Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 16

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 16

வீட்டிற்க்குள் நுழைந்த ருத்ரன் , அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டு, தன் கையில் இருக்கும் துண்டு சீட்டை மறுமுறை வாசித்தான்.
"ருத்ரா உன்னிடம் பேசவேண்டும் , என்னை மறந்திருக்க வாய்ப்பில்லை, நான் உன் அரண் . இன்று மதியம் 2 மணி போல் , மீனாட்சி அம்மன் கோவிலில் உனக்காக காத்திருப்பேன் " .

இதை படித்த ருத்ரன், போகவா வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்க, சிவா சொன்ன வேலையை மறந்திருந்தான். நடந்த அனைத்தையும் நினைவு கூர்ந்தவன், இதுவே இறுதி முறையாக இருக்கட்டும் என்று கிளம்ப ஆயத்தமானான்.

------------------/-------

சாந்தினி எதையோ இழந்தது போல் படுத்திருந்தாள், அவள் அருகில் துர்வாவும் சாராவும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

துர்வா , " மாப்பிளை வீட்ல பேசுனது ரெண்டு பேரும் கவனிச்சீங்களா ?" என்று விட்டத்தை பார்த்து கொண்டே கேட்டாள்.

அதை கவனித்த சாரா , " என்ன லே சொல்ற?".

" மாப்பிளையோட குடும்பத்துக்கு புடிக்காம இந்த கல்யாணம் நடக்க போகுது " என்ற துர்வா நிச்சயத்தில் பிறைசூடன் பேசிய விதத்தை எடுத்து கூறினாள் . அதை கேட்ட சாராவும் சாந்தினியும் இவளோ நடந்ததா என்று வாய் பிளந்து நின்றனர்.

"இதை வெச்சு தான் நாம ப்லே பண்ண போறோம் " என்ற துர்வாவை அதிர்ச்சியுடன் பார்த்தனர் மற்ற இருவரும்.

" ஆனா அதுக்கு முன்ன எனக்கு சில உண்மைகள் தெரியனும் " என்ற துர்வா , சாந்தினியை கூர்மையாக பார்த்தவள் சாராவிடம் ," உனக்கு எல்லா உண்மையும் தெரியும் தான லே " என்று கேட்டாள் .

சாரா சாந்தினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு , துர்வாவின் விழியை நேராக பார்த்து ," ஆமா லே , தெரியும், தெரிஞ்சுகிட்டேன், சாந்தினி வாய தொறந்து சொல்லாத வர என்னால தனியா இதுல ஒன்னும் செய்ய முடியல, நீயும் நான் சொல்றத கேக்குற நிலைமைல இல்ல, அதான் சொல்லல " என்று தெளிவாக கூறினாள் .

இதை பார்த்த துர்வாவின் கோவம் சற்று மட்டு பட்டது. சாந்தினியிடம் ," இப்போவாது வாய தொறக்குறியா?" என்று கடுப்புடன் கேட்டாள் துர்வா .

இருவரையும் அதிர்ச்சியாக பார்த்த சாந்தினி, துர்வா கேட்ட கேள்வியில் தலைகுனிந்து கொண்டாள் . சாந்தினி வாயை திறக்க போவதில்லை என்று அறிந்த சாரா தனக்கு தெரிந்த அனைத்தையும், தான் அதை தெரிந்து கொண்ட விதத்தையும் தோழிக்கு விளக்கினால். அதை ஆச்சர்யமாக துர்வா கேட்க, சற்றே அதிர்ச்சியுடன் சாந்தினி கேட்டுக்கொண்டிருந்தாள் .

இதை கேட்ட துர்வா சாந்தினியை பளார் என்று அறைந்திருந்தாள். சாந்தினி இதை எதிர் பார்க்கவில்லை போல, ஆனால் சாரா இதை நான் முன்னமே செய்திருக்க வேண்டியது என்ற பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.

" என்ன தியாகியா நீ ?, லவ் பன்றேனா சொல்றதுக்கு என்ன, எல்லாமே கைல கிடைக்கும்னு நினைப்பா? ச்சே உன்ன குழப்பி , எங்களையும் குழப்பி, தேவையா இதெல்லாம் " என்று கத்தி கொண்டிருந்தாள் துர்வா .

அவளிடம் எதையோ சொல்ல வந்த சாந்தினியை முறைத்த சாரா ," சரி விடு லே, இப்போ உண்மை தெரிஞ்சுருச்சுல , பிளான் என்ன ? எப்படி மேரேஜ் நிறுத்துறது , இன்னும் சரியாய் ஒரு மாசம் தான் இருக்கு" என்று கேட்க .

சாந்தினியோ , " விஷ்வா அண்ணா மேரேஜ்..." என்று ஏதோ சொல்ல தொடங்கியவளை முறைத்தனர் தோழிகள் இருவரும்.

