Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இசைத்தூறலாய் என்னுள்ளே நீ 25 (Final)

Advertisement

Anu Chandran

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்...

இதோ இசைத்தூறலாய் என்னுள்ளே நீ அடுத்த பகுதியோடு வந்துட்டேன்...
படிச்சிட்டு மறக்காமல் உங்க கருத்தை சொல்லிட்டு போங்க.....
1336

துளி 25


இசையில் தொடங்குதம்மா

விரஹ நாடகமே

வசந்தம் கடந்ததம்மா

வாடும் வாலிபமே


ரிசாட்டின் உள்ளே ஸ்ரவ்யாவை அழைத்து சென்றவன் அங்கு ஒரு தியேட்டர் போல் அமைக்கப்பட்டிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றான்... அங்கு ஸ்ரவ்யாவை அமரவைத்தவன் அங்கிருந்த உதவியாளரிடம் துணையோடு அங்கிருந்த ஸ்க்ரீனில் ஒரு காணொளியை ஒளிரச் செய்தான்..

அதில் அவன் ஸ்ரவ்யாவிற்காக எழுதிய பாடல் இசையமைக்கப்பட்டு இசைக்கப்பட்டிருக்க காட்சிகளோ அவனும் அவளும் ஒன்றாயிருந்த சில வீடியோக்கள் கொண்டு உருவாக்கப்பட்டது.....

ஆண் :- மாலை வேளையில்

மங்கிய ஒளியில்

புழுதி என் பார்வை மறைக்க

மின்னி மறைந்தது அவள் விம்பம்

நொடியே என்றபோதிலும்

யுகமாய் நெருக்கமானது

அவள் விம்பம்..



இமைக்க மறந்தன என் விழிகள்

உணர மறுத்தது என் மேனி

அசைய மறுத்தன என் கால்கள்

துடிக்க மறந்தது என் இதயம்



அவள் விழியசைவு பல கதைகள் பேசிட

அவள் இதழ் சுழிப்பு என் ஜீவன் வதைத்திட

அவள் கன்னங்களோ என் இளமையை

சோதித்திட

நிலையின்றி தவித்தது என் காதல் மனம்



இமைக்க மறந்தன என் விழிகள்

உணர மறுத்தது என் மேனி

அசைய மறுத்தன என் கால்கள்

துடிக்க மறந்தது என் இதயம்





பெண் :- கண்டேன் அவனை அவன் காணாத போது

ரசித்தேன் அவனை அவனறியாத போது

நினைத்தேன் அவனை அவன் நினையாத போது

உயிர்த்தேன் அவனால் அவன் உணராமலே



அவன் கைகள் கோர்க்கும் வேளையை

என் மனமோ கனவில் சித்தரிக்க

அவன் நினைவுகள் விழுங்கும் வேளையில்

என் ஜீவன் ஜனித்ததடா...



காதல் உணர்ந்தது என் மனம்

கள்ளத்தனம் கற்றது என் விழிகள்

நாணல் கொண்டது என் பெண்மை

நீ என் ஜீவனென்றானது இந்த நொடி



அவன் கணீரென்ற குரலிலும் வேறொரு பெண்ணின் காந்தக் குரலிலும் அந்தப் பாடல் அத்தனை ரம்மியமாய் இருந்தது... அவளுக்காக அவன் எழுதிய வரிகளிலும் அவளாக மாறி அவனுக்கா அவன் எழுதிய வரிகளிலும் காதல் மட்டும் தொங்கி நின்றது....

அவன் டைரியில் இந்த வரிகளை வாசித்தபோது கூட அவளுள் இத்தனை தாக்கம் இல்லை...... ஆனால் அதையே இன்று இசையாக கேட்டிட அது தந்த உணர்வை எதனாலும் தந்திட முடியாது... இசைக்கான இசை மட்டுமே போட்டி..இயற்கையாய் உருவான இசையாகட்டும் மனிதனால் உருவாகப்பட்ட இசையாகட்டும் எதற்குமே உலகில் வேறெந்த பொருளாளோ உணர்வாலோ போட்டியாய் நின்றிட முடியாது.... அதனால் தான் காதலின் தூதாய் காதலர்கள் இசையை பயன்படுத்துகின்றனர்...

