Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 26

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 26



இன்றோடு இந்த வேலை முடியப்போகிறது, இன்றே வித்யாவிடம் சொல்லிவிடலாம் என் காதலை. அதன் பின் பெற்றோர்களை அழைத்து வந்து அவளை பெண் கேக்கலாம் என அவன் நினைக்க. அவன் நினைவிற்க்கு தடை விதிப்பது போல், சைட்டில் ஒரு பிரச்சனை வந்து நின்றது.


“விதுரா, சைட்ல பிரச்சனை டா... அடி தடி சண்டை பெரிசா போகுது டா.” என ராம் விதுரனுக்கு அழைத்து சொல்ல



“அப்படி என்ன நடந்தது டா... என்ன பிரச்சனை”



“டேய் இங்க வேலைப்பார்க்குற வடநாட்டு பையன் ஒரு பொண்ணுக்கிட்ட தப்ப நடந்துக்க பார்த்தானு சொல்லுறாங்க டா”



“சரி நான் வரேன்...”



“சண்டை போடாம இருங்கய்யா... சைட் இன்ஜினியர் வந்துட்டு இருக்காங்க. யோவ் சண்டை நிறுத்த முடியுமா இல்லையா.”



”சார் உங்க வீட்டு பொண்ணுக்கு இப்படி நடந்திருந்தா இப்படி தான் பொறுமையா பேசாலம் சொல்லுவீங்களா.” பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கேட்க



ராம் அமைதியாகிவிட்டான்... என்ன சொல்ல முடியும் அவனால்.



“என்ன என்ன நடந்தது இங்க... இப்படி சண்டை போட்டு, அவனை அடிச்சா எல்லாம் சரியாகிடுமா.” சத்தம் போட்டுகொண்டே வந்தான் விதுரன்.



“சார், என் பொண்ணுக்கிட்ட இந்த படுபாவி தப்பா நடந்துக்க பார்த்தான் சார்.” பெண்ணின் தாய் கூற



“இங்க பாருங்க ம்மா அந்த பையன் உங்க பொண்ணுகிட்ட தப்பா நடந்தாத சொல்லுறீங்க, இப்படி அவனை போட்டு அடிக்குறதுக்கு பதில் போலீஸ்ல கம்ப்ளைட் பண்ணுங்க. நீங்களே அவனை போட்டு அடிச்சு அவனை செத்து போனா எங்க கம்பெனி மேல தான் கெட்ட பேர் வரும்.”



“உங்களை மாதிரி தான் நானும் இந்த கம்பெனில வேலை பார்க்குறவன். இவனை அடிச்சு ஏதாவது ஒன்னு ஆனா என்மேலையும் தான் கம்ளைண்ட் வரும். என்னை வேலையவிட்டே தூக்கிடுவாங்க, உங்களூக்கு எங்க போனாலும் வேலை கிடைக்கும், ஆனா நான் படிச்ச படிப்புக்கு கம்பெனி கம்பெனிய ஏறி இறங்கி வேலை கேட்க்கனும்.”



“என் வீட்டு பொண்ணுக்கிட்ட இப்படி நடந்திருந்த நான் செருப்பால அடிச்சு போலீஸ்கிட்ட கூப்பிட்டு போயிருப்பேன். அதே மாதிரி நீங்களூம், செய்யுங்க, இப்படி வேலை முடியுற நேரத்துல எதுக்கு பிரச்சனை பண்ணுறேங்க.”



”யார் கம்ப்ளைண்ட் கொடுத்தது எங்களுக்கு இங்க பிரச்சனைனு.” போலீஸ் வந்து கேட்க



“நான் தான் சார்... என் பேர் விதுரன், இங்க சைட் இன்ஜினியர் சார் நான்.இந்த பொண்ணுகிட்ட இவன் தப்பா நடந்துக்க பார்த்தான். கொஞ்சம் பெரிய விவகாரமா ஆகிருச்சு.”



“ஏன் யா இப்படி போட்டு அடிச்சிருக்கீங்க உங்களுக்கு அறிவில்லை. அவன் செத்தா உங்களை தான் உள்ள தூக்கி வைப்போம். இழுத்துட்டு போங்க ஏட்டு, முதலை அவனுக்கு முதலுதவி பண்ணுங்க ஏட்டு.”



“சரி சார் நாங்க கிளம்புறோம், அப்புறம் வந்து கம்ளைண்ட் எழுதிகொடுத்துட்டு போங்க விதுரன்.”



“சரிங்க சார்...”



