Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 22

இளந்தென்றலோடு ஒரு கவிதை 22தனது ஜாக்கிங்கை முடித்துகொண்டு வீட்டில் நுழைந்தவனை முறைத்தாள் அவனின் காதல் மனைவி ரோகினி. எதற்க்கு காரணமில்லாம என் பொண்டாட்டி முறைக்குறா. இது தப்பாச்சே... என்ன விசயமா இருக்கும்... இன்னைக்கு என் பிறந்த நாளா... இல்லையே போன வாரம் தான் என் பிறந்த நாளா கொண்டாடினோம். இன்னைக்கு எங்க கல்யாணம் நாளா... இலையே அதுவும் போன மாசம் தான முடிஞ்சது. இதெத்துக்கு நம்ம யோசிக்கனும் பேசாம அவகிட்டயே கேப்போம்.


“ரோகிம்மா... என்ன மாமாவ பாசமா பார்க்குற. எதுவும் நான் மிஸ் பண்ணிட்டேனா.”“ம்ம்... உள்ள வாங்க எதை நீங்க மிஸ் பண்ணீங்கனு நான் சொல்லுறேன்.” கட்டிருந்த சேலையை தூக்கி சொருகியபடி அவனை முறைத்துவிட்டு சொல்லிச்சென்றாள்.“அய்யோ... அப்படி என்ன தான் ட நீ மறந்த.” அவன் யோசிக்கும் போதே அவனின் தந்தை க்ராஸாக,”அப்பா, இன்னைக்கு எதுவும் நான் மறந்தேனா.”“ஆமா டா... நீ எப்போவும் ஜாக்கிங் போனா ஜான்சிய சைட் அடிப்பியே. அதை இன்னைக்கு நீ மறந்துட்ட டா.” அவனின் தந்தை ஜாக்கிங் ரகசியத்தை போட்டுடைக்க“ஓ... ஐயா சைட் எல்லாம் அடிப்பாரா... அப்போ சரி அதுக்கு சேர்த்தே தெளிய வைக்கலாம்.” ரோகினி எதர்ச்சையாக அங்கு வந்து கேட்டுவிட .
”ரொம்ப தாங்க்ஸ் ப்பா... என்னை நல்லா மட்டிவிட்டு நீங்க போனதுக்கு.””நீங்க அவனுக்கு அப்பா மாதிரி இருங்க... இப்படி எல்லாம் பேசுனீங்க அப்புறம் நான் உங்களை தனியா கவனிக்க வேண்டியது இருக்கும்.”
“டேய்... இன்னைக்கு உன் பொண்டாடிக்கு பிறந்த நாள். அதுகூட உனக்கு மறந்துருச்சா. பாவம், அவ காலையில இருந்து உன் வாழ்த்துக்காக தான் வெயிட் பண்ணுறா.”“ஆமல, இன்னைக்கு என் ரோகிமாக்கு பெர்த்டேவா... இன்னைக்கு அப்போ கம்பெனிக்கு நான் லீவ் விடுறேன்.”“மண்ணாங்கட்டி என்னமோ நீங்க சொந்தமா வைச்சு நடத்துற கம்பெனி மாதிரி லீவ் விடுறேனு சொல்லுறேங்க. ஒழுங்கா ஆஃபிஸ் கிளம்புங்க இல்ல என் தோசை கரண்டியில அடி வாங்குவேங்க.”“அய்யோ ரொம்ப கோவமா இருக்காளே... எப்படி சமாளிக்குறது.” என தெரியாமல் போல அவன் நடிக்க“ரொம்ப நடிக்காதீங்க... போய் குளிச்சிட்டு வாங்க... ஆஃபீஸ் போகனும் நீங்க.”ரோகினியின் போன் அழைக்க... ‘சொல்லு டி, தாங்க்ஸ் டி... எங்க அவரா நைட் பனிரண்டு மணில இருந்த இப்போ விஷ் பண்ணுவாரு... அப்போ விஷ் பண்ணுவாரு காத்திருந்து என் தூக்கம் தான் போச்சு.’ கணவனை ஓரக்கண்ணால் பார்த்துகொண்டே பேசினால் அவளது தோழியிடம்.அவளது தோழியிடம் பேசிகொண்டிருந்த பொழுது, அவளது கணவன் அழைக்க ‘சரி டி... அவர ஆஃபீஸ் அனுப்பிட்டு உனக்கு போன் பண்ணுறேன்’
