Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 25

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 25

காவேரியிடம் தம்பியை விட்டு செல்லும் ரூபனுக்கு," அண்ணா என்ன விட்டு போகாதண்ணா , நான் இனி அடம் பிடிக்கமாட்டேன், அழுக மாட்டேன், என்னையும் கூப்பிட்டு போ , அம்மா மாதிரி நீயும் என்ன விட்டு போகாத அண்ணா " என்று கதறும் ருத்ரனின் வார்த்தைகள் இதயத்தை யாரோ இறுக்கி பிடிப்பது போல் இருக்க, திரும்பியும் பாராமல் தம்பியின் கைகளை உதறி விட்டு சென்றுவிட்டான்.

ரூபன் போவதை பார்த்தவாறே கதறும் ருத்ரனை காவேரி தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டாள் . " எனக்கு யாருமே இல்லையே " என்று விவரம் தெரியும் முன்னே கதறும் அந்த குழைந்தைக்கு," உனக்கு அம்மா நான் இருக்கேன் சாமி , உனக்கு இன்னொரு அண்ணன் இருக்கான் ... அழுவாத சாமி " என்று தான் ஈன்றெடுக்காத மகனை தன் வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

பள்ளியில் இறுதியாண்டு படிக்கும் சிவாவிற்கு, தன் அன்னையின் முந்தானை பிடித்து கொண்டே சுற்றும் ருத்ரன் மீது தனி பிரியம் உண்டு. அன்னையிடம் ஒட்டிக்கொள்ளும் அந்த சிறுவன், சிவாவை பார்த்தால் மட்டும் ஒதுங்கி போய் விடுவான்.

தினமும் ருத்ரனை தன் மிதிவண்டியில் ஏற்றி கொண்டே பள்ளிக்கு செல்லும் சிவா, அன்று ," என் கூட பேசாத யாரும் என் கூட ஸ்கூலுக்கு வரவேணாம் " என்று சுவரை பார்த்து கூற.

காவேரி சிரிப்பை மறைத்து கொண்டு , " யாரை தம்பி சொல்லுற?, உன்கூட வரது.....நம்ம ருத்ரனையா சொல்லுற "

ருத்ரன் அனைத்தயும் கேட்டு கொண்டு தலை குனிந்து நின்று கொண்டிருந்தான்.அவனை அப்படி பார்த்த காவேரிக்கு தாங்க முடியாமல் ,"ஏன் சாமி , சிவாவும் உன் அண்ணனை மாதிரி தான் கண்ணு ... அவன்கிட்ட உனக்கு என்ன சாமி கூச்சம் " என்றவருக்கு பதிலாய் விசும்பல் சத்தமே கேட்டது.

அதை பார்த்த காவேரி," அய்யயோ அழுவாத சாமி ... இனி உன்னை ஒன்னும் கேட்கமாட்டேன் , தம்பி புள்ளைய அலுவ வைக்காம , ரெண்டு பேரும் வெரசா பள்ளி கூடத்துக்கு கிளம்புங்க " .

ஆனால் இன்று இதை விட்ட சிவா , இதை மொத்தமாக விட தயாராக இல்லை. ருத்ரனை கூர்ந்து கவனிக்க தொடங்கினான்.

அன்று பள்ளியில் மரத்தடியில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த சிவா கண்ணில் ருத்ரன் யாரிடமோ சண்டை போட்டு கொண்டிருப்பது தெரிய, வேகமாக அவர்களை நெருங்கினான்.

பக்கத்தில் நெருங்கியவனின் செவிகளில், " நான் ஒன்னும் பொய் சொல்லல, எங்க அம்மா சொல்லுச்சு , நீ ராசி இல்லாதவனாம் .... நீ பிறந்ததும் உன் அப்பா செத்து போச்சாம்... வளரும் போது உன் அம்மா செத்து போச்சாம் , அதான் உன் அண்ணனும் நீ வேணாம்னு விட்டு போய்டுச்சாம் "என்று கூறிய அந்த பயனின் சட்டையில் இருந்து கையை எடுத்த ருத்ரன், தரையில் சரிந்து குத்துக்காலிட்டு,அதில் தன் முகத்தை மறைத்து கொண்டான்.