இன்று தேர்வும் கூட இசையை தான் தன் காதலை வெளிப்படுத்த பயன்படுத்தியிருந்தான்.......

அந்த வீடியோ முடிந்ததும் ஸ்ரவ்யா

“அப்பு.... பாட்டு வேற லெவலில் இருந்துச்சு... இந்த வரிகளும் இசையும் எனக்கானதுனு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.... உன்னோட வாய்ஸ்... அதுல இருந்து ஃபீல்..... பா..... சான்ஸே இல்லபோ...எனக்கு இந்த சாங்கை கேட்ட மூவ்மண்ட் க்ஊஸ் பம்ஸ் அப் மூவ்மெண்ட்..... இது வரைக்கும் நீ கொடுத்த கிப்ட்லயே இது தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது....... லவ் யூ டா...” என்று தேவ்வை அணைத்துக்கொண்டாள் ஸ்ரவ்யா...

அவளது மகிழ்ச்சியில் மகிழ்ந்தவன் அவளை தன்னிடமிருந்து பிரித்து

“இன்னொரு சந்தோஷமான விஷயமும் இருக்கு....அதையும் கேட்டுட்டு சந்தோஷப்படு...”

“என்ன அப்பு....??” என்று கேட்க அவன் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு கவரினை எடுத்து ஸ்ரவ்யா முன் நீட்டினான் தேவ்....

“என்ன இது??”

“பிரிச்சிப்பாரு...” என்று கூற அதை வாங்கி பிரித்துப்படித்தவளது விழிகள் விரிந்தது...

அவளது செய்கையை ரசித்தவன்

“ஹேப்பியா ஸ்ரயா??”

“இது...இது... எப்படி??”

“நான் தான் உன்னோட சாங் ரெக்கோர்டிங்கை அனுப்பி வைத்தேன்..... உன்னை செலெக்ட் பண்ணிட்டாங்க.... நெக்ஸ்ட் வீக் பஸ்ட் ஆடிஷன் இருக்கு.... அதுக்கு நாம் இன்டியா போறோம்.....” என்று தேவ் கூற மறுபடியும் தேவ்வை கட்டிக்கொண்டாள் ஸ்ரவ்யா.....

இதை நிச்சயம் அவள் எதிர்பார்க்கவில்லை..... இது அவள் திறமையை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம்... அதை பரிசாய் தந்த தன்னவனை நினைக்கையில் அவளால் மகிழாமல் இருக்கமுடியவில்லை.....

எந்த நொடியும் தன்னை பற்றியே சிந்திப்பவனது காதலை எண்ணி அவளால் வியக்காமல் இருக்கமுடியவில்லை....

“எப்போ இதை பண்ண??”

“அன்னைக்கு விஜய் டிவி பார்த்துட்டு இருந்தேன்... அப்போ தான் ஆடிஷன்ஸ் நடக்கிறதாம் சொன்னாங்க... அப்போ போன் கேட்டப்போ ரீடெய்ல் சொன்னாங்க... உடனே என்கிட்ட இருந்த உன்னோட சாங் ரெக்கார்டிங்கை அனுப்பிட்டேன்.... அதை செலெக்ட் பண்ணி இப்போ லைவ் ஆடிஷனிற்கு கூப்பிட்டிருக்காங்க...”

“ஓ..... ஆனா... என்னால் முன்னமாதிரி பாட முடியுமா அப்பு...??? நான் பாடி ரொம்ப நாளாச்சே..”

“நானும் அப்படி தான் நினைத்தேன்... ஆனா உன்னோட வாய்ஸ் இன்னும் உன்னோட கன்ட்ரோலில் தான் இருக்கு... சோ சீக்கிரம் சரி பண்ணிடலாம்.... நீ பயப்படாத... நான் உன்னை ட்ரெயின் பண்ணுறேன்...”

“அப்போ ஓகே.... அப்போ நாம் ஹனிமூனிற்கு இந்தியாவிற்கு தான் போக போறோம்....”

“உனக்கு ஓகேனா அதை ஹனிமூன் ட்ரிப்பாகவே மாற்றிடலாம்...” என்று கூறி தேவ் கண்ணடிக்க அதில் வெட்கிச்சிவந்தவள் அவனை நேராக பார்ப்பதை தவிர்த்தாள்...