“சொல்லுங்க...” அவர்களது அறையை திறக்க பலூன் வெடித்து சிதற, ஹாப்பி பெர்த்டே மை சுவீட்ட்ட் ரோகிமா’ ராம், வாழ்த்த அவளோ பலூன் வெடித்ததில் பயந்து கண்ணை மூடியவள் கணவனின் வாழ்த்தில் கண் திறந்தாள்.அவள் குடும்பம், உறவுகள், ஃப்ரண்ட்ஸ், அவளது பள்ளி தோழிகள், டீச்சர்ஸ் என அவளது பிறந்த நாளுக்கு அவளை வாழ்த்து சொல்லியதை வீடியோவ பதிவு செய்தும். சிறு வயது முதல் கல்யாணம் வரை எடுத்த அவளது போட்டோ, குறூம்பு வீடியோவையும் அடுத்து அந்த திரையி ஓடியது.“எப்படி இருக்கு என் கிப்ட்...”

கண்கலங்கியவாறே அவனை பார்த்து “பிடிச்சிருக்கு” என சொல்லி அவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.அனைவரின் வாழ்த்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்க்கொண்டவள் கணவனின் ரகசியமான வாழ்த்தையும் அவளும் ரகசியமாய் வாங்கி கொண்டாள்.”என்ன விசலாட்சி் ஏன் ஒரு மாதிரி இருக்க... உடம்பு எதுவும் சரி இல்லை.” மனைவியின் அருகில் வந்து நெற்றியிலும், கழுத்திலும் கை வைத்துப்பார்த்தார் விஸ்வநாதன்.“என் உடம்புக்கு ஒன்னுமில்லை... என் மனசு தான் சரி இல்லை. இன்னைக்கு காலையில் தான் நம்ம பையன் வீட்டுக்கு வந்தான். நம்ம பின்னாடியே வேலயை முடிச்சிட்டு வரேனு சொன்னவன் விடிஞ்சது வர்ரான். அவன் முகமே சரி இல்லங்க.”


“எப்போ பார்த்த விதுரன் வர்ரதை...”“நான் எழுந்திரிக்கும் போது படிகட்டுல அவன் சோர்வா நடந்து போனான்.”“சரி இப்போ வருவான்ல நான் பேசுறேன்...”“இல்லை வேண்டாம்... அவனோட பர்ஷ்னல் விசயத்துல தலையிடுற மாதிரி போயிடும். அவனே சொல்லட்டும், ஆனா அவன் முகம் சோர்வானதுக்கு என்ன காரணம் மட்டும் எனக்கு தெரியனுங்க.”“சரிம்மா... அவனையே சொல்ல வைக்குறேன்...” மனைவியின் கவலையை உடனே போக்க வேண்டும் என முடிவெடுத்தவராய் மகனுக்காக காத்திருந்தார்.நன்றாக தூங்கி எழுந்தவன் ஒன்பது முப்பதிற்க்கு கீழே வந்தான். தந்தை கம்பெனிக்கு புறப்பட தயாரக உள்ள நிலையில், தாய் அவருக்கு உணவு பரிமாறினார். படியிலே நின்று அவர்களையே பார்த்தவனின் மனம், “தானும் இதே போல் இருக்க வேண்டும் என அவன் நினைக்க. ஒரு மனமோ அவளாவது உனக்கு இப்படி காதலாக பரிமாறுவதாவது இப்படியே நீ கனவு மட்டுமே காண வேண்டும்” வித்யாவின் கோவம் கண் முன் வர அப்படியே சோர்ந்து போனான்.”ஏன் கண்ணா அங்கயே நிற்க்கிற வா சாப்பிட்டு நீ உன் ஆஃபீஸ் போகனுமே.” அவனது நின்ற தோற்றத்தையும், தங்களையே வைத்த கண் மாறாமல் பார்த்து, அவனது நினைப்பு வேறு எங்கோ போவதை உணர்ந்தார் விசாலாட்சி.