அதை பார்த்த சிவா , வேகமெடுத்து ருத்ரனை நெருங்கி , அந்த பையனின் காதை திருகினான்,சிவாவிடம் இருந்து விடு பட்டு அந்த சிறுவன் ஓடி மறைய ,ருத்ரன் முன் மண்டியிட்டான். முகத்தை மறைத்தவாரே ," நான் ராசி இல்லாதவன்.." என்பதையே உளறி கொண்டிருந்த ருத்ரன் காதில் ," அப்போ நானும் ராசி இல்லாதவன் தான் ..." என்றதும் நிமிர்ந்து பார்த்த ருத்ரன் ," நான் அப்பாவை பார்த்தது கூட இல்ல " என்றான்.
" எனக்கு அப்பா இருந்தும் கூட இல்ல " சிவா.
" அம்மாவும் இப்போ இல்ல " என்றவனை முறைத்த சிவா ," அப்போ காவேரி அம்மா யாரு ?" என்றான் .
அதற்கு பதில் கூறாமல்," அண்ணா என்ன விட்டுட்டு போய்ட்டான் " என்றவனுக்கு பதிலாய் ," எனக்கு தம்பியே இல்ல ... இப்போ வந்துருக்குற என் தம்பிக்கு என்ன புடிக்கலை , அப்போ நான் தான ராசி இல்லாதவன்?" என்றான் சிவா.

அதற்கு ருத்ரன்,"புடிக்கும் " என்பதை கேட்ட சிவா, " என்ன புடிக்கும் ?" .
" உங்கள எனக்கு முன்னமே தெரியும், அப்போவே உங்கள எனக்கு புடிக்கும் " ருத்ரன்.
" அப்போ ஏன் என்கிட்டே பேசமாட்டேங்குற ?" என்ற சிவாவிடம் ," எனக்கு எங்க அம்மாவை ரொம்ப புடிக்கும் அவங்க என்கூட இல்ல, அடுத்து ரூபன் அண்ணாவை அவ்ளோ புடிக்கும் அவங்களும் என வேணாம்னு போய்ட்டாங்க, உங்களுக்கும் என்ன புடிக்காம விட்டுட்டு போய்ட்டிங்கனா?" என்றவனை பார்த்த சிவா ," நீயே போக சொன்னாலும் உன்ன விட்டுட்டு நான் எப்பவும் போகமாட்டேன்.... " என்ற சிவாவுக்கு பதிலாய் ," ப்ரோமிசா வா ?" என்ற வார்த்தைக்கு தன் தலையில் கை வைத்திருந்தான் சிவா.

அன்றிலிருந்து ருத்ரனிற்கு அண்ணனாக, ஆசானாக,தோழனாக , தந்தையாக மாறி போனான் சிவா.
-------------------
ரூபன் @ ராகேஷ் மும்பையில் தனது வாழ்க்கையை பொருத்தி கொண்டான். தனது படிப்பை தொடர்ந்து கொண்டு, ஒரு வக்கீலிடம் ஜூனியர்ராக சேர்ந்து கொண்டான்.

இவை அனைத்திற்கும் மத்தியில் , பிறைசூடனை கண்காணிக்கவும் மறக்கவில்லை. இதுவரை அவன் அறிந்து கொண்டது , கபூர் குழுமத்தின் தற்போதைய உரிமையாளர் பிறைசூடன் தான். ராஜ் கபூர் சமீபத்தில் உடல்நிலை சரி இல்லாமல் போக , அவர் இறந்ததும் , கபூர் குழுமம் பிறைசூடன் கையில், இன்னும் பெரிய உயரத்திற்கு சென்றுவிட்டது என்பதே . தன்னை போல சாதாரணப்பட்டவனால் அவனை நெருங்க கூட முடியாது என்று அறிந்து கொண்டான்.

