Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இரவு இப்படியே தொடரட்டுமே!-15

Advertisement

praveenraj

Well-known member
Member
செழியனும் எதுவும் பேசவில்லை, அவளும் எதுவும் பேசவில்லை. செழியன் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஓடியது. 'அடுத்து என்ன செய்யவேண்டும்?' என்று யோசிக்கையில் முதலில் இவளை பழையபடி மாற்ற வேண்டும் என்று பதில் கிடைத்தது. அதற்கு இவளுக்கு ஒரு புதிய சூழலை ஏற்படுத்தி புதிய மனிதர்களை அறிகுமுகப்பட வேண்டியது அவசியம் என்று தோன்றியது. முதலில் ஆதிராவை தன் கொலீக்ஸ் தங்கும் இடத்தில் தான் தங்கவைக்க நினைத்தான். ஆனால் அங்கே தங்க வைத்தால் மட்டும் தங்கள் மேல் இருக்கும் பழி போய்விடுமா என்ன? என்று சலித்துக்கொண்டவன் என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தான் அவளை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். இது வெளிப்படையான ஒரு காரணமாக இருந்தாலும் மறைமுகமாய் அவனின் அவளுடன் இருப்பது அவனுக்கு நிறைய நிம்மதியைத் தந்தது. தன் அருகில் தன்னுடனே அவளை பத்திரமாய் வைத்துக்கொள்ள விரும்பினான். ஆனாலும்,'இது சரியா?' என்ற அந்தக் கேள்வி அவனுக்குள் இருந்துகொண்டே தான் இருந்தது.

'என் மனதும் அவளுக்குத் தெரியாது. என் காதலும் அவளுக்குத் தெரியாது. என் ஆசையும் அவளுக்குத் தெரியாது. என் ஏமாற்றங்களும் அவளுக்குத் தெரியாது. என் வலிகளும் அவளுக்குத் தெரியாதே? அவளைப் பொறுத்தவரையில் நான் அவளுக்கு ஒரு நல்ல நண்பன். அதும் நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னாலே அவளை விட்டு விலகிச் சென்றவன். ஆனால் எனக்கு? இந்த பதினான்கு பதினைந்து வருடங்களாய் நான் பத்திரமாய் என் மனதிற்குள்ளே அடைகாத்து வைத்திருந்த... இல்லை வைத்திருக்கும் ஒரு அழகிய பொக்கிஷம் தான் அவளும் அவள் நினைவுகளும்!'

'காதல்னாலும் சரி, கவிதைனாலும் சரி, கனவுனாலும் சரி, கல்யாணம்னாலும் சரி எனக்கு முதலும் கடைசியுமாக நினைவுக்கு வருவது என்னவோ ஆதிரா தான்' என்று நினைத்தவன் அந்நாளின் நினைவுக்குச் சென்றான்.

"ஆதிரா என்னை மன்னிச்சுடு ஆதிரா... நேத்து அவன் உன்னை கிண்டல் பண்ணி அழவெக்கும் போது நான் உன்னைக் காப்பாத்தவில்லை... என்னைய மன்னிச்சு உன் ஃப்ரெண்டா என்னை ஏற்றுக்கொள்வாயா?" என்று மறுநாள் டியூஷனில் ஆதிராவிடம் வினவினான் செழியன்.

முதலில் இவன் பேசியது புரியாமல் தன் குண்டு கருவிழிகளை உருட்டியவள் பின்பு செழியன் நீட்டியிருக்கும் அந்த கையைப் பிடித்து சிரித்தாள். அப்போது அவள் தலையை ஆட்ட அதோடு சேர்ந்து அவளின் காதின் லோலாக்கும் குலுங்க, அதையே வைத்தகண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் செழியன்.

"என்ன பார்க்கற செழியா?"

"உனக்கு இந்தத் தோடு சூப்பரா இருக்கு..." என்று சொல்லவும் அதில் தோன்றிய பரவசமும் வெட்கமும் அவன் கண்களில் மின்ன அதையும் ரசித்தான் செழியன்.

