Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-epilogue

Advertisement

praveenraj

Well-known member
Member
மழை வலுடையவும் இனியா, ஜெகநாதன், காந்திமதி மூவரும் வீட்டிற்கு வர அங்கே ஹாலில் மெழுகுவர்த்தி பாட்டிற்கு எரிந்துகொண்டு இருக்க அவர்களைத் தேடி வந்தவர்கள் பால்கனியில் இருவரும் நெருங்கியபடி அவன் தோளில் சாய்ந்திருக்கும் ஆதிராவைப் பார்த்து மூவரும் சிரித்துக்கொண்டனர். அப்போது எதிர் பிளாட்டில் (பக்கத்து டவர் தான்) இருந்த ஒரு கபிள்ஸ், இவர்களைப் பார்த்து புன்னகைக்க இவர்களும் பதில் புன்னகை செய்தனர்.

"செழி... செழி..." என்று அவன் முகத்தையே பார்க்காமல் ஆதி அழைக்க,

"என்ன ஆதி?" என்றவனுக்கு,

"நீ இன்னும் எனக்கு ப்ரொபோஸே பண்ணலயே..." என்று அவள் சொல்ல,

"அதுக்குத் தான் இனிமேல் அவசியமே இல்லையே?" என்று அவன் விட்டேத்தியாகவே பதில் தர, நிமிர்ந்தவள் அவனைப் பார்த்து,"அதெல்லாம் எனக்குத் தெரியாது... நீ எனக்கு ப்ரொபோஸ் பண்ணியே தீரணும்..." என்று குழந்தைபோல் அவள் சிணுங்க, அவனோ எதையுமே சொல்லாமல் சிரித்து மட்டுமே கொண்டிருந்தான்.

அதற்குள் ஜான் அழைக்க போனை ஸ்பீக்கரில் போட்டவர்கள்,"என்ன ஆதி இப்போவாது ப்ரொபோஸ் பண்ணியா இல்லையா?" என்று அக்கறையுடன் ஜான் வினவ,

"அதெல்லாம் பண்ணியாச்சு டா..." என்றான் செழியன்.

"டேய் பிராட்... நீ எப்படி டா ஆதி போன்ல? அண்ட் உண்மையாவா?" என்று அவன் ஆச்சரியப்பட்டு இழுக்க,

"அண்ணா இப்போ கூட நான் தான் பண்ணேன். இவன் எதுவுமே சொல்லல..." என்று அவள் உரைக்க இவர்கள் இணைத்துவிட்டதை அறியாதவன்,

"டேய் வெண்ணை இப்போ ஒழுங்கா ப்ரொபோஸ் பண்ணப் போறியா இல்லையா?" என்றவன் கத்தவும்,

"மச்சி எதுக்கு ப்ரொபோஸ் பண்ணனும்?" என்று செழியன் கேட்ட தோரணையில் எரிச்சலடைந்தவன்,

"எதுக்கு பண்ணுவாங்க? அப்போதானே ஜோடியா நின்னு ஒருத்தரை ஒருத்தர் ரொமான்ஸ் பண்ண முடியும்?" என்று ஜான் பதிலளிக்க,

"அப்படியா? ஆனா மச்சி இப்போவே நான் அப்படித்தானே இருக்கோம்?" என்று செழியன் சொல்ல, ஆதிரா தான் உடனே போனை வாங்கவும் இப்போது தான் எல்லாம் ஓரளவுக்கு விளங்கியவனாக,"என்ன சொன்ன? என்ன டா சொன்ன இப்போ? டேய் சொல்லுடா செலியா?" என்ற ஜானுக்கு,

"அண்ணா அவரு ஓகே சொல்லிட்டாரு..." என்று வெட்கம் ததும்ப ஆதிரா சொல்லவும் தான் எல்லாம் புரிந்தவனாக,

"அடேய் அமுக்குணி நாயே? ஒரு வார்த்தை சொன்னியா டா நீ? நானும் என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு படப்படப்பா போன் பண்ணா?" என்று ஜான் கத்த அப்போது தான் கிட்சேனுள் பாத்திரம் உருளும் சப்தம் கேட்டு ஆதிரா விலகி உள்ளே செல்ல செழியனும் சற்று முன் இங்கே நடந்ததை எல்லாம் சொன்னான்.

"அடப்பாவி! உனக்குனு அதுவாவே அடிக்குது பாரு லக்? எப்படி டா?" என்று ஒன்றுமே தெரியாதவன் போலே கேட்டான் ஜான்.

"அதுவா மச்சி, எனக்கு தான் ஜான்னு ஒரு வீணாப்போன நண்பன் இருக்கானே... எல்லாம் அவன் செயலா தான் இருக்கும்..." என்று தன் நண்பனுக்கு மானசீகமாய் நன்றி உரைத்தான்.