“இதோ ம்மா...”“விதுரா... இரவு வேலை இழுப்பறி இல்லாமல் முடிந்ததா?”“முடிஞ்சதுப்பா... அப்புறம் கொஞ்சம் செட்டில்மெண்ட் முடித்துவிட்டு வர தாமதமாகிவிட்டது ப்பா.”“தாமதம் என்றால்... விடிந்து நான்கு மணிக்கு வருவது தான் கொஞ்சம் தாமதமா...” என மனைவியின் மன சஞ்சலங்களை கேட்டுவிடுவது நன்று.அவனுக்கோ திக்கென்றானது... ஒரு வேளை தந்தைக்கு நான் கெஸ்ட் ஹவுஸிற்க்கு சென்று வந்தது தெரிந்திருக்குமோ. இல்லையே... அந்த வீடு நான் வாங்கியது என அம்மா, அப்பாவிற்க்கு இன்றளவிலும் தெரியாதே. பின் எப்படி நான் விடிந்ததும் வீடு வந்ததை அறிந்து கொண்டார்.“அது... அப்பா... கம்பெனில கொஞ்சம் வேலை பிரச்சனை... அதை சரியாக முடித்துகொண்டு வந்தால் தான் எனக்கு ஒழுங்காக துக்கம் வரும் என்று உங்களுக்கு தெரியாதா?” விஸ்வநாதனையே கொஞ்சம் குழப்பிவிட்டான்.அவன் சொல்லுவதும் உண்மையே... சிறு வயது முதல் எந்த வேலையை செய்தாலும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்பது அவனது வீம்பு. இப்பொழுது அதே அவன் பின்பற்றுவது சரி என்றாலும் விடியும் வரையில் என்ன வேலை அவனுக்கு இருந்தது. அவர் இன்னும் யோசனை செய்ய ஆரம்பித்தார்.”அப்போ ஏன் கண்ணா சோர்வா நடந்து போன உன் ரூம்க்கு. எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்ட சொல்லு ப்பா.”“ம்மா... வேலையை முடிச்சுட்டேனு சந்தோஷம், அதே மாதிரி வேலையில வர்ர டென்ஷன், சோர்வு இதெல்லாம் வராம எப்படி வேலை பார்க்க முடியும்.”“சரி விதுரா இனி வேலையை கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்திரனும். வேலை வேலைனு அது பின்னாடி சுத்துனா இன்னும் அதிகமா சோர்வாகிருவ.” விஸ்வநாதன் அவனுக்கு அறிவுரை வழங்கிவிட்டு கம்பெனிக்கு கிளம்பினார், அவரை வழியனுப்பிவிட விசாலாட்சியும் அவரின் கோட் சூட்கேஸை எடுத்துகொண்டு பின் தொடர்ந்து சென்றார்.அப்போதும் அவன் கண்கள் தாயின் செயலிலேயே இருந்தது. மீண்டும் ஒரு முறை அவன் நினைக்க, அதற்கெல்லாம் முற்று புள்ளி வைப்பது போல் அவனது போன் அடித்தது.போனின் அழைப்பில் யார் என்று அவன் பார்க்க, அவனது தோழன் ராம் அழைத்திருந்தான். “என்ன மச்சான் கல்யாணம் முடிஞ்சதும் இந்த நண்பன மறந்துட்டேல. ராம் சத்தமாக பேச, அவனது பேச்சில் தாய் வந்துவிட்டார என வாசலை பார்க்க அவர் இன்னும் வரவில்லை.“டேய் நான் வீட்டுல இருக்கேன்”“தெரியுமே டா... வீட்டுல தங்கச்சியோட தான இருக்க...”
