Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 15

Advertisement

kalaivishwa

Active member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 15

”இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது இந்த ஐஸ்கீரிம் பார்லர்க்கு வந்து. தன்னை வரசொல்லியவனோ தன் முன் மௌனமாக இருப்பது அவளுக்கு புரியவில்லை. வந்தது முதல் அவள் தான் அவனுக்கும் சேர்த்து ஆர்டெர் செய்த ஐஸ்கீரிமை சாப்பிட்டுகொண்டிருந்தாள். அவனோ, அவள் முகத்தை பார்த்துகொண்டே இருந்தான்.”



என்னை வரசொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என்னனு சொல்லுங்க. அவளே அவனது மௌனத்தை கலைத்தாள்.



‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா தென்றல்?’ அவன் கேட்க.
அவனது முகத்தையே பார்த்துகொண்டிருந்தவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி பிளஸ் ஆச்சர்யம் பிளஸ் சந்தோஷம். அவள் ஒரு நிமிடம் கூட அவன் காதல் சொல்லவில்லை என கேள்வி அவளுக்கு தோன்றவில்லை.



‘உண்மையாவா?’



ஆமா... உண்மை தான்.



‘ஆனா இப்போ திடீர்னு கல்யாணம்னா எப்படி பண்ண முடியும். உங்க வீட்டுல என்னை ஏத்துப்பாங்களா?’




நான் கேக்குற ஒரு கேள்விக்கு நீ பதில் சொல்லு. உனக்கு என்னை கல்யாணம் பண்ணுறதுல சம்மதமா?




‘என்ன இப்படி கேட்டுட்டேங்க, எனக்கு சம்மதம்.’ அவளோ அவனுடன் அன்றே கல்யாணம் செய்யலாம் என்பது போல இருந்தது அவளின் சம்மதம்.





சரி, என் வீட்டுல நான் என் அக்காகிட்ட சொல்லி உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்க வரசொல்லுறேன். உன் வீட்டுல எப்படி?




‘என் அப்பாவ தவிர என் வீட்டுல எல்லாரும் என் விருப்பம் தான் முக்கியம்னு சொல்லுவாங்க. அதனால நான் அப்பாகிட்ட பேசிட்டு சொல்லுறேன்.’
ஏன் உன் அம்மா, உங்க அப்பாவ கன்வின்ஸ் பண்ணமாட்டாங்களா?




அவன், அவளின் தாயை பற்றி கூறியதும் அவளின் அன்னையின் நியாபகம் வந்துவிட்டது. முகத்தில் உள்ள சோகத்தை மறைத்து அவன் முன் ‘அம்மா இல்லை... அப்பா, தொழில்ல பிஸியா இருக்காரு. பெரியம்மா, பெரியப்பா வீட்டுல தான் இருக்கேன். பாட்டி, அத்தைகூட இருக்காங்க.’




ஓ... சரி..., அவன் சாதாரணமாக எடுத்துகொண்டான். அவனுக்கும், அன்னை, தந்தை இல்லை. அதனால் அவனுக்கு அவளது சோகம் அவ்வளவாக கருத்தில் பதியவில்லை. அவனுடன் எப்பொழுது அவனது அக்கா இருப்பதனால் அவனுக்கு தாய், தந்தை நியாபகமும் இருப்பதில்லை. அவனது அக்காவும், கல்யாணம் செய்தாலும், அவனுடனே இருந்தாள்.





‘தீடிர்னு என்ன கல்யாணம் பண்ணலாமுனு நினைக்குறேங்க.’



அவளிடம் மறையாமல் கூறினான், ‘அக்கா, என்கிட்ட கல்யாணம் வயசு வந்துருச்சு பொண்ணு பார்க்கவானு கேட்டாங்க. அப்போ உன் நியாபகம் வந்துச்சு அதான் உன்கிட்ட இப்போ கேட்டேன்.





‘அப்போ, நீங்க என்னை காதலிக்குறீங்க... காதல் வந்துருச்சு.’ அவளோ சந்தோஷத்தில் கேட்க.




இல்லை தென்றல் காதல் இல்லை, என் மனசுல அந்த நிமிஷத்துல உன்னை என் மனைவியா மட்டுமே தான் நினைக்க முடிஞ்சது.




