Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதயம் கேட்கும் காதல் - 1

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

@Riyaraj புது கதையோட வந்திருக்காங்க "இதயம் கேட்கும் காதல்..."

யாரின் இதயம் யாரோட காதலை கேட்டது...??!! கதை படிச்சு தெரிஞ்சுக்கலாம்.. வாழ்த்துக்கள் @Riyaraj :love::love:

-----------------------------------------------------------------------------------------


இதயம் கேட்கும் காதல் - 1

இரவுக்கு விடை கொடுத்து பகலினை வரவேற்க தயாராகி கொண்டிருக்கும் இனிமையான அதிகாலை பொழுது... தன் கடிகாரம் எழுப்பிய "கூக்கூ... " என்ற ஒலியில் கண் விழித்த இதழினியின் இதழ்களோ… "இன்றைய நாள், நல்ல நாளாக அமைய வேண்டும்" என்று எப்போதும் போல பிராத்திக்க, அதனை தொடர்ந்து, தன் இரு கைகளால் முகத்தினை அழுத்த துடைத்து... பின் அந்த கைகளிலேயே கண் திறந்தாள்.

இது அவளின் சிறு வயதிலிருந்தே இருக்கும் பழக்கம்... அவளின் தாய் செய்வதை பார்த்து, அதையே தானும் செய்ய ஆரம்பித்தது இன்று வரை அதை தொடர்கிறாள்.

தன் அருகே படுத்திக்கும், தனது இரு தங்கைகளையும் ஆசையோடு பார்த்தவள், மெதுவாக அவர்கள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, சிறு புன்னகையோடு, அந்த அறையை விட்டு வெளியேறினாள், தனது காலை நேர கடமையை தொடர்வதற்காக....

அதே நேரம், சமையல் அறையிலிருந்து கேட்ட சத்தத்தில்... "இந்த அப்பா எப்பவும் இப்படி தான்... நா வர்றதுக்குள்ள ஏன் தான் இப்படி செய்யறாரோ... ??" என அலுப்பாக நினைத்தாலும், மனதின் ஓரத்தில் அவரின் அக்கரை கலந்த இந்த செயலும் இனிக்கத்தான் செய்தது.

"குட் மார்னிங் அப்பா! நா வர்றதுக்குள்ள எதுக்குப்பா இப்படி வந்து சமையல ஆரம்பிக்கறீங்க.... ? நானே செய்ய மாட்டனா.. !!!" என அவரை கேட்க....

"குட் மார்னிங்டா... இதுல என்னடா இருக்கு...? எல்லாருமே கரெக்ட் டைமுக்கு, வெளிய வேலைக்கு, ஸ்கூல், காலேஜ்ன்னு கிளம்பனுமே... நீ ஒருத்தியே எல்லாமே செய்ய முடியுமா... ? அதான் நானும் கூட ஒத்தாசையா செய்ய வந்திட்டேன்... எப்படியும் நாலு மணிக்கு மேல, எனக்கு தூக்கம் வராது... அப்புறம் என்னடா செய்யறது.. " என அவளுக்கு பதில் சொன்னாலும், கைகள் அதன் போக்கில், தன் செல்ல மகளுக்கான டீயை தயாரித்து நீட்டியது.

இதழினியின் தந்தை மாரியப்பன், ரயில்வே துறையில் கடைநிலை ஊழியர்... வருமானம் சொற்பம் தான். அவரின் மனைவி இருந்த வரை, எதிலும் பெரிதாக அக்கரை இல்லாமல் இருந்தவர் தான்.

அடுத்தடுத்து பிள்ளைகள் பிறந்தாலும், அதை பொருட்டாக நினைக்காமல், மூன்று பெண் பிள்ளையையும், ஒரு ஆண் மகனையும் பெற்றவர்.

கடைசி பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல், அவரின் மனைவியை கொஞ்சம் கொஞ்சமாக காவு வாங்கும் என தெரிந்திருந்தால் அதை தவிர்த்திருப்பாரோ…?! அவரின் இறப்பு அவரையும் பக்குவப்படுத்தியது என்பதில் ஐயமில்லை...

அதன் பின், தனது குழந்தைகளை பார்த்துக்கொண்டு, அவரின் வேலையையும் செய்வததில் வந்த அக்கரை.. முன்னரே இருந்திருந்தால், இன்று பல பிரச்சனைகள் வராது தடுத்திருக்கலாம்...

அவர் ஆரம்பித்திருந்த சமையலை, அப்பாவும், மகளுமாய் சேர்ந்து பேசிக்கொண்டே முடிக்கவும்.. இதழினியின் முதல் தங்கை அபிதா எழுந்து வரவும் சரியாக இருந்தது.

"அபிம்மா எழுந்திட்டையா... ? இரு.. டீ போட்டு தா்றேன்... அப்படியே போய் வினியையும் , ஆனந்தையும் எழுப்பி விட்டுடும்மா... " என சொல்லி முடிக்கும் முன்...

" அக்கா... இங்க பாரு.. நா வினிய வேணுமுன்னா எழுப்பி விடுறேன்... ஆனா அந்த குரங்க நா எழுப்பி விட மாட்டேன் .... சரியான சிம்பான்சி... " என தன் தம்பியை கடிந்து கொண்ட, அபியை பார்த்த இதழினிக்கு சிரிப்பு தான் வந்தது...

