Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-23

Advertisement

praveenraj

Well-known member
Member
நிவேதிதாவுடன் பேசிவிட்டு ஏனோ திக்பிரமை பிடித்தவன் போல் அங்கேயே அமர்ந்து இருந்தான் செழியன். பின்னே கடைசியில் அவள் சொல்லிச்சென்ற வார்த்தைகளும் அவள் அவனைப் பார்த்து கண்ணடித்து விட்டுச் சென்றதும் அவனுக்கு ஒரு மாதிரி நெர்வஸ் உண்டாக்கியது. அப்போது தான் ஒன்றை நினைத்தான். 'ஏற்கனவே இந்த ஆதிராவுக்கு நான் அவளை லவ் பண்றதே தெரியாது? இந்த லட்சணத்துலையே அவ அன்னைக்கு என்ன நிவேதிதா கூடக் கோர்த்து விட்டுட்டா. இப்போ இவ போய் ஆதிரா முன்னாடி எல்லாமும் சொன்னா அவ்வளவு தான் என்னையவே கன்வீன்ஸ் பண்ணி என்னையும் நிவேதிதாவையும் கோர்த்து விட்டுடுவாளே?' என்று புலம்பியவன் அடுத்து என்ன செய்வது என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல் இருந்தது. உடனே அலைபேசியை எடுத்தவன் ஜானிற்கு அழைத்தான்.

"குட் மார்னிங் மச்சி, சாரி சாரி குட் ஈவினிங்..."

"உனக்கு ரொம்பவும் கொழுப்பு கூடிடுச்சி டா நாயே..." என்று சொன்னவன் உச் கொட்ட,

"என்ன ஆச்சு சாருக்கு? ஏன் இப்போ உச் கொட்டுறீங்க?" என்று கேட்க அவனும் தற்போது நிவேதிதா பேசியதை எல்லாம் சொன்னான்.

"வாரே வா... சூப்பர் அப்பு! ச்சே இந்த நேரத்துல நான் அங்க இல்லாம போயிட்டேனே?" என்று சலித்துக்கொண்டான் ஜான்.

"என்னடா உனக்கு என்ன பார்த்தா கிண்டலா இருக்கில்ல? ஏன் ஜான் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?" என்று வருத்தத்துடன் சொல்ல,

"செழியா அவ சொன்னதுல என்ன தப்பு இருக்கு?"

"என்னடா நீயும் அவளுக்காகவே பேசுற? நீ எனக்கு ப்ரெண்டா இல்ல அவளுக்கு ப்ரெண்டா டா ராஸ்கல்?"

"டேய் இளா, இங்க பாரு... அவ பேசுனதுல என்ன தப்பு? ஒன்னு உன் காதல் ஜெயிக்கனும் இல்ல அட்லீஸ்ட் அவ காதலாவது ஜெயிக்கனும். அவளதும் இல்லாம உன்னதும் இல்லாம போகணுமா சொல்லு?" என்று பாயிண்டை பிடித்தான் ஜான்.

"எனக்கு அதெல்லாம் தெரியாது... ஒழுங்கா நீ அவ கிட்ட என்ன பேசுவியோ எப்படிப் பேசுவியோ தெரியாது, அவளை அவ வீட்டுல பார்க்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகச் சொல்ற... அவ்வளவு தான்."

"ஏன்டா என் ஃப்ரண்டு நீயே நான் சொல்றதைக் கேட்கறதில்ல? இதுல அவ எப்படி நான் சொல்லுறதைக் கேட்பா? என்ன ஆளை விடு டா... நானே என் ஜென்னியை மிஸ் பண்ணி ஜன்னி வந்து செத்துடுவேனோனு இருக்கேன்... இதுல போடா..."

"டேய் சாரி டா ஜான். எனக்காக தானே நீ இந்த ப்ராஜெக்ட் போயிருக்க?" என்று செழியன் ஃபீல் பண்ண,

"இளா, நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்கக் கூடாது..."

"என்ன?"

"ஒருவேளை, நல்லா கேட்டுக்கோ... ஒருவேளை ஆதிரா கடைசி வரை உன் காதலைப் புரிஞ்சிக்கவே இல்லைனு வெச்சிப்போம்... அப்போ என்ன பண்ணுவ?"

