Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 20

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 20

திருமணத்திற்கு முதல் நாள் பெண் வீட்டார்கள் மண்டபத்திலும், மாப்பிள்ளை வீட்டாருக்கு மண்டபம் அருகில் உள்ள கெஸ்ட் ஹௌஸிலும் தங்குவதற்கு இடம் ஒதுக்க பட்டிருந்தது.

அனைவருக்கும் இரவு உணவு மண்டபத்தில் என்பதால், தங்கள் திட்டத்தை அப்போது செயல் படுத்த காத்து கொண்டிருந்தனர் தோழிகள். அதே நேரம் ருத்ரன், " எங்க இருக்கீங்க, மண்டபத்துக்கு வந்துடீங்களா?, அப்போ சாப்பிட்டு மாடிக்கு வாங்க சிவா அண்ணா பத்தி நீங்க கேட்டத கொண்டு வந்துட்டேன் " என்றான் .

பிறைசூடனும்," எங்கடா இருக்கீங்க, சாப்பாடு நேரம் முடிஞ்சதும்,நான் சொன்னதை செஞ்சு முடிச்சுட்டு , மிச்ச பணத்தை வாங்கிக்கோங்க " என்று தன் அலைபேசியில் உறுமி கொண்டிருந்தார்.

ராம் , ராகேஷ் , ரிஷி மூவரும் உணவு உண்ண , மண்டபம் அடைந்தனர். அதை பார்த்த சாரா , தங்கள் அறைக்குள் நுழைந்து ," லே உள்ள வந்துட்டாங்க ".

"அப்போ நாமளும் சாப்பிட போகுற டைம் வந்துருச்சு " என்றவாறு கிளம்பிய துர்வா , சாந்தினியிடம் ," பிளான் நியாபகம் இருக்குல்ல சாண்டி , நீ சொதப்பின அப்பறம் அவ்வளோ தான் நம்ம வாழ்க்கை " என்றதோடு மூவரும் உணவு உண்ண சென்றனர்.

அங்கே பிறைசூடன் ,"என் PA கிட்ட யாரை தூக்கணும்னு சொல்லிருக்கேன் , அவன் உங்களுக்கு ஆள் யாருன்னு காட்டுவான் , நீங்க வந்ததும் அவனே உங்கள்ட பேசுவான் , சந்தேகம் வராம பார்த்துக்கோங்க " என்றவாறு அழைப்பை துண்டித்தார்.

மண்டபத்தினுள் நுழைந்த ஆதி & கோவை வரவேற்க அங்கு யாரும் இல்லை,உள்ளே நுழைந்தவர்கள் யாருக்கும் சந்தேகம் வராதவாறு மண்டபத்தின் பின் பக்க இருளில் மறைந்து நின்றனர்.

கீழே இறங்கி வந்த தோழியர் மூவரும் ரிஷி மற்றும் நண்பர்களுக்கு எதிரில் அமர, அங்குள்ள இளசுகளுக்கு அதுவே கேலி கிண்டலுக்கு வழிவகுத்தது. இதில் எதிலும் மணமக்கள் கலந்து கொள்ளவில்லை.

ரிஷியும் நண்பர்களும் உண்டு முடித்து எழுவதற்காகவே காத்து கொண்டிருந்த தோழியர் , அவர்களை பின் தொடர்ந்து கை கழுவ சென்றனர்.
இதனை பார்த்த விஷ்வாவிற்கு மனதில் நிம்மதி எழுந்தது என்றால் , ஆதிக்கு காதில் இருந்து புகை வர தொடங்கியது.

ரிஷி மற்றும் நண்பர்களுக்கு காபி கொண்டு சென்ற பெண்மணியின் மேல் இடித்த சாந்தினி," அய்யயோ அத்தே கீழ கொட்டிருச்சே, இருங்க உங்களுக்கு நானே வேற எடுத்துட்டு வாரேன்" என்று நகர போனவளை தடுத்தவர் ," எம்மாடி மருமகளே,ரொம்ப தெளிவு டி நீங்க , உங்க மாப்பிள்ளைக்கு கொண்டு போறேன்னு தெரிஞ்சே தள்ளிவிட்டுட்டு , இப்போ என்னமா நடிக்குற, பொழச்சுக்குவீங்கதா " என்றவர் , " நீயே போய் , உன் வீட்டுக்காரனுக்கு குடு " என்றவாறு புரளியை கிளம்பிவிட நகர்ந்தார்.

