Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 23

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 23

30 வருடங்களுக்கு முன்.....

பூஞ்சோலை கிராமத்தின் பன்னை குடும்பங்களின் ஒன்று ராமசாமி அய்யாவின் குடும்பம். ராமசாமி அய்யா - ராசாத்தி அம்மாள் ஒரே மகள் காவேரி. அந்த காலத்திலே மகளை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்பது ராமசாமி அய்யாவின் ஆசை, ஆனால் அவர் மனைவிக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை."பொட்ட புள்ளைய மெத்த படிக்க வெச்சா அதுக்கு ஏத்த மாப்பிள்ளையா எங்க போய் தேடுவீக?".

" என்ற புள்ளைக்கு ராசா மாதிரி மாப்பிள்ளையா தான் வே நா பாப்பேன் , ராசாக்கு ஏத்த ராணியா என்ற புள்ள மெத்த படிச்சுருக்கோணும்ல" என்றவர் மகள் விருப்பப்படி மதுரையில் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

தினம் மதுரைக்கு பேருந்தில் சென்று வரும் காவேரியின் கண்களில், ஆறடிக்கும் மேல்,புல்லெட்டு வண்டியில் வரும் பிறைசூடன் மீது காதல் ஏற்பட்டது. பட்டாளத்தான் என்ற வார்த்தையிலே ஒழுக்கமும் மரியாதையும் தானாக ஒற்றி கொள்ளும் என்ற எண்ணம் கொண்ட கிராமத்து மக்களில் காவேரியும் ஒருத்தி .

போகும் இடத்தில் எல்லாம் பிறைசூடனை ஆர்வமாய் பார்க்கும் காவேரியை பிறைசூடனும் பார்த்துதான் இருந்தான். கிராமத்தில் அணைத்து பெண்களுக்கும் ஹீரோவாகி போன பிறைசூடனுக்கு காவேரி நூறில் ஒன்றாக தோன்றினாள்.

அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்த ராமசாமி அய்யாவின் குடும்பத்துக்கு பட்டம் கட்டி , மற்றவர்கள் கொடுத்த மரியாதையை பார்த்த பிறைசூடன் கண்கள் , முதல் முறையாக காவேரியை ஆர்வமாக பார்க்க தொடங்கியது.

அருகில் உள்ள நண்பனிடத்தில் , " யாரு டா அவரு? என்ற பிறைசூடனிடம் ," அவரு மதுரை ஜில்லாவுல பெரிய மனுஷன், கோடிக்கணக்குல சொத்து இருக்கு, கஷ்டம்னு போய் நிக்குறவங்களுக்கு இல்லனு சொல்ல மாட்டாரு, கோவிலுக்கு நெறய நன்கொடை கொடுத்தவரு, பக்கத்துல பூன்சோலை கிராமத்து பண்ணையகாரக " என்று அவனுக்கு தெரிந்த தகவலை கூறினான்.

அடுத்த நாள் ராமசாமி அய்யா உரக்கடையின் முன் நின்றான் பிறைசூடன்." பெரியய்யா இருக்காகலா?" என்று முன்னே இருப்பவரிடம் விசாரித்தான், " அய்யா இனி தான் வருவாக , நீங்க ஆரு ... தெரிஞ்ச முகமா தெரிலயே ?" என்றவருக்கு பதிலாய் , " நமக்கு சொந்த ஊரு திருச்சி பக்கமுங்க, பட்டாளத்துல வேல பாக்குறேன், இங்கன மாமா வீட்டுல சோழியா வந்தேனுங்க, வீட்ல சும்மா இருக்க முடியல, அதான் ஏதும் வேலை பாக்கலாம்னு இருக்கேன் ". என்றவன் பதில் முடியும் போது உள்ளே நுழைந்தார் ராமசாமி அய்யா.

" என்னவே தர்மா , சோழிய பாக்காம அங்கன என்ன பேச்சு ?" என்றவரிடம் ," அய்யா , தம்பி உங்கள பாக்க தான் வந்துருக்குதுங்க ... அதான் விசாரிச்சுக்கிட்டு இருந்தேன் ".

"சாயல பாத்தா நம்ம ஊரு இல்லியோ, தம்பி எந்த ஊரு " என்றவற்கு , தன்னை அறிமுக படுத்தியவன் ," ஏதும் வேல இருந்தா குடுங்கய்யா , எல்லா வேலையும் செய்வேன், இன்னும் முழுசா ரெண்டு மாசம் விடுப்பு இருக்குதுய்யா " என்றவன் பட்டாளத்தான் என்றதுமே அவர் கண்ணில் மரியாதை கூடியது.