"அதுதான் ஏற்கனவே சொல்லிட்டேனே? அவளை அவ வீட்டுல விட்டுடுவேன்..."

"அப்போ உன் வாழ்க்கை?"

ஏனோ இந்தக் கேள்வி அவனுக்கு மனதில் பெரிய ப்ளாங்கை தான் பதிலாகத் தந்தது.

"சொல்லுடா? காலம் முழுக்க இப்படியே ஒண்டிக்கட்டையாவே இருக்க போறியா? அப்படியே இருந்தா அம்மாவைப் பத்தி யோசிச்சியா? எந்த அம்மா தான் அவங்க பையன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லுறதை ஈஸியா எடுத்துப்பாங்க? சொல்லு செலி..."

"......................"

"டேய் இளா? டேய்?"

"ஹ்ம்ம் சொல்லு..."

"நான் என்ன சொல்றது? இனி எல்லாமும் நீ தான் சொல்லணும். உன் முடிவு தான் எல்லாமும்..."

செழியன் அமைதியாகவே இருக்க,"அப்றோம் செலியா ஒரு குட் நியூஸ்..." (என்னடா செழியன் பேரைத் தப்பா செலினு எழுதுறேன்னு நினைக்க வேண்டாம். ஜானுக்கு ழகரம் வராது?)

"என்னடா?"

"அந்த அரவிந்த் பையன் மேரேஜ் சர்டிபிகேட் ரெடி பண்ணிட்டேன். சீக்கிரம் கைக்கு வந்திடும்..."

"புரியில?"

"அதுதான் ஆதிராவை டிவோர்ஸ் பண்ணிட்டு அவன் பார்ட்னெரை கல்யாணம் பண்ணானே அந்த சர்டிபிகேட் தான். பலே கேடிடா அவன். ஆதிராவுக்கு டைவர்ஸ் கொடுத்த கையோட அவன் மேரேஜ் நடந்திடுச்சி. சோ சீக்கிரம் அந்த பேப்பர்ஸ் எல்லாம் வந்திடும் அண்ட் அந்த ஆளை தான் டா மீட் பண்ண முடியல..."

செழியனுக்கு கொஞ்சம் நிம்மதி கோவம் எல்லாம் ஒருசேர வர,"அப்றோம் அவரைப் பார்த்தியா?"

"இல்ல டா. ஆதிராவோட கொலீக் எங்கேயோ மாறி போயிருக்காராம். வரட்டும் கண்டிப்பா மீட் பண்றேன். இது போதும் தானே? அவனுக்கு இன்னொரு கல்யாணம் ஆகிடுச்சு மற்றும் அவனுடைய செக்ஸுவல் ஐடென்டிட்டி எல்லாம் நம்ம கிட்ட இருக்கு இதை வெச்சி ஆதிரா மேல எந்தத் தப்பும் இல்லைனு ஈஸியா ப்ரூவ் பண்ணிடலாம் செழியா. என்ன ஓகே தானே?"
சற்று யோசித்தவன்,"எனக்கென்னமோ இது மட்டும் போதாதுனு தோணுது ஜான். ஒருவேளை இதெல்லாம் பேக் அப்படினு கூட அவன் கதையைக் கிளப்பி விடுவான்..." என்று ஐயத்துடன் செழியன் சொல்ல,

"மச்சி இது அமெரிக்கா டா... இங்கலாம் நம்ம ஊரு மாதிரி போலி சான்றிதழ்கள் எல்லாம் அடிக்க முடியாது. சோ கவலையே வேணாம். டோன்ட் ஒர்ரி எல்லாம் சரியாகிடும்..."

"இல்ல மச்சி இன்னும் ஒன்னு நீ பண்ணனும்..." என்று சில விஷயங்களைச் சொன்னான் செழியன்.

"மச்சி இதெதுக்கு டா? இதெல்லாம் பண்ணனுமா?"