ஆனால் பிறைசூடன் மகனை நெருங்குவது, மிகவும் எளிதான காரியம் என்றும், பிறைசூடன் தன் ஒரே மகன் ரிஷிவந் கபூர் மீது உயிரையே வைத்திருக்கிறான் என்பதும் தான் ராகேஷ் அறிந்து கொண்ட விஷயங்கள்.

'தான் எப்படி தன் குடும்பத்தை இழந்து தவிக்கிறேனோ அதே போல் பிறைசூடனும், அவன் மகனை இழந்து துடிக்க வேண்டும்' என்று எண்ணினான். அதற்காக ரிஷிவந்தை பின் தொடர்ந்தான் . இப்பொது தான் கல்லூரி சேர்ந்திருக்கும் இளைஞனான ரிஷியிடம், இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை . தினம் இரவு குறிப்பிட்ட கிளப்புக்கு சென்று தண்ணி அடிப்பது அவனது வழக்கம்.

அன்றும் அது போல குடித்துவிட்டு எழ முடியாமல் இருந்தவன் , தத்தி தடவி எழுந்து சென்றவனின் கார் சாலையின் ஓரம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவன் பின்னே வந்த ராக்கி அவனை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து , அவனது அலைபேசியில் முதல் அழைப்புக்கு அழைத்து தகவல் தெரிவித்தான். அதை கேட்டு ஓடி வந்த ராம் " ரொம்ப தாங்க்ஸ் சார் ...இனி நான் அவனை பத்துக்கறேன் " என்றவன் " நீங்க?" என்று கேட்டான் .

" ராகேஷ்,லாயர் " என்றதோடு அங்கிருந்து நகர்ந்து விட்டான், ராமும் அதை பெரிதாக கவனிக்கவில்லை.

ஒரு வரம் சென்று, கேஸ் விஷயமாக ஒரு குறிப்பிட்ட ஹோட்டலுக்கு சென்றிருந்த ராகேஷ், அங்கு உணவு அருந்தி கொண்டிருந்த ரிஷி மற்றும் அவனது நண்பனை பார்க்க நேரிட்டது. ராம் ," அங்க ஒருத்தர் பேசிட்டு இருக்காரு பாரு , பிளாக் ஷர்ட் .... அவர் தான் மச்சி உன்ன ஹாஸ்பிடல் சேத்து , எனக்கு கால் பண்ணி சொன்னாரு "என்றான்.

ராகேஷ் அருகில் வந்த ரிஷி ," ஹலோ சார் , ஐ அம் ரிஷிவந் கபூர் , ரொம்ப நன்றி சார்.... அன்னைக்கு காப்பாத்துனதுக்கு ".

" ராகேஷ் " என்று கைகுலுக்கியவன் " காப்பாத்திட்டு அட்வைஸ் பண்றதா நினைக்க வேணாம்.... இந்த வயசுல இந்த பழக்கம் நல்லது இல்ல... ஆனா பெரிய இடத்து பசங்களுக்கு இது சாதாரணம் " என்றபடி ரிஷியை மேலும் கீழும் பார்த்தான் ராக்கி.

ஏனோ தான் பணக்காரன் என்று தெரிந்தும் சாதரணமாக பழகும் ராக்கியை ரிஷிக்கு மிகவும் பிடித்துவிட்டது . சார் என்ற வார்த்தை பய்யா என்று மாறும் அளவுக்கு இருவரும் நெருங்கி இருந்தனர். இரவு கிளப்பில் தண்ணியடித்து மயங்கி இருக்கும் ரிஷியை தன் வீட்டிற்கு தூக்கி வரும் ராக்கியும் , அதை காலை எழுந்து சாதாரணமாக எடுத்து கொண்டு கல்லூரி கிளம்பும் ரிஷியும் பார்ப்பவர்களுக்கு அண்ணன் தம்பியாகவே தோன்றும்.