சோர்ந்து போனாள், இவனிடம் எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் தவித்தாள்.



‘காதல் இல்லாம எப்படி நம்ம கல்யாணம் பண்ணிக்க முடியும்’ அவள் கேட்க.




அவனுக்கோ கோவம் வந்துவிட்டது, கிளி பிள்ளைக்கு சொல்லுவது போல காதல் உன் மீது வரவில்லை. என அவன் பல முறை சொல்லிவிட்டான். ஆனால் அவளோ, அந்த ஒற்றை வார்த்தையை பிடித்துகொண்டு காதல், காதல் என்றால் வந்துவிடுமா.





‘இப்போ என்ன சொல்ல வர்ர தென்றல், காதல் இருந்தா தான் நம்ம கல்யாணம் நடக்கும்னு சொல்லுறியா?.’




ஆமா தனுஷ்... காதல் இருந்தா தான் ஒவ்வொரு நாளும், நாமா வாழப்போற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். என அவள் ஆரம்பிக்க அவனுக்கு சுள்ளென்று கோவம் வந்துவிட்டது.






போதும் நிறுத்து டி... சும்மா, சும்மா காதல் வந்துச்சா, வருமா, அது இருந்தா தான் வாழ்க்கை வாழ முடியும்னு எனக்கு பாடம் நடத்தாத. நீயா வந்து தான் என்னை பிடிச்சிருக்குனு சொன்ன. இப்போ அதே மாதிரி தான் நான் உன்னை கல்யாணம் பண்ண விருப்ப படுறேன். நீ முடிவா என்ன சொல்லுற.





அவனின் கோவமான செயல் அவளுக்கு ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது. அவன் முன் உடல் நடுங்குவதை காட்டிகொள்ளாமல், அவனை பார்த்தாள்.





’சொல்லு இப்படி அமைதியா இருக்காத... எனக்கு பிடிக்காது.’ அவன் ஒற்றை புருவத்தை அப்பொழுதும் அழகாக தூக்கி வினாவினான்.





அவனிடம் எதுவும் சொல்லாமல் விறுவிறுவென அவள் கிளம்பிவிட்டாள். அவனோ, அவள் போவதை தடுக்கமால் அவள் போவதையே பார்த்திருந்தான்.




’ச்சே இம்சை பண்ணுறா... இப்படி இவ நடந்துகிறதுக்கு தான், அவளை போன் பண்ணி வரசொன்னேனா. என்னை புரிஞ்சுக்காதவ எனக்கு வேண்டாம்.’ என அவன் மனதிலே பேசிகொண்டு இருவரும் சாப்பிட்ட ஐஸ்கீரிம்க்கு அவனே பில் கொடுத்துவிட்டு சென்றான்.




****************



எதுக்கு நாம பெங்களூர் போறோம் சிவா... இப்படி திடீர்னு வந்து கூப்பிட்டு போற.
‘ஒன்னுமில்லை, தனு என் ஃப்ரண்ட் மேரேஜ் நடக்குது. அவன் என்னை இன்வைட் பண்ணிருந்தான் அதான் போறோம்.’ என அவளிடம் பொய் கூறினான்
ஆனால் அவனது யோசனையில் அந்த போலீஸ்கார் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. ‘ஒரு பெரிய ஆபத்துல இருந்து பல உயிர்களை அந்த பொண்ணு காப்பாத்திருக்கு. ஆனா, அந்த வேலவன் சும்மா இருக்கமாட்டான் முடிஞ்சா அந்த பொண்ண வேற ஊருக்கு அழைச்சுட்டு போயிருப்பா. அந்த பொண்ணுக்கு எப்போ வேணாலும் ஆபத்து வரலாம். என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கும், அந்த பொண்ணுக்கு பாதுக்காப்பு கொடுத்து அனுப்ப முடியும். அதுக்கு மேல நீ தான் அந்த பொண்ண காப்பாத்தனும். வேலவனுக்கு எப்போ வேணாலும், ஜாமீன் கிடைக்கலாம். ஏன்னா அவனுக்கு உதவுறவுக்கு ஆயிரம் பேர் இருப்பாங்க. ஆனா நமக்கு உதவ யாரும் முன் வரமாட்டாங்க கடவுள் ஒருவரை தவிர.’