“போங்க போய் வேலைய பாருங்க, உங்க பொண்ண வீட்டுக்கு கூப்பிட்டு போங்க ம்மா. இனி எந்த பிரச்சனை வந்தாலும் முதல்ல என்கிட்டயோ இல்ல, போலீஸ்கிட்டயோ சொல்லுங்க.”



அனைவரும் கலைந்து சென்று வேலை பார்க்க ஆரம்பித்தனர். ஏதேதோ நினைத்து கொண்டு இருந்தவன் இந்த பிரச்சனையில் அனைத்தும் மாறிவிட்டது.



”இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாமே அப்பா. இன்னும் கொஞ்சம் நாள் உங்களுடன் இருக்கிறேன், இல்லையா வீட்டோடு மாப்பிள்ளை பாருங்கப்பா. உங்களை விட்டு என்னால் எப்படி நான் போவேன்.”



“பெண்ணுனா, எல்லாத்தையும் தாண்டி தான் வரனும் அதே மாதிரி தான் இந்த கல்யாணமும். முதல எங்களை பிரிஞ்சதை நினைச்சு வருத்தமா தான் இருக்கும் அப்புறம் போக போக பழகிடும்.” மகளின் தலையை கோதி ஆறுதல் கூறினார்.



“இருந்தாலும் உங்களை விட்டு நான் எப்படி இருப்பேன், என்க்கு இந்த கல்யாணத்துல துளிகூட விருப்பம் இல்லை. ஆனால் அப்பாவுக்காவும், உங்களுக்காகவும் நான் சம்மதிக்குறேன்.”



“என் பொண்ணுனா என் பொண்ணு தான். இது தான் மாப்பிள்ளை போட்டோ, பாரு.” மகளின் கையில் அவளுக்கு பார்த்திருக்கும் போட்டோவை கொடுத்து சென்றார் ராகவன்.



தந்தை கையில் கொடுத்து சென்ற கவரை பார்த்துகொண்டே இருந்தாள். மனம் விரும்பாத இந்த கல்யாணத்தில் எப்படி ஒத்துகொள்வது. கவரை கையோடு எடுத்துசென்றால் அவளது அறைக்கு, கவரை ட்ரெஸிங் டேபிளில் வைத்துவிட்டு மெத்தையில் படுத்துகொண்டாள்.



சரி தான நான் கல்யாணத்துக்கு ஒத்துகொண்டது சரி தானா. அம்மா, அப்பாவை விட்டு இந்த கல்யாணம் செய்துகொண்டாள் அவர்களை பிரிந்துவிட வேண்டுமா. மனதில் யோசத்துகொண்டே இருந்தவள், ராகவன் கொடுத்து சென்ற மாப்பிள்ளையின் புகைப்படத்தை அவள் பார்க்கவில்லை.



”நாளை வித்யாவிடம் என் காதலை சொல்ல போகிறேன் ராம்.” விதுரன் ராமிடம் சொல்ல



“சூப்பர் டா... அப்போ சீக்கிரம் கல்யாணம் சாப்பாடு போடுவேனு சொல்லு. ஆனா நாளைக்கு தான் அங்கில் கம்பெனியோட பங்க்‌ஷன் சொன்ன எப்படி உன் காதலை சொல்ல போற.”



“ஆமா, ராம் பங்ஷனுக்கு முன்னாடி அவகிட்ட காதலை சொல்லிட்டு அடுத்து பங்க்‌ஷனுக்கு வந்திருவேன். ஆனால் பயமா இருக்கு ராம், அவள் என் காதலை ஏற்றுகொள்ளவில்லை என்றால். என்ன செய்வது, அவளை விட்டு பிரிவது என்னால் முடியாத விசயம் ராம்.”



“ஹே ஏன் டா அப்படி நினைக்குற... கண்டிப்பா அந்த பொண்ணு உன் காதலுக்கு ஓகே சொல்லுவா.”



“ம்ம்... சொல்லனும்”



இருவரும் முதல் ப்ராஜெக்ட்டை நல்லபடியாக முடித்துகொடுத்ததால் அவன், கீழ் வேலை பார்க்கும் அனைவருக்கும் புகழ்பெற்ற ஹோட்டலில் அவன் ட்ரீட் கொடுத்தான். மற்றவர்கள் சென்ற நிலையில் தான் ராமிடம் வித்யாவிடம் காதலை சொல்ல போகிறேன் என அவனிடம் கூறினான்.