அவள் வெட்கம் புரிந்தவன்

“சரி வா நாம வீட்டுக்கு கிளம்பலாம்.... திவியால ரொம்ப நேரம் சமாளிக்கமுடியாது..”

“என்ன சொல்லுற அப்பு...?? அப்போ அவளும் இதுக்கு கூட்டா??”

“ஆமா.... பின்ன உன் சேப்டி முக்கியமில்லையா... அதான் அவகிட்டயும் பிளானை சொல்லி ஹெல்ப் கேட்டேன்.... அவளை அஜூ கொண்டு போய் வீட்டுல விட்டிருப்பான்...”

“சரி வா அப்பு... கிளம்பலாம்... இல்லைனா வேற மாதிரி கலவரமாகிடும்.... “ என்று கூறி தேவ்வோடு கிளம்பினாள் ஸ்ரவ்யா...

மறுநாள் அவர்களது திருமணம் ஊரார் முன்னிலையில் தேவர்களின் ஆசியுடன் நடந்து முடிந்தது....

திருமணம் முடிந்ததும் தேவ் அவர்களுக்கென வாங்கியிருந்த வீட்டில் ஸ்ரவ்யாவோடு குடிபுகுந்தான்....

தேர்வின் பெற்றோர் இருவரும் தாம் ஊரிலேயே இருப்பதாக கூறிட ஸ்ரவ்யாவும் தேவ்வும் தம் தனிக்குடித்தனத்தை தொடங்கினர்...

தேவ் மற்றும் ஸ்ரவ்யாவின் சொத்துகளில் பாதியை ட்ரஸ் ஆரம்பித்து அதன் வளர்ச்சிக்கு பயன்படுத்திட மற்றையவற்றை இருவரும் சேர்ந்து நிர்வகிக்க தொடங்கினர்.....

அதையும் கொடுத்துவிடலாம் என்று தேவ் கூற ஸ்ரவ்யாவோ வேண்டாமென்று கூறியவள் தன் தாத்தாவின் மீது கொண்ட விசுவாசத்தால் இன்றுவரை நம் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை நாம் தான் பார்த்துக்கொள்ளவேண்டுமென்று கூறி அவர்களின் வளர்ச்சிக்கான முயற்சியில் தேவ்வை ஈடுபடுத்தினாள் ...

இது ஒருபுறமிருக்க மறுபுறம் அவள் பாடகியாகும் கனவு நிறைவேறியது..

அஜயும் தன் பெற்றோர் சம்மதத்தோடு திவியை கரம் பிடித்து அவளோடு கனடா சென்றுவிட்டான்...

அபியும் தான் விரும்பிய நிம்மதியை மணந்துகொண்டான் ....

வாழ்வில் பல இன்னல்களை சந்தித்தவர்களின் வாழ்வு மகிழ்ச்சியாய் மாறிட அவர்களது வாழ்வை சிதைக்க எண்ணியவர்களோ இப்போது சிறையில் இருக்கின்றனர்

தேவ்வும் ஸ்ரவ்யாவும் தம் பாட்டானாரின் சொத்தை மீட்டெடுத்ததோடு அவர்கள் வாழ்வில் விளையாடிவர்களுக்கு உரிய தண்டனையையும் கொடுத்துவிட்டனர்...

தேவ் நீதிமன்றத்தில் தனக்கு உரித்தான சொத்தை மீட்டுத் தருமாறு வழக்கு பதிவு செய்திருக்க அதன்படி வழக்கும் ஆரம்பமானது.. தேவ்வும் அவன் குடும்பத்தாரும் இறந்துவிட்டதாக கூறி சொத்துக்கள் பரத் வசமாகியிருக்க பரத் ஸ்ரவ்யா மற்றும் தேர்வின் சொத்துக்கள் அனைத்தையும் திக்விஜயன் பெயருக்கு மாற்றியிருந்தான்.... இது அனைத்தும் விசாரணையில் வெளியாகிட தேவ் தானே ஸ்ரவ்யாவின் பாட்டனாரின் மகள் வழி பேரன் என்று டீ.என்.ஏ டெஸ்ட் மூலம் உறுதி செய்ததுடன் கடந்த நான்கு வருடங்களாக அவன் கனடாவில் இருந்ததற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தான்.... அதோடு தனக்கே தெரியாமல் தனக்குரித்தான சொத்துக்கள் அனைத்தையும் கையாடல் செய்ததாக பரத் மீதும் திக்விஜயன் மீதும் வழக்கு பதிவு செய்தான்....... அதோடு ஸ்ரவ்யாவும் தன் சொத்துக்களை மீட்பதற்கு பரத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தாள்...

