருகில் சென்று,



“அண்ணா, ஏன் இப்படி கவலைப்படுறீங்க... வித்யாவை ஈசியா விட்டுகொடுத்துருலாம் நீங்க. ஆனா அவங்க கழுத்துல கட்டுன தாலி உங்களை தான் கணவன் நினைக்க வைக்கும். அங்கில் ஒத்துக்கிட்டாங்க வித்யாவ இந்த வீட்டு மருமகளா ஏத்துக்க. நல்லா நாள் பார்த்து அங்கிலும், ஆண்டியும் வித்யாவை அழைச்சிட்டு வர்ரதா சொல்லிவிட்டாங்க.”



” என்ன ரோகி” என ராமும், பவானியும் ஆச்சர்யாமாக கேட்க.



அவர்கள் வந்த விதுரனுடைய மேல வந்த பின் கீழே நடந்த அனைத்தையும் ரோகினி சொல்லி முடித்தாள்.



“அப்போ விதுவோட காதல் மொத்த குடும்பத்தோடு சேர்ந்து சேர்த்து வச்சிருச்சுனு சொல்லு ரோகினி.”



”ஹே விது அப்புறம் என்ன இன்னும் சோகமா இருக்க, பீலிங்க விடுடா. உன் வித்யா உன்கிட்ட தான் திரும்ப வரப்போறா.” என பவானி சொல்ல



“ஏத்துக்க நான் தயாரா இல்லை பவானி.” என விதுரன் சொல்ல



“அப்பா கண்டிப்பா எனக்கு எதிரா தான் பேசிருப்பாங்க. அம்மா தான் எனக்கும், என் காதலுக்கு சேர்ந்து பேசிருப்பாங்க. சரியா ரோகினி.” என விதுரன் ரோகினியிடம் கேட்க.



கீழே நடந்ததை பார்த்தது போல் சரியாக கணித்த விதுரனை பார்த்து திகைத்து ஆம் என்று தலையசைத்தாள் ரோகினி.



தொடரும்…………



 
Top