"இது என் அத்தையோட ஊருக்குப் போன போது வாங்கினது..." என்று அவள் சொல்ல, அவள் ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிறுத்தி ஆழமாய் உச்சரித்து அதற்கு ஏற்றார் போல் தலையும் கண்களும் கூடவே அந்த லோலாக்கும் சேர்ந்து ஆடுவதை செழியன் இப்போது தான் கவனிக்கிறான். இதற்குப் பெயர் தான் க்ரஷ் என்று நான்காவது படிக்கும் அந்த செழியனுக்குத் தெரியவில்லை ...

இருவரும் வெவ்வேறு பள்ளியில் பயின்றனர். அவளோ ஒரு பிரைவேட் ஸ்கூலில் படிக்க செழியனோ ஒரு அரசு பள்ளி மாணவன்.

"நீயேன் இங்க டியூசன் வர? உன் ஸ்கூல்ல சொல்லித் தர மாட்டாங்களா?" என்ற செழியனுக்கு,

"வேக வேகமா சொல்லிடுவாங்க... அதும் அந்த மேத்ஸ் மிஸ் இருக்கே?" என்று அவள் உதடு சுளிக்க அதில் சொக்கித்தான் போனான் செழியன்...


வண்டி சென்னை வந்து அவனின் அபார்ட்மெண்க்குள் நுழைந்தது. இப்போது நினைவுக்கு வந்த ஆதிரா தான் புரியாமல் செழியனைப் பார்த்தாள். பின்னே அன்று இரவு அவளை வீட்டிற்குள் கூட்டிச் செல்லவே அத்தனை முறை யோசித்து பயந்தானே? இப்போது எப்படி என்னை? அதும் நிரந்தரமாய் தங்க வைப்பான்? என்று அவளுள் யோசனை வந்துபோனது. எந்தத் தவறும் செய்யாமல் ஏற்கனவே நிறைய அவப்பெயரை வாங்கிக்கொண்டானே இப்போது இங்கே இருக்கும் நல்ல பெயரும் கூட தன்னால் இவனுக்கு கெட்டுபோய்விடுமோ என்று யோசிக்க அவளுக்குள் பயமும் எழுந்தது.

"ஆதி இறங்கு... வா போலாம்..." என்றவன் அவளின் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு மேலே ஏறினான். தன்னோடு அவள் வராமல் இருக்கவும் திரும்பி, "ஆதி, வா..." என்று அழைத்துக்கொண்டுப் போக ஸ்கூல் பசங்களை வழியனுப்ப காத்திருந்த பெண்கள் எல்லோரும் இருவரையும் தீர்க்கமாய்ப் பார்க்க இவனோ அவர்களை எதுவும் கண்டுக்கொள்ளவில்லை. நேராக தன் அபார்ட்மெண்ட் சென்று உள்ளே போனதும்,

"செழி, நான் கேட்குறது சரியா தப்பான்னு எனக்குத் தெரியில. இருந்தும் கேக்குறேன், என்னைய ஒரு ஹாஸ்டல்ல சேர்த்துவிடு செழி... என்னால இனியும் உனக்கு எந்த கெட்டப் பேரும் வேணாம். ப்ளீஸ்..." என்று அவள் வருத்தத்துடன் உரைக்க,

