Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 15

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 15

திருமணத்தை நிறுத்தும் எண்ணத்தில் ஆதி நண்பர்களிடம் ," மாப்பிள்ளைகள தூக்கிறாளாம் மச்சி ".

" தூக்கிட்டு கல்யாணம் நின்னுருச்சுனு ஊர் காரங்க பேச , அத கேட்டு ஏதாவது அசம்பாவிதம் நடந்துட்டா?,ஏன் டா நீ வேற " என்றான் சிவா.

இறுதியில் ஆதியின் திட்டப்படி மாப்பிளைகளிடம் பேசிப்பார்ப்பதாகவும் , ஒன்றும் சரிவரவில்லை என்றால் மாப்பிள்ளையை தூக்கிவிட்டு , தாங்கள் மாப்பிள்ளையாக வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தனர் மூவரும்.

அதற்கு முதல் கட்டமாக மாப்பிள்ளைகள் யார் என்பதை விசாரிக்க தொடன்கினார் . நேரடியாக விஷ்வ்விடம் கேட்டால் சந்தேகம் ஏற்படும் என்று எண்ணியவர்கள் ஊரில் இருக்கும் ருத்ரனிடம் விசாரிக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

அதேநேரம் ருத்ரன் சிவாவிற்கு அழைத்தான். அதை எடுத்த சிவா " ருத்ரா , என்ன டா இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க, ஒன்னும் பிரச்சனை இல்லையே? அம்மா , நீ எல்லாரும் நல்ல இருக்கிங்கள்ல ?"

அவனின் பதட்டத்தை கேட்ட ருத்ரன் " இங்க ஒரு ப்ரோப்ளேமும் இல்ல அண்ணா , நான் நல்ல இருக்கேன், அம்மாக்கு தான் கொஞ்சம் உடம்பு முடியல "என்றவனை இடைமறித்த சிவா," ஏன் என்னாச்சு, காலைல நல்லா தான இருந்தாங்க?".

" ஆமா அண்ணா , நிச்சயத்துல இருந்து வரும் போதே முகம் சரி இல்ல , அதுக்கப்பறமும் ஏதும் பேசாம அமைதியாவே இருந்தாங்க, நயிட் சாப்பிடாமலே படுத்துட்டாங்க , கேட்டா பசிக்கலைனு சொல்ராங்க ".

"சரி விடு , அம்மாட்ட நான் பேசுறேன், நீ வறுத்தபடாம தூங்கு, நீ சாப்பிட்டியா ?" என்றவனுக்கு ஆதி கண்களால் சைகை காட்ட, " ஆமா.. நீ நிச்சயத்துக்கு போகலையா ருத்ர?"என்றான் சிவா.

" இல்ல அண்ணா , நான் போகல" என்றவன் அண்ணனின் குரல் மாற்றத்தில் கவனிக்க தொடங்கினான்," ஏன் அண்ணா , போயிருக்கணுமா? நீங்க என்ன போக சொல்லிருந்த போயிருப்பேன், அங்க நான் என்ன பண்றதுனு போகல " என்ற தம்பியின் புத்திசாலித்தனத்தில் புன்னகைத்தான் சிவா.

" ம்ம்ம்ம்,நீ இவ்வளோ அறிவாளியா இருந்துருக்க வேணாம்டா " என்று சிரித்த சிவா , " எனக்கு சில விஷயம் தெரியணும் ருத்ரா , யாருக்கும் சந்தேகம் வராம விசாரிக்கணும் " என்றவன் மாப்பிள்ளைகளை பற்றிய தகவலை விசாரிக்க கூறினான்.

" சரி அண்ணா , நாளைக்கு இந்த டைம்க்கு நீங்க கேட்ட எல்லாத்தையும் கேட்டு சொல்றேன் " என்ற ருத்ரனிடம் " ஏன் கேக்குறேன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா டா " என்றான் சிவா.

" நீங்க கேக்குறீங்கனா அதுல ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு தெரியாதா , எனக்கு தெரியவேண்டிய விஷயம்னா நீங்களே சொல்லுவீங்கன்னு தெரியும் அண்ணா " என்றவனின் நம்பிக்கையில் சற்று வெட்கித்தான் போனான் சிவா.