“டேய்... நான் என் வீட்டுல இருக்கேன்... ஆஃபீஸ் வந்து பேசிக்கலாம்.” அவன் போனை கட் செய்ய போக“டேய் மச்சான்... அப்போ உனக்கு முத ராத்திரி என்னாச்சு.” எரிகிற நெருப்பில் இன்னும் அதிகமாக பெட்ரோலை ஊற்றினான்.“மவனே என் கண்ணு முன்னாடி மட்டும் நீ வந்த... உனக்கு மாலை மரியாதை பண்ணிடுவேன்... ஒழுங்கா ஆஃபீஸ் ல பேசலாம்.” அவன் போனை வைத்துவிட“என்ன கண்ணா நல்லா சாப்பிடு அப்போ வைச்ச பூரியை இன்னும் வரையிலும் சாப்பிடுற... இரு அம்மா தோசை கொண்டுவரேன்.” அவர் சமையல் அறைக்குள் நுழைய அவனுக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.முதல் முறையாக தாய், தந்தையை ஏமாற்றுகிறோமோ? இதனால் என்ன நிலை ஏற்படுமோ? தன் செயலால் தாய் தன்னை வெறுத்துவிடுவாரோ...? நினைத்துகொண்டே உணவை கொஞ்சம் கொஞ்சமாக உண்டு முடித்தான்.”எனக்கு எதுவும் வேண்டாம் நீ இங்க இருந்து போ...” பக்கத்து வீட்டுக்கு கேட்க்கும் அளவிற்க்கு வித்யா கத்திக்கொண்டிருந்தாள்.“அம்மா, நீங்க சாப்பிடலைனா சார் என்மேல தான் கோவம் படுவாங்க. உங்களை நல்லா பார்த்துகனும் என்கிட்ட சொல்லிட்டு போயிருக்காங்க. அடம் பண்ணாம இந்த டிபன் சாப்பிடுங்கம்மா... சாப்பிட்டா தான் என்கிட்ட தெம்பா கோவமும் பட முடியும்.”
“நான் தான் சொல்லுறேன்ல... எனக்கு எதுவும் வேண்டாம். அவன் என் இஷ்டம் இல்லாம என்னை கல்யாணம் செஞ்சுட்டான். இதுல என்னை பார்த்துக்கனும்னு சொல்லிட்டு போனானா... நீயும் அதை நம்புற... நீயும் அவன் கீழ வேலைப்பார்க்குறவ தான... அவன் எது சொன்னாலும் நீயும் நம்புவ.”“சார் பத்தி தப்பா நினைக்காதீங்கம்மா... என் கஷ்ட்டத்தை போக்குனவரும்மா, இல்லனா நான் செத்து போயிருப்பேன். அவர் எது செஞ்சாலும் உங்க நல்லதுக்கு தான் அவர் செய்து இருப்பாரு.” பணியாள் புனிதா சம்மாதானம் செய்ய“நான் செத்...” அவள் சொல்லிமுடிக்கவில்லை
“புனிதா... நான் பார்த்துகிறேன் நீங்க கீழ போங்க” அவளின் சொல்லை முடிக்கவிடாமல் வந்துவிட்டான் அவளை தேடி.அவனை கண்டதும் கண்கள் தானாக தரையை பார்க்க. அவனோ அவளை பார்த்துகொண்டே அறையின் கதவை அடைத்துவிட்டு அவள் அருகில் வந்தான்.“என்னமோ சொல்லிட்டு இருந்த என்ன அது இப்போ சொல்லு.” அவன் கேட்க
அவனைவிட்டு விலகி பால்கனி கதவின் அருகில் நின்றுகொண்டாள். ”நான் எதுவும் சொல்லை... அப்படி சொல்லிருந்தா அதை உன்கிட்ட சொல்லனும் அவசியம் இல்லை.”“சரி என்கிட்ட சொல்ல வேண்டாம்... வா வந்து சாப்பிடு்”“என்னால சாப்பிட முடியாது... என்ன செய்வ...” அவள் திமிராக அவனை பார்த்து கேட்க.“நான் மிருகமா மாறுனா நீ தாங்க மாட்ட... இப்போ வந்து சாப்பிடு இல்லை...”. நான் சொன்னதை செய்வேன் என்ற ரீதியில் அவன், அவளை பார்த்துகொண்டே சோபாவில் அமர்ந்தான்.அவன் பார்வையில் அவள் பயந்து போனாள்... தன் விருப்பம் இன்றி அவன் மிருகமாக மாறமாட்டான் என்பது அவளது நினைப்பு. ஆனால், சொன்னதை செய்துவிட்டாள் அவளின் நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. வேகமாக குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டு அவன் அருகில் வந்து நின்றாள்.