"டேய் தப்ப தப்பா பண்றவன் கிட்ட இதைக் காட்டினால் போதும். ஆனா அவன் தப்ப கரெக்ட்டா பண்ணியிருக்கான். எந்த இடத்துலயும் அவன் மேல எந்தத் தப்புமே இல்லாத மாதிரி நடிச்சிருக்கான். சோ இதுக்கு நமக்கு எல்லா ஆதாரங்களும் அவசியம். இதெல்லாம் இல்லாம கூட நம்மளால் இந்த விஷயத்தை முடிக்க முடியும். ஆனா இதுல எதேவது லூப் ஹோல் இருந்து அதை வெச்சி திரும்ப எதாவது அவன் பண்ணிட்டா ஆதிரா தான் டா அதிகம் பாதிக்கப் படுவா. ப்ளீஸ் அவ இனிமேலும் கஷ்டப் படக்கூடாது. இதையும் செஞ்சிட்டு அப்றோம் அவனை வசமா லாக் பண்ணனும். சோ கொஞ்சம் சிரமம் பார்க்காம பண்ணுடா ஜான். நான் நம்ம மேனேஜர் கிட்ட நாளைக்குப் பேசுறேன். அவர் மூலமா நல்ல லீகல் எக்ஸ்பெர்ட் (வழக்கறிஞர்) கிட்டப் பேசிட்டு முடிவெடுப்போம் ப்ளீஸ்..." என்று செழி சொல்ல,

"செழி, அவ மேல இவ்வளவு அக்கறை எடுக்கற... உன்னால முடியலைன்னா நீ வேணாம்டா, ஆதிரா கிட்ட நான் பேசுறேன் டா. ஒரே ஒரு முறை. நிச்சயம் உன்ன புரிஞ்சிப்பா..."

"தயவு செஞ்சு நான் சொன்னதை மட்டும் செய் ஜான். அநாவிஷயமா எதையும் செய்யாத... புரியுதா?"

"...................."

"டேய் ஜான்?"

"................ ஹ்ம்ம்"

"புரிஞ்சிக்கோ மச்சி. இது சரியான டைம் இல்ல. போகட்டும்... நானே பேசுறேன். நான் நிறைய யோசிக்கணும். இந்த நிவேதிதா பொண்ணு வேற என்ன பயம்புறுத்திட்டா..."

மனதில் சிரித்தான் ஜான். 'இருடா உன்கிட்ட மயிலே மயிலேனு சொன்னா சரிப்பட்டு வராது நான் எங்க பேசணுமோ அங்க பேசுறேன்' என்று நினைத்துக்கொண்டு,"சரி மச்சி பை டேக் கேர்..." என்று சொல்ல அவன் தன் அபார்ட் மென்ட் சென்றான்.

******************

இவன் கார் அபார்ட்மெண்ட் உள்ளே நுழைந்து பார்க் செய்ய அங்கே தங்கள் பிளாக்கின் முன் கூட்டம் கூடப்பட்டிருக்க என்னவாக இருக்கும் என்று இவன் பதறிய படியே செல்ல அப்போது ஆதிராவின் குரல் அங்கிருந்து வருவதை உணர்ந்து கொண்டவனின் நடை இன்னும் வேகமெடுக்க அங்கே விரைந்தான். கூட்டத்தை விலக்கிப் பார்க்க அவளோ கண்களில் துணியைக் கட்டிக்கொண்டு அங்கிருந்த சிறுவர்களை கையை நீட்டித் தேடிக்கொண்டிருந்தாள். இவனோ அவளை ஆச்சரியமாகப் பார்க்க அந்த அபார்ட்மெண்ட் சின்ன பசங்க, குழந்தைகள் அந்த வளர்ந்த பையன் உட்பட எல்லோரும் ஆதிராவைச் சுற்றிக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அந்த அபார்ட்மெண்ட் முழுவதும் இப்போது அங்கே கூடியிருந்து அவர்கள் விளையாடுவதைத் தான் பார்த்துக்கொண்டு இருந்தது. மழை பெய்து ஓய்ந்திருந்தது. சுற்றிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருக்க அவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அவன் முதுகில் கையை வைத்தார் அந்த அபார்ட்மெண்டின் வைஸ் செக்ரெட்டரி. திரும்பி அவரைப் பார்க்க,"இன்னைக்கு இந்தப் பக்கம் ஒரு டிரான்ஸ்பார்மர் வெடிச்சிடுச்சாம் செழியன். இப்போதான் ஈபி கிட்டப் பேசுனேன். எப்படியும் சரிசெய்ய காலையில ஆகிடுமாம். அதுக்குத் தான் இப்போவே எதுக்கு ஜெனெரேட்டர் போடணும் நைட் போட்டுக்கலாம்னு சொல்லிட்டேன். இந்தப் பசங்க வந்து இப்போவே ஜெனெரேட்டர் போடணும்னு சொல்லி ஒரே அட்டூழியம் பண்ணுச்சிங்க. நல்ல வேளை அந்தப் பொண்ணு தான் எல்லோரையும் கூப்பிட்டு விளையாட்டிட்டு இருக்கு. முதல யாருமே இங்க வரல அப்றோம் கொஞ்ச கொஞ்சமா கூட்டம் கூடிடுச்சி. எங்க காலத்துல எல்லாம் பள்ளிக்கூடம் விட்டா பொழுது சாயுற வரைக்கும் வாய்க்கால் வரப்புல தான் விளையாடிட்டு இருப்போம். இந்தக் காலத்து பசங்க எங்க வீட்டை விட்டு வெளிய வருதுங்க? எப்போப்பார் டிவி, வீடியோ கேம்ஸ், செல் போன்... அதையும் மீறி வெளியே வந்தா கிரிக்கெட் தான் விளையாடுதுங்க... ஆனா இன்னைக்கு பாரு?" என்று சொல்ல சொல்ல மீண்டும் மெதுவாக மழை தூறலிட அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர்கள் விளையாடினர்.

