Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 25

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 25



வாசலில் நின்றிருந்த காரை பார்த்ததும் விதுரன் வந்துவிட்டான் என்று அறிந்த இரு பெண்களும் வீட்டுக்குள் சென்றனர். ஹால் சோபாவில் அமர்ந்திருவனின் பார்வை இரு பெண்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு புனிதாவிடம், ‘எங்க போயிட்டு வரேங்க இரண்டு பேரும்’.


“புனிதா நீ இரவு சமையலுக்கு ஆகவேண்டிய வேலையை பாரு. இவர் கேள்விக்கு நான் பதில் சொல்லிகிறேன் போ.” அவளை அனுப்பிவிட்டு அவனிடம் திரும்பியவள்,


“கோவிலுக்கு போயிட்டு வந்தோம் நாங்க... எவ்வளவு நேரம் தான் இந்த வீட்டுக்குள்ளயே அடைந்து கிடக்க முடியும்.”



“சொல்லிருந்தால் நான் உன்னை அழைத்து சென்றிருப்பேனே. ஏன் புனிதாவை அழைத்து சென்றாய்.”



“எங்க போனாலும் உன்கூட போகனும் அவசியம் இல்ல.”



“என்கூட வராமல் எவ்வளவு நாள் நீ மற்றவருடன் போக முடியும்.”



“கோவிலுக்கு போயிட்டு வந்தவுடன் இப்படி சண்டை போடவ என்னை நிறுத்தி வைக்கிறாய்.”



“சொல்லிவிட்டு சென்றால் நான் ஏன் சண்டை போடப்போடுகிறேன்.”



“சொல்லிவிட்டு செல்லும் அளவுக்கு நாம் இருவரும் காதலித்து மணக்கவில்லை, இருவரின் வீட்டில் சம்மந்தம் பேசி மணமுடித்து வைக்கவில்லை.” அவனின் முகத்தில் அறைந்தார் போல் பேசிவிட்டாள்.



“இன்னும் எவ்வளவு காலம் என்னை இப்படி பேசிய கொல்லுவ வித்யா.”


”தெரியலை...”


“உன்னை கட்டாயக் கல்யாணம் பண்ணது என் காதலை காப்பாத்த தான் அதை ஏன் புரிஞ்சுக்க முயற்சி பண்ண மாட்டேங்குற.”



“அந்த பால போன காதலை என்கிட்டயோ, இல்லை உன் அம்மா, அப்பாக்கிட சொல்லி பொண்ணு கேட்டு வந்திருந்தா என் கோவம் இல்லாம இருந்திருக்கும் . என் மனசுல உங்க மேல வெறுப்பு வந்திருக்காது. உங்களை ஏத்துக்க முயற்சி செய்திருப்பேன், என் வாழ்க்கைய உங்க கையில ஒப்படைச்சிருப்பேன்.”



அவளின் பதிலால் அதிர்சியும், ஆச்சர்யாமாகவும் பார்த்துகொண்டிருந்தான்.



“அதுக்குள்ள தான் உன் வீட்டுல உனக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்யிற அளவுக்கு போயிட்டாங்களே. அப்பறம் எப்படி என் அம்மா, அப்பாகிட்ட சொல்லி, அடுத்து உன் வீட்டுக்கு வந்து சம்மந்தம் பேச வந்திருந்தா உன் கல்யாணம் நாளே வந்திருக்கும்”


“என்ன சொன்ன பால போன காதலா...? என்ன தெரியும் உன் மீதான காதல் பற்றி...? என்ன தெரியும் உன் மீதான நேசம் பற்றி...? என்ன தெரியும் என் காதலின் மிகபெரிய பொக்கிஷம் நீ என்று.”


என்ன இருந்தாலும் சூரிய உதயத்தை இங்கிருந்து காணும் போது தான் அழகாக இருக்கிறது. கன்னியகுமாரினா கன்னியாகுமாரி தான் அப்படிய கடலின் அடியில் இருந்து எழும் மஞ்சள் நிற பந்து போல் கொஞ்சம் கொஞ்சமாய் மேல் எழ்ம்பி வரும் சூரியோதயத்தை காண வரும் மக்களும் இங்கு அதிகம் உள்ளனர். வெளியூரில் மட்டுமல்லாது, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளும் இந்த சூரியோதத்தை காணவே வருகின்றனர்.