போனில் அவனது மேனேஜர்க்கு இரண்டுமணி நேரம் பர்மிஷன் கேட்டு மெயில் செய்துகொண்டிருந்தான். மெயில் அனுப்பிவிட்டு, தன் அருகில் அவள் வந்து நிற்பத்தை நிழலாக பார்த்தவன் அவளை நிமிர்ந்து பார்க்காமல் அறையை திறந்துகொண்டு வெளியேற. அவளும் அவன் பின்னே கீழே வந்தாள்.“புனிதா... சாப்பாடு எடுத்து வைங்க...”
“இதோ சார்... எல்லாம் ரெடி நீங்களும், அம்மாவும் வந்து சாப்பிட வாங்க.” அவர்களை அழைத்துவிட்டு உணவு மேஜையில் அவன் அமர அவளோ அவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்துகொண்டாள்.அவள் தன் அருகில் அமர மாட்டாள் என அவன் நினைக்க. அவளோ, அவன் நினைப்பை மாற்றினாள். “நீங்க போங்க புனிதா நான் பார்த்துகிறேன். நீங்களும், அன்பும் சாப்பிட்டு வாங்க.” பணியாளை அனுப்பிவிட்டு அவன் அவளுக்கு பரிமாறினான்.
தட்டில் அவளுக்கு பிடித்த உணவை வைத்தவிட்டு அவள் சாப்பிடட்டும் என அவன் மறுபடியும் போனில் மூழ்க. அவளுக்கோ உணவு இறங்க மறுத்தது, கண்ணீரை ஒரு பக்கம் துடைத்துகொண்டே உணவை உண்டு முடித்தாள்.“என்ன போதுமா... அதுக்குள்ள எழுந்துட்ட...”“இல்லை... சாப்பிட முடியலை...”“இதே மாதிரி இனி இருக்க கூடாது... நல்லா சாப்பிடு... வேற எதுவும் உனக்கு வேணுமா.”“ஆமா... வேணும்...”
”என்ன.. சொல்லு நான் வாங்கிட்டு வரேன்.””உங்ககிட்ட இருந்து விடுதலை... இந்த நரகத்துல இருந்து நான் போகனும் வாங்கி கொண்டுவாங்க.” அவனை அதிர செய்துவிட்டு அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.

என்ன சொல்லிவிட்டாள், விடுதலை வேணுமாம்... அதுக்காகவா இவளை கல்யாணம் செய்துகொண்டு வந்தேன். எப்போது தான் என்னை புரிந்துகொள்வாள்... என் காதலை காது கொடுத்து கேட்டால் போதுமே. அதுவே அவளை என்னிடம் சேர்த்துவிடுமே. ஆனால் அவள் என்னிடம் பேசவே கோவம் கொள்கிறாள். அவன் மன வேதனையுடன் அங்கிருந்து ஆஃபீஸிற்க்கு புறப்பாட்டான். போகும் முன் புனிதாவிடம் பார்த்துகொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றான்.
ஆஃபீஸ் வந்தவனிடம் அனவரும் விஷ் செய்ய அதை மரியாதையாக ஏற்றுகொண்டு அவன் இடத்துக்கு சென்றான். அவன் வந்துகொண்டதை அறிந்துகொண்ட ராம் அவனது அறைக்கு சென்றான்.“மே கம்மின் விதுரா”“வா... ராம்”ஸ்வீட் பாக்ஸூடன் வந்த ராமை பார்த்த விதுரன் ”என்ன டா, ஸ்கூல் பையன் மாதிரி சாக்லெட், ஸ்வீட் பாக்ஸோட வந்திருக்க.”“விதுரா இன்னைக்கு என் மண்டை ஒடிஞ்சிருக்கு... நல்ல வேளை நம்ம பவானி தான் காப்பாத்தினா. அவ மட்டும் இல்லனா என் நிலைமை ரொம்ப மோசமாகிருக்கும்.”
