Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-26

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்று செழியன் சொன்னதைப் போலவே அரவிந்தின் மேரேஜ் சர்டிபிகேட் எல்லாமும் திரட்ட அவன் நினைத்த மாதிரி அனைத்தும் உடனே அவனுக்குக் கிடைக்கவில்லை தான். அதற்குள் செழியன் தன் மேனேஜரின் உதவியை நாடி எப்பாடு பட்டாவது அவனின் மேரேஜ் சர்டிபிகேட் வேண்டும் என்று கேட்க அவரும் அவருக்குத் தெரிந்த ஒரு லீகல் அட்வைஸைரை ரெபெர் செய்ய அரவிந்த் ஆதிராவை டிபெண்டெண்ட் விசாவில் தான் அழைத்து வந்தான் என்னும் தகவலுடன் இங்கே வந்ததும் தன் செக்ஸுவல் ஐடென்டிடியை அவன் உணர்ந்தகொண்ட டாக்டரை பிடித்து நிறைய தரவுகளையும் கோப்புகளையும் வாங்கிக்கொண்டு அங்கே அடல்டரி வழக்கைத் தொடுத்தனர். அமெரிக்காவில் அடல்டரி (adultery - திருமணமான ஒருவர் மற்றொருவருடன் உறவில் இருந்தல்) ஒரு பெரிய குற்றம் ஆகும். முதலில் அடல்டரி கேஸ் பைல் பண்ணி உடனே சீட்டிங் கேஸ் பைல் பண்ணவும் விஷயம் அறிந்து அரவிந்த் பயந்து நடுங்கி சமரசத்துக்கு வந்தான். பின்னே இது அவனின் கிரீன் கார்ட் ஸ்டேட்டஸை (green card holder - அமெரிக்க குடியுரிமை) பாதிக்கும் என்று தெரிந்து அவன் அலறியடித்துக்கொண்டு வர ஜான் மற்றும் அவனின் லீகல் அட்வைசர் நடந்த அனைத்தையும் வீடியோ ரெக்கார்ட் பண்ணி அவன் மீது சீட்டிங் முதலிய கேஸ் பைல் பண்ணப்பட இங்கே செழியன் கேட்ட அனைத்து தகவல்களுக்கும் தகுந்த ஆதாரத்தோடு வீடியோவாக அவனே அவன் தவறுகளை ஒப்புக்கொண்டது வரை எல்லாமும் சேர்த்து ஜான் அனுப்பிவிட்டான்.

இவர்கள் எதிர்பார்த்தத்தைக் காட்டிலும் இவ்வளவு விரைவாக எல்லாமும் கிடைக்கும் என்று ஜானே எதிர்பார்க்கவில்லை. செழியனும் எல்லா ஆதரங்களும் கைக்கு வந்ததும் இனியும் துளியும் தாமித்தக்கூடாது என்று உணர்ந்துகொண்டு அன்றே ஊருக்குக் கிளம்பிவிட்டான். செழியன் அங்கே ஊருக்கு வரும் விஷயத்தை தன் அன்னையிடம் கூடத் தெரியப்படுத்தவில்லை. எதற்கு அவரைத் தேவையில்லாத குழப்பத்தில் ஆழ்த்த வேண்டுமென்று எண்ணி தவிர்த்துவிட்டான். மேலும் இதையெல்லாம் ஆதிரவையும் அழைத்துக்கொண்டு போகலாம் என்று நினைத்தவன் இல்லை அவள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபித்துவிட்டுத் தான் அவளைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தவாறு சென்றான்.