"சொல்லுவடா சொல்லுவ... எல்லாம் என் நேரம்..."

"தேங்க்ஸ்ங்கறது ரொம்ப சின்ன வார்த்தை ஜான். அண்ட் இதைக் கூட நான் உனக்குச் சொல்ல மாட்டேன். ஆனா இதுக்கெல்லாம் நீ தான் காரணமா இருப்பேன்னு எனக்குத் தெரியும் டா..." என்று செழியன் உணர்ச்சிவசப்பட,

"நான் என்னடா பண்ணேன்? எல்லாத்துக்கும் காரணமே உன் ஆதிரா மேல உனக்கிருந்த காதல் தான். அது தான் உங்களை ஒன்னா சேர்த்திருக்கு..." என்று ஜான் சொல்ல கொஞ்சம் பேசிவிட்டு வைத்தான். இத்தனை ஆண்டுகளில் இல்லாத ஒரு உற்சாகம் தற்போதைய அவன் பேச்சில் உணர்ந்தான் ஜான். அவன் மனநிலையைச் சொல்லாமல் சொன்னது. ஜென்னி, நிவே, அனி மூவருக்கும் வாட்ஸ் அப்பில் வெற்றிக்குறியைப் போட்டான் ஜான்.

சப்தம் கேட்டு உள்ளே சென்ற ஆதிரா திரும்ப அங்கே ஹாலில் தன் தந்தையும் செழியனின் அன்னையும் சிரித்தபடியே அமர்ந்திருக்க கிச்சேனிலிருந்து தண்ணீரோடு வந்த இனியா அங்கே அமர்ந்தாள். அவர்களை எப்படி எதிர் கொள்வதென்று தெரியாமல் முழித்த ஆதிராவை அழைத்த காந்திமதி,"நாங்களே இதைப்பத்தி உங்ககிட்டப் பேசணும்னு இருந்தோம். நல்லவேளை எங்களுக்கு அந்த வேலை மிச்சம்..." என்று சொல்ல அவர்கள் தன்னை கிண்டல் செய்வது தெரிந்து அங்கிருந்து ஓடினாள் ஆதிரா. உள்ளே வந்தவன் மூவரையும் பார்க்க அவனை அழைத்து காலையில் அவர்கள் பேசிக்கொண்டதைச் சொல்ல செழியனுக்கு சந்தோசம் பொங்கியது. அவன் சந்தோஷத்தைக் கண்டு அவன் அன்னையும் தங்கையும் டபுள் சந்தோஷமடைந்தனர்.

அதன்பிறகு இனியாவின் கல்யாண வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடைப்பெற்றது. மறுநாளே அங்கிருந்து அவர்கள் மூவரும் ஊருக்குக் கிளம்பினர். போகும் போது ஆதிராவையும் செழியனையும் அழைத்த காந்திமதி பொத்தாம் பொதுவாக,"இன்னும் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகலை. அது ஞாபகமிருக்கட்டும்..." என்று சொல்லிவிட்டுச் செல்ல இருவரும் சிரித்துக்கொண்டனர்.

அடுத்த மாதத்தில் இனியாவின் திருமணத்தை முன்னின்று சிறப்பாகவே நடத்தி முடித்தான் செழியன். ஆதிராவும் அவள் பங்கிற்கு எல்லாம் செய்ய இனியாவின் மாமனாரிடம் சென்று எல்லாமும் பேசிவிட்டார் ஜெகநாதன். சோ அவர்கள் கல்யாணத்தில் தற்போது எந்தப் பிரச்சனையும் இல்லை. அடுத்த மாதத்திலே செழியன் ஆதிரா திருமணத்தையும் முடிவு செய்ய ஆடம்பரம் எதுவுமின்றி கோவிலில் சிம்பிளாக திருமணம் நடந்தேறியது. கல்யாணம் முடிந்ததும் இருவரையும் அன்றே சென்னை அழைத்துவந்து விட்டனர்.