ஸ்ரவ்யாவின் வழக்கில் பரத் தன் தாத்தாவின் உயிலுக்கு எதிராக செயற்பட்டு சொத்தை அபகரித்ததாக தெரிவிக்க அதற்கான விசாரணைகளும் ஆரம்பமாகியது.... ஸ்ரவ்யா தன் வழக்கில் தன் தாத்தாவின் உயில் படி தான் சட்டரீதியாக பரத்தின் மனைவியாகிய போதும் அவனுடன் ஒருவருடம் வாழவில்லை என்று நிரூபித்தாள்..... ஆனால் பரத் தரப்பு வக்கீலோ கேஸை திசைதிருப்ப முயற்சிக்க ஸ்ரவ்யா தரப்பு வக்கீலோ பரத் தான் ஸ்ரவ்யாவை தன் பொறுப்பில் வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் பொய் சாட்சிகள் காண்பித்தே சொத்தை தன் வசப்படுத்தியதாக கூறி அவள் கடந்த நான்கு வருடங்களாக அஜயின் பொறுப்பில் கீழ் இருந்ததற்கான ஆஸ்பிடலில் இருந்த கோப்புக்களை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்தனர்..... அதோடு தன் சொத்தை திக்விஜயனின் பெயரிற்கு மாற்றியமைத்ததையும் ஸ்ரவ்யா தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டிட பரத்தின் தண்டனை வீதம் கூடியது... ஏற்கனவே சிறையில் இருந்தவனுக்கு மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு தண்டப்பணமும் சேர்க்கப்பட்டது..... ஸ்ரவ்யாவின் ஆதாரங்கள் வலுவான ஆதாரங்கள் அவள் சொத்தை மீட்டுக்கொடுக்க உதவியது.... ஸ்ரவ்யாவின் வழக்கு வெற்றிகரமாக முடிந்திட திக்விஜயனும் பரத்தின் தந்தையும் மறுபடியும் தேவ்வையும், ஸ்ரவ்யாவையும் நெருங்க முயன்ற போதிலும் ஏற்கனவே அஜய் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவர்களிடம் நெருங்கவிடவில்லை........ அத்தோடு பரத்தின் தந்தை மீதும் திடீரென போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவாகியிருக்க அவரோட மீளும் வழி தெரியாது திண்டாடிப்போனார்... தற்சமயம் அரசாங்கம் மாறியிருந்தார் இத்தனை நாட்கள் அவளுக்கு மறைமுகமாக உதவிய அரசியல் தலைவர்கள் அனைவரும் அவருக்கு உதவ மறுக்க அவரால் ஏதும் செய்ய இயலாமல் போனது...... பணத்தை கொடுத்து சரிப்படுத்த முயன்றபோதும் ஒரு இடத்தில் பணம் வேலை செய்ய மறு இடத்தில் சரியாக வேலை செய்யாமல் போக இப்பிரச்சினையில் இருந்து மீளும் வழி தெரியாது திண்டாடிப்போனார்... அவளது நிறுவனங்கள் பெரும்பாலானவை சட்டத்திற்கு எதிராக செயற்படுகிறதென்று கூட சீல் வைக்கப்பட அவளது தொழில் சாம்ராச்சியம் ஆட்டம் காண ஆரம்பித்தது.... இதனால் பணபலமும் குறைந்து அரசியல் பலமும் குறைந்தது..

தேவ்வின் வழக்கிலும் உண்மை நிரூபிக்கப்பட்டுவிட சொத்து முழுதும் ஸ்ரவ்யா மற்றும் தேவ்வின் வசம் வந்தது..... அதோடு ஸ்ரவ்யாவின் தந்தை ஸ்ரவ்யாவின் அன்னை மற்றும் தாத்தாவின் மரணத்திற்கு தானும் திக்விஜயனும், பரத்தும் தந்தையுமே காரணமென்று பொலிஸாரிடம் சரணடைந்திட அது ஒரு புதிய வழக்காக பதியப்பட்டு மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.... குற்றங்களின் வீதம் அதிகரித்திட தண்டனைகளின் வீதமும் அதிகரித்திட பரத்,அவன் தந்தை, திக்விஜயன்,மற்றும் ஸ்ரவ்யாவின் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது....