ஊருக்குச் சென்றவன் நேராக ஆதிராவின் வீட்டிற்குச் செல்ல முதலில் அந்த ஊர் மக்களே ஆச்சரியப்பட செழியன் வருவதைக் கண்ட ஆதிராவின் மாமா தர்மதுரை அவனைத் தடுக்க அங்கிருந்தே ஆதிராவின் தந்தையை அழைக்க வந்தவர் இவனைக் கண்டு கோபம் கொள்ள ஒருவாறு பேசி ஒரு பத்தே நிமிடம் அவரோடு பேசவேண்டும் என்று சொல்லி அவரிடம் தான் கொண்டுவந்த அனைத்து தரவுகளையும் தந்து,"நீங்க தான் படித்தவர் ஆச்சே? இந்த ஊர் ப்ரெசிடெண்டா வேற இருந்திருக்கீங்க... சோ கொஞ்சம் இதெல்லாம் நீங்களே படிச்சிப் பாருங்க..." என்று எல்லாம் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றான். அரவிந்தின் செக்ஸுவல் ஐடென்டிட்டி முதல் ஆதிரா அங்கே தனியாக இருந்தது வரை அவளை அவன் ப்ளாக் மெயில் பண்ணது அவளிடம் மிரட்டி டிவோர்ஸ் வாங்கியது அவளுக்குத் தந்த மனவுளைச்சல் இங்கே அவளின் தந்தையின் உடல்நிலையை மனதில் வைத்து இதெதையும் அவரிடம் இருந்து அவள் மறைத்தது வரை இறுதியாக அவன் அவளை இன்செல்ட் செய்தது பதிலுக்கு ஆதிரா அவனைத் திட்டி மிரட்டி அந்த ஊரை விட்டு வந்தது வரை எல்லாமும் தகுந்த ஆதரங்களோடு சமர்பித்தவன் இறுதியாக அரவிந்த் அவனாகவே தந்த சுய வாக்குமூலம் வரை எல்லாமும் போட்டுக் காமித்து விட்டு அவரின் முகத்தைப் பார்த்தவன் அவரிடம் எதையுமே பேசாமல் அங்கிருந்து விலகிச் சென்றவன் இறுதியாகத் திரும்பி,"இதெல்லாம் இந்த ஊர் முன்னாடியும் காட்டப்போறேன். உங்க தப்பையும் சேர்த்து சொல்லப்போறேன்..." என்றவன்,

"சார் உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வியைக் கேட்கட்டா சார்? ஒருவேளை அன்னைக்கு நீங்க பேசுனதெல்லாம் கேட்டு இனிமேல் எதுக்கு நான் உயிர் வாழணும்னு அவ எதாவது தப்பான முடிவெடுத்திருந்தா நீங்க என்ன பண்ணியிருப்பீங்க?" என்று கேட்க அன்று தான் பேசிய பேச்சு எல்லாமும் நினைவுக்கு வந்ததும் அங்கேயே தடுமாறி விழுந்தார் அவர்.
அப்போது தான் அவரின் மகளைப் பற்றிய எண்ணம் வர,"இப்போ எங்க இருக்கா ஆதிரா?" என்று கேட்க,

"பயப்படாதீங்க... அவ சந்தோசமா இல்லைனாலும் நிம்மதியா இருக்கா. அவளுக்கு எதுவும் ஆகலை. ஆகவும் விடமாட்டேன்..." என்று சொல்லிவிட்டு தான் பேச வந்தது எல்லாம் பேசிமுடித்து விட்டதாக நினைத்துக்கொண்டு திரும்பியவன்,"ஒண்ணே ஒன்னு சொல்றேன்... உங்க மச்சானை நம்புறீங்க... யாரோ ஒருத்தன் அரவிந்த் அவனை நம்புறீங்க... ஆனா நீங்க பெத்து வளர்ந்த உங்கப் பொண்ணு அன்னைக்கு அவளைப் பேசக்கூட விடலையே நீங்க? இங்க தூக்குமேடையில ஏறப்போறவனுக்கு கூட அவனுடைய நியாயத்தைச் சொல்ல ஒரு வாய்ப்பு தராங்க... ஆனா நீங்க அதைக்கூட ஆதிராவுக்குத் தரல இல்ல?" என்று கோவமாய்ச் சொல்லிவிட்டு,
"ஒருவேளை ஆதிராவோட அம்மா இப்ப இருந்திருந்தா அவங்க அவளை இப்படி விட்டிருப்பாங்களா சார்? அண்ட் எனக்கு எந்தப் பயமும் இல்ல... உங்க மச்சான் தான் இது எல்லாத்துக்கும் காரணம். கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி மாப்பிள்ளையைப் பற்றி குறைந்த பட்சம் கூட விசாரிக்காம எல்லாமும் உடனே உடனே செஞ்சிடீங்க? அதோட கொடுமை அவன் உங்கப் பொண்ணைப் பத்தி என்ன சொன்னாலும் அதை விசாரிக்காமலே நீங்க உண்மைன்னு எப்படி எடுத்துக்கலாம்? எந்த ஒரு விஷயத்துக்கும் வாதம் பிரதிவாதம் ரெண்டும் கேட்டுட்டு தான் தீர்ப்பைச் சொல்லணும். நீங்க தான் ஆதிராவோட நிலைமையைச் சொல்லக் கூட ஒரு வாய்ப்பு தரல... அவளுக்கு உதவி பண்ணதுக்காக என் தங்கச்சி கல்யாணத்தைக் கூட நிறுத்த போனீங்க இல்ல? என் தங்கச்சி கல்யாணத்தை நிறுத்த நெனச்சது கூட நான் மன்னிச்சிடுவேன் ஆனா அதுக்கு ஒரு காரணம் கொடுத்தீங்க பாருங்க? இப்பயும் சொல்றேன் இதெல்லாம் இந்த ஊரு முன்னாடி நான் சொல்லி நிரூபிக்கணும்னு நெனச்சேன். ஆனா இப்போ பண்ணப்போறதில்லை... ஏன் சொல்லுங்க?" என்று இடைவெளி விட்டவன்,