என்ன தான் திருமணம் சிம்பிளாக முடிந்தாலும் இங்கே நண்பர்கள் கொலீக்ஸ் என்று எல்லோரையும் அழைத்து ஒரு ரிசெப்சன் நடத்தி விட்டனர். அந்த ரிசெப்சன் மிகவும் க்ராண்டாக நடத்தி முடிக்கப்பட்டது. செழியனின் நண்பர்கள் கொலீக்ஸ் ஆதிராவின் நண்பர்கள் மற்றும் கொலீக்ஸ் என்று அந்த அரங்கமே குதூகலித்தது. ஜான் தான் இதை எல்லாம் நேரில் கண்டு கழிக்க முடியாமல் எல்லாம் இங்கிருந்து வீடியோ காலில் லைவாகவே பார்த்துக்கொண்டு இருந்தான். செழியன் ஆதிரா இருவருக்குமே இதில் பெரிய உடன்பாடு இல்லை தான். ஜான் வந்த பிறகே திருமணம் வைக்கலாம் என்று சொல்ல விஷயம் ஜானிற்குத் தெரிந்ததும் உண்மையில் அவர்கள் அன்பில் நெகிழ்ந்து போனான். ஆனாலும் தன் நண்பனின் மனதைப் பற்றி அவனுக்குத் தெரியாதா என்ன? இத்தனை காலம் ஆதிராவின் நினைவுகளிலே வாழ்ந்தவன் இனி ஆதிரா தனக்கில்லை என்று நினைத்து வருந்தியவன் மீண்டும் ஆதிரா தன் அருகிலே இருந்தும் அவளை நெருங்க முடியாமல் தவித்தவன் ஆச்சே? இவையெல்லாம் அருகில் இல்லை என்றாலும் ஜானிற்கு நன்றாகவே புரிந்தது. மேலும் இருவரும் இதுவரை தங்கள் வாழ்வில் நிறைய கசப்புகளையும் சுமைகளையும் அனுபவித்துனாலோ என்னவோ ஜானே இருவரின் வீட்டிலும் இருவரிடமும் பேசிவிட்டு உடனே திருமணத்தை நடத்த சொன்னான்.

ரிசெப்சனுக்கு இந்த அபார்ட்மெண்டில் இருந்து கிட்டத்தட்ட அனைவரும் அழைக்கப் பட்டிருந்தனர். அந்த நண்டு சிண்டுவிலிருந்து அவர்களின் பெற்றோர்கள் வரை எல்லோரும் கலந்துகொண்டு அவர்களின் வாழ்வை இனிதே துவங்க ஆசிர்வதித்து சென்றனர். ஊரில் திருமணம் நடந்தாலும் ஏனோ நடந்த எல்லாமும் எல்லோருக்கும் தெரியும் என்ற காரணத்தால் அங்கே திருமணம் முடித்த கையோடு சென்னை வரவழைக்கப் பட்டிருந்தனர். இவர்கள் தங்கி இருக்கும் இந்த அபார்ட்மெண்ட்டையே இவர்களுக்கு வாங்கி பரிசாக தந்துவிடும் அளவிற்கு ஜெகநாதன் விரும்ப செழியன் தான் ரொம்பவும் பொலைட்டாக அதை மறுத்துவிட்டான். செழியனின் குணம் அறிந்த ஆதிராவும் அந்த யோசனையை மறுக்க வேறு வழியின்றி அமைதியானார் ஜெகநாதன்.

ரிசெப்சன் முடிந்ததும் அவர்களின் பெற்றோர்கள் எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அங்கேயே இருந்து அவர்களை எம்பேரஸ் செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை. இது காஞ்சனா மற்றும் இனியாவின் ஏற்பாடு. இதே அபார்ட்மெண்டில் ஏன் இதே பிளாட்டில் ஜோடியாகவே கிட்டத்தட்ட ரெண்டு மாதம் சேர்ந்து இருந்தாலும் இன்று அவர்களுக்கு இது ஒரு புது அனுபவமாகவே இருந்தது. அன்றிரவு இருவருக்கும் நிறைய தயக்கம் இருந்தும் எப்போதும் போல் இருந்து கொண்டனர்.

அதன் பின் இந்த ஒரு மாத காலத்தில் அவர்களுக்குள் இருந்த அந்தத் தயக்கத்தை கொஞ்சம் கொஞ்சம் விட்டிருந்தனர். இருந்தும் இருவரும் இன்னும் நெருங்கவில்லை. அன்று காலையில் விழித்தவன் அருகில் ஆதிராவைக் காணாது எழுந்து கிட்சன் வந்தவன் அங்கே சமையலில் தீவிரமாக இருந்தவளை பின்னிருந்து அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான். இது சுமார் கடந்த ஒருவாரமாக நடந்துகொண்டு இருக்கிறது. அவனின் முத்தத்திற்காக ஏங்குபவள் இதற்காகவே சீக்கிரம் எழுந்து வந்துவிடுவாள். அந்த சமயம் மட்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை கொஞ்ச நேரம் தவிர்பார்கள். காலையில் முத்தம் மாலையில் அந்த பால்கனி அணைப்பு என்று சென்று கொண்டிருந்த அவர்கள் காதல் வாழ்வில் அன்று ஒருநாள் ஒருபடி மேலே சென்று அடுத்தகட்டம் நோக்கிச் சென்றனர்.