மற்ற அனைவர் நலமும் விசாரித்த பின் அலைபேசியை அணைத்தான் ருத்ரன். தம்பியிடம் பேசியதையே யோசித்து கொண்டிருந்த சிவா , தம்பிக்கு தவறான உதாரணத்தை காட்டுகிறோமோ என்று யோசித்தவன் முன் துர்வா தோன்ற ,' உனக்காக தான் டி பப்பு , மாமன் வில்லன் வேலை பாக்க வேண்டி இருக்கு ' என்று மனதோடு பேசிக்கொண்டான்.

இங்கு ஆதியோ வானத்தை பார்த்து , அதை சாந்தினியின் முகமாக கற்பனைசெய்து , தனது மனவோட்டத்தை 'ஜொல்லி' கொண்டிருந்தான்.

இவர்கள் இருவரையும் பார்த்த ஹரி ,' காதல் பண்றதுக்கலாம் ஒரு கொடுப்பினை வேணும், நமக்கு அது இல்ல போல ' என்று பெருமூச்சுடன் படுக்க சென்றான்.

------------------------

விடியலில் உறக்கம் வராமல் தனிமையில் நடைபயின்று கொண்டிருந்தான் ராகேஷ் . அன்னை இருந்திருந்தால் தன் வாழ்க்கை இப்படி திசை மாரி போய் இருக்காதோ, தானும் குடும்ப சூழலில் வாழ்ந்திருக்கலாமோ, இதற்கு காரணமானவர்களை பழி வாங்கியே தீரவேண்டும் என்ற வெறி என்றும் போல் இன்றும் கொழுந்துவிட்டு எரிய , கண்களை இருக மூடியவனின் முன் வந்து நின்றான் ரிஷி.

" பய்யா , அதிகாலைல என்ன பண்றீங்க " என்றவனை பார்த்ததும் கோவம் வடிய கண்ணில் கனிவுடன் " சும்மா தான் ரிஷி, நம்ம ஊருக்கு வந்தா அம்மா கிட்ட வந்த சுகம் , அதான் அனுபவிச்சிட்டு இருக்கேன் " என்றான் ராக்கி.

ராக்கிங் தோலை தட்டி கொடுத்த ரிஷி ," கவலைப்படாத பய்யா , எல்லாம் நாம நினைச்ச படி நடக்கும் , நடத்தி காட்டுவேன் " என்று கூறிய ரிஷியை , " ஏன் ரிஷி உனக்கு இந்த கோவம்?" என்றான் ராக்கி.

" என்ன பய்யா இப்படி பிரிச்சு பேசிட்டே , எனக்கும் உன்ன விட்ட யாரு இருக்கா சொல்லு, நீ யாருமே இல்லாம அநாதையா இருக்க, நான் எல்லாம் இருந்தும் அநாதையா இருக்கேன் " என்றவனின் வேதனை ராக்கியையும் தாக்கியது.

" இருந்தாலும் ரிஷி அந்த பொண்ணுங்க பாவம் இல்லையா, நம்ம சண்டைல அவங்க ஏன் பாதிக்க படனும் " ராகேஷ்.

" இல்ல பய்யா , இது நடந்தா தான் நஸ்மா நினைக்குறது நடக்கும் , மறுபடியும் என்ன இந்த விஷயத்துல கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாத " என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.

போகும் அவனையே பார்த்து கொண்டிருந்த ராகேஷ் , இவன் மஹாபாரத கர்ணனா , இல்லை ராமாயண விபீஷணனா என்று வேதனையுடன் பார்த்தான்.

--------------------------

விடியலில் எழுந்த ருத்ரன்,அன்னையிடம் சொல்லிக்கொண்டு மந்தைக்கு சென்றான். அங்கு நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருக்க, தூரத்தில் கண்ணன் அவன் நண்பர்களுடன் கிரிக்கெட் மட்டையை கையில் சுற்றியபடி வந்துகொண்டிருந்தான். இதற்காகவே காத்து கொண்டிருந்த ருத்ரன் , கண்ணனை நோக்கி செல்ல , அவன் அருகே பைக் ஒன்று வழியை மரிப்பது போல் வந்து நின்றது.

அதில் இருந்து இறங்கியவன் ஏதோ வலி கேட்பது போல் ருத்ரனை தனியே அழைத்து சென்றான். அவன் கையில் ஒரு சிறிய சீட்டை திணித்து சென்றான். போகும் அவனையே குழப்பத்துடன் பார்த்த ருத்ரன் , கையில் இருக்கும் சீட்டில் எழுதியதை படித்ததும் அதிர்ந்து நின்றான். அதை குழப்பத்துடன் பார்த்த ருத்ரன் வேறு நினைவின்றி வீடு திருப்பினான்.

தொடரும்........
 
Top