Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-16

Advertisement

praveenraj

Well-known member
Member
செழியன் இதைத் துளியும் எதிர்பார்க்கவில்லை. அவன் இதயம் மிக வேகமாய்த் துடித்துகொண்டிருந்தது. அணைக்கலாமா இல்லை விலக்கலாமா என்று அவன் யோசித்துக்கொண்டு இருந்தான். அதற்குள் அவளே விலகியவள்,"ஆனா இப்படி வாழ்க்கை முழுக்க என்னை வெறும் சாரியும் தேங்க்ஸும் மட்டும் சொல்ல வெச்சிடாத செழி..." என்று அவள் சொல்ல இவனுக்கு ஒரு மாதிரி ஆனது.

அதற்குள் அவளுக்கு அழைப்பு வந்தது. அனன்யா தான் அழைத்திருந்தாள்.

"நான் கொஞ்சம் போன் பேசிட்டு வரேன் செழி..." என்று அவள் சென்றுவிட இவனும் இவன் அறைக்கு வர ஜான் அழைத்தான்.

இப்போது தான் நேற்று அங்கே நடந்த எல்லா களேபரங்களையும் செழியன் சொல்லி முடித்தான். ஜானுக்கு என்ன பதில் பேசுவதென்றே தெரியவில்லை.

"என்னடா சொல்ற? என்னால எதையும் நம்பவே முடியில டா இளா..."

"என்னாலையும் தான் ஜான்..."

"சரி இப்போ அடுத்தகட்ட வேலை என்ன?"

"இவ இங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் டா. மற்றத்தை எல்லாம் அப்றோம் பார்க்கலாம்..." என்று சொல்ல,

"செழி நான் ஒன்னு கேட்பேன்... ஆனா நீ தப்பா எடுத்துக்கக் கூடாது..." என்று பீடிகையுடன் இழுத்தான் ஜான்.

"சொல்லு..."

"பேசாம இப்போவாச்சும் ஆதிரா கிட்ட எல்லாம் சொல்லுடா..."

"என்ன சொல்லணும்?" என்று தெரிந்தும் தெரியாதவன் போலே செழியன் வினவ,

"என்ன விளையாடுறையா? நீ அவளை விரும்புவதையும் இன்னும் அவளை நெனச்சு தான் கல்யாணம் செய்யாம இருப்பதையும் சொல்லு..."

"வாயை மூடு டா..." என்று சற்று உரக்கவே பேசிய செழியனுக்கு,

"ஏன் டா? அதுல என்ன தப்பு இருக்கு?"

"புரியாம பேசாத..." என்று சொன்னவன் இடைவெளி விட்டு,
"யாரு கண்டா? இனிமேல் அவ கிட்ட அதைச் சொல்ல வாய்ப்பே இல்லாம கூடப் போகலாம்னு நினைக்கறேன்..."

"முட்டாளா நீ? ஏன் சொன்னா என்ன?" என்ற ஜானும் இடைவெளிவிட்டு,

"ஏன்டா இன்னொருத்தன் வைப்பா இருந்தானு..." என்று முடிப்பதற்குள் அவனை கண்டமேனிக்கு கத்தியிருந்தான் செழியன்.

"அவளைப் பத்தி எல்லாமும் நான் சொல்லிட்டேன்... அவளுக்கு கல்யாணம் மட்டும் தான் ஆகியிருக்கு... தப்பா பேசாத ஜான்..."

"பின்ன என்னடா உனக்குப் பிரச்சனை?"

"புரியாம பேசாத ஜான்..." என்ற செழியனின் குரலில் ஒரு வித இயலாமையுடன் கூடிய மென் சோகம் ஒலித்தது.

"இப்போ அவ அனுபவிக்கும் கஷ்டம், வலி எல்லாத்துக்கும் ஒருவகையில் நான் அவளை அன்னைக்கு இங்க கூட்டிட்டு வந்தது தான் காரணம் ஜான். இன்னும் ஓப்பானா சொல்லனும்னா என் கூடத் தங்கியிருந்தாங்கற ஒரே காரணத்தால் தான் அவளை எல்லோரும் இப்போ தப்பா பேசுறாங்க... இப்போ போய் நான் அவகிட்ட உன்னை விரும்பறேன் கல்யாணம் அப்படி எல்லாம் பேச முடியாது ஜான்... இன்னொன்னு நல்லா புரிஞ்சிக்கோ, எனக்கு தான் அவ காதலி... ஆனா அவளுக்கு நான் ஒரு பெஸ்ட் ஃப்ரண்ட். என்னை அந்த அளவுக்கு நம்புறா அண்ட் இன்னமும் அப்படித் தான் பார்க்குறா..."