இருவரும் அதன்பின் தத்தம் பணிகளைச் செய்து கொண்டு இருந்தனர். இருவரின் ஆபிசுக்கும் அந்த இடம் அருகருகே இருந்தது. ஆதிராவுக்கு மட்டும் சற்று தூரம் என்பதால் அவளுக்காக ஒரு ஸ்கூட்டி வாங்கி சர்ப்ரைஸ் செய்தான் செழியன். அவள் மறுத்தும் அவள் அதில் தான் செல்ல வேண்டும் என்று சொன்னதால் ஓகே சொல்லிவிட்டாள் அவனின் ஓகே கண்மணி. பின்னே எட்டாவது படிக்கும் போதே அவள் மாமாவின் பைக்கை (கியர் வண்டி) யாருமறியாமல் ஓட்டிக்கொண்டு போனவள் ஆயிற்றே? இருவரும் அவர்கள் வாழ்க்கையை ரொம்ப நிதானமாக அனுபவித்து வாழத் துவங்கினர். அதற்கு இரண்டு காரணம் இருந்தது. முதலில் அவர்களின் புரிதல் அந்த அளவிற்கு அழகாய் இருந்தது. சின்ன வயது முதல் ஒன்றாக இருந்தாலும் மேலும் செழியனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்... சும்மாவே ஆதிராவை அப்படித் தங்குவான் இப்போது சொல்லவா வேண்டும்? இதனால் அவர்களுக்குள் ஈகோ என்பது சுத்தமாக இல்லை. அதற்கு அவர்களின் நட்பும் புரிதலும் பெரிதும் உதவியது.
அதற்காக, சண்டை இல்லை என்று சொல்ல முடியாது. செழியனுக்கு எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கவேண்டும். ஆனால் ஆதிராவுக்கோ? சொல்லவே வேண்டாம். இரண்டாவது பெரிய பிரச்சனை சமையல். ஆதிராவுக்கு இன்னமும் ஜீரகத்திற்கும் சோம்புக்குமான வித்யாசம் கூடத் தெரியவில்லை. அவள் சமைப்பதைத் தப்பித் தவறி எந்த உயிருள்ள ஜீவனும் சாப்பிட்டு கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதில் செழியன் கவனமாய் இருப்பான். இதற்காகவே பெட் கட்டி இப்போது குக்கரி க்ளாஸ் போய்க் கொண்டு இருக்கிறாள். அண்ட் கல்யாணம் ஆனாலும் இருவரும் அதே கலகலப்புடன் இருக்க குறிப்பாக ஆதிரா அந்த அபார்ட்மெண்ட் பசங்களோடு தினமும் அரட்டையடிப்பது விளையாடுவது என்று அவள் சேட்டைகளைத் தொடர்ந்துகொண்டு தான் இருந்தாள். அவ்வப்போது செழியனும் அவர்களோடு இணைந்து கொள்வான். கொஞ்சம் கடன்கள் இருப்பதால் மாதம் தவறாமல் வட்டிக்கட்டிக் கொண்டு தான் இருந்தனர். அப்போதும் கூட ஆதிராவின் வருமானத்தை அவன் என்றும் வாங்குவதில்லை. அவனின் குணம் அறிந்ததால் ஆதிராவும் அவனைத் தொந்தரவு செய்வதில்லை. இந்த இடத்தில் தான் இவர்களின் புரிதல் அருமையாக இருந்தது.

முதலில் இருந்த அளவிற்கு தயக்கமும் இல்லை அதற்காக பின்னிப் பிணைப்பதும் இல்லை. மேற்சொன்ன அந்த ஈவினிங் ஹக், மார்னிங் கிஸ்ஸோடு அவர்கள் வாழ்க்கை தொடர்ந்துகொண்டு இருந்தது. ஆனால் அது அடுத்தக்கட்டத்தை அன்று அடையப் போகிறது என்று தெரியாமல் வழக்கம் போல் இருவரும் இருந்தனர்.

சனிக்கிழமை இரவு படம் பார்த்துவிட்டு லேட்டாக தூங்குவதை இந்த இரண்டு மாதத்தில் ஒரு புதிய வழக்கமாக்கிக் கொண்டு இருந்தனர். அன்றும் அப்படித்தான் ஒரு ஹாலிவூட் மூவி ஓடிக்கொண்டிருக்க அதில் வந்து கொண்டிருந்த முத்தக் காட்சிகள் இருவருக்குள்ளும் ஏதோ செய்ய கொஞ்ச நேரத்திற்குப் பிறகு படத்தைப் பார்ப்பதை நிறுத்தியவன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் தன்னையே பார்ப்பதை லேட்டாக உணந்தவளுக்கு குறுகுறுப்பு ஆட்கொள்ள அவன் தலை தன்னை நோக்கி வர திரும்பியவள் அவன் இதழ் தன் இதழ் நோக்கி படையெடுப்பதை அறிந்தும் எதிர்க்காமல் ஒத்துழைத்தாள். அப்போது அவள் மடியிலிருந்த ரிமோட் கீழே விழ அந்தச் சப்தத்தில் இருவரும் கலைந்து சென்றனர். இருவரும் அந்த ரிமோட் மீது பயங்கர கடுப்பில் இருந்தனர்.(ரிமோட் போச்சே!)

