Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 10

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 10

மும்பை மாநகரில் , மேல்தட்டு மக்கள் வசிக்கும் 'மலபார் ஹில்' , அந்த பெரிய பங்களாவில் பிறைசூடன் கோவத்தில் கொதித்து கொண்டிருந்தார். அவரது மனைவி ஹேமாவதி லேடீஸ் கிளப்பில் இருந்து இன்னும் வீடு திரும்பவில்லை.காரின் சத்தத்தில் மணியை பார்த்த பிறைசூடன் , அது இரவு ஒன்பதை நெருங்குவதை பார்த்து, வாயிலை நோக்க , அங்கு மெதுவாக ஆடி அசைந்து வந்தார் ஹேமா. தன்னை பார்த்த கணவரை நெருங்கி " ஹே டார்லிங், தும் கப் ஆயே ? கானா காலியா ? (எப்போ வந்தே? சாப்டியா?)" என்று கேட்க , பிறைசூடனோ " உனக்காக தான் வெயிட் பண்றேன்,ஏன் இவளோ லேட் ?".
ஹேமா " மேனே தும்ஹி மேரேலியே வெயிட் கர்னே கோ மானா கியா நா ? மேன் அபி பஹுத் டயர்ட் ஹூன் , தும்சே ஸுபா பாத் கருங்கி .. குட் நயிட் "( எனக்கு வெயிட் பண்ணாதனு சொல்லிருக்கேன்ல ,நான் இப்போ டயர்டா இருக்கேன், காலைல பேசலாம், குட் நயிட் ) என்றவரை கடுப்புடன் பார்த்தார் பிறைசூடன்.

பிறைசூடன் முன்னால் ராணுவ அதிகாரி, இந்நாள் வியாபார காந்தம்.தன் மாமனார் ரிதேஷ் பட்டேலின் கான்ஸ்ட்ருக்ஷன் தொழிலை , மேலும் வளர்த்து வருபவர். இவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மகன், இப்பொது எந்த கிளப்பில்,யாருடன் இருப்பான் என்பது இவருக்கு மட்டும் அல்ல , அவனுக்கும் தெரியாது, காரணம் போதை.

ரிஷிவந் பிறைசூடன், 28 வயது இளைஞன் . பாட்டனாரின் படேல் கான்ஸ்ட்ருக்ஷன்ஸ்ன் ஒரே வாரிசு. படிப்புக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லை . தந்தையின் செல்வாக்கில் BBA முடித்து குடியும் குடித்தனமுமாக வாழ்க்கையை வாழ்பவன் .

மணி நள்ளிரவை தாண்டியதை பார்த்த பிறைசூடன், தன் மகனின் டிரைவருக்கு அழைத்து " கஹா ஹே துமரா சாப்?" ( உன் முதலாளி எங்கே இருக்கிறான்?" .
" சின்னையா அந்தேரி நைட் க்ளப்ல இருக்காரு ஐயா " என்று ஹிந்தியில் கூறினான்.
இதை தெரிந்தும் கேட்ட தன முட்டாள் தனத்தை நொந்து கொண்டு, நாளை தான் இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் உறங்க சென்றார் பிறைசூடன்.

அங்கு ரிஷிவந் தடுமாறிய படி ஹோட்டல் லாபியில் திரும்பும் நேரம், தடுமாறி கீழே விழுக போனவனை தூக்கி நிறுத்தினான் ராகேஷ், ரிஷியின் நண்பன் . ராக்கி , 34 வயது நிரம்பிய ஆண்மகன் . பட்டேல் குழுமத்தின் லீகல் அட்வைசர். சொந்தம் என்று சொல்லும்படி யாரும் இல்லை. ரிஷிவந்தின் உதவியால் பட்டேல் குழுமத்தில் ஒரு அங்கம் வகிக்கின்றான் . பிறைசூடன் ரிஷி விஷயத்தில் பெருமை கொள்ள கூடிய ஒரே விடயம் ராக்கியை நண்பனாக தேந்தெடுத்தது மட்டுமே.