" தம்பிக்கு கணக்குவழக்கு பாக்க தெரியுங்களா ?" ராமசாமி அய்யா கேட்டதற்கு தலை ஆட்டினான் பிறைசூடன்.

" தர்மா நாம வரவுசெலவு கணக்கா இவரு பாக்கட்டும் , கணக்குக்கு ஒத்தாசையா வெச்சுக்க சொல்லு " என்றவர் அங்கிருந்து சென்றிருந்தார்.

இப்படி உள்ளே நுழைந்த பிறைசூடன், கணக்கு முடித்து தினம் பெரியவர் வீட்டிற்கு சென்று கொடுத்துவர, காவேரியுடன் காதல் மலர்ந்தது.
நாளொரு பார்வையும், பொழுதொரு பேச்சுமாக இருவர் காதலும் வளர்ந்தது.

பிறைசூடன் விடுப்பு முடிய , பத்து நாட்களே மீதம் உள்ள நிலையில் காவேரியிடம்," இன்னும் பத்து நாள் தான் காவேரி இருக்கு, அடுத்து உன்ன எப்ப பார்க்கபோறேனோ " என்றவனுக்கு தேறுதல் சொல்லும் விதமாக, " அடுத்த விடுப்புக்கு ஊருக்கு வந்து, அய்யா கிட்ட நம்ம கல்யாணத்த பத்தி பேசுங்க அத்தான் ... அப்படியே உங்க கூட என்னையும் கூப்பிட்டு போயிருங்க " .

" விவரமில்லாம பேசாத காவேரி,என் வசதி என்ன , உன் வசதி என்ன?, நா வந்து அய்யாகிட்ட பேசுனா சம்மதிப்பாகலா " பிறைசூடன்.

" ஐயா வசதிலாம் பாக்கமாட்டாக, குணத்த தான் பாப்பாக .. உங்களுக்கு கேட்க முடியாட்டி , நா பேசுதேன் அய்யாகிட்ட " காவேரி .

" இல்ல காவேரி, எனக்கு என்னவோ இது நடக்குமுன்னு தோணல, இந்த காதல் என்னை போல ஏழைகளுக்கு எப்பவுமே ஒரு சாபக்கேடு தான், நாங்களா ஆசை படவே கூடாது, நீ என்ன மறந்துறது தான் நல்லது " பிறைசூடன்.

" அத்தான் , அப்படியெல்லாம் சொல்லாதீங்கத்தான்... உங்கள விட எனக்கு எதுமே பெருசில்ல, இப்போவே போறேன் .. ஐயா கிட்ட பேசி நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன். " என்றவளை இடைமறித்தான் பிறைசூடன்.

" ஒரு வேல அய்யா சம்மதிக்கலைனா , என்ன விட்டு போயிருவிய காவேரி " என்றவனை பிடித்து கொண்டு ," ஐயோ, என்ன பேச்சுத்தான் பேசுறீங்க, நீங்க தான் எனக்கு முக்கியம், ஐயா சம்மதிக்கலைனாலும் உங்கள மட்டும் தான் நான் கட்டிப்பேன் ".

" அப்போ வா காவேரி, மீனாட்சி அம்மன் கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம் , என்னால நீ இல்லாம வாழவே முடியாது, நீ ஐயா கிட்ட கேட்டு , அவர் சம்மதிக்கலைனா என்னால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது காவேரி , உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண என்னால முடியாது காவேரி " பிறைசூடன்.

" ஐயா கண்டிப்பா என் ஆசைக்கு குறுக்க நிக்க மாட்டாக அத்தான் ... நீங்க இப்படி ஏன் யோசிக்கிறீங்க " என்றவளை ஏதேதோ சொல்லி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் , ஊருக்கு வெளியே உள்ள ஒரு சிறு கோவிலில் திருமணம் முடித்து இருவரும் பூன்சோலை ராமசாமி அய்யா வீட்டின் முன் நின்றனர்.

ராமசாமி அய்யா மகளின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மகள் முகத்தில் கூட விழிக்காமல் போய் விட்டார் என்றால் ராசாத்தி அம்மாள் புலம்பியே தன் கோவத்தை கொட்டிக்கொண்டிருந்தர்.