அதற்கடுத்த மாதம் அவளின் பிறந்த நாள் வந்தது. அன்று இரவு அந்த அபார்ட்மெண்ட் பசங்க மற்றும் தன் கொலீக்ஸ் எல்லோரையும் ஆதிராவுக்குத் தெரியாமல் வீட்டிற்கு அழைத்திருந்தான் செழியன். சரியாக பன்னிரண்டு மணிக்கு எல்லோரும் வர அன்று சர்ப்ப்ரைஸாக எல்லோரும் சேர்ந்து அவளுக்கு கேக் வெட்டினார்கள்.

கொண்டாட்டங்கள் முடிய நிவேதிதா தான்,"என்ன ஆதி இது தான் நீங்க ரெண்டு பேரு மட்டும் கொண்டாடும் கடைசி பர்த்டே வா இருக்கனும்..." என்று சொல்ல எல்லோரும் ஒரு கணம் திடுக்கிடவும் தான் சொன்னது தவறான சென்ஸில் சென்று அடைந்ததை எல்லோரின் முகபாவங்களைக் கண்டு புரிந்துகொண்டவள்,"ஐயோ நான் அந்த சென்ஸில் சொல்லலப்பா... அடுத்த வருஷம் ஒரு குட்டி ஆதியோ இல்ல ஒரு குட்டி செழியோ கூட இருக்கணும்னு சொல்ல வந்தேன்..." என்றாள்.

எல்லோரும் அவளுக்கு ஆதரவாகக் கைகொடுத்துவிட்டு கொஞ்சம் கதையளக்க கடுப்பான ரேணு,"இப்படியே பேசிட்டு இருந்தா அப்றோம் எப்படி டி அடுத்த வருஷம் குட்டி ஆதிராவோ இல்ல குட்டி செழியனோ வர முடியும்? வாங்க கிளம்பலாம்..." என்று கிண்டலாகச் சொல்ல எல்லோரும் அவர்களை தங்களால் முடிந்த அளவிற்கு வாரிவிட்டுச் சென்றுவிட செழியன் ஆதிரா இருவருக்கும் மனதில் ஒரு குறுகுறுப்பு எழுந்து அடங்கியது. ஆதிரா சென்று கதவைச் சாற்றி விட்டு வர செழியனோ எல்லாம் க்ளீன் செய்ய ஆயத்தமானான்.

"செழி நாளைக்குப் பார்த்துக்கலாம்..." என்று ஆதி சொல்ல இருவரும் தூங்கச் சென்றனர். ஆனால் இருவருக்கும் தூக்கம் வராமல் நிவேதிதா சொன்னதையே நினைத்தவாறு இருக்க ஆதி தான்,"செழி எனக்கு என்ன கிப்ட் தரப் போற?" என்று வினவ,

"என்ன வேணும் ஆதி? எதுனாலும் கேளு..." என்றான் செழியன்.

"அது... வந்து... நிவேதிதா சொன்ன கிப்ட் தான் வேணும்..." என்று வேகவேகமாக அவள் சொல்ல முதலில் புரியாமல் விழித்தவன் பின் புரிந்து சிரிக்க இருவரும் நல்ல புரிதலோடு தங்கள் இல்லறத்தைத் துவங்கினார்கள். அதற்குப் பிறகு முன்பிருந்த தயக்கம் ஹெஸிடேசன் எல்லாம் போய் இப்போது அவர்கள் இன்னும் நெருக்கமாகி ரொம்ப சகஜமாக வலம் வந்தனர். மெல்ல ஆதிரா செழியன் இருவரும் நண்பர்கள் என்னும் 'கோட்டைத் தாண்டி' கணவன் மனைவி என்னும் நிலைக்குச் சென்றுவிட்டனர். இருந்தும் அவர்களுக்குள் இருக்கும் அந்த நட்பை மறையாமல் பார்த்துக்கொண்டனர். ஜானும் அவனின் அமெரிக்கா ப்ராஜெக்ட் முடிந்து ஊர்திரும்பியவன் அங்கே அவர்கள் வீட்டிற்கு வந்து வீட்டைப் பார்த்து அதிசயித்துப் போனான். பின்னே செல்லும் போது ஒரு பேச்சிலர் அறையாக விட்டுச் சென்ற இந்த பிளாட் இன்று தான் ஒரு வீடு போல் காட்சியளித்தது.

"என்னண்ணா, டிரம்ப் என்ன சொன்னார்?" (மூன்று வருடத்திற்கு முன்பு எழுதியது...) என்று வம்பிழுத்தாள் ஆதிரா.