அது என்னவோ, ஆனந்தை கண்டாலே இப்படி தான் சண்டை நடக்கும்... பெண்கள் இருவரும் அவனை "குரங்கு" என்றால், அவனோ இவர்களை "கழுதை" என்று சொல்லி.. பேச்சில் ஆரம்பித்து அடிதடியில் போய் தான் முடிப்பார்கள்...

இதழினியும், மாரியப்பனும் இருந்தால் எப்படியோ சமாதானம் செய்து விடுவார்கள். அவர்கள் இல்லாத நேரமெனில், இவர்கள் சண்டையை குழாயடி சண்டையுடன் ஒப்பிடும் அளவுக்கு, ரணகளமாய் ஆக்கி விடுவார்கள்.

அவளை அனுப்பினாலும், காலையிலேயே வம்பு சண்டை நடக்கும் என்பதை உணர்ந்தவுடன்... "சரி.. இந்த இத நீ குடிச்சிட்டு போய் குட்டிய மட்டும் எழுப்பிவிடு... நைட் படிச்சிட்டு ரொம்ப நேரம் கழிச்சு தூங்கினான்னு தான் காலைல எழுப்புல... படிக்கணுமின்னு நேரமே எழுப்ப சொன்னா... நா தான் விட்டுட்டேன் எழுப்பாம…

இப்ப எழுப்பினா, ஏதாவது சொன்னா சத்தம் போடாத.. நா தான் கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பாலாமின்னு வந்திட்டேன்னு சொல்லு சரியா..?!" என்ற படியே... தன் கையில் காபி டம்ளாரோடு, தன் வீட்டில் இருக்கும் மற்றொரு அறைக்கு சென்று, தன் தம்பியை எழுப்பினாள் இதழினி.

ஆனந்த்... இதழினி, அபிதா, வினிதாவின் உடன்பிறந்த ஒற்றை ஆண் வாரிசு... அதனால் செல்லமும் அதிகம்... பிடிவாதமும் அதிகம்... தனக்கு வாரிசு வேண்டும் என்று தவமிருந்து பெற்ற பிள்ளை என்பதால் மாரியப்பனுக்கும் அவன் எப்போதும் ஸ்பெஷல் தான்...

அதனாலேயே அவனை கண்டிக்க மனமில்லாது போக.. படிப்பையும் கோட்டை விட்டுவிட்டான்... தக்கி முக்கி 10வது வரை வந்தவன்... அதில் தோல்வி கிடைத்ததும், 'விட்டது சனி' என படிப்பிற்கே முழுக்கு போட்டு விட்டான்...

இதழினி நகரின் முக்கியமான பெரிய கார்மெண்ட்ஸ் கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் டிப்பர்ட்மெண்ட்டில் பணி புரிகிறாள். அவள் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில், அவளின் தாயின் மரணம் நிகழ.... அடுத்து அந்த குடும்பத்தின் மொத்த பொறுப்பையும் நிர்வகிக்கும் நிலை இதழினிக்கு....

அவளின் தாய் இருந்தவரை, அவரால் அதிகமாய் செயல்பட இயலாவிட்டாலும், கண்பார்வையில் அதை சரியாக கையாண்டவர் அவர்... அவரின் கண்காணிப்பில் தவறிய ஒரே இடம் ஆனந்தின் வெளி சேட்டைகள்... அவருக்கு அது பிள்ளை குறும்பாய் தெரிய... அவனின் குணம் மாறுவது தெரியாது போனது யார் குற்றம்....

ஆனந்த் செய்யும் சேட்டைகள் அப்படி... ஒரே பிள்ளை… வீட்டில் இருக்கும் நிலை தெரிந்தாலும், தனது பிடிவாதத்தாலே காரியம் சாதித்து கொள்பவன்... தவறான வழியில் சென்று விட கூடாதே என்று இதழினி செய்த செயல் இப்போதெல்லாம் அவளுக்கே தலைவலியாய் மாறிவிட்டது.... காரணம்... இதழினி வேலை பார்க்கும் அதே கார்மெண்ட்ஸ்ஸில் அவனுக்கும் வேலை வாங்கி கொடுத்தது..

ஆனந்த் வேலை பார்க்கும் இடத்தில் பெண்கள் தான் அதிகம்.... அவர்களை வம்பு செய்து கலாட்டா செய்வது அவனின் மிக முக்கிய வேலை...

அவனின் பேச்சுக்கு மறுமொழி சொல்லாமல், அனைத்து புகாரும் இப்போது இதழினியிடமே செல்வதால் தான் தலைவலி.... எப்படியாவது இன்று அவனுடன் பேசிட வேண்டும் என்று முடிவுடன் அவனை எழுப்பினாள் இதழினி...

அவளின் எண்ணம் ஈடேறுமா... ஆனந்த் இதழினி சொல்வதை புரிந்து கொள்வானா???!!!
 
உங்களுடைய "இதயம்
கேட்கும் காதல்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ரியா ராஜ் டியர்
 
Top