ஸ்ரவ்யாவின் தந்தை சொத்திற்காகவும் பரத்தின் அத்தை ரத்னாவை விரும்பியதாலும் அதற்கு தொந்தரவாக இருந்த தன் தந்தையையும் ஸ்ரவ்யாவின் அன்னையையும் எதிர்க்கத்துணிந்தார்.... அவரிடமிருந்து சொத்தை அபகரிக்கும் எண்ணத்தில் இருந்த திக்விஜயனும் தன் காதலியான ரத்னாவை ஸ்ரவ்யாவின் தந்தையை விரும்புவது போல் நடிக்கச் சொல்ல அவரும் அதற்கு இசைந்து நடித்து சொத்தை அபகரிக்கும் திட்டத்தில் கைகோர்த்தார்.... ரத்னா மீதிருந்த காதலால் ஸ்ரவ்யாவின் தந்தையும் திக்விஜயன் மற்றும் பரத்தின் தந்தையின் ஆட்டுவித்தலுக்கு ஆடத்தொடங்கினர்... அதற்கு முதல் கட்டமாக சொத்தை கேட்டு பிரச்சினை செய்யச்சொல்லி தூண்டிவிட அதுவோ வேறு விதத்தில் முடிந்து சொத்து முழுதும் தேவ்வின் பெயரிற்கும் ஸ்ரவ்யாவின் பெயரிற்கும் மாறியது..... திக்விஜயனே அவர்களது குடும்ப வக்கீல் என்பதால் இவை அனைத்தும் அவனுக்கு தெரிந்திருந்தது.... அதன் பின் ஸ்ரவ்யாவை ஆட்டுவிக்கவேண்டுமென்றால் அவள் அன்னை உயிருடன் இருக்கக் கூடாதென்று திக்விஜயம் கூற ஸ்ரவ்யாவின் தந்தையும் ஸ்ரவ்யாவின் அன்னையை ஆக்சிடன்ட் மூலம் அவரை கொன்றார்...

அதன் பின் ரத்னாவை இரண்டாம் தாரமாக மணந்து கொள்ள திக்விஜயனுக்கு ஸ்ரவ்யாவின் தந்தையை ஆட்டுவிப்பது இன்னும் சுலபமானது.... ஸ்ரவ்யாவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணிய திக்விஜயன் அவளிடம் நல்லவன் வேடம் பூட்டிய அவளும் திக்விஜயனை முழுதாய் நம்பினாள்.... அதானால் ஸ்ரவ்யாவின் நடவடிக்கைகள் அனைத்தையும் திக்விஜயனால் தெரிந்துகொள்ளமுடிந்தது.... அவ்வாறு தான் தேவ் குடும்பம் பற்றியும் அவன் தெரிந்துகொண்டான்....

