Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் ... 17

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
இதயம் கேட்கும் காதல்…

பகுதி 17

அமைதியாய் கழிந்த உணவு வேளையின் போதே, இதழினி முகத்தில் தெரிந்த சிறு குழப்பத்தை கண்டு கொண்ட செழியன், அதை அறிந்து சரி செய்யும் நோக்கோடு, "லிப்ஸ், கொஞ்ச நேரம் நம்ம தோட்டத்துல இருக்கலாமா?! உனக்கு ஒண்ணும் டையர்டா இல்லையே?!" என்றிட,

"அப்படியெல்லாம் இல்லைங்க, தோட்டத்துக்கே போலாம்.." என்று சொல்லி, செழியனோடு தோட்டத்தில் இருந்த மல்லிகை பந்தலுக்கு வந்தவர்கள், அங்கிருந்த கல்மேடை போன்ற அமைப்பில் அமர்ந்தனர்.

தோட்டத்திற்கு வந்து சில நிமிட நேரம் கழிந்தும், பலத்த யோசனையோடு இருந்த இதழினியை பார்த்திருந்த செழியனுக்கு குழப்பமே மிஞ்சியது.

அவளை சரி செய்யும் பொருட்டு, "லிப்ஸ் ரூம்ல இருக்கற வரை சரியா இருந்தே, இப்ப வெளிய வந்து இவ்வளவு நேரம் டீப்பா யோசிக்கறத பார்த்தா, கத்து கொடுத்த பாடம் சரியா புரியலை போலவே..! அப்படி இருந்தா சொல்லு, நல்லா மறுபடியும் தெளிவா சொல்லி கொடுக்கறேன். அதவிட்டுட்டு ஹனிமூன் போற இடத்துல சொதப்பிடாத…" என்று தன் ஒற்றை கண்சிமிட்டி கேட்டவனின் பாவனையில்,

இதுவரை இருந்த மனநிலை சற்று மாறி, இரவின் நிகழ்வுகளும், அப்போது அவளின் காதுகளில் அவனுரைத்த சில ரகசிய சீண்டல் பேச்சுக்களும் நினைவில் எழ, அந்த மாலை வானத்திற்கு போட்டியாக மாறி போனது பெண்ணவளின் மதி வதனம்.

"ஓய், லிப்ஸ் இப்படியெல்லாம் உன் ஃபேஷ், வர்ண ஜாலம் காட்டினா மனுஷன் எப்படி ஸ்டெடியா இருக்க முடியும் சொல்லு…?!" என்றபடியே அவளை நோக்கி, தனது முகத்தை கொண்டு வந்தவனை, தனது கரம் கொண்டு தடுத்தவள்,

"என்னங்க இப்படி, ஓப்பன் ப்ளேஸ்ல, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம…" என்று வெக்கத்தோடு சிணுங்கிட,

"லிப்ஸ், யூ நோ, அந்த காலத்துல ஆதி மனிதன், ஆதம் ஏவல் எல்லாம் இந்த மாதிரி இயற்கையோட தான் அவங்க வாழ்க்கையையே வாழ்ந்தாங்க. நீ என்னடான்னா, நம்ம வீட்டு தோட்டத்துல பக்கம் வந்தாலே இப்படி ஜர்க் ஆகுற. இதுல செல்லமா சிணுங்கி, நல்ல பையனா இருந்தவன கெடுக்கறதே நீ தான்.." என்று அவன் ஆரம்பத்தது தான் என்பதை மறைத்து, அவளையே காரணியாக்கியவன் கண்டு முறைத்த இதழினியை நெருங்கி தோளோடு அணைத்தவன்,

"இதழினி, உன் மனசுல எதையோ யோசிச்சு குழம்பறேன்னு புரியாதுடா, பட், அது என்னன்னு நீயா சொன்னா தானே எனக்கு புரியும். சில விசயத்தை நானா புரிஞ்சுக்கலாம். எல்லாமே அப்படி முடியுமா.. நானும் சாதாரண மனுஷன் தான் மஹானோ, மகரிஷியோ இல்ல, அடுத்தவங்க மனசுல நினைக்கற எல்லாத்தையும் சொல்லாம தெரிஞ்சுக்க.." என்றதும்,

அவனின் இத்தனை நேர சீண்டலுக்கான அர்த்தம் புரிந்திட, அவனின் தன் மீதான காதலும், தனது முகத்தினை பார்த்தே, தனது மனதை படித்து, அதை தீர்க்க நினைப்பவனின் மீது, இன்னும் இன்னும் காதல் கூடி கொண்டே சென்றது இதழினிக்கு…

"இல்லைங்க.. எனக்கு நீங்க கொஞ்சம் வசதியான வீட்டு பையன்னு காலேஜ்லயே தெரியும். அதனாலையே உங்க விளையாட்டு தனமான பேச்சை ரசிச்சாலும், உங்க மேல ஏதோ ஒரு நேரத்தில ஏற்பட்ட ஈர்ப்பை கூட, 'இது ஒத்துவராது' ன்னு நினச்சி ஒதுங்கி போயிருக்கேன்.

