Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 47

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 47

அர்ஜூன் தன் மனதில் இருப்பதை சொல்லிவிட, அஞ்சலி என்ன சொல்லப் போகிறாள் என்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“அர்ஜூன். நீ சொன்னது மாதிரி அப்போ நான் உன்ன விரும்பினது உண்மை தான். ஆனா, அதுக்கப்பறம் என்னோட சூழ்நிலையால எதுமே வேண்டாம்னு முடிவு பண்ணி இப்போ எல்லாத்தையும் வெறுத்துட்டேன். என்னால இனி எதுவும் செய்ய முடியாது. ப்ளீஸ் என்ன விட்டுடு அர்ஜுன். கண்டிப்பா உனக்கு நல்ல லைப் கிடைக்கும். நீ லைப்ல ஜெயிக்கணும். அப்போதான் உங்க அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. எனக்கு பிடிக்காத வாழ்க்கையைத் தான் இந்த ஜென்மத்துல கடவுள் கொடுத்திருக்கார்ன்னு நினைச்சுக்கறேன். அதைத்தான் நான் வாழ்ந்தாகணும். அதனால தயவு செய்து என்ன மறந்துடு அர்ஜூன்.” என்று அழுகையுடன் சொன்னவள், அவனை திடீரென கட்டிப் பிடித்து அழுதாள்.

அதை எதிர்பாராத அர்ஜூனுக்கு, அந்த நிலைமையில் சந்தோஷப்பட முடியவில்லை. மாறாக அவனும் அழுதான். அவளை அப்படியே அணைத்துக்கொண்டான்.

அவள் அழுது முடித்து, அவனை விலக்கியவாறு பார்த்தபடியே அவன் கைகளை விட்டு விலகி வந்த வழியே ஓடினாள். எதைப் பார்த்து பயந்து அர்ஜூனைப் பிடித்துக்கொண்டு வந்தாளோ, அந்த தொங்கு பாலத்தில் அழுதபடி தனியே அவள் போய்க்கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த அர்ஜூனோ கண்களைத் துடைத்துக்கொண்டே அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மனதிலிருந்த பாரம் அவளிடம் அனைத்தையும் சொல்லிவிட்ட பிறகு லேசாக இருப்பதாய் முன்னர் உணர்ந்தாலும், இப்போதுதான் மனதின் வலி அதிகமாய் இருப்பதாய் உணர்ந்தான்.

மதுவும், பிரவீனும் படகு சவாரி சென்று வந்தவர்கள் அர்ஜூன் தனியாய் நிற்பதைப் பார்த்து அவனிடம் வந்தார்கள். அவன் முகமும், நிலையும் சரியில்லை என்று பார்த்ததுமே அவர்கள் தெரிந்து கொண்டனர்.

“என்னாச்சு அர்ஜூன்.? நீ மட்டும் இங்க நின்னுட்டு இருக்க.? கண்ணெல்லாம் கலங்கி இருக்கு. அஞ்சலி எங்க.?” என்று மது கேட்க, அர்ஜூன் அந்த தொங்கு பாலத்தைக் காட்டினான்.

அவர்கள் இருவரும் பார்த்த போது, அஞ்சலி அழுதுகொண்டே செல்வது தெரிந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று நடந்திருப்பதையும் புரிந்து கொண்டார்கள். அப்போதே அதைக் கேட்டு அவனை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்ததாலோ என்னவோ, அமைதியாய் மூவரும் திரும்பினர்.

வந்த போது, அஞ்சலி அங்கே உள்ள கேட்டீனில் அமர்ந்திருந்தாள். ரவி கட்டாயப்படுத்தி அவள் கையில் ஜூஸையும், பப்ஸையும் திணிக்க, அதை மறுத்தவள் பிறகு வாங்கிக்கொண்டாள்.

அதற்க்குள் அவர்கள் மூவரும் வருவதைப் பார்த்ததும், அவர்களுக்கு கை காமித்து விட்டு அவர்களுக்கும் ஆளுக்கு ஒரு ஜூஸூம், பப்ஸூம் கேட்டு வாங்கிக்கொண்டான்.

அஞ்சலி மௌனமாய் அவற்றை சாப்பிட வேண்டுமே என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மூவருக்கும் அதைக் கொடுத்த ரவி எதுவும் தெரியாமல் எப்பொழுதும் போல அவர்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தான்.