”அப்படி என்ன டா நடந்தது.”
“இன்னைக்கு என் மனைவியோட பிறந்த நாள் டா... அவ, என்னோட விஷ்க்காக இராத்தி முழுசும் தூங்காம என்னையே பார்த்திட்டு இருந்தா. நான் அதை சுத்தமா கண்டுக்கலை, உன்கூடவே சுத்துனதுல நான் மறந்தே போயிட்டேன். அப்போ தான் பவானி எனக்கு போன் செய்து என் மனைவியோட பிறந்த நாளுக்கு செய்திருந்த வீடியோ, அப்புறம் நான் கண்டிப்பா மறந்திருப்பேனு முதலே எல்லாமே செய்தி வைத்திருந்ததை எனக்கு அனுப்பிவிட்டு அதை செட் செய்ய சொல்லிருந்த.எப்படியே என் மனைவியும் நான் சப்ரைஸ்னு கொடுக்குறேனு நினைச்சு ரொம்ப ஹாப்பி ஆயிட்டா. அப்போ தான் என்மேல இருந்த கோவமே போச்சு அவளுக்கு.”
“ஏன் டா என்கூட சுத்துனதுல மறந்தாலும்... காலையில யாராவது தங்கச்சிக்கு விஷ் பண்ணிருப்பாங்கள அதையே பின்பற்றி நீயும் சொல்லிருக்கலாமே”
“அப்படி சொல்லிருந்தா... அடுத்தவங்க சொல்லுறதை பார்த்து நீங்களும் சொல்லனும் நான் எதிர்ப்பார்க்கலை சொல்லி என்னை இன்னும் அடிச்சிருப்பா டா”
“சே மிஸ் ஆகிருச்சு டா மச்சான்... அடி வாங்கிருந்த இன்னும் நல்லா இருக்கும்.” விதுரன் நண்பனின் அடி தப்பிவிட்டது என சோகமாய் உரைத்தான்.
“உனக்கேன் டா இந்த கொலவெறி... உனக்கு போய் சாக்லெட் கொண்டு வந்தேன் பாரு.”“உன்னை... ஏன் டா நான் தான் வீட்டுல இருக்கேனு சொல்லுறேன்
கேட்காம தங்கச்சி வீட்டுல இருக்கியானும், முத இராத்திரி முடிஞ்சதானு கேட்ப்ப.” ராம் பேசியதை மறந்திருந்த விதுரன், ராம் பேசியதில் நினைவு வந்தவனாக, ராமை அடிக்க ஓடினான்.
தோழனின் அடி எதற்க்கு என்று அவன் தெரிந்துகொண்டதில், ராம் தப்பிக்க பார்க்க விதுரன் பிடித்துகொண்டான்.
“டேய் மச்சான்... என் வீட்டுக்கும், என் அப்பா அம்மாவுக்கு, என் பொண்டாட்டிக்கும் நான் ஒருத்தன் தான் டா. விடுடா... தெரியாம பேசிட்டேன் நண்பா.”
“போய் தொலை... உன்னை அடிச்சி எனக்கு என்ன ஆக போகுது.” நண்பனின் பேச்சில் ஏதோ உடைவது போல் இருந்தது.
“விதுரா என்னாச்சு... தங்கச்சி எதுவும் உன்னை தப்பா பேசிருச்சா. இல்லை, வேற எதுவும் சண்டையா.” என நண்பனின் மனநிலையை குறித்து கேட்க.