நீங்க காதலை சொன்ன சமயத்தில அதை பத்தி சிந்திக்கற நிலைமையில சுத்தமா நான் இல்ல. அதான் மறுத்து பேசிட்டு போயிட்டேன். அதுக்கு அப்புறமும் நான் அதை பத்தி யோசிக்க, என் குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்கல.

சரி, நீங்க என் வாழ்க்கையில எங்கையுமே இல்லைன்னு இருந்த நேரத்தில, ஹரிஹரன் சார் என்னை பெண் பார்க்க வந்தாங்க. அதுவரை கூட எனக்கு எதுவுமே தோணல. ஆனா, அதுக்கு பின்னாடி ஏனோ உங்க நினைப்பு தான் என் மனசுல.
அப்ப கூட, நீங்க உங்க வசதிக்கு, இத்தனை நாள்ல வேற வாழ்க்கைன்னு நீங்க போயிருப்பீங்கன்னு தான் நான் நினைச்சிட்டு இருந்தேன்.

அதெல்லாம் இல்ல, எப்பவும் நீ எனக்கு தான்னு எனக்காக காத்திருந்து, இவ்வளவு தூரம் எல்லாம் செஞ்சு, கல்யாணம் பண்ணியிருக்கீங்க ன்னா உங்க காதல் எவ்வளவு உண்மையானதா, உயர்வா இருந்திருக்கும்.
 
Last edited:
நான் அப்படி இல்லையோன்னு தோணுதுங்க. அதே ஹரிஹரன் சார் வீட்டுல எல்லாம் ஒத்து வந்திருந்தா ஒருவேளை…" என்ற வார்த்தைக்கு அடுத்து, எப்படி சொல்வது என விளங்காது தவித்தவளின் தவிப்பை உணர்ந்தது போல, அவளின் கரத்தை பற்றி ஆறுதலாய் அழுத்தினான்.

அது கொடுத்த தெம்பில், அவனை நிமிர்ந்து பார்க்க, செழியனுக்கு நேற்று கொடுத்த வாக்கு படி, தனது கண்ணீரை கட்டுபடுத்தி வைத்திருந்தவளின் கண்கள் சிவந்து போயிருந்தது இதழினிக்கு…

அதுவே, அவனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுபவளின் நேசம் செழியனுக்கு நன்கு விளங்க,
"இதழினி, நீ உங்க வீட்டுல இருக்கறவங்களுக்காக எதையும் செய்வேன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ ஹரிஹரனோட கல்யாணத்துக்கு, ஓகே சொல்லியிருந்தாலும் கடைசி நேரத்திலையாவது நம்ம கல்யாணத்தை நான் நடத்தியிருப்பேன்.. உன்னை தூக்கிட்டு வந்தாவது….

என்ன, அப்படி நடந்திருந்தா ஹீரோவா ஆரம்பிச்ச வாழ்க்கை, கொஞ்சம் வில்லத்தனமா ஆரம்பிச்சிருக்கும்… ஒரே ராத்திரியில கவுத்த உன்னை, பல நாள் அல்லது பல மாசம் பேசி கரெக்ட் பண்ணி கவுக்க வேண்டி வந்திருக்கும்.." என்று அசால்ட்டாய் சொன்னவனின் பாவனையில்,

வாயை பிளந்து, 'அடப்பாவி' என்பதாய் பார்த்தாவளை கண்ட செழியன் 'ஹா..ஹா..' என வாய்விட்டு சிரிக்க,

இதழினிக்கு அவனின் சொல் கொடுத்த நிம்மதி, அப்படி நடந்திருந்தால் இவன் எப்படியெல்லாம் பேசியிருப்பான் என்ற கற்பனை கொடுத்த காட்சியில் அவளும் அந்த சிரிப்பில் ஐக்கியமாக்கினாள்.