சிரிப்பு வரவழைக்கும் விதம் ரவி பேசிக்கொண்டிருந்தாலும், அதைக் கேட்டு சிரிக்கும் மனநிலையில் இல்லை அர்ஜூனும், அஞ்சலியும். அவர்கள் அறியாமலே ரவி வாங்கிக் கொடுத்ததை சாப்பிட்டு முடித்திருந்தனர்.

விடைபெறலாம் என்று எண்ணி கிளம்பி விட்டனர். செல்லும் போது, இந்த முறை அர்ஜூனுக்கும், அஞ்சலிக்கும் இடையில் ரவி அமர்ந்திருந்தான். அவனைக் கட்டாயப்படுத்தி அமர வைத்தது அர்ஜூன்.

ஏனோ காரணம் தெரியவில்லை என்றாலும், ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று புரிந்தவனாய் அமைதியாய் அவர்கள் இடையில் அமர்ந்துகொண்டு வந்தான் ரவி.

அனைவரும் எப்பொழுதும் பேசிக்கொண்டே வருவது போய், இப்போது எதுவும் பேசாமல் அமைதியாய் வருவதைக் கண்டு பிரவீன், காரில் இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விட்டான்.

அதைக் கேட்ட போது, மனதில் இருந்த பாரத்தை ஏதோ ஒன்று சரி செய்ய முயற்சிப்பதைப் போலொரு உணர்வு ஏற்பட்டது. அதைக் கேட்டுக்கொண்டே அஞ்சலி சிறிது கண்ணயர்ந்தாள். அவள் கண்ணயர்ந்த நேரம், அர்ஜூன் அவளையே பார்த்துக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.

அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டை வந்தடைந்தனர். சென்றதும் சிறிது நேரம் கடந்த பின், மது, அஞ்சலியை அழைத்துக்கொண்டு மேலே மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

“அஞ்சலி, என்ன தான் ஆச்சு.? நாங்க போட் ரைட் போய்ட்டு வரும் போது, அர்ஜூன் அழுதுட்டிருந்தான். திரும்பிப் பார்த்தா நீ அழுதுட்டே போய்ட்டிருந்த. எங்களால அப்போதைக்கு எதுவும் கேட்க முடியல. அதான, இப்போ கேட்கறேன். சொல்லு.” என்றாள் மது.

அவள் கேட்டதுமே திரும்பவும் அழுதாள் அஞ்சலி. “ஏய்.. நீ என்ன சும்மா அழுதுட்டே இருக்க அஞ்சலி. என்ன ஆச்சு, மொதல்ல சொல்லு. சொன்னாதானே எனக்குத் தெரியும்.” என்று அழுதுகொண்டிருந்தவளின் கன்னங்களைத் துடைத்து விட்டவாறே, அவள் தாடையை நிமிர்த்திக் கேட்டாள் மது.

அர்ஜூன் என்ன சொன்னானோ அதை அப்படியே அவளிடம் ஒப்பித்தாள்.

“அப்பா, ரெண்டு வருஷமா போய்ட்டிருந்த போராட்டம் ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சா.? ம்ம்.. அர்ஜூன் தான் மனசு வைச்சிருக்கான். சரி, அதுக்கு நீ என்ன சொன்ன.?”

அவள் சொன்னதையும் அழுதுகொண்டே சொல்ல, “ஏய்.. அஞ்சலி உனக்கென்ன பைத்தியமா. இப்படி சொல்லிட்டு வந்திருக்க அவன்கிட்ட.?” என்றாள் மது.

“வேற என்ன சொல்லணும்னு நினைக்கிற மது.? என்னைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டுப் போன்னு சொல்ல சொல்றியா.?” என்றாள்.

“ஆமா, அப்படித்தான் சொல்லிருக்கணும். அவன் எவ்ளோ ஃபீல் பண்ணி லவ்வ சொன்னா, நீ முட்டாள் தனமா பெரிய தியாகி மாதிரி பேசிட்டு அவனையும் ஃபீல் பண்ண வைச்சுட்டு வந்திருக்க.” என்றாள்.

“மது, என்னோட சிச்சுவேஷன் என்ன்ன்னு தெரிஞ்சுக்கிட்டே நீ இப்படி பேசினா நான் என்ன பண்ணுவேன்.?” என்றாள் அஞ்சலி.