“என்னமோ, அவளை மறக்க போறேன் சொன்ன விதுரா. அவளை அவங்க அப்பா, அம்மாகிட்ட இருந்து பிரிக்கமாட்டேனு சொன்ன. எப்போ வந்துச்சு வித்யாகிட்ட உன் காதல் சொல்லுற எண்ணம்.” ராம் கேலியாக கேட்க



”கிண்டல் பண்ணாத டா... நானே அவகிட்ட எப்படி சொல்லுறதுனு தெரியாம இருக்கேன். இப்போ என்னை கலாய்ச்சுட்டு இருக்க.”



“பாரு டா... என் நண்பனுக்கு பயம் எல்லாம் வருது. ஆனா நீ இப்படி பயப்படுற பையன் இல்லையடா நண்பா.”



“தொழில் வேறு, வாழ்க்கை வேறு... ராம். அவளிடம் என்னால் காதல் சொன்னால் ஏற்றுகொள்வாளா. இல்லை தாய், தந்தைக்காக என்னையும், என் காதலையும் வேண்டாம் என்று சொல்லுவாளா.”



“விதுரா உன் காதலை வேண்டாம் என்று சொன்னால் நஷ்டம் அந்த பெண்ணுக்கு தான் உனகில்லை. கண்டிப்பாக அவள் ஒத்துகொள்வாள் விதுரா வெற்றி உனக்கு தான்.”



“ராம் உன்னை பங்க்‌ஷனுக்கு இன்வைட் பண்ணலைனு தப்பா எடுத்துக்காத. நானே அந்த பங்ஷனுக்கு லேட்டா தான் போவேன். நான் வெளிய வேலை பார்க்குறது அவ்வளவா யாருக்கும் தெரியாது. அதான் உன்னையும் அழைக்கல சாரி டா ராம்”



“ஹே தெரியும் டா... அதுக்கு போய் விளக்கம் கொடுக்குற. நான் எதுவும் தப்பா நினைக்கலை போதுமா. முதல்ல காதல் சக்ஸஸ் ஆகட்டும் அடுத்து பெரிய பங்க்‌ஷனே கொண்டாடலாம்.” என ராம் சொல்ல, விதுரனும் ராமிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.



காரில் சென்றவனது மனது நாளை அவளிடம் எப்படி காதல் சொல்லுவது என சிந்தித்துகொண்டே ஓட்டிகொண்டிருந்தான். வழியில் புடவை கடையை பார்த்ததும் அவள் நினைவு வந்தது, அன்று அவள் அன்னையின் கட்டியிருந்த சாரீயில் அவன் மெய்மறந்து நின்றான்.



அதனால் அவளுக்கு ஒரு சாரீ எடுத்துகொண்டு, அவளிடம் காதலை சொல்லலாம். என அவன் எண்ணிருக்க, அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பது அறியாமல் அந்த கடையை நோக்கி காரை திருப்பினான்.



”இந்த சாரீ நல்லா இருக்கா, இல்லை இதுவா...” மகளிடம் அவர் எடுத்த சாரீயை காட்ட. அவளோ தாய் எடுக்கும் புடவையில் கவனம் இல்லாமல் இருந்தாள்.



”என்ன விதுமா... எதுக்கு சோகமா இருக்க. நாளைக்கு உனக்கு நிச்சியம் இப்படி இருந்தா மாப்பிள்ளை வீட்டில என்ன நினைப்பாங்க.”



“அம்மா, நான் சோகமா இல்லை...”



“அப்புறம் என்னாசு வித்யா... புடவை எடுத்த கையோட நகை எடுக்க போகனும். இப்படி உம்முனு இருந்தா என்ன அர்த்தம்.”



“ஒரு அர்த்தமும் இல்லை ம்மா... சரி எந்த சாரீ எடுத்துருக்கீங்க, காட்டுங்க.” அன்னைக்காக தன் மனதை மறைத்து உற்சாகமாக இருக்க முயற்சி செய்தாள்.



கடையின் உள்ளே சென்றவன் மன கவர்ந்தவளூக்கு என்ன மாதிரி சாரீ எடுக்கலாம் என அவன் நினைக்க. அவன் எண்ணத்தின் நாயகியின் குரலே அவனுக்கு கேட்டுவிட்டது. அதனுடன் அவளுக்கு வேறொருவனுடன் நிச்சயம் நடக்க போகிறது என அவளின் தாய் பேசியதையும் அவன் கேட்டுவிட்டான்.



கேட்டவன் மனம் அதிர்ந்தது மட்டுமில்லாமல், அவள் எப்படி இந்த நிச்சியத்திற்க்கு ஒத்துகொள்ளலாம். இப்படி அவளிடம் காதல் சொல்லாமல் அவள் என்னைவிட்டு பிரிவது அவனுக்கு தோல்வியாக இருந்தது.