தேவ்விற்கு இந்த சொத்து விவகாரம் எதுவும் தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டி ஸ்ரவ்யாவிடம் இப்போதைக்கு எதுவும் தெரியவேண்டாமென கூற அவளும் திக்விஜயனின் பேச்சை நம்பி தேவ் விடம் எதையும் தெரியப்படுத்தவில்லை..... இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு தேவ்வை ஸ்ரவ்யாவின் வீட்டிற்கு வரவழைத்த திக்விஜயன் ஸ்ரவ்யாவின் தந்தை மூலம் தேர்வை போலிஸில் பிடித்து கொடுப்பதால் ஒரு நாடகம் நடத்தி ஸ்ரவ்யா பரத்தை மணக்க செய்தான்..... அதன் பின் பரத்தின் அவசரத்தால் அந்த தவறு நடந்த போதிலும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய திக்விஜயன் தற்கொலை முயற்சி நாடகத்திற்கு ஸ்ரவ்யாவை பகடையாக்கி அவளை அவள் தந்தை மூலமாக கொலை செய்ய முயற்சி செய்ய அவளோ அதிஷ்ட வசமாக உயிர்தப்பியதோடு அஜய் அவளை வேறு இடத்திற்கு அழைத்து சென்றிட திக்விஜயனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை..... அந்த நேரத்தில் தான் ஸ்ரவ்யா மனநலகாப்பகத்தில் இருப்பது தெரியவர அதை பயன்படுத்தி ஸ்ரவ்யாவின் சொத்துக்களை பரத்தின் பெயரிற்கு மாற்றியெழுதியதோடு அவனிடமிருந்து சொத்துக்களை தன் வசப்படுத்திக்கொண்டான் திக்விஜயன்.....தேவ்வின் குடும்பம் இறந்துவிட்டதாக போலி ஆதாரம் காட்டி அவன் பெயரிலிருந்த சொத்துக்களையும் தன் வசப்படுத்திட மொத்த சொத்தும் திக்விஜயம் வசமானது..... ஆனால் இது எதுவும் தெரியாத ஸ்ரவ்யாவின் தந்தையோ திக்விஜயன் தனக்காக தான் இத்தனையும் செய்கிறான் என்று எண்ணியிருக்க ஒருமுறை திக்விஜயன் ரத்னாவோடு தனித்து பேசுவதை ஸ்ரவ்யாவின் தந்தை கேட்க நேரிட்டது... அப்போது திக்விஜயன் சொத்து அனைத்தும் தன் வசமிருப்பதாகவும் இனி ஸ்ரவ்யாவை கொன்றுவிட்டு புதுவாழ்க்கையை தொடங்கலாமென ரத்னா விடம் கூற அதை கேட்ட ஸ்ரவ்யாவின் தந்தைக்கு அனைத்து உண்மைகளும் புரிந்தது..... அத்தனை நாட்களாக தன் குடும்பத்தாருக்கு தான் இழைத்தது அனைத்தும் கொடுமையே என்று உணர்ந்துகொண்டவர் ஸ்ரவ்யாவையாவது காப்பாற்ற வேண்டுமென எண்ணியவர் ஸ்ரவ்யாவை தேடிச் சென்றார்....

திக்விஜயனுக்கும் ஸ்ரவ்யாவின் தந்தைக்கு உண்மை தெரிந்துவிட்டதென்ற உண்மை தெரியவர அவரையும் கொலை செய்ய முயற்சிக்கு அவரோ அதற்கு முன் ஹார்ட் அட்டாக்கென்று ஆஸ்பிடலில் படுத்துக்கொண்டார்.... பரத்தின் தந்தை இப்போதைக்கு ஸ்ரவ்யாவின் தந்தையை எதுவும் செய்ய வேண்டாமென கூறிட அவரை விட்டு வைத்தார்..... இந்த நேரத்தில் தான் தேவ் வந்ததும் ஸ்ரவ்யாவை மீட்டதும் நடந்தது..... ஸ்ரவ்யா கதை முடிந்தது என்று எண்ணியிருந்தவனுக்கு ஸ்ரவ்யாவும் தேவ்வும் அஜயும் சேர்ந்து ஆட்டம் காட்டி சிறையில் அடைத்தது விட்டனர்.........

சொத்துக்காக உயிர்களை பலியெடுத்தவர்களுக்கு இன்று சொத்தும் இல்லை..... மரியாதையும் இல்லை....

பணம் என்ற ஒரு வார்த்தை மனிதனை எத்தனை கொடியவனாக மாற்றுகிறது... சொத்துக்காக ஆசைப்படாது திக்விஜயன் ரத்னாவோடு வாழ்ந்திருந்தாலே ஒரு அழகிய வாழ்வை வாழ்ந்திருக்கலாம்... ஆனால் அவனோ அதை செய்யாது இன்று எல்லார் வாழ்விலும் விளையாடிவிட்டு தானும் வாழாமல் சிறை தண்டனை கைதியாய் சிறையிலிருக்கிறான்.....

ஸ்ரவ்யாவின் தந்தை பரமேஸ்வரரும் தனக்கு அமைந்த அழகான மனைவி குழந்தையை கவனிக்க தவறி பொய்யான காதலுக்கு ஏமாந்து தன் குடும்பத்தாரரிற்கு அநியாயம் இழைத்ததோடு பொய்யான உறவுக்காக இன்று உண்மையான உறவுகளை இழந்து தனித்து நிற்கிறார்....