இப்போது தான் ஆதிரா ஒரு சிறுமியை அவுட் ஆக்கிவிட அவள் தன் கண் திரையைக் கழட்டிப் பார்க்க அங்கே ஒரு பெரும் கூட்டம் நிற்பதையே இப்போது தான் கவனிக்கிறாள். அதில் செழியனும் இருக்க ஆச்சரியத்தில் அவளுக்கு கண்கள் விரிந்தது.

"நீ எப்போடா வந்த?"

"இப்போதான்..." என்று சொல்ல உடனே அவனை கையைப் பிடித்து இழுத்து உள்ளே அழைத்து,"ஹே குட்டி கண் கட்டைக் கழட்டு... செழியன் கட்டுவான்..." என்று ஆதி சொல்ல,"ஏ? நான் இன்னும் ட்ரஸ் கூட மாத்தல... என்னை ஆளைவிடு..." என்று ஓடப் பார்க்க அவனை இழுத்தவள் அவன் கண்களைக் கட்டி சுற்றிவிட அவனும் எல்லோரையும் தேடினான். சின்ன வயதில் இதை விளையாடும் போதெல்லாம் கரெக்ட்டாக செழியன் ஆதிராவைப் பிடித்துவிடுவான். காரணம் அவள் கால் கொலுசின் சப்தம். இந்த முறை அவள் கொலுசு அணியாததால் என்ன செய்வதென்று யோசிக்க அவளோ தூரத்திலிருந்து தன்னுடைய குரல் கொடுக்க அவனும் அவளின் குரலை வைத்து தான் முன்னேறிக்கொண்டு இருந்தான். அவன் அவளை நெருங்கவும் அதற்குள் மீண்டும் மழை வலுக்கவும் சரியாக இருக்க அந்த இடியின் சப்தம் கேட்டு குழந்தைகள் உட்பட அந்தக் கூட்டம் உடனே கலைய ஆதிரா மட்டும் சுற்றி நடப்பதை பார்த்தபடியே நிற்க அவளைப் பிடித்திருந்தான் அவன். அவளோ, இதுவரை அமைதியாக இருந்தவள் மனம் இப்போது ஏனோ குறுகுறுக்க ஆரமித்தது. செழியன் கண்ணைத் திறக்க எதிரில் ஆதிரா முழுக்க நனைந்து கண்களில் சிறு மிரட்சியுடன் இருக்க அவன் கையோ அவளை வளைத்துப் பிடித்திருந்தது.

செழியனின் உள்ளம் தறிகெட்டு ஓடியது. செழியன் அவளை நெருங்க அப்போது மேலேயிருந்த குழந்தை ஒன்று,"ஆதிக்கா மேல வாங்க... மழையில நனையாதீங்க..." என்று குரல் கொடுக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் தங்கள் பிளாட்டை நோக்கிச் சென்றனர். இருவர் மனமும் ஏதேதோ யோசனையில் இருக்க இருவரும் தத்தம் நண்பர்கள் சொன்னதையே நினைத்துக்கொண்டு இருந்தனர். (தொடரும்...)
 
Top