துர்வா , " வேற என்ன மாப்பிளையோட அம்மா அப்பா தான் நம்ம டார்கெட், அதுகளை குழப்பி, கடுப்பேத்துனாலே மேரேஜ் தான நின்றும், ஆனா அதை நாம தான் பண்றோம்னு யாருக்கும் தெரியக்கூடாது ".

சாரா, " என்ன லே சொல்ற, அது எப்படி பண்றது?"

துர்வா ," அத தெரிஞ்சா நான் ஏன் இங்க இருக்க போறேன், நான் மட்டுமா யோசிக்க முடியும் , யோசிச்சா எனக்கு பசிக்கும்னு உனக்கு தெரியாது, நான் ரொம்ப நாளாவே ஒழுங்கா சாப்பிடல , நீ யோசி , அவளை மட்டும் பேசவிடம யோசி, நான் சாப்பிட்டு வரேன் " என்று வெளியேறினாள் .

சாந்தினி சராவிடம் பேச முயல அவளை ஒரு முறைப்புடன் கடந்த சாரா, தன் மூளைக்கு வேலை கொடுக்க தொடங்கினாள்.

-------------------------

ருத்ரன் சரியாக 2 மணிக்கு கோவிலை அடைந்தவன் , தான் சந்திக்க வந்த நபரை தேடி கொண்டிருந்தான். அவன் கோவிலுக்குள் நுழைந்ததில் இருந்து அவனையே பார்த்து கொண்டிருந்த அவன் , ருத்ரனை நோக்கி நடக்க தொடங்கினான்.

அதே நேரம் அங்கு வந்த விஷ்வா ருத்ரனிடம் ," இநேரத்துல இங்க என்னடா பண்ற?, அத்தை மட்டும் தான் வந்திருக்குறதா நினைச்சேன் " என்று பேச தொடங்க , விஷ்வாவை கண்ட அவன் தூணுக்கு பின் மறைந்து கொண்டான்.

விஷ்வாவை கண்ட ருத்ரனுக்கும் பதட்டம் ஒட்டிக்கொள்ள,அதைசமாளித்து கொண்டு பேச தொடங்கினான். பேச்சு வாக்கிலே ," நிச்சயம் நல்ல படியா முடிஞ்சதா அண்ணா?" என்றவனிடம் விஷ்வா," அடேய் முறைய மாத்தாத , நான் உனக்கு மாமா,எல்லாம் நல்ல படியா முடிஞ்சது டா ".

இப்படியே பேச்சு நீண்டு கொண்டே செல்ல, இதை பயன்படுத்தி , மாப்பிள்ளையை பற்றி விசாரித்தான் ருத்திரன். விசாரித்த வரையில் கான்ஸ்டருக்ஷன்ஸ் கம்பெனி நடத்தி வருகிறார்கள், R3 கன்ஸ்ட்ருக்ஷன்ஸ்னு சென்னைல ஸ்டார்ட் பண்ணிருக்காங்க, கபூர் குரூப்ஸ் ஓட சிஸ்டர் கன்செர்ன் . மூன்று நண்பர்களான ரிஷிவந்,ராகேஷ் மற்றும் ராம்வர்த்தனின் உழைப்பே R3 கான்ஸ்டருக்ஷன்ஸ் .

விஷ்வா நகர்ந்ததும் ருத்ரன் முன் வந்து நின்றான் அவன் , " எப்படி ருத்ரா இருக்க? " என்றவன் கேள்விக்கு " அத பத்தி உங்களுக்கு என்ன கவலை ? எதுக்கு என்ன வர சொன்னீங்க?" என்றான் ருத்ரன்.

" இன்னும் என் மேல கோவம் போகலையா ருத்ரா ? அப்போ என் நிலைமை அப்படி , புரிஞ்சுக்கோ " என்றவனை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்த ருத்ரன்," இப்போ எதுக்கு என்ன வர சொன்னீங்க?" என்று கேட்டான்.

அவனை கூர்ந்து பார்த்தவன் ," எனக்கு உன் அண்ணன் பத்தி தெரியணும் "என்றவனை இடைமறித்த ருத்ரன்," என்ன வேவு பாக்குறீங்களா?" என்று கோவமாக பொரிய அவனை முறைப்பில் அடக்கினான் அவன்.

பிறகு ருத்ரனிடம் அவனுக்கு தெரிய வேண்டியதை மட்டும் தெரியப்படுத்தி சிவா மற்றும் அவன் நண்பர்களின் நடவடிக்கையை தெரிய படுத்துமாறு கூறி சென்றான். வீட்டிற்கு திரும்பிய ருத்ரனுக்கு தான் தவறு செய்கிறோமோ , அவனை நம்பலாமா? என்று யோசித்தவன் பிறகு தன் அண்ணனுக்காக என்று மனதை தேற்றி கொண்டு அந்த புதியவனுக்கு தனக்கு தெரிந்ததை தொலைபேசி வாயிலாக தெரிய படுத்தினான்.

தொடரும்.......
 
Super
 
Top