“என்ன பெரிய சிச்சுவேஷன்.? உனக்கு ஜஸ்ட் என்கேஜ்மெண்ட் தான ஆயிருக்கு. எத்தனையோ கல்யாணம் மேடை வரைக்கும் போய் நின்னிருக்கு. இதெல்லாம் ஒரு ரீசனா.? என்னைக் கேட்டா, நீ அர்ஜூனோட லவ்வ ஏத்துக்கிட்டு அவனைக் கல்யாணம் பண்ணிக்கறது தான் ஒரே வழி.” என்றாள் மது.

“என்ன மது, நீயும் எதுவும் தெரியாத மாதிரி சொல்ற. எங்கப்பா என்ன பண்ணுவார் தெரியாதா.?” என்றாள்.

“அஞ்சலி, உங்கக்கா அப்படி நினைச்சிருந்தா அவங்களுக்கு புடிச்ச லைஃப் அமைஞ்சு இப்போ ஹேப்பியா இருக்க முடியுமா.? உங்க அப்பா சுயநலமா ஒரு முடிவெடுத்து அதுக்கு உன்னையும் சம்மதிக்க வைச்சிருக்கார். அது உனக்குத் தெரியலையா.?” என்றாள்.

“ஆனா, அப்பாவுக்கு அக்காவால தான ஹார்ட் அட்டாக் வந்துச்சு. இப்போ நானும் அந்த மாதிரி பண்ணேன்னா, அப்பா உயிரோடயே இருக்க மாட்டார் மது. அந்த ஒரு ரீசன் தான் என்னை இவ்வளவு யோசிக்க வைக்குது.” என்றாள்.

“நீ இப்படியே யோசிச்சுட்டு உனக்கு கிடைக்கப்போற நல்ல வாழ்க்கைய கெடுத்துக்காத அஞ்சலி. அர்ஜூன் மாதிரி பையன உன் வாழ்க்கைல நீ மிஸ் பண்ணிட்டா, அப்பறம் திரும்பவும் அவன் உனக்கு கிடைப்பானா.? நீயே யோசிச்சுக்கோ.” என்றாள் மது தீர்க்கமாக.

“பரவால்ல மது. எனக்கு இந்த ஜென்மத்துல அதுக்கு குடுப்பனை இல்லன்னு நினைச்சுக்கறேன். அவன் நல்லா இருந்தா போதும். கண்டிப்பா அவனுக்கு ஒரு நல்ல லைஃப் அமையும். இதுக்கு மேல இதைப் பத்தி நீ என்கிட்ட பேச வேண்டாம் மது. ப்ளீஸ் இந்த விஷயத்தை இதோட விட்டுடு.” என்று சொன்னபடியே திரும்பவும் அழுதாள்.

இதற்க்கு மேல் இவளிடம் பேசி பயனில்லை. நடப்பது நடக்கட்டும், ஆண்டவன் விட்ட வழி என்று எண்ணி மது அதற்க்குப் பிறகு எதுவும் பேசாமல் அவளைத் தேற்றினாள்.

அவ்வளவு தான். அடுத்த நாள் காலை செக் அவுட் செய்து விட்டு அனைவரும் கிளம்பினர். சொன்னது போலவே மகேஷ், அஞ்சலியை அழைத்துப் போக வந்திருந்தார். அவர் எப்பொழுதும் போல அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்க, அஞ்சலி அமைதியாகவே இருந்தாள்.

காலை உணவை அனைவரும் ஒரே உணவகத்தில் உண்டு விட்டுக் கிளம்பினர். விடை பெறும் போது கூட அஞ்சலி அமைதியாகவே இருந்தாள். மகேஷூம் அதை கவனிக்காமல் இல்லை.

மது, அவளிடம் பிரியா விடை கொடுக்க அதை ஏற்றுக்கொண்டு இருவரும் கிளம்பி விட்டனர். ஆறாத மனக் காயத்தால் அர்ஜூன் தாங்கள் செல்லத் தயாராய் இருந்த ட்ரிப்பைக் கேன்சல் செய்து சென்னைக்கு செல்லத் தயாரானான். ரவியும் புரிந்துகொண்டு எதுவும் சொல்லவில்லை.

மதுவும், பிரவீனும் அவர்களை ரயில் நிலையத்தில் ட்ராப் செய்துவிட்டு கோயம்புத்தூர் கிளம்பினர். அனைவருக்கும் கேரளா சென்றது ஒரு நல்ல நினைவாக இருந்தாலும், அஞ்சலிக்கும், அர்ஜூனுக்கு மட்டும் அது கனவாகிப் போனது.

