Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 27

இளந்தென்றலோடு ஒரு கவிதை 27ராகவனும், லலிதாவும் வந்த சொந்தங்களையும், நெருங்கிய உறவினர்களையும் புன் சிரிப்புடன் வரவேற்று கொண்டிருந்தனர். ஒரு சில சொந்தங்கள் லலிதாவுடன் சேர்ந்து பூ, பழம், இனிப்பு தட்டுகளை சபையில் வைத்து, விளக்கு ஏற்றிகொண்டிருந்தனர்.முழு அலங்காரத்துடன் தன்னை கண்ணாடியில் பார்த்துகொண்டிருந்தாள் வித்யா. இன்னும் அவள் சஞ்சல்ம் குறையவில்லை... அதை விட அதிகமாக மனதை நெருடியது. சுற்றிலும், உறவு பெண்களும், குழந்தைகளும் இருந்ததால் சின்ன சிரிப்புடன் இருந்தாள்.ஐயரோ நிச்சிய பத்திரிக்கையை மிகுந்த சிரத்தையுடன் எழுதிகொண்டிருந்தார். ராகவன் வீடு மூன்று அறைகள் கொண்டது, பார்ப்பவர்கள் கண்ணுக்கு வீடு நல்லா இருக்கும் என சொல்லும் அளவுக்கு இருந்தது. வீட்டின் ஒரே பெண்ணுக்கு நிச்சியம் என்பதால் தங்கையின் நிச்சியத்தை பார்த்து வேலை செய்து கொண்டிருந்தான் சபரி.”மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க வந்துட்டாங்க அக்கா...” என ஒரு சின்ன குழந்ததை வித்யாவிடம் வந்து சொல்ல. வித்யாவிடம் இருந்த சிரிப்பும் காணமல் போனது.காரின் வேகத்தை அதிகப்படுத்திகொண்டே அவளுக்கு வேறு ஒருவனுடன் நிச்சியம் நடந்துவிட கூடாது என்ற பதை பதைப்பில் வந்துகொண்டிருந்தான் விதுரன்.“விதுரா எல்லாம் சரியா செய்தாச்சு அந்த பொண்ணு உனக்கு தான் கவலை இல்லாம இரு டா.”“இல்லை... இல்லை அவள் எனக்கு சொந்தம் ஆகுற வரைக்கும் இந்த கவலை போகாது ராம் உனக்கே தெரியுமே நான் அவளை எந்த அளவுக்கு காதலிக்கிறேனு. ச்சே முதலே அவகிட்ட என் காதலை சொல்லிருக்கனும் டா. எல்லாம் என் தப்பு, வேலையில கவனமா இருந்த எனக்கு அவளோட வீட்டில என்ன நடக்குதுனு தெரியாம இருந்துட்டேன்.” என கார் ஸ்டேரிங்கில் தன் கையை பலமாக அடித்துகொண்டான்.“டேய் என்ன பண்ணுற... முதல இப்படி எமோஷன் ஆகாம கார் ஓட்டு. அவளுக்கு நிச்சியம் இன்னும் நடந்திருக்காது டா.”“இல்லை... மாப்பிள்ளை வீட்டாளுங்க இன்னேரம் வந்திருப்பாங்க டா. அய்யோ அவளை வேற ஒருத்தன் கூட நிக்க வச்சு கூட என்னால கனவுல பார்க்க முடியாது. இதுல இப்போ நேர்ல அப்படி இருக்குமோனு பயமா இருக்கு.”“இப்படி பயந்தா உனக்கு ஆப்போசிட்டா தான் நடக்கும். முதல் இந்த பயத்தை விடு, ரிலாக்‌ஷா இரு விதுரா நம்பிக்கையோடு அவள் உனக்கு தான் நீ மனசுல நினைச்சுக்கோ.”“ம்ம்... நிச்சியம் நடந்துட கூடாது ராம்.”“நடக்காது விதுரா... இன்னும் இருப்பது நிமிஷத்துல வித்யா வீட்டுக்கு போயிடலாம்.” நண்பனை தேற்றிகொண்டு வந்தான் ராம்.