" தினம் இவளோ குடிக்கணும்னு வேண்டுதலடா " ராகேஷ்.
" இத அடிச்சா தான் பய்யா லைட்டா பீல் பண்றேன் " என்றான் ரிஷி.
இது இவர்களுக்குள் தினம் நடக்கும் பேச்சுவார்த்தைதான். ரிஷியை அவன் காரிலே ஏற்றி மலபார் ஹில்லிற்கு வந்து விட்டவன் தன் வீட்டை நோக்கி பயணித்தான் ராக்கி. வீட்டிற்க்குள் நுழைந்த ரிஷி கசந்த புன்னகையுடன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டான் . கண்ணுக்குள் அந்த பெண்ணின் உருவமே தெரிய , தன் வாழ்வை திசை மாற்றிய அந்த நாளை நினைத்தபடி படுத்திருந்தான். ரிஷியை இறக்கிவிட்டு சென்ற ராக்கியின் நினைவும் தன வாழ்க்கையில் நடந்த திருப்பங்களையும், ரிஷியின் செயல்களையும் யோசித்து kondirunthaan கொண்டிருந்தான்.


------///

சென்னை வந்த தோழிகள், தங்களின் தனி உலகத்தில் சுழன்று கொண்டிருந்தனர். தினசரி வேலைகளை செய்தாலும் , அவர்களின் பேச்சும் சிரிப்பும் காணாமல் போய் இருந்தது. இதை பார்த்து வேதனையில் இருந்துந்த சாரா, இதைசரி செய்து ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள் . அந்த நாளும் வந்தது.

வார இறுதியில் தங்களுக்குள் இருக்கும் அமைதி பிடிக்காத சாரா ,தோழிகளை கிளப்பி கொண்டு கடற்காற்றை சுவாசித்தபடி நடந்து கொண்டிருந்தாள் . கூட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்த மூவரும் கடலையே வெறித்துக்கொண்டிருந்தனர்.

கடுப்பாகிய சாரா " இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்ன நடந்ததுன்னு இப்படி உக்காந்துருக்கீங்க?, கல்யாணம் தான பண்ண சொல்லிருக்காங்க, புடிக்கலேனா வேணாம்னு சொல்லுற வேண்டியது தான..." என்று பொரிந்தவளை இடைமரித்தால் துர்வா .
" நான் தப்பு பண்ணிட்டேனோன்னு தோனுது லே, உங்கள்ட கேட்காம அவசப்பட்டு விஷ்வா கிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருக்கக்கூடாது ".
" நீ அத செய்யாம இருந்தா , ராகவியும் விஷ்வா அண்ணனையும் எப்படி ஒன்னு சேக்குறது ?" என்றால் சாரா. இவை அனைத்தையும் கேட்டும் கேட்காததுபோல் கடலை வெறித்து கொண்டிருந்தாள் சாந்தினி. சாந்தினியை பார்த்த சாரா , துர்வாவிடம் " போய் சாப்பிட வாங்கிட்டு வா லே " என்று கண்ணால் சாந்தினியிடம் தான் பேசுவதாக சொன்னாள் .

" சாண்டி கல்யாணம் வேணாம்னு விஷ்வா அண்ணாகிட்ட சொல்லிறலாம், நீ இவ்வளோ வறுத்தபட தேவையே இல்ல " என்ற சராவிடம், "என்ன லே இப்படி சொல்ற ராகவிய விஷ்வா அண்ணா மேரேஜ் பண்ணனும்னா நாம இத பண்ணி தான் ஆகணும் ,எனக்கு ஒன்னும் இல்ல திடிர்னு கல்யாணம்னு சொன்னதும் ஒரே குழப்பம் அவ்ளோ தான் " என்ற கண்ணீரை அடைக்கியபடி கூறிய சாந்தினியை நம்பாத பார்வை பார்த்தாள் சாரா.