"அவ தான் எந்தத் தப்புமே பண்ணலையே? அப்றோம் எதுக்கு நான் அவளை நிரூபிக்கணும்?" என்று சொல்லிச் செல்ல அப்படியே ஆதிராவின் தந்தை தடுமாறி கீழே விழுந்தார்.

இதுவரை அவனுக்கு இருந்த கோவம் எல்லாம் மறந்து அவரைத் தூக்க,"ப்ளீஸ் தம்பி நான் ஆதிராவை நேர்ல பார்க்கணும்..." என்று சொன்னவர் அழுதிட அங்கே வந்த அவள் மாமாவைப் பார்த்தவர் கோவத்தில்,"இந்த வீட்டை விட்டு வெளிய போயிடு... நீ சொன்னதெல்லாம் உண்மைன்னு நம்பி நானே என் பெண்ண நம்பாம போயிட்டேன்..." என்று சொல்ல என்ன தான் கெட்டவனாக இருந்தாலும் ஏதோ ஒரு ஓரத்தில் அவருக்கும் குத்த அங்கிருந்து கிளம்பினார் அவர்.

அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு அங்கு செழியனின் தாயும் தங்கையும் வர ஊர் பெரியவர்களும் கூட அங்கிருந்த எல்லோரு முன்னிலையிலும் ஆதிராவின் தந்தையே நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டு ஆதிரா மீது எந்தத் தவறும் இல்லை என்று சொல்ல அரவிந்தின் பெற்றோர்கள் தான் இப்போது என்ன செய்வதென்று புரியாமல் நின்றனர். அவருக்கும் அவர்கள் மேல் பயங்கர கோவம் தான். இருந்தும் ஒரு பெண்ணைப் பெற்றவர் தான் தானே இந்த விஷயத்தில் அதிக சிரத்தை எடுத்து எல்லாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்? அப்போது தவறு அவரிடம் தானே என்று அவரும் அமைதியாக செழியனின் தாயிடம் அங்கேயே காலில் விழுந்து தான் அன்று பேசிய வார்த்தைகளுக்கு எல்லாம் சேர்த்து மன்னிப்பு வேண்ட,
"உங்களை நாங்க மன்னிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாம் உங்க பொண்ணு கிட்ட தான் இருக்கு..." என்று சொல்லிவிட்டு அவர்கள் எல்லோரும் செழியனோடு சென்னை புறப்பட்டனர்.

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு...' என்னும் குறளைப் போல ஒரு செயலைச்செய்வதற்கு முன்பு ஆயிரம் முறை யோசித்து செய்யவேண்டும். செய்ய ஆரமித்துவிட்டு யோசிப்பதில் எந்தப் பயனுமில்லையே?