"ஆதி முதல்ல நல்லா ரெண்டு மூணு நாளு ரெஸ்ட் எடு. அப்றோம் அடுத்து படிக்கறதா இல்லை ஏதாவது ஜாபானு என்ன செய்யலாம்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வா... அதுக்கப்புறோம் நாம டிசைட் பண்ணிக்கலாம். அதும் உன் கன்வீனியென்டுக்கு ஏத்தபடி... அண்ட் என்ன சொன்ன? உன்னால எனக்குக் கெட்டப் பெயரா? நமக்குள்ள என்னனு நாம எல்லோருக்கும் விளக்கம் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. சோ அதை எல்லாம் மைண்ட் பண்ணாத... போ, போய் ப்ரெஷ் ஆகு. நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்..." என்று அவன் சென்றுவிட ஆதியும் ஏதோ தோன்றியவளாய் பிரெஷ் ஆகச் சென்றாள்.
ஆதிக்கு பயங்கரமாக வயிறு வலிக்க, இப்போது என்ன செய்வதென்று புரியாமல் யோசித்தவளுக்கு எல்லாம் நினைவுக்கு வந்தது. இது அவளின் மாதாந்திர சுழற்சி என்றதும் இப்போது என்ன செய்வதென்றே அவளுக்குப் புரியவில்லை. செழியனை அழைத்தாள்.

விஷயத்தைச் சொல்லவும் தேவையானதை வாங்கி வந்தவன் அவளைச் சாப்பிட வைத்துவிட்டு அமர அவனுக்கு ஆபிசில் இருந்து அழைப்பு வந்தது.

"ஆதி, என்னைப்பாரு... நான் ஆபிஸ் போகணும். போன் வந்துட்டே இருக்கு... ஆனா எனக்கு உன்னை இப்படி தனியா விட்டுப் போக பயமா இருக்கு. நீ..." என்று அவன் இழுக்க,

"செழியா, என்னால நீ பட்டதும் படுறதெல்லாம் போதும்... இனியும் என்னால உனக்கு எந்தப் பிரச்னையும் வராது. சோ நீ தைரியமா போ. அண்ட் செழி எனக்கு ஒரு சிம் கார்ட் வேணும். ப்ளீஸ்..."

"ஈவினிங் வரும் போது வாங்கிட்டு வரேன். அண்ட் மதியம் லன்ச் ஸ்விக்கில ஆர்டர் செஞ்சிடுறேன். சோ டோன்ட் ஒர்ரி, நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. ஃபீல் பண்றதுனாலையும் இல்ல அழுறதுனாலையும் எதுவும் மாறாது. சோ சாப்பிட்டுத் தூங்கு. போர் அடுச்சா டிவி பாரு, புக்ஸ் படி, அம்மாகிட்டப் பேசு இல்ல எனக்கு போன் பண்ணு. ஓகேவா? இந்தா இப்போதைக்கு என்னோட செகண்ட் சிம் நீ யூஸ் பண்ணு. ஈவினிங் வேற வாங்கிட்டு வரேன்..."

"ஹ்ம்ம்..."

"நான் கிளம்பறேன். பை. கதவை லாக் பண்ணிக்கோ. யாரும் வரமாட்டாங்க... அப்படியேனாலும் பார்த்திட்டுத் திற..."
******************
செழியனும் அன்று ஆபிஸ் கிளம்பிவிட்டான். கொஞ்ச நேரம் நடந்தது எல்லாம் அவள் கண்முன்னே வந்து சென்றது. இருந்தும் எல்லாம் தூக்கி வைத்து விட்டவளுக்கு முதலில் ஒரு வேலை அவசியம் வேண்டும் என்று தோன்றியது. அது என்ன வேலையாக இருந்தாலும் சரி என்று யோசித்தாள்.

'செழியே பாவம் இனியா கல்யாணம் வேற இருக்கு ...அவனுக்கு நாம பாரமா இருக்கவே கூடாது...' என்று நினைத்தவள் அங்கிருந்த லேப்பில் ஜாப் அப்பரிங்ஸ் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க அதற்குள் செழியனின் அன்னை, செழி என்று ஒருவர் மாற்றி ஒருவர் அழைத்தனர்.