"அதுக்குன்னு கடைசி வரை எதையும் சொல்ல மாட்டியா என்ன? அப்போ இதுக்கு என்ன தான் முடிவு?"

"நானே உன்கிட்ட இதைப் பத்திப் பேசணும்னு நெனச்சேன். நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்..."

"என்னடா?"

"அந்த அரவிந்தை சும்மா விடக் கூடாது. அவனைப் பற்றிய புல் டீடெயில்ஸ் எல்லாம் ஆதாரத்தோடு எனக்கு வேணும். ஒன்னும் அவசரம் இல்ல... நீ இந்தியா வரும் போது கொண்டு வந்தா போதும். அதுக்கு இன்னும் 6 மாசம் டைம் இருக்கு..."

"டேய் கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காத, இப்போ எதுக்கு அதெல்லாம்?"

"எந்த இடத்துல எல்லாத் தப்பும் ஆதிரா மேலனு பொய்யா திரித்து அவ மேல வீண் பழிப் போட்டாங்களோ அங்கேயே நான் அவளைக் குற்றமற்றவனு நிரூபிக்கணும். யா நம்மள பத்தி யாருக்கும் எப்பயும் எதையும் நாம நிரூபிக்கக் கூடாதுனு நெனைக்கறவன் தான் நான். ஆனா இந்த விஷயம் அப்படியில்ல... ஆதிராவோட எதிர்காலம் இதுல அடங்கியிருக்கு. சோ ப்ளீஸ் ஹெல்ப் மீ ஜான். அண்ட் இந்த விஷயம் உனக்கு எனக்கு மட்டும் தான் தெரியணும்..."

"டேய் அது..."

"யா, இது கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவும் கஷ்டம் தான். எனக்கு ரெண்டு மூணு விஷயம் மட்டும் நீ பண்ணனும்..." என்று சில அறிவுரைகளை வழங்க,

"சரிடா நான் செய்யுறேன். டோன்ட் ஒர்ரி..." என்ற ஜான் மீண்டும் இடைவெளி விட்டு,

"செழி ஒன்னு மட்டும் சொல்றேன் டா, சொன்னாத்தான் காதல். சொல்லப்படாத காதல் எதுவும் சொர்க்கத்துல சேருவதில்லை... இது எல்லாம் நான் சொல்லல... எல்லாம் சினிமாவுல சொன்னது தான். பட் அதுதான் உண்மையும் கூட. சோ எப்படியாவது அவகிட்ட உன் காதலைச் சொல்லிடு டா... அவ்வளவு தான். எல்லோருக்கும் வாழ்க்கையில இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது டா செழியா, உனக்கு அது கிடைச்சிருக்கு. யா, இது கொஞ்சம் இல்ல ரொம்பவும் சிக்கல் தான். இருந்தும் நீ இதை கேர்புல்லா ஹேண்டில் செய்யணும். அவ்வளவு தான்..." என்று ஒரு நண்பனாய் நண்பனின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலை கொண்டான் ஜான்.

"புரியுது ஜான்... பார்ப்போம்..." என்று அதை மழுப்புமாறே பேசினான் செழியன்.

"டேய் அம்மாக்கு இதுல...?"

"எனக்கு ஆதிராவை எவ்வளவு பிடிக்கும்னு நான் இதுவரை அம்மாகிட்டச் சொன்னதில்லை. ஆனா அம்மாக்கு இது கண்டிப்பா தெரியும். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியில ஜான்..."

"சரிடா அப்றோம் வேலையெல்லாம் எப்படிப் போகுது? அதும் நான் இல்லாம..." என்ற ஜானுக்கு,

சிரித்தபடியே,"மச்சி நீ இல்லாம செம ஜாலியா இருக்குடா..."

"நான் இல்லாமலா? இல்ல ஆதிரா இருக்கறதுனாலயா?" என்று அவனை மடக்கினான் ஜான்.

"செழி, உள்ள வரலாமா?" - ஆதிரா.