*********************

அங்கே ஜானிடமிருந்து வந்த அழைப்பை எடுத்து காதில் வைக்க,"ஹலோ ஆதிரா?"

"ஆம்..." என்றவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.

"என்ன ஆதிரா சப்தத்தையே காணோம்? என் மேலயும் உனக்குக் கோவமா?"

அவளிடம் பதிலில்லை.

"நான் ஒரு விஷயம் சொல்லுவேன், நீ நம்புனாலும் சரி நம்பாவிட்டாலும் சரி அன்னைக்கு நாம ஏர்போர்ட்ல மீட் பண்ணோம் இல்ல? அப்போ கடைசியா நான் செழியன் கிட்டப் பேசுன விஷயம் உன்னைப் பத்திதான். இன்னும் எத்தனை நாளுடா ஆதிராவயே நெனச்சிட்டு இருப்பனு தான் நான் கேட்டேன்..."

"அதுக்கு அவன் என்ன சொன்னான்?"

"ஒன்பது வருஷ ஃப்ரண்ட்ஷிப் கடைசியா அவளைப் பார்த்தவரைக்குமனு சொன்னான். ஏன் இந்த இடைப்பட்ட நாட்கள்ல கூட அவன் கிட்ட உன்னைப்பத்தி நிறைய பேசியிருக்கேன். உன் மேல எந்தத் தப்பும் இல்லைனு நிரூபிச்சிட்டு உன்ன உன் அப்பா கூடவே அனுப்பிடுவேன்னு சொன்னான். நான் கேட்டேன், ஏன்டா அவ லைப்ல தான் யாருமே இப்போ இல்லையே இப்போ உன் காதலைச் சொல்லலாமில்லனு கேட்டதுக்கு, இப்போ நான் அவளைக் கேட்டா நான் அவளுக்குப் பண்ணதெல்லாம் நெனச்சி அவளை கார்னெர் பண்ற மாதிரின்னு சொன்னான். இப்போ எல்லாமும் மறந்திடு... ஒரே ஒரு நிமிஷம் கண்ணை மூடி செழியனை நெனச்சுப்பாரு. உண்மையிலே அவன் இந்த மாதிரி சூழ்நிலையை உபயோகப் படுத்தறவன் தானா? அப்படியே அவன் பிளான் போட்டு இருந்தா உன்ன இளங்கோ கிட்ட இருந்து அப்போவே அவன் பிரிச்சிருப்பான். எதுக்குப் பிரிச்சிட்டு? உன்ன அவன் கூடச் சேரவே விட்டிருக்க மாட்டான். சொல்லு நீ அவனுக்கு இல்லைனு ரெண்டு தடவை முடிவான பின்னும் உனக்காக உன்னையவே நெனச்சிட்டு இன்னும் யாரையும் அவன் வாழ்க்கையில நினைக்காம இருக்கான். இத நான் சொல்லத் தேவையில்லை. நீயே அவன் ஷெல்ப் எல்லாம் திருந்து பாரு. எல்லாம் உன்னோட ஞாபகச் சின்னங்கள் தான் இருக்கும்..."

"இல்ல இதையும் மீறி அவன் நடிக்கிறானு நீ சொன்னா ஆமா அவன் நடிக்கிறான் தான். உன்ன மனசுல வெச்சிட்டு நீ இளங்கோவை விரும்பறேன்னு சொன்ன அப்பயும் இப்போ நீ அவனை விட்டுப் போகப் போறேன்னு தெரிஞ்சும் உன்னை மட்டுமே நெனச்சிட்டு இன்னும் இருக்கான் பாரு அவன் நடிக்கிறான் தான். உன்ன மாதிரி எனக்கு செழியனை பத்து வருஷமா நெருங்கிய தோழனெல்லாம் கிடையாது. எங்க நட்பு வெறும் மூணு வருஷம் தான். நானும் பெங்களூர் ட்ரைனிங் வந்த அப்போ அங்க தான் செழியன் எனக்குப் பழக்கம். ஆனா இந்த மூணு வருஷத்துல உன்ன பத்திதான் அவன் அவ்வளவு பேசியிருக்கான். உண்மையிலே சொல்றேன், செழியனுக்கு இதுவரை எத்தனை ப்ரோபோசல் வந்தது தெரியுமா? ஏன் காஞ்சனாவோட ஹஸ்பண்டோட சித்தப்பா பொண்ண கூட செழியனுக்குக் கேட்டாங்க. உனக்குத் தெரியுமா அவன் யாருக்கும் ஓகே சொல்லல. ஏன் நிவேதிதாவை எடுத்துக்கோ? எனக்குத் தெரிஞ்சு இந்த ரெண்டு வருஷத்துக்கு மேல தீவிரமா அவனுக்கு ப்ரொபோஸ் பண்ணியிருக்கா. ஒருமுறை கூட அவளுக்கு அவன் ஓகே சொன்னதில்லை..."