வரவேற்பு சம்பிரதாயம் எல்லாம் முடிந்து மாப்பிள்ளை வீட்டாரை உபசரித்து அமர வைத்தனர். மாப்பிள்ளையின் வீட்டாளுகளும், மாப்பிள்ளையின் தாய், தந்தையும் மாப்பிள்ளையாக வந்தவனும் அமைதியான முகத்துடன் காணப்பட்டனர்.”ஐயரே நல்ல நேரத்துல ஆரம்பிக்கலாமா...” என ராகவன் கேட்க.“ஆரம்பிக்கலாம் ராகவன்... முதல்ல பொண்ணை மாப்பிள்ளைகிட்டயும், மாப்பிள்ளை வீட்டார்கிட்டயும் காட்டுங்க. அடுத்து லக்ன பத்திரிகைய வாசிக்க ஆரம்பிக்கலாம்.””சரிங்க ஐயரே... லலிதா போய் வித்யாவ அழைச்சிட்டு வரச்சொல்லு உங்க அண்ணிய.” மனைவியிடம் தன் மகளை அழைத்து வரசொன்னார் ராகவன்.“இதோங்க...”‘அண்ணி நீங்களும், சின்ன அண்ணியும் வித்யாவ அழைச்சிட்டு வாங்க.’இருப்பெண்களும் இருப்பக்கமும், நடுவில் வித்யா மெதுவாக நடந்து வந்தாள். அழகு பதுமையாக நடந்து வந்தவளை அனைவரும் விழி விரிய பார்த்தனர்.”பொண்ணு அழகாவும் லட்சணமாவும் இருக்கா. என்ன மாப்பிள்ளை சார் உங்களுக்கு பிடிச்சிருக்கா.” மாப்பிள்ளையின் அண்ணி மாப்பிள்ளையிடம் கேட்க“பிடிச்சிருக்கு அண்ணி...”“அத்தை உங்க பையனுக்கு பொண்ண பிடிச்சிருக்காம்.” சொல்ல.”எங்க எல்லாருக்கும் உங்க பொண்ண பிடிச்சிருக்கு... நிச்சிய பத்திரிக்கைய வாசிக்க சொல்லலாமே.” மாப்பிள்ளையின் தந்தை சொன்னார்.“ஐயரே நிச்சிய பத்திரிக்கையை வாசிங்க...” ராகவனும் சொல்லஅனைவரின் சம்மத்துடன் வித்யாவுக்கும், யுவின் ராஜ்க்கும் நிச்சிய பத்திரிக்கை வாசிப்பட்டது. மாப்பிள்ளையும், பெண்ணும் எதிர் எதிராக அமர வைக்கப்பட்டு இருந்தனர்.“பொண்ணும், மாப்பிள்ளையும் நிச்சிய மோதிரத்தை மாத்திக்க சொல்லுங்கோ ராகவன்.” ஐயர் சொல்ல, இரு வீட்டு பெரியவர்கள் தங்களின் பிள்ளைகள் கையில் மோதிரத்தை கொடுத்தனர்.அதனுடன் இரு வீட்டு பெரியவர்களும் சேர்ந்து நிச்சிய தாம்பூலத்தையும் மாத்திக்க சொல்லி ஐயர் சொல்ல. இரு வீட்டு பெரியவர்கள் தாம்பூலத்தை மாற்றும் பொழுது...ராகவன் தாம்பூலத்தட்டை எடுத்து மாப்பிள்ளையின் தாய், தந்தையிடம் கொடுக்கும் போது இடையில் தாம்பூலத்தட்டை யாரோ தூக்கி அடித்தது பொல் தாம்பூலம் மேல் நோக்கி பறந்தது.அனைவரும் யார் இந்த செயலை செய்தது என பார்க்க, விதுரன் கோவமாக நின்றுகொண்டிருந்தான். வித்யாவோ யாரிவன் இப்படி நிச்சியம் நடக்கும் இடத்தில் அபசகுணம் செய்வது என அதிச்சியில் பார்க்க.“யார் நீ... எதற்க்கு நிச்சிய தாம்பூலத்தை இப்படி தள்ளிவிட்டாய்.” என ராகவனும், மாப்பிள்ளையின் தந்தையும் ஒரு சேர கேட்க.”என் காதலியை எவ்வளவு தைரியம் இருந்தால் வேறொருவனுடன் நிச்சியம் செய்வீங்க.”