அனைத்திலும் வெற்றி கண்டவனுக்கு, வாழ்வில் முதல் தோல்வியாக அவன் காதல் இருக்கும் என அவன் நினைக்கவில்லை. இப்போது நான் செய்வது, அவளிடம் காதலை சொல்லலாமா என அவன் அதிர்ந்து யோசிக்க.



கடையின் பணியாள் “சார் என்ன மாதிரி புடவை பார்க்குறீர்கள்” என அவனை நினைவுலக்கத்திற்க்கு கொண்டுவந்தார்.



”இல்லை... வேண்டாம், முக்கிய வேலை ஒன்று இப்போது தான் நியாபகம் வந்தது.” அவன் சொல்லிவிட்டு வீட்டிற்க்கு வந்தான்.



“விதுரா, வேலை நல்லபடியாக முடிந்ததா.” வீட்டிற்க்குள் நுழைந்து, அவன் அறைக்கு செல்லவிருந்தவனை தடுத்து நிறுத்தியது விஸ்வநாதன் குரல்



“முடிந்தது ப்பா...”



“விதுரா நாளைக்கு நம்ம கம்பெனியோட பதினைந்தாம் ஆண்டு விழா. உனக்கு தெரியும் தான...”



“தெரியும் ப்பா... ஏன் கேட்க்குறீங்க...”



“விழாவில் உன்னை என் தொழில் சாம்ராஜியத்துல அறிமுகம் செய்யாலம் நினைக்குறேன். அதனால நீ என்னுடனே விழா நடக்கும் இடத்திற்க்கு வரணும் விதுரா. அதுக்கான ட்ரெஸ் செலக்‌ஷன் எல்லாமே டிசைனர் கிட்ட சொல்லி பங்கஷனுக்கு ஏற்ற மாதிரி இருக்கனும்.”



“அப்பா, நான் கண்டிப்பா அந்த விழாவுக்கு வரனுமா...”



“இது என்ன கேள்வி விதுரா... நீ கண்டிப்பா வந்தே ஆகணும்.”



”இப்போ தான் முதல் வெற்றியே பார்த்திருக்கேன். அதுக்குள்ள உங்க மகன் நான் தானு தெரிந்தா என்னை வேலையவிட்டு அனுப்பிடுவாங்க. நான் தொழில் தெரிஞ்சுக்கனும் அது உங்களிடமும் தெரிஞ்சுக்கலாம். ஆனா, அது எனக்கு கம்பர்டெபிளா இருக்காது ப்பா. அதே மாதிரி விஸ்வநாதன் மகன் தான் விதுரன் சொல்ல கூடாது ப்பா. விதுரனோட அப்பா தான் விஸ்வநாதன் சொல்லனும். என் முதல் வெற்றியிலே நான் கர்வமா இருக்க கூடாது. ஒருத்தர் கீழ வேலை பார்த்த அவங்களோட தொழில் கத்துகிற ஒரு தொழிலாளியா தான் நான் இருக்கனும்.”



“சரி டா... உன்னை அறிமுகம் செய்ய கூடாதுனு சொல்லிட்ட. ஆனா ஏன் பங்ஷனுக்கு வரமாட்டேங்குற.”



“அதே காரணம் தான் ப்பா... ஆனா நான் கொஞ்சம் வேலை எல்லாம் முடிச்சிட்டு வரேன். ஆனா நான் எங்க வேலை பார்க்குறேன் எல்லாம் சொல்லாதீங்க.”



“சரி என் ஃப்ரண்ட்ஸ்கிட்ட அறிமுகம் செய்யலாமா கூடாதானு அதையும் நீயே சொல்லிரு வேலை மிச்சம்.”



“அப்பா... அப்பா... அறிமுகம் செய்ங்க அது உங்க உரிமை. மேடையில நான் தான் உங்க மகன் மட்டும் சொல்லாதீங்க சரியா.”



”போதும் என் மகன வந்ததும் பேச வைக்குறீங்க, சாப்பிட்டயா கண்ணா... அம்மா உனக்கு சூடா பால் கொண்டு வரவா” என விசலாட்சி கேட்க


”இல்ல ம்மா சாப்பிட்டேன்... அலைச்சல் இன்னைக்கு அதிகம், தலைவலிக்குது ம்மா... நான் ரெஸ்ட் எடுக்கிறேன்.” இருவரிடமும் பொதுவாக சொல்லிவிட்டு சென்றான்



அறையில் அவன் நுழைந்ததும், நிதானமாக யோசித்தான். எப்படி அவளை பிரிந்து என்னால் வாழ முடியும். இதற்க்கு தான் ராம் என்னை முதலில் காதலை சொல்ல சொன்னான... அவளைவிட்டு நான் வாழ முடியாது, காதல் மறக்க முடியாது என ராம் சொல்லியது உண்மை.