"அதுவா? செழியனை அவரு பார்க்கணுமாம். அவனை மாதிரி திறமையான ஆளுங்க தான் அவரு நாட்டுக்கு வேணுமாம். அதுனால அவனை உடனே அமெரிக்காவுக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டார்... இல்ல இல்ல ஆர்டர் போட்டார்..." என்று சொல்லி ஆதியை வெறுப்பேத்த, எங்கே உண்மையிலே செழியன் சென்று விடுவானோ என்று பயந்து அவனைப் பார்த்தாள் ஆதி. பின்னே அவனுக்கு அந்த ப்ரொஜெக்ட் எவ்வளவு இஷ்டம் என்றும் அவளுக்கும் தெரியும் தானே? அவளின் முகம் மாறுவதைக் கண்ட ஜான்,"ஐயோ ஆதிம்மா, சும்மா கிண்டல் பண்ணேன். பயப்படாதா உன் புருஷனை யாரும் எங்கயும் கடத்திட்டுப் போக மாட்டாங்க..." என்று சொன்னவன்,

"சாரிம்மா இன்னைக்கு மட்டும் இங்க தங்கிக்கறேன். நாளைக்கு கொலீக் கூட ஷிப்ட் ஆகிக்கறேன். திங்க்ஸ் எல்லாம் இங்க இருக்கு..." என்று தயங்கியபடியே கேட்டவனிடம் உண்மையில் எம்பரசிங்கா உணர்ந்தாள் ஆதிரா. அவன் வாழ்ந்த இந்த வீட்டில் இன்று அவன் தங்குவதற்கே பெர்மிஷன் கேட்கிறானே என்று நினைக்க அப்போது தான் இந்த ஆறு மாதங்கள் அவள் வாழ்வில் கொடுத்த வலி, அவப்பெயர் அதை விட அவளுக்கு அதிகமாக தந்த தந்துகொண்டிருக்கும் மகிழ்ச்சி, நிம்மதி, உற்சாகம் எல்லாமும் நினைத்து காலம் இவ்வளவு விரைவாக நகர்ந்து காட்சிகள் அனைத்தும் மாறியதை எண்ணி சந்தோசமாக இருந்தாள்.

ஆதிராவும் அவளின் வேலையில் பிசி ஆக செழியனும் அவன் வேலையில் பிசியாக அவள் தான் அவள் நாள் கணக்கை மறந்தாள். அன்று காலையில் அவசரமாக எழுந்த செழியன். இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கும் ஆதிராவைப் பார்த்து நெற்றியில் முத்தம் வைத்து விட்டு ரெடி ஆகினான். ஏதோ பைல் தேடியவன் அவளின் உபயோகப் படுத்தாத நேப்கின்ஸ் எல்லாம் பார்த்துவிட்டு,'இன்னுமா இது இங்கேயே இருக்கு? ரெண்டு மாசமா பார்க்கறேனே? இதெல்லாம் யூஸ் பண்ராளா இல்லையா?' என்று யோசித்தவன் அவசரமாகச் செல்ல இன்னும் எழாமல் இருபவளிடம் மதியம் வந்து விடுவதாகச் சொல்லி அவளை இன்று விடுமுறை எடுக்கச் சொல்லிவிட்டு உணவையும் ஆர்டர் செய்து விட்டுச் சென்றான். செல்லும் வழியில் ஏனோ அவனுக்கு ஆதிராவின் இந்த நிலை குழப்பம் தர சட்டென ஏதோ புரிந்தவனாய் மெடிக்கல் சென்று பிரெக்நெனச்சி கிட் வாங்கிக்கொண்டு வந்து சோதனை செய்ய அவன் கேல்குலேஷன் சரியானதும் வீட்டிற்கு விஷயத்தைச் சொல்லி ஆர்ப்பரிக்க இது ஆதிராவுக்கும் சர்ப்ரைஸாகத் தான் இருந்தது.

செழியனின் அன்பில் ஏற்கனவே திக்கு முக்காடுபவள் இப்போது இன்னமும் திணறிப் போனாள். ஆதிராவோடு இப்போது அதிக நேரம் செலவழிக்க துவங்கினான் செழியன். மாதங்கள் உருள அவள் வயிற்றில் இருக்கும் அவர்கள் குழந்தையும்,'நான் வளர்கிறேன் மம்மி...' என்பதைக் காட்ட வயிறும் பெரிதாகிக் கொண்டு வந்தது.