அவள் படித்த ஜார்னலிசத்தில் உடனே பெரிய ஆபர் இல்லாமல் இருக்க இருந்தும் யோசித்தவளுக்கு திடீரென அனன்யாவின் ஞாபகம் வந்தது. தன்னோடு ஒன்றாகப் படித்தவள் தற்போது சென்னையில் தான் இருப்பதாய்ச் செய்தி. முகநூலில் தேடி அவளுக்கு ஒரு மெஸேஜையும் போட்டு விட்டு பார்க்க லன்ச் வந்திருந்தது. வாங்கி சாப்பிட்டுவிட்டு மாலைக்காகக் காத்திருந்தாள். 5ஐ கடந்தும் செழியன் வராமல் போக மேலே இருந்து கீழே பார்த்தாள் ஆதிரா. குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க அவளும் கீழே இறங்கினாள். பெரும்பாலானோருக்கு இவள் புதியவளாயே தெரிய அவர்கள் எல்லோரும் இவளையே பார்த்தனர்.

நேற்று மதியம் விளையாடிக்கொண்டிருந்த பசங்க எல்லோரும் தான் இப்போதும் இருக்க அந்தச் சிறுவன் (செழியனுக்கு பாலாஜி வந்துள்ளதைச் சொன்னானே? அவன்) ஆதிராவைப் பார்த்ததும் சிரிக்க அந்த நீச்சல் குளத்தில் விழுந்தவனும் வந்து ஆதிராவிடம் பேசினான். ஏனோ எல்லோரும் அவளுடன் நன்றாக ஒட்டிக்கொண்டனர். அவள் பேசிக்கல்லி ஒரு ஜோவியல் டைப். குழந்தைகளுடனே குழந்தையாய் தன்னை அர்பணித்துக்கொண்டாள். இவளின் பேச்சு, குறும்பு, சிரிப்பு எல்லாமும் அவர்களுக்கும் பிடித்துவிட்டது.

"நீங்க சூப்பர் அக்கா... நீங்க எப்படி ஜாலியா பேசுறீங்க? ஆனா அவரும் தான் இருக்காரே? எப்பப்பாரு உர்ருனு..." என்றான் ஒருவன்.

"யாருடா?"

"அவரு தான் செழியன்..."

"அவன் எப்பயும் அப்படித் தான். ரொம்ப அமைதி. எதிலும் ஒரு பர்பெக்ட் ஆசாமி..." என்று சொல்லிச் சிரிக்க,

ஏனோ அங்கிருந்த ஒரு சிறுமி,"ஆண்ட்டி நீங்க இனிமேல் இங்க தான் இருப்பீங்களா?" என்றதும்,

ஆதிராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "அது..."

"ஏய் அது தான் செழியன் அண்ணா கூடத் தானே இருக்காங்க? அப்போ இவங்களும் இங்க தான் இருப்பாங்க... என்ன அக்கா?" என்றான் ஒரு பெரிய பையன்.

"அப்போ நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா?" என்றாள் இன்னொரு சிறுமி.

"அதெப்படி உனக்குத் தெரியும்?" என்று கேட்டான் இன்னொரு சிறுவன்.

"எங்க அம்மா சொன்னாங்க... எங்க ஆப்போசிட் ப்ளட்டுலையும் இப்படித் தான் ஒரு அண்ணாவும் அக்காவும் குடிவந்தாங்க. அப்போ அவங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் வைப்னு சொன்னாங்க. ஆமாவா ஆண்ட்டி?" என்றதும் ஆதிராவுக்கு சிரிப்பும் வருத்தமும் ஒருசேரவே வந்தது. பின்னே குழந்தையாய் அவர்களின் இன்னொசென்ஸ் அவளுக்குப் பிடித்து இருந்தது. கல்யாணம் என்றது அவளுக்கு வருத்தம் செய்தது.

ஆதிரா இல்லை என்பதைப்போல் தலையை ஆட்ட,

"அப்போ ஓகே கண்மணியா நீங்க?" என்றான் இன்னொரு வளர்ந்த சிறுவன்.