அதே சிரிப்போடு, "மேடம், இன்னும் ஏதோ மனசுல வச்சிட்டு இருந்தா சொல்லிடுங்க. அதுக்கும் பக்காவா பதில் சொல்லிடுறேன். அப்புறம் முக்கியமான நேரத்துல டவுட் கேட்டு டிஸ்டர்ப் பண்ணிட கூடாது… ஓகே…" என்றதும்,

"இவ்வளவு வசதியா இருக்கற நீங்க, நாளைக்கி மறுவீட்டுக்காக எங்க வீட்டுக்கு போகணுமே. அங்க இது மாதிரி வசதியும் இருக்காது. அதோட.." என்றவள் எப்படி அதை சொல்வது என்று தயக்கத்தோட நிறுத்திட, அதற்கு அவசியமே இல்லை என்பதாய் இருந்தது செழியன் உரைத்த மறுமொழி..

செழியன், "என்ன உன் தங்கச்சி, தம்பின்னு வயசு பசங்க இருக்காங்க. நம்ம இப்படி க்ளோசா இருந்தா அவங்களுக்கு சங்கடமா இருக்கும் அதானே?" என்றிட, மௌனமாய் தலையசைத்தவளின் தலையை மெல்ல தனது உள்ளங்கை கொண்டு ஆட்டியவன்,

"லூசு.. எனக்கும் என் லிமிட் தெரியும். இது நம்ம வீடு, சோ அந்த உரிமையில எல்லா இடத்திலையும் உன்கூட வம்பு பண்றேன். அதே வேலைய பப்ளிக்ல வச்சு செய்வேனா.. எனக்கும் பொறுப்பு இருக்குடா. உன் வீடும், உன் உறவும் இனி என்னோடதும் கூட…" என்றவன்,

"யூ ஷீ.. உங்க வீட்டுக்கு போனா உன்னை பார்ப்பேனா.. அதுக்கு தான் அழகா ரெண்டு மச்சினிச்சிங்க இருக்கற வீடா பார்த்து பிடிச்சிருக்கேன். அவங்க கூட ஜாலியா……. " என சொல்லிக்கொண்டிருந்தவனின் வார்த்தை முடியும் முன்பே, இதழினி அவனின் காதை பற்றி திருகிட,

"அய்யோ விடுடீ. ஜாலியா பேசிட்டு இருப்பேன்னு சொல்ல வந்தேன்.. ராட்சசி இப்படியாடீ காதை பிடிச்சு திருப்புவ.. உன்னை……" என அவளின் கையை தட்டிவிட்டு துரத்த, அடுத்து வந்த நேரம் இருவருக்கும் இனிமையாகவே கழிந்தது.

******

நாட்கள் வேகமாக செல்ல, செழியன் திட்டம் போட்டது போல், தனது அக்காவை பார்த்துவிட்டு, அப்படியே தங்களின் தேனிலவையும் திகட்ட திகட்ட அனுபவித்து விட்டு.. தங்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வந்து, ஒரு மாதம் சென்றிருந்தது..

சந்துரு ஆசையை, இதழினியிடம் தங்களின் ஹனிமூனின் போதே சொல்லியிருக்க, மாரியப்பனுக்கும் தனது மருமகன் மற்றும் மகளின் முடிவில் சந்தோஷமாக சம்மதம் தெரிவித்துவிட்டார்.

அபிதாவின் பரிச்சைகளும் முடிந்த பின், அடுத்த மாதம் அவர்கள் திருமணம் என நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவர்கள் திருமணம் நெருங்கி வர, திருமணத்திற்காக ஷாப்பிங் செல்வதற்காக, இரு ஜோடிகளும் அருகே இருந்த மாலுக்கு சென்றனா். பெண்களை தேர்வு செய்ய சொல்லி விட்டு.. செழியனும், சந்துருவும் தங்கள் தொழில் பற்றி பேசிக்கொண்டிருந்த போது,

"சகல, அங்க போறது யாருன்னு தெரியுதாடா..?!" என்ற சந்துருவின் கேள்வியில், அவன் காட்டிய திசையை பார்த்தவனுக்கு, யாரை சொல்கிறான் என்பது புரியாது,

"யாரடா சொல்ற?!" என்ற செழியனிடம்,

"அங்க பாருடா, அந்த புளூ சர்ட். உன்னோடு ஆள, அதான் இதழினிய தட்டிட்டு போக பார்த்தானே அந்த ஹரிஹரன்டா" என்றதும்,

சந்துரு சொன்ன திசையில் பார்த்த செழியன், அங்கே நின்றிருந்த ஹரியை நோக்கி, தனது முழுகை சட்டையின் ல்லீவ்வை மடக்கிய படி, வேகமாய் செல்ல,

சந்துருக்கோ, 'அச்சோ . இவன் போற ஸ்பீட பார்த்தா, அவனை உண்டு இல்லைன்னு செஞ்சிடுவான் போலவே!