“யார் டா நீ... என் தங்கச்சிய உன் காதலினு சொல்லுற... என் தங்கச்சி இப்படி காதல் எல்லாம் செய்ய மாட்டா. எதாவது உளராம போ இங்கிருந்து.” சபரி கோவமாக பேச“யார் உளரது... இதோ அலங்காரம் பண்ணிட்டு மாப்பிள்ளையோட எதிர்ல நிக்கிறாளே அவ தான் என் காதலி... கன்னியாகுமாரில இருந்து இதோ முன் தினம் அவளோட நிச்சிய புடவை எடுக்கும் வரை எனக்கு அவளை தெரியும்...”“டேய் போறவன் வர்ரவனுக்கு எல்லாம் என் பொண்ணை தெரியும் சொன்னா நாங்க நம்பிடுவோமா... ஒழுங்க இங்க இருந்து போ... என் பொண்ணு நிச்சியம் நடக்கனும்.” ராகவனும் சபரியும் சொல்ல“இவ்வளவு தூரம் சொல்லுறேன் என் காதலிய அடுத்தவனுக்கு நிச்சியம் செய்யுறதுல குறியா இருக்கீங்க. ராம் கூப்பிடு டா அவங்களை” என விதுரனின் அருகிலே இருந்த ராமை அழைத்து வெளியில் இருக்கும் மூன்று பேரை அழைத்தான்.”அய்யோ கடவுளே... என்ன சோதனை... இதோ பாருப்பா, என் மகளுக்கு இப்போ நல்லது நடக்குது அதை இப்படி தடுத்தா என்ன அர்த்தம்” லலிதா அழுகையில் அவனிடம் வேண்ட”எனக்கு என் காதலும், காதலியும் தான் முக்கியம். நீங்க ஒதுங்கி இருங்க இல்லை...” அவரை எச்சரித்தவன்.மூன்று குண்டர்கள் உள்ளே நுழைந்து அனைவரின் முன் அரண் போல் நின்றன். அவர்களை எதிர்க்க கூட பலம் இல்லாதவர்கள்.“சாரி மிஸ்டர்... இவ என் காதலி அதனால நீ உன் குடும்பத்தோடு இப்போவே இந்த வீட்டை விட்டு கிளம்புனா ரொம்ப நல்லது. இல்லை என் காதலியோட எனக்கு கல்யாணத்தை பார்த்து போறாத இருந்தாலும் எனக்கு ஓகே.” அவனை ஓரங்கட்டியவன் வித்யாவின் அருகில் சென்று அவளை கை பிடித்து கொண்டான்.அதுவரையிலும் அதிர்ந்த முகத்துடன் அனைத்தையும் பார்த்துகொண்டிருந்த வித்யா அவன் பேசிய வார்த்தைகளையும் கேட்டுகொண்டிருந்தவள், அவன் தன் அருகில் வந்து இப்படி கையை பிடிப்பான் என அறியாமல் இருந்தவள். அவன் கையை பிடித்தவுடன் அவனிடம் இருந்து விலக செய்தாள், முயற்ச்சி மட்டுமே செய்தாள். ஆனால் முடியவில்லை.“ராம் அதை கொடு...”ராமிடம் இருந்து சிறிய நகை பெட்டியை வாங்கியவன், அவள் திமிருவதை பொருட்படுத்தாமல். அவள் கழுத்தில் அனைவரின் முன் தாலிக்கொடிய அணிவித்தான்.இதை யாரும் எதிர் பார்க்கவில்லை... அனைவருக்குமே இது அதிர்ச்சி தான். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வெறுப்புடன் பெண்ணின் வீட்டை பார்த்தபடி வெளியேறினர்.”அப்பா, அம்மா ஏன் பார்த்துட்டு நிக்குறீங்க... டேய் யார் நீ. எதுக்கு இப்படி பண்ணுற... சபரி நீயும் ஏன் இப்படி பார்த்துட்டு நிக்குற. டேய் என்னை விடு... விடு டா...” அவள் கதற கதற அவளை தன்னுடன் அழைத்து சென்றுவிட்டான்.