ஒருவரின் தவறான ஆசை அவரை மட்டும் அல்லாது அவரை சார்ந்தவர்களையும் அழிக்கும் என்பதற்கு இவர்கள் இருவருமே உதாரணம்.....

தேவ்வின் காதலாலும் அஜயின் துணையாலும் தனக்கு நடந்த கொடுமைகளுக்கு நியாயம் எட்டிவிட்டாள் ஸ்ரவ்யா.... அனைத்தையும் இழந்தபோதிலும் அவள் மனதிலிருந்த வாழவேண்டுமென்ற பிடிவாதமே அவளை இன்று வரை வாழவைக்கின்றது...இழப்புகளும் ஏமாற்றங்களும் கொடுமைகளும் வாழ்க்கையில் ஏற்படுவது உலக நடப்பு .. ஆனால் அதை எதிர்த்து நின்று போராடுபவர்களுக்கே அது வெற்றியை தரும்..... இல்லையேல் அதன் முடிவு தற்கொலையாக தான் இருக்கும்....

இத்தனை போராட்டங்களை எதிர்த்து நின்று கடந்து வந்த ஸ்ரவ்யாவிற்கு இனி மகிழ்ச்சி மட்டுமே..... இனி எந்த பிரச்சினை வந்தாலும் தேர்வின் துணையோடு அதை அவள் இலகுவில் கடந்து விடுவாள்......

அவள் மட்டுமல்ல எந்த பெண்ணும் தனக்கொரு பிரச்சினை வரும் போது அவள் குடும்பத்தினர் துணையாக இருக்கவேண்டுமென்று விரும்புவாள்.... அவள் குடும்பத்தாரின் ஆதரவே அவளின் பலம்... அது கிடைக்கப்பெறாத பெண்களே இப்போது பலரால் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்கப்பட்டால் உண்மை...

நீ பெண் பிள்ளை என்று மட்டம் தட்டாமல் நீ இந்த சமூகத்தின் ஒரு பிரநிதி என்று புரியவைத்து அவர்களை ஊக்கப்படுத்தினாலே ஒழிய பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் ஒழியாது......

பெண்களின் எழுச்சியே சமூகத்தின் எழுச்சி.... நாமும் எம் பெண் மகவுகளுக்கு தைரியத்தை புகட்டி அவர்களின் எழுச்சிக்கு வழி செய்வோம்....

உன்னால முடியாதுன்னு சொன்னா
நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல
உன்ன……

சவால் ஓயாதே
Look up fly like a plane
Were about to make it rain


சவால் தேயாதே

Bout to spark all the flames
Were back again


சக்க போடு போடு போடு
அச்சங்கள் தேவை இல்ல வா
வெற்றி நடை போடு
உச்சங்கள் தூரம் இல்ல வா
உன்னை நீயே தேடு
நீ இன்றி நாழி இல்லை வா
நம்பி முட்டி மோது வா வா
வா சவால்


சவால் ஓயாதே
சவால் தேயாதே


You can say whatever u want
But we dont fret no
Who you calling a looser boy
We champ you know
We got a dream like martin luther king
Light speed yeah we beam
All we all we all we do is win
We we about to burn up
Put your heads down
When u come around the king
You better learn to bow down
When we get to the ground
Y’ all better run
Coming for the first spot,
Yeah we gone be number 1
Wo won go figure look
Who’s got bigger





வா வா சவால்

ஆறாத காயம் இல்லையே
வெற்றி வெறி ரெண்டும் ஒட்டறை சொல்தான்
திக்காதே
எழுவதை போல வீரம் இல்லையே
உன் பின்னே நீ இருந்தால்
உன்னை வீழ்த்த முடியாதே
கனவுகள் கை சேருமே
மாற்றத்தை மாற்றி காட்டும்
ஆற்றல் ஊரும் உன்னாலே


ஓடு தினம் தினம்
வாழ்வு ரணமே
ஆற்றலை ஆக்க அழிக்க
என்றும் இங்கே முடியாதே



Fire on fire
Making all your vibes expire
Burning up all loosers and haters
Man in the mirror
Took me fly higher
Felt like the whole world
On my shoulder
Then you point the trigger finger
If this is your war,
Man i’m the soldier
Show me my flag,
I’m a flame up fire
Fire fire fire fire fire