“பின்ன சண்டை வராம இருக்க நான் என்ன எல்லாருடைய சம்மத்தோடவா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளை கட்டாயக் கல்யாணம் செய்து இருக்கிறேன், அதுவுமில்லாம அவளோட சொந்தம், அம்மா, அப்பா முன்னாடில தாலியை கட்டி இருக்கேன் அப்புறம் எப்படி அவ என்கிட்ட நல்லா நடந்துப்பா.” விதுரன் சோகமாக சொல்ல
“எல்லாம் தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணுன. போக போக சரியா போயிரும் விதுரா, எதுக்கு கவலைப்படாத.” நண்பனின் தோளில் கைவைத்து ஆறுதல் கூறினான்.“ம்ம்... சரி டா...”“பவானிக்கு இன்னும் தெரியாது டா உன் கல்யாணம் நடந்தது.” ராம்
சொல்ல
“அவளுக்கு மட்டும் தெரிஞ்சது அடுத்த நிமிஷம் என் அம்மா, அப்பாக்கு தெரிஞ்சிரும். அது மட்டுமில்ல டா வித்யாவோட விருப்பம் இல்லாம தான் இந்த கல்யாணம் நடந்ததுனு தெரிஞ்சா பவானியே, வித்யாவ அவளோட கூப்பிட்டு போயிடுவா.” விதுரன் பதட்டமாக சொல்ல
“ஆமா டா... கொஞ்ச நாள் யாருக்கும் தெரிய வேண்டாம். அப்படியே தெரியனுமுனாலும் வித்யா உன்கிட்ட சமரசமா இருந்த தான் எல்லாரையும் சம்மாதானம் செய்ய முடியும்”
”சரி வேலைய பார்க்கலாம்...” இருவரும் தங்களது பணியில் இறங்கினார்கள்.
“வாங்க... வாங்க... எப்படி இருக்கீங்க சுதா அண்ணி.” தன் ஒன்றுவிட்ட அண்ணியின் வருகை விசலாட்சிக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
”நல்லா இருக்கேன் அண்ணி... நீங்க எப்படி இருக்கீங்க... அண்ணா கம்பெனிக்கு போயிட்டாங்களா.”
“ஆமா, அண்ணி கம்பெனிக்கு போயிட்டாங்க... இன்னைக்கு முக்கியமான வேலையாம்.” அவருக்கு குடிக்க ஜூஸை கொடுத்துவிட்டு எதிரி அமர்ந்தார்.
“ஓ... அப்படியா அண்ணி... அண்ணா இருந்தா நல்லா இருக்குமேனு நினைச்சு வந்தோன். நேத்து தான் ஃபங்ஷன் முடிஞ்சனால கம்பெனிக்கு போகமாட்டாங்கனு.”
“அவராச்சு கம்பெனிக்கு போகமா இருக்குறதாவது, இடி, மழை வந்தாலும். அதை பொருட்படுத்தாம கம்பெனிக்கு போயிட்டு வருவாங்க. என்னனு சொல்லுங்க அண்ணி... நான் அவர் வந்தவுடனே நீங்க சொன்னதை சொல்லுறேன்.”
“விதுரனும் ஆஃபீஸ் போயிட்டானா அண்ணி”
”ஆமா அண்ணி”
“நம்ம விதுரனுக்கு ஒரு வரன் வந்திருக்கு... நேத்து ஃபங்ஷனுக்கு வந்திருந்த ஒருத்தர் நம்ம பையனை பார்த்து பொண்ணுக்கு மாப்பிள்ளை கேட்டாங்க அண்ணி. அதான் கையோட உங்ககிட்ட சொல்லிட்டு பொண்ணு ஜாதகத்தை கொடுத்துட்டு போக வந்தேன்.” விசலாட்சியிடம் ஜாதகத்தை கொடுக்க, அதை வாங்கிக்கொண்டார் விசலாட்சி.
”அதுலயே பொண்ணு போட்டாவும் இருக்கும் ஜாதம் பாருங்க பொருத்தம் இருந்தா நாம மேற்படி பேசலாம். குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம், நம்ம வசதிக்கு சம்மம் தான்.” சுதா பொண்ணை பற்றி சொல்லிக்கொண்டே போனார்.
“சரிங்கண்ணி... நாங்க பொருத்தம் பார்த்துட்டு உங்களை அழைக்கிறோம்.” விசலாட்சி சொல்லி முடித்தது அவர் கிளம்பினார்.பெண்ணின் புகைப்படத்தை எடுத்து பார்க்கும் முயற்சி செய்ய அவருக்கு காலையில் மகன் சோர்வுடனும், சாப்பிடும் வேளையில் கண்ணில் கனவுகளுடன் தங்களை பார்த்தது நின்ற மகனின் கோலம் தான் இப்போதுக்கு நினைவு வந்தது.