‘அவனுக்கு ஜாமீன் கிடைச்சு வெளியவந்தா அடுத்த டார்க்கட் அந்த பொண்ணு தான். அவன், பல உயிர்களை கொன்னுவனுக்கு, இந்த பொண்ண கொல்லுறது அவனுக்கு சாதாரணம் தான்.’ என மோகன் சொல்லியது இப்பொழுது அவன் காதில் ஒலித்துகொண்டிருந்தது.





‘அவர் சொல்லிய அடுத்த நாளே அவன் பெங்களூர் செல்லலாம். அங்கு அவனது நண்பன் ஒருவனுக்கு மேரேஜ் என பொய் சொல்லி அவளை இப்பொழுது அவர்கள் இருக்கு ஊரில் இருந்து பாதுக்காப்பான இடத்திற்க்கு அழைத்து செல்ல தான் அவன் இப்படி செய்தது.’





பஸ் பெங்களூரை நோக்கி பயணித்துகொண்டு இருந்தது. இதுவரை எதுவும் நடக்கவில்லை என அவன் நிம்மதியாக இருக்க. அப்பொழுது பஸ் சட்டென்று பிரேக் அடித்து நின்றது. பயணிகள் அனைவரும் என்னவென்று பதற்றத்துடன் பார்க்க. பஸ் முன் நாலைந்து கார்கள் மறித்தார் போல் நின்றுகொண்டிருந்தது.




*****************



கல்லூரி முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர், ஆனால் தென்றல் மட்டும் சோகமாக அமர்ந்திருந்தால். அன்று சங்கவி கல்லுரிக்கு வரவில்லை. ஐஸ்கிரீம் பாலரில் நடந்த சந்திப்புக்கு அடுத்து தனுஷூம், இவளும் சந்திக்கவில்லை. மூன்று நாள் ஆகிவிட்டது தனுஷை பார்த்து, போனில் பேசி. அவன் நியாபகமாக தான் இருந்தது அவளுக்கு.
இப்பொழுது கூட அவனுக்கு போன் செய்து, மெசேஜ் செய்து பேசினால் அவன் பேசுவானா? என்ற கேள்வி தான் அவளுக்கு பயத்தை ஏற்படுத்தியது.





‘காதல் இல்லாமல் கல்யாணம் எப்படி சாத்தியமாகும். பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் கல்யாணத்தில் கூட இருவருக்குமே காதல் ஏற்படும் சந்தர்ப்பம் அமையும். ஆனால், இவனுக்கு காதல் இல்லை, கல்யாணம் செய்துகொள்வோம் என கூறினால், காதல் செய்த என் மனம் எவ்வளவு பாடுபடும் என அவனுக்கு புரியாதா?’ யோசித்தவளின் மனம் முழுவதும் அவன் மட்டுமே.





’நேரத்தை பார்த்தவள், அவள் வீட்டிற்க்கு செல்லும் நேரம் தாண்டிவிட்டது. தாமதம் ஆனால் பெரியம்மாவின் அலைபுறுதல் வாசலுக்கும், தெருவுக்கும் இருக்கு. ஒரு மனதாக அவள் கல்லுரியை விட்டு வெளிய வந்தபொழுது அவன் காத்திருந்தான்.’



“அவன் தன்னை தேடி இவ்வளவு தூரம் வருவான் என அவள் நினைக்கவில்லை. அவனை பார்த்தும் மகிழ்ச்சி தான். அவனை பார்த்தவள், வேகமாக அவனை நோக்கி நடந்தாள்.”



‘எப்படி இருக்கீங்க...’ அவள் கண்ணீரை துடைத்துகொண்டு கேட்க.



“அவளை பார்த்ததும் தான் அவன் மனதில் கொஞ்சமாக அவள் மீது நேசம் துளிர்க்க ஆரம்பித்தது. ஆனால் அப்பொழுது அதை மறைத்துகொண்டு கேட்டான்.”




‘உன் முடிவு என்னனு எனக்கு தெரியனும். அதுக்கு தான் உன்னை தேடி வந்தேன்.’



அவள் கண்ணீரை பார்த்தும் கவலை இல்லாமல் அவன் முடிவிலே இருந்தான்.