அதை சட்டை செய்யாத சாந்தினி," தாங்கள் தயார் செய்து வைத்த போதை மாத்திரை கலந்த கோப்பையை எடுத்து கொண்டு கண்ணனிடம் கொடுத்து , மாப்பிளைக்கு கொடுக்க சொல்லி அனுப்பிவைத்தாள் ".

இதை கண்ணில் கொலை வெறியுடன் பார்த்து கொண்டிருந்த ஆதி , வேகமாக கண்ணனின் பின் சென்று , " என்ன தம்பி யாருக்கு காபி?, நாங்க எடுத்துக்கலாமா ?" என்று கேட்டவாறே அவனிடம் அதை பறித்து சென்றான்.

மண்டப வாயிலில் தன் அண்ணன் அனுப்பிய ஆட்களுக்காக காத்திருந்த ருத்ரன், உள்ளே நுழைந்தவர்களை பார்த்ததும், " என்ன இவளோ லேட் , சீக்கிரம் வாங்க யாரும் பார்க்கறதுக்கு முன்ன பின் வாசல் வழிய மாடிக்கு போயிடலாம் " என்றவாறு பிறைசூடன் அனுப்பிய ஆட்களை அழைத்து சென்றான்.

ராகேஷ் ," அவன் அப்போவே மாடிக்கு வர சொன்னான், இப்போ ஆள் நடமாட்டம் கொறஞ்சுருக்கு , போனா கேட்க வேண்டியதை கேட்டு கிளம்ப சரியாய் இருக்கும் " என்று கூறி மேலேறி சென்றனர் மூவரும் .

அவர்களுக்காகவே காத்திருந்த ருத்ரன் , " இதுல சிவா அண்ணா இந்த வாரம் சைன் பண்ண ப்ராஜெக்ட் டீடைலாம் இருக்கு " என்று ஒரு கோப்பு நீட்டினான்.

அதை கையில் பிரித்து ராகேஷ் படித்து கொண்டிருக்க,ரிஷி ," எப்படி இருக்க ருத்ரா ?" என்றவன் மேலே என்ன கூறி இருப்பனோ ,தலையில் விழுந்த பலத்த அடியில் மயங்கி சரிய தொடங்கினான் , அருகில் ராகேஷ் மற்றும் ராமிற்கும் அதே நிலைமை தான் . அதை பார்த்து கொண்டிருந்த ருத்ரன் ," ம்ம்ம் சீக்கிரம் , யாரும் வரதுக்குள்ள, இவங்கள தூக்கிட்டு கிளம்புங்க " என்றான்.

வேவு பார்க்க சென்ற ஆதி கையில் காபியுடன் வருவதை பார்த்த ஹரி ," அடேய் சோத்து மூட்டை , எதுக்கு வந்துருக்கோம், நீ என்னடா பண்ணிகிட்டு இருக்க " என்று முறைத்தவனிடம்

" எதுக்கு மச்சி டென்ஷன் ஆகுற, ஒரு காபி குடிச்சுட்டு வேலைய பாப்போம் " என்றவன் இருவருக்கும் ஒரு கோப்பையை கொடுத்து, தானும் ஒன்றை குடித்து கொண்டே ," சும்மா சொல்ல கூடாது , என் ஆளு கையால குடித்த காபிக்கு தனி ருசி இருக்கு " என்றவனை பார்த்த சிவா , " என்னடா சொல்ற, சாந்தினி உன்ன பார்த்துச்சா ?", என்றவனிடம் நடந்ததை விவரித்தான் ஆதி .

பிறைசூடனின் ஆட்கள் கிளம்பிய சிறிது நேரத்தில் , ஆதி அழைத்திருந்த ஆட்கள் மண்டபத்தின் பின் புறமாக, ஆதி சொன்ன இடத்திற்கு வந்து மறைத்திருந்தனர்.

ஆதி & கோ போதையேறி , உளறியபடி தட்டு தடுமாறி மொட்டைமாடி வந்து சேர, அதற்காகவே காத்திருந்தார் போல் , அவர்களின் தலையில் இடியாய் இறங்கிய அடியில் மயங்கி சரிந்தனர்.

ரிஷி மற்றும் நண்பர்களை போதை பழக்கம் உள்ளவர்கள் என்று அனைவரிடமும் நிரூபித்து, இந்த திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டிய தோழிகள், விஷ்வா தன் நண்பர்களுக்கு வாங்கி வைத்திருந்த சரக்கில் சிலவற்றை எடுத்து கொண்டு,மாடி ஏறிக்கொண்டிருந்தவர்களை ராகவி பார்த்துவிட்டாள் .