சூரியனின் வருகையை பார்த்துகொண்டே இருந்தவன் மனம் லேசாக இருப்பது போல் இருந்தது. வந்த வேலையும் முடியும் தருவாயில் இருக்கின்றது. இன்னும் இரண்டு நாட்களில் சென்னை செல்ல வேண்டும், அதனால் தான் இந்த சூரியோதயத்தை இன்று பார்த்தே ஆகவேண்டும் என தான் தங்கிருந்த வீட்டில் இருந்து கடல் கரையில் வந்து நின்றான். ராமை அழைத்தற்க்கு தூக்கம் தான் பெரிது என போர்வையை இழுத்து மூடி தூங்க்கிண்டிருந்தான். அவனை விட்டு விட்டு தான் மட்டும் கடல் கரையில் வந்து நின்றவன் சூரியோதயத்தையும் பார்த்துவிட்டான். இனி தன் இடத்திற்க்கு கிளம்பலாம் என செல்ல திரும்புகையில் ஒரு பாட்டு குரலால் ஈர்க்கப்பட்டான்.



“வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது”


அவள் மெய்மறந்து பாடினால் அந்த கடல் கரையில் சூரியனை வரவேற்ப்பது போல்.



”டி...வித்தி உன் பாட்டுக்கே நாங்க உன் அடிமை...” அவளின் தோழி கூற.


”ஆமா, வித்தி உன்னை இப்படியே பாட வைத்தா, போறவன் வர்ரவன் எல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் போடுவாங்க. அப்படியே நமக்கும் செலவுக்கு பணம் கிடைச்ச மாதிரியும் ஆச்சு.” இன்னொருவள் கூற


“அலப்பம்... அவ எவ்வளவு அழகான குரலில் பாடினால் நீ அதை பாராட்டாமல் அவள் பாட்டை விற்பனை செய்கிறாயே... உன்னை எல்லாம் எங்கள் தோழி என்று சொல்வதற்க்கு கேவலமாக இருக்கிறது.”


“ஏய் விடு டி அவளை பற்றி நமக்கு தெரியாதா?” வித்தி என்று செல்லமாக அழைப்படும் வித்யா அவர்களின் சண்டையை நிறுத்தினாள்.


“பொண்ணுங்களா... இன்னும் இங்க என்ன பண்ணுறேங்க. கிளம்ப வேண்டாமா? சூரியோதயத்தை பார்த்து முடித்துவிட்டாள் அனைவரும் ஊருக்கு செல்ல தயாரகுங்கள்.” அவர்களின் ஆசிரியர் சொல்லிவிட்டு முன்னே சென்றார்.


தோழிகளின் பேச்சில் அவளின் பெயர் தெரிந்தது. ஆனால் அவளின் சொந்த ஊர் எதுவென்று அவனால் அறியமுடியவில்லை. அவள் எங்கு தங்கிருக்கிறாள் என்றும் அவனுக்கு தெரியவில்லை. எந்த கல்லூரியின் மாணவி என்று கூட அவனுக்கு தெரியவில்லை. அவர்கள் பின்னயே சென்றாலும் அது தவறாக இருக்கும். அவன் வெவ்வேறு விதமாக யோசித்து கொண்டிருக்க. அவளும், அவள் தோழிகளும் அந்த இடத்தை காலி செய்தனர்.