அவளோ, இதற்க்கு மேலும் இவனுக்கு என் காதலை புரியவைக்க முடியாது. ஒரு முடிவுடன் அவன் முகத்தை பார்த்தாள், ‘ சரி நாம கல்யாணம் பண்ணிக்கலாம். என் அப்பாக்கிட்ட பேசிட்டு உங்ககிட்ட சொல்லுறேன்.’ அவள் சொல்லியதும் அவன் அப்பொழுதாவது புன்னகையுடன் தன்னிடம் பேசுவான் என அவள் எதிர்பார்க்க, அவன் தான் தனுஷ் ஆச்சே அவன் அதை அவ்வளவு எளிதில் அவள் முன் காட்டிவிடவில்லை.



‘ரொம்ப சந்தோஷம்... நான் எங்க அக்கா, மாமாகிட்ட பேசுறேன். சீக்கிரம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். நான் கிளம்புறேன்.’ வந்தேன் என் வேலை முடிந்தது என்பது போல் அவனது செயல் இருந்தது.





அவளுக்கு அவனை புரிந்துகொள்ள குறைந்தது ஒரு வருடம் அவனோடு இருந்தால் தான் புரிந்துகொள்ள முடியும். என அவளுக்கு அப்பொழுது தோன்றியது.




’அவ்வளவு தானா... பேசுறதுக்கு எதுவும் இல்லையா.’ என அவளே தான் கேட்டாள்.




நாம பார்த்து, பேசி மூனு நாள் ஆச்சுனு ரொம்ப உன்னை மிஸ் பண்ணுறேனு நீ சொல்லுவ. நானும் அதை கடமையேனு கேக்க முடியமா. தென்றல் ஒன்னு சொல்லுறேன் நல்லா புரிஞ்சுக்க, எனக்கு காதல் வசனம் எல்லாம் பேச தெரியாது... நான் இப்படி தான், உன்கிட்ட மறைக்காம என் மனைவியா நீ தான் வரனும் முடிவு பண்ணதும் நான் தான். அதுக்குனு உன்கிட்ட பொய்யா காதல் வசனம் பேச முடியாது. பைக்கில் ஏறி, அமர்ந்துகொண்டு அவளுக்கு அவனை புரிய வைத்தான்.




அவள், அவன் சொன்னதை மூளையில் பதிந்துகொண்டால். ஆக கல்யாணம் ஆனாலும் இவனிடம் காதல் வார்த்தைகளை பேச கூடாது என்கிறானா? அவள் நினைக்க.




‘உன்னை மிஸ் பண்ணலை ஆனா, உன் மெசேஜ், போன்கால் நான் எதிர்பார்த்தேன் நான் போயிட்டு வரேன்.’ அவளிடம் பைக்கை கிளப்பியபடி சொல்லிவிட்டு சென்றான்.




”அய்யோ... இதுக்கு பேர் தான் காதல் அதை இப்பவும் நீங்க புரிஞ்சுக்க முடியாது.” அவளுக்குள்ளேயே சொல்லிகொண்டு அவளது வீட்டிற்க்கு செல்ல பேருந்தில் ஏறினாள்.



**********
ஒரு நல்ல நாளில் கௌதமிற்க்கும், கௌசல்யாவுக்கும் நிச்சயம் செய்து, திருமண நாளை குறித்தனர் பெரியவர்கள். அகல்யா, லாவன்யா, பார்கவி மூவரும் கௌசல்யாவின் அருகே நிற்க். கௌதம் பக்கத்தில் வருண், ப்ரவீன் மட்டும் நிற்க. சிவாவோ வந்திருந்த விருந்தினர்களை கவனித்துகொண்டிருந்தான்.
பெரியவர்கள் அனைவரும், வாசலில் நின்று வந்தவர்களிடம், விடைபெற்று சென்றவர்களிடம் பேசிகொண்டு இருந்தனர்.




மேகலையோ, வெளியில் சந்தோஷமாக இருந்தாலும் மனதில் தன் வீட்டு வாரிசான சிவாவிற்க்கு கல்யாணம் செய்து பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் தான். மேகலையின் வருத்ததை பார்த்த நாதனோ, மனைவியை சமாதானம் செய்தார்.
’இரண்டு ஜோடி நிக்க வேண்டிய மேடையில, இப்போ ஒரு ஜோடி தான் நிக்குது. என் மனசு ஆறலங்க, என் வீட்டு வாரிசு ஆனா என் மகன் பிள்ளைக்கு இப்படி கல்யாணம் பண்ணி என்னால பார்க்க முடியாம போயிடுமோனு பயமா இருக்குங்க.’ என மேகலை துளிர்த்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்துகொண்டார்.