அன்றும் அது போல் குடித்துவிட்டு மயங்கிய ரிஷியை தூக்கி வந்தான் ராக்கி. காலையில் எழுந்த ரிஷி தான் இருப்பது பழைய கட்டிடம் போல் தோன்ற , எழ முயன்றவனால் முடியவில்லை, அவனை யாரோ நாற்காலியில் கயிற்றால் கட்டி வைத்திருந்தனர்.

சுற்றி பார்த்த ரிஷியின் கண்ணனுக்கு உள்ளே வந்து கொண்டிருந்த ராக்கி பட்டதும் ," பய்யா ... சீக்கிரம் என் கட்ட கழட்டுங்க, இங்க இருந்து வெளிய போயிரலாம் " ரிஷி .

" எதுக்கு ?" ராக்கி .

ராக்கி எந்த படபடப்பும் இல்லாமல் இருப்பதும், அவனது பேச்சும் குழப்பத்தை ஏற்படுத்த புரியாமல் பார்த்தான் ரிஷி.

" புரியலையா, உன்ன கடத்துனதே நான் தான் " ராக்கி .

" ஓஹ் ... அப்போ நீங்களும் காசுக்காக தான் என்கிட்டே பழகிருக்கீங்க?" என்ற ரிஷியை இடைமறித்தான் ராக்கி .

" காசு .... அது இல்லாம நான் வாழ்ந்துருவேன், ஆனா நான் இழந்ததா உன் அப்பனால திருப்பி தர முடியுமாடா ?" என்றான் ராக்கி.

புரியாமல் பார்த்த ரிஷியிடம்," என் குடும்பத்தை உன் அப்பனை திருப்பி தர சொல்லு, அந்த சந்தோசத்தை , நிம்மதிய திருப்பி தருவானாடா உன் அப்பன் ?" .

" உன் அளவுக்கு காசு இல்லாட்டியும் , நிம்மதியான வாழ்க்கைய தாண்டா வாழ்ந்துட்டு இருந்தேன்... எல்லாத்தையும் என்கிட்டே இருந்து பறிச்சுடான்டா உன் அப்பன் " என்று கோவத்தில் கத்திய ராக்கியை இமைக்காமல் பார்த்தான் ரிஷி.

" அதான் அதுக்கு பழிவாங்குறதுக்காக.... பாஷை தெரியாத ஊர்ல, முட்டிமோதி முன்னேறுனேன் " என்றவன்," உன்ன தான் உன் அப்பனுக்கு ரொம்ப புடிக்குமாமே, கபூர் குழுமத்தோட எதிர்காலமே நீதானமே , நீ இல்லைனா அவன் செத்துருவனமே... அதுக்கு தான்... வாழும் போதே சாவனும் ... அதுக்கு நீ உயிர விடணும் " என்று கூறி சிரித்தான் ராக்கி .

இதை எல்லாம் கேட்ட ரிஷி," இப்போ இல்லேன்னாலும் அவன் சீக்கிரமே செத்துருவான் " என்றான்.

அதை கேட்டு புருவம் சுருக்கிய ராக்கியை பார்த்த ரிஷி, " என்னடா பெத்த அப்பாவ , இப்படி பேசுறேன்னு பாக்கறியா , நீ சொன்னியே கபூர் குழுமத்தின் எதிர்காலம் குடிச்சே கெட போகுது, எனக்கு தெரிஞ்ச விதத்துல நான் பழிவாங்கிட்டு இருந்தேன்... இப்போ நீயே அவரை பழிவாங்குறதுக்கு நல்ல யோசனை சொல்லிருக்க, எனக்கும் இந்த நரகத்துல இருந்து விடுபட்டு நிம்மதி கிடைச்சுரும் " என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தான் ராக்கி .

தொடரும்......
 
Top