”என்னங்க ஏன் இப்படி பார்த்துட்டு நிக்குறீங்க... டேய் சபரி... அவன் உன் தங்கையை இழுத்துட்டு போறான். போய் அவளை அழைச்சுட்டு வாங்க.”

அந்த குண்டர்கள் தாண்டி யாரும் அவனை பின் தொடர முடியாது. அவர்களை எதிர்த்து சண்டை கூட அவர்களால் போட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் பார்க்க பெரிய உருவமாக இருந்தனர்.தாலியை அவளது கழுத்தில் போட்டவுடன் வலுகட்டயாமாக அவளை இழுத்து கொண்டு சென்றான். அவள் கதறுவதை பொருட்படுத்தாமல் அவன், அவளை இழுத்து சென்று காரில் உள்ளே தள்ளினான்.


அவன் தள்ளிவிட்டதில் அவள் தலை காரின் கண்ணாடியில் மோதி அவள் மயக்கமானாள். அவனோ அதை கண்டுகொள்ளாமல் அவன் காரை எடுக்க தயரானான். அவனின் செயலை பார்த்த ராமோ, அவனை தடுத்து, தான் கார் ஓட்டுவதாக சொல்லவும் அவனிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.அவள் வீட்டை அடைந்ததும், அங்கு அவள் அருகில் வேறொருவன் நிற்ப்பதையும், அதற்க்கு சாட்சியாய் அவளுக்கு நிச்சியம் உறுதி செய்ய போவதையும் பார்த்துகொண்டிருந்தான்.போதாதிற்க்கு அவள் கையில் மோதிரமும் கொடுத்து மாற்ற தயாராக இருக்கும் போது அவன் பார்த்துகொண்டிருந்தது போது அவளை தன் வசமாக்க்கி கொள்ள வேண்டும் என வெறியே வந்துவிட்டது விதுரனுக்கு.சரியாக இரு வீட்டார்களும் தாம்பூலத்தை மாற்றும் போது வீட்டில் நுழைந்து அந்த நிச்சியத்தை தடுத்து நிறுத்தினான். அது மட்டுமில்லாமல் வரும் வழியே வித்யாவை தனக்கு சொந்தமாக்கி கொள்ள ஒரு நகை கடையில் தாலிகொடியையும் வாங்கிகொண்டு தான் அவள் வீட்டிற்க்கே சென்றான்.”முதலிலே அவன், அவளுடன் தங்குவதற்க்கு தனியாக வீடும் வாங்கிருந்தான். நேராக மூவரும் அந்த வீட்டிற்க்கு சென்றனர். பின் பக்கம் அவளை இறங்க சொல்லுவதற்க்கு அவன் காரின் கதவை திறக்க, அவளோ மயக்கமடைந்திருந்தாள்.வேறு வழியில்லாமல் அவளை கைகளில் தாங்கிகொண்டு வீட்டினுள் அழைத்து சென்றான். இருவரும் இருக்கும் அறையில் அவளை மெதுவாக மெத்தையில் படுக்க வைத்தான்.அறையைவிட்டு கீழே வந்தவன் ”மயக்கமாய்ட்டானு நினைக்குறேன் ராம் இன்னும் அவ எழுந்திரிக்கலை.”“சரி விதுரா பங்க்‌ஷனுக்கு நேரம் ஆச்சு, அங்கில் ஆண்டியும் உன்னை கேட்டு எனக்கு போன் பண்ணிருந்தாங்க. நான் நீ வேலையில பிஸியா இருக்கேனு சொல்லி சமாளிச்சு இருக்கேன். உடனே நீ பங்க்‌ஷனுக்கு கிளம்பு.”“ம்ம்.. சரி ராம்..” அவனிடம் பேசிவிட்டு,“புனிதா நீங்க அவளை பத்திரமா பார்த்துக்கோங்க, நான் பங்க்‌ஷன் முடிச்சு வர லேட் ஆகும். கண் முழிச்சா சாப்பிட எதாவது கொடுங்க.” என சொல்லிவிட்டு கிளம்பினான்.