ஜாதகத்தை எடுத்துப்பார்க்க விருப்பம் இல்லாமல் அதை அப்படியே ஷோக்கேஸில் வைத்துவிட்டு கணவனுக்கு மதிய உணவு செய்யும் வேளையில் இறங்கினார்.”இந்த ப்ராஜெக்ட முடிஞ்சதும் உங்களை வேற ப்ராஞ்சுக்கு நான்
மாற்றலாம்னு நினைக்குறேன் விதுரன். உங்க அபிப்ராயம் என்ன இங்கயே இருக்குறீங்களா... இல்லை வேற ப்ராஞ்சுக்கு போக விருப்படுறீங்களா.” அவனின் ஜே.எம்.எடி அவனின் திறமையை பார்த்து அவனிடமே கேட்க”நோ ஜேம்ஸ்... எனக்கு இந்த ஆஃபீஸ் கம்பர்ட்டெபிள் தான். இந்த ப்ராஜெக்ட் ஃபைனல் ஸ்டேஜ் நெருங்கிடுச்சு, நான் அதுக்குகான வேலையை கூட ஆரம்பிச்சுட்டேன்.”
“குட்... உன்கிட்ட பிடிச்சதே இது தான்... வேகாம உன் வேலையை முடிச்சாலும் அதுல நீ நேர்த்தியா செய்கிற விசயம் ரொம்பவும் பிச்சிருக்கு. ஆனா அந்த ராம் மட்டும் இன்னும் மாறாம இருக்கான் விதுரா அவனை கொஞ்சம் வேலையிலும் கவனம் செலுத்த சொல்லு. ரொம்ப விளையாட்டு பிள்ளையா இருக்கான். உனக்காக தான் அவனை எதுவும் சொல்லாம விடுறேன், இல்லன அவனுக்கு இந்த கம்பெனில வேலையே இல்லனு சொல்லிருப்பேன்.”
“ஒகே ஜேம்ஸ்... நான் பார்த்துகிறேன்... அவன் விளையாட்டா இருந்தாலும், வேலைனு வந்தா கவனாமா இருப்பான். இனி அவன் கம்பிளைண்ட் வந்தா நான் நேரடியா பார்த்துகிறேன்.” நண்பனை விட்டுகொடுக்காமல், அவனே பார்த்துகொள்வதாக அவன் சொல்லியது, ஜேம்ஸால் அதற்க்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை. நல்ல எம்ப்ளாயிஸை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள் அதே போல் தான் ஜேம்ஸூம்.
இறுதி கட்டத்தில் இருந்த வேலையை அவன் முனைப்பாக விதுரன் பார்த்துகொண்டிருக்க. போனில் வந்த அழைப்பு சத்தம் அவனை கலைக்க, யார் என எடுத்து பார்த்தவனின் கண்கள் சுருங்கி விரிந்தது. அட்டென் செய்து காதில் வைத்தவன். ”கதவ திறக்க மாட்றாளா... ஏன்...”

”தெரியலை சார்... என்ன செய்யுறாங்கனு பார்க்க போனா என்னை பார்த்ததும் கதவை வேகமாக அடைச்சுட்டாங்க. தப்பா எது...”

“இல்லை... இல்லை... அப்படி எல்லாம் செய்ய மாட்டா... நான் வரேன். இல்லனா கதவ உடைங்க... நான் இதோ கிளம்பிட்டேன்.” மீதி வேலையை நாளை முடித்துகொடுக்கிறேன் என சொல்லிவிட்டு காரை அவர்கள் இருக்கும் ஏரியாவுக்கு பறக்கவிட்டான்.
நண்பனின் வேகத்தை பார்த்த ராம்க்கு உள்ளுக்குள் திக்கென்றானது. அவனை பின் தொடர்ந்து தனது பைக்கை எடுத்துகொண்டு அவனது பின்னே சென்றான்.தொடரும்……

 
Advertisement

Advertisement

Top