இந்த உலகம் ஜெயிச்சிருவேன்
சொன்னா கேட்காது
ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்க்கும்
நீ எது பேசுறது இருந்தாலும்
ஜெயிச்சிட்டு பேசு…(டயலாக்)


கலங்காதே எவனும் இங்கே
அவன் அழவுக்கு புயல் தானே
புது வரலாறு எழுந்து இங்கே
வா வா நீ தானே


வா இந்த நொடி தானே
உன் வாழ்வை மாற்றும் நொடி வா
இந்த வலி தானே
உன் வேகம் ஏற்றும் வழி வா
உன்னை பற்றி பேச ஊடகம்
போட்டி போடும் வா
வென்று காட்டு போதும் வா சவால்



சவால் ஓயாதே


முட்டுக்கட்டை எல்லாம்
முட்டு தரும் முன்னேறு


சவால் தேயாதே


Look up fly like a plane
Were about to make it rain


சவால் ஓயாதே
சவால் தேயாதே


கண்கள் சிப்பி ஆனால்
கண்ணீர் கூட முத்தாகும் சவால்
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:
ஜிஜூ...:love::love: அருமையான கதை...... தேவ் அண்ட் ஷ்ரவ்யா அருமையான ஜோடி... அவங்களோட காதல் அழகு.... கல்லூரி காட்சிகள் எல்லாம் அழகா இருந்துச்சு .....இடையில தேவ் மேல லைட்டா வருத்தம் வந்துச்சு.... பட் அவன் ஷ்ரவ்யா நிலைமையைப் பார்த்து அழும்போது பாவமா போயிடுச்சு.... இந்தக் கதையிலேயே ரொம்ப கஷ்டப்பட்டது ஸ்ரவ்யா தான்....... எனக்கு செம கோவம் வந்துச்சு உங்க மேல...( ஆனா சொல்லல...ஈஈஈஈ) ஒரு பொண்ணு எப்பவும் நம்பியிருக்கிறது அவளுடைய குடும்பத்தை தான் அந்த குடும்பமே அவளுக்கு துரோகம் பண்ணினா? அப்புறம் அவளோட அப்பா அப்பான்னு சொல்வதற்கே தகுதி இல்லாதவர்... அவரோட வார்த்தைகள் தேள்கொடுக்க விட கூர்மையா இருந்துச்சு ....விட்டா நான் கதைக்குள்ள போயி அவர போட்டு தள்ளி இருப்பேன்.... லாஸ்ட் ல ஹாஸ்பிடல்ல வச்சு ரொம்ப நல்லவர் மாதிரி அவர் பேசின டயலாக் பார்த்ததும் செம காண்ட் ஆகிவிட்டேன்..... பண்றதெல்லாம் பண்ணிட்டு லாஸ்ட் மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா???? அப்புறம் சொத்துக்காக ஆசைப்பட்டு ஜெயில்ல களி திங்கிற கோஷ்டிகளுக்கு பெரிய கும்பிடு....ப்பா... எவ்ளோ ஹார்ட் வொர்க் பண்ணியிருக்காங்க.... இந்த பொழப்புக்கு நீங்க பிச்சை எடுத்து சாப்பிட்டு இருக்கலாம்.... அப்புறம் கடைசிவரை ஒரு நண்பனா கூடவே இருந்த அஜய் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அவனோட ஜோடியும் சூப்பர்..... அப்புறம் கதையில் வந்த சாங்ஸ் எல்லாமே ரொம்ப ரொம்ப அழகாா இருந்துச்சு ஜிஜு..... என்னடா ரொமான்ஸ் இல்லைன்னு நினைச்சேன் லாஸ்ட்ல லைட்டா ரொமான்ஸ கண்ல காட்டினதுக்கு கோடான கோடி நன்றிகள்......:LOL:;)
மென்மேலும் வளர என் உளமார்ந்த வாழ்த்துக்கள் ஜிஜு?????
 
அருமையான கதை; நல்ல முடிவு. கவிதைகள் அத்தனையும் superb (y) (y) (y)
 
Top