இங்கிருந்து அவன் நேராக வீட்டிற்க்கு சென்று உடை மாற்றிகொண்டு, பங்க்‌ஷன் நடக்கும் இடத்திற்க்கு சென்றான். தாய், தந்தையின் முன் எதையும் காட்டிகொள்ளாமல் அமைதியாக இருந்தான். மனதில் வித்யாவை பற்றி கவலை கொண்டாலும் அவள் இன்னேரன் எழுந்திரிப்பாளா, இல்லையா என ஒவ்வொரு நிமிடம் யோசனையில் இருந்தான்.தந்தை அறிமுகப்படுத்து நபர்களிடமும் கூட சரியாக பேசவில்லை. ஒரு வழியாக பங்க்‌ஷனும் முடிந்து முதல் வேலையாக தாய், தந்தையை வீட்டிற்க்கு அனுப்பிவிட்டு இருக்கும் வேலையை அவன் முடிக்க, சரியாக புனிதா போனில் அழைத்தாள்.அதற்கடுத்து நடந்தது தான் அவளுக்கே தெரியுமே... அனைத்தையும் கேட்டவள், அவனின் காதல் கொண்ட கண்கள் இன்னும் அவன் பொய் சொல்லவில்லை என்று தான் அவளுக்கு உணர்த்தியது.”என் காதல் உனக்கு புரியாம இருக்கலாம்... ஆனா உன்னை என்னால இப்போ மட்டும் இல்லை எப்போவும் யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது... இப்போ என்ன உன்னை கட்டாயக் கல்யாணம் பண்ணது தப்பு தான். அந்த தப்புக்கு என்ன செய்யனும் சொல்லு நான் செய்யுறேன். ஆனா என் காதலை தப்பா பேசாத வித்யா.” அவளிடம் சொல்லிவிட்டு அவன் காரை எடுத்துகொண்டு வெளியே சென்றூவிட்டான்.அவளோ, அவன் தன்னை முதன் முதலாக சந்தித்த இடம் முதல் கொண்டு அடுத்தடுத்து அவன் சந்தித்த இடங்களையும் அவளை பார்த்த உடன் ஏற்ப்பட்ட உணர்வுகளையும் அவன் சொல்லவும் அவளுக்கு தான் என்ன மாதிரியான உணர்வுகளை உணர்கிறோம் என புரியவில்லை.”ஐயா, உங்களை பார்க்க மூனு பேர் வந்திருக்காங்க. உள்ள அனுப்பட்டுமாங்க ஐயா.” வீட்டில் தோட்டத்தில் அமர்ந்திருந்த விஸ்வநாதனிடம் வாட்மேன் கணேஷன் வந்து சொல்ல“யாரு அந்த மூனு கணேஷ்... எதுக்கு என்னை பார்க்க வந்திருக்காங்க...”“ஏதோ முக்கியமான விஷயமாங்க ஐயா... அவங்க பொண்ணை பத்தியாம்.”எந்த பொண்ணு... சரி வரச்சொல்லு.”உள்ளே நுழைந்த அந்த மூவரையும் பார்த்த விஸ்வநாதன் யோசனையில் இருந்தார். யார் இவர்கள்... இவர்களை முன் பின் நான் பார்த்த தில்லையே என அவர் நினைக்க.“வணக்கம் சார் நான் சபரி... இவங்க என் பெரியப்பா, பெரியம்மா...”“வணக்கம்... எதுக்கு என்னை பார்க்க வந்திருக்கீங்க. எதாவது...” அவர் பாதியில் நிறுத்தராகவன் ஆதி முதல் அந்தம் வரை விதுரன் வித்யாவை எங்கு பார்த்தான் என தொடங்கி, வீட்டில் நடக்கும் நிச்சியத்தை நிறுத்தி தங்கள் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு போனதை பற்றி தெளிவாக சொல்லி முடித்தார்.”என் பையனா... உங்க பொண்ணை கல்யாணம்... இல்லை என் பையன் அப்படி செய்ய மாட்டான்... நீங்க வேற யார்கிட்டயோ சொல்ல வேண்டியதை என்கிட்ட சொல்லுறீங்க.”