இப்படி அவளை வேறொருவனுக்கு விட்டுகொடுக்கவா நான் காதலித்தேன். அதுவும் கடவுள் என்னிடம் அவளை மூன்று முறை என் முன்னே பார்க்க வைத்தது என் காதல் உண்மை என்று தானே. பின் ஏன் அவளை நான் விட்டுகொடுக்க வேண்டும். மாட்டேன்... மாட்டேன்... நான் விட்டுகொடுக்க மாட்டேன் அவள் என் சொந்தம். அவள் என் காதலுக்கு சொந்தம், அவளை விட்டுகொடுத்தால் என் வாழ்விலும் சரி காதலிலும் சரி மறக்க முடியாமல் தவிப்பேன்.



அதற்க்கு அவள் என்னுடன் இருக்க வேண்டும், அவள் என்னை காதலிக்க கூட வேண்டாம். ஆனால் அவள் என் அருகில், என் வாழ்வில் இருக்க வேண்டும். என்னைவிட்டு அவள் நீங்கி சென்றாள் நான் உயிர் வாழ்வதே வீண்.



அவன் ஒரு முடிவுடன் ராமிற்க்கு கால் செய்து நாளைய திட்டத்தை கூறினான். ராமோ, அதிர்ந்து நண்பனின் சொல்லுக்கு கட்டுப்பட்டான், ஆனால் நண்பனின் இச்செயல் பின்னால் யாரை வருத்த கொள்ள செய்யகூடாது என நினைத்துகொண்டான் ராம்



இனி வித்யா எனக்கு மட்டுமே, அவள் வாழ்வு என்னுடன் மட்டுமே.



கையில் மருதாணி நிறமும், வாசமும் அவளூக்கு நாளை இன்னொருவனுடன் நிச்சியம் செய்ய போவதை அடிக்கடி நினைவு படுத்தியது.


மகளின் முகம் வாட்டமாகவே இருப்பதை பார்த்த ராகவன். அவள் அருகில் அமர்ந்து தலைகோதினார். தந்தையின் தொடு உணர்வில் தந்தையை பார்த்தாள்,



“நிச்சியம் ஆகபோற பொண்ணோட முகத்துல சந்தோஷமும், எதிர்ப்பார்ப்பு இருக்கும். ஆனா உன் முகத்துல அந்த இரண்டுமே இல்லையே ம்மா.



”நல்லா கேளுங்க உங்க பொண்ணுக்கு ட்ரெஸ் எடுக்கும் போது கூட இப்படி தான் முகத்தை வச்சிருந்தா. ஏன்னு கேளுங்க, நான் கேட்டா வேற பதில் சொல்லி மழுப்புரா.” கையில் உணவு தட்டை மகளுக்கு உணவை எடுத்துகொண்டே வந்தார்.



“நான் நல்லா தான் இருக்கேன் ப்பா... நாளைக்கு நிச்சியம்னா கொஞ்சம் பயமா இருக்கு அவ்வளவு தான் மத்தப்படி ஐம் ஓகே ப்பா. இந்த அம்மா சொல்லுறத நம்பாதீங்க.”



“ஆமா டி... நான் சொல்லுறதை உன் அப்பா அப்படியே நம்பிட்டாலும். எப்போவும் உனக்கு தான சப்போர்ட் உன் அப்பா. இப்போ மட்டும் நான் சொல்லுறதை கேட்ப்பாறா.”



“எப்போவும் என் அப்பா என் பேச்சை தான் கேட்ப்பாரு. ஏன்னா அப்பாவுக்கு நான் மட்டும் தான் செல்ல பொண்ணு.” தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.



நாளை பெண்ணின் வாழ்க்கையே மாற்ப்போவது அறியாமல், மகளின் நிச்சியத்தை நல்ல முறையில் நடக்க வேண்டும் என ராகவனும் லலிதாவும் நினைத்துகொண்டனர்.



மனம் இல்லாமல் பெற்றோரின் சம்மதத்திற்க்காக அவள் நிச்சியத்திர்க்கு சம்மதித்தாலும் மனதில் ஏன் என்று தெரியாத சஞ்சலம்.



அங்கே ஒருவன் தன் காதலியை நாளை தன் வசமாக்க திட்டத்தை நண்பனின் உதவியுடன் செயல்படுத்த காத்திருந்தான்.



தொடரும்…………..




 
Top