"டேய் நீ வெய் நான் கூப்பிடுறேன்..." என்று ஜானிடம் பேசினான் செழியன்.

"ஹாம் கதவு திறந்து தான் இருக்கு... உள்ள வா ஆதி"

"சரி ஆதிராகிட்ட போன் கொடு, நான் பேசுறேன்..." என்றான் ஜான்.

"இல்ல வேணாம்... நீ எதையாவது பேசி உளறி வெச்சிடுவ..." என்ற செழிக்கு,

"அதெல்லாம் சொல்லமாட்டேன். அவகிட்டக் கொடு..." என்று வாங்கியவன் அவளுடன் கொஞ்சம் பேசிவிட்டு வைக்க,

"என்னமோ சொல்லணும்னு வந்தியே என்ன ஆதி?"

"அது என் ஃப்ரண்ட் இங்க சென்னையில தான் @#$% மேகசைன்ல ரிப்போர்ட்டரா ஒர்க் பண்றா. அவ கிட்ட ஜாப் பத்தி கேட்டு மெசேஜ் பண்ணேன். நாளைக்குச் சொல்றேன்னு சொன்னா..."

"ஆதி உடனே நீ வேலைக்குப் போகணும்னு ஒன்னும் அவசியமில்லை?" என்ற செழியைத் தடுத்து,

"இல்ல டா... ரெண்டு விஷயம் இருக்கு. முதல்ல உனக்கு கஷ்டமா நான் இருக்கக் கூடாது. அண்ட் எனக்கும் ஒரு சேஞ் வேணும். மேலும் நானும் இனி அடுத்த கட்டத்தைப் பார்க்கணுமில்ல? வாழ்க்கை இன்னும் என்னென்ன வெச்சி இருக்குனு தெரியில தானே? எல்லாத்தையும் ஒரு முறை மோதி பார்த்திடலாம்..." என்று அவள் சாதரணமாய்த் தான் சொன்னாள். அது அவனுக்கோ ஒரு மாதிரி ஆனது.

சுற்றி முற்றி அந்த அறையைப் பார்த்தவள் அங்கிருந்த அந்த 'தேரைப்' பார்த்து,"டேய் இத இன்னுமா வெச்சு இருக்க?" என்று ஆரவாரமிட்டாள் ஆதிரா.

அவனும் அதைப் பார்த்ததும் சிரிக்க,

"டேய் எத்தனை வருஷம் ஆகுமில்ல? செவந்ததோ ஏய்த்தோ படிக்கும் போது சுட்டிவிகடன் புக்குக்கு செய்ய சொன்ன தேர் தானே?" என்றவள் அதை எடுத்து பார்க்க அது இன்னமும் அன்று ஒட்டப்பட்டதைப் போல் இருக்கவும்,

"இதெல்லாமா இன்னும் வெச்சியிருக்க செழி?"

"அதை எப்படித் தூக்கிப்போட சொல்ற ஆதி? ரெண்டு நாள் முழுசா உட்கார்ந்து அதைத் தேடித்தேடி ஒட்டினோம்... ஞாபகமிருக்கா? அதும் நீயும் நானும் மட்டும்..."

"ஆனா செம டா செழி... குட் ஓல்ட் மெமோரிஸ் இல்ல?" (நல்ல பழைய ஞாபகங்கள்!)

அதைச் சுற்றி சுற்றிப் பார்க்க அன்று அதை ஒட்டிமுடித்து அதில் ஆதிராசெழியன் என்று ஸ்கெட்ச்சில் இருவரின் பெயரையும் எழுதிய நினைவுகள் ஏனோ நேற்று நடந்ததைப் போல் இருவருக்கும் தோன்றியது.
அதையே பார்த்து சிரித்துக்கொண்டிருந்த ஆதிராவை ரசித்துக்கொண்டிருந்தான் செழியன்.

"சரி வா, நைட் என்ன சமைக்கலாம்? நான் என் சர்டிபிகேட்ஸ் எல்லாம் கொஞ்சம் எடுத்து வைக்கணும்... ரெஸும் (resume) ரெடி பண்ணனும். இன்னும் கொஞ்சம் வேலையெல்லாம் இருக்கு செழி..."

அவனுகெங்கு அதெல்லாம் காதில் விழுந்தது?

"டேய் உன்னைத்தான் என்ன ட்ரீமா? வா டா..."