“உங்க பையன் பேரு விதுரன் தான சார். நீங்களே உங்க பையன் கிட்ட கேட்டு பாருங்க.” என சபரி சொல்லஉடனே விதுரனுக்கு அழைத்தார் விஸ்வநாதன்.கடலின் காற்றிலும், கடல் நீரிலும் நின்றவன் மனம் இன்று தான் சமன் பட்டது போல இருந்தது. அவளிடம் எல்லாமே சொல்லியாச்சு, இனி அவள் என்னை பற்றி என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. இனி அவளுக்கு என் காதலை புரிய வைக்க முடியாது. என அவன் மனதில் நினைத்துகொண்டிருக்க அவன் கண்களை யாரோ மூடிவிட்டனர்.“யாரு... யாரு... என் கண்ணை மூடுனது.பதில் சொல்லாமல் அவன் கணகளை இன்னும் அழுத்தமாக மூடிகொண்டாள்.“என்ன விளையாட்டு இது… நீங்க யாருனு சொல்லுங்க.” என அவன் கண்ணை மூடியவரின் கைகளை தொட்டுபார்க்க அந்த கையில் இருந்த ப்ரேஸ்லெட் இதய வடிவிலான டாலருடன் இருந்ததை தடவியவனின் மூளையில் இது அவள் தான்.”பவானி... நான் கண்டுபிடிச்சுட்டேன்...” என சொல்லியவாறு அந்த கைகளின் சொந்தகாரியை கையை பிடித்து முன் இழுத்தான்.“விதுரா கண்டுபிடிச்சிட்டயா... எப்படி இருக்க.”“உன் ப்ரேஸ்லெட் தான் காட்டி கொடுத்திருச்சே... நான் நல்லா இருக்கேன் நீ?”“இப்போ தான் வந்தேன்... வழிலே உன்னை பார்த்ததும் அப்படியே இங்க வந்துட்டேன். ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு.” அவனின் முகத்தை வைத்தே கண்டுபிடித்தாள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறான் என்று.“நத்திங்க் பவானி... ஒரு பிரச்சனையும் இல்லை.. வா வீட்டுக்கு போகலாம்.” அவளை அழைத்துக்கொண்டு அவனது வீட்டிற்க்கு சென்றான். காரில் அவனது போனில் வந்த அழைப்புகளை அவன் பார்க்கவில்லை”நம்ம பையான அப்படி செய்திருப்பானு நீங்க நினைக்குறீங்க. அவன் அப்படி செய்திருந்தா அவன் நம்மகிட்ட சொல்லிருப்பானே. இதுக்கு தான் அவன் இத்தனை நாளா அமைதியா இருந்தானா.” விசலாட்சி கண்ணீரை துடைத்துகொண்டே கணவரிடம் புலம்ப.“விசலாட்சி இப்படி அழுதா என்ன அர்த்தம்... முதல்ல நம்ம பையன் வரட்டும் அடுத்து என்ன ஏதுனு விசாரிக்கலாம்.” அவர் ஆறுதல் சொல்லஅதை பார்த்த மூவரும் சங்கடமாக இருந்தனர். வந்திருக்க கூடாதோ என அவர்கள் நினைக்க விதுரனின் கார் வீட்டின் போர்டிகோவில் வந்து நின்றது.வீட்டிற்க்குள் பவானியுடன் பேசி சிரித்தபடி நுழைந்தவனை அங்கிருந்த ஐவரும் பார்க்க, அவனோ பவானி கேட்ட கேள்விக்கு சிரித்துகொண்டே பதில் சொல்லியபடி வந்தான்.தன் அன்னையை அழைக்க எண்ணி பவானியிடம் இருந்து திரும்பி. “அம்...” அவன் வார்த்தை முடிக்காமல் நிற்க. அங்கிருந்தவர்களை அதிர்ச்சியாக பார்த்தான்.தொடரும்……

 
Advertisement

Advertisement

Top