"எனக்குத் தெரிஞ்சு செழியன் எந்த விஷியத்துக்கும் பெருசா கலங்கனது இல்ல ஆதிரா. ஆனா உண்மையிலே சொல்லனுமா நீ எப்போ திரும்ப அவன் வாழ்க்கையில வந்தாயோ இந்த மூணு வாரமா தான் அவனுக்கு அதிக ஸ்ட்ரெஸ். நிறைய கவலை. ஆனா இப்போ கூட அவனுக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல உன்ன காப்பாத்தணும்னு உன்மேல விழுந்த இந்தத் தப்பான பேரை அழிக்கணும்னு தான் நினைகிறான். இப்போ எதுக்கு டா சம்மந்தம் இல்லமா இதெல்லாம் பேசுறானு நெனைக்கறியா? அவன் உன் அப்பா கிட்ட நேர்ல பேசிட்டான். அநேகமா அவரை அவன்கூடவே கூட்டிட்டு வரலாம். நீயும் அவரு கூட நாளைக்கோ நாளை மறுநாளோ கிளம்பலாம். ஆனால் ஒன்னு, கண்டிப்பா இப்பகூட அவன் உன்கிட்ட அவன் காதலைச் சொல்ல மாட்டான். ஏன்னா இந்த விஷயத்துல அவனைப் பத்தி எனக்குத் தெரியும். அப்போவாது அவனை நம்புவியா ஆதிரா?"

ஆதிரா அழுதிருந்தாள். அவளுக்கு எல்லாமும் தெளிவாகவே புரிந்தது. அவசரத்தில் ஆத்திரத்தில் ஏதோ முடிவெடுத்து விட்டாள். உண்மையில் எப்போது அவள் தான் செழியனின் காதல் என்று அறிந்தாலோ அந்த நிமிடம் முதல் மனதில் சொல்ல முடியாதா ஒரு இனம்புரியா நிம்மதி பரவியது நிஜம். ஏனென்று தான் அவளுக்கும் புரியவில்லை. பிறகு நிவேதிதா சொன்னதும் தான் எல்லாம் புரிந்தது. செழியனின் காதலியாக நிவேதிதா இருந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் அதைத் தேடினாள். அந்த இடத்தில் தானே இருப்பதும் அவளுக்குச் சந்தோசம். அவளின் கோவம் இத்தனை வருடங்களாக இப்படிக் காதலைப் பொத்தி பொத்தியே வைத்துக்கொண்டு எப்படி என்னிடம் அவனால் சகஜமாக உரையாட முடிந்தது என்றதில் தான். இப்போது ஒன்று புரிந்தது, அவன் சகஜமாக இருப்பதற்கு எவ்வளவு அழுதிருப்பான்? அது அவனுக்கு எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும் என்று நினைத்து கலங்கினாள். ஒரு இடத்தில் அவளுக்கு அவள் மீதே கோவம் எழுந்தது. இத்தனை காதலுக்கு தான் தகுதியானவள் தானா? இப்படி உருகியுருகி காதலிக்கும் அளவிற்கு தான் எதையுமே அவனுக்குச் செய்ததில்லையே? இந்த எண்ணமும் அவளுக்கு வந்துசென்றது. வெறும் இரண்டு வாரங்களாக அவன் மீதிருக்கும் காதலுக்கே... ஆமாம் அவள் அவனைக் காதலிக்கிறாள். ஒவ்வொரு முறை அவன் அவளுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யும் போதெல்லாம் அந்த அன்பு அவளுக்குள் ஏதோ செய்தது மட்டும் நிஜம். அந்தச் சமயத்தில் தான் அனன்யா செழியனின் காதலைப் பற்றிச் சொல்ல அவளுக்குள் முதல் பொசெசிவ் விதை நுழைந்தது. அது நிவேதிதாவாக இருக்குமோ என்று நினைக்கையில் ஒரு வெறுப்பும் வந்தது. ஆனால் அந்த இடத்தில் அவளே இருப்பாள் என்று அவள் துளியும் நினைக்காத போது அவள் தான் அவனின் காதலி என்று தெரிகையில் ஒரு சந்தோசம் கூடவே செழியன் மீது கோவம் இரண்டும் ஒருசேர வந்துவிட்டது. அந்தக் கோவம் தான் அவளை தப்பு தப்பாக யோசிக்க வைத்து அவ்வாறு பேச வைத்திட இப்போது எல்லாமும் தெளிந்தது. இது போக இங்கிருக்கும் குழந்தைகள் எல்லோரும் குறிப்பாக அந்த வளர்ந்த பையன் ஒவ்வொரு முறையும் அவளை 'ஓகே கண்மணி' என்று அழைக்கும் போதெல்லாம் நியாயமாக எழவேண்டிய ஒரு தயக்கம், குற்றயுணர்ச்சி அசௌகரியம் போன்ற எந்த உணர்வும் இதுவரை அவளுள் எழுந்திடவே இல்லையே? ஒரு வேளை அவளும் அந்த 'ஓகே கண்மணியை' மனதால் நேசித்தாளோ என்னவோ? எல்லாம் அவள் மனதிற்கு மட்டுமே வெளிச்சம்!