" ஆசை ஆசையாய் அருமை பெருமையா உன்ன வளத்து , இப்புடி அவுகமேல கரிய பூசிட்டியே வே , பொட்டபுள்ளய பொட்ட புள்ளையா பாக்காம ,உனைய ராணி போல வளத்தவரை , இந்த பயலுக்காக அசிங்க படுத்திட்டியே வே ...போ போயிரு, நாங்க செத்தா கூட எங்க முகத்துல முழிக்காதவே " என்று சொல்லோடு சென்றுவிட்டார்.

வாசலில் நின்று தன் வளர்ந்தவீட்டை பார்த்த காவேரிக்கு, தாயின் சுடு சொல்லை விட தந்தையின் பாரா முகம் மிகுந்த வேதனை அளித்தது. தனக்கு பிடித்த வாழ்க்கை தான் பெற்றோர் ஆசிர்வாதமில்லாமல் கசந்துபோனது.

பெற்றோரை நோகடித்தது போதுமென்று அன்றே ஊரைவிட்டு போக வேண்டும் என்ற காவேரியின் பிடிவாதத்துக்கு முன் பிறைசூடனின் சமாதானம் செல்லுபடி ஆகவில்லை.

திருச்சிக்கு காவேரியுடன் வந்து இறங்கினான் பிறைசூடன். அவன் திட்டம் எல்லாம் தவறி போனதில் எரிச்சலுற்றிருந்தான் . ராமசாமி அய்யாவிடம் பெண்கேட்டால் நிச்சயம் சம்மதிக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த பிறைசூடன் காவேரியை தூண்டி திருட்டு கல்யாணம் செய்து கொண்டான். திருமணம் முடிந்தால் வேறு வழி இல்லாமல் தன் ஒரே மகளை ஏற்று கொள்வார்கள், பிறகு இந்த கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசாகிவிடலாம் என்ற கனவு கோட்டையை ராமசாமி தகர்த்து எறிந்தார் என்றால், அவரது மகள் இனி தன் பெற்றோரின் முகத்தில் விழிக்கும் அருகதை தனக்கில்லை ,அவர்களே மன்னித்தாலும் நான் செய்த துரோகத்தை நான் மறப்பதாக இல்லை என்று பெரும் அணுகுண்டை தன் கனவு கோட்டையில் போட்டு தகர்த்து எரிந்துவிட்டால்.

சொத்துக்காக காதலித்த பிறைசூடனின் காதல் நாளுக்கு நாள் குறைந்து காணாமல் போனது. இதை அறியாத காவேரி கணவன் பட்டாளத்தில் இருந்தாலும் பாசம் குறையவில்லை என்ற எண்ணத்துடன் மகன் வரவையும், மகனை பார்க்க வரும் கணவனின் வருகையையும் எண்ணி கனவில் மிதந்து கொண்டிருந்தாள்.

மகன் வந்தானே தவிர பிறைசூடன் வரவில்லை. தினம் காவேரி எழுதும் கடிதம் கணவனை எட்டியதா என்றும் தெரியவில்லை. பச்சை குழந்தையுடன் போராடி கொண்டிருந்த காவேரிக்கு உறுதுணையாய் பெற்றவர்கள் வந்தனர்.

மகளை மன்னிக்க மனமில்லை, அதற்காக பச்சைப்பிள்ளையுடன் தனித்திருக்கும் மகளை விடவும் முடியாமல் ஓடி வந்தனர் பெரியவர்கள். மகளின் துரோகம் பேரனின் முகத்தை பார்த்ததும் மறந்து போனது தான் விந்தை. பல முறை அழைத்தும் தன் பெற்றவர்களுடன் செல்ல மறுத்தாள் காவேரி.

மகன் பிறந்து ஒருவருடம் கழித்து மனைவி மகனை பார்க்க வந்தான் பிறைசூடன். மனைவி மேல் காதலை பொழிந்து ,மகனை வாரி அணைத்து ' வருடம் ஒரு முறையே தனக்கு விடுப்பு கிடைக்கும் என்றும், கிடைத்ததும் ஓடி வருவதாக மனைவியை நம்பவைத்தான்.

காவேரியும் பிரைசூடன் எழுப்பிய கனவு கோட்டையிலே வாழ தொடங்கினாள்.

தொடரும்........
 
Top