அவள் இருந்த இடம் வெறுமையாக இருக்க, அவளை அங்கும் இங்கும் தேடி பார்த்தான். ம்கூம் அவள், அவன் கண்ணுக்கு சிக்கவில்லை. தன் அதிர்ஷடம் அவ்வளவு தான் என எண்ணிகொண்டு அவன் வீட்டிற்க்கு செல்ல, அங்கு இருந்த ராம் அவனிடம் என்னவென்று கேட்க. ராமிடம் முதல் முறை பார்த்த பெண்ணை எப்படி சொல்லுவது. அதுவும் அவளின் பெயரை தவிர அவனுக்கு வெறெது தெரியாது. இதை அவனிடம் சொன்னால் கேலி செய்து பவானியிடம் மாட்டிவிடுவான் அதான் அமைதியாக இருக்கலாம் என நினைத்துகொண்டு, ராமிடம் ஒன்றூமில்லை என சொல்லிவிட்டு அன்றை இறுதி வேலை முடிக்க சென்றனர்.



சென்னை வந்தபின்னும், அவனால் நிலையாக இருக்க முடியவில்லை. எங்கு பாடல் கேட்டாலும் அவளின் குரல் தான் நினைவிற்க்கு வந்தது. அவளின் நினைவை ஒதுக்கி வைத்து வேலை பார்த்தாலும், வேலை முடித்த பின்னும் அவள் இந்த சென்னையில் இருப்பாளா... இல்லை வேறு ஊரில் இருப்பாளா... என அவன் மனம் யோசித்தது.



“விதுரா அம்மா பிறந்த நாளுக்கு ஷாப்பிங்க் போகனும் சொன்னேல எப்ப போகனும் சொல்லு. நானும் ரோகினியும் வர்ரோம், அவளும் ஏதோ ஷாப்பிங்க செய்யனுமா.” ராம் சொல்லிகொண்டிருக்க



“சாரி மச்சான்... அம்மாவ அப்பா ஷாப்பிங்க அழைச்சிட்டு போறாங்காளாம்... அதனால நீ தங்கச்சிய அழைச்சிட்டு போயிட்டு வா.”


“அப்போ நீ அம்மாக்கு கிஃப்ட் கொடுக்கலையா”



“கொடுக்கனும்... ஆனா வேலை அதிகமா இருக்கே...”



“வேலை கிடக்குது வா நாம ஷாப்பிங்க் போகலாம்... தூக்கி போடு அந்த ஃபைல்ல.” அவன் கையில் இருந்த ஃபைலை வாங்கி தூரமாக வைத்துவிட்டு விதுரனை அழைத்து சென்றான்.



மிகப்பெரிய ஷாப்பிங்க் காம்ப்ளாக்ஸில் விதுரனும், ராமும் நுழைய. அதற்க்கு முன் அங்கு இருந்தாள் வித்யா அவளின் தாயினுடன்.



”என்ன வாங்கலாம் அம்மாக்கு...” விதுரன் ராமிடம் கேட்க



“வைரம்...”


“ஆல்ரெடி அவங்களுக்கு அப்பா அதிகமாக வாங்கிகொடுத்திட்டாரு.”



“கோல்டு, அண்ட் பிளாட்டினம்”



“நோ... அதுவும் அவங்ககிட்ட இருக்கு டா”



“அப்போ காஞ்சிபுரம் சாரீ”


“எஸ் கரெக்ட் இந்த முறை அது தான் என் கிஃப்ட் அம்மாக்கு” என இருவரும் முடி செய்துகொண்டு பட்டு ஹாலுக்கு சென்றனர்.



இருவரும் பட்டு செக்‌ஷனில் நின்று எப்படி பார்த்து எடுப்பது என யோசனை செய்ய... பணியாள் அவர்களுக்கு உதவி செய்தார். “எந்த மாதிரி பட்டு பார்க்குற்றீங்க சார்”



“காஞ்சிபுரம் பட்டு... எக்ஸ்பென்ஷிவ இருக்கனும்... என் அம்மாக்கு பொருத்தமா இருக்கனும் அப்படி காட்டுங்க.” விதுரன் சொல்ல



“சரிங்க சார்...”


ஒவ்வொரு பட்டு புடவையும் அந்த பணியாள் எடுத்து போட, அதை பார்த்துகொண்டிருந்தவனின் மனம் எது அம்மாக்கு செட் ஆகும் என மனதில் அம்மாக்கு சேலை வைத்து பார்த்து செலக்ட் செய்துகொண்டிருந்தான். இறுதியில் பட்டு ரோஜாவின் நிறத்தில், சந்தனநிற பார்டரில் ஒரு புடவையை தேர்வு செய்தான்.