துர்வாவின் அருகில் யாரோ இடிப்பது போல் வர, விலகியபடி நிமிர்ந்தவள் , எதிரில் மூச்சு வாங்கியபடி நின்ற சிவாவை எதிர் பார்க்கவில்லை.
" என்ன ஊசி பாட்டாசு எப்படி இருக்க?" என்ற சிவாவிற்கு பதில் சொல்லமல் அவனையே பார்த்து கொண்டு நிற்க'மறந்துட்டாளோ ' என்ற எண்ணம் அவனை வேதனை கொள்ள செய்தது.
" ம்ம்ம் நல்ல இருக்கேன், நீ இங்க என்ன பண்ற? " துர்வாவின் கேள்வியில் தெளிந்தவன் " நான் சும்மா ஈவினிங் வாக் மாதிரி வந்தேன்.. உன் ப்ரெண்ட்ஸ் எங்க?" என்றவனுக்கு பதில் சொல்லாமல் முன்னேறியவளை வினோதமாக பார்த்த சிவா " ஏதும் பிரச்னையா துர்வா ? " என்றவனின் கேள்வியில் ஷாக் அடித்தது போல் நின்று விழி விரிய அவனை பார்த்தவள், தன்னை சமாளித்து கொண்டு ' இல்லை ' என்ற தலை ஆட்டலுடன் முன்னேறினாள் .

தோழிகளின் அருகில் வந்த துர்வா , அவர்களிடம் சிவாவை அறிமுக படுத்த,சாரா வரவேற்பாய் சிரித்தாள் என்றாள் , சாந்தினி அவன் பின்னால் யாரையோ தேடினாள் .

சாந்தினியை சந்தேகமாய் சாரா பார்க்க, சிவாவோ சாந்தினியிடம் " நான் மட்டும் தாங்க வந்தேன்" என்றான் . சாந்தினி தலையசைத்து அதை ஏற்று கொண்டாலும், அவனிடம் எதையோ கேட்க வந்து தவித்து போனால். இதை சிவாவும் சாராவும் கவனித்து கொண்டிருந்தனர். இறுதியில் சிவாவின் பார்வை தன்னையே விழியகலாமல் பார்த்த துர்வாவின் பார்வையை கலந்து நின்றன.

சாந்தினியின் தவிப்பையும், துர்வா சிவாவின் பார்வையையும் பார்த்த சாரா நடப்பதை கவனிக்க தொடங்கினாள்." உங்க பிரண்ட்ஸ்லாம் வரலையா?" சாரா.
" ஆதியும் ஹரியும் ஒர்க் பன்னிட்டு இருந்தாங்க, அதான் வரல " என்ற பதிலை சாந்தினியிடம் கூறியதை , சாரா குறித்துக்கொண்டாள் . பிறகு தங்கள் கம்பெனி பற்றி கூறியவன், கார்டை நீட்டி " இது எங்க கார்ட் , தனியா இருக்கீங்க, ஏதும் ஹெல்ப்னா சொல்லுங்க " என்றவனை சாரா ' உண்ட ஏன் ஹெல்ப் கேக்கணும் ' என்று பார்த்துகொன்டே " கண்டிப்பா, தாங்க்ஸ், நாங்க கிளம்புறோம்.. லேட் ஆயிடுச்சு " என்றவாறு தோழிகள் கிளம்பினார்.

துர்வாவின் பார்வையில் தெரிந்த மாற்றத்தை நினைத்து புது துள்ளலுடன் ஹரியையும் , ஆதியையும் தேடி சென்றான் சிவா. சிவாவை பார்த்த ஹரி " என்னடா ரொம்ப சந்தோசமா வர?".
ஹரியின் கேள்வியை காற்றில் விட்ட சிவா ஆதியிடம் " சாந்தினியும் அவங்க ப்ரெண்ட்ஸையும் பார்த்தேன் " . அதை கேட்ட ஆதி பரபரப்பாக " சாந்தினியையா ? எப்ப பார்த்த? எனக்கு கால் பண்ணிருக்கலாம்ல,என்ன கேட்டாலா ? எப்படி இருக்கா ? ".
" ம்ம் உன்ன தாண்ட தேடுச்சு, நீ வரலன்னு சொன்னதும் சோகமா திரும்பிருச்சு..ஆனா ... " என்று இழுத்த சிவாவை பார்த்த நண்பர்கள் இருவரிடமும் " அவங்க மூணு பேர் முகமும் சரி இல்லடா , எதோ ப்ரோப்லேம்ன்னு நினைக்குறேன், நம்ம கார்டு குடுத்துருக்கேன்,எதாவது ஹெல்ப்னா சொல்லுங்கன்னு....பார்போம் " என்றான் சிவா.

சிவாவையும் ஆதியையும் பார்த்த ஹரி , ' முத்தி போச்சு' என்ற எண்ணத்துடன் வேலையை தொடர்ந்தான் .

தொடரும்....
 
Top