வளைகாப்பு செய்து அவளை ஊருக்கும் அழைத்துச் சென்றனர். அவளுக்காக அந்த அபார்ட்மெண்ட்டே அன்று ஒன்று கூடியிருந்தது. உண்மையில் செழியனைக் காட்டிலும் இப்போது அந்த நண்டு சிண்டுகள் தான் ஆதிராவை அதிகம் மிஸ் செய்யப் போவதாக நினைத்து வருந்த அவர்களை அழைத்தவள் சீக்கிரம் தானொரு குட்டி பாப்பாவோடு வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு ஊருக்குச் சென்றாள். செழியனுக்குத் தான் என்னவோ போலிருந்தது. இத்தனை மாதங்களில் அவளோடே இருந்து பழகியவனுக்கு அந்த பிளாட்டின் வெறுமை அவள் மீதான காதலை இன்னும் நங்கூரம் போட்டது போல் சொல்ல அவளைக் காண வார விடுமுறைக்காகக் காத்து கொண்டிருக்க அவளுக்கு அடுத்த வாரம் டேட் கொடுக்கப்படவும் லீவ் எடுத்துக்கொண்டு அவளைப் பார்க்கப் போனான்.
ஜானிற்கும் ஜென்னிக்கும் இதற்கு இடையில் திருமணம் ஆகிவிட தம்பதியர் சகிதமாய்ச் சென்று அவர்களை வாழ்த்திவிட்டு வந்தனர். இந்த நிலையிலும் எவ்வளவு மறுத்தும் ஏன் ஜான் ஜென்னி இருவர் மறுத்தும் அடம்பிடித்து அவர்கள் திருமணத்திற்குச் சென்று வந்தாள் ஆதிரா. நம் வாழ்க்கையில் நிச்சயம் நாம் சிலருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பதைப் போல் தோன்றும் அல்லவா? அப்படித்தான் அவளுக்கு ஜான் மாறியிருந்தான். தன் வாழ்க்கைக்காக செழியன் எவ்வளவு ரிஸ்க் எடுத்தானோ அதே அளவுக்கு சொல்லப் போனால் அதைக் காட்டிலும் அதிகம் உழைத்தவன் ஜானாச்சே? அவன் இதில் விருப்பம் காட்டாமல் இருந்திருந்தால் அவள் வாழ்வு இவ்வளவு சிறந்திருக்காது என்பது அவள் வாதம். இப்போது ஜானும் ஜென்னியும் கூட அவர்களுக்கு ரொம்ப நெருங்கியிருந்தனர்.

ஆதிராவைப் பார்க்க ஊருக்குப் போனவன் இம்முறை அவன் போன முறை பார்த்ததைக் காட்டிலும் இன்னும் வெயிட் போட்டிருந்தாள். சும்மாவே அவள் சப்பி (chubby) பேபி போல் தான் இருப்பாள். இப்போது சொல்லவா வேண்டும்? அவள் இன்னும் வெயிட் போட்டு இருந்தாலும் அவள் அவ்வளவு அழகாக மின்னினாள். செழியனை நேரில் பார்த்ததும் தான் என்னமோ உயிரே வந்தது போல் இருந்தது அவளுக்கு. தன் தந்தை, செழியனின் அன்னை என்று சுற்றி ஆட்கள் இருந்தும் அவளுள் ஒரு வெறுமை படர்ந்திருந்தது. இப்பொது தான் தன் வாழ்வு நிறைவு பெற்றதாக ஒரு உணர்வு எழுந்தது. அதை எல்லாம் அவள் சொல்லாமலே அவளின் கண்ணின் அசைவுகளை வைத்தே கண்டுகொண்டான் அவளவன். அந்த இரவு வேளையில் அவளின் வீட்டின் முற்றத்தில் நின்று பால்நிலாவைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். இவர்களை சேர்த்து வைத்த மழை இப்போதும் அங்கே தூறிக்கொண்டு தான் இருந்தது.

இவர்கள் மட்டுமில்லாமல் அவனின் தங்கைகளும் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டனர்.

"செழி..." என்று அழைத்தாள் ஆதிரா.

"என்ன ஆதி?" என்றவன் அவள் ஏதோ படபடப்பில் இருக்கிறாள் என்பதை நன்கு உணர்ந்தவனாக அவளை பின்னிருந்து அணைத்து அவளை நார்மல் ஆக்க முயற்சித்தான்.