"அதென்ன ஓகே கண்மணி?" என்ற ஆதிராவுக்கு,

"கல்யாணம் செய்யாம லிவ் இன் ரிலேஷன் ஷிப்பா?" என்றதும்,

"டேய், ரொம்ப பேசுறீங்க டா நீங்க..." என்றாள்.

"சரி அதெல்லாம் விடுங்க. இனிமேல் நீங்க இங்க தானே இருப்பீங்க?"

"இருக்கலாம்..."

"புரியில அக்கா..."

"எனக்கு ஒரு வேலை கிடைச்சதும் நான் போயிடுவேன்..."

"ஏன்?"

"உங்க செழியன் அண்ணனுக்கு கஷ்டமா இருக்கக் கூடாதில்ல?"

"நீங்க எங்கேயும் போக வேணாம். நாங்க வேணுனா செழியன் அண்ணா கிட்டப் பேசுறோம்..." என்று அவர்கள் பெரிய மனிதர்களாய்ச் சொல்ல குழந்தைகளின் அன்பில் நிறைந்தாள் ஆதிரா.

செழியனும் அப்போது வந்தவன் அப்படியே அங்கேயே நிற்க அக்குழந்தைகள் எல்லோரும் செழியனிடம் சண்டையிட்டனர். புரியாமல் பார்த்தவனுக்கு காரணம் சொல்லப்பட,

"அதுக்குள்ள ஃப்ரண்ட் புடிச்சிட்டியா ஆதி? அதும் உனக்காக என்கிட்டே சண்டை போடுற அளவுக்கு?" என்று வியந்தவனுக்கு,

அவள் சிரித்து,"சும்மா டா செழி..."

"நீங்க சொல்லுங்க அண்ணா, ப்ளீஸ் ஆண்ட்டி இங்கேயே இருக்கட்டும் ப்ளீஸ்..." என்று அந்தச் சிறுமி மன்றாட,

அந்தச் சிறுமியை தூக்கியவன்,"உங்க ஆண்ட்டி எப்பயும் இங்க தான் இருப்பாங்க. அவங்க எங்கேயும் போகமாட்டாங்க. நான் போக விடமாட்டேன். ஓகேவா?" என்றதும்,

"ப்ராமிஷா?" என்று கை நீட்டி சத்தியம் கேட்க,

"ப்ரோமிஷா..." என்று அவளுக்கு ஒரு சத்தியம் செய்தான்.

செழியன் மேலே போக ஆதிராவும் கூடவே வந்தாள். ஏனோ அவள் முகத்தில் இருந்த தெளிவு அவனுக்கு சந்தோசத்தைத் தந்தது.

"சாப்பிட்டியா ஆதி?"

"புல் மீல்ஸ் இருந்தது செழி... சாப்பிடவே முடியல... இருந்தும் சாப்பிட்டேன்..."

"உடம்பு ஓகே வா?"

"பரவாயில்ல..."

"இந்தா சிம். அண்ட் இந்தா ஆதி..." என்று அவளிடம் கொஞ்சம் பணம் கொடுத்தான் செழியன்.

"என்ன செழி இது? எதுக்கு?"

"பிடி, சொல்றேன்..." என்று அவள் கையில் திணித்தவன்,

"என்கிட்டே நீ எப்படிடா கேட்கறதுனு ஃபீல் பண்ண வேணாம். இந்தப் பணம் வெச்சிக்கோ... உனக்கு எதாவது வேணுனா வாங்கு. உன் செலவுக்கு வெச்சிக்கோ ஆதி... காலையில நீ என்கிட்ட கேட்டதே எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு..." என்றதும்

ஏனோ செழியனை அணைத்துக்கொண்டாள் ஆதிரா! (தொடரும்...)
 
படங்களையெல்லாம் பாத்து பாத்து இப்போ எல்லா குழந்தைகளும் இப்படித்தான் பேசுதுங்க ???
yes yes... evolution of new generations...??? tq?
 
Top