”இது ஒகே... எப்படி ராம் இருக்கு இந்த புடவை”



”ம்ம்… சூப்பர் டா மச்சான்.” நண்பனின் தேர்வை பாராட்டினான்.


”அம்மா, இந்த சாரீ ஓகே...” என்று சொன்னவளின் குரலில் விதுரன் திரும்பி பார்க்க.



டிசைனர் புடவையில் ஒயிலாக நின்று தன் அன்னையிடம் காட்டி எப்படி இருக்குனு என கண்ணால் வினாவினாள்.


”நல்லா இருக்கு வித்யா... அப்போ இந்த புடவையே எடுத்துக்கலாம்.”



சிலையாக நின்றிருந்தவனை ஒரு மாதிரியாக பார்த்து, அவன் பார்த்த திசையில் பார்த்த ராம் கொஞ்சம் இல்லை அதிகமாகவே அதிர்ச்சியானான்.



பள்ளி, கல்லூரியில் எந்த பெண்ணையும் தவறான கண்ணோடத்தில் பார்க்காமல் தன் அன்னைக்கு அடுத்த நிலையில் வைத்தே அவன் பார்ப்பான், பேசுவான். பவானியிடம் மட்டுமே தோழியின் நிலையில் இருந்து பேசுவான். அப்படி இருக்கையில் ஒரு பெண்ணை இப்படி வைத்த கண் வாங்காமல் பார்ப்பவனின் கண்ணில் காதல் இருந்தது அதை பார்த்துவிட்டான் ராம்.



“மச்சான், அந்த பொண்ணு கிளம்பி ஒரு மணி நேரம் ஆச்சு.” அவனை நிகழ்காலத்துகொண்டு வந்தான்



“எந்த பொண்ணு... எங்க கிளம்பி ஒரு மணி நேரம் ஆச்சு.” நண்பனின் முன் இப்படி நின்றிவிட்டோமே, தலையில் தட்டிகொண்டு, அவனிடமே சமாளித்தான்.



“ எந்த பொண்ணு... நான் எதுவும் சொல்லலை டா. சரி, மச்சான் இந்த அம்மா, சாரீ கிஃப்ட் பேக் பண்ணியாச்சு. நீ கிளம்பு நான் ஈவ்னிங் வரேன் வீட்டுக்கு.” விதுரனிடம் நானும் எதுவும் பார்க்கவில்லை என காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.



இரண்டாவது முறை அவளை பார்த்தது அவனுக்கு மகிழ்ச்சி தான். அதைவிட இன்னொன்றும், அவள் சென்னையில் தான் இருக்கிறாள் என்பது இன்னொரு மகிழ்ச்சி. இதைவிட அவனுக்கு வேறெதுவும் வேண்டாமே. இனி அவளின் முகவரியை அறிந்துகொள்ள வேண்டுமே என்று அவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.



மூன்று நாட்கள் கழித்து விதுரன் டேபிள் மீது ஒரு கவரை வைத்தான் ராம். விதுரன் ராமை என்னவென்று டேபிளின் மீது இருந்த கவரை பார்த்து கண்ணால் கேட்க.



“எல்லாம் உனக்கு தெரிந்தவர்கள் பற்றி தான் இதில் இருக்கிறது. பிரித்து பார்த்தால் தெரிந்துவிடும் விதுரா முதலில் பிரித்து பார்.” விதுரனை ஊக்கினான்



அப்படி என்ன இருக்கிறது, எனக்கு தெரிந்தவர்கள் பற்றி என அவன் யோசனை செய்துகொண்டே கவரை பிரித்து உள்ளே இருந்த சில தாள்களும் ஒரு புகைப்படமும் இருந்தது.