”யாருக்கு, யாருனு அந்த கடவுள் முடிச்சு போட்டுருப்பான் நீ ஏன் கவலைப்படுற மேகலை. நம்ம பேரனுக்கு, ஏத்த பேத்தியா ஒருத்தி இந்த ஊரை தேடி வருவா. அப்போ, நீ தான் உன் பேத்திய அழைச்சுட்டு வந்து உன் பேரன் பக்கத்துல நிக்க வச்சு அழகு பார்ப்ப. இப்போ கவலை படாத மேகலை எனக்கு வருத்தமா இருக்கு”. என அந்த வயதிலும் மனைவியின் கண்ணீரை தாங்கிக்க முடியாமல் தவித்தார்.




‘அய்யோ, நான் ஒரு கிறுக்கி நல்ல விசேஷம் நடந்துட்டு இருக்கு இப்போ போய் அழுகுறேன்.’ என கணவனின் வருத்ததை அப்போதே போக்கினார்.



***************
”அப்பாயி அவங்க குடும்பத்துல ஏதோ பிரச்சனைனு சொன்னாங்க. அதுனால அவங்க இப்போ கிராமத்துல இருக்காங்களாம். திரும்பி வர்ரதுக்கு நாள் ஆகுமா, கொஞ்சம் டைம் கேக்குறாங்க அப்பாயி.”




சரி தென்றல் உன் விருப்பபடி அந்த பையனோடு பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் அவங்க வீட்டுல பேசலாம். இப்போ நாம ஊருக்கு கிளம்பலாம், திருவிழா ஆரம்பிக்க போகுது. நானும், கற்பகம், மகேஷ்வரி முன்னாடி போறோம் ஊருக்கு.




’ஆனந்தா, தினகரா, தென்றலுக்கு பரிட்சை முடிஞ்சதும், நீங்க நாலு பேரும் ஒன்னா வந்திருங்க சரியா.’ சுசீலா சொல்ல




சரிங்க அம்மா... நாங்க வந்திருவோம்... நீங்க பத்திரமா போயிட்டு வாங்க.
அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அவன் ஏன் தன்னிடம் இப்படி சொல்லி, பெரியவர்களிடம் திருமணம் பேசுவதை ஏன் தள்ளி போடனும் என அவளும் பல கோணத்தில் யோசனை செய்துவிட்டாள் ஆனால் அது ஏன் என்று தான் தெரியவில்லை.




‘கடவுளே, நீங்க தான் அவங்களுக்கு துணை இருக்கனும். என்கிட்ட ஏதோ மறைக்குற மாதிரி இருக்கு. அதை அவங்க என்கிட்ட ஸேர் பண்ணிக்கிட்ட நானும் அதுக்கு உதவி செய்யலாம், ஆனா அவங்க கண்டிப்பா என்கிட்ட ஸேர் பண்ணிக்கமாட்டாங்க. அதனால நீங்க கண்டு பிடிச்சு எனக்கு பதில் நீங்க உதவனும்.’ கடவுளிடம் மானசீகமாக வேண்டிகொண்டு கல்லூரியில் நடக்க இருக்கும் இறுதியாண்டு தேர்வுக்கு தயரானாள்.



தொடரும்……………



 
சாரி ஃப்ரண்ட்ஸ்....

என் ஐடி ஓபன் ஆகலை....

அதான் என் அண்ணா ஐடி ல இருந்து யூடி போடுறேன்....


அப்புறம் நான் கதை எழுதுறதுல கவனமா இருக்குறதுனால என்னால உங்க கமெண்ட்ஸ் படிக்க முடியலை. மன்னிக்கவும்....

கதை எழுதி முடிச்சவுடனே நான் ரிப்ளே பண்ணுறேன்....

மன்னிக்கவும் தோழிகளே, சகோதரிகளே....


இப்படிக்கு
இலக்கிகார்த்தி.
 
Top