டேய் சந்துரு. உனக்கு அறிவே இல்லடா. அவன் தான் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டானே. இப்ப போய் இவன காட்டி நியாபக படுத்தனுமா?!

அப்பவே எவ்வளவு தைரியமிருந்தா.. என்னோட இதழினிய பொண்ணு பார்க்க வந்திருப்பான்னு கோபப்பட்டானே?!
 
இப்ப செம ரணகளம் ஆக போகுது' என மனதில் புலம்பியவண்ணம் தவிப்போடு, இதழினி அபியும் இருந்த இடத்தையும், செழியன் போன இடத்தையும் பார்த்துக்கொண்டிருக்க,

போன வேகத்தில் திரும்பி வந்த செழியனின் செயலில், ஒன்று புரியாது அவனுக்கு பின்புறம் இருந்த ஹரியை பார்க்க, அவனும் சந்துரு போலவே குழம்பி போய் நிற்பது தெரிந்தது..

அருகே வந்த செழியனிடம்.
"ஏன் சகல. அவ்வளவு வீராவேஷமா போனயே. ஏன் திரும்பி வந்திட்ட. எதுக்கு அவ்வளவு அவசரமா போன.?!" என குழப்பத்தோடு கேட்க.

"அவனுக்கு தேங்க்ஸ் சொல்ல தான்டா " என அசால்ட்டாய் தோள் குலுக்கி சொன்னவனின் பதிலில், சந்துரு தனது நெற்றியில் அடித்து கொள்ள,

"சகல, அவன் மட்டும் பொண்ணு பார்க்க வராம இருந்திருந்தான்னு வைய்யி, இந்த மதிம்மாவும், மூனும் சேர்ந்து இப்ப என்னோட கல்யாணத்த நடத்தியிருக்குங்கற?!
அதான் அவனுக்கு போய், தேங்க்ஸ் சொன்னேன். ஆனா அந்த பக்கிக்கு நான் எதுக்கு சொன்னேன்னே தெரியல. சரியான லூசு பையன்..." என வாயை விரலால், மூடி நக்கலாய் சிரிக்க,

அவனின் பதிலில் முறைத்த சந்துரு, "உன்கூடவே இருக்கற எனக்கே நீ தேங்க்ஸ் சொன்னது எதுக்குன்னு நீ சொல்ற வரைக்கும் புரியல.

இதுல, அவனுக்கு நீ யாருன்னே தெரியாது. அவன் கிட்ட போய் சொன்னதுக்கு, அவன் தான் உன்ன லூசுன்னு நினைப்பான்" என நக்கலாய் கையிலும் வாயிலும் கொக்கலிகாட்டி சிரிக்க,

அப்போது அருகே வந்த இதழினியும், அபியும், சந்துருவை பார்த்த பார்வையில், 'செழியன், தன்னவள் முன்பு, தன்னை லூசு போல்' சிரிக்க வைத்ததை எண்ணி, நொந்து தான் போனான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, குழப்பத்தோடு பார்த்திருந்த ஹரிஹரன், செழியனை நோக்கி வரவும், இதழினி அங்கு வரவும் சரியாக இருக்க, இப்போது அவனுக்கு செழியன் சொன்னதன் அர்த்தம் நன்றாக விளங்கியது.

திரும்பி செல்ல நினைக்கும் போது, இதழினி அவனை கண்டுவிட, அப்படியே போக முடியாது, அவர்களை நெருங்கியவன், அவளுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து விட்டு, தனது கல்யாணம் குறித்தும் சொல்ல, இதழினிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

"ரொம்ப சந்தோஷம் ஹரி சார். எப்ப கல்யாணம்?"

"இந்த மாசம் 14 ம் தேதி தான். கண்டிப்பா நீங்க எல்லாரும் வரணும்" என்றதும்,

"சாரி, ஹரி சார். அன்னைக்கு தான் என்னோட தங்கச்சிக்கும், இவருக்கும் கல்யாணம்.." என சொல்லி, மற்றவரையும் அறிமுகபடுத்த, அங்கு அழகாய் ஒரு நட்பு உருவானது.
 
Top