ஆம், அதற்க்குப் பிறகு நடந்ததெல்லாம் வேகமாய் நடந்தன. ரூபாவின் திருமணத்திற்க்கு மது, அர்ஜூன், ரவி மட்டுமே செல்ல முடிந்தது. அவர்களாவது வந்தார்களே என்று சந்தோஷப்பட்டாள் ரூபா.

அதன் பிறகு, அர்ஜூன் ஒரு பெரிய இண்டர்நேஷனல் கம்பெனியில் தேர்வாகி வேலையில் சேந்தான். ஆரம்ப சம்பளமே அவனுக்கு மிக அதிகமாக இருக்க, உடனே சேர்ந்து விட்டான். ரவிக்கு வேறு ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. இருவருடைய கம்பெனிகளும் ஒரே வளாகத்துக்குள்ளே தான் இருந்தது.

மதுவும், அஞ்சலியும் குறிப்பிட்ட நாளில் தாங்கள் ஏற்கனவே தேர்வான, பிரவீன் வேலை செய்யும் கம்பெனியின் சென்னை கிளையில் இருவரும் ஒரே தினம் சேர்ந்தனர். வெங்கடேசன், பத்மாவின் வேண்டுகோளின் பேரில் அஞ்சலி, மதுவுடன் அவர்கள் வீட்டிலேயே தங்கினாள்.

சென்னையிலேயே இருந்தாலும், அவர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ள மனம் வரவில்லை. மதுவாவது சில சமயம் அவர்களைப் பார்க்கச் செல்வாள். ஆனால், அஞ்சலியோ முயற்சி கூட செய்யவில்லை.

அதன் பிறகு மூன்று மாதங்களில் ட்ரெயினிங்க் முடிந்து இருவரும் பணியில் சேர, அடுத்த மூன்றாம் மாதம் இருவரையும் ப்ராஜெக்ட் விஷயமாக சிங்கப்பூருக்கே அனுப்பியது.

மதுவுக்கும், பிரவீனுக்கும் அப்போதுதான் நிம்மதியாய் இருந்தது. பிரிவு அவர்களின் காதலுக்குத் துணை புரிந்தது. சிங்கப்பூர் சென்றதும் தான், காதலர்களாய் மாறினார்கள்.

அஞ்சலியைத் தனியே விட மனமில்லை மதுவுக்கும், பிரவீனுக்கும். வேறு எங்கேயோ தங்க நினைத்தாள் அஞ்சலி. ஆனால், அவர்கள் விடவில்லை.

“நான் வேற இடத்துல தங்கிக்கறேன் மது. உங்க ரெண்டு பேரோட பிரைவசில நான் குறுக்க நிற்கக் கூடாது.” என்றாள் அஞ்சலி.

“அதெல்லாம் எதுவும் இல்ல அஞ்சலி. நீ இருந்தாலும் எங்க பிரைவசில எந்தப் பிரச்சினையும் வராது. நீ ஒண்ணும் கவலைப்படாத.” என்றாள் மது.

“ஆமா மா. எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா, அவளை என் கூட தானே இருக்க சொல்வேன். அது மாதிரி தான் இதுவும். நீ இங்க தாராளமா தங்கலாம்.” என்று பிரவீனும் சொன்னான்.

இருவரும் தாராளமாய் வீட்டிலும், தங்கள் மனதிலும் இடம் கொடுக்க அவர்களுடனேயே தங்கினாள் அஞ்சலி. அவர்களுடைய பிராஜெக்ட் ஆறு மாதம். இதோ இப்போது முடியும் தருவாயில் உள்ளது.

எல்லா நினைவுகளும் கண் முன்னே வந்து செல்ல, அஞ்சலி இவை அனைத்தையும் நினைத்து அழுதுகொண்டே இருந்தாள். மது எவ்வளவோ தேற்றியும் அவளைச் சமாதானப்படுத்தவே முடியவில்லை.

இங்கேயோ, அர்ஜுனை உலுக்கினான் கூடவே வேலை செய்யும் ஒருவன். அப்போதுதான் அவன், தான் எங்கே இருக்கிறோம் என்பதை உணர்ந்தான். இதையெல்லாம் நினைத்ததாலோ என்னவோ அன்று அவனால் வேலையில் சரியாக கவனம் செலுத்தவே முடியவில்லை.

அஞ்சலி அழுவதைப் பார்த்த மது, இதற்க்கெல்லாம் ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். அதோடு, அதை உடனே செயல்படுத்தவும் திட்டமிட்டாள்.

(தொடரும்...)

Just coming ???
 
Last edited:
Top