'ராம் தன் நண்பர்களுடன் மேலே சென்றதை கவனித்த ராகவி , இப்பொழுது தோழிகளும் செல்வதை பார்த்து, திருமணத்தை நிறுத்த ஏதேனும் சதி நடக்கிறதோ என்று எண்ணமிட்டவள்," நான் இருக்குற வர கல்யாணத்த நிறுத்த விடமாட்டேன் " என்ற எண்ணத்துடன் விஷ்வாவை தேடி சென்றால் .

ராகவியை பார்த்த விஷ்வா, இத்தனை நாள் தன்னிடம் பேசாதவள் , தன்னை தேடி வந்ததை நினைத்து பூரித்துப்போக, ராகவியோ ," உங்க தங்கச்சி மூணு பேரும் , மொட்ட மாடிக்கு போயிட்டு இருகாங்க, ராத்திரி நேரம், கல்யாண பொண்ணுங்க வேற, அதான் உங்க கிட்ட சொல்ல வந்தேன் " என்று முக சலிப்புடன் பேசிவிட்டு நகரமுயன்றாள்.

விஷ்வா, " அத நீயே சொல்லிருக்கலாம்ல உன் ப்ரெண்ட்ஸ் கிட்ட " என்றவனை இடைமறித்த ராகவி ," நான் சொன்னாளாம் கேட்க மாட்டாங்க" என்றவள் " உங்கள மாதிரி காதலியவிட தங்கச்சிங்க தான் முக்கியம்னு வாழற தியாக சிகரம் சொல்றதை தான் கேட்பாங்க " என்று கோவமாக கூறிவிட்டு சென்றவளை கவலையோடு பார்த்து கொண்டிருந்தான் விஷ்வா.

மொட்டை மாடி வந்த தோழிகள், மூன்று பேர் யாரையோ தூக்கி செல்வதை பார்த்து அதிர்ந்து நிற்க, " இங்க என்ன பண்றீங்க ?" என்றவாறு அங்கு வந்து சேர்ந்தான் விஷ்வா.

" ரூம்குள்ள இருக்க ஒரு மாதிரி இருந்தது, அதான் கொஞ்சம் காத்து வாங்க வந்தோம் " என்ற துர்வாவை பார்த்த விஷ்வா " அது என்ன கைல கவர் " என்றபடி அதை வாங்கி பார்க்க, உள்ளே இவன் வாங்கி வைத்திருந்த சரக்கு இருந்தது.

இவர்களை சந்தேகமாக பார்த்த விஸ்வா ," இது எப்படி உங்க கையில " என்றவனை முறைத்த துர்வா " ஹே லூசு, இங்க கீழ இருந்துச்சு, என்னனு பாக்குறதுக்கு கைல எடுத்தேன், அதுக்குள்ள நீ வந்துட்ட " என்றால். அதை கேட்டவன் ," பாத்தீங்களா , இந்த டைம் மாடிக்கு வாரது எவ்ளோ ஆபத்துன்னு " என்றவன் மூன்றுபேரையும் அறைக்கு அனுப்பி வைத்தான் .

அறைக்கு வந்த தோழிகள், அமைதியாக இருக்க , சாந்தினி, " நாம தான லே அவனுங்கள கடத்துறதா சும்மா பேசிடிருந்தோம் , இப்போ நிஜமாவே யாரோ கடத்திட்டாங்க " என்று கூற

துர்வா ," எவன் எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன, எப்படியோ நாளைக்கு கல்யாணம் நடக்காது " என்றவாறு படுக்க தயாரானாள்.
சாராவும் துர்வா சொல்வதை ஏற்று உறங்க செல்ல, சாந்தினிக்கு ஏதோ தவறாக தோன்றிக்கொண்டே இருந்தது.

அனைவரின் திட்டத்தின் முக்கியமான நாளான திருமண நாளும் , எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி விடிந்தது. பெண் வீட்டார் பரபரப்பாக வேலைகளை செய்து கொண்டிருந்தனர். பெண்கள் மூவரும் தங்கள் அறையில் தயாராக , மாப்பிள்ளை வீட்டார் வருகைக்காக மண்டபமே சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.

தொடரும்.......
 
Top