"மாவு வாங்கிட்டு வந்து தோசை ஊத்திடலாமா?"

"ஏன்டா இட்லி செய்யலாமே?"

"எப்போயிருந்து உனக்கு இட்லி பிடிக்க ஆரமிச்சது ஆதி?"

"எனக்கும் இப்பயும் தோசை தான் பிடிக்கும்... ஆனா அது ஊத்துறது கஷ்டம் டா..."

"சரியான சோத்து சோம்பேறி ஆதி நீ... அப்போ இட்லி தட்டை யார் கழுவறது? இரு நான் போய் வாங்கிட்டு வரேன்..." என்று சென்றவன் அவனே தோசையை ஊத்தி சட்னியும் செய்து சாப்பிடு என்று அவளுக்கு நீட்டினான்.

"எப்படிடா என்னைப் பத்தி எல்லாமே இன்னும் ஞாபகம் வெச்சி இருக்க?" என்ற ஆதிராவுக்கு,

"சில விஷயங்களை மறந்தால் தான் ஞாபகம் வெக்கறது கஷ்டம் ஆதி. ஆனால் நீ உன்னைப்பற்றிய எல்லாமும் நான் எப்பயும் மறக்கவே மாட்டேன் ஆதி..." என்றவன் எதையோ உளறியதைப் போல் விழிக்க நல்ல வேளையாக ஆதி அதைக் கூர்ந்து கவனிக்கவில்லை.

சாப்பிட்டுக் கொண்டே அவன் செய்வதையெல்லாம் பார்த்தவள்,"ஆனா செம லக்கி ஆன அந்தப் பொண்ணு யாருனு தான் தெரியில செழி..." என்று நிறுத்த,

"யாரைச் சொல்ற?"

"வேற யாரு? மிஸஸ் செழியனைத்தான். நீ ஒரு அளவெடுத்து செஞ்ச ஹஸ்பண்ட் மெடீரியல் டா. பொறுமையிலும் பொறுமையானவன் நீ. கார்ட்டூன்ல வருமே 'அமைதியோ அமைதி'னு அது போல ஒருத்தன் நீ. அந்த மாதிரி சண்டைபோட மாட்ட, பர்பெக்ட் ஆசாமி, ஹ்ம்ம் பார்க்கத்தானே போறேன்?" என்று சொன்னவள்,

"சரி நான் போய் என் வேலையைப் பார்க்கறேன்... சாரி உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது. நீ ஒழுங்கா இட்லி ஊத்தியிருந்தா நான் ஹெல்ப் பண்ணியிருப்பேன். பை குட் நைட்..." என்று சிரித்துக்கொண்டே சொல்லி எஸ் ஆகிவிட்டாள் ஆதிரா.

இவன் சாப்பிட்டு முடிக்கவும் இவன் அன்னை அழைத்திருந்தார். எல்லாமும் சொன்னவன் கொஞ்சம் பேசிவிட்டு,"நாங்க வந்தபிறகு ஏதாவது பிரச்சனை நடந்ததா?" என்று கேட்டு இல்லை என்றதும் சென்று படுத்தான்.

மறுநாள் அழைத்த அவள் தோழி இன்னும் இரண்டு நாளில் இன்டெர்வியூ இருப்பதாகவும் சோ பிரிப்பர் ஆகும்படியும் சொல்லிவிட்டு வைக்க ஆதிரா அந்த இன்டெர்வியூவுக்கு தயாராகினாள். செழியனும் வழக்கம் போல் அவளுடன் பேசியும் சிரித்தும் நாட்களை ஓட்டினான்.

மறுநாள் இன்டெர்வியூக்குச் சென்று வந்தவளின் முகத்தில் கொஞ்சம் உற்சாகம் தாண்டவமாட,"என்ன ஆதி ஒரே குஜாலா இருக்க போல?"

"இன்டெர்வியூ நல்லா பண்ணியிருக்கேன் செழி. ஹோப் இருக்கு. பார்ப்போம்..." என்றாள். (தொடரும்...)
 
அவள் திருமணம் தோல்வியில் முடிந்தாலும்
அடுத்த கட்டத்திற்கு மூவ் ஆக தயாராகிட்டாள்.
இவன் தேர் போல ஒரே இடத்தில் நிற்கிறான்..
 
Top