"எனக்கு ஒருமாதிரி பயமா இருக்கு செழி..." என்று சொல்ல, அவனும் அவளிடம் பலமுறை இதற்கான பதிலைச் சொல்லிவிட்டான் தான். இருந்தும் அவள் திருப்திக்காக மீண்டுமொரு சொன்னான். அது அவளின் தோழி ஒருத்தி ப்ரெக்னென்சியில் நிறைய காம்ப்ளிகேஷன் அடைந்து இறுதியில் அவளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. ஏனோ அதைக் கேட்டதிலிருந்து அவளுக்கு ஒரு பயம் சூழ்ந்துகொண்டது. அவளின் பயம் அநாவிஷயம் என்றும் இன்னும் பல வருடங்கள் அவர்கள் சேர்ந்து வாழப் போகிறார்கள் என்றும் அவள் தற்போது அறிந்திருக்கவில்லை.
"இங்க பாரு ஆதிம்மா... இந்த இரவு மட்டுமில்லை இனி வரும் ஒவ்வொரு இரவும் நாம நம்ம வாழ்க்கையில சேர்ந்து தான் பார்க்கப் போகிறோம்..." என்று சொல்ல அப்போது காற்றில் மண் வாசம் கமழ மழை பொழிய ஆரமித்தது. ஆம் இந்த ஒரு இரவு மட்டுமில்லை இனி வரும் ஒவ்வொரு இரவும் இப்படியே தான் தொடரும் என்றும் பால்ய வயதில் துளிர்த்த அவன் காதலும் இளம் வயதில் அவளுக்குத் துளிர்த்த காதலும் அவர்களின் முதின் பருவம் கடந்தும் தேயாத வெண்ணிலவாய் வளர்ந்துகொண்டே தான் இருக்கும் என்றும் சொல்லி இந்தக் கதையில் இருந்தும் ஆதிரா செழியனின் வாழ்விலிருந்தும் என்னோடு உங்களையும் அழைத்துக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி...

நான் எழுதும் எல்லாக் கதையும் எனக்கு ஸ்பெஷல் தான். இருந்தும் என் முதல் எழுத்தாக முதல் வார்த்தையாக முதல் கதாபாத்திரமாக நான் ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதிய இந்தக் கதையும் (சில விஷயங்கள் தற்போது சேர்த்தேன்) இந்தச் செழியனும் இந்த ஆதிராவும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள். இந்தக் கதையிலிருந்து தான் என் முதல் முழு கதையான 'தூரிகை வாழ்க்கை' கதையையே எழுதினேன். செழியனிலிருந்து தான் பேரன்பு, ஆதிராவிலிருந்து தான் ஆருயிர் தோன்றினார்கள். அண்ட் இந்த கடைசி அத்தியாயமும் இவர்களுக்காக நான் யோசிக்கவில்லை. இதெல்லாம் பேரன்புக்கும் ஆருயிருக்கும் யோசித்தது. சில காரணங்களால் இதை எழுதாமல் விட்டுவிட்டேன். அதை ஆதிராவுக்கும் செழியனுக்கும் உபயோகப்படுத்திக்கொண்டேன். அநேகமாக என்னுடைய பெரிய எபி இதுவாக தான் இருக்கும்!
அண்ட் என்னைப் போலவே உங்களுக்கும் செழியன் ஆதிரா ரொம்ப பேவோரைட் ஆகிவிட்டார்கள் என்று நினைக்கிறன். அதனால் இவர்கள் என்னுடைய அடுத்த கதையில் சின்னதாக ஒரு கெஸ்ட் அப்பியேரென்ஸ் ஆவார்கள். இவர்களுக்கு என்ன குழந்தை பிறந்ததென்று அதில் சொல்லுகிறேன். அது ஒரு புது ஸ்க்ரிப்ட். புதிய ஜானர் கதை. அந்த கதையில் (நான்கு அத்தியாயத்தில் பாதியில் நிற்கிறது அக்கதை.) இவர்களும் மிளிர்வார்கள். நன்றி!

அண்ட் அடுத்ததா ஒரு புதிய கதையை எழுதலாம்னு இருக்கேன். ஆனால் நான் முன்பே சொன்னதைப்போல எனக்கு படிக்கும் வேலை இருக்கிறது. அதனால் வாரம் இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே தர இயலும்.(அதுவும் சுமார் ஆறு நிமிட ரீடிங் அல்லது 1200 -1300 வார்த்தைகள் நிறைந்த எபிசோட் தான்.)
கதையின் பெயர்- 'பொன்மலை நேரங்களே!'
கதையின் வகை - குடும்பம் சார்ந்த ஒரு காதல் கதை. நெகடிவிட்டி பெரிதாக இல்லாமல் தலைப்புக்கு ஏற்றாற் போல் ஒரு breezy ஸ்டோரி. புது முயற்சி. பார்ப்போம் எப்படி ஆதரவு கிடைக்கிறதென்று... நாளை முதல் அத்தியாயத்தில் சந்திப்போம்...
 
A feel good story...
Wishes Praveen..
வாங்க , உங்களுக்கு டைம் இருக்கும்போது...
ரொம்ப குட்டியா இருந,தால் , ரெண்டு டு எபி சேர்த்து ஒன்னா கொடுங்க.
எப்படி னாலும் பரவாயில்லை.. (y) (y) (y)

மே விடு தூது...என்ன ஆச்சு...?
 
Very nice and feel good story.... ? ? ? ? ?

நல்ல time எடுத்து படித்து வெற்றி பெற வாழ்த்துக்கள் ....????

முடியும் போது கொடுங்கள் ...???????
 
ரொம்ப நல்ல கதை
இனிய தோழமை ஜான்
ஆதிரா செழியன் ஜோடி
அருமை
?
 
Top