முதலில் புகைப்படத்தை பார்த்த விதுரன் மகிழ்ச்சியில் ராமை தூக்கி சுற்ற ஆராம்பித்தான். “இந்த பொண்ணு போட்டோ எப்படி உனக்கு கிடைச்சது... நான் இந்த பொண்ண தான் காதலிக்கிறேனு உன்கிட்ட சொல்லவே இல்லை. அப்பறம் எப்படி இவ்வளவு விசயத்தை நீ கண்டுபிடித்த ராம்” அவளின் வீட்டு முகவரி மற்றுமின்றி அவர்கள் குடும்பம் முழுவது பற்றிய விபரமும் அதில் இருந்ததை பார்த்து கேட்டான் விதுரன் ராமிடம்.



“நீ சொல்லலைனா எனக்கு தெரியாதா? அன்னைக்கு புடவை எடுக்குற இடத்துல தான் நான் எல்லாம் பார்த்தேனே. அதை வைச்சு என் நண்பன் காதல்ல விழுந்துட்டானு நல்லா தெரிந்தது. சரி எப்படியும் நீ அவள் முகவரியை எப்படியும் கண்டு பிடிக்க முயற்சி செய்துட்டு இருப்ப, உனக்கு வேலை வைக்காம நானே அனைத்து விபரத்தை திரட்டி உன் முன் வைத்துவிட்டேன். இனி உன் பாடு, உன் காதல் பாடு நான் வருகிறேன்.”



அவனிடம் அனைத்து விபரமும் இருக்கிறது, ஆனால் அவனால் அவளிடம் நேரில் சென்று பேசுவதற்க்கு தயக்கமாக இருந்தது. அவளும், அவன் குடும்பம் போல் இருந்தால் இந்த நேரம் அவன் தாய், தந்தையிடம் சொல்லி பெண் கேட்க சென்றிருப்பான். ஆனால் அவளது குடும்பம் குருவி கூடு போல் அழகாக இருந்தது, தன் மகளை பருவ வயதில் இருந்தாலும் இன்று எனக்கு குழந்தை தான் என தன் மடியில் உறங்க வைக்கும் அவளது தந்தையின் பாசத்தால் அவனின் முதல் அடி எடுத்து வைக்க முடியவில்லை.


நிலாவை காட்டி சிறு குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய் போல், வளர்ந்த குழந்தையாகிய அவளுக்கு உணவு ஊட்டும் அந்த தாயின் பாசம் முன் அவன் காதல் ஈடாகவில்லை. இப்படி ஒரு குடும்பத்தில் வளர்ந்த அவளை தன் காதலால் பிரிக்க நினைப்பது தவறோ என அவனுக்கு தோன்றியது.



அதனால் அவனது காதலை அவளிடம் சொல்லுவதற்க்கு தள்ளிப்போட்டான். இது சரியா தவறா சிந்தனைகொண்டவனின் மனம் குழம்பி தவித்தது. இதனிடையில் அவனுக்கு முதல் ப்ராஜெக்ட் வேலை நியமிக்கப்பட்டது. அதில் தன் கவனத்தை திசை திருப்பினான் விதுரன்.



இரவு பகல் பாராமல் அவன் அந்த ப்ராஜெக்ட்டில் கவனமாக இருந்தவனை மீண்டும் கலைத்தது ராம்.


“என்ன மச்சான் காதல சொல்லிட்டயா...”


“இல்லை...”



“ஏன்... எல்லாம் உன் கையில் இருக்கிறது பின் என்ன. அவளிடம் காதலை சொல்லாமல் காலம் கடத்துகிறாய்.”



“அந்த அழகான குருவி கூட்டை கலைக்க விருப்பம் இல்லை என்று நினைக்கிறேன். என் தாய், தந்தை போல் தான் அவளையும் அவள் வீட்டில் பாசத்தால் நனைய வைக்கிறார்கள். அவளால் நிச்சயமாக என்னை காதலிக்க முடியாது. அப்படியே காதலித்தாலும் அவள் தாய், தந்தைக்காக என் காதலை விட்டுகொடுத்து சென்றிடுவாள்.”



“அதற்க்கு நீ உன் காதலை மறக்க போகிறாயா?”