ஒருவேளை அவளிடத்தில் வேறு யாராக இருந்திருந்தாலும் செழியன் நிச்சயம் அவரைக் காப்பாற்றி இருப்பான் தான். ஆனால் இவ்வளவு அவமானங்களையும் கஷ்டங்களையும் அவன் தாங்கியிருக்க மாட்டான். அதற்கு அவசியமே இல்லை தானே? தன்னோடு படித்தவள், தோழி என்று ஏதேனும் உதவி செய்திருப்பான். இப்படி ஒரு உதவி செய்ய நிச்சயம் அவள் அவனுக்கு ஒரு தோழி மட்டும் இல்லை என்ற அடிப்படை காரணமே தற்போது தான் அவளுக்கு விளங்கியது. அவள் அவனுக்கு ஒரு தோழி என்பதையும் தாண்டி... என்று நினைக்கையில் அவன் மீது ஒரு கர்வம் வந்தது. இதுவரை அவளிடம் பதிலேதும் இல்லாததால் ஜான் சந்தேகம் கொண்டு,

"ஆதிரா, எதையும் கொஞ்சம் பொறுமையா யோசிம்மா..." என்று சொல்ல,

"அதுக்கு அவசியம் இல்லை அண்ணா. நான் யோசிச்சிட்டேன்..." என்று சொன்னவள் காலிங் பெல் அடிக்கவும் அது செழியனாகவே தான் இருக்கும் என்று நினைத்து கதவைத் திறந்தாள். அங்கே செழியனின் அன்னையையும் தங்கையையும் கூடவே தன் தந்தையையும் கண்டவள் ஒருவேளை செழியனின் அன்னைக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டால் என்று அப்போது தான் யோசித்தாள். அதற்குள் அப்படியே ஃப்ரீஸ் ஆகி நின்ற ஆதிராவை உள்ளே அழைத்துச் சென்றார் செழியனின் தாய். அவள் தந்தை மட்டும் வெளியவே நிற்க,"வாங்க அங்கிள்..." என்று செழியன் சொல்ல ஏனோ இப்போது தன்னை செழியன் அவாய்ட் பண்ணுவதைப்போல் உணர்ந்தாள் ஆதிரா. (தொடரும்... அடுத்த மூன்று அத்தியாயத்தில் முற்றுப்பெறும்...)
 
Top