“இரண்டு முறையே சந்தித்த அவளை மீண்டும் சந்திக்க மாட்டேன் என்ற நம்பிக்கையில் தான் அவளிடம் காதல் சொல்லுவதை வேண்டாம் என்று நினைத்தேன்.”


“மூன்றாம் முறை சந்தித்தாள்?” ராம் விதுரனிடம் கேட்டு நிறுத்த.


“ம்கூம்... சந்திக்க மாட்டேன்...”



“மீறி சந்தித்தால், என்ன செய்வாய்...”



“அவளை கடந்து சென்றிடுவேன்”


“இல்லை, உன் காதல் உன் கண்ணில் வந்து நிற்க்கும் அவள் முன். அதனால் அவளை மீண்டும், காதலிக்க செய்வாய், அவள் இல்லாமல் நீ இல்லை என உணர்வாய் அப்பொழுது.”



“பார்க்கலாம்... அப்படி நடந்தால் யார் எதிர்த்தாலும் நான் அவளை விட்டுகொடுக்கமாட்டேன்.” அவன் சொல்லிவிட்டு வேலை நடக்கும் சைட்டிற்க்கு சென்றுவிட்டான்.



ராம் சொன்னது போல அவளை பார்த்தான் விதுரன். அவளை கண்டவன், ராம் சொன்னது போல் அவள் மீது வைத்த காதல் தான் முன் வந்தது. இமைகளை அசைத்தால் அவள் சென்றிடுவாளோ என அவன் கண்ணைகூட அசைக்காமல் அவளையே பார்த்திருந்தான்.



தாய் இல்லாமல் எந்த குழந்தையின் அழுகையும் சமாதானம் செய்ய முடியாது. அது போல் அவள் இல்லாமல் அவன் வாழ்நாள் நகராது என்பதை அப்பொழுது உணர்ந்தான். தன்னையும் மீறி அவளை யாருக்கு இனி விட்டுகொடுக்க முடியாது என முடிவெடுத்தவன் அவளிடம் காதலை சொல்ல எண்ணி அவள் வீட்டுக்கு செல்ல இருந்தான்.


முடியும் தருவாயில் இருந்த அவனது ப்ராஜெக்ட்டை நல்ல படியாக முடித்துகொண்டு அவனது கம்பெனிக்கு சென்றான். கம்பெனியில் புது குழப்பம் உருவாகிருந்தது, அவனது ப்ராஜெக்ட்டில் புது சேர்த்தியாக இன்னும் குழந்தைகள் விளையாடும் மைதானம், மற்றும் பெரியவர்கள் நேரம் செலவழிப்பதற்க்காக பார்க் ஒன்றை நிறுவ வேண்டும் என ப்ராஜெக்ட் கொடுத்தவர்கள் கூற.



விதுரனை அழைத்த எம்.டி, ”அவர்கள் கேட்டுகொண்டபடி ப்ராஜெக்ட்டில் குழந்தைகள் விளையாடும் மைதானமும், பார்க் சேர்த்து அவர்களின் ப்ராஜெக்ட்டை முடித்துகொடுக்க முடியுமா உன்னால்.” கேள்வி எழுப்ப

சற்று யோசித்தவன், “ முடியும் நான் செய்து கொடுக்க முடியும். ஆனால் வேலைகள் முடிய தாமதமாகுமே”.



“வேலை தாமதமானல் பரவாயில்லை, ஆனால் அவர்கள் கேட்ட வேலையை செய்து கொடுத்தால் தான் நம் கம்பெனிக்கு இன்னும் அதிக ப்ராஜெக்ட் வரும்.



“அதற்கான வேலைகள், மற்றும் கட்டட வடிவமைப்பை நான் இன்றே நான் ஆரம்பிக்கிறேன்.” அவனது முதல் முயற்சியில் இப்படி ஒரு சிக்கல் வரும் என அவன் நினைக்கவில்லை.



அவனது வேலைகள் தாமதமானதால், அவன் காதல் சொல்லும் நேரமும் தாமதம் ஆனது.



தொடரும்………..





 
Top